Pages

Sunday, August 14, 2022

ப்ராப்தம் இருந்தா அது நடக்கும்

அன்று சித்திரா பவுர்ணமி. திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் ருத்ர அபிஷேகம். பதினொரு ரிக்விதுக்களோடு ருத்ராபிஷேகம் ஜபம் காலை 8 முதல் பிற்பகல் 2 வரை  பிரமாதமாக ஏற்பாடு செய்தவர் மிராசுதார் நாராயணஸ்வாமி அய்யர்.  பெரியவா பக்தர்.

மறுநாள் ருத்ர பிரசாதத்தோடு காஞ்சியில் பெரியவாளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி நின்றார்.  புருவத்தை உயர்த்தி பெரியவா "என்ன விஷயம்?"என்றார். மிராசுதார் பவ்யமாக, தேங்கா, பழம், வில்வம் இலை, விபுதி குங்குமம், சந்தனம் எல்லாம் தட்டில் வைத்தார்.

"எந்த கோயில் பிரசாதம்?"

"திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்லே மகாருத்ரம் ஜபம் அபிஷேகம் ஏற்பாடு பண்ணினேன். அந்த பிரசாதம்."

பெரியவா தட்டை பார்த்தா.. "நாராயணசாமி நீ பணக்காரன். தனியாவே பண்ணினியா யாரோடையாவது சேர்ந்தா?"

"இல்லை பெரியவா. நானே தான் பண்ணினேன்!" ("நானே" கொஞ்சம் அழுத்தமாகவே இருந்தது)

"லோக க்ஷேமத்துக்கு தானே?"

"அப்படின்னு இல்லை. ரெண்டு மூணு வர்ஷமாகவே வயல்லே சரியா அறுவடை இல்லே. வெள்ளாமை போரவில்லை. கவலையோட முத்து ஜோசியரை கேட்டதில் சித்ரா பவுர்ணமியிலே ருத்ர அபிஷேகம் பண்ணு என்று சொன்னார். நல்ல விளைச்சல் வரணும் என்று வேண்டிக்கொண்டு செய்தேன். பெரியவாளுக்கு அபிஷேகபிரசாதம் கொடுத்துட்டு பெரியவா அனுக்ரகதுக்கும் ...."  நாராயணசாமி மென்று விழுங்கிக்கொண்டே நிறுத்தினார்.”

" ஒ! அப்படின்னா நீ ஆத்மார்த்தமாகவோ லோகக்ஷேமதுக்காகவோ பண்ணலை. - பெரியவா கண்ணைமூடிக்கொண்டார். கால் மணிநேரம் நழுவியது. பிரசாதம் தொடப்படவில்லை.

"எத்தனை ரித்விக்குகள் வந்ததா சொன்னே ? "

"பதினொன்னு பெரியவா"

"யாராரு,  எங்கேருந்தேல்லாம் வந்தா?”

பெரியவாளுக்கும் மிராசுதாருக்கும் நடக்கும் சம்பாஷணையை அருகில் நின்றுகொண்டிருந்த அனைத்து பக்தர்களும் சிலையாக நின்று கவனித்தனர்.

தன்னுடைய பையிலிருந்து ஒரு நோட்டுப்பு புத்தகம் எடுத்து மிராசுதார் படித்தார் 

"திருவிடைமருதூர் வெங்கிட்டு சாஸ்திரிகள், ஸீனிவாச கனபாடிகள், ராஜகோபால ஸ்ரௌதிகள்......" பெரியவா இடைமறித்து:

"ஒ! எல்லோருமே பெரிய வேத விற்பன்னர்கள் ஆச்சே... உன் லிஸ்ட்லே தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பேர் இருக்கா பாரு?"

மிராசுதார் சந்தோஷத்தோடு " இருக்கு இருக்கு பெரியவா, நேத்திக்கு அவரும் வந்தார்.

"பேஷ் பேஷ் வெங்கடேச கனபாடிகள் ரொம்ப படிச்சவா. வேதத்திலே அதாரிட்டி. வயசு அதிகமிருக்குமே இப்போ கஷ்டப் பட்டுண்டு தான் ருத்ர ஜபம் சொல்ல முடியறதாமே"

துப்பாக்கியில் இருந்து குண்டு புறப்படும் வேகத்தில் மிராசுதார் பதிலளித்தார் :” 

" ரொம்ப சரியா சொன்னேள் பெரியவா: அவராலே மந்திரமே சொல்ல முடியலே அவராலே மொத்தத்தில் சொல்ல வேண்டிய ருத்ர ஜபம் அளவு கொஞ்சம் குறைஞ்சிருக்கும் என்று எனக்கு வருத்தம். ஏன் அவரை கூப்பிட்டோம் என்று தோணித்து""

" உன்கிட்ட பணம் இருக்குங்கிறதுக்காக எதை வேணுமானாலும் சொல்லாதே. 

தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பத்தி அவருடைய வேத சாஸ்திர அனுபவம் பததி உனக்கு தெரியுமா ? அவர் கால் தூசு சமானம் ஆவியா நீ?? பெரியவா கண் மூடிக்கொண்டது : 

" நேத்திக்கு என்ன நடந்தது என்று எனக்கு புரியறது. நான் கேக்கரத்துக்கு மட்டும் பதில் சொல்லு? 

கனபாடிகள் கண்ணை மூடிக்கொண்டு மனசாலே ஜபம் பண்ணிண்டிருக்கும் போது " வாங்கின பணத்துக்கு மந்திரம் சொல்லாமே ஏன் வாய் மூடிண்டிருக்கேள் என்றுஅவரிடம் போய் கேட்டாயா?" 

அங்கிருந்த அனைவரும் வெல வெலத்து நடுங்கிக்கொண்டு இதையெல்லாம் கேட்டு கொண்டிருக்க மிராசுதார் தொப்பென்று கீழே விழுந்து கையால் வாய் மூடி, கண்களில் பிரவாகத்தோடு "தப்பு பண்ணிட்டேன் பெரியவா மன்னிச்சுடுங்கோ. நடந்ததை தத்ரூபமாக சொல்றேள் "

"அது மட்டும் இல்லையே. எல்லா ரித்விக்குகளுக்கும் தட்சணை எவ்வளவு கொடுத்தே?

எலெக்ட்ரிக் ஷாக் வாங்கியவன் போல தட்டு தடுமாறிக்கொண்டு நாராயணசுவாமி " தலா பத்து ரூபா கொடுத்தேன்" 

“தெரியும். எல்லாருக்குமேவா? " மென்று முழுங்கிக் கொண்டு விதிர் விதிர்த்துப்போய் நடுங்கிகொண்டிருந்த மிராச்தாரிடம் பெரியவா "எங்கிட்ட சொல்ல அவமானமா இருக்கோ. நானே சொல்றேன்.

எல்லாருக்கும் பத்து பத்துரூபா கொடுதுண்டே வந்து கனபாடிகள் கிட்ட வந்து சம்பாவனை ஏழு ரூபா மட்டும் தான் கொடுத்தே. குறைச்சு மந்திரம் சொன்னதாக நினைச்சு ஏழு ரூபா கனபாடிகளுக்கு தகுந்த நியாயமான சம்பாவனையா குடுததில் உனக்கு சந்தோஷம். கனபாடிகள் ஒன்னும் சொல்லாமே சந்தோஷத்தோடு அதை வாங்கிண்டா அப்படி தானே ??"

நாராயணசாமி அய்யர் ஈட்டி பாய்ந்ததுபோல் துடித்தார். "பெரியவா நான் திருந்திட்டேன். என்னை மன்னிக்கணும்"என்று வாய் புலம்பிக்கொண்டே இருந்தது. 

மடத்துலே இருந்த எல்லா பக்தர்களுக்கும் அதிர்ச்சி. பெரியவாளுக்கு இருக்கும் தீர்க்க தரிசனம் பிரமிக்க வைத்தது. பெரியவா வீசிய மற்றொரு பிரம்மாஸ்திரம் அனைவரையும் தாக்கியது கட்டி போட்டது

"அதோடு போச்சுன்னா பரவாயில்லையே. ராமச்சந்திர அய்யர் வீட்டில் அனைவருக்கும் போஜனம் நடந்ததே. நீதானே சக்கரை பொங்கல் பரிமாறினே. நெய், திராட்சை, முந்திரி எல்லாம் கமகமக்க அம்ருதமாயிருக்குன்னு எல்லாரும் திருப்தியா சாப்பிடனும்னு பாரபட்சம் இல்லாம போட்டியா."

நாராயணசாமி நடுங்கினார் துடித்தார். பதில் வரவில்லை மஹா பெரியவாளே தொடர்ந்தார் : 

"நானே சொல்றேன். நன்னா இருக்கும் இன்னும் கொஞ்சம் என்று கேட்டவாளுக்கெல்லாம் மேலே மேலே பரிமாறினே. கனபாடிகள் இன்னும் கொஞ்சம் போடுங்கோ என்று நாலு அஞ்சு தடவை கேட்டும் கூட அவர் இலைக்கு மட்டும் போடலை. காதிலே விழாதது மாதிரி நகந்துட்டே. சரியா? இது பந்தி தர்மமா? அவர் மனசு நோகடிச்சு சந்தோஷபட்டே"". இதை சொல்லும்போது பெரியவாளுக்கு ரொம்ப துக்கம் மேலிட்டது. நா தழு தழுத்தழுத்தது..

நாராயணசாமி கூனி குறுகி தலை குனிந்து கை கட்டி மண்டியிட்டு கண்களில் கங்கை வடித்தார்.

அமைதி பதினைந்து நிமிடம். 

பெரியவா கண்மூடி மெதுவாக திறந்தார். " தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பதினாறு வயசிலேருந்து ருத்ர ஜபம் சொல்பவர். இப்போ எண்பதொன்று வயதிலும் அவர் ருத்ர ஜபம் சொல்லாத கோவில் தமிழ்நாட்டில் இல்லை.  அவர் நாடி நரம்பு மூச்செல்லாம் பரமேஸ்வரன். ரத்தம் பூரா ருத்ர ஜபம். ஓடறது. அவர் சிவ ஸ்வரூபம். மகா புருஷன். அவருக்கு நீ பண்ணினது மஹா பாவம்."

மகாபெரியவாள் மேலே பேச முடியாமல் நிறுத்தினார்.

“ நீ பண்ணின அவமானத்துக்கு அப்புறம் என்ன பண்ணினார் அவர் என்று உனக்கு தெரியுமா.? வீட்டுக்கே திரும்பலை. நேரா திருவடைமருதூர் கோவில்லே மூணு பிரதக்ஷணம் பண்ணிட்டு மகாலிங்கம் முன்னாலே போய் நின்றார். 

கண்லே தாரை தாரையா நீர்வடிய "அப்பா ஜோதிமகாலிங்கம், நான் உன்னுடைய பக்தன். உன் சந்நிதிலே எவ்வளவோ காலமா நான் ருத்ர ஜபம் பண்ணி நீ கேட்டிருக்கே. இப்போ எனக்கு 81ஆயிடுத்து. மனசிலே தெம்பு இருக்கே தவிர உடம்பிலே இல்லே. குரல் போய்டுத்து. சக்கரை பொங்கல் ரொம்ப நன்னா இருந்ததே என்று வெட்கத்தை விட்டு அடிக்கடி இன்னும் கொஞ்சம் போடுங்கோ என்று மிராச்தார்கிட்ட கேட்டுட்டேன். முதல்லே அவர் காதிலே விழலை என்று நினைச்சேன். அப்பறம் தான் புரிஞ்சுது அவருக்கு அதில் இஷ்டமில்லை என்று. 

இவ்வளவு வயசாகியும் அல்ப விஷயத்துக்கு அடிமையாகிட்டேன். அதுக்கு தண்டனை தர தான் உன்கிட்ட நிக்கறேன் இப்போ. அவா அவா காசிக்கு போய் பிடிச்சதை விட்டுடுவா . நீ தானே காசிலேயும் லிங்கம்.அதனாலே இதையே காசியா நினைச்சுண்டு உன் எதிர்க்க பிரதிக்ஞை பண்றேன். இனிமே இந்த ஜன்மத்திலே எனக்கு சக்கரை பொங்கல் மட்டுமில்லை. சக்கரை சேர்த்த எந்த பண்டமும் இந்த கை தொடாது.”     கண்ணை தொடசுண்டு கனபாடிகள் அப்புறம் வீட்டுக்கு போனார்.

நாராயணசாமி நீ இப்போ சொல்லு மகாலிங்கம் நீ பண்ணினதை ஒத்துகொள்வாரா?"" மௌனம் . அனைவரும் கற்சிலையாயினர்.

மணி மூணு ஆயிடுத்து. அன்றைக்கு பெரியவா பிக்ஷை ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லார் கண்களிலும் இந்திய நதிகள். பித்து பிடித்ததுபோல் அனைவரிடமும் திரும்பி “” எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்கோ. பெரியவா தான் என்னை காப்பாத்தனும்”  என்று பெரியவா காலடியில்விழுந்தார். அவர் கொண்டு வந்த பிரசாதம் தொடப்படவில்லை. "

பெரியவா  “ எல்லாரும் இருங்கோ மகாலிங்க சுவாமியே அனுக்ரகம் பண்ணுவார்" என்றார். 

