Pages

Tuesday, July 26, 2022

கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்!

ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தூள் செய்து 50 மி.லி. தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்து, வடிகட்டி அதில் இரண்டு துளி மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும்.

கருஞ்சீரகத்தில் நறுமண எண்ணெய் உள்ளது. அது வயிற்று உப்புசம் மற்றும் வலியை நீக்கி, கழிவுகளை எளிதாக வெளியேற்றும்தன்மை கொண்டது.

இரைப்பையில் பாக்டீரியாவால் உண்டாகும் நோய்த் தொற்று மற்றும் குடலில் உள்ள தேவையற்ற பூச்சிகளை அழிக்கும்.

கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சுடுநீரில் கலந்து, சிறிதளவு தேனும் சேர்த்து பருகினால் சிறுநீரக கற்களும், பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை, மாலை இருவேளை சாப்பிடலாம்.

தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா நோயால் துன்பப்படுகிறவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ் சீரக பொடியை தேன் மற்றும் அரை தேக்கரண்டி அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிட வேண்டும். இது நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும்.

கருஞ்சீரகத்தில் "தைமோகியோனின்" என்ற வேதிப்பொருள் உள்ளது.  இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.  இதில் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால் கெட்ட கொழுப்பு குறையும். ஒவ்வாமையும் நீங்கும்.

தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து. இதனை பொடி செய்து கரப்பான் மற்றும் சொரியாஸிஸ் நோய் இருப்பவர்கள் தேய்த்து குளித்து வரலாம். புண்களால் ஏற்படும் தழும்புகளும் மறையும். 

குளியலுக்கு பயன்படுத்தும் பொடிகளில் கருஞ்சீரகத்தை அரைத்து சேர்த்து, பயன்படுத்துவது நல்லது.

புற்று நோய்க்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்தாக செயல்படுவதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபணமாகி உள்ளது. குறிப்பாக கணையப் புற்று நோயை கட்டுப்படுத்துவதில் இது பெரும் பங்கு வகிக்கிறது. 

கருஞ்சீரகத்தில் இன்டெர்பிதான் என்ற இயற்கை வேதிப்பொருள் உள்ளது. அது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி புற்று நோய் கட்டிகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது.

புற்று நோய் உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை சுடுநீரில் கலந்து காலையும், மாலையும் பருகலாம். சுடுநீருக்கு பதிலாக தேன் கலந்தும் சாப்பிடலாம்.

சில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அந்த நாட்களில் அடிவயிறு கனமாகி, சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். இதற்கு கருஞ்சீரகம் மருந்தாக பயன்படுகிறது. அதனை வறுத்து லேசாக வெடிக்க விட்டு தூள் செய்து வைத்துக்கொண்டு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு பத்து நாட்கள் முன்பிருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினமும் இருவேளை தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிடவேண்டும்.  இது மாதவிடாய் சிக்கலை போக்கும். வயிறு கனம் குறைந்து, சிறுநீர் நன்றாக பிரியும்.

பிரசவத்திற்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

கருஞ்சீரகம் பல முக்கியமான சித்த மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

திருப்பதி - தங்குவதற்கு ஓரு அறைக்கு வெறும் 200

இங்கு 200 படுக்கை அறை உள்ளது ஓரு அறைக்கு வெறும் 200 ருபாய் காலை காபி காலை சிற்றுண்டி மதியம் உணவு இரவு உணவு எல்லாம் சேர்த்து ஓரு ஆளுக்கு வெறும் 200 ருபாய் மட்டும் தான் திருப்பதி செல்பவர் பயன்படுத்தி கொள்ளலாம். 

Tirumala Sri Kasimath,

Ring road, Near S.V. Museum,

Tirumala - 517507 (A.P)

Ph : 0877-2277316

திருமலையில் தங்குவதற்கு  ஒரு அறை கண்டுபிடிக்க சிரமமாக இருந்தால், 

இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், பயன்படுத்தி கொள்ளுங்கள்.

கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன. அவற்றில் தங்கலாம். ஹோட்டலுக்குரிய ரூம்வசதிகளோடு உள்ளன.

மூல் மட் மின்: +918772277499 0877-2277499.

புஷ்பா மண்டபம் : 0877-2277301.

ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317.

உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187.

ஸ்ரீ திருமலகாஷி மட் Ph-0877-2277316.

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட்  Ph-0877-2277302.

ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா விவேர்டினினி சபை 

Ph: 0877-2277282.

ஸ்ரீ காஞ்சி காமகோடி மட் 

Ph : 0877-2277370.

ஸ்ரீ புஷ்பகிரி மட் Ph-0877-2277419.

ஸ்ரீ உட்டாரடி மட் Ph-0877-2277397.

உடுப்பி மட் Ph-0877-2277305.

ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத் ஆத்வான் ஆசிரமம் : 0877-2277826.

ஸ்ரீ பரகலா ஸ்மிமி மட் பி: 0877-2270597,2277383.

ஸ்ரீ திருப்பதிஸ்ரீமன்னாரயன ராமானுஜா ஜீயர் மட் பி: 0877-2277301.

ஸ்ரீ சிருங்கரி சாரதா மடம்

Ph: 0877-2277269, 2279435.

ஸ்ரீ அஹோபீதா மட் ப. 0877-2279440.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீதந்தி ராமனுஜீயர் மட் Ph : 0877 222 77301)

ஸ்ரீ காஞ்சி காமகோடி 

பீட்டம் மட் / சர்வா மங்கலா கல்யாண மண்டபம் , Ph : 0877 222 77370

ஸ்ரீ வல்லபச்சரிய மடம் தொலைபேசி: 222 77317

மந்திராலயா ராகவேந்திர சுவாமி மட் / பிருன்தாவனம் 

Ph : 0877 222 77302

ஆர்யா வைசியா சமாஜம் எஸ்.வி.ஆர்.ஏ.வி.டி.எஸ்.எஸ்.டி

Ph  : 0877 222 77436

ஸ்ரீரங்கம் ஸ்ரீமதி ஆதித்யான் ஆஷ்ரம் 

Ph : 0877 222 77826

ஸ்ரீ வைகநாத ஆசிரமம்

Ph : 0877 222 77282

ஸ்ரீ அஹோபில மட்  

Ph : 0877-2279440

ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் / சாரதா கல்யாண மண்டபம் Ph : 0877 222 77269

ஸ்ரீ வைசராஜர் மடம் மோதிலால் பன்சிலால் தர்மசாலா Ph : 0877 222 77445

ஹோட்டல் நரிலமா சௌல்ரி Ph : 0877 222 77784

ஸ்ரீ சீனிவாச சொல்ரி 

Ph : 0877 222 77883

ஸ்ரீ ஹதிராம்ஜி மட் மின் 

Ph : 0877 222 77240

கர்நாடகா விருந்தினர் 

மாளிகை 

Ph : 0877 222 77238

தக்ஷிணா இந்தியா ஆர்யா வியா கபு முனிரட்ணம் அறநெறிகள் 

Ph : 0877 222 77245

ஸ்ரீ சிருங்கேரி சங்கர நீலம் 

Ph : 0877 222 79435

ஸ்ரீ ஸ்வாமி ஹதிராஜ் முட்டம் Ph : 0877-2220015

வயதில் மூத்த குடிமக்களும் ஜருகண்டி சொல்லித் தள்ளிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள் இனி யாரைத் தள்ளுவது என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது.

65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது எப்படி?

நிபந்தனைகள் :

******************

1) ஆதார் அட்டை அவசியம்.

2) 65 வயது முடிந்திருக்க வேண்டும்

3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.

4) காலை 10 மணி முதல் 

மாலை 3 மணி வரை தரிசனம் நேரம்.

5) தினம் 700 பேருக்கும் அனுமதி உண்டு.

6.) உதவி செய்வதெற்கென உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவளுக்கும் ஆதார் அவசியம்.

7) காலை உணவு பால் இலவசம்.

8.) அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும்.

9) ஒருமுறை சென்றவர் 3 மாத காலத்திற்கு பின்னரே மீண்டும் அனுமதிக்கப் படுவர்.

10) இவை அனைத்தும் இலவச சேவையாகும். பயனுள்ள தகவலை பகிரலாமே. இந்த தகவல்கள்அனைத்தும் திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை !  

ௐ நமோ நாராயணா....!

திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு!

யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்.

இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். 

சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனநிம்மதி உண்டாகிறது.

திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ..

ஸ்ரீராமானுஜர் யந்திர சக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் .

கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும் போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும்.

பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது , இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

வாஸ்துப்படி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன.

வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும்..

செல்வம் மலை போல குவியும்.

உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள். 

அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது. 

வாஸ்துப்படி மிக பலமாக இருப்பதால் இத் திருக்கோயில் மிக அதிக சக்தியுடன் உள்ளது.

இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான்.

கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர்.

குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்கு கிறார்கள்.

நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது.

நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும். 

சந்திர தசை மற்றும் சந்திர புக்தி நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கப் பட்டவர்களுக்கு இத் திருக்கோயில் சிறந்த பரிகாரத் தலமாகும்.

திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு.

திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்.

அட போங்கய்யா திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு..

அதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதினோரு மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம் 

அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம் ஆனால் அங்கு யாரும் அதை செய்வதே கிடையாது .

மாறாக அங்கு கூச்சலும் குழப்பமாக தான் இருக்கும்...இனிமேல் நீங்கள் திருப்பதி சென்று வந்தால் அங்கு நீங்களாவது அமைதியாக இருங்கள்.

அதிகம் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்து கொள்ளும் லக்னக்காரர்கள் தெரியுமா.? மேஷம் , ரிஷபம் , மிதுனம், கடகம் , கன்னி , துலாம் .விருச்சிகம் , மகரம், மீனம் லக்னம் உடையவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும்.

வருடம் ஒரு முறை மட்டும் செல்லும் லக்னம் காரர்கள் .சிம்மம் , தனுசு , கும்பம்.

ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம் " 

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”

ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித,

வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ... !!!

பொதுப் பொருள்: 

திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே,  நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டுபவர் வேண்டும் வரங்களை எல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே  நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகிய மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

ஸ்ரீவேங்கட ஸ்ரீநிவாஸா 

நின் திருவடிகளே 

சரணம் ! சரணம் !! சரணம் !!!

சிவகாமியின் செல்வன் 07

இந்தி பிரசாரசபை வெள்ளி விழாவில் கலந்து கொள்ள 1946ம் ஆண்டு காந்திஜி தமிழ்நாட்டுக்கு வந்தார்.  அவர் ஒரு வார காலம் தியாகராய நகரில் தங்கி இருந்தபோது அவரை காண லட்சக்கணக்கான மக்கள் தமிழ் நாட்டில் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் வந்து கூடியிருந்தார்கள்.  ஆகஸ்ட் போராட்டத்துக்கு பின் காந்திஜியின் புகழும் காங்கிரசின் செல்வாக்கும் நாட்டு மக்களிடையே பெரும் அளவில் ஓங்கியிருந்தது. அப்போது காமராஜ்தான் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர்.  ஆனாலும் காந்திஜி எப்போது வருகிறார், எந்த ஸ்டேஷனில் அவரை சந்தித்து வரவேற்பு அளிக்க வேண்டும் என்பதெல்லாம் காமராஜுக்கு தெரியவில்லை.  எல்லா ஏற்பாடுகளும் போலிஸாருக்கு மட்டுமே தெரிந்திருந்தன.

எல்லா விவரங்களையும் போலீசார் மூடு மந்திரமாகவே வைத்திருந்தார்கள்.  ராஜாஜி, கோபாலசுவாமி அய்யங்கார், இந்தி பிரசார சபா காரியதரிசி சத்திய நாராயணன் போன்ற ஒரு சில முக்கிய தலைவர்களுக்கு மட்டுமே விவரம் தெரிந்திருந்தது.  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் மகாத்மாஜியை நேரில் சென்று வரவேற்கும் பொறுப்பு காமராஜிடம் இருந்தது.  ஆனாலும் ஆருக்கு எந்த விவகாரமும் தெரியாததால் நேராக இந்தி பிரசார சபைக்கு போய் விசாரித்தார்.

ராஜாஜி முதலியவர்கள் ஏற்கெனவே காந்திஜியை வரவேற்க புறப்பட்டு போய்விட்டார்கள் என்கிற தகவல் மட்டுமே காமராஜுக்கு கிட்டியது.  இன்னும் கொஞ்சம் நேரத்தில் காந்திஜி வந்து விடுவார்.  அதற்குள் அவர் இறங்கும் ஸ்டேஷனை கண்டுபிடித்து ஆக வேண்டும்.  இதற்கு என்ன செய்வது? காமராஜுக்கு ஒன்றும் புரியவில்லை.

