Pages

Wednesday, November 30, 2022

கண்டகி நதி புராணம்

 தாசி குலப் பெண்ணான "கண்டகி" என்னும் அழகான பெண்ணிடம் ஒரு விசித்திரமான குணம் இருந்தது.

அது என்ன வென்றால், தன்னை நாடி வரும் ஒவ்வொரு ஆணையும் தன் மணாளனாகவே பாவித்து, ஒரு தர்ம பத்தினியைப் போல் அவனிடம் நடந்து கொண்டு அவனுடைய எல்லாத் தேவைகளையும் முழு மனத்துடன் செய்து வந்தாள்.

இதைப் பார்த்த ஊரார் அவளை எள்ளி நகையாடினர். இருந்தாலும் அவள் தன் குணத்தில் இருந்து மாறவில்லை.

ஒருநாள் ஒரு கட்டழகு வாலிபன் மாலைப் பொழுதில் அவளிடம் வந்து பொன்னும், மணியும் கொடுத்துவிட்டு அவளை ஏறிட்டுக் கூடப் பாராது சென்று விட்டான்.  

வருந்திய கண்டகி செய்வதறியாது திகைக்க, அதே வாலிபன் அன்று நடுநிசியில் திரும்ப அவளிடம் வருகிறான்.

உற்சாகத்துடன் அவனை உபசரித்த கண்டகி அன்றிரவு அவனைத் தன் பதியாக மனத்தால் வரித்து அவனுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்ய முற்பட்டாள். அப்போது அவன் உடல் வியர்வையால் நனைந்திருப்பது கண்டு நறுமணத்தைலம் தடவி அவனைக் குளிக்க ஆயத்தம் செய்ய யத்தனித்தவளுக்கு அவன் ஒரு குஷ்டரோகி எனத் தெரிய வருகிறது.

அதிர்ச்சி அடைந்தாலும் அவனைத் தன் பதியாக வரித்த காரணத்தால் வெறுக்காமல் அவனைத் தொட்டு வேண்டிய உதவிகள் செய்து அவனுக்கு வேண்டிய சிசுருஷைகள் புரிந்தாள்.

உண்மை தெரிந்த அவள் வீட்டார் அவனை அப்போதே விலக்கச் சொல்ல மறுத்தாள் கண்டகி. அன்றிரவை அவனுடன் கழிக்க, மறுநாள் பொழுது விடிகிறது. அவனை எழுப்புகிறாள் கண்டகி. வாலிபன் உயிரோடு இல்லை.

இதைக் கண்டு வருந்திய கண்டகி, அவன் தன் பதி என்று சொல்லி அவனுடைய இறுதிச் சடங்குக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டுப் பின் அந்நாளைய வழக்கப்படி தானும் அவனுடன் உடன்கட்டை ஏறுகிறாள்.

திகைத்த உறவினர் செய்வதறியாமல் விழிக்க சிதைக்குத் தீ மூட்டும் நேரம்அற்புதம் நிகழ்கிறது.

இறந்த வாலிபன் உடல் மறைய அங்கே சங்கு , சக்ர கதாபாணியான ஸ்ரீமந்நாராயாணன் காட்சி அளிக்கிறார்.  

கண்டகி ஒவ்வோர் இரவிலும் ஒரு ஆணைத் தன் கணவனாக வரித்து வந்த போதிலும் அந்த ஆணுக்கு உண்மையான பத்தினியாக அவள் அனுஷ்டித்த பதிவிரதா தர்மத்தை உலகுக்கு எடுத்துக் காட்டவே இவ்வாறு நடந்ததாய் ஸ்ரீமந்நாராயணன் சொல்லிக் கண்டகிக்கு மூன்று வரங்கள் அளிப்பதாய் சொல்கிறார்.

கண்டகி கேட்டதோ ஒரே ஒரு வரம் மட்டும் தான். அதுவும் எப்போதும் ஸ்ரீமந்நாராயணன் பக்கத்திலேயே தான் ஒரு தாயாகவும் பெருமாள் மகனாகவும் இருக்க வேண்டும் என்பது தான் அது.

அப்போது ஸ்ரீமந்நாராயணன் சொல்கிறார் ஒரு பக்தனின் சாபத்தால் தான் மலையாக மாறவேண்டி இருப்பதால் மலையோடு சார்ந்த நதியாகக் கண்டகி எப்போதும் தன்னுடன் இருக்கலாம் என்று சொல்லுகிறார்.