எதோ பெரியவா சொல்றதுக்கு காத்திருந்த மாதிரி 65வயது மதிக்க தக்க ஒரு சிவாச்சாரியார் விபுதி உத்ராக்ஷ மாலைகளோடு ஒரு தட்டுடன் வந்தார். "என் பேரு மகாலிங்கம் திருவிடைமருதூர் கோவில் அர்ச்சகன்.   நேத்திக்கு கோவில்லே ருத்ராபிஷேகம் நடந்தது. பெரியவாளுக்கு பிரசாதம் சமர்பிச்சு ஆசீர்வாதம் வாங்கிண்டு போகவந்தேன்" என்று சொல்லி கோவில் பிரசாதத்தை பெரியவா முன்னால் வைத்து வணங்கினார்.. அவரை தடுத்து பெரியவா " சிவ தீக்ஷைவாங்கிண்டவா எனக்கு நமஸ்காரம் எல்லாம் பண்ணகூடாது" என்று சொல்லிவிட்டு பிரசாதம் வாங்கிண்டார். அனைவரும் பெற்றனர். மடத்திலிருந்து அர்ச்சகருக்கு பிரசாதம் தரப்பட்டது. அப்போது தான் அங்கு மிராசுதார் நாராயணசாமி நிற்பதை அர்ச்சகர் பார்த்தார். " 

பெரியவா இவர் தான் எங்கவூர் மிராசுதார் நாராயணசாமி அய்யர். இவாதான் நேத்திக்கு ருத்ர அபிஷேகம் ஏற்பாடு பண்ணினா" என்று அவரையும் வணங்கிவிட்டு அர்ச்சகர் நகர்ந்தார்.  

நாராயணசாமி அய்யர் வாய் ஓயாமல் பெரியவாளிடம் " என் பாபத்தை எப்படி கரைப்பேன். என்ன பிராயச்சித்தம் சொல்லுங்கோ" என்று கதறினார்.

பெரியவா எழுந்து ஒரு நிமிஷம் கண்மூடினார். "நான் என்ன பிராயச்சித்தம் சொல்ல முடியும். 

தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் மட்டுமே உனக்கு பிராயச்சித்தம் என்ன என்று சொல்லணும்." " பெரியவா, நான் இப்பவே ஓடறேன். "அவர் என்னை மன்னிச்சேன் என்று சொல்வாரா, என்ன பிராயச்சித்தம் பண்ணனும் என்று சொல்வாரா?" நீங்கதான் அருள் செய்யணும்"

பெரியவா ஒரு பெருமூச்சு விட்டார். " உனக்கு ப்ராப்தம் இருந்தா அது நடக்கும்"என்று கூறிவிட்டு உளளே சென்று விட்டார். வெகு நேரமாகியும் பெரியவா வெளியே வரவில்லை. 

மிராசுதார்  ஓடினார். அடுத்த பஸ் பிடித்து நேராக தேப்பெருமாநல்லூர் சென்றார். கனபாடிகள் காலில் விழுந்து புரண்டு அழுது மன்னிப்பு கேட்க சென்ற போது கனபாடிகள் வீட்டு வாசலில் ஒரு சின்ன கூட்டம். 

அன்று காலையில் கனபாடிகள் மகாலிங்கத்தை அடைந்துவிட்டார் எனறு கூடியிருந்தவர்கள் சொன்னார்கள். மிராசுதார் ஐயோ என்று அலறினார்.

கனபாடிகள் உடல் இன்னும் அகற்றப்படவில்லை. நல்லவேளை. கனபாடிகளின் காலை பிடித்து என்னை மனனிச்சுடுங்கோ நான் மகாபாவி. எனறு கதறினார். 

"சுரீர்" என்று அப்போது தான் உரைத்தது அதனால் தான் பெரியவா " ப்ராப்தம்" இருந்தால் என்று சொன்னாரா?

(சர்மா சாஸ்திரிகள்)

Sunday, August 07, 2022

வாகன விபத்து நிதி நிவாரணம்

வாகன விபத்தில் பாதிக்கப் படுபவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து கீழ்கண்டவாறு நிவாரண உதவிகள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது:

337 இ.த.ச (ரூ 25000),

338 இ.த.ச (ரூ 50000),

304(அ) இ.த.ச (100000),

பொதுவாக விபத்தில் யாராவது உயிரிழந்தால் அவர் குடும்பத்தினரை காவல்துறையினர் தானாகவே அழைத்து நிவாரண உதவிகளை பெற்றுத்தர உதவி செய்கின்றனர்.

ஆனால்(போதிய விழிப்புணர்வு இல்லாததால்) விபத்தில் காயமோ, கொடுங்காயமோ, உயிர் இழப்போ ஏற்பட்டால் அரசு வழங்கும் நிவாரண உதவியை பெற்றுதருமாறு யாரும் உதவி ஆய்வாளருக்கு மனு அளிப்பதில்லை காவல்துறையினரும் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து இதற்காக மனுப் பெற முடிவவதில்லை 

எனவே, 337,338,304(a)ipc வழக்குகள் போடப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவர் அனைவருக்கும் இது பொருந்தும் இதை செய்வதற்க்கு அந்த வழக்கின் எப்.ஐ.ஆர் ,காயச்சான்று , பாதிக்கப்பட்ட நபரின் ஆதார்(அ) வாக்காளர் அடையாள அட்டை ,மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டருகே வசிக்கக்கூடிய நபர்கள் யாராவது இருவருடைய அடையாள அட்டை self attested உடன் இவை அனைத்திலும் தலா இரண்டு நகல்கள் இணைக்கப்பட வேண்டும் மேலும் பாதிக்கப்பட்ட நபர் அரசு வழங்கும் நிவாரண நிதியை அரசிடம் இருந்து பெற்றுத்தருமாறு உதவி ஆய்வாளருக்கு ஒரு மனு கொடுக்க வேண்டும் இவை அனைத்தையும் விக்டிம் பன்டு ( victim fund) மனுவுடன் இணைத்து உதவி ஆய்வாளர் மற்றும் ஆய்வாளரிடம் கையொப்பம் பெற்ற உடன் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்க்கு அனுப்பி வைக்கப்படும் பின்பு அங்கிருந்து உடனடியாக கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு  அனுப்பி வைக்கப்படும் பின்  உடனடியாக கோட்டாட்சியர் பாதிக்கப்பட்ட நபரை நேரில் அழைத்து பண உதவி வழங்குவார்.

தயவு செய்து இந்த தகவலை அதிகம் பகிரவும். கண்ணுக்குத் தெரியாத குடும்பத்திற்கு உதவ நம்மாலும் முடியும்.

மனு வழங்க காலக்கெடு இல்லை.

Tuesday, July 26, 2022

கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்!

ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தூள் செய்து 50 மி.லி. தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்து, வடிகட்டி அதில் இரண்டு துளி மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும்.

கருஞ்சீரகத்தில் நறுமண எண்ணெய் உள்ளது. அது வயிற்று உப்புசம் மற்றும் வலியை நீக்கி, கழிவுகளை எளிதாக வெளியேற்றும்தன்மை கொண்டது.

இரைப்பையில் பாக்டீரியாவால் உண்டாகும் நோய்த் தொற்று மற்றும் குடலில் உள்ள தேவையற்ற பூச்சிகளை அழிக்கும்.

கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சுடுநீரில் கலந்து, சிறிதளவு தேனும் சேர்த்து பருகினால் சிறுநீரக கற்களும், பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை, மாலை இருவேளை சாப்பிடலாம்.

தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா நோயால் துன்பப்படுகிறவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ் சீரக பொடியை தேன் மற்றும் அரை தேக்கரண்டி அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிட வேண்டும். இது நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும்.

கருஞ்சீரகத்தில் "தைமோகியோனின்" என்ற வேதிப்பொருள் உள்ளது.  இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.  இதில் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால் கெட்ட கொழுப்பு குறையும். ஒவ்வாமையும் நீங்கும்.

தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து. இதனை பொடி செய்து கரப்பான் மற்றும் சொரியாஸிஸ் நோய் இருப்பவர்கள் தேய்த்து குளித்து வரலாம். புண்களால் ஏற்படும் தழும்புகளும் மறையும். 

குளியலுக்கு பயன்படுத்தும் பொடிகளில் கருஞ்சீரகத்தை அரைத்து சேர்த்து, பயன்படுத்துவது நல்லது.

புற்று நோய்க்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்தாக செயல்படுவதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபணமாகி உள்ளது. குறிப்பாக கணையப் புற்று நோயை கட்டுப்படுத்துவதில் இது பெரும் பங்கு வகிக்கிறது. 

கருஞ்சீரகத்தில் இன்டெர்பிதான் என்ற இயற்கை வேதிப்பொருள் உள்ளது. அது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி புற்று நோய் கட்டிகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது.

புற்று நோய் உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை சுடுநீரில் கலந்து காலையும், மாலையும் பருகலாம். சுடுநீருக்கு பதிலாக தேன் கலந்தும் சாப்பிடலாம்.

சில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அந்த நாட்களில் அடிவயிறு கனமாகி, சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். இதற்கு கருஞ்சீரகம் மருந்தாக பயன்படுகிறது. அதனை வறுத்து லேசாக வெடிக்க விட்டு தூள் செய்து வைத்துக்கொண்டு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு பத்து நாட்கள் முன்பிருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினமும் இருவேளை தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிடவேண்டும்.  இது மாதவிடாய் சிக்கலை போக்கும். வயிறு கனம் குறைந்து, சிறுநீர் நன்றாக பிரியும்.

பிரசவத்திற்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

கருஞ்சீரகம் பல முக்கியமான சித்த மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

திருப்பதி - தங்குவதற்கு ஓரு அறைக்கு வெறும் 200

இங்கு 200 படுக்கை அறை உள்ளது ஓரு அறைக்கு வெறும் 200 ருபாய் காலை காபி காலை சிற்றுண்டி மதியம் உணவு இரவு உணவு எல்லாம் சேர்த்து ஓரு ஆளுக்கு வெறும் 200 ருபாய் மட்டும் தான் திருப்பதி செல்பவர் பயன்படுத்தி கொள்ளலாம். 

Tirumala Sri Kasimath,

Ring road, Near S.V. Museum,

Tirumala - 517507 (A.P)

Ph : 0877-2277316

திருமலையில் தங்குவதற்கு  ஒரு அறை கண்டுபிடிக்க சிரமமாக இருந்தால், 

இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், பயன்படுத்தி கொள்ளுங்கள்.

கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன. அவற்றில் தங்கலாம். ஹோட்டலுக்குரிய ரூம்வசதிகளோடு உள்ளன.

மூல் மட் மின்: +918772277499 0877-2277499.

புஷ்பா மண்டபம் : 0877-2277301.

ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317.

உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187.

ஸ்ரீ திருமலகாஷி மட் Ph-0877-2277316.

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட்  Ph-0877-2277302.

ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா விவேர்டினினி சபை 

Ph: 0877-2277282.

ஸ்ரீ காஞ்சி காமகோடி மட் 

Ph : 0877-2277370.

ஸ்ரீ புஷ்பகிரி மட் Ph-0877-2277419.

ஸ்ரீ உட்டாரடி மட் Ph-0877-2277397.

உடுப்பி மட் Ph-0877-2277305.

ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத் ஆத்வான் ஆசிரமம் : 0877-2277826.

ஸ்ரீ பரகலா ஸ்மிமி மட் பி: 0877-2270597,2277383.

ஸ்ரீ திருப்பதிஸ்ரீமன்னாரயன ராமானுஜா ஜீயர் மட் பி: 0877-2277301.

ஸ்ரீ சிருங்கரி சாரதா மடம்

Ph: 0877-2277269, 2279435.

ஸ்ரீ அஹோபீதா மட் ப. 0877-2279440.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீதந்தி ராமனுஜீயர் மட் Ph : 0877 222 77301)

ஸ்ரீ காஞ்சி காமகோடி 

பீட்டம் மட் / சர்வா மங்கலா கல்யாண மண்டபம் , Ph : 0877 222 77370

ஸ்ரீ வல்லபச்சரிய மடம் தொலைபேசி: 222 77317

மந்திராலயா ராகவேந்திர சுவாமி மட் / பிருன்தாவனம் 

Ph : 0877 222 77302

ஆர்யா வைசியா சமாஜம் எஸ்.வி.ஆர்.ஏ.வி.டி.எஸ்.எஸ்.டி

Ph  : 0877 222 77436

ஸ்ரீரங்கம் ஸ்ரீமதி ஆதித்யான் ஆஷ்ரம் 

Ph : 0877 222 77826

ஸ்ரீ வைகநாத ஆசிரமம்

Ph : 0877 222 77282

ஸ்ரீ அஹோபில மட்  

Ph : 0877-2279440

ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் / சாரதா கல்யாண மண்டபம் Ph : 0877 222 77269

ஸ்ரீ வைசராஜர் மடம் மோதிலால் பன்சிலால் தர்மசாலா Ph : 0877 222 77445

ஹோட்டல் நரிலமா சௌல்ரி Ph : 0877 222 77784

ஸ்ரீ சீனிவாச சொல்ரி 

Ph : 0877 222 77883

ஸ்ரீ ஹதிராம்ஜி மட் மின் 

Ph : 0877 222 77240

கர்நாடகா விருந்தினர் 

மாளிகை 

Ph : 0877 222 77238

தக்ஷிணா இந்தியா ஆர்யா வியா கபு முனிரட்ணம் அறநெறிகள் 

Ph : 0877 222 77245

ஸ்ரீ சிருங்கேரி சங்கர நீலம் 

Ph : 0877 222 79435

ஸ்ரீ ஸ்வாமி ஹதிராஜ் முட்டம் Ph : 0877-2220015

வயதில் மூத்த குடிமக்களும் ஜருகண்டி சொல்லித் தள்ளிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள் இனி யாரைத் தள்ளுவது என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது.