இந்த சமயத்தில் காமராஜின் நண்பரும் பத்திரிக்கை நிருபருமான கணபதி அங்கே வந்து சேர்ந்தார்.  மகாத்மாஜி எந்த ஸ்டேஷனில் ரயிலை விட்டு இறங்க போகிறார் என்கிற ரகசியம் பத்திரிக்கைக்காரர் என்ற முறையில் அவருக்கு தெரிந்திருந்தது.  கணபதி தம்முடைய காரிலேயே காமராஜரை அழைத்துக் கொண்டு அம்பத்தூர் ஸ்டேஷனுக்கு பறந்து சென்றார். அந்த ஸ்டேஷனில்தான் மகாத்மாவை வரவேற்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.  

காந்திஜி ரயிலை விட்டு இறங்கியதும் காங்கிரஸ் தலைவர் காமராஜ் தம் கையேடு கொண்டு போயிருந்த பெரிய மாலையை போட்டு அவரை வரவேற்றார்.  இந்தி பிரசார சபையின் வெள்ளி விழா முடிந்ததும், காந்திஜி பழனிக்கும், மதுரைக்கும் ரயில் மார்க்கமாகவே யாத்திரையாக சென்றார். அந்த பயணத்தின் போது ராஜாஜியும் காமராஜும் போயிருந்தனர்.  காந்திஜியிடம் ராஜாஜிக்கு அதிக செல்வாக்கு இருந்த காரணத்தினாலே என்னவோ காமராஜ் அந்த பயணத்தின் போது சற்று ஒதுங்கியே இருந்தார்.

பழனி ஆண்டவர் சந்நிதியில் கூட ராஜாஜிக்கு, காந்திஜிக்கு தான் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தார்கள். பழனிமலை படிகளில் எரிக் கொண்டிருந்தபோது காமராஜும் கூடவே சென்றார்.  அப்போது ராஜாஜி காமராஜரை காட்டி, இவர்தான் காமராஜ், காங்கிரஸ் ப்ரெசிடெண்ட் என்று காந்திஜிக்கு அறிமுகப்படுத்தினார்.

காந்திஜி தெரியுமே எனக்கு என்று பதில் கூறினார். மதுரைக்கும், பழனிக்கும்  போய்வந்த பிறகு தான் காந்திஜி கிளிக் (ஒரு சிறு கும்பல்) என்று காமராஜ் குழுவை குறிப்பிட்டார்.  காந்திஜி தங்களை பார்த்து இப்படிச் சொன்னது காமராஜுக்கும் அவரை சேர்ந்த காங்கிரஸ்காரர்களுக்கும் பெரும் வேதனையை அளித்தது.  அதை தொடர்ந்து மதுரையில் ராஜாஜிக்கு எதிராக பெரிய ஆர்ப்பாட்டமும் கலவரமும் நடந்தன.

காந்திஜியை கண்டிக்கும் வகையில் காமராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கை வருமாறு:

"ஹரிஜனில் தம் கையெழுத்துடன் எழுதியுள்ள காந்திஜியின் கட்டுரை எனக்கு மிகுந்த திகைப்பை உண்டாக்கியது.  நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்.  சட்டப்படி காரிய கமிட்டியை அமைத்தது நான்தான்.  ஆகவே, காந்திஜியின் குறிப்பு எனக்குத்தான் பொருந்த முடியும்.  சென்னையிலும், தமிழ்நாட்டிலும் காந்திஜி போகுமிடங்களுக்கெல்லாம் நானும் போய்க் கொண்டிருந்தேன்.  எப்பொழுதும் அவர் கூப்பிடும் தூரத்தில் தான் நான் இருந்தேன்.  காரியக் கமிட்டி அங்கத்தினர்கள் பலரும் கூடவே இருந்தனர்.  தமிழ் நாட்டு காங்கிரஸ் விவகாரங்கள் பற்றி காந்திஜி இங்கிருந்தபோது எங்களிடம் எதுவும் பேசவில்லை.  அங்கே போனபின் கும்பல் என்ற வார்த்தையை அவர் உபயோகித்துள்ளது எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. 

சட்டசபை வேலைத் திட்டம் தேச சுதந்திர போராட்டத்தை பலப்படுத்துவதற்கு ஒரு சாதனம் என்பதை தவிர அதில் எனக்கோ, என் சகாக்களுக்கோ அதிக நம்பிக்கை கிடையாது.  என் நிலையை விளக்கி நான் பல மேடைகளில் பேசியுள்ளேன். எது என்னவாயினும் நான் சட்டசபை வேலைத்திட்டத்தில் எவ்வித பதவியும் பெற ஆசைப்படவில்லை.

காந்திஜியின் கட்டுரைக்குப் பின் பார்லிமெண்டரி போர்டிலிருந்து நான் ராஜினாமா செய்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை.  ஏனென்றால் இந்த சண்டை முழுவதும் சட்டசபை திட்டத்தால் ஏற்பட்டதுதான்.

டி.எஸ். அவினாசிலிங்கம், சி.என்.  முத்துரங்க முதலியார், ராமசாமி ரெட்டியார், ருக்மிணி லட்சுமிபதி ஆகிய நால்வரும், தாங்களும் ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை என்று கருதினார்.  ஆனால் தேர்தலுக்கு முன் நமக்குள்ள அவகாசம் மிக குறுக்கியதாயிருப்பதால் அனைவரும் மொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டாம் என்று அவர்களை நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.  என் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்கள் போர்டில் இருக்க சம்மதித்தனர்.

என்னை பொறுத்தவரை நான் ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை.  20 ஆண்டுகளாக நான் விசுவாசத்துடன் பின்பற்றி வந்துள்ள தலைவர் காந்திஜி, அவரிடம் என் பக்தி இன்றும் குறையவில்லை. என்னால் அவருக்கு வருத்தம் ஏற்பட வேண்டிய நிலை வந்ததேயென்ற காரணத்தால் தான் நான், ராஜினாமா செய்ய தீர்மானித்தேன்.  தேசிய போர்டும், மத்திய போர்டும் எந்த முடிவுகளை செய்தாலும் அவற்றை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வேன் என இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உறுதி கூறுகிறேன்".  

காமராஜின் அறிக்கையை படித்துப் பார்த்த காந்திஜி மீண்டும் ஹரிஜன் பத்திரிகையில் விளக்கம் எழுதினார்.  கிளிக் என்ற சொல்லுக்கு ஆங்கில அகராதியில் தவறான அர்த்தம் எதுவுமில்லை என்று சமாதானம் கூறி, காமராஜ் தம்முடைய ராஜினாமாவை வாபஸ் வாங்கி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  ஆனாலும் காமராஜ் தம்முடைய முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

அந்த ஆண்டு நடக்கவிருந்த அசெம்பிளி தேர்தலுக்கான பார்லிமெண்டரி போர்டில் காமராஜ் இல்லை.  பார்லிமெண்டரி போர்டார் ராஜாஜியின் உதவியுடன் அபேட்சகர்களை தேர்ந்தெடுத்தார்கள்.  ஆனாலும், சில நாட்களுக்கெல்லாம் சூழ்நிலை சரியில்லை என்பதை அறிந்த ராஜாஜி, தாம் காங்கிரஸ் விவகாரங்கள் எதிலும் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று அறிக்கை வெளியிட்டு விட்டு விலகிக் கொண்டார். 

அப்போது டாக்டர் வரதராஜுலு நாயுடு காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதினார்:

"காந்தி தர்மத்தைப் பரப்புவதிலும், காங்கிரஸ் திட்டங்களை செயல்படுத்துவதிலும் காமராஜ் தென்னாட்டிலேயே முதன்மையானவர்.  அவரைக் குறித்து தாங்கள் தவறாக எழுதியது சரியல்ல.  இதில் தாங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்." 

உடனே காந்திஜி, நாயுடுவுக்கு பதில் எழுதினார்:

"உங்கள் இஷ்டப்படியே நடந்து கொள்கிறேன்.  இந்த தகராறில் இனி நான் ஈடுபடுவதில்லை" என்பதே அந்த பதில்.

ராஜாஜியை ஒரு சிறு கும்பல் எதிர்ப்பதாக காந்திஜி எழுதியதும், தமிழ் நாட்டில் ஒரு பெரிய கொந்தளிப்பே ஏற்பட்டுவிட்டது.  ராஜாஜி கோஷ்டி, காமராஜ் கோஷ்டி என்று இரு பிரிவுகள் தோன்றின.

1942ல் அலகாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ராஜாஜி பாகிஸ்தான்  பிரிவினை குறித்து ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்.  அதற்கு சாதகமாக 15 வோட்டுக்களே கிடைத்ததால் தீர்மானம் தோற்று போனது.  இதனால் ராஜாஜி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டீயில் இருந்தும், காரியாக் கமிட்டியில் இருந்தும் ராஜினாமா செய்து விட்டு தம்முடைய பாகிஸ்தான் பிரசாரத்தாய் சுதந்திரமாக நின்று நடத்தினார்.  ராஜாஜியின் இந்த போக்கு தமிழக காங்கிரசுக்குப் பிடிக்கவில்லை.  அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக நோட்டீஸ் கொடுத்தது.  

இந்த சமயத்தில் காந்திஜி ராஜாஜிக்கு ஒரு யோசனை கூறினார்.  காங்கிரஸ் அங்கத்தினர் பதவி, அசெம்பிளி பதவி இரண்டையும் அவர் ராஜினாமா செய்து விட வேண்டும் என்பதே அந்த யோசனை.  காந்திஜியின் யோசனைப்படியே அந்த இரண்டு பதவிகளையும் ராஜினாமா செய்து விட்டு ஆகஸ்ட் போராட்டத்தையும் எதிர்க்க தொடங்கினார் ராஜாஜி.  இவை எல்லாம் தான் காங்கிரஸ்காரர்களுக்கு ராஜியின் மீது கோபம் உண்டாக காரணங்கள் ஆயின.  

இதை தொடர்ந்து 1946ல் தென்னாட்டுக்கு வந்த காந்திஜி கிளிக் என்று சொன்னதும் காங்கிரஸ்காரர்களின் கோபம் எரிமலையாக வெடித்தது.

(தொடரும்)



 







 

Tuesday, July 12, 2022

சிவகாமியின் செல்வன் 06

ஆகஸ்ட் போராட்டத்துக்கு முன் இந்தியாவுக்கு வந்த க்ரிப்ஸ் மிஷன் இந்தியத் தலைவர்களுடன் பேசி ஓர் உடன்பாட்டுக்கு வர எண்ணினார்கள்.  அந்த தூது கோஷ்டியின் முயற்சி வெற்றி பெறாததால், அவர்கள் தோல்வியுடன் திரும்பி சென்றார்கள்.  இந்த நேரத்தில்தான் ராஜாஜி முஸ்லீம் லீகின் பாகிஸ்தான் கோரிக்கையை ஒப்புக் கொள்ளலாம் என்றும், அவர்களையும் சேர்த்துக் கொண்டு தேசிய சர்க்கார் அமைக்கலாம் என்றும் ஒரு யோசனையை வெளியிட்டார்.  இந்த யோசனையைக் காங்கிரஸ் காரியக் கமிட்டீ ஏற்று கொள்ளவில்லை.  இதனால் ராஜாஜி காங்கிரஸிலிருந்து விலகித் தனி மனிதராக நின்று தம்முடைய பாகிஸ்தான் பிரசாரத்தைக் தொடங்கினார்.

இதற்குப் பிறகுதான் பம்பாயில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி அடுத்தாற்போல் காங்கிரசின் போராட்டம் எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி ஆலோசித்தது.  இந்த சரித்திர புகழ் வாய்ந்த கூட்டத்துக்கு நாட்டின் எல்லாத் திசைகளில் இருந்தும் காங்கிரஸ் தலைவர்களும், பிரமுகர்களும், தொண்டர்களும் போயிருந்தார்கள்.  

ஆகஸ்ட் 8 அன்று பம்பாய் நகரமே அல்லோல கல்லோலப்பட்டது.  காந்திஜி, படேல், நேருஜி போன்ற பெருந்தலைவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  தமிழ் நாட்டில் இருந்து தலைவர் சத்தியமூர்த்தி, காமராஜ், பக்தவச்சலம் முதலானோர் போயிருந்தார்கள்.

வெள்ளையரே, வெளியேறுங்கள், என்று பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து மஹாத்மா குரல் கொடுத்தார்.  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் அப்படியே தீர்மானம் நிறைவேற்றியது.

