Pages

Thursday, April 25, 2024

ரகுராம்ராஜன் RBI முன்னாள் கவர்னர்

தன் மீதான ரகுராம்ராஜன் புகார் குறித்து நேற்று பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கமுடியாமல் ப.சிதம்பரம் பாதியிலேயே நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு கிளம்பினார்.

#நிருபர்: 

இந்திய ரூபாய் அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு நீங்கள் விற்றதாக RBI முன்னாள் கவர்னர்  ரகுராம்ராஜன் உங்கள் மீது புகார் கூறியுள்ளாரே?

#சிதம்பரம் 

உண்மை தான். இயந்திரத்தின் ஆயுட்காலம் முடிந்தமையால் அதை ஏலம் விடுவதற்காக டெண்டர் விட்டோம். பாகிஸ்தான் கம்பெனி காரன் அதிக தொகை குடுத்தான். வித்துட்டோம். 

#நிருபர்: 

பாகிஸ்தானில் நமது இந்திய ரூபாய் நோட்டுகள் கள்ளப்பணமாக அச்சடிப்பது தெரிந்திருந்தும் நீங்கள் அந்த இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றது சரியான செயலா?

#சிதம்பரம் 

யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. பாகிஸ்தான் நல்ல நாடு

#நிருபர் 

ரிசர்வ் வங்கி 99சதவிகித 500,1000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்ப வந்து விட்டது என்று சொன்ன நிலையில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ரூபாய் நோட்டுக்களை செல்லத்தக்கதாக மாற்றுவோம் என்று கூறியிருக்கிறீர்களே. அப்படி என்றால் கவர்னர் கூறியது போன்று 5 லட்சம் கோடி ரூபாயை நீங்கள் பாகிஸ்தானில் பதுக்கி வைத்தது உண்மை தானா?

#சிதம்பரம் 

காங்கிரஸ் ஆட்சிக்கு வரட்டும். உங்களை எல்லாம் என்ன செய்றேன்னு மட்டும் பாருங்க என்று கூறியவாறே கோபத்துடன் எழுந்து சென்று விட்டார். நிகழ்ச்சி பாதியிலேயே நிறைவடைந்தது.

பணமதிப்பிழப்பின் போது தடைசெய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் மொத்தம் 15லட்சம் கோடி. அவை அனைத்தும் திரும்பி வந்து விட்டதாக பொய் கூறினோம். ஆனால் உண்மையில் வந்தது 10 லட்சம் கோடிகளே.

நாங்கள் ஏன் பொய் சொன்னோம் என்றால் மீதமுள்ள 5 லட்சம் கோடிகளும் யார் வைத்திருக்கிறார்கள் அவர்களின் அடுத்த நகர்வு என்ன என்பதை கண்காணிக்க தான். 

இந்த உண்மையை வெளிக்கொண்டுவரவே மத்திய அரசுக்கும் எனக்கும் மோதல் போக்கு இருப்பது மாதிரி நாடகத்தை ஏற்படுத்தி நான் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை விட்டு விலகியது. 

மொத்த பணமும் எங்கிருக்கிறது என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன்.இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு புரோக்கரை பிடித்து 5 லட்சம் கோடியையும் பாகிஸ்தானில் பத்திரபடுத்தி வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அவை அனைத்தையும் செல்லத்தக்க நோட்டாக மாற்றிவிடுவார்கள்.

அதுமட்டுமல்ல. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மூலமாக நாசிக்கில் இருந்து இந்தியபணத்தை அச்சடிக்கும் மெஷினை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெற்றிருக்கின்றனர். இதற்காக ப.சிதம்பரத்திற்கு மட்டும் 10 கோடி ரூபாய் அன்பளிப்பு கிடைத்திருக்கிறது. 

இந்த மிஷினை வைத்து பாகிஸ்தானில் இந்திய பணத்தை சுமார் 8 லட்சம் கோடி ரூபாய்க்கு கள்ளபணத்தை அடித்து இந்தியாவிற்குள் மாற்ற திட்டம் போட்டிருந்தார்கள். ரகசிய தகவல் எனக்கு கிடைத்தது. அதை பிரதமர் மோடியிடம் எடுத்து கூறினேன். சற்றும் தாமதிக்காமல் 500,  1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்து விட்டார். வேறு யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு வேகம் உள்ளவர் அவர்.

அந்த 8லட்சம் கோடி ரூபாயும் நாட்டிற்குள் ஊடுருவியிருந்தால் இந்நேரம் சோமாலியாகவா மாறியிருக்கும்

ஆக கள்ளப்பணம் மொத்தம் 13 லட்சம் கோடி பணம் நாட்டிற்கு வெளியே தயாராக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அது மீண்டும் நாட்டிற்குள் வரும். நாடு வீழ்ச்சி அடையும்.

பணமதிப்பிழப்பு தொடர்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது

ரகுராம்ராஜன் 

RBI முன்னாள் கவர்னர் 1233

Sunday, April 14, 2024

பஞ்சு மாமாவும், பார்வதி மாமியும்

சோழன் எக்ஸ்பிரஸ் சரியாக காலை எட்டு மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு விட்டது.

ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டியில் பஞ்சு மாமாவும், பார்வதி மாமியும் அமர்ந்திருந்தனர். தஞ்சாவூரில் உள்ள இரண்டாவது பெண் வீட்டுக்கு செல்கிறார்கள். லக்கேஜ் அதிகம் இல்லை.

பார்வதி மாமிக்கு எழும்பூரிலேயே ஆனந்த விகடன், மங்கையர் மலர் இரண்டும் வாங்கிக் கொடுத்து விட்டார். ரயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மாமி அதில் மூழ்கி விட்டாள்.

மாமாவுக்கு அதில் இன்டெரெஸ்ட் இல்லை. ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டு, யூட்யூபில் இருந்து டவுன்லோடு செய்த எம்.எஸ்.ஜி வயலின் கச்சேரியை கேட்க ஆரம்பித்தார்.

செங்கல்பட்டு தாண்டியதும் வீட்டிலிருந்து கொண்டு வந்த மிளகாய்ப்பொடி தடவிய இட்லியையும் சாப்பிட்டாகி விட்டது.

மாமிக்கு டிபனுக்கு அடுத்தது காபி குடித்தால் தான் டிபன் சாப்பிட்ட திருப்தி ஏற்படும்...

"ஏன்னா...காபி வந்தா வாங்குங்கோ… நான் சித்த நேரம் விகடன் பாத்துண்டிருக்கேன்

"இந்த பேண்ட்ரி கார் காபி நன்னா இருக்காதுடி... திண்டிவனம் ஸ்டேஷன்ல வாங்கித் தரேன்..

"சரி"

வண்டி திண்டிவனத்தை அடையும்போது மணி 9.50.

வண்டி பிளாட்பாரத்தை அடையும் போதே தயாராக வாசலுக்கு போனார்.

நல்ல வேளை. ரெடியாக காபி வெண்டார் ஓர் ஆள் இருந்தான்.

"ரெண்டு காபி குடுப்பா"

முதலில் ஒரு காபியை மாமியிடம் கொடுத்துவிட்டு, மீண்டும் இரண்டாவது காபியை சீட்டில் வைத்து விட்டு, அவனுக்கு பணம் கொடுக்க பர்ஸை எடுத்தார். ஒரு 200 ரூபாய் நோட்டுதான் இருந்தது. அதை அவனிடம் கொடுத்தார்.

"சார் 20 ரூபாயா இல்லையா சார்.."

"இல்லையேப்பா"

அவன் பாக்கியை கொடுக்க, தன் பாக்கெட்டை துழாவினான். அதற்குள் வண்டி புறப்பட்டு விட்டது.

பாக்கெட்டை துழாவிக் கொண்டே வண்டியின் பின் ஓடி வந்தான். அதற்குள் வண்டி பிளாட்பாரம் எல்லையை கடந்து விட்டது. அதற்கு மேல் அவனால் ஓடிவர முடியவில்லை.

பஞ்சு மாமா சீட்டிற்கு திரும்பி, ஒன்றுமே நடக்காதது போல், காபியை உறிஞ்சி குடிக்க ஆரம்பித்தார்.

எல்லாவற்றையும் மாமி பார்த்துக்கொண்டு இருந்தாள்.

"என்ன 200 ரூபா போச்சா?"

"ஆமாம்.. அதுக்கென்ன இப்போ?"

"யாராவது அவனண்டை 200 ரூபாய் குடுப்பாளா?"

"அவன் பாக்கி தர ட்ரை பண்ணினாண்டி.. அதுக்குள்ள ட்ரெயின் கிளம்பிடுத்து.. அதுக்கு அவன் என்ன பண்ணுவான் பாவம்.." "போதுமே உங்க சமத்து... அவனை அப்டியே நம்பறேள் பாருங்கோ.. அங்க தான் உங்க அசட்டுத் தனம் நிக்கறது.."

"அவன் என்னை வேணும்னு ஏமாத்தினான்னு சொல்றயா?"

"இல்லையா பின்னே.. அவன் சும்மா பாக்கிய கொடுக்க வண்டி பின்னாடி ஓடி வரா மாதிரி ஸீன் போட்டிருக்கான்.. அதை கூட புரிஞ்சுக்க தெரியலையே உங்களுக்கு.."

"போனா போறது டி.. பாவம் ஏழை.."

"பணத்தை கோட்டை விட்டது இல்லாமே, அவனுக்கு வக்காலத்து வாங்கறேளா?"

"போதும்.. உன் ஆத்துக்காரனுக்கு சாமர்த்தியம் போறாது தான்... வாயை மூடிண்டு வா.."