65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது எப்படி?

நிபந்தனைகள் :

******************

1) ஆதார் அட்டை அவசியம்.

2) 65 வயது முடிந்திருக்க வேண்டும்

3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.

4) காலை 10 மணி முதல் 

மாலை 3 மணி வரை தரிசனம் நேரம்.

5) தினம் 700 பேருக்கும் அனுமதி உண்டு.

6.) உதவி செய்வதெற்கென உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவளுக்கும் ஆதார் அவசியம்.

7) காலை உணவு பால் இலவசம்.

8.) அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும்.

9) ஒருமுறை சென்றவர் 3 மாத காலத்திற்கு பின்னரே மீண்டும் அனுமதிக்கப் படுவர்.

10) இவை அனைத்தும் இலவச சேவையாகும். பயனுள்ள தகவலை பகிரலாமே. இந்த தகவல்கள்அனைத்தும் திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை !  

ௐ நமோ நாராயணா....!

திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு!

யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்.

இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். 

சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனநிம்மதி உண்டாகிறது.

திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ..

ஸ்ரீராமானுஜர் யந்திர சக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் .

கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும் போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும்.

பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது , இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

வாஸ்துப்படி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன.

வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும்..

செல்வம் மலை போல குவியும்.

உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள். 

அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது. 

வாஸ்துப்படி மிக பலமாக இருப்பதால் இத் திருக்கோயில் மிக அதிக சக்தியுடன் உள்ளது.

இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான்.

கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர்.

குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்கு கிறார்கள்.

நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது.

நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும். 

சந்திர தசை மற்றும் சந்திர புக்தி நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கப் பட்டவர்களுக்கு இத் திருக்கோயில் சிறந்த பரிகாரத் தலமாகும்.

திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு.

திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்.

அட போங்கய்யா திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு..

அதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதினோரு மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம் 

அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம் ஆனால் அங்கு யாரும் அதை செய்வதே கிடையாது .

மாறாக அங்கு கூச்சலும் குழப்பமாக தான் இருக்கும்...இனிமேல் நீங்கள் திருப்பதி சென்று வந்தால் அங்கு நீங்களாவது அமைதியாக இருங்கள்.

அதிகம் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்து கொள்ளும் லக்னக்காரர்கள் தெரியுமா.? மேஷம் , ரிஷபம் , மிதுனம், கடகம் , கன்னி , துலாம் .விருச்சிகம் , மகரம், மீனம் லக்னம் உடையவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும்.

வருடம் ஒரு முறை மட்டும் செல்லும் லக்னம் காரர்கள் .சிம்மம் , தனுசு , கும்பம்.

ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம் " 

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”

ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித,

வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ... !!!

பொதுப் பொருள்: 

திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே,  நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டுபவர் வேண்டும் வரங்களை எல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே  நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகிய மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

ஸ்ரீவேங்கட ஸ்ரீநிவாஸா 

நின் திருவடிகளே 

சரணம் ! சரணம் !! சரணம் !!!

சிவகாமியின் செல்வன் 07

இந்தி பிரசாரசபை வெள்ளி விழாவில் கலந்து கொள்ள 1946ம் ஆண்டு காந்திஜி தமிழ்நாட்டுக்கு வந்தார்.  அவர் ஒரு வார காலம் தியாகராய நகரில் தங்கி இருந்தபோது அவரை காண லட்சக்கணக்கான மக்கள் தமிழ் நாட்டில் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் வந்து கூடியிருந்தார்கள்.  ஆகஸ்ட் போராட்டத்துக்கு பின் காந்திஜியின் புகழும் காங்கிரசின் செல்வாக்கும் நாட்டு மக்களிடையே பெரும் அளவில் ஓங்கியிருந்தது. அப்போது காமராஜ்தான் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர்.  ஆனாலும் காந்திஜி எப்போது வருகிறார், எந்த ஸ்டேஷனில் அவரை சந்தித்து வரவேற்பு அளிக்க வேண்டும் என்பதெல்லாம் காமராஜுக்கு தெரியவில்லை.  எல்லா ஏற்பாடுகளும் போலிஸாருக்கு மட்டுமே தெரிந்திருந்தன.

எல்லா விவரங்களையும் போலீசார் மூடு மந்திரமாகவே வைத்திருந்தார்கள்.  ராஜாஜி, கோபாலசுவாமி அய்யங்கார், இந்தி பிரசார சபா காரியதரிசி சத்திய நாராயணன் போன்ற ஒரு சில முக்கிய தலைவர்களுக்கு மட்டுமே விவரம் தெரிந்திருந்தது.  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் மகாத்மாஜியை நேரில் சென்று வரவேற்கும் பொறுப்பு காமராஜிடம் இருந்தது.  ஆனாலும் ஆருக்கு எந்த விவகாரமும் தெரியாததால் நேராக இந்தி பிரசார சபைக்கு போய் விசாரித்தார்.

ராஜாஜி முதலியவர்கள் ஏற்கெனவே காந்திஜியை வரவேற்க புறப்பட்டு போய்விட்டார்கள் என்கிற தகவல் மட்டுமே காமராஜுக்கு கிட்டியது.  இன்னும் கொஞ்சம் நேரத்தில் காந்திஜி வந்து விடுவார்.  அதற்குள் அவர் இறங்கும் ஸ்டேஷனை கண்டுபிடித்து ஆக வேண்டும்.  இதற்கு என்ன செய்வது? காமராஜுக்கு ஒன்றும் புரியவில்லை.

இந்த சமயத்தில் காமராஜின் நண்பரும் பத்திரிக்கை நிருபருமான கணபதி அங்கே வந்து சேர்ந்தார்.  மகாத்மாஜி எந்த ஸ்டேஷனில் ரயிலை விட்டு இறங்க போகிறார் என்கிற ரகசியம் பத்திரிக்கைக்காரர் என்ற முறையில் அவருக்கு தெரிந்திருந்தது.  கணபதி தம்முடைய காரிலேயே காமராஜரை அழைத்துக் கொண்டு அம்பத்தூர் ஸ்டேஷனுக்கு பறந்து சென்றார். அந்த ஸ்டேஷனில்தான் மகாத்மாவை வரவேற்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.  

காந்திஜி ரயிலை விட்டு இறங்கியதும் காங்கிரஸ் தலைவர் காமராஜ் தம் கையேடு கொண்டு போயிருந்த பெரிய மாலையை போட்டு அவரை வரவேற்றார்.  இந்தி பிரசார சபையின் வெள்ளி விழா முடிந்ததும், காந்திஜி பழனிக்கும், மதுரைக்கும் ரயில் மார்க்கமாகவே யாத்திரையாக சென்றார். அந்த பயணத்தின் போது ராஜாஜியும் காமராஜும் போயிருந்தனர்.  காந்திஜியிடம் ராஜாஜிக்கு அதிக செல்வாக்கு இருந்த காரணத்தினாலே என்னவோ காமராஜ் அந்த பயணத்தின் போது சற்று ஒதுங்கியே இருந்தார்.

பழனி ஆண்டவர் சந்நிதியில் கூட ராஜாஜிக்கு, காந்திஜிக்கு தான் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தார்கள். பழனிமலை படிகளில் எரிக் கொண்டிருந்தபோது காமராஜும் கூடவே சென்றார்.  அப்போது ராஜாஜி காமராஜரை காட்டி, இவர்தான் காமராஜ், காங்கிரஸ் ப்ரெசிடெண்ட் என்று காந்திஜிக்கு அறிமுகப்படுத்தினார்.

காந்திஜி தெரியுமே எனக்கு என்று பதில் கூறினார். மதுரைக்கும், பழனிக்கும்  போய்வந்த பிறகு தான் காந்திஜி கிளிக் (ஒரு சிறு கும்பல்) என்று காமராஜ் குழுவை குறிப்பிட்டார்.  காந்திஜி தங்களை பார்த்து இப்படிச் சொன்னது காமராஜுக்கும் அவரை சேர்ந்த காங்கிரஸ்காரர்களுக்கும் பெரும் வேதனையை அளித்தது.  அதை தொடர்ந்து மதுரையில் ராஜாஜிக்கு எதிராக பெரிய ஆர்ப்பாட்டமும் கலவரமும் நடந்தன.

காந்திஜியை கண்டிக்கும் வகையில் காமராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கை வருமாறு:

"ஹரிஜனில் தம் கையெழுத்துடன் எழுதியுள்ள காந்திஜியின் கட்டுரை எனக்கு மிகுந்த திகைப்பை உண்டாக்கியது.  நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்.  சட்டப்படி காரிய கமிட்டியை அமைத்தது நான்தான்.  ஆகவே, காந்திஜியின் குறிப்பு எனக்குத்தான் பொருந்த முடியும்.  சென்னையிலும், தமிழ்நாட்டிலும் காந்திஜி போகுமிடங்களுக்கெல்லாம் நானும் போய்க் கொண்டிருந்தேன்.  எப்பொழுதும் அவர் கூப்பிடும் தூரத்தில் தான் நான் இருந்தேன்.  காரியக் கமிட்டி அங்கத்தினர்கள் பலரும் கூடவே இருந்தனர்.  தமிழ் நாட்டு காங்கிரஸ் விவகாரங்கள் பற்றி காந்திஜி இங்கிருந்தபோது எங்களிடம் எதுவும் பேசவில்லை.  அங்கே போனபின் கும்பல் என்ற வார்த்தையை அவர் உபயோகித்துள்ளது எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. 

சட்டசபை வேலைத் திட்டம் தேச சுதந்திர போராட்டத்தை பலப்படுத்துவதற்கு ஒரு சாதனம் என்பதை தவிர அதில் எனக்கோ, என் சகாக்களுக்கோ அதிக நம்பிக்கை கிடையாது.  என் நிலையை விளக்கி நான் பல மேடைகளில் பேசியுள்ளேன். எது என்னவாயினும் நான் சட்டசபை வேலைத்திட்டத்தில் எவ்வித பதவியும் பெற ஆசைப்படவில்லை.

காந்திஜியின் கட்டுரைக்குப் பின் பார்லிமெண்டரி போர்டிலிருந்து நான் ராஜினாமா செய்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை.  ஏனென்றால் இந்த சண்டை முழுவதும் சட்டசபை திட்டத்தால் ஏற்பட்டதுதான்.

டி.எஸ். அவினாசிலிங்கம், சி.என்.  முத்துரங்க முதலியார், ராமசாமி ரெட்டியார், ருக்மிணி லட்சுமிபதி ஆகிய நால்வரும், தாங்களும் ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை என்று கருதினார்.  ஆனால் தேர்தலுக்கு முன் நமக்குள்ள அவகாசம் மிக குறுக்கியதாயிருப்பதால் அனைவரும் மொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டாம் என்று அவர்களை நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.  என் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்கள் போர்டில் இருக்க சம்மதித்தனர்.

என்னை பொறுத்தவரை நான் ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை.  20 ஆண்டுகளாக நான் விசுவாசத்துடன் பின்பற்றி வந்துள்ள தலைவர் காந்திஜி, அவரிடம் என் பக்தி இன்றும் குறையவில்லை. என்னால் அவருக்கு வருத்தம் ஏற்பட வேண்டிய நிலை வந்ததேயென்ற காரணத்தால் தான் நான், ராஜினாமா செய்ய தீர்மானித்தேன்.  தேசிய போர்டும், மத்திய போர்டும் எந்த முடிவுகளை செய்தாலும் அவற்றை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வேன் என இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உறுதி கூறுகிறேன்".  

காமராஜின் அறிக்கையை படித்துப் பார்த்த காந்திஜி மீண்டும் ஹரிஜன் பத்திரிகையில் விளக்கம் எழுதினார்.  கிளிக் என்ற சொல்லுக்கு ஆங்கில அகராதியில் தவறான அர்த்தம் எதுவுமில்லை என்று சமாதானம் கூறி, காமராஜ் தம்முடைய ராஜினாமாவை வாபஸ் வாங்கி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  ஆனாலும் காமராஜ் தம்முடைய முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

அந்த ஆண்டு நடக்கவிருந்த அசெம்பிளி தேர்தலுக்கான பார்லிமெண்டரி போர்டில் காமராஜ் இல்லை.  பார்லிமெண்டரி போர்டார் ராஜாஜியின் உதவியுடன் அபேட்சகர்களை தேர்ந்தெடுத்தார்கள்.  ஆனாலும், சில நாட்களுக்கெல்லாம் சூழ்நிலை சரியில்லை என்பதை அறிந்த ராஜாஜி, தாம் காங்கிரஸ் விவகாரங்கள் எதிலும் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று அறிக்கை வெளியிட்டு விட்டு விலகிக் கொண்டார். 

