இஸ்லாமும் பசுவும்.
அசீஸ் கவுர் என்ற முஸ்லிம் பெண்மணி
மாதாமாதம் ஏதாவது ஒரு தலைப்பில் அறிவுப்பூர்வமாக ஏதாவது பேசுவார்கள் , அப்படி இந்த மாதம் பசு பாதுகாப்பு பற்றி கூட்டத்தில் வந்து பேசினார். பெரிய பேச்சாளர் இல்லை. ஏகப்பட்ட தகவல்களை தரவில்லை, கணீரென்ற குரல் இல்லை. ஆனால் அரை மணிநேரத்தில் அனைவருக்கும் தாயானார். பேசியது அத்தனையும் சத்தியம்.
குடும்பமே சைவம். யாரும் முட்டை கூட சாப்பிடுவதில்லை. இவரை யாரும் எதிர்க்கவும் இல்லை. சிறு வயது முதலே, வீட்டுக்கு சிறு மிருகங்களும் பசுக்களும் பறவைகளும் வந்து போகும். அன்பாக இருப்பது என்பது இயல்பாக வந்தது. பசுக்கள் என்றால் தனி பிரியம்.
இவரது தாய்க்கு முதல் குழந்தை
ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கரிடம் சென்றபோது அங்குள்ள தொழுவத்தை பார்த்துவிட்டு அற்புதமாக இருந்ததாம்,என்றும் சொல்லியுள்ளார்.
கிர் காளைகள் 8 அடி உயரமாம். இவர் அருகே சென்று தடவி பார்த்து டேய் எனக்கு ஒரு முத்தம் குடுடா என்று காளையை பார்த்து சொன்னாராம். ஈஷி, நக்கி தள்ளிவிட்டதாம். அசந்து விட்டார்களாம் அனைவரும். என்ன இப்படி பேசறீங்க. அதுவும் புரிஞ்சுகிட்டு பதில் சொல்லுது..! என்று கேட்டார்களாம்.
கட்டாக் சென்றபோது அங்கு அறுப்புக்காக காத்திருந்த நிறைமாத கர்ப்பிணி பசு. இவர் தடவி கொடுத்திருக்கிறார். பட்டென்று ஒரு தட்டு. என்னை விட்டுவிட்டாயே என்பது போல ஒரு பார்வை. கண்ணில் நீர் முட்ட, என்னைத்தான் விட்டுவிட்டாய், மீதி இருப்பவர்களையாவது காப்பாற்று என்று சொல்லாமல் சொல்லிவிட்டு அப்படியே பொத்தென்று விழுந்து இறந்துவிட்டதாம். மாரடைப்பு காரணமாக.
அந்த பார்வையை என்னால் மறக்கவே முடியாது என்று சொல்லி நிறுத்தினார். நிசப்தம் அறை முழுவதும். கலங்கி விட்டோம் அனைவரும்.
*நீங்கள் குடிக்கும் பானங்கள் அனைத்திலும் எதிலெல்லாம் கேல்ஷியம் இருக்கிறது என்று சொல்லி விற்கிறானோ, அவை அனைத்திலும் மாட்டின் எலும்பு இருக்கிறது என்றார்.*
முஸ்லிம்கள் மட்டுமல்ல. ஹிந்துக்கள் மாட்டை கொல்வதிலும், தொலை ஏற்றுமதி செய்வதிலும் போட்டி போடுகிறார்கள். முஸ்லிம்கள் அறுப்பது வீடியோவில் பதிவாவதால் வெளியாகிறது என்றார். முஸ்லிம்கள் உண்ணலாம். ஆனால் கொல்வதில் ஹிந்துக்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.
*ஹைதராபாத்தில் உள்ள மாடு அறுப்பு தொழிற்சாலையான அல் கபீர் நடத்துவது ஒரு ஜெயின் என்றார்.*
பசுவை லட்சுமி என்றால் சும்மா அது ஒன்றும் பணம் தராது. ஆனால் அது பால் தருவது நின்றால் கூட அதன் சாணத்தையும் மூத்திரத்தையும் வைத்து அவ்வளவு மருந்து, உரம் தயாரிக்கலாம். அதை முறையாக பராமரித்தால் பணம் கொட்டும் என்றார். கொன்றால் ஒரு முறை பணம். சரியாக பராமரித்தால் அது சாகும்வரை பணம் தரும் என்று விளக்கினார்.