இந்த சம்பாஷணையை வண்டியில் இருந்தவர்கள் அத்தனை பேரும் வேடிக்கை பார்த்தனர்.

அவர்களுக்கு இது ஏதோ சீரியல் பார்ப்பது போல் இருந்தது. பலர் மாமா அசடு தான் என்ற தீர்மானத்துக்கு வந்தனர்.

சிலர் 'இந்த மாமிக்கு ஆனாலும் வாய் ஜாஸ்தி... மாமாவை எப்படி மட்டம் தட்டுகிறாள்' என்று நினைத்தனர்.

வண்டியின் வேகம் அதிகரிக்க, எல்லோரும் இந்த சம்பவத்தை மறந்து, அவர்கள் முன்பு செய்து கொண்டிருந்ததை தொடர்ந்தனர்.

மாமா மீண்டும் கச்சேரியை தொடர்ந்தார். எம்.எஸ்.ஜி

"ஞானமு சகராதா" வாசித்துக் கொண்டிருந்தார். ஆனந்தமாக கண்ணை மூடி ரசித்ததில் அந்த 200 ரூபாயை மறந்தே போனார்.

அரை மணி நேரத்திற்கெல்லாம் விழுப்புரம் ஜங்க்ஷன் வந்து விட்டது. அது ஒரு ரிசர்வேஷன் கம்பார்ட்மெண்ட் என்று பாராமல், கூட்டம் முண்டியடித்துக் கொண்டு ஏறியது. எல்லோருக்கும் அவரவர் அவசரம். கூடவே ஒரு 15 வயதுப் பையனும் ஏறினான்.

அவன் அங்குலம் அங்குலமாக முன்னேறி, பஞ்சு மாமாவின் சீட் அருகில் வந்து விட்டான்.

"சார் திண்டிவனம் ஸ்டேஷன்ல நீங்க காபி குடிச்சீங்களா?"

"ஆமாப்பா"

"சார்.. இந்தாங்க உங்க 180 ரூபாய்.." என்று சொல்லி, ஒரு நூறு ரூபாய் நோட்டையும், நான்கு 20 ரூபாய் நோட்டுகளையும் அவர் கையில் திணித்தான்.

அவருக்கு சட்டென்று ஒன்றும் புரியவில்லை.

"சார்.. நீங்க காபி வாங்கினீங்களே, அவர் பையன் தான் சார் நானு. இது சகஜமா அடிக்கடி நடக்கும் சார். திண்டிவனத்துல ட்ரெயின் ஒரு நிமிஷம் தான் நிக்கும்.. அதனால சில பேருக்கு பாக்கி சேஞ்ச் குடுக்க முடியாம போயிடும். தினமும் கொஞ்சம் பணத்தோட விழுப்புரம் வந்துடுவேன். அப்பா திண்டிவனத்தில் ட்ரையின் புறப்பட்ட உடனே போன் பண்ணி கம்பார்ட்மெண்ட் விவரம் சொல்லிடுவார். நான் இங்கே ஏறி பாக்கி சில்லறை குடுத்துட்டு பண்ருட்டில இறங்கி திரும்பி விழுப்புரம் போயிடுவேன் சார்" என்றான் அந்த பையன்.

"உங்கப்பா போன் நம்பர் குடுப்பா"

"இதோ சார்…"

"அய்யா.. உங்க பையன் என் பாக்கி 180 ரூபாயை திருப்பி குடுத்துட்டான்... ஆனா நான் பேசறது அதுக்காக இல்லை... அவனுக்கு நேர்மையை நீங்க கத்துக் குடுத்திருக்கீங்க பாருங்க.. அதுக்காக உங்களை பாராட்டியே ஆகணும்... அதுக்காக தான் போன் பண்ணேன்.."என்றார்

"ரொம்ப நன்றிங்க சாமி.. நான் அஞ்சாங்கிளாஸ் தான் படிச்சிருக்கேன்.. ஆனா இந்த நேர்மையும் ஒழுக்கமும் இருக்கறதுனால தான் நிம்மதியா வாழ்க்கை நடத்த முடியுதுங்க சாமி... அதான் இதை என் ரெண்டு பசங்களுக்கும் சொல்லி குடுத்திருக்கேன்"

பஞ்சு மாமாவுக்கு நெஞ்சமெல்லாம் நிறைந்தது. கண்களில் நீருடன் அந்தப் பையனை தட்டிக் கொடுத்தார்.

பார்வதி மாமி, தன் கணவனை இப்போது பார்த்த பார்வையில் பெருமை நிறைந்திருந்தது.

எல்லோரும் எல்லோரையும் எப்போதும் ஏமாற்றுவதில்லை

நம்மை சுற்றி நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்...

நம்மில் சிலர் தான் அவர்களையும் சேர்த்து சந்தேகத்தோடு பார்க்கின்றோம்..

Sunday, February 11, 2024

இன்னும் 5 வருடத்தில் எந்த தொழிலும் இருக்காது

இன்னும் ஐந்து வருடத்தில் எந்த தொழிலும் இருக்காது.  கூர்ந்து  கவனித்துப் படியுங்கள்புரியும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று.

தவறாமல் படியுங்கள்....

GOLDEN AGE COMING SOON?

2025ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்?

என்னென்ன தொழில்கள் இருக்காது ??

நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம நம்மள மாத்திக்கணும்...!

1998 ல தொடங்கின Kodak (Photo) நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது...!

இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல...! வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்க முடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல.

பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்!.

தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, *STD & ISD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு??*

எலக்ட்ரானிக் டைப்ரைட்டர், பேஜர், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்,  ரேடியோ, டேப்ரெக்கார்டர், விசிஆர்,  வாக்மேன், டிவிடி  பிளேயர் என சொல்லி கொண்டே போகலாம். குண்டு பல்பும்,  டியூப் லைட்டும் போய் CFL பல்பும் போய், இப்ப LED பல்பு தான்.

எதனால ? ஏன் இப்படினு கேட்டா?

டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. சிம்பிளா சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள். மனுஷ மூளையைவிட திறமையா செயல்படும் இதுங்கதான் மேலதிகமான காரணமா இருக்கும்.!

உதாரணத்துக்கு சொல்லணும்னா...சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம, 'Bharat Matrimony' வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக்கொடுக்குது...கமிஷனோட...! இல்லீங்களா..?

Uber'ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது..!

இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும் ?

அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்:  உங்களுக்கு ஒரு சட்டச்சிக்கல் வருது...என்ன பண்றதுனு தெரியலை...! என்ன செய்வீங்க? ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்பீங்க...! சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவரு அவருடைய Fees வாங்குவாரு..! இல்லையா...!

இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ? உங்களோட சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே,  Section-னோட சரியான விவரங்கள Probabilities-டன் அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா?  நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக்கிட்டு தானே போகணும்...! வக்கீலுக்கே தெரியாத பல ஜெயித்த கேஸ்கள் பற்றி கம்ப்யூட்டர் தெளிவாக சொல்லும்.

IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு.  ஒரு லாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்ட சிக்கலுக்கு தீர்வு சொல்லமுடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது..!

அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..! அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ? இது ஒரு உதாரணம்தான்!!!!

ஆடிட்டர்கள் வேலையை clear tax.in,  taxman.com போன்ற இணையதளம்!,

டாக்டர்கள் வேலையை Ada app!,

ப்ரோக்கர்கள் வேலையை magic bricks, quickr, 99acres, இணையதளம்!,

கார் விற்பனையை carwale.com, cars24 இணையதளம் சேவை இலவசமாக தருகின்றன.

UBER OLA வந்தபிறகு சொந்தகார் தேவையில்லை.

ஆன்லைனில் சாப்பாடு முதல் துணிமணிவரை கிடைப்பதால் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் ஈயடிக்கும்.

நெட்பிளிக்ஸ் வந்தபின் மேற்கத்திய நாடுகளில்  தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் இல்லை.

இப்பவே இந்திய லோக்கல் ரயில் டிக்கெட் கூட UTS app மூலம் எடுத்து கொள்ளலாம்.

 80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை..கம்ப்யூட்டரே பாத்துக்கும்.  'Subject Matter Experts'னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பொழைக்க முடியும்..!

2025 ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்.

2021 ஏப்ரல் மாதம் கூகுள் தானியங்கி சைக்கிள் விற்பனைக்கு வருகிறது.

அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா...ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்!.

அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்: யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. 'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு எடத்துக்கு போகணும்னா.. உங்க செல்லில் இருந்து.. ஒரு மிஸ் கால்.. இல்ல..SMS...! அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்க  முன்னாடி தானா ஒரு கார் வந்து நிக்கும். நீங்க போகவேண்டிய எடத்துக்கு சமர்த்தா கொண்டுபோய் விட்டுடும். கிலோமீட்டருக்கு இவ்வளோனு நீங்க காசு கொடுத்தா போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.

இதனால என்னவாகும்ன்னா...அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான்.  சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம். 'Accident' ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் கனரக வாகனங்களின் விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்.

Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி  கார்கள் இருக்கும்

எல்லா மனிதர்களுக்கும் எஜமான் கூகுள் போன்ற ஒரு நிறுவனம்தான். இப்போதே கூகுளுக்கு  நீங்கள் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியும். உங்கள் சிந்தனையை,  நீங்கள் எடுக்கும் முடிவுகளை தீர்மானம் செய்வது கூகுள்தான்.

எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10 -15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.

இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நீங்க நெனைச்சா..? உங்க நினைப்பை மாத்திக்குங்க... இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்.. குறிப்பா சீனா & இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு.  15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா??

சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?

முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லனா கூகுளை கேளுங்க...! அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு.

அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்ம அடி வாங்கும்.

ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும். சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்.

விவசாயம்: இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள். நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்.

இன்னும் சொல்லப்போனால் சாப்பாட்டுக்கு மாற்றாக மாத்திரைகள் வந்து விடும். விண்வெளி வீரர்கள் வானில் இருக்கும் பொழுது மலஜலம் கழிக்க முடியாது. எனவே அவர்களுக்கு  மாத்திரை தான் உணவு.

காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ.

Moodies' ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது.. 2022 ல நீங்க பொய் சொல்றீங்களா, இல்ல உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும். யாராலயும் ஏமாத்த முடியாது.

இப்பவே கூகுள் அசிஸ்டண்டும் Alexa வும், Siriயும், வேலைக்காரர், உதவியாளர், செகரட்டரி வேலைகளை செய்கிறது.

இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012 ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.

Tricoder - X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்டுக்கு வருது. உங்க செல்போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும். உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சுக் காத்தை அலசும். உங்க உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிப்புடும். அப்புறம் என்ன 2035ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி. டாக்டர்கள் *Clinic* வைக்கத் தேவையில்லாம, Online -ல யே ஒரு Op - ய Treat பண்ண முடியும். In-patient-க்குத்தான் Hospital .

மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றத்திற்கு ஏற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ள மட்டுமே நம்மால் முடியும்.

நமது வாரிசுகள் படித்த பின் வேலைக்கு சென்று சம்பாதிக்க இப்போதைய படிப்புகள் ஒன்றும் உதவாமல் போகலாம்.

கடந்த நூறு வருடங்களில் நடந்ததை விட அதிவேக பாய்ச்சல் முன்னேற்றம் அடுத்த பத்தாண்டுகளில் நடக்கும்.

சந்திக்க தயாராவோம். 

எதிர்காலம்  நம் கையில் இல்லை.  

கடந்த காலமும் நிகழ்காலமும், 

நம் கையிலா இருந்தது என்கிறீர்களா..?

Friday, February 09, 2024

கடவுளைப் பற்றி காமராசர்

கடவுளைப் பற்றி காமராசர்..

ஒரு செய்தியாளர் கேட்க அவர் சொன்னது.........

“நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா?” என்று கேட்டேன்.

அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம்பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட்டான் நம்மாளு. 

கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிக்கிட்டு, நாக்கை நீட்டிக் கிட்டு தான் இருப்பாரா?. அரேபியாவிலே இருக்கிறவன் “அல்லா” ன்னான், ஜெருசலத்தல இருக்கிறவன் “கர்த்தர்” ன்னான், அதிலேயும் சில பேரு மேரியக் கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு ‘டெனாமினேஷன்’ உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமியச் சொன்னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடிமக்களான தமிழர்கள் காத்தவராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் வந்து இவன் கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்?. அவனவனும் அவனவன் இஷ்டத்துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான். காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் தி . மு . க . மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி.யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான். மதம் மனிதனுக்குச் சோறு போடுமா?, அவன் கஷ்டங்களப் போக்குமா?. இந்தக் குறைந்த பட்ச அறிவு கூட வேண்டாமா மனுசனுக்கு? 

உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே!!! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே!!!

இப்படியெல்லாம அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்?”

தலைவர் தெளிந்த நீரோடை மாதிரி பேசிக் கொண்டே வந்தார். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்தமான முடிவை அவர் வைத்திருப்பதைப் பார்த்து நான் வியந்தேன்.

“நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே, அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே?” என்று வினாத் தொடுத்தேன்.

தலைவர் குலுங்கக் குலுங்கச் சிரித்தார். “ 

டேய் கிறுக்கா, நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்?. ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன். அதையெல்லாம் நம்மாளு கடவுளாக்கிட்டேன்னேன்!!!. இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் ‘கட்அவுட்’ வைக்கிறானில்லையா, அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப்பட்ட ராமனுக்கும் ,

கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிப்புட்டான். அந்தப் புத்தங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற விசயங்கள எடுத்துக்கணும், ஆசாமிய விட்டுப்புடணும். காலப்போக்குல என்னாச்சுன்னா, லட்சக்கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி. அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க களவாணிப் பசங்க. புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித் தான் நம்ம சனங்கள அடிமையா ஆக்கி வச்சிருக்கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான், நவராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூசை பண்றான். விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை சனங்களையும், பாமர சனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான். 

நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல, எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல, புதுசு கட்டுனதுமில்ல. பொங்கல் மட்டும் தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம சலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்” என்று விளக்கினார்.

“மதம் என்பதே மனிதனுக்கு அபின், அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடு தான் போலத் தோணுதே?” என்று ஒரு கேள்வியைப் போட்டேன் .

தலைவர், “நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விசயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா?, ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு , மூக்குத்திக்குக் கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம், ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலாமில்லையா?, அதையெல்லாம் செய்ய மாட்டான். சாமிக்குத்தம் வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான். மதம் மனிதனை பயமுறுத்தியே வைக்குதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன்” என்றார்.

கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா?, இதிலேருந்து எப்போ விலகுனீங்க?” இது நான்.

“சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூசை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930-க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன். அவர் மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுக்கிட்டேன். அப்புறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போயும் போயும் கடவுள், தலை முடியத்தானா கேக்குறாரு?, எல்லாம் பார்பர் ஷாப் (Barber Shop ) காரன் செட்-அப் அப்புடீன்னு சிந்திச்சேன், விட்டுட்டேன். ஆனா , சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா?” என்று கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.

“அப்படியானா, மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே, அதப்பத்தி?” என்று கேட்டேன்.

“அடுத்த மனுசன் நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறது தான் பிரார்த்தனை. இதுல நாம சரியா இருந்தா, தெய்வம்னு ஒன்னு இருந்தா அது நம்ம வாழ்த்தும்னேன்!!!”

காமராசர் என்கிற அந்த மனிதாபிமானி என் மனத்தில் அந்த நிமிடமே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார்.

சட்டென்று காரை நிறுத்துகிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லாமல் நடந்து போன சிறுவர்களைப் பார்த்து “ஏன் பள்ளிக்கூடம் போகலியா?” என்கிறார். அவர் இவ்வளவு நேரம் பேசிய பேச்சின் விளக்கம் எனக்குக் கிடைத்தது விடுகிறது.

Friday, February 02, 2024

அயோத்தியா செல்ல நினைப்பவர்கள்

அயோத்தியா மட்டும் செல்ல நினைப்பவர்கள்...

அயோத்தியை தலை நகராகக் கொண்டு கோசல நாட்டை ஆட்சி செய்ததாக வால்மீகி எழுதிய இராமாயண இதிகாசம் கூறுகிறது.

ஒவ்வொரு திங்கள் அன்றும் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தியா ரயில் செல்கிறது . சென்னை எழும்பூர் நண்பகல் 12 மணிக்கு வருகிறது . 

ரயில் எண் 22613 RMM AYC சரியாக புதன் கிழமை காலை 9 மணிக்கு செல்கிறது.

அயோத்தியா தாம் என்ற ரயில் நிலையம் இறங்கவும் அயோத்தியா கன்டோன்மென்ட் கடைசி ரயில் நிலையம் இறங்கினால் 15 km மீண்டும் வர வேண்டும்.அயோத்தியா தாம் இறங்கி நேராக சரயு காட் (ராம் காட்) 2 km நடந்து தான் வர வேண்டும்.அங்கு குளித்து விட்டு மீண்டும் வந்த வழியே 1.5 km திரும்பினால், அனுமான் காரி என்னும் அனுமான் கோட்டை காவலாக  இருக்கும் கோவிலை அடையலாம்.50 படிக்கட்டுகள் ஏறி ஹனுமான் தரிசனம் செய்து அங்கிருந்து வெளியே வந்து 500 மீ தொலை உள்ள ஶ்ரீ ராம் ஜென்ம பூமி  நுழைவு வாயிலை அடையலாம்.

பெரிய luggage bag இருந்தால் போலீஸ் checking  முன்பே வலது பாகத்தில் locker  அறை உள்ளது. அங்கு உங்கள் பொருட்களை பாதுகாப்பாக (மொபைல், watch தவிர) வைத்து செல்லலாம். 

உள்ளே சென்றவுடன் இலவச  பொருள் வைப்பரை கவுண்டரில் உங்கள் சிறிய bag, hand bag, இடுப்பு  belt, mobile, watch முதலியவைகளை வைத்து விட்டு செல்ல வேண்டும். (பொருள் வைக்க குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டும் )

மீண்டும் உள்ளே  பாதையில் சென்றவுடன் , ஒருவர் பின் ஒருவர் கணக்கில் இரண்டு வரிசையாக எறும்பு சாரை போல் இடிபாடு இல்லாமல் நடந்து செல்லலாம்.200 மீ நடந்தால் கோவில் முன் மண்டபத்தில் இருந்தே ஶ்ரீ பால ராமனை தரிசித்து கொண்டே அருகில் செல்லலாம். சுமார் 20  metre தொலைவில் இருந்து ஶ்ரீ ராமனை கண் குளிர தரிசனம் செய்து வெளி வரலாம்.

பூந்தி அல்லது சர்க்கரை கற்கண்டு பிரசாதமாக கொடுக்கிறார்கள்.