அப்போது டாக்டர் வரதராஜுலு நாயுடு காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதினார்:

"காந்தி தர்மத்தைப் பரப்புவதிலும், காங்கிரஸ் திட்டங்களை செயல்படுத்துவதிலும் காமராஜ் தென்னாட்டிலேயே முதன்மையானவர்.  அவரைக் குறித்து தாங்கள் தவறாக எழுதியது சரியல்ல.  இதில் தாங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்." 

உடனே காந்திஜி, நாயுடுவுக்கு பதில் எழுதினார்:

"உங்கள் இஷ்டப்படியே நடந்து கொள்கிறேன்.  இந்த தகராறில் இனி நான் ஈடுபடுவதில்லை" என்பதே அந்த பதில்.

ராஜாஜியை ஒரு சிறு கும்பல் எதிர்ப்பதாக காந்திஜி எழுதியதும், தமிழ் நாட்டில் ஒரு பெரிய கொந்தளிப்பே ஏற்பட்டுவிட்டது.  ராஜாஜி கோஷ்டி, காமராஜ் கோஷ்டி என்று இரு பிரிவுகள் தோன்றின.

1942ல் அலகாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ராஜாஜி பாகிஸ்தான்  பிரிவினை குறித்து ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்.  அதற்கு சாதகமாக 15 வோட்டுக்களே கிடைத்ததால் தீர்மானம் தோற்று போனது.  இதனால் ராஜாஜி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டீயில் இருந்தும், காரியாக் கமிட்டியில் இருந்தும் ராஜினாமா செய்து விட்டு தம்முடைய பாகிஸ்தான் பிரசாரத்தாய் சுதந்திரமாக நின்று நடத்தினார்.  ராஜாஜியின் இந்த போக்கு தமிழக காங்கிரசுக்குப் பிடிக்கவில்லை.  அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக நோட்டீஸ் கொடுத்தது.  

இந்த சமயத்தில் காந்திஜி ராஜாஜிக்கு ஒரு யோசனை கூறினார்.  காங்கிரஸ் அங்கத்தினர் பதவி, அசெம்பிளி பதவி இரண்டையும் அவர் ராஜினாமா செய்து விட வேண்டும் என்பதே அந்த யோசனை.  காந்திஜியின் யோசனைப்படியே அந்த இரண்டு பதவிகளையும் ராஜினாமா செய்து விட்டு ஆகஸ்ட் போராட்டத்தையும் எதிர்க்க தொடங்கினார் ராஜாஜி.  இவை எல்லாம் தான் காங்கிரஸ்காரர்களுக்கு ராஜியின் மீது கோபம் உண்டாக காரணங்கள் ஆயின.  

இதை தொடர்ந்து 1946ல் தென்னாட்டுக்கு வந்த காந்திஜி கிளிக் என்று சொன்னதும் காங்கிரஸ்காரர்களின் கோபம் எரிமலையாக வெடித்தது.

(தொடரும்)



 







 

Tuesday, July 12, 2022

சிவகாமியின் செல்வன் 06

ஆகஸ்ட் போராட்டத்துக்கு முன் இந்தியாவுக்கு வந்த க்ரிப்ஸ் மிஷன் இந்தியத் தலைவர்களுடன் பேசி ஓர் உடன்பாட்டுக்கு வர எண்ணினார்கள்.  அந்த தூது கோஷ்டியின் முயற்சி வெற்றி பெறாததால், அவர்கள் தோல்வியுடன் திரும்பி சென்றார்கள்.  இந்த நேரத்தில்தான் ராஜாஜி முஸ்லீம் லீகின் பாகிஸ்தான் கோரிக்கையை ஒப்புக் கொள்ளலாம் என்றும், அவர்களையும் சேர்த்துக் கொண்டு தேசிய சர்க்கார் அமைக்கலாம் என்றும் ஒரு யோசனையை வெளியிட்டார்.  இந்த யோசனையைக் காங்கிரஸ் காரியக் கமிட்டீ ஏற்று கொள்ளவில்லை.  இதனால் ராஜாஜி காங்கிரஸிலிருந்து விலகித் தனி மனிதராக நின்று தம்முடைய பாகிஸ்தான் பிரசாரத்தைக் தொடங்கினார்.

இதற்குப் பிறகுதான் பம்பாயில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி அடுத்தாற்போல் காங்கிரசின் போராட்டம் எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி ஆலோசித்தது.  இந்த சரித்திர புகழ் வாய்ந்த கூட்டத்துக்கு நாட்டின் எல்லாத் திசைகளில் இருந்தும் காங்கிரஸ் தலைவர்களும், பிரமுகர்களும், தொண்டர்களும் போயிருந்தார்கள்.  

ஆகஸ்ட் 8 அன்று பம்பாய் நகரமே அல்லோல கல்லோலப்பட்டது.  காந்திஜி, படேல், நேருஜி போன்ற பெருந்தலைவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  தமிழ் நாட்டில் இருந்து தலைவர் சத்தியமூர்த்தி, காமராஜ், பக்தவச்சலம் முதலானோர் போயிருந்தார்கள்.

வெள்ளையரே, வெளியேறுங்கள், என்று பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து மஹாத்மா குரல் கொடுத்தார்.  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் அப்படியே தீர்மானம் நிறைவேற்றியது.

அவ்வளவுதான் மறுநாளே, காந்தி, நேரு போன்ற பெருந்தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டார்கள்.  இதற்குள் யார் யாரை எங்கெங்கே கைது செய்ய வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சி ஒரு பட்டியலை தயாரித்து வைத்திருந்தது. 

பம்பாய் கூட்டம் முடிந்து ரயில் ஏறி ஊருக்கு திரும்புவதற்குளளாகவே பல காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.  தமிழ் நாட்டில் இருந்து போன சத்திய மூர்த்தி முதலானவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

உங்களை எப்ப கைது செய்தாங்க என்று காமராஜரைக் கேட்டேன்.

நான், முத்துராங்க முதலியார், பக்தவத்சலம், கோபாலரெட்டி எல்லோரும் ரயிலில் வந்துக்கிட்டிருந்தோம்.  எனக்கு ஒரு சந்தேகம்.  வழியிலேயே எங்காவது எஎன்னைப் பிடிச்சுடுவாங்களோன்னு.  ஜெயிலுக்குப் போறதுக்கு முன்னாலே தமிழ் நாடு பூராவும் சுற்றிப் போராட்டத்தை எப்படி நடத்தணும்கிறதை பற்றி அங்கங்கே உள்ளூர் காங்கிரஸ்காரங்கக்கிட்டே பேசிடனும்னு நினைச்சேன்.  அதுக்குள்ளே அரெஸ்ட் ஆயிடக்கூடாதுங்கிறது என்னுடைய பிளான். 

சஞ்சீவ ரெட்டியுடன் குண்டக்கல் வரைக்கும் போய், அங்கிருந்து பெங்களூர் மார்க்கமா ஆந்திராவுக்குப் போய், சஞ்சீவ ரெட்டியோடு 2/3 நாட்கள் தங்கி, சரியானபடி திட்டம் போட்டு, அப்புறம் தமிழ் நாட்டுக்கு வரணும்னு முதல்லே நினைச்சேன்.  ரெட்டியும் அவங்க ஊருக்கு வரச் சொல்லிக் கூப்பிட்டாரு.  ஆனா எனக்கு ஒரு சந்தேகம், இந்த நிலையிலே சஞ்சீவ ரெட்டியை பாதி வழியிலேயே கைது பண்ணிடுவாங்க.  அப்ப என்னையும் போலீஸ் சும்மா விடாதுன்னு.

சரி நீங்க போங்க, நான் தமிழ் நாட்டுக்கே போயிடுறேன்னு சஞ்சீவ ரெட்டி  கிட்டே சொல்லிட்டு, அரக்க்கோணம் வரை வந்துட்டேன்.  அரக்கோணத்தில் எட்டிப் பார்த்தா பிளாட்பாரம் பூரா ஒரே போலீசாயிருந்தது.  வந்தது வரட்டும்னு தைரியமா பிளாட்பாரத்தில் இறங்கி நடந்தேன்.  நல்லவேளையா என்னை யாரும் கைது செய்யல்லே.  அவங்க லிஸ்டில் என்பேரு இருந்ததா, இல்லையான்னும் தெரியலை.  மளமளன்னு ஸ்டேஷனுக்கு வெளியே போய்  ஒரு வண்டியை பிடிச்சு சோளங்கிபுரம் போயிட்டேன்.  

அங்கே எதுக்குப் போனீங்க ?  அங்கே ஓட்டல் தேவராஜய்யங்கார்னு ஒரு காங்கிரஸ்காரர் இருந்தார். அவருக்கு 2 பிள்ளைங்க.  ஒருத்தர் ஏதோ சினிமா தியேட்டரோ, கம்பெனியோ நடத்திகிட்டுருக்கார்னு கேள்வி.  அவர் ஓட்டல்லே சாப்பிட்டுவிட்டு கார் மூலமா அன்னைக்கே ராணிப்பேட்டை போயிட்டேன்.  ராத்திரி 10 மணியிருக்கும்.  கல்யாணராமைய்யார் வீட்டுக்குப்போய் கதவை தட்டினேன்.  அவர் கதவை திறக்கல்லே.  அவருக்கு பயம், போலீசார் தன்னை கைது செய்ய வைத்திருப்பாங்கன்னு.  என் குரலைக் கேட்டப்புறம் தான் மெதுவாக கதவை திறந்து எட்டிப் பார்த்தார்.  அந்த நேரத்தில் என்னைக் கண்டது அவருக்கு ஆச்சரியமா போய்டுச்சு.

சரி நீங்க இங்கே தங்கினால் ஆபத்து.  போலீசார் கண்டு பிடித்து விடுவார்கள்.  வாங்க இன்னொரு இடம் இருக்குன்னு சொல்லி ராணிப்பேட்டைக்கு வெளியே ஒரு மைல்  தள்ளி ஒரு காலி வீட்டுக்கு அழைச்சிட்டுப் போனார்.  அது ஒரு முஸ்லீம் நண்பருக்கு சொந்தம்.  அந்த வீட்டிலேயே ராத்திரி படுத்து தூங்கினேன். மறுநாள் பகலிலே கல்யாணராமைய்யரிடம் பேசிட்டு இருக்கிறப்போ கொஞ்ச தூரத்தில்  யாரோ ஒரு சப்இன்ஸ்பெக்டர் வர மாதிரி தெரிஞ்சுது. சப்ன்ஸ்பெக்டரை கண்டதும் கல்யாணராமைய்யருக்கு மறுபடியும் பயம் வந்துட்டுது.  

சரி கைது செய்யத்தான் வர்றாங்க, இனி தப்ப முடியாது, இப்ப என்ன செய்யலாம் என்று என்னைக் கேட்டார். வரட்டும் பார்க்கலாம் என்று சொல்லிட்டு நான் உள்ளே போய்  படுத்துட்டேன்.

வந்தவர் வீட்டை சுற்றிப் பார்த்துவிட்டு இந்த இடம் போதாது, அவ்வளவு வசதியாயும் இல்லை. டி.ஸ்.பி. வர்றார். அவருக்கு தங்கறதுக்கு இந்த இடம் பார்க்கத்தான் வந்தேன்னு சொல்லிட்டு போயிட்டார்.  அப்புறந்தான் கல்யாணராமைய்யருக்கு மூச்சு வந்தது.

அன்று மாலையே நானும் கல்யாணராமரும் கண்ணமங்கலம் ஸ்டேஷனுக்குப் போய் ரயிலேறிட்டோம்.  அங்கிருந்து வேலூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை வரைக்கும் போலீசார் கண்ணில் அகப்படாமலேயே போயிட்டோம்.  அங்கங்கே பார்க்க வேண்டியவர்களை பார்த்து, சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்டேன்.  மதுரையில் குமாரசாமி ராஜாவை பார்த்துப் பேசினேன்.  அப்ப அவர் ஜில்லா போர்ட் ப்ரசிடெண்டாயிருந்தார்.  ஆனா மூவ்மெண்ட்லே அவ்வளவு தீவிரமா ஈடுபடல்லே. மதுரையில் என் வேலை முடிஞ்சதும் திருநெல்வேலி, ராமநாதபுரம் போயிட்டு அங்கிருந்து விருதுநகருக்கு போய்  அம்மாவைப் பார்த்துட்டு கடைசியா மெட்றாசுக்கு போயிடலாம்னு நினச்சேன்.  இதற்கிடையில், போலீஸ்காரங்க அரியலூருக்கு போய்  என்னை தேடிகிட்டு இருந்தாங்க. அப்ப காங்கிரஸ் மகாநாடு ஒன்று அங்கே ரகசியமா நடக்கப் போவதாய் போலீசுக்கு தகவல் கிடைச்சிருக்கு.  நான் எப்படியும் அங்கே வருவேன் பிடிச்சுடலாம்னு போலீசார் அங்கே போய்  உஷாரா காத்துக்கிட்டுருந்தாங்க.  நான் எல்லா இடத்துக்கும் போயிட்டு கடைசியா விருதுநகருக்குப் பக்கத்தில் இருந்த ஒரு கிராமத்துக்கு போய்  சேர்ந்தேன்.  அங்கே ராமச்சந்திர ரெட்டியாரைப் பார்த்து அவர் வண்டியிலே விருதுநகருக்கு போனேன்.

