Pages

Wednesday, January 31, 2024

துவாரகா விஜயம் ~ Dwarka Visit

துவாரகா செல்ல வேண்டும், ஸ்ரீ கிருஷ்ணனை காண வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் சில வருடங்களாகவே மனதில் இருந்து கொண்டு தான் இருந்தது.    

ஜனவரி 2024ல் எப்படியும் போய்த்தான் தீர வேண்டும் என்ற முடிவிற்கு வந்து, மும்பை > துவாரகா ஆன்லைன் டிக்கெட் புக் செய்ய நினைத்தால், பிப்ரவரி கடைசி தேதி வரை எல்லா ரயிலிலும் முன்கூட்டியே பதிவாகி இருந்தது.  ஒரு வழியாக பாந்த்ரா டெர்மின்ஸ்சில் இருந்து Jamnagar வரை செல்லும் எக்ஸ்பிரஸ்ஸில் 22ம் தேதிக்கும்  அதே ரயிலில், திரும்பி வருவதற்கும் 26ம் தேதிக்கு பதிவு செய்தோம் 3AC கோச்சில்.  

22ம் தேதி இரவில் 8.15க்கு ரயில் Jamnagar நோக்கி புறப்பட்டது. மறு நாள் பகல் 2.40க்கு ரயில் Jamnagar வந்து சேர்ந்தது.  அங்கிருந்து, ஆட்டோவில் நகர பேருந்து நிலையம் வந்தோம்.  GSRTC பஸ் புறப்பட இன்னும் நேரம் ஆகும் என்றார்கள்.  அருகிலேயே தனியார் பஸ் (Shiv Shakti Travels @ Rs.150 per head) கிளம்ப தயாராக இருந்தது.  புக் செய்து டிக்கெட் வாங்கி ஏறி அமர்ந்தோம்.   மாலை 5.45க்கு Jamnagar வந்து அடைந்தது. ஆன்லைனில் 3 nights புக் செய்து இருந்த Vrundaavan ரூமில் வந்து சேர்ந்தோம். 

(Sri Vrundaavan Guest  House, Home Guard  Road, Dwarka. Guajarat. Mr. Pareshbhai Vayeda ~ Contact No. 6354111099 / 8160365440. Rent Rs 500/- per night.)  

குளித்து, உடனே அருகில் இருந்த Sri Dwarkadeesh Temple ~ Jagat Mandir கிருஷ்ணன் கோவிலுக்கு செல்ல தயாரானோம். மொபைல் போன் உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் வரிசை தனித்தனியே இருந்தது.  தரிசனம் முடிந்து குடும்பத்தாருடன் சேர்வது சிறிது சிரமமாக இருக்கிறது. காரணம், தரிசனம் முடிந்ததும் வெளியேறும் வழி இருபாலருக்கும் தனித்தனியாக இருக்கிறது. தொடர் விடுமுறையின்  காரணம், கோவிலில் நிறைய கூட்டம். பெண்களின் வரிசை படுவேகமாக நகர்ந்து சென்றது.  ஆண்கள் வரிசை அப்படியே நின்று கொண்டிருந்தது.  மனித ரூபத்தில் தெய்வம் போல யாரோ ஒருவர் வந்து "இதோ இந்த வழியாக செல்லுங்கள், சீக்கிரம் தரிசனம் கிடைக்கும்" என்று சொன்னார்.  கூட வந்தவர்களும் அவர் சொன்ன வழியே சென்று சுலபமாக தரிசனம் செய்தோம்.  நன்றி சொல்ல நினைத்து தேடினால் அந்த மனித ரூபர் சென்ற தடயம் தெரியவில்லை யாருக்கும். வரிசையில் 30 நிமிடத்திற்கு மேல் நின்று கொண்டிருந்தபோது, வழி  சொன்ன அவர் யார்  ஒரு மனமார்ந்த நன்றி கூட சொல்லாமல் ஸ்ரீ கிருஷ்ணனை காண ஓடிபோனோமே என்று நினைத்து, ஆரத்தி தரிசனம் கண்டோம், கண்களில் நீர் மல்க.  திரும்ப மனம் இல்லாமல் கோவிலில் இருந்து ரூமுக்கு வரும் வழியில் இரவு சாப்பாடு முடித்துக்கொண்டு, மறுநாள் Dwarka sight seeing செல்ல தனியார் டூரிஸ்ட் பஸ்ஸில் டிக்கெட் புக் செய்தோம். பஸ்சில் நபர் ஒருவருக்கு டிக்கெட் 260/- ஆகிறது. 8 பேர் கொண்ட Share Autoவில் 250/- வாங்குகிறார்கள்.   