சாபம் பெற்ற நாராயணன் மலையாக மாறக் கண்டகி அதே பேரோடு நதியாக ஓடுகிறாள். ஒரு மாலைபோல் மலையைச் சுற்றிக் கொண்டு ஓடும் கண்டகியின் வயிற்றில்தான்  சாளக்கிராம கற்கள் கிடைகின்றது.  

"கண்டகி நதி புராணம் "

Sunday, November 27, 2022

இறந்தவர்களின் அஸ்தியை தபால் மூலம் புனித கங்கையில் கரைப்பது எப்படி?

இறந்தவர்களின் அஸ்தியை தபால் மூலம் புனித கங்கையில் கரைப்பது எப்படி?

உறவினர் ஒருவரின் மறைவிற்கு பின்பு அவரின் அஸ்தியை கங்கையில் கரைக்க எல்லோராலும் நேரில் பொருளாதார, மற்றும் சில காரணங்களால நேரில் செல்ல முடியாது. அதனால் அதை செய்ய முடியாமால் போய்விடுகிறது. அதற்கு  கால காலமாக நம் நினைவில் ஒரு நீங்கா நிராசையாக நின்று விடுவதுண்டு. அதற்காக RSS ன் "அஸ்தி விசர்ஜன்" அமைப்பும், Indian SPEED POST ம் இணைந்து அந்த சேவையை செய்து வருவது பலருக்கு தெரிவதில்லை. ஆம், அஸ்தி சாம்பலை இப்போது ஸ்பீட் போஸ்ட் வழியாக அனுப்பி, புனித கங்கையில் கரைக்கலாம், அவர்கள் செய்யும் சடங்குகளை நேரலையில் பார்க்கலாம்.

வாரணாசி, பிரயாக்ராஜ், ஹரித்வார் மற்றும் கயாவில் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் மரணத்திற்குப் பிந்தைய சடங்குகளைச் செய்ய அனுமதிக்கும் சமூக-மத அமைப்பான 'ஓம் திவ்ய தர்ஷன்", உடன் இணைந்து புதிய முயற்சியை அஞ்சல் துறை அறிவித்துள்ளது என்று செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது

வசதியை எப்படிப் பெறுவது

1) முதலில் http://www.omdivyadarshan.org/ இல் உள்ள ஓம் திவ்ய தர்ஷன் சன்ஸ்தாவின் போர்ட்டலில் ஒருவர் இறந்தவர் பற்றிய விபரத்தை Google Form ல் பதிவு செய்து கொள்ள வேண்டும். 

பதிவு செய்ய கீழே இருக்கும் லிங்:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfN3R-aP90EBEIXos_XOalJuRTgar8AhSU9ICrPk6cLRFDs_w/viewform

2) பதிவு செய்து அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய பின்புதான் சாம்பல் அனுப்ப வேண்டும். +91 83696 66626

3) பதிவுசெய்த பிறகு, சாம்பல் பொட்டலம் வாரணாசி, பிரயாக்ராஜ், ஹரித்வார் மற்றும் கயா/ஆகிய இடங்களுக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் தபால் அலுவலகம் மூலம் அனுப்பப்படலாம். 

அதில் 'ஓம் திவ்ய தரிசனம்' என்று தடித்த எழுத்துக்களில் எழுத வேண்டும். ஸ்பீட் போஸ்ட்டை முன்பதிவு செய்த பிறகு, அனுப்புநர் போர்ட்டலில் முன்பதிவு விவரங்களுடன் அந்த அஸ்தியை அனுப்பிய தபால் பற்றிய தகவலை புதுப்பிக்க வேண்டும் 

4) இதற்குப் பிறகு, "ஓம் திவ்ய தர்ஷன் சன்ஸ்தா", சாம்பல் மூழ்குதல் மற்றும் பிற சடங்குகளை கவனித்துக் கொள்ளும். அந்த இறுதி சடங்குகளை இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் இங்கிருந்தே இணைய ஒளிபரப்பு மூலம் பார்க்க முடியும்.

நிறுவனம் பற்றி தொடர்பு கொள்ள பயன்பாட்டு விதிமுறைகளை தனியுரிமைக் கொள்கை ஆர்.எஸ்.எஸ் தொடர்பு கொள்க. 

குறிப்பு: இது பற்றிய தகவல் எளிதாக கிடைப்பதில்லை. எனவே மற்றவர்களுடன் பகிர்ந்து புண்ணியம் தேடுங்கள்.