வண்டியிலே எதுக்குப் போனீங்க? விருதுநகரிலே எங்க வீட்டுக்கு போற வழியிலே தான் போலீஸ் ஸ்டேஷன் இருக்குது. அந்த தெரு வழியில் போனால் போலீஸ்காரங்க பாத்துடுவாங்களேன்னு வண்டியிலே போனேன்.  அம்மாவைப் பாத்தீங்களா? ஆமாம், ராத்திரியிலே வீட்டிலே தான் இருந்தேன். அதுக்குள்ளே போலீசுக்கு எப்படியோ தகவல் தெரிஞ்சுடுத்து. அதனாலே, நான் வீட்டிலே தான் இருக்கேன், என்னை அரெஸ்ட் பண்ணுறதாயிருந்தால் அரெஸ்ட் பண்ணலாம்னு போலீசுக்கு சொல்லி அனுப்பிட்டேன்.  அப்புறம் என்னை அரெஸ்ட் பண்ணிட்டு போய்ட்டாங்க. 

ஜெயில்லேயிருந்து எப்போ வெளியே வந்தீங்க?  3 வருஷம் கழிச்சு 1945 ஜூலை மாசம் வந்தேன்.  அதுவரைக்கும் நீங்கதான் தமிழ்நாட்டுக்கு காங்கிரஸ் ப்ரெசிடெண்டா? 

ஆமாம், எல்லோருமே ஜெயிலுக்குப் போயிட்டாங்க. காங்கிரசுக்கு சர்க்கார்லே வேறே தடை போட்டிருந்தாங்க.  ராஜாஜி காங்கிரசிலிருந்து விலகிப் பாகிஸ்தான் பிரசாரம் செய்துக்கிட்டிருந்தார். இதனாலே அவர் பேரில் காங்கிரஸ்காரர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு, ராஜாஜி எதிர்ப்பு கோஷ்டின்னு ஒண்ணு தமிழ்நாட்டிலே பலாமா வளர்ந்துவிட்டது.

காந்திஜி தமிழ்நாட்டில் சுற்று பயணம் செய்துட்டு போறப்போ ராஜாஜிக்கு எதிரா இருந்தவங்களைக் கிளிக் என்று சொன்னாரே அது அப்பத்தானே ?  ஆமாம், ஹரிஜன் பத்திரியிலே அப்படி எழுதினார்.  நான் அதை ஆட்சேபித்து அறிக்கை விட்டேன். காந்திஜி அப்படி சொன்னது தப்புன்னு சர்வோதயம் ஜகந்நாதன் மதுரைக் கோயில்லே போய்  உட்கார்ந்துகிட்டு உண்ணாவிரதம் இருந்தார்.

காந்திஜி சொல்லிட்டாரே அதை எப்படிக் கண்டிக்கிறதுன்னு நான் பயப்படல.  இதே மாதிரி படேலுடன் கூட ஒரு சமயம் சண்டை போட்டிருக்கேன்.  1945ல் மத்திய அசெம்பிளிக்கு யார் யாரைப் போடணும் என்பதில் எனக்கும் படேலுக்கும் தகராறு வந்தது.  மைனாரிட்டி வகுப்பிலிருந்து யாராவது ஒருத்தரைப் போடலாம்னு நான் சொன்னேன்.  தூத்துக்குடி பால் அப்பாசாமிங்கிறவரைப் போடலாம், கிறிஸ்துவராயும் இருக்கிறார், படிச்சவராயும் இருக்கார்னு சொன்னேன்.  அவருக்கு வயசாயிட்டுதுன்னு சொல்லி மறுத்துட்டார் படேல்.  அவருக்கு பதிலா மாசிலாமணி என்பவரை ஏன் போடக்கூடாதுன்னு என்னைக் கேட்டார்.  அவருக்கு உடல்நலம் சரியில்லை, அவர் வேண்டாம்னு நான் சொன்னேன். 

என்ன உடம்புன்னு என்னைக் கேட்டார்.  அவருக்கு லெப்ரசி இருக்குதுன்னு சொன்னேன்.  படேல் நம்பல்லே.  நான் பிடிவாதமாயிருந்தேன்.  நான் சொல்றதிலே உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மெடிக்கல் ரிப்போர்ட் மூலமா செக் பண்ணிக்கலாம்னு சொன்னேன்.  அப்புறம் தான் மாசிலாமணி பெரி அடிப்பட்டுப் போச்சு.  அம்மு சுவாமிநாதனை போட்டாங்க.  எண்ணெய் படேல் நேரில் வராகி சொல்லி போன் பண்ணினார்.  நான் அப்பா பம்பாயில் தான் இருந்தேன்.  லிஸ்டை முடிவு செய்யுங்க, அதுக்கப்புறம் நான் வந்து சந்திக்கிறேன்னு சொல்லிட்டேன்.

(தொடரும்)






















 









Friday, June 17, 2022

சிவகாமியின் செல்வன் 05

நீங்கள் 1940ல் தமிழ்நாடு காங்கிரசின் தலைவரான பிறகுதானே தனிப்பட்டவர்கள் சத்தியாக்கிரகம் ஆரம்பமாயிற்று.  அப்போது எந்த இடத்தில் சத்தியாக்கிரகம் செய்தீர்கள்.  எப்போது கைது செய்யப்பட்டீர்கள்  என்று காமராஜைக் கேட்டேன்.  

நான் சத்தியாகிரகம் செய்யவில்லை.  அதற்குள்ளாகவே போலீசார் என்னை பாதுகாப்புக்கு கைதியாகக் கைது செய்து சிறைக்குள் கொண்டு போய்விட்டார்கள்.  காந்திஜியின் அனுமதி பெற்றவர்களே சத்தியாக்கிரகம் செய்யலாம் என்பது நிபந்தனை.  எனவே, தமிழ்நாட்டில் சத்தியாக்கிரகம் செய்ய விரும்புகிறவர்கள் லிஸ்ட் ஒன்றைத் தயாரித்து எடுத்துக் கொண்டு நான் காந்திஜியை நேரில் கண்டு பேசுவதற்காகச் சேவாகிராமம் போய்  கொண்டிருந்தேன்.  என்னுடன் நாகராஜனும் வந்து கொண்டிருந்தார்.  

எந்த நாகராஜன்.  அந்தக் காலத்தில் நாகராஜன் எனபர்தான் தங்களுக்கு அரசியல் ஆலோசகராக இருந்தார் என்றும், அவர் சொல்படிதான் நீங்கள் கேட்பீர்கள் என்றும் சொல்வார்களே அந்த நாகராஜனா ?

அதெல்லாம் சும்மா பேச்சு.  என்னோடு அவர் எப்போது சுற்றிக் கொண்டிருப்பார்.  அவரை முதல் முதல் இந்தியா பத்திரிக்கை ஆபீஸிலோ அல்லது வேறு எங்கேயோ சந்த்தித்தேன்.  அவருக்கு என்னிடத்தில் அக்கறையும் அன்பும் இருப்பதை அறிந்து கொண்டேன்.  அதனால் நானும் அவரும் சில விஷயங்ககளை சேர்ந்து ஆலோசிப்பதும் உண்டு.  அவர் எப்போதும் என்னுடன் இருந்தால் அவருடையல் பேச்சை கேட்டுத்தான் நான் எதுவும் செய்கிறேன் என்று அர்த்தமா என்ன என்றார் காமராஜ். 

தங்களை எதற்கு பந்தோபஸ்து கைதியாக்கி வேலூர் சிறைக்கு கொண்டு போனார்கள். அதுவா, அப்ப மெட்றாஸிலே ஆர்தர் ஹோப் என்னும் வெள்ளைக்காரன் கவர்னர் வேலை பார்த்துக்கிட்டிருந்தான்.  யுத்த நிதிக்கு பண வசூல் செய்யறதுக்காக அவன் தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்துக்கிட்டிருந்தான்.  நான் அவனுக்கு முன்னாடியே ஊர் ஊராய் போய் யுத்த நிதிக்கு பணம் கொடுக்கக்கூடாதுன்னு பிரசாரம் செய்துட்டு வந்துட்டேன்.  அதனாலே ஹோப்புக்கு பணம் வசூலாகால்லே.  இதுக்கு என்ன காரணம்னு விசாரித்தான் போல இருக்கு.  காரணம் தெரிஞ்சதும் என்னைப் பாதுகாப்பு கைதியாக்கி ஜெயில்லே கொண்டு வைக்கும்படி உத்தரவு போட்டிருக்கான். 

ஹோப்தான் உங்களை அரெஸ்ட் பண்ண சொன்னார்னு உங்களுக்கு எப்படி தெரிஞ்சது.

அப்போ பாத்ரோன்னு ஒரு போலீஸ் ஆபீசர் இருந்தார்.  நல்ல மனுஷன்.  தேச பக்தி உள்ளவர்.  தேச பக்தர்களுக்கு எல்லாம் தன்னால் முடிஞ்ச அளவு உதவி செய்வார்.  அவரை அப்போ ராமநாதபுரம் ஜில்லா சுப்பரின்டெண்ட்டாக மாத்திட்டாங்க.  போற வழியிலே அவர் விருதுநகரில் இறங்கி என் வீட்டுக்குப் போய் என் தாயாரை பார்த்து பேசிவிட்டு அம்மா என்னையும் உங்க மகன்னு நினச்சுக்குங்கம்மான்னு சொல்லிட்டு போனாராம்.  அப்புறந்தான் எனக்கு இந்த சங்கதியெல்லாம் தெரிஞ்சுது.

ஆனந்த விகடனில் அப்போது துணை ஆசிரியராயிருந்த கல்கி, சத்தியாக்கிரகம் செய்யணும்னு உங்ககிட்ட வந்தாரா?

ஆமாம், வந்தார். நல்லா நினைவு இருக்கு.  வாசன் கூட அவருக்கு சத்தியாக்கிரகம் செய்யப் பெர்மிஷன் கொடுக்கல்லேன்னு சொன்னதாக நினைவு.   கல்கியைப் பற்றி உங்க அபிப்பிராயம் என்ன?

நல்ல எழுத்தாளர். அந்த காலத்திலேயே திரு வி. கல்யாணசுந்தர முதலியார் நவசக்தின்னு ஒரு பேப்பர் நடத்திக்கிட்டிருந்தார்.  அதிலேதான் கிருஷ்ணமூர்த்தி எழுத்தை நான் முதல்லே படிச்சேன்.  தேனியோ, தமிழ்த் தேனியோ - ஏதோ ஒரு பேர்லே எழுதுவார்.  ரொம்ப தெளிவா, வேடிக்கையா எழுதுவாக.  ஆனந்த விகடனில் அவர் எழுதிய தலையெங்கமெல்லாம் காங்கிரசுக்கு பெரிய பலம் தேடிக் கொடுத்தது.  ஏ.என்.சிவராமன் கூட என்னோட ஜெயிலிலே இருந்தவர் தான்.  1930ல் அலிபுரம் ஜெயில்லே நான், சிவராமன், சடகோபன், கிருஷ்ணசாமி, வெங்கட்ராமன் எல்லோரும் ஒருபக்கம்.  லாகூர் வழக்கிலே ஈடுபட்டவங்க இன்னொரு பக்கம்.  சிவராமன் பெரிய பெரிய சிக்கலான பிரச்னைகளையெல்லாம் எடுத்து அலசி ஆராய்ந்து கோர்வையா எழுதுவார்.  பாமரர்களை விட படிச்சவங்க அவர் தலையங்கத்தை ரொம்ப விரும்பிப் படிப்பாங்க.  சொக்கலிங்கமும், கல்கியும் பாமரர்களுக்கு புரியும்படி எழுதுவாங்க.

பின்னால் ராஜாஜி வேண்டுமா வேண்டாமா என்று தமிழ் நாட்டிலே ஒரு பெரிய கிளர்ச்சி நடந்ததே.  அப்பா கல்கி தங்களை ரொம்ப தாக்கி எழுதினார், அதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

அவருக்கு என் பேரில் உள்ள கோபத்தினால் அப்படி எழுதினாருங்கிறதை விட, ராஜாஜியின் பேரில் உள்ள பக்தியினால் எழுதினாருங்கறதுதான் என் அபிப்பிராயம்.  எப்படி எழுதினாலும் ரொம்ப தெளிவான எழுத்து.  காங்கிரசை வளர்க்கிறதுக்கு அவரும் வாசனும் ரொம்ப உதவி செஞ்சிருக்காங்க.