வெளி வரும் வழியில் purse, mobile, bag போன்ற பொருட்களை பெற்று கொண்டு நுழைவு வா அடையலாம்.பிறகு மீண்டும் அனுமான் காரி என்னும் கோவில் அருகே வந்து தசரதன் மாளிகை தரிசனம் செய்யலாம்.இங்கு தான் ஶ்ரீ ராமன், லட்சுமண், பரதன், சத்ருகன் ஆடி பாடி விளையாடிய உப்பரிகை பார்க்கலாம்.

அங்கிருந்து வெளி வந்து வலது பக்கம் திரும்பி 50 மீட்டர் நடந்தால் ஒரு பழைய வீட்டில் தசரதன் புத்திர காமேஷ்டி யாகம் செய்த இடம் தரிசிக்கலாம் 

பிறகு மீண்டும் தசரதன் மாளிகை வழியாக  பக்க வாட்டு சந்தில் நுழைந்து பின் புறம் சென்றால் ஜனக மஹாராஜா சீதைக்கு சீதனமாக கட்டி கொடுத்த மாளிகை காணலாம்.வழி எல்லாம் இப்போது அன்னதானம் செய்கிறார்கள்.வழியில் எல்லாம் மடம், அறைகள் உள்ளது.

முன்பதிவு செய்து விட்டு செல்லலாம்.

ஒவ்வொரு புதன் கிழமை இரவும் 11 மணிக்கு அயோத்தியா கன்டோன்மென்ட் இருந்து சென்னை அல்லது ராமேஸ்வரத்திற்கு ரயில் Undergraduate. *22614 AYY RMM* 

Lucknow வந்தும் சென்னை  திரும்பலாம்.

 சீத்தா ராம் பியாஸ் குஞ் தங்கும் விடுதி சூடு தண்ணீர் , கம்பளி, விசாலமான அறைகள் உள்ளது.தொலை பேசி எண் 9532065447

அயோத்தியில் உள்ள நாட்டுக்கோட்டை நகரச் சத்திரம் இது நாட்டுக்கோட்டை நகரத்தாரால் உருவாக்கப்பட்டது. இதன் உள்ளே ஒரு இராமர் கோவில் உள்ளது இது நாட்டுக்கோட்டை நகரத்தார்களால்  1885இல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.தமிழர் கட்டிய கோவில் என்பதால் இது தமிழர்களின் இராமர் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு தமிழர்கள் அனைவரும் தங்கலாம். மூன்று வேளையும் தமிழ் நாட்டு உணவுகள் கிடைக்கும்.

அயோத்தியில் அவதி மொழி, இந்தி மற்றும் உருது மொழிகள் பேசப்படுகிறது.

Wednesday, January 31, 2024

துவாரகா விஜயம் ~ Dwarka Visit

துவாரகா செல்ல வேண்டும், ஸ்ரீ கிருஷ்ணனை காண வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் சில வருடங்களாகவே மனதில் இருந்து கொண்டு தான் இருந்தது.    

ஜனவரி 2024ல் எப்படியும் போய்த்தான் தீர வேண்டும் என்ற முடிவிற்கு வந்து, மும்பை > துவாரகா ஆன்லைன் டிக்கெட் புக் செய்ய நினைத்தால், பிப்ரவரி கடைசி தேதி வரை எல்லா ரயிலிலும் முன்கூட்டியே பதிவாகி இருந்தது.  ஒரு வழியாக பாந்த்ரா டெர்மின்ஸ்சில் இருந்து Jamnagar வரை செல்லும் எக்ஸ்பிரஸ்ஸில் 22ம் தேதிக்கும்  அதே ரயிலில், திரும்பி வருவதற்கும் 26ம் தேதிக்கு பதிவு செய்தோம் 3AC கோச்சில்.  

22ம் தேதி இரவில் 8.15க்கு ரயில் Jamnagar நோக்கி புறப்பட்டது. மறு நாள் பகல் 2.40க்கு ரயில் Jamnagar வந்து சேர்ந்தது.  அங்கிருந்து, ஆட்டோவில் நகர பேருந்து நிலையம் வந்தோம்.  GSRTC பஸ் புறப்பட இன்னும் நேரம் ஆகும் என்றார்கள்.  அருகிலேயே தனியார் பஸ் (Shiv Shakti Travels @ Rs.150 per head) கிளம்ப தயாராக இருந்தது.  புக் செய்து டிக்கெட் வாங்கி ஏறி அமர்ந்தோம்.   மாலை 5.45க்கு Jamnagar வந்து அடைந்தது. ஆன்லைனில் 3 nights புக் செய்து இருந்த Vrundaavan ரூமில் வந்து சேர்ந்தோம். 

(Sri Vrundaavan Guest  House, Home Guard  Road, Dwarka. Guajarat. Mr. Pareshbhai Vayeda ~ Contact No. 6354111099 / 8160365440. Rent Rs 500/- per night.)  

குளித்து, உடனே அருகில் இருந்த Sri Dwarkadeesh Temple ~ Jagat Mandir கிருஷ்ணன் கோவிலுக்கு செல்ல தயாரானோம். மொபைல் போன் உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் வரிசை தனித்தனியே இருந்தது.  தரிசனம் முடிந்து குடும்பத்தாருடன் சேர்வது சிறிது சிரமமாக இருக்கிறது. காரணம், தரிசனம் முடிந்ததும் வெளியேறும் வழி இருபாலருக்கும் தனித்தனியாக இருக்கிறது. தொடர் விடுமுறையின்  காரணம், கோவிலில் நிறைய கூட்டம். பெண்களின் வரிசை படுவேகமாக நகர்ந்து சென்றது.  ஆண்கள் வரிசை அப்படியே நின்று கொண்டிருந்தது.  மனித ரூபத்தில் தெய்வம் போல யாரோ ஒருவர் வந்து "இதோ இந்த வழியாக செல்லுங்கள், சீக்கிரம் தரிசனம் கிடைக்கும்" என்று சொன்னார்.  கூட வந்தவர்களும் அவர் சொன்ன வழியே சென்று சுலபமாக தரிசனம் செய்தோம்.  நன்றி சொல்ல நினைத்து தேடினால் அந்த மனித ரூபர் சென்ற தடயம் தெரியவில்லை யாருக்கும். வரிசையில் 30 நிமிடத்திற்கு மேல் நின்று கொண்டிருந்தபோது, வழி  சொன்ன அவர் யார்  ஒரு மனமார்ந்த நன்றி கூட சொல்லாமல் ஸ்ரீ கிருஷ்ணனை காண ஓடிபோனோமே என்று நினைத்து, ஆரத்தி தரிசனம் கண்டோம், கண்களில் நீர் மல்க.  திரும்ப மனம் இல்லாமல் கோவிலில் இருந்து ரூமுக்கு வரும் வழியில் இரவு சாப்பாடு முடித்துக்கொண்டு, மறுநாள் Dwarka sight seeing செல்ல தனியார் டூரிஸ்ட் பஸ்ஸில் டிக்கெட் புக் செய்தோம். பஸ்சில் நபர் ஒருவருக்கு டிக்கெட் 260/- ஆகிறது. 8 பேர் கொண்ட Share Autoவில் 250/- வாங்குகிறார்கள்.   

பின்னர் எங்கள் ரூமில் வந்து உறங்கி காலைக்கடன்களை முடித்து விட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு பஸ்ஸில் அமர்ந்தோம் Dwarka sight seeing செல்ல. பேசிக்கொண்டிருக்கும்போது travels owner "நீங்கள் இவ்வளவு தூரத்தில் இருந்து வந்து இருக்கிறீர்கள், அதனால் கண்டிப்பாக சோம்நாத் சென்று வாருங்கள் சிவபெருமானை தரிசிக்க" என்று சொன்னார். உடனே முடிவெடுத்து மறுநாள் சோம்நாத் செல்ல டிக்கெட் புக் செய்தோம் அவர்களிடமே. ஒரு நபருக்கு 270/- வாங்குகிறர்கள். 

Dwarka  sight  seeing covers the  following places: 

1. நாகேஸ்வர் 2. கோபி தலாவ் 3. பேட்  துவாரகா 4.ஷிவ்ராபுர் பீச் 5. ருக்மிணி கோவில் போன்ற இடங்களுக்கு அழைத்து சென்றனர்.  

Dwarka  sight  seeing முடித்துவிட்டு மாலை 6 மணிக்கு திரும்பி வந்தோம் எங்கள் இருப்பிடத்திற்கு. நேரம் இருந்ததால், மீண்டும் கிருஷ்ணன் கோவிலில் நடைபெற உள்ள 7.30 மணி ஆரத்தியை காண வேண்டி சென்றோம்.  அதே கூட்டம். கண்குளிர கண்டு கொண்டோம் ஸ்ரீ கிருஷ்ணனை திரும்பி வர மனமில்லாமல்.  அருகில் உள்ள வேறு சில கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்து விட்டு, இரவு எங்கள் ரூமிற்கு திரும்ப இரவு 9 மணி ஆகிவிட்டது.  மறுநாள் நாங்கள் சோம்நாத் செல்வதை  room ownerக்கு எடுத்து சொல்லி ஒருநாள் ரூம் புக்கிங் cancel செய்வதாக சொன்னோம். அட்வான்ஸ் திருப்பி தருவதற்கு ஒத்துக்கொண்டார்கள். 

காலைக்கடன்களை முடித்து 8 மணிக்கு travels  பஸ்ஸில் அமர்ந்தோம் சோம்நாத் செல்ல. 238 கிமீ தூரத்தை சென்று அடைய 4/5 மணி நேரமாகும். ஒவ்வொரு 2மணி நேரம் தொடர் பயணத்திற்கு பிறகு 15 / 20 நிமிடம் எங்காவது நிறுத்தி பிறகு பயணம் தொடர்கிறது.  மதியம் 1.30 மணிக்கு சோம்நாத் சென்று அடைந்தது எங்கள் பஸ்.

