Pages

Monday, August 12, 2024

மாடு மேய்ப்பதற்கு தான் லாயக்கு

முன்பெல்லாம் படிப்பு வராத மாணவர்களைப் பார்த்து ஆசிரியர்கள் அடிக்கடி சொல்லும் வாக்கியம், 

 ‘உனக்குப் படிப்பு  வராது, நீ மாடு மேய்ப்பதற்கு  தான் லாயக்கு என்பதாகும்.

ஒரு மாணவனிடம் ஆசிரியர் வழக்கமான அந்த வாக்கியத்தைச் சொன்னார். 

துரதிஷ்டவசமாக, அந்த மாணவன்  நிஜமாகவே அவ்வப்போது மாடு மேய்த்துக் கொண்டிருந்தான்! படிப்பிலே வீக்.

‘மாடு மேய்க்கிறது ஈஸியா?’ என்று ஆசிரியரிடம் கேட்டான் 

‘இல்லையா பின்னே? படிப்பறிவு இல்லாதவந்தானே மாடு மேய்க்கிறான்?’ 

என்றார் ஆசிரியர்.

‘அம்பது மாடுல எது கன்னியப்பச் செட்டியார் மாடு, எது பாண்டிய நாடார் மாடுன்னு உங்களாலே கண்டுபிடிக்க முடியுமா?’

ஆசிரியர் அதிர்ந்தார்.

‘எல்லா மாடும் ஒரே இடத்துலதான் மேயுமா?’

அடுத்த கேள்வி இன்னும் அதிகமாகத் தாக்கியது.

‘எது எங்கே மேயும்ன்னு பாத்து ஓட்டிக்கிட்டு போவீங்களா?’

இப்போது ஆசிரியர் பாண்டியராஜன் போல விழித்தார்.

‘மாடு எப்ப சாணி போடும்ன்னு தெரியுமா?’

இப்போது விழி ஆடு திருடின கள்ளன் போல் ஆயிற்று.

‘சாணி மொத்தத்தையும் கூடைல பிடிப்பீங்களா? 

வரட்டி தட்டத் தெரியுமா? 

வரட்டியில ஏன் வைக்கோல் போடணும்ன்னு தெரியுமா? 

அது ராடு வச்ச கான்க்ரீட்போல ஸ்ட்ராங்குன்னு தெரியுமா?’

கேள்விகள் சரமாரி ஆயின.

‘எனக்கு மாடு மேய்க்க வரல்லைன்னு தான் எங்கப்பா படிக்க அனுப்பிச்சார் தெரியுமா?!!

நீ மாடு மேய்க்க லாயக்கில்லை, பேசாம படிச்சி வாத்தியார் ஆயிடுன்னு அனுப்புச்சாரு’.

அதற்கப்புறம்,  வாத்தியார்கள் யாரையுமே நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று சொன்னதே இல்லை!

Saturday, August 10, 2024

தீர்க சுமங்கலி பவா ...!

தீர்க சுமங்கலி பவா ...!

என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம்

5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.

திருமணத்தில் ஒன்று,

60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,

70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,

80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று,

96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று!.

இவைகள் பற்றி ஒரு சிறு விளக்கம் ;

ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. 

பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது. 

இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன. 

 சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன. 

உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும்.

நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும். 

பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. 

இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு ⚜சூரியனுக்கு ஓர் ஆண்டும்,

⚜செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும்,

⚜சந்திரனுக்கு ஒரு மாதமும்,

⚜புதனுக்கு ஒரு வருடமும்,

⚜வியாழனுக்கு 12 வருடங்களும்,

⚜வெள்ளிக்கு ஒரு வருடமும்,

⚜சனி பகவானுக்கு 30 வருடங்களும்,

⚜ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும்,

⚜கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன. 

இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும். 

மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும். 

ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.

பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும். 

அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது. 

பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும். 

அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன? 

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம். 

இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...

⚜அக்னி,

⚜சூரியன்,

⚜சந்திரன்,

⚜வாயு,

⚜வருணன்,

⚜அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,

⚜அமிர்த கடேஸ்வரர்,

⚜நவநாயகர்கள்..

சேர்த்து குறிப்பதற்காகத் தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம். 

 பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,

சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,

ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,

பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும் அதிபதிகள் ஆவார்கள். 

தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும். 

தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும். 

தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள். 

காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும். 

70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும். 

ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.

அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.

இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும் 

இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது.

தீர்கசுமங்கலி பவா ...!என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம்... ஐந்து மாங்கல்யம் பெற வேண்டும்!.


Saturday, July 27, 2024

சாப்பாடு காஞ்சி பெரியவா

சாப்பாடு (போஜனம்) பத்தி காஞ்சி பெரியவர் - அருமையான விளக்கம்.

கல்யாணம்,  மத்த விசேஷம், சாதாரணமாக  வீடுகளில் போஜனம்  எப்படி சாப்பிடுறோம்?''  என்று பெரியவா கேட்டார்.

வாழை இலைலே எல்லா அயிட்டம் வச்சதும் போஜனம் சாப்பிடறோம் ''

அது சரி எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை எந்த ஆர்டர்ல எடுத்துக்குவேள்"

''ஓ அதை கேக்கறேளா  பெரியவா.  மொதல்ல சாம்பார், அடுத்தது ரசம், அப்புறம் பாயசம், பட்சணம், கடைசியா மோர்" அங்கே இருந்த பலர் சேர்ந்து சொன்னா.

"ஏன் இப்படி ஒரு ஆர்டர் வைச்சிருக்கா தெரியுமோ?"

மகாபெரியவா இப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.    மௌனமாக இருந்தார்கள்.   தெரியும் அவரே பதில் சொல்வார்  என்று...

இலையை போட்டவுடனே வாழ்க்கை பசுமையான இருக்கேன்னு அதுல மயங்கிடாதேன்னு தண்ணிய தெளிக்கிறா. அப்பறம் பாயசம், அதுக்கு எதிரில பச்சடி எதுக்கு வைக்கிறா தெரியுமா? பாயசத்தால பிறந்த ஸ்ரீராமனையும் தயிர் வெண்ணைப் பிரியனான ஸ்ரீகிருஷ்ணனையும் சாப்பிடும்போது நினைக்கனும் என்பதற்காகத்தான்... 

"மொதல்ல குழம்பு. இதுல, 'தான்' இருக்கு.  தான்  என்பது வெண்டக்கா, சுண்டக்கா, பூசணி, பரங்கி, கத்திரி, முருங்கைக்கா  ஏதோ ஏதோ  இருக்குமே  அது தான் '' தான் '' என்பது இல்லையா.  நாம எல்லாம் பொறந்து வெவரம் தெரிஞ்சதுமே ''தான் ''  என்கிற  அகங்காரம் மனசுல வந்துடறது. அதனால் நாம ''குழம்பி'' ப் போயிடறோம். அந்தத்  ''தானை''  கொஞ்சமா தீர்த்துட்டு, அடுத்த  கட்டத்துக்குப் போறோம்.

அப்போ ''தான்'' இல்லாததால்   ஒரு தெளிவு வந்துடறது இல்லையா.  அதாவது ''ரச'' மான மன நிலை. அதுதான் ரசம். ''தான்'' இல்லாம தெளிவா இருக்கற மனசுல ''ரச'' மான எண்ணம் வருது. 

அது வந்ததும் எல்லாமே இனிப்பா பாயசமாகவும், பட்சணமாகவும் ஆயிடறது..

கடோசியா மோர்.   மோர் என்கிறது என்ன எப்படி கிடைக்கிறது?  

பால்லேர்ந்து தயிர் கிடைக்கறது. அதுலேர்ந்து வெண்ணெய் எடுக்கறா. அதைக் காய்ச்சி நெய் வர்றது. இதெல்லாம் எடுத்தப்புறம் மிஞ்சி இருக்கிறது மோர். அதாவது மோர்லேர்ந்து எதையும் பிரிச்சு எடுக்க முடியாது. 

அதாவது மோருக்கு அடுத்த பிறவி இல்லை.

இந்த போஜன ஸம்ப்ரதாயத்திலிருந்து என்ன புரியறது? 

நாமளும் அகங்காரத்தை விட்டு மனசு தெளிஞ்சு ரசமா வாழ்க்கையை அனுபவிச்சு, யாருக்கும் எந்த உபத்ரவமும்  பண்ணாம எல்லாருக்கும் இனிமையாக வாழ்ந்து கடேசில பரமாத்மாவோட கலந்துட்டா. அதுக்கு அப்புறம் எதுவுமே இல்லை. அதாவது 'நோ மோர்!"

சாதரணமான மக்களுக்கும் இந்த அடிப்படை விஷயம் போய்ச் சேரணும். ஒவ்வொரு நாளும் போஜனம் பண்ணறச்சே ஒரு நிமிஷமானும் இதை நினைச்சுப் பார்த்து எல்லாரும் பகவானோட திருவடியைப் பற்றிக்கணும். அப்படிங்கற உயர்வான எண்ணத்துலதான் நாம தினமும் அனுசரிக்கற போஜன முறையையே நம்ம  வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தற மாதிரிதான்  அமைச்சிருக்கா!" சொல்லி முடிச்சார்,

ஸ்ரீ மகா பெரியவா.

Thursday, July 18, 2024

ஹரியை காட்டிலும் ஹரி நாமமே

ஸர்வம் ஸ்ரீராம‌ மயம் 

ஜெய் ஸ்ரீராம் 

ஹரியை காட்டிலும் ஹரி நாமமே உயர்வானது என்று நெஞ்சில் விதைத்தவர்கள்

🍁🍁🍁🍁🍁🍁

1.நம்மாழ்வார்

2.திரு மங்கை ஆழ்வார்

3.பெரியாழ்வார்

4.ஆண்டாள்

5.தொண்டரடி பொடி ஆழ்வார்

6.ராமானுஜர்(மதில் மேல் ஏறி அஷ்டாச்சரம் போதித்தார்)

7.சிவ பெருமான்

8.ஆதி சங்கரர்

9.போதேந்திரர்

10.ஸீதர ஐயர் வாள்

11.மருதா நல்லூர் ஸ்வாமி

12.தியாக ப்ரும்மம்

13.புரந்தர தாசர்

14.கனக தாசர்

15.கிருஷ்ண சைதன்யர்

16.ஜெய தேவர்

17.நிவ்ருத்தி நாதர்

18.ஞானேஸ்ரர்

19.சோபான தேவர்

20.நாம தேவர்

21.ஏக நாதர்

22.சமர்த்த இராம தாசர்

23.கோர கும்பார்

24.சோகாமேளர்

25.முக்தா பாய்

26.மீரா

27.ஜனா பாய்

28.கபீர் தாசர்

29.துக்காராம் மகராஜ்

30.சதா சிவப்ரேமைந்தர்

31.பீஷ்மாச்சார்யா

32.நர்சிம்ம மேத்தா

33.ரவி தாசர்

34.பானு தாசர்

35.பிரகலாதர்

36.ராக வேந்திரர்

37.ஜெய தீர்த்தர்

38.சூர் தாசர்

39.விஜய தீர்த்தர்

40..பூந்தானம்

41.துளசி தாசர்

42.வியாச பகவான்

43.வால்மீகி

44.சுகர்

45.அஜாமிளன்

46.அனுமன்

47.கத்திர பந்து

48.நர நாரயணன்

49.நாரதர்

50.சபரி

51.த்ரௌபதி

ஐம்பத்தி ஒரு நாம பீடங்கள்

நாமமே பலம் 

நாமமே சாதனம்

ராம கிருஷ்ண ஹரி

பாண்டுரங்க ஹரி

விட்டல விட்டல 

பாண்டுரங்கா 

ஹரே ராம ஹரே ராம 

ராம ராம ஹரே ஹரே  

ஹரே கிருஷ்ண ஹரே 

கிருஷ்ண கிருஷ்ண

கிருஷ்ண ஹரே ஹரே 

ஓம் நமோ நாராயணாய 

ஓம் நமோ வெங்கடேசாய 

Wednesday, July 17, 2024

கற்கிடமாஸம்

இராமாயண கற்கிடக மாஸம்.