அதன் கொம்புகள் வான் நோக்கி இருப்பதால் விண்ணிலுள்ள சக்தியை அது உறிஞ்சுகிறது. ஜெர்சி பசுவின் சாணமோ, மூத்திரமோ பயன் தராது. உங்கள் வீட்டில் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றால் இதற்கு தெரிந்துவிடும். அது பாசத்தால் அழும் என்றார்.
ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்துக்கு எடுத்து செல்ல, பல மாடுகளின் கால்களை உடைத்து லாரியில் படுக்க போடுவார்களாம். அதில் இருக்கும் இடைவெளியில் மற்றமாடுகளை ஏற்றுவார்களாம். இதன் கொம்பு அதன் கண்ணில் குத்தி இரத்தம் வரும். பார்க்க கொடுமையாக இருக்கும்.
கபில் சிபல் ஆசியாவின் மிகப்பெரிய மாடு அறுப்பு கொலைக்களம் வைத்துள்ளார்.
திமுக மந்திரி ஐ.பெ.....சாமி இந்த வேலை பார்க்கிறார். ஒரு முறை அவரது லாரியை இந்தம்மாள் மடக்கி பிடித்துள்ளார். 17 லாரிகளில் 14 தப்பிவிட்டன. 3 மட்டும்தான் சிக்கியது. அப்போது அவரது PA காவல்துறை ஆய்வாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இங்கே வாருங்கள் உடனடியாக என்று சொல்லியுள்ளார். இவர் பதிலுக்கு நீ இங்கே வா. நான் எங்கும் வரமாட்டேன். மாடுகளை துன்புறுத்தி விட்டு திமிராக பேசுகிறாயா என்று கேட்டுள்ளார். அரண்டுவிட்டார்களாம். அதன்பின் வரவே இல்லை என்றார்.
நீங்கள் எல்லோரும் பசுக்களுக்கு உணவளியுங்கள். விட்டுவிடாதீர்கள். இவை நமது சொத்து. நான் குரான்படி வாழ்வதால் இவைகளை காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறேன். ஒரு முறை ஜவஹீருல்லாவோடு வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் சொன்னார், எனக்கும் தெரியும் குரான்படி இதெல்லாம் கூடாது என்று. ஆனால் விட்டுவிட்டால் ஹிந்துக்கள் தலைக்கு மேல் ஏறிவிடுவார்கள். அதனால் தொடர்கிறோம் என்றாராம். இவர் பதிலுக்கு, உனக்கு ஹிந்து எதிர்ப்பு முக்கியமா?, குரான் முக்கியமா? என்று கேட்டுள்ளார்.
தயவு செய்து தோல் பொருட்களை உபயோகிக்காதீர்கள். பெல்ட், பர்ஸ், ஷூ, கையுறை, கார் சீட்டு வாங்காதீர்கள். உணவு பொருட்கள் வாங்கினாலும் பச்சை வட்டம் உள்ளதா என்று பாருங்கள். பசுவை பாது காக்க அதன் பஞ்சகவ்யம் மூலம் தயாரிக்கப்படும் சோப்பு, ஷாம்பூ, போன்றவற்றை வாங்குங்கள். இது போன்ற பொருட்களை அதிகம் வாங்கினால் இவைகளுக்கு மவுசு கூடினால் இதை கொன்று வரும் பணத்தை விட இவைகளை உயிரோடு வைத்திருந்தால் அதிகம் பணம் கிடைக்கும் என்று உணருவார்கள். பசு பிழைக்கும்.
வெளி நாட்டுக்காரனுக்கு பணம் போகாது. நம் நாட்டிலேயே சுற்றும். கல்யாண பரிசு பொருட்கள், நவராத்திரி பரிசு பொருட்கள், பிறந்த நாள் return gift, புத்தாண்டு பரிசு பொருட்கள் எல்லாம் இந்த கோமாதா பொருளாக இருந்தால் பயனும் ஆகும். ஒரு உயிரும் பிழைக்கும். கொஞ்சம் கை கொடுங்கள் நண்பர்களே.
No comments:
Post a Comment