அவ்வளவுதான் மறுநாளே, காந்தி, நேரு போன்ற பெருந்தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டார்கள்.  இதற்குள் யார் யாரை எங்கெங்கே கைது செய்ய வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சி ஒரு பட்டியலை தயாரித்து வைத்திருந்தது. 

பம்பாய் கூட்டம் முடிந்து ரயில் ஏறி ஊருக்கு திரும்புவதற்குளளாகவே பல காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.  தமிழ் நாட்டில் இருந்து போன சத்திய மூர்த்தி முதலானவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

உங்களை எப்ப கைது செய்தாங்க என்று காமராஜரைக் கேட்டேன்.

நான், முத்துராங்க முதலியார், பக்தவத்சலம், கோபாலரெட்டி எல்லோரும் ரயிலில் வந்துக்கிட்டிருந்தோம்.  எனக்கு ஒரு சந்தேகம்.  வழியிலேயே எங்காவது எஎன்னைப் பிடிச்சுடுவாங்களோன்னு.  ஜெயிலுக்குப் போறதுக்கு முன்னாலே தமிழ் நாடு பூராவும் சுற்றிப் போராட்டத்தை எப்படி நடத்தணும்கிறதை பற்றி அங்கங்கே உள்ளூர் காங்கிரஸ்காரங்கக்கிட்டே பேசிடனும்னு நினைச்சேன்.  அதுக்குள்ளே அரெஸ்ட் ஆயிடக்கூடாதுங்கிறது என்னுடைய பிளான். 

சஞ்சீவ ரெட்டியுடன் குண்டக்கல் வரைக்கும் போய், அங்கிருந்து பெங்களூர் மார்க்கமா ஆந்திராவுக்குப் போய், சஞ்சீவ ரெட்டியோடு 2/3 நாட்கள் தங்கி, சரியானபடி திட்டம் போட்டு, அப்புறம் தமிழ் நாட்டுக்கு வரணும்னு முதல்லே நினைச்சேன்.  ரெட்டியும் அவங்க ஊருக்கு வரச் சொல்லிக் கூப்பிட்டாரு.  ஆனா எனக்கு ஒரு சந்தேகம், இந்த நிலையிலே சஞ்சீவ ரெட்டியை பாதி வழியிலேயே கைது பண்ணிடுவாங்க.  அப்ப என்னையும் போலீஸ் சும்மா விடாதுன்னு.

சரி நீங்க போங்க, நான் தமிழ் நாட்டுக்கே போயிடுறேன்னு சஞ்சீவ ரெட்டி  கிட்டே சொல்லிட்டு, அரக்க்கோணம் வரை வந்துட்டேன்.  அரக்கோணத்தில் எட்டிப் பார்த்தா பிளாட்பாரம் பூரா ஒரே போலீசாயிருந்தது.  வந்தது வரட்டும்னு தைரியமா பிளாட்பாரத்தில் இறங்கி நடந்தேன்.  நல்லவேளையா என்னை யாரும் கைது செய்யல்லே.  அவங்க லிஸ்டில் என்பேரு இருந்ததா, இல்லையான்னும் தெரியலை.  மளமளன்னு ஸ்டேஷனுக்கு வெளியே போய்  ஒரு வண்டியை பிடிச்சு சோளங்கிபுரம் போயிட்டேன்.  

அங்கே எதுக்குப் போனீங்க ?  அங்கே ஓட்டல் தேவராஜய்யங்கார்னு ஒரு காங்கிரஸ்காரர் இருந்தார். அவருக்கு 2 பிள்ளைங்க.  ஒருத்தர் ஏதோ சினிமா தியேட்டரோ, கம்பெனியோ நடத்திகிட்டுருக்கார்னு கேள்வி.  அவர் ஓட்டல்லே சாப்பிட்டுவிட்டு கார் மூலமா அன்னைக்கே ராணிப்பேட்டை போயிட்டேன்.  ராத்திரி 10 மணியிருக்கும்.  கல்யாணராமைய்யார் வீட்டுக்குப்போய் கதவை தட்டினேன்.  அவர் கதவை திறக்கல்லே.  அவருக்கு பயம், போலீசார் தன்னை கைது செய்ய வைத்திருப்பாங்கன்னு.  என் குரலைக் கேட்டப்புறம் தான் மெதுவாக கதவை திறந்து எட்டிப் பார்த்தார்.  அந்த நேரத்தில் என்னைக் கண்டது அவருக்கு ஆச்சரியமா போய்டுச்சு.

சரி நீங்க இங்கே தங்கினால் ஆபத்து.  போலீசார் கண்டு பிடித்து விடுவார்கள்.  வாங்க இன்னொரு இடம் இருக்குன்னு சொல்லி ராணிப்பேட்டைக்கு வெளியே ஒரு மைல்  தள்ளி ஒரு காலி வீட்டுக்கு அழைச்சிட்டுப் போனார்.  அது ஒரு முஸ்லீம் நண்பருக்கு சொந்தம்.  அந்த வீட்டிலேயே ராத்திரி படுத்து தூங்கினேன். மறுநாள் பகலிலே கல்யாணராமைய்யரிடம் பேசிட்டு இருக்கிறப்போ கொஞ்ச தூரத்தில்  யாரோ ஒரு சப்இன்ஸ்பெக்டர் வர மாதிரி தெரிஞ்சுது. சப்இன்ஸ்பெக்டரை கண்டதும் கல்யாணராமைய்யருக்கு மறுபடியும் பயம் வந்துட்டுது.  

சரி கைது செய்யத்தான் வர்றாங்க, இனி தப்ப முடியாது, இப்ப என்ன செய்யலாம் என்று என்னைக் கேட்டார். வரட்டும் பார்க்கலாம் என்று சொல்லிட்டு நான் உள்ளே போய்  படுத்துட்டேன்.

வந்தவர் வீட்டை சுற்றிப் பார்த்துவிட்டு இந்த இடம் போதாது, அவ்வளவு வசதியாயும் இல்லை. டி.ஸ்.பி. வர்றார். அவருக்கு தங்கறதுக்கு இந்த இடம் பார்க்கத்தான் வந்தேன்னு சொல்லிட்டு போயிட்டார்.  அப்புறந்தான் கல்யாணராமைய்யருக்கு மூச்சு வந்தது.

அன்று மாலையே நானும் கல்யாணராமரும் கண்ணமங்கலம் ஸ்டேஷனுக்குப் போய் ரயிலேறிட்டோம்.  அங்கிருந்து வேலூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை வரைக்கும் போலீசார் கண்ணில் அகப்படாமலேயே போயிட்டோம்.  அங்கங்கே பார்க்க வேண்டியவர்களை பார்த்து, சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்டேன்.  மதுரையில் குமாரசாமி ராஜாவை பார்த்துப் பேசினேன்.  அப்ப அவர் ஜில்லா போர்ட் ப்ரசிடெண்டாயிருந்தார்.  ஆனா மூவ்மெண்ட்லே அவ்வளவு தீவிரமா ஈடுபடல்லே. மதுரையில் என் வேலை முடிஞ்சதும் திருநெல்வேலி, ராமநாதபுரம் போயிட்டு அங்கிருந்து விருதுநகருக்கு போய்  அம்மாவைப் பார்த்துட்டு கடைசியா மெட்றாசுக்கு போயிடலாம்னு நினச்சேன்.  இதற்கிடையில், போலீஸ்காரங்க அரியலூருக்கு போய்  என்னை தேடிகிட்டு இருந்தாங்க. அப்ப காங்கிரஸ் மகாநாடு ஒன்று அங்கே ரகசியமா நடக்கப் போவதாய் போலீசுக்கு தகவல் கிடைச்சிருக்கு.  நான் எப்படியும் அங்கே வருவேன் பிடிச்சுடலாம்னு போலீசார் அங்கே போய்  உஷாரா காத்துக்கிட்டுருந்தாங்க.  நான் எல்லா இடத்துக்கும் போயிட்டு கடைசியா விருதுநகருக்குப் பக்கத்தில் இருந்த ஒரு கிராமத்துக்கு போய்  சேர்ந்தேன்.  அங்கே ராமச்சந்திர ரெட்டியாரைப் பார்த்து அவர் வண்டியிலே விருதுநகருக்கு போனேன்.

வண்டியிலே எதுக்குப் போனீங்க? விருதுநகரிலே எங்க வீட்டுக்கு போற வழியிலே தான் போலீஸ் ஸ்டேஷன் இருக்குது. அந்த தெரு வழியில் போனால் போலீஸ்காரங்க பாத்துடுவாங்களேன்னு வண்டியிலே போனேன்.  அம்மாவைப் பாத்தீங்களா? ஆமாம், ராத்திரியிலே வீட்டிலே தான் இருந்தேன். அதுக்குள்ளே போலீசுக்கு எப்படியோ தகவல் தெரிஞ்சுடுத்து. அதனாலே, நான் வீட்டிலே தான் இருக்கேன், என்னை அரெஸ்ட் பண்ணுறதாயிருந்தால் அரெஸ்ட் பண்ணலாம்னு போலீசுக்கு சொல்லி அனுப்பிட்டேன்.  அப்புறம் என்னை அரெஸ்ட் பண்ணிட்டு போய்ட்டாங்க. 

ஜெயில்லேயிருந்து எப்போ வெளியே வந்தீங்க?  3 வருஷம் கழிச்சு 1945 ஜூலை மாசம் வந்தேன்.  அதுவரைக்கும் நீங்கதான் தமிழ்நாட்டுக்கு காங்கிரஸ் ப்ரெசிடெண்டா? 

ஆமாம், எல்லோருமே ஜெயிலுக்குப் போயிட்டாங்க. காங்கிரசுக்கு சர்க்கார்லே வேறே தடை போட்டிருந்தாங்க.  ராஜாஜி காங்கிரசிலிருந்து விலகிப் பாகிஸ்தான் பிரசாரம் செய்துக்கிட்டிருந்தார். இதனாலே அவர் பேரில் காங்கிரஸ்காரர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு, ராஜாஜி எதிர்ப்பு கோஷ்டின்னு ஒண்ணு தமிழ்நாட்டிலே பலாமா வளர்ந்துவிட்டது.

காந்திஜி தமிழ்நாட்டில் சுற்று பயணம் செய்துட்டு போறப்போ ராஜாஜிக்கு எதிரா இருந்தவங்களைக் கிளிக் என்று சொன்னாரே அது அப்பத்தானே ?  ஆமாம், ஹரிஜன் பத்திரியிலே அப்படி எழுதினார்.  நான் அதை ஆட்சேபித்து அறிக்கை விட்டேன். காந்திஜி அப்படி சொன்னது தப்புன்னு சர்வோதயம் ஜகந்நாதன் மதுரைக் கோயில்லே போய்  உட்கார்ந்துகிட்டு உண்ணாவிரதம் இருந்தார்.

காந்திஜி சொல்லிட்டாரே அதை எப்படிக் கண்டிக்கிறதுன்னு நான் பயப்படல.  இதே மாதிரி படேலுடன் கூட ஒரு சமயம் சண்டை போட்டிருக்கேன்.  1945ல் மத்திய அசெம்பிளிக்கு யார் யாரைப் போடணும் என்பதில் எனக்கும் படேலுக்கும் தகராறு வந்தது.  மைனாரிட்டி வகுப்பிலிருந்து யாராவது ஒருத்தரைப் போடலாம்னு நான் சொன்னேன்.  தூத்துக்குடி பால் அப்பாசாமிங்கிறவரைப் போடலாம், கிறிஸ்துவராயும் இருக்கிறார், படிச்சவராயும் இருக்கார்னு சொன்னேன்.  அவருக்கு வயசாயிட்டுதுன்னு சொல்லி மறுத்துட்டார் படேல்.  அவருக்கு பதிலா மாசிலாமணி என்பவரை ஏன் போடக்கூடாதுன்னு என்னைக் கேட்டார்.  அவருக்கு உடல்நலம் சரியில்லை, அவர் வேண்டாம்னு நான் சொன்னேன். 

என்ன உடம்புன்னு என்னைக் கேட்டார்.  அவருக்கு லெப்ரசி இருக்குதுன்னு சொன்னேன்.  படேல் நம்பல்லே.  நான் பிடிவாதமாயிருந்தேன்.  நான் சொல்றதிலே உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மெடிக்கல் ரிப்போர்ட் மூலமா செக் பண்ணிக்கலாம்னு சொன்னேன்.  அப்புறம் தான் மாசிலாமணி பெரி அடிப்பட்டுப் போச்சு.  அம்மு சுவாமிநாதனை போட்டாங்க.  எண்ணெய் படேல் நேரில் வராகி சொல்லி போன் பண்ணினார்.  நான் அப்பா பம்பாயில் தான் இருந்தேன்.  லிஸ்டை முடிவு செய்யுங்க, அதுக்கப்புறம் நான் வந்து சந்திக்கிறேன்னு சொல்லிட்டேன்.