பஸ் நின்ற இடத்தின் அருகிலேயே SHREE SOMNATH TRUST - PRABHAS PATAN என்ற விளம்பர பலகையை கண்டு உள்ளே சென்று ரூம் புக் செய்தோம். Advance Rs .750/- கட்டினோம். 3 bed ஒரு ரூமில். 24மணி நேரமும் Hot water வசதி, கம்பளியுடன்.  உடன் தயாரானோம் சோம்நாத் கோவில் போக. அடுத்த 10வது நிமிடத்தில் கோவில் வளாகத்தில் இருந்தோம்.  மொபைல், கை பை எடுத்து செல்ல அனுமதி இல்லை கோவிலுக்குள். வெறும் கையுடன் தான் உள்ளே அனுமதிப்பார்கள். அதிக கூட்டம் இல்லாததால் நல்ல தரிசனம் கிடைத்தது. திங்கள்கிழமை சிவபெருமானை தரிசிக்க கூட்டம் அதிகமாகும் என்று சொல்கிறார்கள்.  கோவிலை சுற்றி கடற்கரை. பார்க்க ரம்மியமாக இருந்தது. இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை Light  & Music Program நடக்கிறது. ஒரு நபருக்கு Rs. 20 கட்டணம் உண்டு. அங்கிருந்து Triveni Sangam வந்து சேர்ந்தோம். Hiren, Kapila & Saraswati என்ற மூன்று நதிகள் சங்கமம் ஆகும் அருமையான இடம்.

அருகில் உள்ள கடைவீதி வழியே வேடிக்கை பார்த்து, தேவையானதை வாங்கிக்கொண்டு ரூமிற்கு 7 மணி அளவில் திரும்பி வந்தோம். வரும்போது Receptionist சொன்னார், "7.30 மணிக்கு Dinner ரெடி ஆகும்" என்று. விலை Rs. 70/- மட்டுமே.

பணத்தை செலுத்திவிட்டு டோக்கன் வாங்கினால், அங்கு உள்ள system  & cleanliness பார்த்ததும் நமது நினைவிற்கு வருவது Shirdi  & Thirupathi தான். 

டைனிங் ஹால் டைம்: 

Morning 6.30 ~ 10.00

Lunch  11.30 ~ 3.00

Dinner  7.30 ~ 11.00

The above menu is unlimited all time. We had dinner with  chapathi, rice, curry, poriyal kichadi & One  big  glass butter milk @ Rs.5/-extra.

நாங்கள் தங்கி இருந்த இடத்திற்கு பின்னால் தான் GSRTC பஸ் புறப்படும் இடம். மறுநாள் காலை 7 மணிக்கு Jamnagar செல்ல பஸ் டிக்கெட் புக் செய்தோம். ஒரு நபருக்கு 260/- வாங்குகிறார்கள்.  Room Reception counter is working 24 hours என்ற விவரத்தை தெளிவுப்படுத்திக் கொண்டு ரூமிற்கு சென்றோம்.  

மறுநாள் காலை 6 மணிக்கு checkout செய்தபோது advance பணத்தில் இருந்து 150/- திருப்பி கொடுத்தார்கள் எங்களுக்கு. அதாவது ஒரு நபருக்கு தங்குமிடத்திற்கு வெறும் 300/- தான் வாங்கினார்கள்.  பின் அங்கிருந்து GSRTC பஸ் ஸ்டாண்டு வந்து காத்திருந்தோம், எங்கள் பஸ் வருவதற்காக. சரியாக 7 மணிக்கு பஸ் வந்தது Jamnagar செல்ல. பல சிறிய கிராமங்களின் வழியாக பஸ் சென்று மதியம் 2மணி அளவில் Jamnagar City வந்து சேர்ந்தது. அங்கு மிகவும் பிரசித்தி பெற்ற CHETNA ஹோட்டலில் சுவையான உணவு அருந்தினோம்.  இரவு 8 மணிக்கு தான் புறப்படும் எங்கள் ரயில்.  இன்னும் நேரம் நிறைய இருந்ததால் 7 மணி வரை Jamnagar ஊர் சுற்றி பார்த்து, ஷாப்பிங் செய்து செய்தோம்.  7.30மணிக்கு எங்கள் கோச்சில் ஏறி அமர்ந்தோம். மறுநாள் 27ம் தேதி காலை 9.30 மணிக்கு பாந்த்ரா டெர்மின்ஸ் வந்து சேர்ந்தோம்.

இந்த இனிய பயணத்தில் எங்களை கவர்ந்தது:

நாகேஸ்வர் ~ மிகப் பெரிய சிவபெருமானின் சிலை.  நமது கழுத்து வலி எடுக்கும் அளவிற்கு உயரமானது, பிரம்மாண்டமானது.

Jagat Mandir கிருஷ்ணனின் ஆரத்தியின்போது மக்களின் பக்தி ஆரவாரம்.

* பிருந்தாவனத்தில் இருந்து கிருஷ்ணன் கோபியர்களை விட்டுவிட்டு துவாரகா வந்துவிட்டதால் கிருஷ்ணனை காண கோபியர்கள் துவாரகா வந்தார்கள். இதை அறிந்து கிருஷ்ணன் அவர்களை காண வந்த இடம் தான் கோபி தலாவ். அன்று கிருஷ்ணனும் கோபியர்களும் ஆனந்த நடனமாடிய இடமான GOPI TALAV என்ற நீரின் அடியில் உள்ள மண் சந்தனமாக இன்றும் கிடைக்கிறது. 

பேட்  துவாரகா ~ அமைதியான 20 நிமிட படகு பயணம்.  சத்ய பாமாவின் இடம் மட்டும் தான் அப்படியே இருக்கிறது. மற்றது எல்லாம் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. 

ஷிவ்ராபுர் பீச் ~ பளிங்கு கண்ணாடி போன்ற கடல் நீர் உள்ள அமைதியான இடம்.

ருக்மிணி கோவில் ~ துர்வாசரின் சாபத்தால் கிருஷ்ணன் கோவிலில் இருந்து 2 km தூரத்தில் சாந்த சொரூபிணியாக தனியே அமர்ந்து அருள் பாலிக்கும் ருக்மிணி தாயார்.

 * Somnath ~ மிக பெரிய அளவில் உள்ள சிவலிங்கம்.

* த்ரிவேணி சங்கம் ~ மூன்று நதிகள் கூடும் இடம். (Hiren, Kapila  & Saraswati நதிகளின் சங்கமம்)

இந்த ஆன்மிக பயணம் மனதுக்கு சாந்தியையும் அமைதியையும் கொடுத்தது எங்களுக்கு. 

ஒரு தடவை சென்று வாருங்கள் நீங்களும் ! ! !

Saturday, January 27, 2024

இஸ்லாமும் பசுவும்.

இஸ்லாமும் பசுவும்.

அசீஸ் கவுர் என்ற முஸ்லிம் பெண்மணி

மாதாமாதம் ஏதாவது ஒரு தலைப்பில் அறிவுப்பூர்வமாக ஏதாவது பேசுவார்கள் , அப்படி இந்த மாதம் பசு பாதுகாப்பு பற்றி கூட்டத்தில் வந்து பேசினார்.  பெரிய பேச்சாளர் இல்லை.  ஏகப்பட்ட தகவல்களை தரவில்லை, கணீரென்ற குரல் இல்லை.  ஆனால் அரை மணிநேரத்தில் அனைவருக்கும் தாயானார்.  பேசியது அத்தனையும் சத்தியம். 

குடும்பமே சைவம்.  யாரும் முட்டை கூட சாப்பிடுவதில்லை.  இவரை யாரும் எதிர்க்கவும் இல்லை.  சிறு வயது முதலே, வீட்டுக்கு சிறு மிருகங்களும் பசுக்களும் பறவைகளும் வந்து போகும்.  அன்பாக இருப்பது என்பது இயல்பாக வந்தது.  பசுக்கள் என்றால் தனி பிரியம்.  

இவரது தாய்க்கு முதல் குழந்தை 

ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கரிடம் சென்றபோது அங்குள்ள தொழுவத்தை பார்த்துவிட்டு  அற்புதமாக இருந்ததாம்,என்றும் சொல்லியுள்ளார்.

கிர் காளைகள் 8 அடி உயரமாம். இவர் அருகே சென்று தடவி பார்த்து டேய் எனக்கு ஒரு முத்தம் குடுடா என்று காளையை பார்த்து சொன்னாராம்.  ஈஷி, நக்கி தள்ளிவிட்டதாம்.  அசந்து விட்டார்களாம் அனைவரும்.  என்ன இப்படி பேசறீங்க.  அதுவும் புரிஞ்சுகிட்டு பதில் சொல்லுது..! என்று கேட்டார்களாம்.

கட்டாக் சென்றபோது அங்கு அறுப்புக்காக காத்திருந்த நிறைமாத கர்ப்பிணி பசு.  இவர் தடவி கொடுத்திருக்கிறார்.  பட்டென்று ஒரு தட்டு.  என்னை விட்டுவிட்டாயே என்பது போல ஒரு பார்வை.  கண்ணில் நீர் முட்ட, என்னைத்தான் விட்டுவிட்டாய், மீதி இருப்பவர்களையாவது காப்பாற்று என்று சொல்லாமல் சொல்லிவிட்டு அப்படியே பொத்தென்று விழுந்து இறந்துவிட்டதாம்.  மாரடைப்பு காரணமாக.  

அந்த பார்வையை என்னால் மறக்கவே முடியாது என்று சொல்லி நிறுத்தினார்.  நிசப்தம் அறை முழுவதும்.  கலங்கி விட்டோம் அனைவரும். 