பின்னர் எங்கள் ரூமில் வந்து உறங்கி காலைக்கடன்களை முடித்து விட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு பஸ்ஸில் அமர்ந்தோம் Dwarka sight seeing செல்ல. பேசிக்கொண்டிருக்கும்போது travels owner "நீங்கள் இவ்வளவு தூரத்தில் இருந்து வந்து இருக்கிறீர்கள், அதனால் கண்டிப்பாக சோம்நாத் சென்று வாருங்கள் சிவபெருமானை தரிசிக்க" என்று சொன்னார். உடனே முடிவெடுத்து மறுநாள் சோம்நாத் செல்ல டிக்கெட் புக் செய்தோம் அவர்களிடமே. ஒரு நபருக்கு 270/- வாங்குகிறர்கள். 

Dwarka  sight  seeing covers the  following places: 

1. நாகேஸ்வர் 2. கோபி தலாவ் 3. பேட்  துவாரகா 4.ஷிவ்ராபுர் பீச் 5. ருக்மிணி கோவில் போன்ற இடங்களுக்கு அழைத்து சென்றனர்.  

Dwarka  sight  seeing முடித்துவிட்டு மாலை 6 மணிக்கு திரும்பி வந்தோம் எங்கள் இருப்பிடத்திற்கு. நேரம் இருந்ததால், மீண்டும் கிருஷ்ணன் கோவிலில் நடைபெற உள்ள 7.30 மணி ஆரத்தியை காண வேண்டி சென்றோம்.  அதே கூட்டம். கண்குளிர கண்டு கொண்டோம் ஸ்ரீ கிருஷ்ணனை திரும்பி வர மனமில்லாமல்.  அருகில் உள்ள வேறு சில கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்து விட்டு, இரவு எங்கள் ரூமிற்கு திரும்ப இரவு 9 மணி ஆகிவிட்டது.  மறுநாள் நாங்கள் சோம்நாத் செல்வதை  room ownerக்கு எடுத்து சொல்லி ஒருநாள் ரூம் புக்கிங் cancel செய்வதாக சொன்னோம். அட்வான்ஸ் திருப்பி தருவதற்கு ஒத்துக்கொண்டார்கள். 

காலைக்கடன்களை முடித்து 8 மணிக்கு travels  பஸ்ஸில் அமர்ந்தோம் சோம்நாத் செல்ல. 238 கிமீ தூரத்தை சென்று அடைய 4/5 மணி நேரமாகும். ஒவ்வொரு 2மணி நேரம் தொடர் பயணத்திற்கு பிறகு 15 / 20 நிமிடம் எங்காவது நிறுத்தி பிறகு பயணம் தொடர்கிறது.  மதியம் 1.30 மணிக்கு சோம்நாத் சென்று அடைந்தது எங்கள் பஸ்.

பஸ் நின்ற இடத்தின் அருகிலேயே SHREE SOMNATH TRUST - PRABHAS PATAN என்ற விளம்பர பலகையை கண்டு உள்ளே சென்று ரூம் புக் செய்தோம். Advance Rs .750/- கட்டினோம். 3 bed ஒரு ரூமில். 24மணி நேரமும் Hot water வசதி, கம்பளியுடன்.  உடன் தயாரானோம் சோம்நாத் கோவில் போக. அடுத்த 10வது நிமிடத்தில் கோவில் வளாகத்தில் இருந்தோம்.  மொபைல், கை பை எடுத்து செல்ல அனுமதி இல்லை கோவிலுக்குள். வெறும் கையுடன் தான் உள்ளே அனுமதிப்பார்கள். அதிக கூட்டம் இல்லாததால் நல்ல தரிசனம் கிடைத்தது. திங்கள்கிழமை சிவபெருமானை தரிசிக்க கூட்டம் அதிகமாகும் என்று சொல்கிறார்கள்.  கோவிலை சுற்றி கடற்கரை. பார்க்க ரம்மியமாக இருந்தது. இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை Light  & Music Program நடக்கிறது. ஒரு நபருக்கு Rs. 20 கட்டணம் உண்டு. அங்கிருந்து Triveni Sangam வந்து சேர்ந்தோம். Hiren, Kapila & Saraswati என்ற மூன்று நதிகள் சங்கமம் ஆகும் அருமையான இடம்.

அருகில் உள்ள கடைவீதி வழியே வேடிக்கை பார்த்து, தேவையானதை வாங்கிக்கொண்டு ரூமிற்கு 7 மணி அளவில் திரும்பி வந்தோம். வரும்போது Receptionist சொன்னார், "7.30 மணிக்கு Dinner ரெடி ஆகும்" என்று. விலை Rs. 70/- மட்டுமே.

பணத்தை செலுத்திவிட்டு டோக்கன் வாங்கினால், அங்கு உள்ள system  & cleanliness பார்த்ததும் நமது நினைவிற்கு வருவது Shirdi  & Thirupathi தான். 