அனைவருக்கும் எனது வினீதம்கூடிய அனேக நமஸ்காரங்கள்.

கற்கிடமாஸத்தின் ஆரம்பம் என்பது தக்ஷிணாயன காலம் ஆரம்பம் தேவன்மார்கள், இராத்திரி பொழுது.

இயற்கையானது, மழையால் நனைந்தும், குளிர்ந்தும், ஈரத்தோடுகூடி குளித்து நிற்கின்ற ப்ரகர்தி பூமி தான் கற்கிடகமாஸம், என்கிற ஆடிமாதம்.

பண்டைய காலகட்டங்களில், நிற்காத மழையும், அதனால் வெளியே வேலைக்கு செல்லமுடியாத க்ருஷிக்காரர்களும், அதனால் குடும்பத்தில் பட்டினியும், பசியும்கூடீ நிற்கின்ற காலம் கற்கிடகமாஸம்.

வாதம், ஆஸ்துமா, ஜுரம், வயிற்றுபோக்கு, போன்ற ரோகங்கள் பெருகுகின்ற காலமது.

மனுஷ்யன்மார்கள், எப்படியோ சகித்துகொண்டு வாழும், வாழ்ந்த காலகட்டங்கள் தான், அன்றைய கற்கிடகமாஸம்.

அன்றைய கால கற்கிடகமாஸம், நம், மூதாதையர்கள் கற்கிடக கஞ்சி, என்று ஒன்றை செய்து, அனைவருக்கும் கொடுப்பார்கள்.

அதில் பலதரப்பட்ட, ஆயூர்வேத மூலிகை ஔஷதங்கள் சேர்த்து அந்த கஞ்சி தயாரித்து அனைவருக்கும் கொடுப்பார்கள், இன்றைக்கும், தென்பாண்டியநாடு, கேரளீய நாடு, கர்நாடக மாநிலங்களில், கற்கிடகஞ்சி, கற்கிடகமாஸத்தில் தயார் செய்து கொடுத்து வருகிறார்கள்,இதனால் அன்றைய காலகட்ட மனுஷ்யன்மார்கள் ஆயுள் ஆரோக்கியம் கூடி வாழ்ந்து வந்தார்கள்.

அது, இன்றைய Morden generation youths. மறந்து போனார்கள்,

அன்றைய கர்க்கிடகம் மாஸத்தில், கற்கிடகஞ்சி மட்டுமில்லாமல், அவர்கள், இராமாயணம் பாராயணம் செய்யும் மாஸமாக கற்கிடகம் மாஸத்தை தொடங்கினார்கள்.

காரணம், பெருக்கெடுத்து, ஒடும் நதிகள், குளங்கள், குட்டைகள், எந்தவிதமான விவசாய க்ருஷி வேலைகளையும் செய்யமுடியாது, எங்கும், அந்த பெருமழைகாலத்தில், காளை பூட்டி யாத்ரா போக முடியாது, என்கிற காரணத்தால் கற்கிடகமாஸம், இராமாயண பாராயணம் செய்யும் மாஸம் என்று தீர்மானித்தார்.

ஒரு கொட்டுமழை காலத்தில், எதுவுமே செய்யாமல் போகின்ற காரணத்தாலும் பொருளாதார நெருக்கடிகள் வந்ததாலும், கற்கிடகமாஸத்தை, துர்க்கிடக மாஸம், என்று அழைத்தார்கள்.

கற்கிடகமாஸம் அது துர்க்கிடகமாஸம் ஆகி போனது, அதாவது பீடை மாஸம், என்று சொல்லப்பட்டது, பொதுஜனங்களால், இன்றளவும் கற்கிடகமாஸம் பீடை பிடித்த மாஸமாகவே கருதப்பட்டு வருகின்றது.

சூரியன், உத்திராயண காலம் கழிந்து, தக்ஷணாயன காலத்தில், அதாவது ஆடி மாஸத்தில் கற்கிடக இராசி க்ஷேத்ரத்தில் சஞ்சரிக்க ஆரம்பிக்கும் முதல் மாதம் பீடை மாதம்.

அதேபோல் சூரியபகவான், தக்ஷிணாயன காலம்முடிந்து, மகர இராசி க்ஷேத்ரத்தில் சஞ்சரிக்கும் முன் தனூக்ஷேத்ரத்தில், மார்கழிமாதம், தனூமாஸத்தையும், பீடை மாஸமாகவே, மக்கள் கருதப்பட்டு வருகின்றனர்,

கற்கிடமாஸம் இராமாயண பாராயணம் போல் புண்ணியம் வேறெதுவும், உண்டோ? வேறெந்த மதங்களிலும், உண்டோ?

மரியாதை புருஷோத்தமனாகிய, ஸ்ரீ இராமச்சந்திர சக்ரவர்த்தி, ப்ரஜைகளுக்கு இராஜன் ஆகவும், சம்ரக்ஷிக்கும், இரக்ஷகர்த்தா ஆகின்றார்! ஒவ்வொரு ஜன ப்ரதிகர்களுக்கும், ஆதர்ஷ்ண புருஷன் ஆகின்றார். 

உத்திராயமாஸத்தில் மகரமாஸம் தொடங்கி, மிதுன மாஸம் வரை  தேவன்மார்களுக்கு, பகல் பொழுது.

அதன்பிறகு கற்கிடகமாஸம் தொடங்கி, தனூமாஸம், மார்கழி முடிய தேவன்மார்களுக்கு, இரவுபொழுது ஆகும்.

பன்னிரண்டு மாஸங்கள் தேவன்மார்களுக்கு, ஒரு நாளாகும், அப்போது நம்முடைய, ஒருநாளானது தேவன்மார்கள், இரண்டு மணிநேரம் மட்டும்மே! 

அதனால்தான் தேவன்மார்கள், பகல்பொழுது ஆன, உத்திராயண காலகட்டம் சுபகார்யங்கள், மனுஷ்யன்மார்கள் நடத்தி கொள்ள அனுமதிக்கின்றார்கள்.

தேவக்ஷேத்ர ப்ரதிஷ்டைகள்,க்ஷேத்ர கலஸ நிர்மாணம், க்ஷேத்ர உற்ஸவங்கள், ஹோமகர்ம்மங்கள், விவாஹங்கள், கிரகப்ரவேஸம் போன்றவற்றை, தேவன்மார்கள் பகல்பொழுதில்தான் நடத்தப்படவேண்டும், என்பதுதான் ஸாஸ்த்ர விதி.

காலைப்பொழுது அக்னி சூரியபகவான், ஒளி தந்து ப்ரபஞ்சத்திலுள்ள துஷ்ட கிருமிகளை நாசம் செய்யும் கிருமிநாசினி ஆகின்றார், இரவுநேரம் ஆரம்பிக்கும் முன்பே த்ரிசந்ய மாலைபொழுது முடியும்நேரத்தில் நாம் நமது பவனங்களில் குத்துவிளக்கு மூலம் அக்னிபகவானை வரவைழைத்து, பவனங்களில், உள்ள துஷ்டசக்திகளை நாஸம் செய்கின்றோம், 

தக்ஷணாயனகற்கிடக மாஸத்தில் பாராயணம் செய்யும், இராமாயணத்தில்,

,, ரா மா,,

என்கிற இரண்டெழுத்துகள் கொண்ட சொல்லே, ஒரு ப்ரத்யேக தர சக்திகூடிய மந்திரமாகும்,

ஏகாக்ஷரி மந்திரமான,, ஓம்,,  காரம் (ப்ரணவம்) அடுத்ததாக த்துயாத்ரி இரண்டாவது மந்திரம்தான், ராமா,., என்கிற மந்திரம், 

பரமசிவன் புருஷத்தி, பரமேஸ்வரி தனது கெட்டியோனிடம் கேட்டாள், புருஷா, விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதாஸகஸ்ரநாமம், இரண்டையும் பாராயணம் செய்வதற்கு பதிலாக, எளிய மந்திரம், ஏதாவது, உண்டா? என்று கேட்டபொழுது,

அதற்கு பரமன். தனது கெட்டியோளிடம் சொன்னார், சிறந்த மந்திரம் ராமா, என்கிற, இரண்டெழுத்து மந்திரம்,

காரணம், நமசிவாயா, என்கிற பஞ்சாக்ஷிரி மந்திரத்திலிருந்து, இரண்டாவது, எழுத்தான,, ம,, என்கிற வார்த்தை, எடுத்துவிட்டால், நசிவாயா, என்று வந்துவிடும், நமசிவாயா, என்றால் மங்களகரமானது, என்று அர்த்தம்,

அந்த, இரண்டாவது, எழுத்தை, எடுத்துவிட்டு நசிவாயா, என்று சொன்னால் மங்களகரமானது அல்ல! என்று அர்த்தம்,

அதுபோல் நமோ  நாராயாணா என்கிற மந்திரத்தில் , ரா, என்கிற வார்த்தை, எடுத்துவிட்டால் மந்திரம் சக்தியற்று போய்விடும்,

காரணம்,ரா என்கிற, எழுத்திலும், ம, என்கிற மந்திரத்திலும், உல்பாதன பீஜசுக்ல சக்தி, கொண்டுள்ளது,

ஆகவே கற்கிடகமாஸம் ராமா, என்கிற மந்திரத்தை அதிகாலையில் ப்ரபாத சந்த்யா நேரத்தில் சொல்பவர்களுக்கு, அவர்கள் கிரகங்களில் துஷ்டதேவதை போய் நல்ல சம்பவிக்கும், என்கின்றார் பரமசிவன்

ஆகவே கற்கிடகமாஸம் முதல், ஒவ்வொரு வீட்டிலும், இராமாயண பாராயணம் ஆரம்பித்தால் நலம்.

Thursday, July 11, 2024

Essay On Thieves

The importance of thieves in a country's economy!

The teacher told the children to write an essay on __thieves__ for tomorrow.

Following is the essay of a seventh-grade student, Buddhi Prakash.

▪️ Thieves are the backbone of a country's economy.

▪️ People might think this is a joke or wrong, but it's actually a subject worth pondering.

▪️ Safes, cupboards, and locks are needed because of thieves. This gives work to the companies that make them.

▪️ Because of thieves, windows in homes have grills, there are doors, doors are locked, and not just that, there are additional doors for security outside. So many people get work.

▪️ Due to thieves, a compound is built around houses, shops, and societies; there are gates, a guard stays at the gate 24 hours, and there is also a uniform for the guard. So many people get work.

▪️ Because of thieves, not just CCTV cameras and metal detectors but also cyber cells exist.

▪️ Because of thieves, there are police, police stations, police posts, patrol cars, batons, rifles, revolvers, and bullets. So many people get work.

▪️ Because of thieves, there are courts, judges, lawyers, clerks, and bail bondsmen in the courts. So many people get work.

▪️ Because of thieves, there are jails, jailers, and police for the jails. So many people get work.

▪️ When things like mobile phones, laptops, electronic devices, bicycles, and vehicles are stolen, people buy new ones. This buying and selling strengthen the country's economy and give work to many people.

▪️ If a thief is highly recognized and famous, then media from home and abroad also get their livelihood.

▪️ After reading all this, you must also be convinced that thieves are the backbone of the entire government system and a means of livelihood for the people in society.

Wednesday, July 10, 2024

முதியவர்கள் எலும்பு

முதியவர்கள் அனைவருக்கும் (60-100 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்...)

எலும்பியல் மருத்துவரிடமிருந்து ஒரு கடிதம்:

எலும்பு அடர்த்தியை தீர்மானிப்பதை இனி நான் பரிந்துரைக்கவில்லை, ஏனென்றால் வயதானவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்டியோபோரோசிஸ் இருக்கும், மேலும் வயது அதிகரிக்கும் போது, ​​ஆஸ்டியோபோரோசிஸ் அளவு கண்டிப்பாக மேலும் மேலும் தீவிரமடையும், மேலும் எலும்பு முறிவு அபாயமும் பெரிதாகும். 