*நீங்கள் குடிக்கும் பானங்கள் அனைத்திலும் எதிலெல்லாம் கேல்ஷியம் இருக்கிறது என்று சொல்லி விற்கிறானோ, அவை அனைத்திலும் மாட்டின் எலும்பு இருக்கிறது என்றார்.*

முஸ்லிம்கள் மட்டுமல்ல.  ஹிந்துக்கள் மாட்டை கொல்வதிலும், தொலை ஏற்றுமதி செய்வதிலும் போட்டி போடுகிறார்கள்.  முஸ்லிம்கள் அறுப்பது வீடியோவில் பதிவாவதால் வெளியாகிறது என்றார்.   முஸ்லிம்கள் உண்ணலாம்.  ஆனால் கொல்வதில் ஹிந்துக்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.

 *ஹைதராபாத்தில் உள்ள மாடு அறுப்பு தொழிற்சாலையான அல் கபீர் நடத்துவது ஒரு ஜெயின் என்றார்.*  

பசுவை லட்சுமி என்றால் சும்மா அது ஒன்றும் பணம் தராது. ஆனால் அது பால் தருவது நின்றால் கூட அதன் சாணத்தையும் மூத்திரத்தையும்  வைத்து அவ்வளவு மருந்து, உரம் தயாரிக்கலாம்.  அதை முறையாக பராமரித்தால் பணம் கொட்டும் என்றார்.  கொன்றால் ஒரு முறை பணம்.  சரியாக பராமரித்தால் அது சாகும்வரை பணம் தரும் என்று விளக்கினார்.

அதன் கொம்புகள் வான் நோக்கி இருப்பதால் விண்ணிலுள்ள சக்தியை அது உறிஞ்சுகிறது.  ஜெர்சி பசுவின் சாணமோ, மூத்திரமோ பயன் தராது.  உங்கள் வீட்டில் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றால் இதற்கு தெரிந்துவிடும்.  அது பாசத்தால் அழும் என்றார்.

ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்துக்கு எடுத்து செல்ல, பல மாடுகளின் கால்களை உடைத்து லாரியில் படுக்க போடுவார்களாம்.  அதில் இருக்கும் இடைவெளியில் மற்றமாடுகளை ஏற்றுவார்களாம்.  இதன் கொம்பு அதன் கண்ணில் குத்தி இரத்தம் வரும்.  பார்க்க கொடுமையாக இருக்கும்.

கபில் சிபல் ஆசியாவின் மிகப்பெரிய மாடு அறுப்பு கொலைக்களம் வைத்துள்ளார்.

திமுக மந்திரி ஐ.பெ.....சாமி இந்த வேலை பார்க்கிறார்.  ஒரு முறை அவரது லாரியை இந்தம்மாள் மடக்கி பிடித்துள்ளார். 17 லாரிகளில் 14 தப்பிவிட்டன. 3 மட்டும்தான் சிக்கியது.  அப்போது அவரது  PA காவல்துறை ஆய்வாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.  இங்கே வாருங்கள் உடனடியாக என்று சொல்லியுள்ளார்.  இவர் பதிலுக்கு நீ இங்கே வா.  நான் எங்கும் வரமாட்டேன்.  மாடுகளை துன்புறுத்தி விட்டு திமிராக பேசுகிறாயா என்று கேட்டுள்ளார்.  அரண்டுவிட்டார்களாம்.  அதன்பின் வரவே இல்லை என்றார்.

நீங்கள் எல்லோரும் பசுக்களுக்கு உணவளியுங்கள்.  விட்டுவிடாதீர்கள்.  இவை நமது சொத்து.  நான் குரான்படி வாழ்வதால் இவைகளை காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறேன்.  ஒரு முறை ஜவஹீருல்லாவோடு வாக்குவாதம் ஏற்பட்டது.  அவர் சொன்னார், எனக்கும் தெரியும் குரான்படி இதெல்லாம் கூடாது என்று.  ஆனால் விட்டுவிட்டால் ஹிந்துக்கள் தலைக்கு மேல் ஏறிவிடுவார்கள்.  அதனால் தொடர்கிறோம் என்றாராம்.  இவர் பதிலுக்கு, உனக்கு ஹிந்து எதிர்ப்பு முக்கியமா?, குரான் முக்கியமா? என்று கேட்டுள்ளார்.  

தயவு செய்து தோல் பொருட்களை உபயோகிக்காதீர்கள்.  பெல்ட், பர்ஸ், ஷூ, கையுறை, கார் சீட்டு வாங்காதீர்கள்.  உணவு பொருட்கள் வாங்கினாலும் பச்சை வட்டம் உள்ளதா என்று பாருங்கள்.  பசுவை பாது காக்க அதன் பஞ்சகவ்யம் மூலம் தயாரிக்கப்படும் சோப்பு, ஷாம்பூ, போன்றவற்றை வாங்குங்கள்.  இது போன்ற பொருட்களை அதிகம் வாங்கினால் இவைகளுக்கு மவுசு கூடினால் இதை கொன்று வரும் பணத்தை விட இவைகளை உயிரோடு வைத்திருந்தால் அதிகம் பணம் கிடைக்கும் என்று உணருவார்கள்.  பசு பிழைக்கும்.  

வெளி நாட்டுக்காரனுக்கு பணம் போகாது.  நம் நாட்டிலேயே சுற்றும்.  கல்யாண பரிசு பொருட்கள், நவராத்திரி பரிசு பொருட்கள், பிறந்த நாள் return gift, புத்தாண்டு பரிசு பொருட்கள் எல்லாம் இந்த கோமாதா பொருளாக இருந்தால் பயனும் ஆகும்.  ஒரு உயிரும் பிழைக்கும்.  கொஞ்சம் கை கொடுங்கள் நண்பர்களே.

Tuesday, January 23, 2024

அயோத்தியில் தமிழர்கள் குறைந்த செலவில் தங்க

அயோத்தியில் தமிழர்கள் குறைந்த செலவில் தங்க, சாப்பிட குறித்துக் கொள்ளவும்.

AYODHYA NATTUKOT NAGARA CHATRAM,

NATTUKOT SRI RAM MANDIR,

BABOO BAZAAR,

AYODHYA 224123

U.P.

7311166233

7373070733

இந்த நம்பரில் அழைத்து, முன்அறிவிப்பு செய்து விட்டு செல்லவும்.



Sunday, January 21, 2024

ஆதார்கார்டு நீங்களே திருத்தலாம்

இனி உங்கள் ஆதார்கார்டு விவரங்களை உங்கள் மொபைல் மூலம் நீங்களே திருத்தலாம்...

📌 ஆதார்கார்டு பெயர் மாற்ற/திருத்தம் செய்ய...

https://bit.ly/2T5iCRl

📌 ஆதார்கார்டு பிறந்த தேதி மாதம் வருடம் மாற்றம் செய்ய...

https://bit.ly/2T5iCRl

📌 ஆதார்காடு முகவரி மாற்றம் செய்ய/ திருத்தம் செய்ய...

https://bit.ly/2T5iCRl

📌 ஆதார் கார்டு தந்தை பெயர்  திருத்தம் செய்ய/ மாற்றம் செய்ய...

https://bit.ly/2T5iCRl

📌 ஆதார் கார்டு கணவர் பெயர்  திருத்தம் செய்ய/ மாற்றம் செய்ய...

https://bit.ly/2T5iCRl

📌 ஆதார்கார்டு டவுன்லோடு செய்ய...

https://bit.ly/2T5iCRl

📌 PV Cஆதார் கார்டு விண்ணப்பிக்க...👇

https://bit.ly/2T5iCRl


Tuesday, January 02, 2024

காணாமல் போன தனுஷ்கோடி

நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும்.. ?? புயலின் உக்கிர தாண்டவத்நில் ஒரு செழிப்புமிக்க நகரமே காணாமல் போன விஷயம்.. அதுவும் நம் தமிழ்நாட்டில்  !!

நிவர் புயலின் இயற்கைச் சீற்றத்திற்கு நடுவே,  நம்மிடம், மொபைல் போன் முதல், நமக்குச் சொந்தமானப் பல சாட்டிலைட்டுகள், வயர்லெஸ் கருவிகள், இலவச வாட்ஸ்அப் தொடர்பு, தமிழக மற்றும் மத்திய அரசசுளின்   அவசரக்கால உதவிகள்  வரையென நம்மை காப்பாற்ற, பாதுகாப்புடன் சந்தோஷமாக இருக்கிறோம். இன்றைய அசுர விஞ்ஞான வளர்ச்சி நம்மைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்கிறது. நாம், மிகவும் அதிர்ஷ்டசாலிகள். 

ஆம், பழைய நினைவொன்றை, இன்றையத் தலைமுறையினர் நினைத்துப் பார்க்க வேண்டிய நேரமிது. 

சுமார், 55 ஆண்டுகளுக்கு முன், தனுஷ்கோடி என்ற ஒரு வணிக நகரம் என்று ஒன்று இருந்ததும் அது மறைந்தது எப்படி என்றும் நெஞ்சைப் பிளக்கும் கதையை கேளுங்கள்.. !! 

இன்றைய தலைமுறையினர் சிலருக்கு மட்டுமே தனுஷ்கோடி என்ற ஊர் தமிழகத்தில் இருந்திருக்கிறது,  என்று தெரியும்.

தனுஷ்கோடி என்ற தொலைந்து போன ஊரின் பின்னே இருக்கும் அந்த கடுந் துயரத்தைப் பற்றி, இன்று யாருக்கும் தெரியாது.

ராமேசுவரத்தில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது தனுஷ்கோடி.