இப்போ சத்தியமூர்த்தி பவன் இருக்கும் இடத்தில் தான் அப்பா காங்கிரஸ் ஆபீஸ் இருந்தது.  அது 30 வருஷத்துக்கு முன்னாலே தீப்பிடிச்சு எரிஞ்சு போச்சு.  அப்பா காங்கிரஸ் கட்டடட நிதிக்கு பணம் வசூல் செய்ய ஆரம்பிச்சதும் முதல் முதல் வாசன்தான் 10,000/- ரூபாய் கொடுத்தார்.  மொத்தம் 67,000/- ரூபாய் சேர்த்து வச்சிருந்தேன்.  தேனாம்பேட்டையில் இப்ப இருக்கிற காங்கிரஸ் கிரவுண்ட், இந்து சீனிவாசனுக்கு  சொந்தமாயிருந்தது. அவருக்கும் காங்கிரசில் ரொம்ப  பற்றுதல்.  அது 10 ஏக்கர் நிலம்.  அதில் ஒரு பில்டிங்கும் இருந்தது. அந்த இடத்தை அவர் ஆக்க்ஷனில் எடுத்திருந்தார். அந்த விலைக்கே காங்கிரசுக்கு கொடுத்துடுறேன்னு சொன்னார்.  ஆனால் அதை வாங்குவதற்கு 15,000/- குறைஞ்சது. வாசனை போய் பார்த்து விஷ;யத்தை சொல்லி 15,000/- கடனாக கேட்டேன்.  காதும் காதும் வெச்சாப்பல உடனே  ஒரு செக் எழுதி அப்பவே கொடுத்டுட்டார்.  அதுக்கப்புறம் கொஞ்ச நாளைக்கெல்லாம் அந்த கடனை திருப்பி கொடுத்துட்டேன்.  

அவரை ஏன்  எந்த எலெக்ஷனிலும் நீங்க நிற்க வைக்கல்லே.

அவரை நான் பல முறை கேட்டுக்கிட்டேன், அவர் பிடிவாதமா முடியாதுன்னுட்டார்.  கடைசியாக  வற்புறுத்தி, ராஜ்ய சபாவுக்கு போட்டோம்.

பாதுகாப்பு கைதியா எத்தனை மாசம் ஜெயில்லே இருந்தீங்க.

நவம்பர் 1949ல் வெளியில் வந்துட்டேன்.  மொத்தம் எத்தனை மாசம்னு கவனத்தில் இல்லே. 

உங்களை விருதுநகர் முனிசிபல் சேர்மனாக தேர்ந்தெடுத்தது அப்பதானே ?. 

ஆமாம், நான் ஜெயிலில் இருந்து வந்ததும் விருதுநகர் போனேன்.  நான் ஜெயில்லே இருந்தபோது என்னை சேர்மனாக தேர்ந்தெடுத்துட்டாங்க.  நான் போனதும் என்னை கூப்பிட்டு சேர்மன் நாற்காலியில் உட்கார சொன்னாங்க.  நான் கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு சேர்மன் பதவி எனக்கு வேண்டாம் பார்ட்டி வேலை, கெட்டுப் போய்விடும்.  சேர்மன் வேலை சரியாக செய்ய முடியாது.  எப்பவுமே கட்சி வேலை செய்வதில் தான் பிரியம்.  இந்த கவுரவத்தை எனக்கு கொடுத்ததற்காக உங்களுக்கெல்லாம் ரொம்ப நன்றின்னு சொல்லி ராஜினாமா எழுதிக் கொடுத்துட்டு எழுத்து வந்துட்டேன்.  

ஒரு நாள் கூட பதவியில் இல்லையா?

கொஞ்ச நேரம் தான் இருந்தேன்.  எனக்கு பார்ட்டி முக்கியமா பதவி முக்கியமா?

சத்தியமூர்த்தி உங்களோடு சிறையில் இருந்தாரா?

அம்ரோட்டி ஜெயில்லே இருந்தார்.  ஆகஸ்ட் 1942 போராட்டத்தில் அவரை கைது பண்ணி அமராவதிக்கு கொண்டு போயிட்டாங்க. அப்புறம் நான், திருவண்ணாமலை அண்ணாமலைப்பிள்ளை எல்லோரும் அங்கே போனோம்.  சத்தியமூர்த்திக்கு உடல் நலம் சரியில்லாமல் ஜெயில் ஆஸ்பத்திரியில் படுத்திருந்தார்.  அவரைப் பார்க்கணும்னா ஜெயில்லே விடமாட்டாங்க.  அதுக்காக ஏதாவது ஒரு வியாதியை சொல்லிக்கிட்டு அங்கேய் போய்  வருவோம்.  என்ன செய்யறது.  ஏதோ சொல்லிட்டு போய்  சத்தியமூர்த்தியை பார்த்துட்டு வருவோம்.  அம்ரோட்டி ஆஸ்பத்திரியில் அவர் ரொம்ப கஷ்டப்பட்டுக் கிடந்தார்.  வெய்யில் தாங்காது.  ரொம்ப  கடுமை. மண்டை வெடிச்சிடும் போல இருக்கும்.  நானும் அண்ணாமலையும் தொட்டியில் நீரை நிரப்பி தொட்டியிலேயே ராத்திரியெல்லாம் உட்கார்ந்திருப்போம்.  அண்ணாமலைப்பிள்ளை ஏதாவது பாடிக்கிட்டு இருப்பார்.

அவர் நல்ல பாடுவாரா?

சுமாராப்பாடுவார்.  ஏதாவது லாவணி கீவாணி பாடிக்கிட்டிருப்பார், நான் கேட்டுக்கிட்டுருப்பேன்.  என்ன செய்யறது.  ஜெயிலுக்குள்ளே பொழுது போவணுமில்லையா?

பாவம், சிறைத் துன்பங்களோடு பாட்டுக் கேட்கிற கஷ்டம் வேறா என்று எண்ணிக்கொண்டேன் நான்.  

(தொடரும்)



















Tuesday, June 07, 2022

சிவகாமியின் செல்வன் 04

திரு சத்தியமூர்த்தி 1936ல் மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவராயிருந்த போது  அவருடைய காரியதரிசியாகப் பணியாற்றினார்.  நேருஜி, தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்த போது சத்தியமூர்த்தி, காமராஜ் இருவருமே அந்த சுற்றுப் பயணத்தில் கலந்து கொண்டனர்.  காமராஜின் கடின உழைப்பையும், தன்னலமற்ற சேவையையும் நேருஜி நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டது அப்போதுதான்.

அதற்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக வரும் வாய்ப்பு சத்தியமூர்த்திக்கு இல்லாமலே போய்விட்டது.  ராஜாஜியே பக்க பலமாக இருந்துங்கூட, சத்தியமூர்த்தியால் வெற்றி பெற முடியவில்லை.  காங்கிரசுக்குள் வகுப்பு வாதம் புகுந்து விட்டதே இதற்கு காரணம்.  சத்தியமூர்த்தி இதை நன்றாகக் புரிந்து கொண்டதால் தலைவர் தேர்தலுக்கு தாம் போட்டியிடுவதை நிறுத்திக் கொண்டு 1940ல் காமராஜரைப் போட்டியிட செய்தார்.

அந்தக் காலத்தில் காங்கிரசுக்குள் ராஜாஜி கோஷ்டி, சத்தியமூர்த்தி கோஷ்டி என்று இரண்டு பிரிவுகள் இருந்தன.  காமராஜை நிறுத்தி வைத்திருப்பது பற்றி ராஜாஜியின் கருத்தை அறிந்து கொள்ள முத்துரங்க முதலியார், அவினாசிலிங்கம், ராமசாமி ரெட்டியார் மூவரும் ராஜாஜியை நேரில் கண்டு பேசினார்கள்.  அவர்களிடம்  ராஜாஜி தம் கருத்து என்ன என்பதை சொல்லவில்லை.  பிராமணர் அல்லாதவர் ஒருவர் தான் தலைவராக வர முடியும் என்றால் தமக்கு வேண்டிய ஒருவர் தலைவராக வரட்டுமே என்று ராஜாஜி எண்ணினாரோ என்னவோ?  தலைவர் தேர்தல் விஷயமாகத் தம்மைப் பார்க்க வந்த போது  சி.பி. சுப்பையாவையே நிறுத்தி வைக்கலாமே என்று யோசனையை வெளியிட்டார் ராஜாஜி.  அப்போது காமராஜை நிறுத்தி வைப்பது பற்றி ராஜாஜியிடம் சத்தியமூர்த்தி என்ன கூறினார், அதற்கு ராஜாஜி என்ன  பதில் கூறினார் என்பது நமக்கு தெரியவில்லை.  ஆனால் ராஜாஜி குறிப்பிட்ட சுப்பையாவை தாம் ஆதரிப்பதாக ஒப்புக் கொண்டு திரும்பி வந்தார் சத்தியமூர்த்தி. 

இதற்குள் காமராஜும் அவரை சேர்ந்தவர்களும் காமராஜின் வெற்றிக்காக வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சத்தியமூர்த்தி சென்னை நகர மேயராக இருந்தார்.  அவர் காமராஜை அழைத்து, சுப்பையாவை போடும்படி ராஜாஜி சொல்கிறார், நானும் சரி என்று சொல்லிட்டு வந்துவிட்டேன், நீ என்ன சொல்கிறார் என்று கேட்டார்.

நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. எனக்கு அவர் நிற்பதில் இஷ்டமில்லை.  சுப்பையாவுக்குப் பதில் வேறு யார் நின்றாலும் எனக்கு சம்மதம்தான், இல்லையென்றால் நானே தான் நிற்கப் போகிறேன் என்று பிடிவாதமாக சொன்னார் காமராஜ்.

சாத்தியமூர்த்தியால் அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை.  சரி உன் இஷ்டப்படியே செய் என்று சொல்லிவிட்டார்.  எனவே காமராஜரும், அவருக்கு எதிராக சி.பி. சுப்பையாவும் போட்டி போடும்படி ஆயிற்று.  போட்டியில் காமராஜுக்கு 103 வோட்டுக்களும், சுப்பையாவுக்கு 100 வோட்டுக்களும் கிடைத்தன.  காமராஜ் மூன்று வோட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பதவி ஏற்றார்.  காமராஜுக்கு காரியதரிசியாக அமர்ந்து சத்தியமூர்த்தி துணைபுரிந்ததும் அந்த வருடம் தான்.

1919ல் அரசியல் வாழ்க்கையில் ஒரு சாதாரண தொண்டனாக விருதுநகரில் இருந்து புறப்பட்ட காமராஜ் 20 ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் தலைவராக வந்தது, காங்கிரஸ் வரலாற்றிலேயே ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது.

காமராஜ் தலைவராக இருந்தபோதிலும், தொண்டனாக இருந்தபோதிலும் சுதந்திரம், ஜனநாயகம், காந்தீயம் ஆகிய உயர்ந்த லட்சியங்களை ஒரு போதும் மறந்ததில்லை.  நியாயம், நேர்மை இவ்விரண்டுக்கும் மாறான கருத்துக்களை அவர் எப்போதும் ஜீரணம் செய்து கொண்டதும் கிடையாது.  நியாயம், கொள்கை என்று வரும்போது அவற்றை நிலைநாட்ட காந்திஜி, நேருஜி, பட்டேல் போன்ற பெருந்தலைவர்களோடு அவர் வாதாடத் தயங்கியதுமில்லை.

ஒரு சமயம் காமராஜ் தமிழக முதலமைச்சராக இருந்தபோது டாக்டர் சுப்பராயன் தம்முடைய மகன் மோகன் குமாரமங்கலம் ஹைகோர்ட் நீதிபதியாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டார்.  அவ்வாறு அவர் ஆசைப்பட்டதற்கு காரணம் மோகன் குமாரமங்கலம் பதவி காரணமாகத் தம்முடைய கம்யூனிஸட் கொள்கைகளை விட்டு விடலாம் என்று கருதினார்.   அப்பொழுது பிரதம நீதிபதியாக இருந்த ராஜமன்னார் அவர்களும் மோகன் குமார மங்களத்தை நீதிபதியாக நியமிக்க தம்முடைய சம்மதத்தைத் தெரிவித்து முதலமைச்சர் காமராஜுக்கு சிபாரிசுக்கு குறிப்புடன் ⁂பைலை அனுப்பி வைத்தார்.  காமராஜும் சுப்பராயனும் நெருங்கிய நண்பர்கள் தான்.  ஆனாலும் தாம் இந்த சிபாரிசை ஏற்று கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒருவர் நீதிபதியாக அமர்ந்தால் கோர்ட்டில் வழங்கப்படும் நியாயத்துக்கு அது இடையூறாகப் போய்விடும் என்பது காமராஜின் பயம்.  அத்துடன் குமாரமங்கலம் இளைஞராக இருப்பதால் சீக்கிரமே பிரதம நீதிபதியாக வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.  ஒரு கம்யூனிஸ்ட் பிரதம நீதிபதியாக ஆகும் அளவுக்கு வாய்ப்புத் தேடித் தரும் ஒரு சிபாரிசைத் தம்மால் அங்கீகரிக்க முடியாது என்று கண்டிப்பாக மறுத்துவவிட்டார்.  இந்த நிலைமையில் தலைமை நீதிபதி ராஜமன்னாரால் எதுவும் செய்ய இயலவில்லை.  தலைமை நீதிபதிக்கும் நீதிபதிகள் நியமன விஷயத்தில் கருத்து வேற்றுமை ஏற்பட்டால் அந்தப் பிரச்னையை ஆராய்ந்து முடிவு செய்யும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது.  அப்போது நேருஜி மந்திரி சபையில் பண்டிதபந்த் அவர்கள் உள்துறை அமைச்சராக இருந்தார்.  குமாரமங்கலம் நியமனம் சம்பந்தமான  ⁂பைல் பென்ஹத்திடம் போயிற்று.  பந்த்துக்கும் இந்த நியமனம் சரியில்லை என்றே பட்டிருக்க வேண்டும்.  ஆனாலும் நேருஜியிடம் இதை எடுத்து சொல்வதற்கு முன்னாள் பந்த் காமராஜை நேரில் சந்த்தித்துப் பேச விரும்பினார்.  அப்பொழுது வேறு காரியமாக டில்லிக்குப் போயிருந்த காமராஜிடம் இதைப்பற்றி விசாரித்தார் பந்த்.  