ஒரு சூத்திரம் உள்ளது:

எலும்பு முறிவு அபாயம்= வெளிப்புற சேத சக்தி/எலும்பு அடர்த்தி.

முதியவர்கள் எலும்பு முறிவுகளுக்கு ஆளாகிறார்கள், ஏனெனில் டினாமினேட்டர் மதிப்பு (எலும்பு அடர்த்தி) சிறியதாகி வருகிறது, எனவே எலும்பு முறிவு ஆபத்து நிச்சயமாக அதிகரிக்கும்.

எனவே, எலும்பு முறிவுகளைத் தடுப்பதற்கு வயதானவர்களுக்கு மிக முக்கியமான நடவடிக்கை, விபத்துக் காயங்களைத் தடுக்க முடிந்த அனைத்தையும் செய்வதாகும்.

விபத்து காயங்களை குறைப்பது எப்படி?

நான் தொகுத்த இரகசியம் என்று அழைக்கப்படும் பன்னிரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளன, அவை:

“கவனமாக இரு, கவனமாக இரு, மீண்டும் கவனமாக இரு”!

குறிப்பிட்ட நடவடிக்கைகள் அடங்கும்:

1. ஒரு நாற்காலியில் அல்லது ஸ்டூலில் எதையாவது பெறுவதற்கு ஒருபோதும் நிற்காதீர்கள், குறைந்த ஸ்டூல் கூட.

2. மழை நாட்களில் வெளியே செல்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

3. குளிக்கும்போது அல்லது கழிப்பறையைப் பயன்படுத்தும்போது, ​​​​நழுவுவதைத் தடுக்க சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

4. மிக முக்கியமானது, குறிப்பாக பெண்களுக்கு - குளியலறையில் உள்ளாடைகளை அணியாதீர்கள், சுவர் அல்லது பிற பொருட்களைத் தாங்க வேண்டாம் ... இடுப்பு மூட்டு நழுவுதல் மற்றும் எலும்பு முறிவுக்கான பொதுவான காரணம்... குளித்த பிறகு, உங்கள் உடை மாற்றும் அறைக்கு திரும்பவும். ஒரு நாற்காலியில் அல்லது உங்கள் படுக்கையில் வசதியாக உட்கார்ந்து பின்னர் உள்ளாடைகளை அணிந்து கொள்ளுங்கள்.

5. கழிப்பறைக்குச் செல்லும்போது, ​​குளியலறையின் தளம் வழுக்காமல் வறண்டு இருப்பதை உறுதிசெய்யவும் கமோட் மட்டும் பயன்படுத்தவும்.. அதே நேரத்தில், கமோட் இருக்கையில் இருந்து எழும்பும் போது பிடித்துக் கொள்ள ஒரு ஹேண்ட் ரெஸ்டை பொருத்தவும்... பாத் ஸ்டூலில் அமர்ந்து குளிக்கும்போதும் இது பொருந்தும்.

6. படுக்கைக்குச் செல்வதற்கு முன் வீட்டின் தரையில் உள்ள ஒழுங்கீனத்தை சுத்தம் செய்ய வேண்டும், மேலும் தரை ஈரமாக இருக்கும்போது இருமுறை கவனியுங்கள்...

7. நள்ளிரவில் எழுந்திருக்கும் போது, ​​3-4 நிமிடங்கள் படுக்கையில் உட்கார்ந்து, எழுந்து நிற்க வேண்டும்; முதலில் விளக்கை ஆன் செய்து, பிறகு எழுந்திருங்கள்.

8. குறைந்தபட்சம் இரவில் அல்லது பகலில் கூட (சாத்தியமானால்), தயவுசெய்து, கழிப்பறை கதவை உள்ளே இருந்து மூடாதீர்கள்.. முடிந்தால், கழிப்பறையில் அலாரம் மணியை பொருத்தி, அதை அழுத்தி, ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், குடும்ப உறுப்பினர்களின் உதவியை வரவழைக்கவும்...

9. முதியவர்கள் பேன்ட் போன்றவற்றை அணிய ஒரு நாற்காலி அல்லது படுக்கையில் உட்கார வேண்டும்.

10. வீழ்ச்சி ஏற்பட்டால், தரையில் இருந்து ஆதரவைப் பெற உங்கள் கைகளை நீட்ட வேண்டும். இடுப்பு மூட்டில் தொடை கழுத்து உடைபடுவதை விட முன்கை மற்றும் மணிக்கட்டை உடைபடுவது நல்லது.

11. உங்களால் இயன்றவரை உடற்பயிற்சி செய்ய வேண்டும், குறைந்தபட்சம் நடக்க வேண்டும் என்று நான் கடுமையாக பரிந்துரைக்கிறேன்..

12. குறிப்பாக பெண்களுக்கு.. உங்கள் எடையை அனுமதிக்கப்பட்ட வரம்பில் வைத்துக்கொள்ள மிக மிக தீவிரமாக இருங்கள்... உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியமானது...எஞ்சிய உணவை உண்பது, பெண்களின் பொதுவான நடத்தை... அதிலிருந்து விடுபடுங்கள்... எஞ்சியவற்றைத் திரியும் பசுக்களுக்கு உணவளிக்கவும்... உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது உங்கள் தலையிலும் மனதிலும் உள்ளது, "எப்பொழுதும் பாதி வயிற்றில் சாப்பிடுவதை நிறுத்துவது நல்லது. , வயிறு நிரம்பியிருப்பதற்காக ஒரு திருப்தி வரும் வரை சாப்பிடுவதை விட.

எலும்புத் திணிவை அதிகரிப்பது தொடர்பாக, மருத்துவச் சப்ளிமெண்ட்டுகளுக்குப் பதிலாக, உணவுப் பொருட்களை (பால் பொருட்கள், சோயா பொருட்கள் கடல் உணவுகள், குறிப்பாக கால்சியம் அதிகம் உள்ள சிறிய இறால் தோல்கள்) பரிந்துரைக்கிறேன்.

மற்றொன்று வெளிப்புறச் செயல்பாடுகளைச் சரியாகச் செய்வது, ஏனென்றால் சூரிய ஒளி (UV ஒளியின் கீழ்) சருமத்தில் உள்ள கொழுப்பை வைட்டமின் D ஆக மாற்றுகிறது.

குடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதை ஊக்குவிப்பது நன்மை பயக்கும் மற்றும் ஆஸ்டியோபிளாஸ்ட் செயல்பாடு ஆஸ்டியோபோரோசிஸை தாமதப்படுத்தும் விளைவைக் கொண்டுள்ளது.

குளியலறையின் வழுக்காத தரையில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். படிக்கட்டுகளில் ஏறிச் செல்லும்போது கைப்பிடிகளைப் பயன்படுத்துங்கள், விழாமல் இருக்கவும். அனைவரும் கவனமாக இருங்கள்.

எனவே, வயதானவர்கள் சறுக்கல் மற்றும் வீழ்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு வீழ்ச்சிக்கு பத்து வருட வாழ்க்கை செலவாகும். ஏனெனில் அனைத்து எலும்புகளும் தசைகளும் அழிக்கப்படுகின்றன. எனவே கவனமாக இருங்கள்.

அதிக நேரம் நிற்பதை தவிர்க்கவும்

செய்தி நீளமாகத் தோன்றலாம், ஆனால் குறிப்பாக முதியவர்கள் மற்றும் மூத்தவர்களைக் கவனித்துக்கொள்பவர்கள் இதைப் படிப்பது மதிப்பு.

டாக்டர். ஷ்ருஜல் ஷா

எலும்பியல் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் 


Thursday, June 27, 2024

காசி செல்பவர்கள் கவனத்திற்கு!

அன்புள்ள நண்பர்களே நீங்களோ உங்கள் நண்பர்களோ காசி செல்பவர்கள் கவனத்திற்கு!

GRT நிறுவனமானது காசி அல்லது வாரணாசியில் ஹோட்டல் கம் சத்திரத்தை தொடங்கியுள்ளது.

தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. அறை வாடகைகள் பெயரளவு.

உணவு இலவசம்.

என்னுடைய நண்பர் சமீபத்தில் வாரணாசிக்கு சென்று, ஜிஆர்டியால் கட்டப்பட்ட சத்திரத்தில் தங்கியிருந்தோம்.

பெயர் மட்டும் சத்திரம் ஆனால் அறைகள் அனைத்து வசதிகளுடன் அற்புதமாக உள்ளன, அது உங்களுக்கு எங்கும் கிடைக்காது.... அதிகபட்சம் 3 பேர்ஒரு அறையில் தங்கலாம்... அவர்கள் காலை காபி, சிற்றுண்டி , மதியம், மாலை டீ மற்றும் இரவு உணவு பரிமாறுகிறார்கள். ...

அறை சேவை இல்லை... அனைத்து உணவுகளும் இலவசம் மற்றும் வரம்பற்றது...

கிருத்திகை மற்றும் அமாவாசை அன்று வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாமல் உணவு பரிமாறுகிறார்கள்.

கடந்த அமாவாசைக்கு நாங்கள் அங்கு இருந்தோம், எப்படி சமாளிப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தோம்... சாப்பாட்டுப் பகுதிக்குள் சென்றபோது வெங்காயம்/பூண்டு இல்லாத உணவு அமாவாசை என்பதால் பெரிய பலகை இருந்தது. பல வகையான பொருட்கள்....

இன்னும் சொல்லப்போனால், வெளி உணவு நமக்கு ஒத்துவராது என்பதால், விருந்தினர்களை அங்கேயே சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.

அறையைக் காலி செய்யும் போது நண்பர் ஒருவர் அந்த அன்னதான அறக்கட்டளைக்கு பங்களிக்க விரும்பினார்... அவர்கள் ஏற்கவில்லை...

ஒரு டிப்ஸ் பாக்ஸ் இருந்தது... டிப்ஸ் கொடுப்பது கட்டாயமில்லை... ஆனால் அது இல்லாமல் போக முடியாது, ஏனெனில் அவர்களின் சேவை உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது.... நீங்கள் அங்கு செல்ல நிறைய அறைகள் கிடைக்கும்...

நாங்கள் அங்கு தங்கியிருப்போம் மற்றும் GRT இன் சேவைக்கு இனிய நன்றிகள்...

வாரணாசிக்கு செல்லும் எந்த நாளும் ஜிஆர்டியில் தங்கிஇருங்கள்... அறை வாடகையும் மிகவும் மலிவானது...

அறைகள் நட்சத்திர ஹோட்டல் அறைகள் போல... அனைத்து லேட்டஸ்ட் மாடல் ஹைஃபை ஃபிட்டிங்குகளுடன் உள்ளன.

இங்கிருந்து 4 கிமீ தொலைவில் உள்ள அனைத்து இடங்களும்... சங்கர மடம், கங்கை, விஸ்வநாதர் கோயில் மற்றும் பிற கோயில்களுக்குச் செல்ல ஏராளமான மின்சார வாகனங்கள் கிடைக்கும்.

GRT ஹோட்டல்..தொடர்பு எண்.7607605660.

தங்குமிடத்திற்கு அவர்களின் இணையதளத்தைப் பார்க்கவும்...

grtkashichatram.com அல்லது GOOGLE IT மற்றும் உள்நுழையவும்.

ஆன்லைன் மூலம் மட்டுமே முன்பதிவு.

காசிக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். 

தகவல் தந்தவர்:

சைவத்திரு வாகை கணேசன் அவர்கள் தியாகராயநகர்.