(தொடரும்)






















 









Friday, June 17, 2022

சிவகாமியின் செல்வன் 05

நீங்கள் 1940ல் தமிழ்நாடு காங்கிரசின் தலைவரான பிறகுதானே தனிப்பட்டவர்கள் சத்தியாக்கிரகம் ஆரம்பமாயிற்று.  அப்போது எந்த இடத்தில் சத்தியாக்கிரகம் செய்தீர்கள்.  எப்போது கைது செய்யப்பட்டீர்கள்  என்று காமராஜைக் கேட்டேன்.  

நான் சத்தியாகிரகம் செய்யவில்லை.  அதற்குள்ளாகவே போலீசார் என்னை பாதுகாப்புக்கு கைதியாகக் கைது செய்து சிறைக்குள் கொண்டு போய்விட்டார்கள்.  காந்திஜியின் அனுமதி பெற்றவர்களே சத்தியாக்கிரகம் செய்யலாம் என்பது நிபந்தனை.  எனவே, தமிழ்நாட்டில் சத்தியாக்கிரகம் செய்ய விரும்புகிறவர்கள் லிஸ்ட் ஒன்றைத் தயாரித்து எடுத்துக் கொண்டு நான் காந்திஜியை நேரில் கண்டு பேசுவதற்காகச் சேவாகிராமம் போய்  கொண்டிருந்தேன்.  என்னுடன் நாகராஜனும் வந்து கொண்டிருந்தார்.  

எந்த நாகராஜன்.  அந்தக் காலத்தில் நாகராஜன் எனபர்தான் தங்களுக்கு அரசியல் ஆலோசகராக இருந்தார் என்றும், அவர் சொல்படிதான் நீங்கள் கேட்பீர்கள் என்றும் சொல்வார்களே அந்த நாகராஜனா ?

அதெல்லாம் சும்மா பேச்சு.  என்னோடு அவர் எப்போது சுற்றிக் கொண்டிருப்பார்.  அவரை முதல் முதல் இந்தியா பத்திரிக்கை ஆபீஸிலோ அல்லது வேறு எங்கேயோ சந்த்தித்தேன்.  அவருக்கு என்னிடத்தில் அக்கறையும் அன்பும் இருப்பதை அறிந்து கொண்டேன்.  அதனால் நானும் அவரும் சில விஷயங்ககளை சேர்ந்து ஆலோசிப்பதும் உண்டு.  அவர் எப்போதும் என்னுடன் இருந்தால் அவருடையல் பேச்சை கேட்டுத்தான் நான் எதுவும் செய்கிறேன் என்று அர்த்தமா என்ன என்றார் காமராஜ். 

தங்களை எதற்கு பந்தோபஸ்து கைதியாக்கி வேலூர் சிறைக்கு கொண்டு போனார்கள். அதுவா, அப்ப மெட்றாஸிலே ஆர்தர் ஹோப் என்னும் வெள்ளைக்காரன் கவர்னர் வேலை பார்த்துக்கிட்டிருந்தான்.  யுத்த நிதிக்கு பண வசூல் செய்யறதுக்காக அவன் தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்துக்கிட்டிருந்தான்.  நான் அவனுக்கு முன்னாடியே ஊர் ஊராய் போய் யுத்த நிதிக்கு பணம் கொடுக்கக்கூடாதுன்னு பிரசாரம் செய்துட்டு வந்துட்டேன்.  அதனாலே ஹோப்புக்கு பணம் வசூலாகால்லே.  இதுக்கு என்ன காரணம்னு விசாரித்தான் போல இருக்கு.  காரணம் தெரிஞ்சதும் என்னைப் பாதுகாப்பு கைதியாக்கி ஜெயில்லே கொண்டு வைக்கும்படி உத்தரவு போட்டிருக்கான். 

ஹோப்தான் உங்களை அரெஸ்ட் பண்ண சொன்னார்னு உங்களுக்கு எப்படி தெரிஞ்சது.

அப்போ பாத்ரோன்னு ஒரு போலீஸ் ஆபீசர் இருந்தார்.  நல்ல மனுஷன்.  தேச பக்தி உள்ளவர்.  தேச பக்தர்களுக்கு எல்லாம் தன்னால் முடிஞ்ச அளவு உதவி செய்வார்.  அவரை அப்போ ராமநாதபுரம் ஜில்லா சுப்பரின்டெண்ட்டாக மாத்திட்டாங்க.  போற வழியிலே அவர் விருதுநகரில் இறங்கி என் வீட்டுக்குப் போய் என் தாயாரை பார்த்து பேசிவிட்டு அம்மா என்னையும் உங்க மகன்னு நினச்சுக்குங்கம்மான்னு சொல்லிட்டு போனாராம்.  அப்புறந்தான் எனக்கு இந்த சங்கதியெல்லாம் தெரிஞ்சுது.

ஆனந்த விகடனில் அப்போது துணை ஆசிரியராயிருந்த கல்கி, சத்தியாக்கிரகம் செய்யணும்னு உங்ககிட்ட வந்தாரா?

ஆமாம், வந்தார். நல்லா நினைவு இருக்கு.  வாசன் கூட அவருக்கு சத்தியாக்கிரகம் செய்யப் பெர்மிஷன் கொடுக்கல்லேன்னு சொன்னதாக நினைவு.   கல்கியைப் பற்றி உங்க அபிப்பிராயம் என்ன?

நல்ல எழுத்தாளர். அந்த காலத்திலேயே திரு வி. கல்யாணசுந்தர முதலியார் நவசக்தின்னு ஒரு பேப்பர் நடத்திக்கிட்டிருந்தார்.  அதிலேதான் கிருஷ்ணமூர்த்தி எழுத்தை நான் முதல்லே படிச்சேன்.  தேனியோ, தமிழ்த் தேனியோ - ஏதோ ஒரு பேர்லே எழுதுவார்.  ரொம்ப தெளிவா, வேடிக்கையா எழுதுவாக.  ஆனந்த விகடனில் அவர் எழுதிய தலையெங்கமெல்லாம் காங்கிரசுக்கு பெரிய பலம் தேடிக் கொடுத்தது.  ஏ.என்.சிவராமன் கூட என்னோட ஜெயிலிலே இருந்தவர் தான்.  1930ல் அலிபுரம் ஜெயில்லே நான், சிவராமன், சடகோபன், கிருஷ்ணசாமி, வெங்கட்ராமன் எல்லோரும் ஒருபக்கம்.  லாகூர் வழக்கிலே ஈடுபட்டவங்க இன்னொரு பக்கம்.  சிவராமன் பெரிய பெரிய சிக்கலான பிரச்னைகளையெல்லாம் எடுத்து அலசி ஆராய்ந்து கோர்வையா எழுதுவார்.  பாமரர்களை விட படிச்சவங்க அவர் தலையங்கத்தை ரொம்ப விரும்பிப் படிப்பாங்க.  சொக்கலிங்கமும், கல்கியும் பாமரர்களுக்கு புரியும்படி எழுதுவாங்க.

பின்னால் ராஜாஜி வேண்டுமா வேண்டாமா என்று தமிழ் நாட்டிலே ஒரு பெரிய கிளர்ச்சி நடந்ததே.  அப்பா கல்கி தங்களை ரொம்ப தாக்கி எழுதினார், அதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

அவருக்கு என் பேரில் உள்ள கோபத்தினால் அப்படி எழுதினாருங்கிறதை விட, ராஜாஜியின் பேரில் உள்ள பக்தியினால் எழுதினாருங்கறதுதான் என் அபிப்பிராயம்.  எப்படி எழுதினாலும் ரொம்ப தெளிவான எழுத்து.  காங்கிரசை வளர்க்கிறதுக்கு அவரும் வாசனும் ரொம்ப உதவி செஞ்சிருக்காங்க.

இப்போ சத்தியமூர்த்தி பவன் இருக்கும் இடத்தில் தான் அப்பா காங்கிரஸ் ஆபீஸ் இருந்தது.  அது 30 வருஷத்துக்கு முன்னாலே தீப்பிடிச்சு எரிஞ்சு போச்சு.  அப்பா காங்கிரஸ் கட்டடட நிதிக்கு பணம் வசூல் செய்ய ஆரம்பிச்சதும் முதல் முதல் வாசன்தான் 10,000/- ரூபாய் கொடுத்தார்.  மொத்தம் 67,000/- ரூபாய் சேர்த்து வச்சிருந்தேன்.  தேனாம்பேட்டையில் இப்ப இருக்கிற காங்கிரஸ் கிரவுண்ட், இந்து சீனிவாசனுக்கு  சொந்தமாயிருந்தது. அவருக்கும் காங்கிரசில் ரொம்ப  பற்றுதல்.  அது 10 ஏக்கர் நிலம்.  அதில் ஒரு பில்டிங்கும் இருந்தது. அந்த இடத்தை அவர் ஆக்க்ஷனில் எடுத்திருந்தார். அந்த விலைக்கே காங்கிரசுக்கு கொடுத்துடுறேன்னு சொன்னார்.  ஆனால் அதை வாங்குவதற்கு 15,000/- குறைஞ்சது. வாசனை போய் பார்த்து விஷ;யத்தை சொல்லி 15,000/- கடனாக கேட்டேன்.  காதும் காதும் வெச்சாப்பல உடனே  ஒரு செக் எழுதி அப்பவே கொடுத்டுட்டார்.  அதுக்கப்புறம் கொஞ்ச நாளைக்கெல்லாம் அந்த கடனை திருப்பி கொடுத்துட்டேன்.  

அவரை ஏன்  எந்த எலெக்ஷனிலும் நீங்க நிற்க வைக்கல்லே.

அவரை நான் பல முறை கேட்டுக்கிட்டேன், அவர் பிடிவாதமா முடியாதுன்னுட்டார்.  கடைசியாக  வற்புறுத்தி, ராஜ்ய சபாவுக்கு போட்டோம்.

பாதுகாப்பு கைதியா எத்தனை மாசம் ஜெயில்லே இருந்தீங்க.

நவம்பர் 1949ல் வெளியில் வந்துட்டேன்.  மொத்தம் எத்தனை மாசம்னு கவனத்தில் இல்லே. 

உங்களை விருதுநகர் முனிசிபல் சேர்மனாக தேர்ந்தெடுத்தது அப்பதானே ?. 

ஆமாம், நான் ஜெயிலில் இருந்து வந்ததும் விருதுநகர் போனேன்.  நான் ஜெயில்லே இருந்தபோது என்னை சேர்மனாக தேர்ந்தெடுத்துட்டாங்க.  நான் போனதும் என்னை கூப்பிட்டு சேர்மன் நாற்காலியில் உட்கார சொன்னாங்க.  நான் கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு சேர்மன் பதவி எனக்கு வேண்டாம் பார்ட்டி வேலை, கெட்டுப் போய்விடும்.  சேர்மன் வேலை சரியாக செய்ய முடியாது.  எப்பவுமே கட்சி வேலை செய்வதில் தான் பிரியம்.  இந்த கவுரவத்தை எனக்கு கொடுத்ததற்காக உங்களுக்கெல்லாம் ரொம்ப நன்றின்னு சொல்லி ராஜினாமா எழுதிக் கொடுத்துட்டு எழுத்து வந்துட்டேன்.  

ஒரு நாள் கூட பதவியில் இல்லையா?

கொஞ்ச நேரம் தான் இருந்தேன்.  எனக்கு பார்ட்டி முக்கியமா பதவி முக்கியமா?

சத்தியமூர்த்தி உங்களோடு சிறையில் இருந்தாரா?

அம்ரோட்டி ஜெயில்லே இருந்தார்.  ஆகஸ்ட் 1942 போராட்டத்தில் அவரை கைது பண்ணி அமராவதிக்கு கொண்டு போயிட்டாங்க. அப்புறம் நான், திருவண்ணாமலை அண்ணாமலைப்பிள்ளை எல்லோரும் அங்கே போனோம்.  சத்தியமூர்த்திக்கு உடல் நலம் சரியில்லாமல் ஜெயில் ஆஸ்பத்திரியில் படுத்திருந்தார்.  அவரைப் பார்க்கணும்னா ஜெயில்லே விடமாட்டாங்க.  அதுக்காக ஏதாவது ஒரு வியாதியை சொல்லிக்கிட்டு அங்கேய் போய்  வருவோம்.  என்ன செய்யறது.  ஏதோ சொல்லிட்டு போய்  சத்தியமூர்த்தியை பார்த்துட்டு வருவோம்.  அம்ரோட்டி ஆஸ்பத்திரியில் அவர் ரொம்ப கஷ்டப்பட்டுக் கிடந்தார்.  வெய்யில் தாங்காது.  ரொம்ப  கடுமை. மண்டை வெடிச்சிடும் போல இருக்கும்.  நானும் அண்ணாமலையும் தொட்டியில் நீரை நிரப்பி தொட்டியிலேயே ராத்திரியெல்லாம் உட்கார்ந்திருப்போம்.  அண்ணாமலைப்பிள்ளை ஏதாவது பாடிக்கிட்டு இருப்பார்.

