வாகன விபத்தில் பாதிக்கப் படுபவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து கீழ்கண்டவாறு நிவாரண உதவிகள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது:
337 இ.த.ச (ரூ 25000),
338 இ.த.ச (ரூ 50000),
304(அ) இ.த.ச (100000),
பொதுவாக விபத்தில் யாராவது உயிரிழந்தால் அவர் குடும்பத்தினரை காவல்துறையினர் தானாகவே அழைத்து நிவாரண உதவிகளை பெற்றுத்தர உதவி செய்கின்றனர்.
ஆனால்(போதிய விழிப்புணர்வு இல்லாததால்) விபத்தில் காயமோ, கொடுங்காயமோ, உயிர் இழப்போ ஏற்பட்டால் அரசு வழங்கும் நிவாரண உதவியை பெற்றுதருமாறு யாரும் உதவி ஆய்வாளருக்கு மனு அளிப்பதில்லை காவல்துறையினரும் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து இதற்காக மனுப் பெற முடிவவதில்லை
எனவே, 337,338,304(a)ipc வழக்குகள் போடப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவர் அனைவருக்கும் இது பொருந்தும் இதை செய்வதற்க்கு அந்த வழக்கின் எப்.ஐ.ஆர் ,காயச்சான்று , பாதிக்கப்பட்ட நபரின் ஆதார்(அ) வாக்காளர் அடையாள அட்டை ,மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டருகே வசிக்கக்கூடிய நபர்கள் யாராவது இருவருடைய அடையாள அட்டை self attested உடன் இவை அனைத்திலும் தலா இரண்டு நகல்கள் இணைக்கப்பட வேண்டும் மேலும் பாதிக்கப்பட்ட நபர் அரசு வழங்கும் நிவாரண நிதியை அரசிடம் இருந்து பெற்றுத்தருமாறு உதவி ஆய்வாளருக்கு ஒரு மனு கொடுக்க வேண்டும் இவை அனைத்தையும் விக்டிம் பன்டு ( victim fund) மனுவுடன் இணைத்து உதவி ஆய்வாளர் மற்றும் ஆய்வாளரிடம் கையொப்பம் பெற்ற உடன் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்க்கு அனுப்பி வைக்கப்படும் பின்பு அங்கிருந்து உடனடியாக கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் பின் உடனடியாக கோட்டாட்சியர் பாதிக்கப்பட்ட நபரை நேரில் அழைத்து பண உதவி வழங்குவார்.
தயவு செய்து இந்த தகவலை அதிகம் பகிரவும். கண்ணுக்குத் தெரியாத குடும்பத்திற்கு உதவ நம்மாலும் முடியும்.
மனு வழங்க காலக்கெடு இல்லை.
No comments:
Post a Comment