Saturday, June 08, 2024

ஸ்ரீ துர்கா ஸப்தசதி

"ஸ்ரீ துர்கா ஸப்தசதி" என்று சொல்ல கூடிய தேவீ மஹாத்ம்யமானது 13 அத்யாயங்களை கொண்டது, அதிலே மொத்தம் 700 ஸ்லோகங்கள் உள்ளது. அந்த 700 ஸ்லோகங்களிலும் ஒவ்வொரு ஸ்லோகத்திலும் ஒரு சக்தி வாய்ந்த பீஜாக்க்ஷரம் அடங்கியுள்ளது. சண்டீ நவாக்க்ஷரீ மஹா மந்த்ரத்தில் உள்ள ஐம் என்ற பீஜம் மஹாகாளியையும், ஹ்ரீம் என்ற பீஜம் மஹாலக்ஷ்மியையும், க்லீம் என்ற பீஜம் மஹா ஸரஸ்வதியையும் குறிக்கிறது.

ப்ரதம சரித்ரம் 104 ஸ்லோகங்களை உடையது அதிலே 104 சூக்ஷ்ம ரஹஸ்ய பீஜங்கள் அடங்கியுள்ளது. மத்யம சரித்ரம் 113 ஸ்லோகங்களை உடையது அதிலே 113  சூக்ஷ்ம பீஜங்கள் அடங்கியுள்ளது, உத்தம சரித்ரம் 483  ஸ்லோகங்களை உடையது, அதிலே 483 சூக்ஷ்ம ரகஸ்ய பீஜங்கள் அடங்கியுள்ளது. ஆகமொத்தம் 700 ஸ்லோகங்களில் 700 பீஜ மந்த்ரங்கள் மறைவாக புதைந்துள்ளது. நித்யமும் தேவீ மஹாத்ம்யத்தை பாராயணம் செய்பவர்கள் இகலோகத்தில் பரம ஸௌக்யத்தயும், உடல் ஆரோக்யமும்,  மன நிம்மதியும், செல்வ செழிப்பும் பெற்று விளங்குவதுடன் பர கதியும் முக்தியும் இறுதியில் பெற்றிடுவார்கள். அம்பிகை யுத்தகளத்தில் போரிடும்பொழுது அவள் நிகழ்த்திய அஸுர வதங்களையும் அவளின் பராக்ரமத்தின் பெருமையையும் விளக்கும் "ஸப்தஸதி" 'ஸ்ரீ வித்யா' உபாஸகர்களின் பொக்கிஷமாக விளங்குகிறது. துர்கா ஸப்தஸதி "சாக்த கீதை" எனப்படுகிறது. இந்த மந்த்ரங்களை கொண்டு வருடம் 1 முறையாவது தர்பணம் மற்றும் ஹோமங்களை அந்தந்த ஊர்களில் உள்ள க்ராம தேவதைகளின் ஆலயங்களில் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதினால் விவசாயம் தழைக்கும், ஊர்களில் பரவும் தொற்றுநோய்கள் தடுக்கப்படும், சரியான காலத்தில் தேவைக்கேற்ற மழைப்பொழிவு இருக்கும், பெரும் இயற்கை சீற்றங்கள் மற்றும் பேரழிவுகள் நிகழாமல் காக்கும், தனிமனித ஒழுக்கம் மேம்படும் ஒற்றுமை நிலைக்கும்.

 ஓம் நம:சண்டிகாயை

Friday, May 17, 2024

சபீனா பவுடர்

கணவன் மனைவி உரையாடல்

மனைவி : நீ இன்ஜினியரிங் தானே படிச்சே...!?

கணவன் : என்ன... இப்படி கேட்டுட்ட...!?

மனைவி : கேக்குறேன்ல சொல்லு... நீ இன்ஜினியரிங் தானே படிச்ச...!?

கணவன் : ஆமா... இப்ப அதுக்கென்ன...!?

மனைவி : கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு... வட்டத்தின் சுற்றளவுக்கு என்ன பாஃர்முலா தெரியுமா...? 

கணவன் : சுற்றளவு  means சர்க்கம்ப்ஃரன்ஸ் தானே...!?

மனைவி : ஆமா...!?

கணவன் : Circumference of a Circle

 C = 2 × π × r.         

மனைவி : சரி... அதே சர்க்குலுக்கு பரப்பளவுக்கு என்ன பாஃர்முலா...!?

கணவன் : சர்க்கிள் ஏரியாவுக்குத்தானே...?

A = π × r²

மனைவி : பாஃர்முலால்லாம் கரெக்டாத்தான் சொல்ற...?

கணவன் : பின்ன... 

காலேஜ் ப்ராஜக்ட்ல ஒரு வட்ட வடிவ லைட்ஹவுசுக்கு எத்தன மூட்டை சிமெண்ட் எத்தன லோட் ஜல்லி வேணும்னு துல்லியமா கால்குலேட் பண்ணி சொல்லி ப்ராஜக்ட்ல சென்ட்டம் வாங்கினவனாக்கும்....

மனைவி : அதையெல்லாம் கரெக்ட்டா பண்ணிட்டு இத மட்டும் ஏன் சொதப்புன...?

கணவன் : எத...?

மனைவி : 

15 செ.மீ. விட்டமும் 15 செ.மீ உயரமும் உள்ள ஒரு பால் பாத்திரத்தை வெளக்க எவ்ளோ சபீனா பவுடர் தேவைன்னு தெரியாதா உனக்கு...?

கணவன் : ஏன் என்னாச்சி...!?

மனைவி : அந்த ஒரு பாத்திரத்த வெளக்க பாதி பாக்கெட் சபீனா பவுடரை காலி பண்ணிருக்கியே...

நீ இன்ஜினியருக்குத் தான படிச்ச...?☺

Thursday, April 25, 2024

ரகுராம்ராஜன் RBI முன்னாள் கவர்னர்

தன் மீதான ரகுராம்ராஜன் புகார் குறித்து நேற்று பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கமுடியாமல் ப.சிதம்பரம் பாதியிலேயே நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு கிளம்பினார்.

#நிருபர்: 

இந்திய ரூபாய் அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு நீங்கள் விற்றதாக RBI முன்னாள் கவர்னர்  ரகுராம்ராஜன் உங்கள் மீது புகார் கூறியுள்ளாரே?

#சிதம்பரம் 

உண்மை தான். இயந்திரத்தின் ஆயுட்காலம் முடிந்தமையால் அதை ஏலம் விடுவதற்காக டெண்டர் விட்டோம். பாகிஸ்தான் கம்பெனி காரன் அதிக தொகை குடுத்தான். வித்துட்டோம். 

#நிருபர்: 

பாகிஸ்தானில் நமது இந்திய ரூபாய் நோட்டுகள் கள்ளப்பணமாக அச்சடிப்பது தெரிந்திருந்தும் நீங்கள் அந்த இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றது சரியான செயலா?

#சிதம்பரம் 

யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. பாகிஸ்தான் நல்ல நாடு

#நிருபர் 

ரிசர்வ் வங்கி 99சதவிகித 500,1000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்ப வந்து விட்டது என்று சொன்ன நிலையில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ரூபாய் நோட்டுக்களை செல்லத்தக்கதாக மாற்றுவோம் என்று கூறியிருக்கிறீர்களே. அப்படி என்றால் கவர்னர் கூறியது போன்று 5 லட்சம் கோடி ரூபாயை நீங்கள் பாகிஸ்தானில் பதுக்கி வைத்தது உண்மை தானா?

#சிதம்பரம் 

காங்கிரஸ் ஆட்சிக்கு வரட்டும். உங்களை எல்லாம் என்ன செய்றேன்னு மட்டும் பாருங்க என்று கூறியவாறே கோபத்துடன் எழுந்து சென்று விட்டார். நிகழ்ச்சி பாதியிலேயே நிறைவடைந்தது.

பணமதிப்பிழப்பின் போது தடைசெய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் மொத்தம் 15லட்சம் கோடி. அவை அனைத்தும் திரும்பி வந்து விட்டதாக பொய் கூறினோம். ஆனால் உண்மையில் வந்தது 10 லட்சம் கோடிகளே.

நாங்கள் ஏன் பொய் சொன்னோம் என்றால் மீதமுள்ள 5 லட்சம் கோடிகளும் யார் வைத்திருக்கிறார்கள் அவர்களின் அடுத்த நகர்வு என்ன என்பதை கண்காணிக்க தான். 

இந்த உண்மையை வெளிக்கொண்டுவரவே மத்திய அரசுக்கும் எனக்கும் மோதல் போக்கு இருப்பது மாதிரி நாடகத்தை ஏற்படுத்தி நான் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை விட்டு விலகியது. 

மொத்த பணமும் எங்கிருக்கிறது என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன்.இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு புரோக்கரை பிடித்து 5 லட்சம் கோடியையும் பாகிஸ்தானில் பத்திரபடுத்தி வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அவை அனைத்தையும் செல்லத்தக்க நோட்டாக மாற்றிவிடுவார்கள்.

அதுமட்டுமல்ல. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மூலமாக நாசிக்கில் இருந்து இந்தியபணத்தை அச்சடிக்கும் மெஷினை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெற்றிருக்கின்றனர். இதற்காக ப.சிதம்பரத்திற்கு மட்டும் 10 கோடி ரூபாய் அன்பளிப்பு கிடைத்திருக்கிறது. 

இந்த மிஷினை வைத்து பாகிஸ்தானில் இந்திய பணத்தை சுமார் 8 லட்சம் கோடி ரூபாய்க்கு கள்ளபணத்தை அடித்து இந்தியாவிற்குள் மாற்ற திட்டம் போட்டிருந்தார்கள். ரகசிய தகவல் எனக்கு கிடைத்தது. அதை பிரதமர் மோடியிடம் எடுத்து கூறினேன். சற்றும் தாமதிக்காமல் 500,  1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்து விட்டார். வேறு யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு வேகம் உள்ளவர் அவர்.

அந்த 8லட்சம் கோடி ரூபாயும் நாட்டிற்குள் ஊடுருவியிருந்தால் இந்நேரம் சோமாலியாகவா மாறியிருக்கும்

ஆக கள்ளப்பணம் மொத்தம் 13 லட்சம் கோடி பணம் நாட்டிற்கு வெளியே தயாராக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அது மீண்டும் நாட்டிற்குள் வரும். நாடு வீழ்ச்சி அடையும்.

பணமதிப்பிழப்பு தொடர்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது

ரகுராம்ராஜன் 

RBI முன்னாள் கவர்னர் 1233

Sunday, April 14, 2024

பஞ்சு மாமாவும், பார்வதி மாமியும்

சோழன் எக்ஸ்பிரஸ் சரியாக காலை எட்டு மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு விட்டது.

ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டியில் பஞ்சு மாமாவும், பார்வதி மாமியும் அமர்ந்திருந்தனர். தஞ்சாவூரில் உள்ள இரண்டாவது பெண் வீட்டுக்கு செல்கிறார்கள். லக்கேஜ் அதிகம் இல்லை.

பார்வதி மாமிக்கு எழும்பூரிலேயே ஆனந்த விகடன், மங்கையர் மலர் இரண்டும் வாங்கிக் கொடுத்து விட்டார். ரயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மாமி அதில் மூழ்கி விட்டாள்.

மாமாவுக்கு அதில் இன்டெரெஸ்ட் இல்லை. ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டு, யூட்யூபில் இருந்து டவுன்லோடு செய்த எம்.எஸ்.ஜி வயலின் கச்சேரியை கேட்க ஆரம்பித்தார்.

செங்கல்பட்டு தாண்டியதும் வீட்டிலிருந்து கொண்டு வந்த மிளகாய்ப்பொடி தடவிய இட்லியையும் சாப்பிட்டாகி விட்டது.

மாமிக்கு டிபனுக்கு அடுத்தது காபி குடித்தால் தான் டிபன் சாப்பிட்ட திருப்தி ஏற்படும்...

"ஏன்னா...காபி வந்தா வாங்குங்கோ… நான் சித்த நேரம் விகடன் பாத்துண்டிருக்கேன்

"இந்த பேண்ட்ரி கார் காபி நன்னா இருக்காதுடி... திண்டிவனம் ஸ்டேஷன்ல வாங்கித் தரேன்..