அவர் நல்ல பாடுவாரா?

சுமாராப்பாடுவார்.  ஏதாவது லாவணி கீவாணி பாடிக்கிட்டிருப்பார், நான் கேட்டுக்கிட்டுருப்பேன்.  என்ன செய்யறது.  ஜெயிலுக்குள்ளே பொழுது போவணுமில்லையா?

பாவம், சிறைத் துன்பங்களோடு பாட்டுக் கேட்கிற கஷ்டம் வேறா என்று எண்ணிக்கொண்டேன் நான்.  

(தொடரும்)



















Tuesday, June 07, 2022

சிவகாமியின் செல்வன் 04

திரு சத்தியமூர்த்தி 1936ல் மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவராயிருந்த போது  அவருடைய காரியதரிசியாகப் பணியாற்றினார்.  நேருஜி, தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்த போது சத்தியமூர்த்தி, காமராஜ் இருவருமே அந்த சுற்றுப் பயணத்தில் கலந்து கொண்டனர்.  காமராஜின் கடின உழைப்பையும், தன்னலமற்ற சேவையையும் நேருஜி நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டது அப்போதுதான்.

அதற்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக வரும் வாய்ப்பு சத்தியமூர்த்திக்கு இல்லாமலே போய்விட்டது.  ராஜாஜியே பக்க பலமாக இருந்துங்கூட, சத்தியமூர்த்தியால் வெற்றி பெற முடியவில்லை.  காங்கிரசுக்குள் வகுப்பு வாதம் புகுந்து விட்டதே இதற்கு காரணம்.  சத்தியமூர்த்தி இதை நன்றாகக் புரிந்து கொண்டதால் தலைவர் தேர்தலுக்கு தாம் போட்டியிடுவதை நிறுத்திக் கொண்டு 1940ல் காமராஜரைப் போட்டியிட செய்தார்.

அந்தக் காலத்தில் காங்கிரசுக்குள் ராஜாஜி கோஷ்டி, சத்தியமூர்த்தி கோஷ்டி என்று இரண்டு பிரிவுகள் இருந்தன.  காமராஜை நிறுத்தி வைத்திருப்பது பற்றி ராஜாஜியின் கருத்தை அறிந்து கொள்ள முத்துரங்க முதலியார், அவினாசிலிங்கம், ராமசாமி ரெட்டியார் மூவரும் ராஜாஜியை நேரில் கண்டு பேசினார்கள்.  அவர்களிடம்  ராஜாஜி தம் கருத்து என்ன என்பதை சொல்லவில்லை.  பிராமணர் அல்லாதவர் ஒருவர் தான் தலைவராக வர முடியும் என்றால் தமக்கு வேண்டிய ஒருவர் தலைவராக வரட்டுமே என்று ராஜாஜி எண்ணினாரோ என்னவோ?  தலைவர் தேர்தல் விஷயமாகத் தம்மைப் பார்க்க வந்த போது  சி.பி. சுப்பையாவையே நிறுத்தி வைக்கலாமே என்று யோசனையை வெளியிட்டார் ராஜாஜி.  அப்போது காமராஜை நிறுத்தி வைப்பது பற்றி ராஜாஜியிடம் சத்தியமூர்த்தி என்ன கூறினார், அதற்கு ராஜாஜி என்ன  பதில் கூறினார் என்பது நமக்கு தெரியவில்லை.  ஆனால் ராஜாஜி குறிப்பிட்ட சுப்பையாவை தாம் ஆதரிப்பதாக ஒப்புக் கொண்டு திரும்பி வந்தார் சத்தியமூர்த்தி. 

இதற்குள் காமராஜும் அவரை சேர்ந்தவர்களும் காமராஜின் வெற்றிக்காக வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சத்தியமூர்த்தி சென்னை நகர மேயராக இருந்தார்.  அவர் காமராஜை அழைத்து, சுப்பையாவை போடும்படி ராஜாஜி சொல்கிறார், நானும் சரி என்று சொல்லிட்டு வந்துவிட்டேன், நீ என்ன சொல்கிறார் என்று கேட்டார்.

நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. எனக்கு அவர் நிற்பதில் இஷ்டமில்லை.  சுப்பையாவுக்குப் பதில் வேறு யார் நின்றாலும் எனக்கு சம்மதம்தான், இல்லையென்றால் நானே தான் நிற்கப் போகிறேன் என்று பிடிவாதமாக சொன்னார் காமராஜ்.

சாத்தியமூர்த்தியால் அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை.  சரி உன் இஷ்டப்படியே செய் என்று சொல்லிவிட்டார்.  எனவே காமராஜரும், அவருக்கு எதிராக சி.பி. சுப்பையாவும் போட்டி போடும்படி ஆயிற்று.  போட்டியில் காமராஜுக்கு 103 வோட்டுக்களும், சுப்பையாவுக்கு 100 வோட்டுக்களும் கிடைத்தன.  காமராஜ் மூன்று வோட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பதவி ஏற்றார்.  காமராஜுக்கு காரியதரிசியாக அமர்ந்து சத்தியமூர்த்தி துணைபுரிந்ததும் அந்த வருடம் தான்.

1919ல் அரசியல் வாழ்க்கையில் ஒரு சாதாரண தொண்டனாக விருதுநகரில் இருந்து புறப்பட்ட காமராஜ் 20 ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் தலைவராக வந்தது, காங்கிரஸ் வரலாற்றிலேயே ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது.

காமராஜ் தலைவராக இருந்தபோதிலும், தொண்டனாக இருந்தபோதிலும் சுதந்திரம், ஜனநாயகம், காந்தீயம் ஆகிய உயர்ந்த லட்சியங்களை ஒரு போதும் மறந்ததில்லை.  நியாயம், நேர்மை இவ்விரண்டுக்கும் மாறான கருத்துக்களை அவர் எப்போதும் ஜீரணம் செய்து கொண்டதும் கிடையாது.  நியாயம், கொள்கை என்று வரும்போது அவற்றை நிலைநாட்ட காந்திஜி, நேருஜி, பட்டேல் போன்ற பெருந்தலைவர்களோடு அவர் வாதாடத் தயங்கியதுமில்லை.

ஒரு சமயம் காமராஜ் தமிழக முதலமைச்சராக இருந்தபோது டாக்டர் சுப்பராயன் தம்முடைய மகன் மோகன் குமாரமங்கலம் ஹைகோர்ட் நீதிபதியாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டார்.  அவ்வாறு அவர் ஆசைப்பட்டதற்கு காரணம் மோகன் குமாரமங்கலம் பதவி காரணமாகத் தம்முடைய கம்யூனிஸட் கொள்கைகளை விட்டு விடலாம் என்று கருதினார்.   அப்பொழுது பிரதம நீதிபதியாக இருந்த ராஜமன்னார் அவர்களும் மோகன் குமார மங்களத்தை நீதிபதியாக நியமிக்க தம்முடைய சம்மதத்தைத் தெரிவித்து முதலமைச்சர் காமராஜுக்கு சிபாரிசுக்கு குறிப்புடன் ⁂பைலை அனுப்பி வைத்தார்.  காமராஜும் சுப்பராயனும் நெருங்கிய நண்பர்கள் தான்.  ஆனாலும் தாம் இந்த சிபாரிசை ஏற்று கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒருவர் நீதிபதியாக அமர்ந்தால் கோர்ட்டில் வழங்கப்படும் நியாயத்துக்கு அது இடையூறாகப் போய்விடும் என்பது காமராஜின் பயம்.  அத்துடன் குமாரமங்கலம் இளைஞராக இருப்பதால் சீக்கிரமே பிரதம நீதிபதியாக வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.  ஒரு கம்யூனிஸ்ட் பிரதம நீதிபதியாக ஆகும் அளவுக்கு வாய்ப்புத் தேடித் தரும் ஒரு சிபாரிசைத் தம்மால் அங்கீகரிக்க முடியாது என்று கண்டிப்பாக மறுத்துவவிட்டார்.  இந்த நிலைமையில் தலைமை நீதிபதி ராஜமன்னாரால் எதுவும் செய்ய இயலவில்லை.  தலைமை நீதிபதிக்கும் நீதிபதிகள் நியமன விஷயத்தில் கருத்து வேற்றுமை ஏற்பட்டால் அந்தப் பிரச்னையை ஆராய்ந்து முடிவு செய்யும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது.  அப்போது நேருஜி மந்திரி சபையில் பண்டிதபந்த் அவர்கள் உள்துறை அமைச்சராக இருந்தார்.  குமாரமங்கலம் நியமனம் சம்பந்தமான  ⁂பைல் பென்ஹத்திடம் போயிற்று.  பந்த்துக்கும் இந்த நியமனம் சரியில்லை என்றே பட்டிருக்க வேண்டும்.  ஆனாலும் நேருஜியிடம் இதை எடுத்து சொல்வதற்கு முன்னாள் பந்த் காமராஜை நேரில் சந்த்தித்துப் பேச விரும்பினார்.  அப்பொழுது வேறு காரியமாக டில்லிக்குப் போயிருந்த காமராஜிடம் இதைப்பற்றி விசாரித்தார் பந்த்.  

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரை ஹைகோர்ட் நீதிபதியாகப் போடுவதில் எனக்கு இஷ்டமில்லை.  நியாயம் கெட்டுப் போகும் என்று தம் கருத்தை எடுத்து சொன்னார் காமராஜ்.  பந்த்துக்கும் அது சரியாகவேப்பட்டது.  இது சம்பந்தமாக நேருஜியும் அப்பொழுது காமராஜரைப் பார்த்து[ பேசினார்.  காமராஜ் இதே கருத்தைத்தான் நேருஜியிடமும் எடுதது சொன்னார்.

சரி, மோகன் குமாரமங்கலத்தை நீதிபதியாகத் தானே போடக்கூடாது. அட்வொகேட் ஜெனரலாகப் போடுவதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று மேலிடத்தில் கேட்டபோது எனக்கு அதில் ஆட்சேபமில்லை என்றார் காமராஜ்.  
அட்வகேட் ஜெனெரலாக வந்தால் மட்டும் கம்யூனிஸ்ட் என்ற ஆட்சேபம் இல்லையா என்று திருப்பிக் கேட்டார்கள்.  
சர்க்கார் தரப்பில் வழக்காட வேண்டிய கேஸ்கள் எல்லாமே அட்வொகேட் ஜெனரலைக் கொண்டு தான் வாதாட வேண்டு என்பது கிடையாது.  வேறு வழக்கறிஞர்களிடம் கொடுத்தும் வாதாடலாம்.  அந்த உரிமை சர்க்காரிடம் தானே இருக்கிறது.  எனவே, வழக்குகளின் தன்மையைப் பொறுத்து அவ்வப்போது அந்தந்தக் கேஸை யாரிடம் கொடுப்பது என்பது பற்றிக் சர்க்கார் முடிவு செய்து கொள்ளலாமே என்றார் காமராஜ்.   