டைனிங் ஹால் டைம்: 

Morning 6.30 ~ 10.00

Lunch  11.30 ~ 3.00

Dinner  7.30 ~ 11.00

The above menu is unlimited all time. We had dinner with  chapathi, rice, curry, poriyal kichadi & One  big  glass butter milk @ Rs.5/-extra.

நாங்கள் தங்கி இருந்த இடத்திற்கு பின்னால் தான் GSRTC பஸ் புறப்படும் இடம். மறுநாள் காலை 7 மணிக்கு Jamnagar செல்ல பஸ் டிக்கெட் புக் செய்தோம். ஒரு நபருக்கு 260/- வாங்குகிறார்கள்.  Room Reception counter is working 24 hours என்ற விவரத்தை தெளிவுப்படுத்திக் கொண்டு ரூமிற்கு சென்றோம்.  

மறுநாள் காலை 6 மணிக்கு checkout செய்தபோது advance பணத்தில் இருந்து 150/- திருப்பி கொடுத்தார்கள் எங்களுக்கு. அதாவது ஒரு நபருக்கு தங்குமிடத்திற்கு வெறும் 300/- தான் வாங்கினார்கள்.  பின் அங்கிருந்து GSRTC பஸ் ஸ்டாண்டு வந்து காத்திருந்தோம், எங்கள் பஸ் வருவதற்காக. சரியாக 7 மணிக்கு பஸ் வந்தது Jamnagar செல்ல. பல சிறிய கிராமங்களின் வழியாக பஸ் சென்று மதியம் 2மணி அளவில் Jamnagar City வந்து சேர்ந்தது. அங்கு மிகவும் பிரசித்தி பெற்ற CHETNA ஹோட்டலில் சுவையான உணவு அருந்தினோம்.  இரவு 8 மணிக்கு தான் புறப்படும் எங்கள் ரயில்.  இன்னும் நேரம் நிறைய இருந்ததால் 7 மணி வரை Jamnagar ஊர் சுற்றி பார்த்து, ஷாப்பிங் செய்து செய்தோம்.  7.30மணிக்கு எங்கள் கோச்சில் ஏறி அமர்ந்தோம். மறுநாள் 27ம் தேதி காலை 9.30 மணிக்கு பாந்த்ரா டெர்மின்ஸ் வந்து சேர்ந்தோம்.

இந்த இனிய பயணத்தில் எங்களை கவர்ந்தது:

நாகேஸ்வர் ~ மிகப் பெரிய சிவபெருமானின் சிலை.  நமது கழுத்து வலி எடுக்கும் அளவிற்கு உயரமானது, பிரம்மாண்டமானது.

Jagat Mandir கிருஷ்ணனின் ஆரத்தியின்போது மக்களின் பக்தி ஆரவாரம்.

* பிருந்தாவனத்தில் இருந்து கிருஷ்ணன் கோபியர்களை விட்டுவிட்டு துவாரகா வந்துவிட்டதால் கிருஷ்ணனை காண கோபியர்கள் துவாரகா வந்தார்கள். இதை அறிந்து கிருஷ்ணன் அவர்களை காண வந்த இடம் தான் கோபி தலாவ். அன்று கிருஷ்ணனும் கோபியர்களும் ஆனந்த நடனமாடிய இடமான GOPI TALAV என்ற நீரின் அடியில் உள்ள மண் சந்தனமாக இன்றும் கிடைக்கிறது. 

பேட்  துவாரகா ~ அமைதியான 20 நிமிட படகு பயணம்.  சத்ய பாமாவின் இடம் மட்டும் தான் அப்படியே இருக்கிறது. மற்றது எல்லாம் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. 

ஷிவ்ராபுர் பீச் ~ பளிங்கு கண்ணாடி போன்ற கடல் நீர் உள்ள அமைதியான இடம்.

ருக்மிணி கோவில் ~ துர்வாசரின் சாபத்தால் கிருஷ்ணன் கோவிலில் இருந்து 2 km தூரத்தில் சாந்த சொரூபிணியாக தனியே அமர்ந்து அருள் பாலிக்கும் ருக்மிணி தாயார்.

 * Somnath ~ மிக பெரிய அளவில் உள்ள சிவலிங்கம்.

* த்ரிவேணி சங்கம் ~ மூன்று நதிகள் கூடும் இடம். (Hiren, Kapila  & Saraswati நதிகளின் சங்கமம்)

இந்த ஆன்மிக பயணம் மனதுக்கு சாந்தியையும் அமைதியையும் கொடுத்தது எங்களுக்கு. 

ஒரு தடவை சென்று வாருங்கள் நீங்களும் ! ! !

No comments:

Post a Comment