"சரி"

வண்டி திண்டிவனத்தை அடையும்போது மணி 9.50.

வண்டி பிளாட்பாரத்தை அடையும் போதே தயாராக வாசலுக்கு போனார்.

நல்ல வேளை. ரெடியாக காபி வெண்டார் ஓர் ஆள் இருந்தான்.

"ரெண்டு காபி குடுப்பா"

முதலில் ஒரு காபியை மாமியிடம் கொடுத்துவிட்டு, மீண்டும் இரண்டாவது காபியை சீட்டில் வைத்து விட்டு, அவனுக்கு பணம் கொடுக்க பர்ஸை எடுத்தார். ஒரு 200 ரூபாய் நோட்டுதான் இருந்தது. அதை அவனிடம் கொடுத்தார்.

"சார் 20 ரூபாயா இல்லையா சார்.."

"இல்லையேப்பா"

அவன் பாக்கியை கொடுக்க, தன் பாக்கெட்டை துழாவினான். அதற்குள் வண்டி புறப்பட்டு விட்டது.

பாக்கெட்டை துழாவிக் கொண்டே வண்டியின் பின் ஓடி வந்தான். அதற்குள் வண்டி பிளாட்பாரம் எல்லையை கடந்து விட்டது. அதற்கு மேல் அவனால் ஓடிவர முடியவில்லை.

பஞ்சு மாமா சீட்டிற்கு திரும்பி, ஒன்றுமே நடக்காதது போல், காபியை உறிஞ்சி குடிக்க ஆரம்பித்தார்.

எல்லாவற்றையும் மாமி பார்த்துக்கொண்டு இருந்தாள்.

"என்ன 200 ரூபா போச்சா?"

"ஆமாம்.. அதுக்கென்ன இப்போ?"

"யாராவது அவனண்டை 200 ரூபாய் குடுப்பாளா?"

"அவன் பாக்கி தர ட்ரை பண்ணினாண்டி.. அதுக்குள்ள ட்ரெயின் கிளம்பிடுத்து.. அதுக்கு அவன் என்ன பண்ணுவான் பாவம்.." "போதுமே உங்க சமத்து... அவனை அப்டியே நம்பறேள் பாருங்கோ.. அங்க தான் உங்க அசட்டுத் தனம் நிக்கறது.."

"அவன் என்னை வேணும்னு ஏமாத்தினான்னு சொல்றயா?"

"இல்லையா பின்னே.. அவன் சும்மா பாக்கிய கொடுக்க வண்டி பின்னாடி ஓடி வரா மாதிரி ஸீன் போட்டிருக்கான்.. அதை கூட புரிஞ்சுக்க தெரியலையே உங்களுக்கு.."

"போனா போறது டி.. பாவம் ஏழை.."

"பணத்தை கோட்டை விட்டது இல்லாமே, அவனுக்கு வக்காலத்து வாங்கறேளா?"

"போதும்.. உன் ஆத்துக்காரனுக்கு சாமர்த்தியம் போறாது தான்... வாயை மூடிண்டு வா.."

இந்த சம்பாஷணையை வண்டியில் இருந்தவர்கள் அத்தனை பேரும் வேடிக்கை பார்த்தனர்.

அவர்களுக்கு இது ஏதோ சீரியல் பார்ப்பது போல் இருந்தது. பலர் மாமா அசடு தான் என்ற தீர்மானத்துக்கு வந்தனர்.

சிலர் 'இந்த மாமிக்கு ஆனாலும் வாய் ஜாஸ்தி... மாமாவை எப்படி மட்டம் தட்டுகிறாள்' என்று நினைத்தனர்.

வண்டியின் வேகம் அதிகரிக்க, எல்லோரும் இந்த சம்பவத்தை மறந்து, அவர்கள் முன்பு செய்து கொண்டிருந்ததை தொடர்ந்தனர்.

மாமா மீண்டும் கச்சேரியை தொடர்ந்தார். எம்.எஸ்.ஜி

"ஞானமு சகராதா" வாசித்துக் கொண்டிருந்தார். ஆனந்தமாக கண்ணை மூடி ரசித்ததில் அந்த 200 ரூபாயை மறந்தே போனார்.

அரை மணி நேரத்திற்கெல்லாம் விழுப்புரம் ஜங்க்ஷன் வந்து விட்டது. அது ஒரு ரிசர்வேஷன் கம்பார்ட்மெண்ட் என்று பாராமல், கூட்டம் முண்டியடித்துக் கொண்டு ஏறியது. எல்லோருக்கும் அவரவர் அவசரம். கூடவே ஒரு 15 வயதுப் பையனும் ஏறினான்.

அவன் அங்குலம் அங்குலமாக முன்னேறி, பஞ்சு மாமாவின் சீட் அருகில் வந்து விட்டான்.

"சார் திண்டிவனம் ஸ்டேஷன்ல நீங்க காபி குடிச்சீங்களா?"

"ஆமாப்பா"

"சார்.. இந்தாங்க உங்க 180 ரூபாய்.." என்று சொல்லி, ஒரு நூறு ரூபாய் நோட்டையும், நான்கு 20 ரூபாய் நோட்டுகளையும் அவர் கையில் திணித்தான்.

அவருக்கு சட்டென்று ஒன்றும் புரியவில்லை.

"சார்.. நீங்க காபி வாங்கினீங்களே, அவர் பையன் தான் சார் நானு. இது சகஜமா அடிக்கடி நடக்கும் சார். திண்டிவனத்துல ட்ரெயின் ஒரு நிமிஷம் தான் நிக்கும்.. அதனால சில பேருக்கு பாக்கி சேஞ்ச் குடுக்க முடியாம போயிடும். தினமும் கொஞ்சம் பணத்தோட விழுப்புரம் வந்துடுவேன். அப்பா திண்டிவனத்தில் ட்ரையின் புறப்பட்ட உடனே போன் பண்ணி கம்பார்ட்மெண்ட் விவரம் சொல்லிடுவார். நான் இங்கே ஏறி பாக்கி சில்லறை குடுத்துட்டு பண்ருட்டில இறங்கி திரும்பி விழுப்புரம் போயிடுவேன் சார்" என்றான் அந்த பையன்.

"உங்கப்பா போன் நம்பர் குடுப்பா"

"இதோ சார்…"

"அய்யா.. உங்க பையன் என் பாக்கி 180 ரூபாயை திருப்பி குடுத்துட்டான்... ஆனா நான் பேசறது அதுக்காக இல்லை... அவனுக்கு நேர்மையை நீங்க கத்துக் குடுத்திருக்கீங்க பாருங்க.. அதுக்காக உங்களை பாராட்டியே ஆகணும்... அதுக்காக தான் போன் பண்ணேன்.."என்றார்

"ரொம்ப நன்றிங்க சாமி.. நான் அஞ்சாங்கிளாஸ் தான் படிச்சிருக்கேன்.. ஆனா இந்த நேர்மையும் ஒழுக்கமும் இருக்கறதுனால தான் நிம்மதியா வாழ்க்கை நடத்த முடியுதுங்க சாமி... அதான் இதை என் ரெண்டு பசங்களுக்கும் சொல்லி குடுத்திருக்கேன்"

பஞ்சு மாமாவுக்கு நெஞ்சமெல்லாம் நிறைந்தது. கண்களில் நீருடன் அந்தப் பையனை தட்டிக் கொடுத்தார்.

பார்வதி மாமி, தன் கணவனை இப்போது பார்த்த பார்வையில் பெருமை நிறைந்திருந்தது.

எல்லோரும் எல்லோரையும் எப்போதும் ஏமாற்றுவதில்லை

நம்மை சுற்றி நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்...

நம்மில் சிலர் தான் அவர்களையும் சேர்த்து சந்தேகத்தோடு பார்க்கின்றோம்..

Sunday, February 11, 2024

இன்னும் 5 வருடத்தில் எந்த தொழிலும் இருக்காது

இன்னும் ஐந்து வருடத்தில் எந்த தொழிலும் இருக்காது.  கூர்ந்து  கவனித்துப் படியுங்கள்புரியும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று.

தவறாமல் படியுங்கள்....

GOLDEN AGE COMING SOON?

2025ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்?

என்னென்ன தொழில்கள் இருக்காது ??

நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம நம்மள மாத்திக்கணும்...!

1998 ல தொடங்கின Kodak (Photo) நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது...!

இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல...! வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்க முடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல.

பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்!.

தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, *STD & ISD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு??*

எலக்ட்ரானிக் டைப்ரைட்டர், பேஜர், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்,  ரேடியோ, டேப்ரெக்கார்டர், விசிஆர்,  வாக்மேன், டிவிடி  பிளேயர் என சொல்லி கொண்டே போகலாம். குண்டு பல்பும்,  டியூப் லைட்டும் போய் CFL பல்பும் போய், இப்ப LED பல்பு தான்.

எதனால ? ஏன் இப்படினு கேட்டா?

டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. சிம்பிளா சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள். மனுஷ மூளையைவிட திறமையா செயல்படும் இதுங்கதான் மேலதிகமான காரணமா இருக்கும்.!

உதாரணத்துக்கு சொல்லணும்னா...சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம, 'Bharat Matrimony' வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக்கொடுக்குது...கமிஷனோட...! இல்லீங்களா..?

Uber'ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது..!

இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும் ?

அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்:  உங்களுக்கு ஒரு சட்டச்சிக்கல் வருது...என்ன பண்றதுனு தெரியலை...! என்ன செய்வீங்க? ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்பீங்க...! சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவரு அவருடைய Fees வாங்குவாரு..! இல்லையா...!

இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ? உங்களோட சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே,  Section-னோட சரியான விவரங்கள Probabilities-டன் அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா?  நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக்கிட்டு தானே போகணும்...! வக்கீலுக்கே தெரியாத பல ஜெயித்த கேஸ்கள் பற்றி கம்ப்யூட்டர் தெளிவாக சொல்லும்.

IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு.  ஒரு லாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்ட சிக்கலுக்கு தீர்வு சொல்லமுடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது..!

அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..! அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ? இது ஒரு உதாரணம்தான்!!!!

ஆடிட்டர்கள் வேலையை clear tax.in,  taxman.com போன்ற இணையதளம்!,

டாக்டர்கள் வேலையை Ada app!,

ப்ரோக்கர்கள் வேலையை magic bricks, quickr, 99acres, இணையதளம்!,

கார் விற்பனையை carwale.com, cars24 இணையதளம் சேவை இலவசமாக தருகின்றன.

UBER OLA வந்தபிறகு சொந்தகார் தேவையில்லை.

ஆன்லைனில் சாப்பாடு முதல் துணிமணிவரை கிடைப்பதால் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் ஈயடிக்கும்.

நெட்பிளிக்ஸ் வந்தபின் மேற்கத்திய நாடுகளில்  தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் இல்லை.

இப்பவே இந்திய லோக்கல் ரயில் டிக்கெட் கூட UTS app மூலம் எடுத்து கொள்ளலாம்.

 80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை..கம்ப்யூட்டரே பாத்துக்கும்.  'Subject Matter Experts'னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பொழைக்க முடியும்..!

2025 ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்.

2021 ஏப்ரல் மாதம் கூகுள் தானியங்கி சைக்கிள் விற்பனைக்கு வருகிறது.

அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா...ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்!.

அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்: யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. 'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு எடத்துக்கு போகணும்னா.. உங்க செல்லில் இருந்து.. ஒரு மிஸ் கால்.. இல்ல..SMS...! அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்க  முன்னாடி தானா ஒரு கார் வந்து நிக்கும். நீங்க போகவேண்டிய எடத்துக்கு சமர்த்தா கொண்டுபோய் விட்டுடும். கிலோமீட்டருக்கு இவ்வளோனு நீங்க காசு கொடுத்தா போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.

இதனால என்னவாகும்ன்னா...அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான்.  சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம். 'Accident' ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் கனரக வாகனங்களின் விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்.

Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி  கார்கள் இருக்கும்

எல்லா மனிதர்களுக்கும் எஜமான் கூகுள் போன்ற ஒரு நிறுவனம்தான். இப்போதே கூகுளுக்கு  நீங்கள் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியும். உங்கள் சிந்தனையை,  நீங்கள் எடுக்கும் முடிவுகளை தீர்மானம் செய்வது கூகுள்தான்.

எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10 -15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.

இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நீங்க நெனைச்சா..? உங்க நினைப்பை மாத்திக்குங்க... இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்.. குறிப்பா சீனா & இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு.  15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா??

சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?

முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லனா கூகுளை கேளுங்க...! அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு.

அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்ம அடி வாங்கும்.

ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும். சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்.

விவசாயம்: இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள். நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்.

இன்னும் சொல்லப்போனால் சாப்பாட்டுக்கு மாற்றாக மாத்திரைகள் வந்து விடும். விண்வெளி வீரர்கள் வானில் இருக்கும் பொழுது மலஜலம் கழிக்க முடியாது. எனவே அவர்களுக்கு  மாத்திரை தான் உணவு.

காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ.

Moodies' ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது.. 2022 ல நீங்க பொய் சொல்றீங்களா, இல்ல உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும். யாராலயும் ஏமாத்த முடியாது.

இப்பவே கூகுள் அசிஸ்டண்டும் Alexa வும், Siriயும், வேலைக்காரர், உதவியாளர், செகரட்டரி வேலைகளை செய்கிறது.

இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012 ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.

Tricoder - X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்டுக்கு வருது. உங்க செல்போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும். உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சுக் காத்தை அலசும். உங்க உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிப்புடும். அப்புறம் என்ன 2035ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி. டாக்டர்கள் *Clinic* வைக்கத் தேவையில்லாம, Online -ல யே ஒரு Op - ய Treat பண்ண முடியும். In-patient-க்குத்தான் Hospital .

மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றத்திற்கு ஏற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ள மட்டுமே நம்மால் முடியும்.

நமது வாரிசுகள் படித்த பின் வேலைக்கு சென்று சம்பாதிக்க இப்போதைய படிப்புகள் ஒன்றும் உதவாமல் போகலாம்.

கடந்த நூறு வருடங்களில் நடந்ததை விட அதிவேக பாய்ச்சல் முன்னேற்றம் அடுத்த பத்தாண்டுகளில் நடக்கும்.

சந்திக்க தயாராவோம். 

எதிர்காலம்  நம் கையில் இல்லை.  

கடந்த காலமும் நிகழ்காலமும், 

நம் கையிலா இருந்தது என்கிறீர்களா..?

Friday, February 09, 2024

கடவுளைப் பற்றி காமராசர்

கடவுளைப் பற்றி காமராசர்..

ஒரு செய்தியாளர் கேட்க அவர் சொன்னது.........

“நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா?” என்று கேட்டேன்.

அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம்பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட்டான் நம்மாளு. 

கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிக்கிட்டு, நாக்கை நீட்டிக் கிட்டு தான் இருப்பாரா?. அரேபியாவிலே இருக்கிறவன் “அல்லா” ன்னான், ஜெருசலத்தல இருக்கிறவன் “கர்த்தர்” ன்னான், அதிலேயும் சில பேரு மேரியக் கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு ‘டெனாமினேஷன்’ உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமியச் சொன்னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடிமக்களான தமிழர்கள் காத்தவராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் வந்து இவன் கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்?. அவனவனும் அவனவன் இஷ்டத்துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான். காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் தி . மு . க . மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி.யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான். மதம் மனிதனுக்குச் சோறு போடுமா?, அவன் கஷ்டங்களப் போக்குமா?. இந்தக் குறைந்த பட்ச அறிவு கூட வேண்டாமா மனுசனுக்கு? 

உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே!!! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே!!!

இப்படியெல்லாம அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்?”

தலைவர் தெளிந்த நீரோடை மாதிரி பேசிக் கொண்டே வந்தார். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்தமான முடிவை அவர் வைத்திருப்பதைப் பார்த்து நான் வியந்தேன்.

“நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே, அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே?” என்று வினாத் தொடுத்தேன்.

தலைவர் குலுங்கக் குலுங்கச் சிரித்தார். “ 

டேய் கிறுக்கா, நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்?. ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன். அதையெல்லாம் நம்மாளு கடவுளாக்கிட்டேன்னேன்!!!. இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் ‘கட்அவுட்’ வைக்கிறானில்லையா, அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப்பட்ட ராமனுக்கும் ,

கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிப்புட்டான். அந்தப் புத்தங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற விசயங்கள எடுத்துக்கணும், ஆசாமிய விட்டுப்புடணும். காலப்போக்குல என்னாச்சுன்னா, லட்சக்கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி. அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க களவாணிப் பசங்க. புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித் தான் நம்ம சனங்கள அடிமையா ஆக்கி வச்சிருக்கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான், நவராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூசை பண்றான். விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை சனங்களையும், பாமர சனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான். 

நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல, எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல, புதுசு கட்டுனதுமில்ல. பொங்கல் மட்டும் தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம சலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்” என்று விளக்கினார்.

“மதம் என்பதே மனிதனுக்கு அபின், அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடு தான் போலத் தோணுதே?” என்று ஒரு கேள்வியைப் போட்டேன் .

தலைவர், “நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விசயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா?, ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு , மூக்குத்திக்குக் கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம், ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலாமில்லையா?, அதையெல்லாம் செய்ய மாட்டான். சாமிக்குத்தம் வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான். மதம் மனிதனை பயமுறுத்தியே வைக்குதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன்” என்றார்.

கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா?, இதிலேருந்து எப்போ விலகுனீங்க?” இது நான்.

“சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூசை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930-க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன். அவர் மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுக்கிட்டேன். அப்புறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போயும் போயும் கடவுள், தலை முடியத்தானா கேக்குறாரு?, எல்லாம் பார்பர் ஷாப் (Barber Shop ) காரன் செட்-அப் அப்புடீன்னு சிந்திச்சேன், விட்டுட்டேன். ஆனா , சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா?” என்று கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.

“அப்படியானா, மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே, அதப்பத்தி?” என்று கேட்டேன்.

“அடுத்த மனுசன் நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறது தான் பிரார்த்தனை. இதுல நாம சரியா இருந்தா, தெய்வம்னு ஒன்னு இருந்தா அது நம்ம வாழ்த்தும்னேன்!!!”

காமராசர் என்கிற அந்த மனிதாபிமானி என் மனத்தில் அந்த நிமிடமே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார்.

சட்டென்று காரை நிறுத்துகிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லாமல் நடந்து போன சிறுவர்களைப் பார்த்து “ஏன் பள்ளிக்கூடம் போகலியா?” என்கிறார். அவர் இவ்வளவு நேரம் பேசிய பேச்சின் விளக்கம் எனக்குக் கிடைத்தது விடுகிறது.

Friday, February 02, 2024

அயோத்தியா செல்ல நினைப்பவர்கள்

அயோத்தியா மட்டும் செல்ல நினைப்பவர்கள்...

அயோத்தியை தலை நகராகக் கொண்டு கோசல நாட்டை ஆட்சி செய்ததாக வால்மீகி எழுதிய இராமாயண இதிகாசம் கூறுகிறது.

ஒவ்வொரு திங்கள் அன்றும் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தியா ரயில் செல்கிறது . சென்னை எழும்பூர் நண்பகல் 12 மணிக்கு வருகிறது . 

ரயில் எண் 22613 RMM AYC சரியாக புதன் கிழமை காலை 9 மணிக்கு செல்கிறது.

அயோத்தியா தாம் என்ற ரயில் நிலையம் இறங்கவும் அயோத்தியா கன்டோன்மென்ட் கடைசி ரயில் நிலையம் இறங்கினால் 15 km மீண்டும் வர வேண்டும்.அயோத்தியா தாம் இறங்கி நேராக சரயு காட் (ராம் காட்) 2 km நடந்து தான் வர வேண்டும்.அங்கு குளித்து விட்டு மீண்டும் வந்த வழியே 1.5 km திரும்பினால், அனுமான் காரி என்னும் அனுமான் கோட்டை காவலாக  இருக்கும் கோவிலை அடையலாம்.50 படிக்கட்டுகள் ஏறி ஹனுமான் தரிசனம் செய்து அங்கிருந்து வெளியே வந்து 500 மீ தொலை உள்ள ஶ்ரீ ராம் ஜென்ம பூமி  நுழைவு வாயிலை அடையலாம்.

பெரிய luggage bag இருந்தால் போலீஸ் checking  முன்பே வலது பாகத்தில் locker  அறை உள்ளது. அங்கு உங்கள் பொருட்களை பாதுகாப்பாக (மொபைல், watch தவிர) வைத்து செல்லலாம். 

உள்ளே சென்றவுடன் இலவச  பொருள் வைப்பரை கவுண்டரில் உங்கள் சிறிய bag, hand bag, இடுப்பு  belt, mobile, watch முதலியவைகளை வைத்து விட்டு செல்ல வேண்டும். (பொருள் வைக்க குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டும் )

மீண்டும் உள்ளே  பாதையில் சென்றவுடன் , ஒருவர் பின் ஒருவர் கணக்கில் இரண்டு வரிசையாக எறும்பு சாரை போல் இடிபாடு இல்லாமல் நடந்து செல்லலாம்.200 மீ நடந்தால் கோவில் முன் மண்டபத்தில் இருந்தே ஶ்ரீ பால ராமனை தரிசித்து கொண்டே அருகில் செல்லலாம். சுமார் 20  metre தொலைவில் இருந்து ஶ்ரீ ராமனை கண் குளிர தரிசனம் செய்து வெளி வரலாம்.

பூந்தி அல்லது சர்க்கரை கற்கண்டு பிரசாதமாக கொடுக்கிறார்கள்.

வெளி வரும் வழியில் purse, mobile, bag போன்ற பொருட்களை பெற்று கொண்டு நுழைவு வா அடையலாம்.பிறகு மீண்டும் அனுமான் காரி என்னும் கோவில் அருகே வந்து தசரதன் மாளிகை தரிசனம் செய்யலாம்.இங்கு தான் ஶ்ரீ ராமன், லட்சுமண், பரதன், சத்ருகன் ஆடி பாடி விளையாடிய உப்பரிகை பார்க்கலாம்.

அங்கிருந்து வெளி வந்து வலது பக்கம் திரும்பி 50 மீட்டர் நடந்தால் ஒரு பழைய வீட்டில் தசரதன் புத்திர காமேஷ்டி யாகம் செய்த இடம் தரிசிக்கலாம் 

பிறகு மீண்டும் தசரதன் மாளிகை வழியாக  பக்க வாட்டு சந்தில் நுழைந்து பின் புறம் சென்றால் ஜனக மஹாராஜா சீதைக்கு சீதனமாக கட்டி கொடுத்த மாளிகை காணலாம்.வழி எல்லாம் இப்போது அன்னதானம் செய்கிறார்கள்.வழியில் எல்லாம் மடம், அறைகள் உள்ளது.

முன்பதிவு செய்து விட்டு செல்லலாம்.

ஒவ்வொரு புதன் கிழமை இரவும் 11 மணிக்கு அயோத்தியா கன்டோன்மென்ட் இருந்து சென்னை அல்லது ராமேஸ்வரத்திற்கு ரயில் Undergraduate. *22614 AYY RMM* 

Lucknow வந்தும் சென்னை  திரும்பலாம்.