மோகன் குமாரமங்கலம் நீதிபதியாக வருவதிலோ அல்லது அட்வொகேட் ஜெனெரலாகா வருவதிலோ காமராஜுக்கு சொந்த முறையில் எந்தவிதமான ஆட்சேபமும் கிடையாது.  ஆயினும் நியாயம் என்று தம் மனதுக்கு பட்டதை நேரம் வந்தபோது அதை எடுத்து சொல்ல வேண்டியது அவருடைய கடமை ஆகிறதல்லவா. 1940ல் தனிப்பட்டோர் சத்தியாக்கிரகம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் சத்தியமூர்த்திக்கு சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி கிடைக்கவிருந்தது.  அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது சத்தியமூர்த்தியின் ஆசை.  இதுபற்றி அவர் மனத்தில் ஒப்புக்கு கொள்ளலாமா வேண்டாமா என்ற குழப்பம் இருந்திருக்க வேண்டும்.  சில பெருந்தலைவர்களை அணுகி துணைவேந்தர் பதவியை நான் ஒப்புக் கொள்ளலாமா என்று யோசனைக் கேட்டார்.  தாராளமாக ஒப்பு கொள்ளுங்கள் என்று சிலர் கூறினார்கள்.  காமரராஜ், இதை பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று கேட்டார்.  இப்போது உள்ள நிலையில் இதை நீங்கள் ஏற்று கொள்வது எனக்கு சரியாக படவில்லை.  காரணம் இப்போது நடப்பது பிரிட்டிஷ் ஆட்சி.  இந்த ஆட்சிக்கு எதிராக நாம் இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.  நம்முடைய சர்க்கார் ஏற்பட்டு, அந்த சர்க்கார் மூலமாக தங்களுக்கு இந்தப் பதவி கிடைத்தால் அது நமக்கு பெருமை என்றார் காமராஜ்.  
இது பொலிட்டிக்கல் அப்பாயிண்ட்மெண்ட் இல்லையே என்றார் சத்தியமூர்த்தி.
இருக்கலாம்.  ஆனாலும் சர்க்காரின் தொடர்பு இருக்குமே.  அத்துடன் தனிப்பட்டோர் சத்தியாக்கிரகம் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகப் போகிறது.  அதில் நீங்கள் கலந்து கொள்ளாமல் இந்த துணைவேந்தர் பதவியை ஏற்றுக்கொண்டால் தங்கள் அரசியல் வாழ்க்கை என்ன ஆவது என்று கேட்டார் காமராஜ்.
இதற்குப் பிறகுதான் சத்திய மூர்த்தி அந்த பதவியை ஏற்றுக் கொள்ளும் எண்ணத்தை கைவிட்டார்.
காமராஜிடம் இதை பற்றி நான் விசாரித்தபோது, அவருக்கு இந்தப் பழைய சம்பவங்களெல்லாம் நினைவில் தோன்றி மறைந்திருக்க வேண்டும்.  சத்தியமூர்த்தியை நினைத்து கொண்டு ஒரு முறை பலமாக சிரித்துவிட்டார் அவர்.  ஐயோ பாவம் சத்தியமூர்த்தி குழந்தை மாதிரி அவருக்கு ஒண்ணும் தெரியாது.  சின்னச் சின்ன பதவி என்றால் கூட அதை விடுவதற்கு மனம் வராது அவருக்கு. அதுக்கெல்லாம் ஆசைப்படுவார். எப்பவுமே நான் சொல்வேன், பதவின்னு வரப்போ அது மேல் ஆசைப்படாமல் இருந்தாத்தான் தப்பு செய்ய மாட்டோம்.  பதவி ஆசை வந்தா, அது அறிவைக் கெடுத்துடும்பேன் என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தார்.

(தொடரும்)




 
















 






































 
















Thursday, May 26, 2022

சிவகாமியின் செல்வன் 03

அந்தக் காலத்தில்  சத்தியமூர்த்திக்கும் காமராஜுக்கும் இருந்த அன்புக்கும் பிணைப்புக்கும் இணையாக இன்னொரு நட்பை சொல்லிவிட முடியாது.  காமராஜின் அரசியல் குரு சத்தியமூர்த்தி என்று தான் எல்லாரும் சொல்வார்கள்.  ஆனால் பொதுவான நிலை அதுவல்ல. காமராஜரே சில சமயங்களில் சத்தியமூர்த்திக்கு ஆசானாக இருந்ததுண்டு.  சத்தியமூர்த்தி வெள்ளை உள்ளம் படைத்தவர்.  ஆகையால் யாரையும் எளிதில் நம்பிவிடக் கூடியவர்.  அரசியலுக்கே உரித்தான சூழ்ச்சிகள், தந்திரங்கள், எதுவும் அறியாதவர்.  அதனால் சத்தியமூர்த்தியை யாருடைய சூழ்ச்சி வலையிலும் சிக்க விடாமல் எச்சரிக்கையோடு இருந்து காப்பாற்றிய பெருமை காமராஜுக்கே உண்டு.  அது மட்டுமல்ல, சாத்தியமூர்த்தியின் புகழ் அரசியல் உலகில் சுடர் விட்டுப் பிரகாசிப்பதற்கும் காமராஜே காரணமாயிருந்தார். 

காமராஜ் தம்மிடம் கொண்டுள்ள அன்பும், அக்கறையும் எந்தக் காலத்திலும் மாறாதவை, மாற்ற முடியாதவை என்பதை அறிந்து கொண்ட சத்தியமூர்த்தி, தம்முடைய அரசியல் வாழ்க்கையில் நெருக்கடி தோன்றிய நேரத்தில் காமராஜின் ஆலோசனையைக் கேட்டே எதையும் செய்து வந்தார்.

சத்தியமூர்த்திதான் காமராஜுடைய அரசியல் தலைவர் என்று காமராஜ் சொல்லிக் கொண்ட போதிலும், சத்தியமூர்த்தி தவறு செய்கின்ற போதும் திசை தப்பித் போகின்ற நேரங்களிலும் காமராஜ் அவருடைய ஆசானாக மாறி யோசனை கூறவோ, மீறிப் போனால் கண்டிக்கவோ ஒருபோதும் தவறியதில்லை. ஒரு சின்ன உதாரணம்: 

1940ல் சத்தியமூத்தி சென்னை நகரின் மேயராக இருந்த போது பூண்டி நீர்த் தேக்கத்துக்கு அப்போது சென்னை கவர்னராக இருந்த ஆர்தர் ஹோப் அஸ்திவாரக் கல் நாட்டினார்.  மேயர் என்ற முறையில் சத்தியமூர்த்தி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  அச்சமயம் காமார்ஜ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைலைவராக இருந்தார்.

வெள்ளைக்காரர்கள் பங்கு கொள்ளும் எந்த விழாவிலும் காங்கிரஸ்காரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று மேலிடம் அப்போது ஒரு கட்டுப்பட்டு விதித்திருந்தது.  சத்தியமூர்த்தியை நேரில் சந்தித்து இது பெரிய தவறு இல்லையா என்று கேட்டார் காமராஜர்.

ஆமாம் அதற்காக என்னை என்ன செய்ய சொல்கிறாய்.  நான் மேயர் என்ற முறையில் போயிருந்தேன் என்றார். செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுங்கள் என்றார் காமராஜ். வேறு வழி இல்லமால் தான் செய்தது தவறுதான் என்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தார் சத்தியமூர்த்தி.

அண்மையில் இந்த செய்தியை என்னிடம் கூறிய போது,  அப்புறம் என்ன செய்தீர்கள் என்று நான் கேட்டேன்.

இதை பற்றி மேலிடத்தில் அப்போது சத்தியமூர்த்தியின் பேரில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று என்னைக் கேட்டார்கள்.  மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கி வைத்திருக்கிறேன் என்று அவர்களிடம் சொன்னேன் என்றார் காமராஜ்.  சரி அந்த கடிதம் இப்போது எங்கே இருக்கிறது என்று கேட்டேன்.  என் வீட்டில் இருக்கிறது. எங்காவது பெட்டிக்குள் இருக்கும் தேடிப் பார்க்கணும் என்றார்.

சத்தியமூர்த்தியை நீங்கள் முதன் முதலாக சந்தித்தது எப்போது, நினைவில் இருக்கிறதா என்று கேட்டேன்.

1919ல் அவர் விருதுநகருக்குப் பொதுக் கூட்டத்தில் பேச வந்திருந்தார்.  அப்போது நான் ஒரு சாதாரண தொண்டன்.  அவரோடு அப்போது பேசவே முடியவில்லை.  அப்புறம் 4 வருஷம் கழித்துத்தான் அவரோடு நெருங்கிப் பழகவும், பேசவும் எனக்கு சந்தர்ப்பம் உண்டானது.

1923ல் திரு சி.ஆர். தாஸ் தலைமையில் சுயராஜ்ய பார்ட்டி ஆரம்பிச்சாங்க இல்லையா?  அப்பா அந்தக் கட்சியின் கொள்கைப் பற்றி விவாதிக்கிறதுக்காக முக்கிய தலைவர்கள் எல்லோரும் மதுரையில் கூடினாங்க. கே.ஆர். வெங்கட்ராமைய்யர் இல்லத்தில் அந்த கூட்டம் நடைபெற்றது.  இப்போது அவர் இல்லை.  நானும் அந்தக் கூட்டத்துக்குப் போனேன். சத்தியமூர்த்தி சுயராஜ்ய கட்சியின் கொள்கையை விளக்கி ரொம்பத் தெளிவாகப் பேசினார்.  காங்கிரஸ் சட்டசபைக்குப் போக வேண்டும் என்பதுதான் சுயராஜ்ய கட்சியின் கொள்கை.  அதுதான் சத்தியமூர்த்தியின் விருப்பமாகவும் இருந்தது.  அந்தக் கூட்டத்தில் பலர் சட்டசபைப் ப்ரவேசத்துக்கு எதிரான கருத்தை தெரிவித்தார்கள்.  நான்கூட அப்போது சட்டசபைக்குப் போகக்கூ டாது என்ற கட்சியைச் சேர்ந்தவனாகத்தான் இருந்தேன்.  

அப்புறம் சத்தியமூர்த்தியுடன் அடிக்கடி தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்வதும், காங்கிரஸ் பிரசாரம் செய்வதுமே என் முழு வேலை ஆயிற்று. 

அந்த காலத்தில்  திரு.ரங்கசாமி அய்யங்கார், திரு எஸ். சீனிவாச அய்யங்கார் இவர்களெல்லாம் ரொம்ப பிரபலமாயிருந்தாங்க.  காரணம் திரு ரங்கசாமி ஐய்யங்காருக்கு சொந்தத்தில் பத்திரிகை இருந்தது.  அதனால் பிரபலமடைய சுலபமாயிருந்தது. சத்தியமூர்த்திக்கு அத்தகைய வசதி எதுவும் இல்லாததால் அவர்களையெல்லாம் மீறிக் கொண்டு முன்னுக்கு வர முடியல.

முன்னுக்கு வந்தபோது அரசியல் தலைமையில் அவருக்கும், ராஜாஜிக்கும் இடையே போட்டி இருந்தது. போராட்டம், சிறைவாசம் என்ற போதெல்லாம் சற்றும் தயங்காமல் உற்சாகத்தோடு முன் வந்து நின்ற சத்தியமூர்த்தி பதவி என்று வரும் பொது மட்டும் அதைத் தானே அடைய வேண்டும் என்று எண்ணாமல் மற்றவர்களுக்கு வீட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொண்டிருந்தார். பதவி மீது சத்தியமூர்த்திக்கு ஆசை இல்லை என்பது அர்த்தமில்லை.  அவருக்கு விருப்பம் இருந்தும், தகுதி இருந்தும், சந்தர்ப்பங்கள் இருந்தும் அவ்வப்போது ஏற்பட்ட போட்டி காரணமாக அவருக்கு கிடைக்க வேண்டிய பதவிகள் கிடைக்காமல் போனது.  காங்கிரஸ் காரிய கமிட்டியில் அங்கம் வகிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டதுண்டு.  ஆனால் இது கிடைக்காமலே போய் விட்டது.  மந்திரி சபையில் இடம் பெற வேண்டுமென்ற அவருடைய விருப்பமும் நிறைவேறாமல் போனது.

1927ல் நடைபெற்ற சென்னை அசெம்பிளி தேர்தலில் காங்கிரஸ்காரர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு காங்கிரசுக்கு வெற்றி கிடைத்தது.  இதற்கு காரணம் சத்தியமூர்த்தி ஓய்வு இல்லாமல் இரவு பகலாகக் காரிலே சுற்றுப்பயணம் செய்து ஊர் ஊராகப் பிரசாரம் செய்ததுதான்.  அவருடைய பிரசாரந்தான் காங்கிரசின் வெற்றிக்கு முக்கிய காரணம்னு சொல்லணும்.  அந்த சமயம் ராஜாஜி காங்கிரசில் இருந்து விலகி இருந்தார்.

ராஜாஜி முதல் மந்திரியாக வரவேண்டும் என்பது சத்தியமூர்த்தியின் ஆசை.  ராஜாஜி முதல் மந்திரியாக வரவேண்டும் என்பதில் இந்து சீனிவாசனும், இன்னும் சிலரும் குறியாக இருந்தார்கள். இந்து சீனிவாசன் சத்தியமூர்த்தியை அணுகி, அவர் நிற்பதாக இருந்த சர்வகலாசாலைத் தொகுதியை ராஜாஜிக்கு வீட்டுக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.  சத்திய மூர்த்தி ராஜாஜிக்கு விட்டுக் கொடுத்தார்.

ஆனால் ராஜாஜி தேர்ந்து எடுக்கப்பட்டதும் அவருடைய மந்திரி சபையில் சத்தியமூர்த்திக்கு இடம் தரவில்லை.  கடைசி வரைக்கும் சத்தியமூர்த்திக்கு மந்திரி சபையில் இடம் உண்டு என்று சொல்லிக்கொண்டிருந்த ராஜாஜி அவரை மந்திரியாகப் போடாமலே மழுப்பி விட்டார்.