தனுஷ்கோடியில், அப்போது கோவில்கள்,  துறைமுகம், மருத்துவமனை, பள்ளிக்கூடம் தபால் நிலையம், ரெயில்வே குடியிருப்புகள், ரெயில் நிலையம், எனச் சகலமும்   இருந்தன. புராணம் காலந்தொட்டே, மிகவும் புகழ் பெற்ற வணிக  நகரம் அது. இராம, ஹனுமான் பாதங்கள் பட்டப் புண்ணியத்தலம், தனுஷ்கோடி. 

மதுரை, சென்னை உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் ரெயில்கள், ராமேசுவரம் வருவது கிடையாது. நேராக தனுஷ்கோடி சென்று விடும். 

ராமேசுவரத்திற்கு வர விரும்புபவர்கள் பாம்பனிலிருந்து ‘ஷன்டிங்க்’ என்று சொல்லக்கூடிய தனி ரெயிலில் ராமேசுவரம் வருவர்.

டிசம்பர் 22 1964... வரை கலகலப்பாக இருந்த ஊர் யாருமே எதிர்பார்க்காத தினமாக 23.12.1964-ந் தேதி அமைந்தது.

அன்று இரவில் சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசிய கடும் புயலாலும், பலத்த மழையாலும், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து சுமார் 20 அடி உயரத்திற்கு எழும்பிய ராட்சத அலைகள் தனுஷ்கோடியை மூழ்கடித்து சின்னாபின்னமாக்கியது.

தனுஷ்கோடியின் அன்றைய தினமானதுத்,  தொடக்கம் முதலே வழக்கத்தை விட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தது. 

கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை. 

வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு, எப்போது கரையைக் கடக்கப்போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. 

இன்று, நம்மிடமுள்ள மிக நவீன உபகரணங்கள் எதுவுமே, அன்று நம் மூத்தோரிடம் இல்லை.

அவர்களைப் பொறுத்தவரை 'புயல் மையம் கொண்டுள்ளது, காற்றடிக்கும், மழை பெய்யும், கடலுக்குள் செல்லக் கூடாது....' என்றளவில் மட்டுமே விழிப்புணர்வு இருந்தது.

புயல் எச்சரிக்கை என்பது தெரியும், ஆனால் புயல் எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பதை எல்லாம் அறிந்து கொள்ளும் வசதி அந்நாளில் இல்லை. 

புயலின் தீவிரம் இந்த அளவிற்கு இருக்கும் என்பது புயல் கரையைக் கடந்த பின் மட்டுமே தெரிந்துக் கொண்டாக வேண்டிய காலக்கட்டம் அது. அது வரை, நடக்கவுள்ளக் கொடூரத்தை அறியாது வாழ்ந்தனர் நம் முன்னோர். 

ட்ரைன் நம்பர் 653, 

பாம்பனில் இருந்து தனுஷ்கோடி வரை செல்லும் தனுஷ்கோடி - பாம்பன் பாசன்ஜெர் சரியாக 11.55க்கு தனுஷ்கோடி நோக்கிய தனது (இறுதி) யாத்திரையைத் தொடங்கியது. 

ரயில் தனுஷ்கோடியை நெருங்கும் சில நூறு மீட்டர்களுக்கு முன், காற்றின் வேகம் தீவிரம் அடைந்து, கடல் கொந்தளிக்கத் தொடங்கி இருந்தது. 

இஞ்சின் டிரைவர் ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை என்பதை அப்போதுதான் கவனித்து இருந்தார்.

தனுஷ்கோடியை புயல் தாக்கத் தொடங்கி இருந்ததால் அணைத்து தொடர்பு சாதனங்களும் செயல் இழந்து இருந்தன. ரயில்வே சிக்னல், தந்தி கம்பங்கள் என எதுவும் வேலை செய்யவில்லை. 

டிரைவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 

'பலத்த மழையின் காரணமாக சிக்னல் செயல் இழந்து இருக்கும்' என்று கணிக்கத் தெரிந்தவருக்கு வரப்போகும் அபாயத்தைப் கணிக்கத் தெரியவில்லை. 

எங்கும் இருள் சூழ்ந்து இருக்கவே, ரயில் வருவதை தெரிவிக்க.... தன்னிடம் இருந்த விசிலை ஊதிக் கொண்டே வண்டியை நகற்ற ஆரம்பித்தார். 

அந்த நிமிடம், அந்த நொடி, அந்த 115 பேரும் என்ன மனநிலையில் இருந்திருப்பார்கள்..........

ஊழிக்காலமெனப் பாய்ந்த, ஆழிப் பெருங்காற்றும் அதைத் தொடர்ந்த ராட்சதப்  பேரலையும்,  இரயிலை வாரி அணைத்துக் கொண்டு, கடலுக்கடியில் மூழ்கடித்துக் கோரத்தாண்டவமாடியது.  

ரயிலில் பயணித்த அத்தனை பயணிகளும் ஜலசமாதி ஆயினர். 

ரயில் நிலையத்திற்கும் ரயிலுக்குமான சில நூறு மீட்டர் இடைவெளிகளில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து விட்டது. 

ஒரு சில நிமிடங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்குமானால் அந்த பாசன்ஜெர், ரயில் நிலையத்தை அடைந்திருக்கும். 

அத்தனை உயிர்களும் மிகப் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டிருக்கும். 

'விதி சற்றே வலியது'. அதனால் தானோ என்னவோ, அவர்கள் உயிர் பிழைக்க வழி கொடுக்காமல் தன்னுடன் அழைத்துக் கொண்டது. 

தனுஷ்கோடிக்கு முன்பே, புயல் தலைமன்னாரை நெருங்கி இருந்தது. தலைமன்னாரும் பல ஆயிரம் உயிர்களை புயலுக்கு காவு கொடுத்திருந்தது. 

தலைமன்னார் கடலில் கலந்த உயிர்கள், தனுஷ்கோடி கரையில் உடலாக ஒதுங்கத் தொடங்கியிருந்தது.

தனுஷ்கோடியிலோ நிலைமை இன்னும் பரிதாபம், மின்கம்பங்கள் அறுந்து ஊரே இருளில் மூழ்கியது. கட்டிடங்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு பறக்கத் தொடங்கின. 

அவசரகால தகவல் தொடர்புச் சாதனமான தந்திக் கம்பங்களும் அறுந்து தொங்கின, 

''இன்னது நடக்கிறது...'' என்று தகவல் சொல்லக் கூட அங்கிருந்தவர்களுக்கு வழி இல்லமால் போனது. 

கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பி ஒரு ஊரையே மிரட்டிக் கொண்டிருந்தன. 

நடுநிசியில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பலராலும்.... ஆழிக்காற்றின் வேகத்தை உணர முடியவில்லை. 

உறக்கத்தில் உயிரைத் தொலைத்தவர்கள் அநேகம் பேர். 

இருந்தும் அதிகரித்த காற்றின் வேகமும், அலைகள் மூலம் ஊருக்குள் புகுந்த தண்ணீரும் வரப் போகும் அசம்பாவிதத்தை எடுத்தியம்பத் தொடங்கின. 

இயற்கை கொடுத்த இந்த 'அபாய அறிவிப்பை' உணர்ந்து கொண்டவர்கள் வேகமாக செயல் படத்தொடங்கினார்கள். 

அங்கு குடியிருந்த மக்களில் பெரும்பாலனவர்கள் மீனவர்கள் என்பதால் குழந்தைகள் பெண்களை சுமந்து கொண்டு பாதுகாப்பான இடம் தேடி நகரத் தொடங்கினார்கள். 

இதில், 'நீச்சல் காளி' என்னும் மீனவர் மட்டும் தனியொரு ஆளாக பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார். 

அடைமழையில் அவர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு பாதுகாப்பான இடம் உயர்ந்த மணற்குன்றுகள் மட்டுமே. 

அதைத் தவிர அவர்களுக்கு வேறுவழி இல்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கு தான் நின்றாக வேண்டும். 

இதைத் தவிர இன்னுமொரு முக்கியமான இடமும் சில நூறு உயிர்களைக் காப்பாற்றியது.....

ஒரு ரயில் ஒருநூறு உயிர்களைக் காவு வாங்கியது, 

மறுபுறம் ஒரு ரயில் சில நூறு உயிர்களைக் காவல்காத்தது . 

ஆம். பெரும்பாலான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தேடி ஓடிய இடம் தனுஷ்கோடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலைத் தான். 

மொத்த மக்கள் கூட்டமும் ரயிலை நிரப்பி கதவு ஜன்னல்களை இருக மூடிக் கொண்டது. 

ஊர் முழுவதும் வெள்ளமும் சோகமும் ஒரு சேர பரவத் தொடங்கி இருந்தது. 

தங்கள் குழந்தையை, துணையை, உறவினரைத் தேடத் தொடங்கியது. 

தங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது என்ற மகிழ்ச்சியை விட தொலைந்து போன உயிர்கள் பற்றிய பயமும் சோகமும் அவர்களை வாட்டியது. 

எதிர்பாரா சம்பவங்கள் அவர்களை குழப்பத்தில் தள்ளியது. கூச்சலும் குழப்பமும் நிறைந்த தனுஷ்கோடி தன்னுடைய ஒட்டுமொத்த ஆர்ப்பரிப்பையும் அந்த ஒரு இரவில் வெளிப்படுத்தி அடங்கியது. 

இவை எதுபற்றியுமே அறியாமல் தமிழகம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. 

அடுத்த நாள் பொழுதுபுலர்ந்த பொழுது கூட தனுஷ்கோடியின் நிலைமை குறித்து ஒருவரும் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை. 