 சீத்தா ராம் பியாஸ் குஞ் தங்கும் விடுதி சூடு தண்ணீர் , கம்பளி, விசாலமான அறைகள் உள்ளது.தொலை பேசி எண் 9532065447

அயோத்தியில் உள்ள நாட்டுக்கோட்டை நகரச் சத்திரம் இது நாட்டுக்கோட்டை நகரத்தாரால் உருவாக்கப்பட்டது. இதன் உள்ளே ஒரு இராமர் கோவில் உள்ளது இது நாட்டுக்கோட்டை நகரத்தார்களால்  1885இல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.தமிழர் கட்டிய கோவில் என்பதால் இது தமிழர்களின் இராமர் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு தமிழர்கள் அனைவரும் தங்கலாம். மூன்று வேளையும் தமிழ் நாட்டு உணவுகள் கிடைக்கும்.

அயோத்தியில் அவதி மொழி, இந்தி மற்றும் உருது மொழிகள் பேசப்படுகிறது.

Wednesday, January 31, 2024

துவாரகா விஜயம் ~ Dwarka Visit

துவாரகா செல்ல வேண்டும், ஸ்ரீ கிருஷ்ணனை காண வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் சில வருடங்களாகவே மனதில் இருந்து கொண்டு தான் இருந்தது.    

ஜனவரி 2024ல் எப்படியும் போய்த்தான் தீர வேண்டும் என்ற முடிவிற்கு வந்து, மும்பை > துவாரகா ஆன்லைன் டிக்கெட் புக் செய்ய நினைத்தால், பிப்ரவரி கடைசி தேதி வரை எல்லா ரயிலிலும் முன்கூட்டியே பதிவாகி இருந்தது.  ஒரு வழியாக பாந்த்ரா டெர்மின்ஸ்சில் இருந்து Jamnagar வரை செல்லும் எக்ஸ்பிரஸ்ஸில் 22ம் தேதிக்கும்  அதே ரயிலில், திரும்பி வருவதற்கும் 26ம் தேதிக்கு பதிவு செய்தோம் 3AC கோச்சில்.  

22ம் தேதி இரவில் 8.15க்கு ரயில் Jamnagar நோக்கி புறப்பட்டது. மறு நாள் பகல் 2.40க்கு ரயில் Jamnagar வந்து சேர்ந்தது.  அங்கிருந்து, ஆட்டோவில் நகர பேருந்து நிலையம் வந்தோம்.  GSRTC பஸ் புறப்பட இன்னும் நேரம் ஆகும் என்றார்கள்.  அருகிலேயே தனியார் பஸ் (Shiv Shakti Travels @ Rs.150 per head) கிளம்ப தயாராக இருந்தது.  புக் செய்து டிக்கெட் வாங்கி ஏறி அமர்ந்தோம்.   மாலை 5.45க்கு Jamnagar வந்து அடைந்தது. ஆன்லைனில் 3 nights புக் செய்து இருந்த Vrundaavan ரூமில் வந்து சேர்ந்தோம். 

(Sri Vrundaavan Guest  House, Home Guard  Road, Dwarka. Guajarat. Mr. Pareshbhai Vayeda ~ Contact No. 6354111099 / 8160365440. Rent Rs 500/- per night.)  

குளித்து, உடனே அருகில் இருந்த Sri Dwarkadeesh Temple ~ Jagat Mandir கிருஷ்ணன் கோவிலுக்கு செல்ல தயாரானோம். மொபைல் போன் உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் வரிசை தனித்தனியே இருந்தது.  தரிசனம் முடிந்து குடும்பத்தாருடன் சேர்வது சிறிது சிரமமாக இருக்கிறது. காரணம், தரிசனம் முடிந்ததும் வெளியேறும் வழி இருபாலருக்கும் தனித்தனியாக இருக்கிறது. தொடர் விடுமுறையின்  காரணம், கோவிலில் நிறைய கூட்டம். பெண்களின் வரிசை படுவேகமாக நகர்ந்து சென்றது.  ஆண்கள் வரிசை அப்படியே நின்று கொண்டிருந்தது.  மனித ரூபத்தில் தெய்வம் போல யாரோ ஒருவர் வந்து "இதோ இந்த வழியாக செல்லுங்கள், சீக்கிரம் தரிசனம் கிடைக்கும்" என்று சொன்னார்.  கூட வந்தவர்களும் அவர் சொன்ன வழியே சென்று சுலபமாக தரிசனம் செய்தோம்.  நன்றி சொல்ல நினைத்து தேடினால் அந்த மனித ரூபர் சென்ற தடயம் தெரியவில்லை யாருக்கும். வரிசையில் 30 நிமிடத்திற்கு மேல் நின்று கொண்டிருந்தபோது, வழி  சொன்ன அவர் யார்  ஒரு மனமார்ந்த நன்றி கூட சொல்லாமல் ஸ்ரீ கிருஷ்ணனை காண ஓடிபோனோமே என்று நினைத்து, ஆரத்தி தரிசனம் கண்டோம், கண்களில் நீர் மல்க.  திரும்ப மனம் இல்லாமல் கோவிலில் இருந்து ரூமுக்கு வரும் வழியில் இரவு சாப்பாடு முடித்துக்கொண்டு, மறுநாள் Dwarka sight seeing செல்ல தனியார் டூரிஸ்ட் பஸ்ஸில் டிக்கெட் புக் செய்தோம். பஸ்சில் நபர் ஒருவருக்கு டிக்கெட் 260/- ஆகிறது. 8 பேர் கொண்ட Share Autoவில் 250/- வாங்குகிறார்கள்.   

பின்னர் எங்கள் ரூமில் வந்து உறங்கி காலைக்கடன்களை முடித்து விட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு பஸ்ஸில் அமர்ந்தோம் Dwarka sight seeing செல்ல. பேசிக்கொண்டிருக்கும்போது travels owner "நீங்கள் இவ்வளவு தூரத்தில் இருந்து வந்து இருக்கிறீர்கள், அதனால் கண்டிப்பாக சோம்நாத் சென்று வாருங்கள் சிவபெருமானை தரிசிக்க" என்று சொன்னார். உடனே முடிவெடுத்து மறுநாள் சோம்நாத் செல்ல டிக்கெட் புக் செய்தோம் அவர்களிடமே. ஒரு நபருக்கு 270/- வாங்குகிறர்கள். 

Dwarka  sight  seeing covers the  following places: 

1. நாகேஸ்வர் 2. கோபி தலாவ் 3. பேட்  துவாரகா 4.ஷிவ்ராபுர் பீச் 5. ருக்மிணி கோவில் போன்ற இடங்களுக்கு அழைத்து சென்றனர்.  

Dwarka  sight  seeing முடித்துவிட்டு மாலை 6 மணிக்கு திரும்பி வந்தோம் எங்கள் இருப்பிடத்திற்கு. நேரம் இருந்ததால், மீண்டும் கிருஷ்ணன் கோவிலில் நடைபெற உள்ள 7.30 மணி ஆரத்தியை காண வேண்டி சென்றோம்.  அதே கூட்டம். கண்குளிர கண்டு கொண்டோம் ஸ்ரீ கிருஷ்ணனை திரும்பி வர மனமில்லாமல்.  அருகில் உள்ள வேறு சில கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்து விட்டு, இரவு எங்கள் ரூமிற்கு திரும்ப இரவு 9 மணி ஆகிவிட்டது.  மறுநாள் நாங்கள் சோம்நாத் செல்வதை  room ownerக்கு எடுத்து சொல்லி ஒருநாள் ரூம் புக்கிங் cancel செய்வதாக சொன்னோம். அட்வான்ஸ் திருப்பி தருவதற்கு ஒத்துக்கொண்டார்கள். 

காலைக்கடன்களை முடித்து 8 மணிக்கு travels  பஸ்ஸில் அமர்ந்தோம் சோம்நாத் செல்ல. 238 கிமீ தூரத்தை சென்று அடைய 4/5 மணி நேரமாகும். ஒவ்வொரு 2மணி நேரம் தொடர் பயணத்திற்கு பிறகு 15 / 20 நிமிடம் எங்காவது நிறுத்தி பிறகு பயணம் தொடர்கிறது.  மதியம் 1.30 மணிக்கு சோம்நாத் சென்று அடைந்தது எங்கள் பஸ்.

பஸ் நின்ற இடத்தின் அருகிலேயே SHREE SOMNATH TRUST - PRABHAS PATAN என்ற விளம்பர பலகையை கண்டு உள்ளே சென்று ரூம் புக் செய்தோம். Advance Rs .750/- கட்டினோம். 3 bed ஒரு ரூமில். 24மணி நேரமும் Hot water வசதி, கம்பளியுடன்.  உடன் தயாரானோம் சோம்நாத் கோவில் போக. அடுத்த 10வது நிமிடத்தில் கோவில் வளாகத்தில் இருந்தோம்.  மொபைல், கை பை எடுத்து செல்ல அனுமதி இல்லை கோவிலுக்குள். வெறும் கையுடன் தான் உள்ளே அனுமதிப்பார்கள். அதிக கூட்டம் இல்லாததால் நல்ல தரிசனம் கிடைத்தது. திங்கள்கிழமை சிவபெருமானை தரிசிக்க கூட்டம் அதிகமாகும் என்று சொல்கிறார்கள்.  கோவிலை சுற்றி கடற்கரை. பார்க்க ரம்மியமாக இருந்தது. இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை Light  & Music Program நடக்கிறது. ஒரு நபருக்கு Rs. 20 கட்டணம் உண்டு. அங்கிருந்து Triveni Sangam வந்து சேர்ந்தோம். Hiren, Kapila & Saraswati என்ற மூன்று நதிகள் சங்கமம் ஆகும் அருமையான இடம்.

அருகில் உள்ள கடைவீதி வழியே வேடிக்கை பார்த்து, தேவையானதை வாங்கிக்கொண்டு ரூமிற்கு 7 மணி அளவில் திரும்பி வந்தோம். வரும்போது Receptionist சொன்னார், "7.30 மணிக்கு Dinner ரெடி ஆகும்" என்று. விலை Rs. 70/- மட்டுமே.

பணத்தை செலுத்திவிட்டு டோக்கன் வாங்கினால், அங்கு உள்ள system  & cleanliness பார்த்ததும் நமது நினைவிற்கு வருவது Shirdi  & Thirupathi தான். 

டைனிங் ஹால் டைம்: 

Morning 6.30 ~ 10.00

Lunch  11.30 ~ 3.00

Dinner  7.30 ~ 11.00

The above menu is unlimited all time. We had dinner with  chapathi, rice, curry, poriyal kichadi & One  big  glass butter milk @ Rs.5/-extra.

நாங்கள் தங்கி இருந்த இடத்திற்கு பின்னால் தான் GSRTC பஸ் புறப்படும் இடம். மறுநாள் காலை 7 மணிக்கு Jamnagar செல்ல பஸ் டிக்கெட் புக் செய்தோம். ஒரு நபருக்கு 260/- வாங்குகிறார்கள்.  Room Reception counter is working 24 hours என்ற விவரத்தை தெளிவுப்படுத்திக் கொண்டு ரூமிற்கு சென்றோம்.  

மறுநாள் காலை 6 மணிக்கு checkout செய்தபோது advance பணத்தில் இருந்து 150/- திருப்பி கொடுத்தார்கள் எங்களுக்கு. அதாவது ஒரு நபருக்கு தங்குமிடத்திற்கு வெறும் 300/- தான் வாங்கினார்கள்.  பின் அங்கிருந்து GSRTC பஸ் ஸ்டாண்டு வந்து காத்திருந்தோம், எங்கள் பஸ் வருவதற்காக. சரியாக 7 மணிக்கு பஸ் வந்தது Jamnagar செல்ல. பல சிறிய கிராமங்களின் வழியாக பஸ் சென்று மதியம் 2மணி அளவில் Jamnagar City வந்து சேர்ந்தது. அங்கு மிகவும் பிரசித்தி பெற்ற CHETNA ஹோட்டலில் சுவையான உணவு அருந்தினோம்.  இரவு 8 மணிக்கு தான் புறப்படும் எங்கள் ரயில்.  இன்னும் நேரம் நிறைய இருந்ததால் 7 மணி வரை Jamnagar ஊர் சுற்றி பார்த்து, ஷாப்பிங் செய்து செய்தோம்.  7.30மணிக்கு எங்கள் கோச்சில் ஏறி அமர்ந்தோம். மறுநாள் 27ம் தேதி காலை 9.30 மணிக்கு பாந்த்ரா டெர்மின்ஸ் வந்து சேர்ந்தோம்.