பத்திரிகையில் அந்திரிகள் பெர்த் பட்டியல் வந்தபோது அந்தப் பட்டியலில் சத்தியமூர்த்தியின் பெயரைக் காணாமல் எங்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தமாயிருந்தது. வருத்தப்பட்டு என்ன செய்வது.  பாவம், சத்தியமூர்த்தி ஒண்ணும் தெரியாத அப்பாவி.  அவருக்கு இது பெரிய ஏமாற்றம்.

எந்த போலீஸ்காரர்கள் காங்கிரஸ்காரர்களைத் தடியால் அடித்தார்களோ அதே போலிஸாரைக் கதர் குல்லாய்க்கு சலாம் போடும்படி வைக்கிறேன்னு சத்தியமூர்த்தி அடிக்கடி மீட்டிங்கில் பேசுவார்.  பேசியபடி தடியால் அடித்த போலீஸ்காரர்களை காங்கிரஸ்காரர்களுக்கு சலாம் போடவும் வைத்தார்.  ஆனால் அந்த போலீஸ்காரங்க கதர்க் குல்லாய் அணிந்த சத்தியமூர்த்திக்கு மட்டும் சலாம் போடவில்லை.  அந்த கவுரவத்தை சத்தியமூர்த்தி அடையாமல் போனது எங்களுக்கெல்லாம் பெரிய வருத்தம்தான்.

\உப்பு சத்தியாகிரகத்தின் போது திருச்சி, வேலூர், அலிபுரம் ஆகிய மூன்று சிறைச்சாலைகளில் தேசபக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.  அப்போது சிறையில் உள்ள தொண்டர்கள் ஒன்றுகூடி ஒரு தீர்மானம் செய்தோம்.

விடுதலையாகி வெளியே போனதும், சத்தியமூர்த்தி அவர்களையே தலைவராக வேண்டும் என்று நான் வெளியிட்ட யோசனையைத் தொண்டர்கள் அனைவரும் ஆமோதித்தனர்.

வெளியில் சென்றவுடன் மதுரையில் அரசியல் மகாநாடும் மாகாண காங்கிரஸ் கமிட்டி தேர்தலும் நடைபெற்றன.  சத்தியமூர்த்தியிடம் எங்கள் முடிவை சொன்னபோது அவர் சரி என்று சொன்னார்.  ஆனால் தலைவர் தேர்தல் நடைபெறுவதற்கு அரை மணி நேரம் முன்னதாக ராஜாஜியும் போட்டியிடுகிறார் என்று தெரிந்ததும் சத்தியமூர்த்தி போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.  அகில இந்திய சூழ்நிலையில் அது தவறான கருத்தை உண்டாக்கும் என்று சத்தியமூர்த்தி கருதியதே அதற்கு காரணம்.  சத்தியமூர்த்தி அப்போது தலமைப் பதவியை ராஜாஜிக்கு விட்டுக் கொடுத்தது மட்டும் இன்றி, ராஜாஜி தலைவராகத் தேர்ந்து எடுக்கப் பட்டதும் தாமே உபதலைவராக இருந்து வேலை செய்யவும் ஒப்புக் கொண்டார்.

1936ல் பொது தேர்தல் வந்த போது தேர்தல் பிரசாரத்துக்காக சத்யமூர்த்தியும் நானும் திருவண்ணாமலைப் பகுதியில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தோம்.  அதே சமயம் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் தேர்தல் நடைபெற இருந்தது.  திரு.குமாரசாமி ராஜா தலைமைப் பதவிக்குப் போட்டியிட்டதை காங்கிரஸ் கட்சியில் யாரும் விரும்பாததால் அவருக்கு எதிராக இன்னொருவரை இருத்த ஏற்பாடு செய்தனர்.  இந்த பிரச்சினையைத் தீர்த்து வைக்க உடனே மதுரைக்கு புறப்பட்டு வரும்படி தலைவர் சத்யமூர்த்திக்குத் தந்தி கொடுத்திருந்தனர்.  அதை கண்ட சத்தியமூர்த்தி என்னை பார்த்து, குமாரசாமி ராஜாதான் விட்டுக் கொடுக்கட்டுமே.  அவர் போட்டியிடவில்லை என்றால் பிரச்னை தீர்ந்துவிடும் அல்லவா.  நீ என்ன சொல்கிறாய்.  ராஜாவுக்கு தந்தி கொடுத்து ஓதுங்கிக் கொள்ள சொல்லலாமா என்று கேட்டார்.

அப்போதிருந்த நிலைமையில் குமாரசாமி ராஜா தலைவராக இருப்பதுதான் நல்லது என்று எனக்கு தோன்றியது.  ஆகையால், நாம் இருவரும் மதுரைக்கு சென்று ராஜாவையே மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்க ஏற்பாடு செய்யலாம் என் யோசனை கூறினேன்.  ஆனாலும் அது அவ்வளவு எளிதில் நடந்துவிடக் கூடிய காரியம் அல்ல என்கிற பயம் என் மனத்தில் இருந்தது.  தலைவரும், நானும் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்று கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம்.  சத்தியமூர்த்தி, அங்கத்தினர்கள் எல்லோரையும் அழைத்து என்னிடம் உங்களுக்கு பூரண நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டார். இருக்கிறது என்று அவர்கள் பதில் கூறியும் சத்தியமூர்த்திக்குத் திருப்தி ஏற்படாததால், இப்படிச் சொன்னால் போதாது மீனாட்சி சுந்தரேசுவரர் சாட்சியாக என்னிடம் நம்பிக்கை இருக்கிறது என்று கூறினால் தான் நம்புவேன் என்றார். சத்தியமூர்த்தியின் விருப்பப்படி குமாரசாமிராஜாவையே தேர்ந்தெடுத்தார்கள்.

1936ல் அக்டோபர் மாதம் சுற்றுப்பயணம் செய்த போதும், அதற்கு முந்திய வருஷங்களில் படேலும், ராஜேந்திர பிரசாத்தும் இங்கு வந்திருந்த போதுதான் சத்தியமூர்த்திக்குத் தமிழ் நாட்டில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை மேலிடத்தார் அறிந்து கொண்டார்கள்.

படேலும் அவருடைய மகள் மணிபென் படேலும் இங்கே வந்திருந்த சமயம், சத்தியமூர்த்தியும் அவர்களுடன் ரயிலில் பிரயாணம் செய்ய வேண்டி இருந்தது.  சத்தியமூர்த்திக்கு அப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தும் பயணத்தை ரத்து செய்யவில்லை.  அவர்கள் மூவரும் பயணம் செய்த ரயிலில் படேலுக்கு, அவர் மகளுக்கும் கீழ் பர்த்தை ரிசர்வ் செய்து விட்டு, சத்தியமூர்த்திக்கு மட்டும் மேல் பர்த்தில் இடம் போட்டிருந்தார்கள்.  அதைக் கண்ட படேல் தம் மகளை அப்பர் பர்த்தில் படுத்துக் கொள்ளச் சொல்லி, சத்தியமூர்த்திக்கு கீழே இடம் தரும்படி கேட்டுக் கொண்டார்.

அப்புறம் 1939 கடைசியில் மாகாண காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும், சத்தியமூர்த்தியும் போட்டியிட்டாங்க  இல்லையா?  அந்தப் போட்டியில் வகுப்பு வாதம் காரணமாக சத்தியமூர்த்தி தோல்வி அடைந்தார்.  அதனால் மனமுடைந்து போயிருந்த சத்தியமூர்த்தி, அன்று இரவு என்னைப்  பார்த்து காமராஜ் அடுத்த வருஷம் உன்னைத்தான் காங்கிரஸ் தலைவனாகத் தேர்தலுக்கு நிறுத்தப் போகிறேன்.  முள்ளை  முள்ளால்தான் எடுக்க வேண்டும்.  வகுப்பு வாதத்தைப் போக்க அது ஒன்றுதான் வழி.  நீ தலைவனாக இரு.  நான் உனக்கு காரியதரிசியாக இருந்து வேலை செய்கிறேன் என்றார்.

அதற்கு இப்போது என்ன அவசரம்? அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நான் பதில் கூறினேன்.

அடுத்த வருஷம் உன்னையேதான் நிறுத்தப் போகிறேன்.  இந்த முடிவு நிச்சயமானதுதான் என்று உறுதியாகக் கூறினார் சத்தியமூர்த்தி.  தாம் கூடியபடியே அடுத்த வருஷம் நடைபெற்ற தலைவர் தேர்தலில் என்னை நிறுத்தவும் செய்தார்.  பலத்த போட்டி இருந்தபோதிலும், சத்தியமூர்த்தியின் தலைமையில் ஊழியர்களின் ஆதரவுடன் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.  என்னுடைய வெற்றி சத்தியமூர்த்திக்குப் பெரு மகிழ்ச்சியை அளித்தது.  அந்த ஆண்டு நான் தலைவராக இருந்த போது, அவரே காரியதரிசியாக இருந்து, எனக்கு ஆலோசனை கூறி, என்னை பெருமைப்படுத்தியதை நான் எப்போதும் மறக்க மாட்டேன் என்றார் காமராஜ்.

அப்போதுதானே சி.பி. சுப்பையா உங்களை எதிர்த்து நின்று தோற்றுப் போனார் என்று கேட்டேன்.  ஆமாம், அந்த கதையை அப்புறம் சொல்கிறேன் என்றார் காமராஜ்.

(தொடரும்)















Tuesday, May 24, 2022

சிவகாமியின் செல்வன் 02

டில்லியில் காமராஜை நான் சந்தித்த போது அவர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். பேச்சு முழுதும் ஒரே தமாஸும், வேடிக்கையும்தான்.  சில தலைவர்களை பற்றியும், பதவி மீதுள்ள பற்றுதல் காரணமாக அவர்கள் பயந்து வாழ்வதை பற்றியும் சொல்லிவிட்டு ஹோ ஹோ என்று சிரிக்கத் தொடங்கி விட்டார்.

காமராஜ் அந்த மாதிரி, அந்த அளவுக்கு சிரித்ததை நான் இதற்குமுன் கண்டதில்லை.  அந்த சிரிப்பில் கேலி இருந்தது.  ஐயோ இவர்களெல்லாம் இப்படிக் கோழைகளாக இருக்கிறார்களே என்ற பரிதாபம் இருந்தது.  சிறிது நேரம் சிரித்துவிட்டு பிறகு, அவங்கதான் அப்படி இருக்காங்கன்னா நம்மைச் சுற்றி உள்ளவர்களும் சரியில்லையேன்னேன், எந்த சமயத்தில் எதை பேசுவது, எதை பேசக்கூடாதுன்னுகூடத் தெரியலையே, வாயை மூடிக்கிட்டுச் சும்மா இருந்தாங்கன்னா அதுவே போதுமே என்று மீண்டும் சிரிக்கிறார்.

ஜனசங்கம், சுதந்திரா இந்த கட்சிகளுடன் கூட்டுசசேரும் முயற்சிக்கு என்ன தடங்கல் என்று நான் கேட்டபோது நான் என்ன செய்யட்டும், குஜராத்துக்கும் மைசூரும் ஒத்துவரமாட்டேங்குதே, அவங்க ஊர்ப் பிரச்சினை அவங்களுக்கு, அவசரப்பட்டால் சில காரியங்கள் கெட்டுப் போகுமே.  எனக்குள்ள கவலையெல்லாம் இந்த நாட்டைப் பற்றித்தான். நாம் தியாகம் செய்து பெற்ற சுதந்திரம் பறிபோயிடக்கூடாதேங்கிறதுதான்.  

சிவப்புப் பணம் நம் நாட்டிலே நிறைய நடமாடுதுன்னு சொல்றாங்க.  அப்படின்னா அது ஆபத்ததில்லையா?  அந்த பணம் எப்படி இந்த நாட்டுக்குள்ளே வருதுன்னு விஷயம் தெரிஞ்சவங்களை விசாரிக்கணும்.

இந்திரா காந்தி ப்ரோ ரஷ்யாவா, ப்ரோ அமெரிக்காவா?

அவங்க ப்ரோ இந்திரா, அந்த அம்மாவுக்கு பதவி தான் முக்கியம்.

நீங்கதானே அவங்களை பிரதமராப் போட்டீங்க, இப்ப நீங்களே வருத்தப்படறீங்களே?