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரை ஹைகோர்ட் நீதிபதியாகப் போடுவதில் எனக்கு இஷ்டமில்லை.  நியாயம் கெட்டுப் போகும் என்று தம் கருத்தை எடுத்து சொன்னார் காமராஜ்.  பந்த்துக்கும் அது சரியாகவேப்பட்டது.  இது சம்பந்தமாக நேருஜியும் அப்பொழுது காமராஜரைப் பார்த்து[ பேசினார்.  காமராஜ் இதே கருத்தைத்தான் நேருஜியிடமும் எடுதது சொன்னார்.

சரி, மோகன் குமாரமங்கலத்தை நீதிபதியாகத் தானே போடக்கூடாது. அட்வொகேட் ஜெனரலாகப் போடுவதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று மேலிடத்தில் கேட்டபோது எனக்கு அதில் ஆட்சேபமில்லை என்றார் காமராஜ்.  
அட்வகேட் ஜெனெரலாக வந்தால் மட்டும் கம்யூனிஸ்ட் என்ற ஆட்சேபம் இல்லையா என்று திருப்பிக் கேட்டார்கள்.  
சர்க்கார் தரப்பில் வழக்காட வேண்டிய கேஸ்கள் எல்லாமே அட்வொகேட் ஜெனரலைக் கொண்டு தான் வாதாட வேண்டு என்பது கிடையாது.  வேறு வழக்கறிஞர்களிடம் கொடுத்தும் வாதாடலாம்.  அந்த உரிமை சர்க்காரிடம் தானே இருக்கிறது.  எனவே, வழக்குகளின் தன்மையைப் பொறுத்து அவ்வப்போது அந்தந்தக் கேஸை யாரிடம் கொடுப்பது என்பது பற்றிக் சர்க்கார் முடிவு செய்து கொள்ளலாமே என்றார் காமராஜ்.   

மோகன் குமாரமங்கலம் நீதிபதியாக வருவதிலோ அல்லது அட்வொகேட் ஜெனெரலாகா வருவதிலோ காமராஜுக்கு சொந்த முறையில் எந்தவிதமான ஆட்சேபமும் கிடையாது.  ஆயினும் நியாயம் என்று தம் மனதுக்கு பட்டதை நேரம் வந்தபோது அதை எடுத்து சொல்ல வேண்டியது அவருடைய கடமை ஆகிறதல்லவா. 1940ல் தனிப்பட்டோர் சத்தியாக்கிரகம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் சத்தியமூர்த்திக்கு சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி கிடைக்கவிருந்தது.  அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது சத்தியமூர்த்தியின் ஆசை.  இதுபற்றி அவர் மனத்தில் ஒப்புக்கு கொள்ளலாமா வேண்டாமா என்ற குழப்பம் இருந்திருக்க வேண்டும்.  சில பெருந்தலைவர்களை அணுகி துணைவேந்தர் பதவியை நான் ஒப்புக் கொள்ளலாமா என்று யோசனைக் கேட்டார்.  தாராளமாக ஒப்பு கொள்ளுங்கள் என்று சிலர் கூறினார்கள்.  காமரராஜ், இதை பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று கேட்டார்.  இப்போது உள்ள நிலையில் இதை நீங்கள் ஏற்று கொள்வது எனக்கு சரியாக படவில்லை.  காரணம் இப்போது நடப்பது பிரிட்டிஷ் ஆட்சி.  இந்த ஆட்சிக்கு எதிராக நாம் இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.  நம்முடைய சர்க்கார் ஏற்பட்டு, அந்த சர்க்கார் மூலமாக தங்களுக்கு இந்தப் பதவி கிடைத்தால் அது நமக்கு பெருமை என்றார் காமராஜ்.  
இது பொலிட்டிக்கல் அப்பாயிண்ட்மெண்ட் இல்லையே என்றார் சத்தியமூர்த்தி.
இருக்கலாம்.  ஆனாலும் சர்க்காரின் தொடர்பு இருக்குமே.  அத்துடன் தனிப்பட்டோர் சத்தியாக்கிரகம் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகப் போகிறது.  அதில் நீங்கள் கலந்து கொள்ளாமல் இந்த துணைவேந்தர் பதவியை ஏற்றுக்கொண்டால் தங்கள் அரசியல் வாழ்க்கை என்ன ஆவது என்று கேட்டார் காமராஜ்.
இதற்குப் பிறகுதான் சத்திய மூர்த்தி அந்த பதவியை ஏற்றுக் கொள்ளும் எண்ணத்தை கைவிட்டார்.
காமராஜிடம் இதை பற்றி நான் விசாரித்தபோது, அவருக்கு இந்தப் பழைய சம்பவங்களெல்லாம் நினைவில் தோன்றி மறைந்திருக்க வேண்டும்.  சத்தியமூர்த்தியை நினைத்து கொண்டு ஒரு முறை பலமாக சிரித்துவிட்டார் அவர்.  ஐயோ பாவம் சத்தியமூர்த்தி குழந்தை மாதிரி அவருக்கு ஒண்ணும் தெரியாது.  சின்னச் சின்ன பதவி என்றால் கூட அதை விடுவதற்கு மனம் வராது அவருக்கு. அதுக்கெல்லாம் ஆசைப்படுவார். எப்பவுமே நான் சொல்வேன், பதவின்னு வரப்போ அது மேல் ஆசைப்படாமல் இருந்தாத்தான் தப்பு செய்ய மாட்டோம்.  பதவி ஆசை வந்தா, அது அறிவைக் கெடுத்துடும்பேன் என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தார்.

(தொடரும்)




 
















 






































 
















Thursday, May 26, 2022

சிவகாமியின் செல்வன் 03

அந்தக் காலத்தில்  சத்தியமூர்த்திக்கும் காமராஜுக்கும் இருந்த அன்புக்கும் பிணைப்புக்கும் இணையாக இன்னொரு நட்பை சொல்லிவிட முடியாது.  காமராஜின் அரசியல் குரு சத்தியமூர்த்தி என்று தான் எல்லாரும் சொல்வார்கள்.  ஆனால் பொதுவான நிலை அதுவல்ல. காமராஜரே சில சமயங்களில் சத்தியமூர்த்திக்கு ஆசானாக இருந்ததுண்டு.  சத்தியமூர்த்தி வெள்ளை உள்ளம் படைத்தவர்.  ஆகையால் யாரையும் எளிதில் நம்பிவிடக் கூடியவர்.  அரசியலுக்கே உரித்தான சூழ்ச்சிகள், தந்திரங்கள், எதுவும் அறியாதவர்.  அதனால் சத்தியமூர்த்தியை யாருடைய சூழ்ச்சி வலையிலும் சிக்க விடாமல் எச்சரிக்கையோடு இருந்து காப்பாற்றிய பெருமை காமராஜுக்கே உண்டு.  அது மட்டுமல்ல, சாத்தியமூர்த்தியின் புகழ் அரசியல் உலகில் சுடர் விட்டுப் பிரகாசிப்பதற்கும் காமராஜே காரணமாயிருந்தார். 

காமராஜ் தம்மிடம் கொண்டுள்ள அன்பும், அக்கறையும் எந்தக் காலத்திலும் மாறாதவை, மாற்ற முடியாதவை என்பதை அறிந்து கொண்ட சத்தியமூர்த்தி, தம்முடைய அரசியல் வாழ்க்கையில் நெருக்கடி தோன்றிய நேரத்தில் காமராஜின் ஆலோசனையைக் கேட்டே எதையும் செய்து வந்தார்.

சத்தியமூர்த்திதான் காமராஜுடைய அரசியல் தலைவர் என்று காமராஜ் சொல்லிக் கொண்ட போதிலும், சத்தியமூர்த்தி தவறு செய்கின்ற போதும் திசை தப்பித் போகின்ற நேரங்களிலும் காமராஜ் அவருடைய ஆசானாக மாறி யோசனை கூறவோ, மீறிப் போனால் கண்டிக்கவோ ஒருபோதும் தவறியதில்லை. ஒரு சின்ன உதாரணம்: 

1940ல் சத்தியமூத்தி சென்னை நகரின் மேயராக இருந்த போது பூண்டி நீர்த் தேக்கத்துக்கு அப்போது சென்னை கவர்னராக இருந்த ஆர்தர் ஹோப் அஸ்திவாரக் கல் நாட்டினார்.  மேயர் என்ற முறையில் சத்தியமூர்த்தி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  அச்சமயம் காமார்ஜ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைலைவராக இருந்தார்.

வெள்ளைக்காரர்கள் பங்கு கொள்ளும் எந்த விழாவிலும் காங்கிரஸ்காரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று மேலிடம் அப்போது ஒரு கட்டுப்பட்டு விதித்திருந்தது.  சத்தியமூர்த்தியை நேரில் சந்தித்து இது பெரிய தவறு இல்லையா என்று கேட்டார் காமராஜர்.

ஆமாம் அதற்காக என்னை என்ன செய்ய சொல்கிறாய்.  நான் மேயர் என்ற முறையில் போயிருந்தேன் என்றார். செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுங்கள் என்றார் காமராஜ். வேறு வழி இல்லமால் தான் செய்தது தவறுதான் என்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தார் சத்தியமூர்த்தி.

அண்மையில் இந்த செய்தியை என்னிடம் கூறிய போது,  அப்புறம் என்ன செய்தீர்கள் என்று நான் கேட்டேன்.

இதை பற்றி மேலிடத்தில் அப்போது சத்தியமூர்த்தியின் பேரில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று என்னைக் கேட்டார்கள்.  மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கி வைத்திருக்கிறேன் என்று அவர்களிடம் சொன்னேன் என்றார் காமராஜ்.  சரி அந்த கடிதம் இப்போது எங்கே இருக்கிறது என்று கேட்டேன்.  என் வீட்டில் இருக்கிறது. எங்காவது பெட்டிக்குள் இருக்கும் தேடிப் பார்க்கணும் என்றார்.

சத்தியமூர்த்தியை நீங்கள் முதன் முதலாக சந்தித்தது எப்போது, நினைவில் இருக்கிறதா என்று கேட்டேன்.

1919ல் அவர் விருதுநகருக்குப் பொதுக் கூட்டத்தில் பேச வந்திருந்தார்.  அப்போது நான் ஒரு சாதாரண தொண்டன்.  அவரோடு அப்போது பேசவே முடியவில்லை.  அப்புறம் 4 வருஷம் கழித்துத்தான் அவரோடு நெருங்கிப் பழகவும், பேசவும் எனக்கு சந்தர்ப்பம் உண்டானது.

1923ல் திரு சி.ஆர். தாஸ் தலைமையில் சுயராஜ்ய பார்ட்டி ஆரம்பிச்சாங்க இல்லையா?  அப்பா அந்தக் கட்சியின் கொள்கைப் பற்றி விவாதிக்கிறதுக்காக முக்கிய தலைவர்கள் எல்லோரும் மதுரையில் கூடினாங்க. கே.ஆர். வெங்கட்ராமைய்யர் இல்லத்தில் அந்த கூட்டம் நடைபெற்றது.  இப்போது அவர் இல்லை.  நானும் அந்தக் கூட்டத்துக்குப் போனேன். சத்தியமூர்த்தி சுயராஜ்ய கட்சியின் கொள்கையை விளக்கி ரொம்பத் தெளிவாகப் பேசினார்.  காங்கிரஸ் சட்டசபைக்குப் போக வேண்டும் என்பதுதான் சுயராஜ்ய கட்சியின் கொள்கை.  அதுதான் சத்தியமூர்த்தியின் விருப்பமாகவும் இருந்தது.  அந்தக் கூட்டத்தில் பலர் சட்டசபைப் ப்ரவேசத்துக்கு எதிரான கருத்தை தெரிவித்தார்கள்.  நான்கூட அப்போது சட்டசபைக்குப் போகக்கூ டாது என்ற கட்சியைச் சேர்ந்தவனாகத்தான் இருந்தேன்.  

அப்புறம் சத்தியமூர்த்தியுடன் அடிக்கடி தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்வதும், காங்கிரஸ் பிரசாரம் செய்வதுமே என் முழு வேலை ஆயிற்று. 