இந்த இனிய பயணத்தில் எங்களை கவர்ந்தது:

* நாகேஸ்வர் ~ மிகப் பெரிய சிவபெருமானின் சிலை.  நமது கழுத்து வலி எடுக்கும் அளவிற்கு உயரமானது, பிரம்மாண்டமானது.

* Jagat Mandir கிருஷ்ணனின் ஆரத்தியின்போது மக்களின் பக்தி ஆரவாரம்.

* பிருந்தாவனத்தில் இருந்து கிருஷ்ணன் கோபியர்களை விட்டுவிட்டு துவாரகா வந்துவிட்டதால் கிருஷ்ணனை காண கோபியர்கள் துவாரகா வந்தார்கள். இதை அறிந்து கிருஷ்ணன் அவர்களை காண வந்த இடம் தான் கோபி தலாவ். அன்று கிருஷ்ணனும் கோபியர்களும் ஆனந்த நடனமாடிய இடமான GOPI TALAV என்ற நீரின் அடியில் உள்ள மண் சந்தனமாக இன்றும் கிடைக்கிறது. 

* பேட்  துவாரகா ~ அமைதியான 20 நிமிட படகு பயணம்.  சத்ய பாமாவின் இடம் மட்டும் தான் அப்படியே இருக்கிறது. மற்றது எல்லாம் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. 

* ஷிவ்ராபுர் பீச் ~ பளிங்கு கண்ணாடி போன்ற கடல் நீர் உள்ள அமைதியான இடம்.

* ருக்மிணி கோவில் ~ துர்வாசரின் சாபத்தால் கிருஷ்ணன் கோவிலில் இருந்து 2 km தூரத்தில் சாந்த சொரூபிணியாக தனியே அமர்ந்து அருள் பாலிக்கும் ருக்மிணி தாயார்.

 * Somnath ~ மிக பெரிய அளவில் உள்ள சிவலிங்கம்.

* த்ரிவேணி சங்கம் ~ மூன்று நதிகள் கூடும் இடம். (Hiren, Kapila  & Saraswati நதிகளின் சங்கமம்)

இந்த ஆன்மிக பயணம் மனதுக்கு சாந்தியையும் அமைதியையும் கொடுத்தது எங்களுக்கு. 

ஒரு தடவை சென்று வாருங்கள் நீங்களும் ! ! !

Saturday, January 27, 2024

இஸ்லாமும் பசுவும்.

இஸ்லாமும் பசுவும்.

அசீஸ் கவுர் என்ற முஸ்லிம் பெண்மணி

மாதாமாதம் ஏதாவது ஒரு தலைப்பில் அறிவுப்பூர்வமாக ஏதாவது பேசுவார்கள் , அப்படி இந்த மாதம் பசு பாதுகாப்பு பற்றி கூட்டத்தில் வந்து பேசினார்.  பெரிய பேச்சாளர் இல்லை.  ஏகப்பட்ட தகவல்களை தரவில்லை, கணீரென்ற குரல் இல்லை.  ஆனால் அரை மணிநேரத்தில் அனைவருக்கும் தாயானார்.  பேசியது அத்தனையும் சத்தியம். 

குடும்பமே சைவம்.  யாரும் முட்டை கூட சாப்பிடுவதில்லை.  இவரை யாரும் எதிர்க்கவும் இல்லை.  சிறு வயது முதலே, வீட்டுக்கு சிறு மிருகங்களும் பசுக்களும் பறவைகளும் வந்து போகும்.  அன்பாக இருப்பது என்பது இயல்பாக வந்தது.  பசுக்கள் என்றால் தனி பிரியம்.  

இவரது தாய்க்கு முதல் குழந்தை 

ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கரிடம் சென்றபோது அங்குள்ள தொழுவத்தை பார்த்துவிட்டு  அற்புதமாக இருந்ததாம்,என்றும் சொல்லியுள்ளார்.

கிர் காளைகள் 8 அடி உயரமாம். இவர் அருகே சென்று தடவி பார்த்து டேய் எனக்கு ஒரு முத்தம் குடுடா என்று காளையை பார்த்து சொன்னாராம்.  ஈஷி, நக்கி தள்ளிவிட்டதாம்.  அசந்து விட்டார்களாம் அனைவரும்.  என்ன இப்படி பேசறீங்க.  அதுவும் புரிஞ்சுகிட்டு பதில் சொல்லுது..! என்று கேட்டார்களாம்.

கட்டாக் சென்றபோது அங்கு அறுப்புக்காக காத்திருந்த நிறைமாத கர்ப்பிணி பசு.  இவர் தடவி கொடுத்திருக்கிறார்.  பட்டென்று ஒரு தட்டு.  என்னை விட்டுவிட்டாயே என்பது போல ஒரு பார்வை.  கண்ணில் நீர் முட்ட, என்னைத்தான் விட்டுவிட்டாய், மீதி இருப்பவர்களையாவது காப்பாற்று என்று சொல்லாமல் சொல்லிவிட்டு அப்படியே பொத்தென்று விழுந்து இறந்துவிட்டதாம்.  மாரடைப்பு காரணமாக.  

அந்த பார்வையை என்னால் மறக்கவே முடியாது என்று சொல்லி நிறுத்தினார்.  நிசப்தம் அறை முழுவதும்.  கலங்கி விட்டோம் அனைவரும். 

*நீங்கள் குடிக்கும் பானங்கள் அனைத்திலும் எதிலெல்லாம் கேல்ஷியம் இருக்கிறது என்று சொல்லி விற்கிறானோ, அவை அனைத்திலும் மாட்டின் எலும்பு இருக்கிறது என்றார்.*

முஸ்லிம்கள் மட்டுமல்ல.  ஹிந்துக்கள் மாட்டை கொல்வதிலும், தொலை ஏற்றுமதி செய்வதிலும் போட்டி போடுகிறார்கள்.  முஸ்லிம்கள் அறுப்பது வீடியோவில் பதிவாவதால் வெளியாகிறது என்றார்.   முஸ்லிம்கள் உண்ணலாம்.  ஆனால் கொல்வதில் ஹிந்துக்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.

 *ஹைதராபாத்தில் உள்ள மாடு அறுப்பு தொழிற்சாலையான அல் கபீர் நடத்துவது ஒரு ஜெயின் என்றார்.*  

பசுவை லட்சுமி என்றால் சும்மா அது ஒன்றும் பணம் தராது. ஆனால் அது பால் தருவது நின்றால் கூட அதன் சாணத்தையும் மூத்திரத்தையும்  வைத்து அவ்வளவு மருந்து, உரம் தயாரிக்கலாம்.  அதை முறையாக பராமரித்தால் பணம் கொட்டும் என்றார்.  கொன்றால் ஒரு முறை பணம்.  சரியாக பராமரித்தால் அது சாகும்வரை பணம் தரும் என்று விளக்கினார்.

அதன் கொம்புகள் வான் நோக்கி இருப்பதால் விண்ணிலுள்ள சக்தியை அது உறிஞ்சுகிறது.  ஜெர்சி பசுவின் சாணமோ, மூத்திரமோ பயன் தராது.  உங்கள் வீட்டில் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றால் இதற்கு தெரிந்துவிடும்.  அது பாசத்தால் அழும் என்றார்.

ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்துக்கு எடுத்து செல்ல, பல மாடுகளின் கால்களை உடைத்து லாரியில் படுக்க போடுவார்களாம்.  அதில் இருக்கும் இடைவெளியில் மற்றமாடுகளை ஏற்றுவார்களாம்.  இதன் கொம்பு அதன் கண்ணில் குத்தி இரத்தம் வரும்.  பார்க்க கொடுமையாக இருக்கும்.

கபில் சிபல் ஆசியாவின் மிகப்பெரிய மாடு அறுப்பு கொலைக்களம் வைத்துள்ளார்.

திமுக மந்திரி ஐ.பெ.....சாமி இந்த வேலை பார்க்கிறார்.  ஒரு முறை அவரது லாரியை இந்தம்மாள் மடக்கி பிடித்துள்ளார். 17 லாரிகளில் 14 தப்பிவிட்டன. 3 மட்டும்தான் சிக்கியது.  அப்போது அவரது  PA காவல்துறை ஆய்வாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.  இங்கே வாருங்கள் உடனடியாக என்று சொல்லியுள்ளார்.  இவர் பதிலுக்கு நீ இங்கே வா.  நான் எங்கும் வரமாட்டேன்.  மாடுகளை துன்புறுத்தி விட்டு திமிராக பேசுகிறாயா என்று கேட்டுள்ளார்.  அரண்டுவிட்டார்களாம்.  அதன்பின் வரவே இல்லை என்றார்.

நீங்கள் எல்லோரும் பசுக்களுக்கு உணவளியுங்கள்.  விட்டுவிடாதீர்கள்.  இவை நமது சொத்து.  நான் குரான்படி வாழ்வதால் இவைகளை காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறேன்.  ஒரு முறை ஜவஹீருல்லாவோடு வாக்குவாதம் ஏற்பட்டது.  அவர் சொன்னார், எனக்கும் தெரியும் குரான்படி இதெல்லாம் கூடாது என்று.  ஆனால் விட்டுவிட்டால் ஹிந்துக்கள் தலைக்கு மேல் ஏறிவிடுவார்கள்.  அதனால் தொடர்கிறோம் என்றாராம்.  இவர் பதிலுக்கு, உனக்கு ஹிந்து எதிர்ப்பு முக்கியமா?, குரான் முக்கியமா? என்று கேட்டுள்ளார்.  

தயவு செய்து தோல் பொருட்களை உபயோகிக்காதீர்கள்.  பெல்ட், பர்ஸ், ஷூ, கையுறை, கார் சீட்டு வாங்காதீர்கள்.  உணவு பொருட்கள் வாங்கினாலும் பச்சை வட்டம் உள்ளதா என்று பாருங்கள்.  பசுவை பாது காக்க அதன் பஞ்சகவ்யம் மூலம் தயாரிக்கப்படும் சோப்பு, ஷாம்பூ, போன்றவற்றை வாங்குங்கள்.  இது போன்ற பொருட்களை அதிகம் வாங்கினால் இவைகளுக்கு மவுசு கூடினால் இதை கொன்று வரும் பணத்தை விட இவைகளை உயிரோடு வைத்திருந்தால் அதிகம் பணம் கிடைக்கும் என்று உணருவார்கள்.  பசு பிழைக்கும்.  

வெளி நாட்டுக்காரனுக்கு பணம் போகாது.  நம் நாட்டிலேயே சுற்றும்.  கல்யாண பரிசு பொருட்கள், நவராத்திரி பரிசு பொருட்கள், பிறந்த நாள் return gift, புத்தாண்டு பரிசு பொருட்கள் எல்லாம் இந்த கோமாதா பொருளாக இருந்தால் பயனும் ஆகும்.  ஒரு உயிரும் பிழைக்கும்.  கொஞ்சம் கை கொடுங்கள் நண்பர்களே.

Tuesday, January 23, 2024

அயோத்தியில் தமிழர்கள் குறைந்த செலவில் தங்க

அயோத்தியில் தமிழர்கள் குறைந்த செலவில் தங்க, சாப்பிட குறித்துக் கொள்ளவும்.

AYODHYA NATTUKOT NAGARA CHATRAM,

NATTUKOT SRI RAM MANDIR,

BABOO BAZAAR,

AYODHYA 224123

U.P.

7311166233

7373070733

இந்த நம்பரில் அழைத்து, முன்அறிவிப்பு செய்து விட்டு செல்லவும்.