நேருவின் மகளாச்சே, நேருஜியுடன் கூடவே இருந்ததாலே இந்த நாட்டு அரசியலை நல்லா கவனிச்சுப் பக்குவப பட்டிருப்பாங்க, நல்ல முறையிலே நாட்டை ஆளுவாங்க, அதுக்கேத்த திறமையும், மனப்போக்கும் இருக்கும்னு நினைச்சுத்தான் போட்டேன். இப்படி ஆகும்னு கண்டேனா? நாட்டையே அடகு வச்சுடுவாங்க போலிருக்கே.  கோபமும் எரிச்சலும் வருகின்றன அவருக்கு.  பேச்சிலே ஒரு வேகம், தவிப்பு.

இடது கையால் பிடரியைத் தேய்க்கிறார். வலது கையால் தலையை தடவிக் கொள்கிறார்.  சட்டையின் விளிம்பை சுருக்கி மேலே தோள்பட்டைவரை தூக்கிக் கொண்டு போய் சேர்க்கிறார்.  "உம், இருக்கட்டும்" என்று மீண்டும் தாமாகவே பேசத் தொடங்குகிறார்.

எனக்கு ஒண்ணுமில்லே, இந்த தேசம் பாழாப் போகுதே, இதை எப்படிக் காப்பாத்தப் போறோம்னுதான் கவலையாயிருக்கு, நான் என்ன செய்வேன்?

இதற்குள் எதையோ நினைத்துக் கொண்டு சரி பார்ப்பம் என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டுக் குழந்தை போல சிரிக்கிறார்.  எளிமையும், தூய்மையும் நிறைந்த காந்திஜியின் கபடப்மற்ற சிரிப்பை நினைப்பூட்டுகிறது அந்த சிரிப்பு.

சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு நீங்களே பிரதமராக வருவதற்கு சந்தர்ப்பம் இருந்தும் நீங்க ஏன் வர நினைக்கல்லே?  அப்படி நீங்கள் வந்திருந்தால் இந்த சங்கடம் இருந்திருக்காதே?வாஸ்தவம் தான்.  வேறே யாராவது பிரதமரா வந்தால், அவங்க நல்ல முறையிலே நாட்டை ஆளுவதற்கு நாம் உதவி இருக்கலாம். நாமே போயி பதவியில் உட்கார்ந்துக்கிட்டா சரியாகிடுமா? அப்பவே காரியக் கமிட்டீ அங்கத்தினர்களில் பெரும்பாலோரும் ராஜ்ய மந்திரிகளில் அநேகமாக எல்லோருமே நான்தான் பிரதமரா வரணும்னு கேட்டுகிட்டாங்க.  அடுததாப்லே ஒரு வருஷத்துக்குள் தேர்தல் வர போகுது. தேர்தல் சம்பந்தமான கட்சி வேலைகளையெல்லாம் விட்டு விட்டு நான் பிரதம மந்திரிப் பதவியில் போயி உட்கார்ந்துக்கிட்டா கட்சி என்ன ஆகிறது? எனக்கு கட்சி முக்கியமா? பிரதம மந்திரிப் பதவி முக்கியமா?

இந்திரா காந்தியை எப்படி தேர்வு செய்தீர்கள்? அந்த விவரத்தை கொஞ்சம் சொல்ல முடியுமா?

நேருவுக்கு பிறகு நமக்கு மிஞ்சி இருந்த ஒரே தலைவர் சாஸ்திரி தான்.  நேருஜிக்கும் சாஸ்திரியிடத்தில் நல்ல மதிப்பும், நம்பிக்கையும் இருந்தன.  சாஸ்திரி ரொம்ப சாது, காந்தீயவாதி, நேர்மையானவர், எளிய சுபாவம்.  அதே சமயத்தில் உறுதியான உள்ளம் படைத்தவர். இந்த நாட்டின் துரதிருஷ்டம் சாஸ்திரியும் சீக்கிரத்திலேயே நமமை விட்டுப் பிரிந்து விட்டார். தாஷ்கண்டில் அவர் இறந்தபோது நான் சென்னையில் இருந்தேன். ரேடியோவில் அந்த செய்தியைக் கேட்டு ரொம்ப துக்கப்பட்டேன். எனக்கு ஒண்ணுமே புரியவில்லை.  நம்ம நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தது.  ஆனால் சுதந்திரம் வாங்கித் தந்த தலைவர்களெல்லாம் வயதானவங்களாகப் போயிட்டாங்க. காந்தி, படேல், பிரசாத், ஆசாத், நேரு எல்லோருமே ரொம்ப நாளைக்கு இல்லாமல் போயிட்டாங்க. அப்பவே காந்திஜி சொன்னார. காங்கிரஸைக் கலைச்சுடலாம்னு. எனக்கு அப்போ அவர் எதுக்காக அப்படிச் சொல்றார்னு விளங்கல்லே, இப்போதுதான் புரியுது. அப்பவே கலைச்சு இருந்தால் இப்ப புதுசாவே இரண்டு பலம் வாய்ந்த கட்சிகள் தோன்றி வளர்ந்திருக்கும்.  அது நாட்டுக்கும் நல்லதாய் இருந்திருக்கும். 

சாஸ்திரியின் காரியங்கள் எல்லாம் முடிஞ்ச இரண்டு நாளைக்கெல்லாம் இந்திரா காந்தி என்னிடம் பேச வந்தாங்க.  தான் பிரதமரா வரமுடியும் என்கிற நம்பிக்கை அவருக்கே இல்லை அப்போது. இருந்தாலும், மனசுக்குள்ளே ஓர் ஆசை இருந்திருக்கும். விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்டுப் போவோம்னு வந்தாங்க போலிருக்கு. எப்படி இருக்கு தலைமை, என்ன செய்யப் போறீங்கன்னு பொதுவா பேச்சை ஆரம்பிச்சாங்க.  என் மனசிலே இருக்கிறதை நான் சொல்லலை.

நீங்க பேசாமல் வீட்டிலே போயி உட்காருங்க, நான் கூப்பிட்டு அனுப்பிச்சா அப்ப வாங்க, அதுவரைக்கும் நீங்க யார்கிட்டேயும் எதுவும் பேசாதீங்க, உங்ககிட்டே யாரவது வந்து ஏதாவது கேட்டாங்கன்னா காங்கிரஸ் பிரசிடெண்டைப் போயி கேளுங்கன்னு சொல்லி அனுப்பிடுங்கன்னேன். 

அடுத்தாப்பலே பத்திரிக்கைக்காரங்க போயி அந்த அம்மாவைக் கேட்டப்போ எனக்கு ஒன்னும் தெரியாது, காமராஜ் என்னை பேசாமல் வீட்டிலே போய் உட்கார்ந்திருக்க சொல்லிட்டார், அவரைப் போய்க் கேளுங்கன்னு பதில் சொல்லியிருக்காங்க.  அது பேப்பர்லேகூட வந்ததா நினைவு என்றார். 

இந்திராவை போடலாம்னு ஏன் நினைச்சீங்க, மொரார்ஜி தேசாய் வந்திருக்கலாமே என்றேன்.

நமக்குள்ளே போட்டியில்லாமல் ஒற்றுமையயாக ஒரு முடிவு எடுக்கணும்னு என் ஆசை, அப்ப சில பேர் போட்டி போடணும்னு நினைச்சாங்க.  காரியக் கமிட்டீ அங்கத்தினர்களும் அப்படித்தான் அபிப்பிராயப்பட்டாங்க.  எம்.பி.க்கள், முதலமைச்சர்கள், பிரதேசக் காங்கிரஸ் தலைவர்கள் எல்லாரையும் தனித்தனியாக கலந்து பேசினேன். என் மனசிலே இந்திரா காந்தியைப் போடலாம்னு ஓர் அபிப்பிராயம் இருந்தது.  ஆனால் நான் அதைக் கொஞ்சங்கூட வெளியிலே  காட்டிக்கல்லே.  ரொம்ப பேர் இந்திராவை வேண்டாம்னு சொன்னாங்க. ஆனாலும் அவர்களோடு எல்லாம் நான் ரொம்ப நேரம் டிஸ்கஸ் பண்ணினேன்.  அப்புறம் அவர்கள் அபிப்பிராயத்தை மாத்திக்கிட்டாங்க.  ஆனால் மொரார்ஜி ரொம்ப பிடிவாதமா இருந்தார். எம்.பி.க்கெல்லாம் லெட்டர் எழுதினார்.  நான் அவர் வீட்டுக்குப் போய் போட்டி போட வேண்டாம், வாபஸ் வாங்கிக்குங்கன்னு கேட்டுக்கிட்டேன்.  அவர் பிடிவாதமா வாபஸ் வாங்க மறுத்துட்டார்.  வேறு வழியில்லாமல் மறுநாள்  பார்ட்டியில் வைத்து வோட்டெடுத்தோம்.  இந்திராவுக்குத் தான் மெஜாரிட்டி கிடைச்சுது.

சரி, இந்திராவை பிரதமராக்கினீர்களே அதுக்கப்புறம் முக்கியமான பிரச்சினைகளில் உங்களைக் கலந்துக்கிட்டுத் தானே இருந்தாங்க?

ஆமாம், கலந்துக்க கிட்டு தான் இருந்தாங்க.  ஆனால் நம்ம நாட்டைப் பாதிக்கிற ஒரு முக்கியமான விஷயத்திலே என்னை கலந்துக்காமல் அவசரப்பட்டுட்டாங்க.  திடீர்னு நாணய மதிப்பைக் குறைக்கப் போறதா முடிவு எடுத்தது பெரிய தப்பு. நான் அப்ப சென்னையில் இருந்தேன்.  இந்திரா எனக்குப் போன் பண்ணி டில்லிக்கு வரச்  சொன்னாங்க.  நானும் போனேன். என்கிட்டே விஷயத்தைச் சொன்னாங்க. 

அப்படிச் செய்யக் கூடாது, ரொம்பத் தப்பு. வெளிநாட்டு வியாபாரம் கெட்டுப் போகும்.  வெளிநாட்டில் கோடிகோடியா கடன் வாங்கி இருக்கோம், அதை இரண்டு மடங்கா திருப்பிக்  கொடுக்க வேண்டியிருக்கும்.  டீவேல்யூவேஷன் அவசியந்தான்னு நினச்சா அதை பற்றி பொருளாதார நிபுணர்களைக் கலந்து பேசி முடிவு எடுங்க. அவசரப்படாதீங்க, ஆறு மாசம் கழிச்சு செய்யலாமேன்னுகூடச் சொல்லிப் பார்த்தேன்.

அதுக்கு என்ன சொன்னாங்க?  

இல்லே, காபினெட் மெம்பெர்ஸ் ஒத்துக்கிட்டாங்கன்னு சொன் னாங்க. காபினெட் ஒத்துக்கிட்டா மட்டும் போதாது.  எக்ஸ்பர்ட்டுங்ககிட்டே டிஸ்கஸ் பண்ண சொன்னேன்.  என் பேச்சைக் கேட்கல்லே.  அப்பத்தான் இந்த அம்மாவைப் பற்றி எனக்குப் பயம் வந்துட்டுது.  நாட்டை இவங்க கிட்டே ஒப்படைச்சிருக்கோமே, எங்கேயாவது தடுமாறிப் போயிடப் போறாங்களேன்னு கவலை வந்துட்டுது.

ஏன் நீங்கே அப்புறம் கூப்பிட்டு கேட்கிறதுதானே?

கேட்டேன்.  டிவேல்யூவேஷன் மேட்டரை பப்ளிக்கா டிஸ்கஸ் பண்ண முடியலை. ரகசியமா செய்ய வேண்டிய காரியம் அது, இதுன்னாங்க. அப்புறம் காங்கிரஸ் கமிட்டியில் இதை பத்தி பேசினோம். என்ன லாபம்? காரிய கமிட்டியில் இதை திருத்த முடியுமா? கண்டிக்கத்தான் முடியும்.  கண்டிச்சுத் தீர்மானம் போட்டா கட்சிக்குத் தானே பலக்குறைவு?  எங்கே போய்ச் சொல்லிக் கொள்வது?  அன்றுதான் எனக்கு கவலை வந்தது. இந்த அம்மாவிடம் நாட்டை விட்டு வைத்தால் ஆபத்துனு நினச்சேன்.  நான் என்ன செஞ்சுத்  தொலைப்பேன்னேன்.

சிரிப்பு, பலத்த சிரிப்பு, எக்காளச் சிரிப்பு.  தேசம் பாழாய்ப் போகிறதே என்று அடிவயிறு காந்தி வரும் சிரிப்பு, அந்தச் சிரிப்பு அடங்கக் கொஞ்ச நேரம் ஆகிறது.

பார்ப்பம், பொறுமையா இருந்துதான் காரியத்தை சாதிக்கணும்.  மணிக்கட்டைப் பிடித்துக் கொள்கிறார், பிடரியைத் தேய்க்கிறார், தவிக்கிறார்.  மீண்டும் அந்தகக் குழந்தைச் சிரிப்பு.

(தொடரும்)