அந்த காலத்தில்  திரு.ரங்கசாமி அய்யங்கார், திரு எஸ். சீனிவாச அய்யங்கார் இவர்களெல்லாம் ரொம்ப பிரபலமாயிருந்தாங்க.  காரணம் திரு ரங்கசாமி ஐய்யங்காருக்கு சொந்தத்தில் பத்திரிகை இருந்தது.  அதனால் பிரபலமடைய சுலபமாயிருந்தது. சத்தியமூர்த்திக்கு அத்தகைய வசதி எதுவும் இல்லாததால் அவர்களையெல்லாம் மீறிக் கொண்டு முன்னுக்கு வர முடியல.

முன்னுக்கு வந்தபோது அரசியல் தலைமையில் அவருக்கும், ராஜாஜிக்கும் இடையே போட்டி இருந்தது. போராட்டம், சிறைவாசம் என்ற போதெல்லாம் சற்றும் தயங்காமல் உற்சாகத்தோடு முன் வந்து நின்ற சத்தியமூர்த்தி பதவி என்று வரும் பொது மட்டும் அதைத் தானே அடைய வேண்டும் என்று எண்ணாமல் மற்றவர்களுக்கு வீட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொண்டிருந்தார். பதவி மீது சத்தியமூர்த்திக்கு ஆசை இல்லை என்பது அர்த்தமில்லை.  அவருக்கு விருப்பம் இருந்தும், தகுதி இருந்தும், சந்தர்ப்பங்கள் இருந்தும் அவ்வப்போது ஏற்பட்ட போட்டி காரணமாக அவருக்கு கிடைக்க வேண்டிய பதவிகள் கிடைக்காமல் போனது.  காங்கிரஸ் காரிய கமிட்டியில் அங்கம் வகிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டதுண்டு.  ஆனால் இது கிடைக்காமலே போய் விட்டது.  மந்திரி சபையில் இடம் பெற வேண்டுமென்ற அவருடைய விருப்பமும் நிறைவேறாமல் போனது.

1927ல் நடைபெற்ற சென்னை அசெம்பிளி தேர்தலில் காங்கிரஸ்காரர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு காங்கிரசுக்கு வெற்றி கிடைத்தது.  இதற்கு காரணம் சத்தியமூர்த்தி ஓய்வு இல்லாமல் இரவு பகலாகக் காரிலே சுற்றுப்பயணம் செய்து ஊர் ஊராகப் பிரசாரம் செய்ததுதான்.  அவருடைய பிரசாரந்தான் காங்கிரசின் வெற்றிக்கு முக்கிய காரணம்னு சொல்லணும்.  அந்த சமயம் ராஜாஜி காங்கிரசில் இருந்து விலகி இருந்தார்.

ராஜாஜி முதல் மந்திரியாக வரவேண்டும் என்பது சத்தியமூர்த்தியின் ஆசை.  ராஜாஜி முதல் மந்திரியாக வரவேண்டும் என்பதில் இந்து சீனிவாசனும், இன்னும் சிலரும் குறியாக இருந்தார்கள். இந்து சீனிவாசன் சத்தியமூர்த்தியை அணுகி, அவர் நிற்பதாக இருந்த சர்வகலாசாலைத் தொகுதியை ராஜாஜிக்கு வீட்டுக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.  சத்திய மூர்த்தி ராஜாஜிக்கு விட்டுக் கொடுத்தார்.

ஆனால் ராஜாஜி தேர்ந்து எடுக்கப்பட்டதும் அவருடைய மந்திரி சபையில் சத்தியமூர்த்திக்கு இடம் தரவில்லை.  கடைசி வரைக்கும் சத்தியமூர்த்திக்கு மந்திரி சபையில் இடம் உண்டு என்று சொல்லிக்கொண்டிருந்த ராஜாஜி அவரை மந்திரியாகப் போடாமலே மழுப்பி விட்டார்.

பத்திரிகையில் அந்திரிகள் பெர்த் பட்டியல் வந்தபோது அந்தப் பட்டியலில் சத்தியமூர்த்தியின் பெயரைக் காணாமல் எங்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தமாயிருந்தது. வருத்தப்பட்டு என்ன செய்வது.  பாவம், சத்தியமூர்த்தி ஒண்ணும் தெரியாத அப்பாவி.  அவருக்கு இது பெரிய ஏமாற்றம்.

எந்த போலீஸ்காரர்கள் காங்கிரஸ்காரர்களைத் தடியால் அடித்தார்களோ அதே போலிஸாரைக் கதர் குல்லாய்க்கு சலாம் போடும்படி வைக்கிறேன்னு சத்தியமூர்த்தி அடிக்கடி மீட்டிங்கில் பேசுவார்.  பேசியபடி தடியால் அடித்த போலீஸ்காரர்களை காங்கிரஸ்காரர்களுக்கு சலாம் போடவும் வைத்தார்.  ஆனால் அந்த போலீஸ்காரங்க கதர்க் குல்லாய் அணிந்த சத்தியமூர்த்திக்கு மட்டும் சலாம் போடவில்லை.  அந்த கவுரவத்தை சத்தியமூர்த்தி அடையாமல் போனது எங்களுக்கெல்லாம் பெரிய வருத்தம்தான்.

\உப்பு சத்தியாகிரகத்தின் போது திருச்சி, வேலூர், அலிபுரம் ஆகிய மூன்று சிறைச்சாலைகளில் தேசபக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.  அப்போது சிறையில் உள்ள தொண்டர்கள் ஒன்றுகூடி ஒரு தீர்மானம் செய்தோம்.

விடுதலையாகி வெளியே போனதும், சத்தியமூர்த்தி அவர்களையே தலைவராக வேண்டும் என்று நான் வெளியிட்ட யோசனையைத் தொண்டர்கள் அனைவரும் ஆமோதித்தனர்.

வெளியில் சென்றவுடன் மதுரையில் அரசியல் மகாநாடும் மாகாண காங்கிரஸ் கமிட்டி தேர்தலும் நடைபெற்றன.  சத்தியமூர்த்தியிடம் எங்கள் முடிவை சொன்னபோது அவர் சரி என்று சொன்னார்.  ஆனால் தலைவர் தேர்தல் நடைபெறுவதற்கு அரை மணி நேரம் முன்னதாக ராஜாஜியும் போட்டியிடுகிறார் என்று தெரிந்ததும் சத்தியமூர்த்தி போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.  அகில இந்திய சூழ்நிலையில் அது தவறான கருத்தை உண்டாக்கும் என்று சத்தியமூர்த்தி கருதியதே அதற்கு காரணம்.  சத்தியமூர்த்தி அப்போது தலமைப் பதவியை ராஜாஜிக்கு விட்டுக் கொடுத்தது மட்டும் இன்றி, ராஜாஜி தலைவராகத் தேர்ந்து எடுக்கப் பட்டதும் தாமே உபதலைவராக இருந்து வேலை செய்யவும் ஒப்புக் கொண்டார்.

1936ல் பொது தேர்தல் வந்த போது தேர்தல் பிரசாரத்துக்காக சத்யமூர்த்தியும் நானும் திருவண்ணாமலைப் பகுதியில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தோம்.  அதே சமயம் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் தேர்தல் நடைபெற இருந்தது.  திரு.குமாரசாமி ராஜா தலைமைப் பதவிக்குப் போட்டியிட்டதை காங்கிரஸ் கட்சியில் யாரும் விரும்பாததால் அவருக்கு எதிராக இன்னொருவரை இருத்த ஏற்பாடு செய்தனர்.  இந்த பிரச்சினையைத் தீர்த்து வைக்க உடனே மதுரைக்கு புறப்பட்டு வரும்படி தலைவர் சத்யமூர்த்திக்குத் தந்தி கொடுத்திருந்தனர்.  அதை கண்ட சத்தியமூர்த்தி என்னை பார்த்து, குமாரசாமி ராஜாதான் விட்டுக் கொடுக்கட்டுமே.  அவர் போட்டியிடவில்லை என்றால் பிரச்னை தீர்ந்துவிடும் அல்லவா.  நீ என்ன சொல்கிறாய்.  ராஜாவுக்கு தந்தி கொடுத்து ஓதுங்கிக் கொள்ள சொல்லலாமா என்று கேட்டார்.

அப்போதிருந்த நிலைமையில் குமாரசாமி ராஜா தலைவராக இருப்பதுதான் நல்லது என்று எனக்கு தோன்றியது.  ஆகையால், நாம் இருவரும் மதுரைக்கு சென்று ராஜாவையே மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்க ஏற்பாடு செய்யலாம் என் யோசனை கூறினேன்.  ஆனாலும் அது அவ்வளவு எளிதில் நடந்துவிடக் கூடிய காரியம் அல்ல என்கிற பயம் என் மனத்தில் இருந்தது.  தலைவரும், நானும் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்று கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம்.  சத்தியமூர்த்தி, அங்கத்தினர்கள் எல்லோரையும் அழைத்து என்னிடம் உங்களுக்கு பூரண நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டார். இருக்கிறது என்று அவர்கள் பதில் கூறியும் சத்தியமூர்த்திக்குத் திருப்தி ஏற்படாததால், இப்படிச் சொன்னால் போதாது மீனாட்சி சுந்தரேசுவரர் சாட்சியாக என்னிடம் நம்பிக்கை இருக்கிறது என்று கூறினால் தான் நம்புவேன் என்றார். சத்தியமூர்த்தியின் விருப்பப்படி குமாரசாமிராஜாவையே தேர்ந்தெடுத்தார்கள்.

1936ல் அக்டோபர் மாதம் சுற்றுப்பயணம் செய்த போதும், அதற்கு முந்திய வருஷங்களில் படேலும், ராஜேந்திர பிரசாத்தும் இங்கு வந்திருந்த போதுதான் சத்தியமூர்த்திக்குத் தமிழ் நாட்டில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை மேலிடத்தார் அறிந்து கொண்டார்கள்.

படேலும் அவருடைய மகள் மணிபென் படேலும் இங்கே வந்திருந்த சமயம், சத்தியமூர்த்தியும் அவர்களுடன் ரயிலில் பிரயாணம் செய்ய வேண்டி இருந்தது.  சத்தியமூர்த்திக்கு அப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தும் பயணத்தை ரத்து செய்யவில்லை.  அவர்கள் மூவரும் பயணம் செய்த ரயிலில் படேலுக்கு, அவர் மகளுக்கும் கீழ் பர்த்தை ரிசர்வ் செய்து விட்டு, சத்தியமூர்த்திக்கு மட்டும் மேல் பர்த்தில் இடம் போட்டிருந்தார்கள்.  அதைக் கண்ட படேல் தம் மகளை அப்பர் பர்த்தில் படுத்துக் கொள்ளச் சொல்லி, சத்தியமூர்த்திக்கு கீழே இடம் தரும்படி கேட்டுக் கொண்டார்.

அப்புறம் 1939 கடைசியில் மாகாண காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும், சத்தியமூர்த்தியும் போட்டியிட்டாங்க  இல்லையா?  அந்தப் போட்டியில் வகுப்பு வாதம் காரணமாக சத்தியமூர்த்தி தோல்வி அடைந்தார்.  அதனால் மனமுடைந்து போயிருந்த சத்தியமூர்த்தி, அன்று இரவு என்னைப்  பார்த்து காமராஜ் அடுத்த வருஷம் உன்னைத்தான் காங்கிரஸ் தலைவனாகத் தேர்தலுக்கு நிறுத்தப் போகிறேன்.  முள்ளை  முள்ளால்தான் எடுக்க வேண்டும்.  வகுப்பு வாதத்தைப் போக்க அது ஒன்றுதான் வழி.  நீ தலைவனாக இரு.  நான் உனக்கு காரியதரிசியாக இருந்து வேலை செய்கிறேன் என்றார்.

அதற்கு இப்போது என்ன அவசரம்? அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நான் பதில் கூறினேன்.

அடுத்த வருஷம் உன்னையேதான் நிறுத்தப் போகிறேன்.  இந்த முடிவு நிச்சயமானதுதான் என்று உறுதியாகக் கூறினார் சத்தியமூர்த்தி.  தாம் கூடியபடியே அடுத்த வருஷம் நடைபெற்ற தலைவர் தேர்தலில் என்னை நிறுத்தவும் செய்தார்.  பலத்த போட்டி இருந்தபோதிலும், சத்தியமூர்த்தியின் தலைமையில் ஊழியர்களின் ஆதரவுடன் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.  என்னுடைய வெற்றி சத்தியமூர்த்திக்குப் பெரு மகிழ்ச்சியை அளித்தது.  அந்த ஆண்டு நான் தலைவராக இருந்த போது, அவரே காரியதரிசியாக இருந்து, எனக்கு ஆலோசனை கூறி, என்னை பெருமைப்படுத்தியதை நான் எப்போதும் மறக்க மாட்டேன் என்றார் காமராஜ்.

அப்போதுதானே சி.பி. சுப்பையா உங்களை எதிர்த்து நின்று தோற்றுப் போனார் என்று கேட்டேன்.  ஆமாம், அந்த கதையை அப்புறம் சொல்கிறேன் என்றார் காமராஜ்.

(தொடரும்)