அந்த நாட்களில் ராமேஸ்வரம் செல்வதற்கு தரைப்பாலம் கிடையாது. படகுப் போக்குவரத்தும், ரயில் சேவையும் மட்டுமே.

மற்றுமொரு கொடுமையான விஷயம் குடிநீரும் உணவுப் பொருட்களும் தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் மூலமாக மட்டுமே கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். 

புயல் பாம்பன் பாலத்தையும் பதம் பார்த்திருந்தது, 

தண்டவாளங்கள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தன. ஒட்டு மொத்த தனுஷ்கோடியும் எவ்வித தொடர்பும் இன்றி தனித்து விடப்பட்டிருந்தது. 

குடிக்கும் நீருக்குக் கூட வழியில்லாத ஆழி சூழ் உலகாக மாறி இருந்தது தனுஷ்கோடி. 

விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பரவத் தொடங்கியது. தமிழக அரசாங்கம் விழித்துக் கொண்டது. 

அன்றைய முதல்வர் மாண்புமிகு.  அமரர். பக்தவத்சலம் உடனடியாக செயல்படத் தொடங்கினார். 

அன்றைய, அவர் சார்ந்தக் காங்கிரஸ்  அரசின் உதவியை நாடினார். 

நிலைமையைப் புரிந்து கொண்ட இந்திய அரசும் போர்கால அடிப்படையில் செயல்படத் தொடங்கியது. 

தனுஷ்கோடி துயரச் சம்பவத்தை ''தேசியப் பேரிழப்பு'' என்று அறிவித்தது. 

இராணுவம் தொடங்கி முப்படைகளும் தனுஷ்கோடி நோக்கி விரைந்தன. 

முதல் தேவை நீரும் உணவும். வான்படையின் ஹெலிகாப்டர்கள் மூலமாக உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. 

இந்தியக் கப்பல் படையின் மீட்புக் குழுவும் களத்தில் இறங்கியது. 

அடுத்த நாளும் மழை நின்றபாடில்லை. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. 

''காப்பாற்றப்பட்ட மக்களை விட கண்டெடுத்த சடலங்களே அதிகம்'' என்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். 

எஞ்சிய தனுஷ்கோடியை "சாரதா" என்னும் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல விரைந்தது. 

உயிர் பிழைத்த மக்கள் அனைவரையும் மதுரை அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதித்த பின்னும் கூட அரசாங்கத்தால் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

மூன்றாம் நாள் தான் அரசாங்கத்திற்கு நினைவு வந்தது, 'ஒரு பயணிகள் ரயிலைக் காணவில்லை' என்று. 

மீண்டும் தேடல் தொடங்கியது. 

இறுதியாக முடிவுக்கு வந்தனர். 

புயலில் இரயில் கடலோடு கடலாக கலந்திருக்க வேண்டுமென்று. கடலுக்குள் இறங்கித் தேடத் தொடங்கினர். 

இரயிலின் பெரும்பாலான பாகங்கள் அதாவது இரும்பு தவிர்த்து மற்றவை அனைத்தும் கடலோடு கடலாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. 

அதில் பயணித்த 115 பயணிகளும் மாண்டுவிட்டதாக அறிவித்தனர். 

பேரழிவைப் பார்வையிட வந்த முதல்வர் பக்தவத்சலம் தன்னால் 'ரயிலின் சில பாகங்களைக் காண முடிந்தது' என்று குறிப்பிடுகிறார். 

தனுஷ்கோடியில் வெள்ளம் வடிய நான்கு நாட்களுக்கு மேல் ஆகியது. 

இந்தியாவை நிலை குலைய வைத்த சம்பவம் பற்றி உலகமே பரபரப்பாகப் பேசத் தொடங்கியது. 

தனுஷ்கோடியில் அடித்த புயலின் வேகம் மிக அதிகம். தலைமன்னரைக் கடக்கும் பொழுது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல், தனுஷ்கோடியை தாக்கும் பொழுது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் தாக்கியுள்ளது. 

விளைவு 1500 மக்களின் உயிரைக் குடித்தது.

1500 ஏக்கருக்கும் மேலான நிலப்பரப்பை நீருக்குள் இழுத்துக் கொண்டது.

சொல்லப் போனால் மூன்று முழு கிராமங்கள் இன்றும் கடலடியில் தான் இளைப்பாறிக் கொண்டுள்ளன, தனுஷ்கோடி துறைமுகத்தையும் சேர்த்து. 

''ஆசியாவின் இருபதாம் நூற்றாண்டுப் பேரிழப்பாக'' ஐ.நா சபை இந்த சம்பவத்தை அறிவித்தது. 

தமிழக மக்களின் மன நிலை, ஆழ்ந்தச் சோகத்தில் இருக்க,  அன்றையப் பத்திரிக்கைகள் பலவும்  மிகவும் கவலை கொள்ளத் தொடங்கி எழுதியது.  

அன்றைய தினம் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல் இன்றுவரை கிடைக்கவில்லை. 

மணலில் புதைந்த பிணங்களும், கடலில் மிதந்த பிணங்களும் ஏராளம். 

அவற்றைத் தேடி எடுக்க மீட்புப் பணியினரால் முடியவில்லை. 

மேலும் பல உடல்கள் கழுகுகளாலும் மிருகங்களாலும் வேட்டையாடப்பட்டதால் அவர்களை இனங்கான முடியாமல் போயிற்று.

மக்கள் வாழ்வாதரங்களை இழந்த நிலையில் அரசு தனுஷ்கோடியை ''மக்கள் வாழத் தகுதியற்ற நகரம்'' என்று அறிவித்தது. 

தன்னுடைய அத்தனை அடையாளங்களையும் அன்றைய ஒருநாள் புயலில் மொத்தமாக இழந்தது தனுஷ்கோடி.

ரயில்நிலையம், தபால்நிலையம், தந்தி ஆபீஸ், சுங்கச் சாவடி, மாநிலத்தின் முக்கியமான துறைமுகம் மற்றும் மீன்பிடி நிலையம் என்று தனது அன்றாட வாழ்கையை இழந்து, ''மக்கள் வாழத் தகுதியற்ற...'' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. 

தனுஷ்கோடி மக்களுடன் சேர்ந்து, அன்று தொலைந்த தனுஷ்கோடி... 

இன்று வரை அடையாளம் காணப்படாமல் அப்படியே நிற்கிறது, எஞ்சிய தனுஷ்கோடியின் மிச்சங்களையும் பூர்வகுடிகளையும் சுமந்துகொண்டு.

மக்கள் வாழத் தகுதியற்ற என்று முத்திரை குத்தப்பட்ட தனுஷ்கோடியில், பிடிவாதமாக,  இன்று இருநூறு குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு மின் இணைப்பு கிடையாது. 

இவர்களது இரவும் பகலும் மின்சாரம் இல்லாமல் தான் கழிகிறது, 

கருக்கல் நேரங்களில் சிமினி விளக்குகள் மட்டுமே தனுஷ்கோடிக்கு வெளிச்சம் தருகின்றன. 

"ராமேஸ்வரத்துக்கு போனா தான்  லைட்டைப்  பார்க்க முடியும்" 

அடிப்படை வசதி என்று எதுவும் கிடையாது, 

கடற்கரை மணலில் சில அடி ஆழத்தில் நன்னீர் ஊற்றுகள் இருக்கின்றன, 

இந்த நீரூற்றுக்கள் தான் இவர்களது நீர் ஆதாரம். 

சமையல் பொருட்கள் அனைத்தையும் ராமேஸ்வரத்தில் இருந்தே வாங்கி வருகிறார்கள். 

இங்கு இருப்பவர்கள் அனைவரும் காலங்காலமாக தனுஷ்கோடியில் வாழ்ந்து வரும் மீனவர்கள். 

மீன்பிடி தொழில் போக கடல் சிப்பிகளைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்தும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். 

தமது மூதாதையர் வாழ்ந்த இந்த இடத்தை விட்டுச் செல்ல இவர்களுக்கு மனம் இடங்கொடா காரணத்தால் இங்கேயே தங்கி விட்டனர். 

இன்றைய, நம் மத்திய அரசின் ஆணையின் பேரில், தமிழகத்தின்  முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி யுமான   பொன். ராதாகிருஷ்ணன் அவர்களதுத் துரிதக் கதியிலான அக்கறை மற்றும் செயற்பாட்டு மேற்பார்வையில், 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை வரை 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.50 கோடியில் புதிதாக சாலை அமைக்கும் பணி தொடங்கியது. 

கடலின் நடுவே நடைபெற்று வந்த இந்த சாலைப் பணி, வெறும்  ஒன்றரை ஆண்டுக்குள்,  முழுமையாக முடிந்தது. 

சாலையின் பாதுகாப்பு கருதி இருபுறமும் கற்களால் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டன. 

அரிச்சல்முனை வரை செல்லும் வாகனங்கள்,  திரும்பிச் செல்ல வசதியும் செய்யப்பட்டு, அதற்கான வளைவின் மைய பகுதியில் தூண் அமைக்கப்பட்டு, அதன் மேலே அசோக சின்னமும் நிறுவப்பட்டது.

தற்போது அங்கு மின்சார  இணைப்பு கொடுப்பதற்கும் புதிய குடியிருப்புகள்  ஏற்படுத்துவதுக் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. 

இந்த வரலாற்று சோகம் History of Dhanushkodi என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம்.

Wednesday, December 13, 2023

கோகிலம்

இது ஒரு நீண்ட பகிர்வு பதிவு. பொறுமையாக படியுங்கள். உங்கள் கண்களில் நீர் கசியும்.

வெறும் பணம் !

அந்தப் பெண்ணைச் சமையல்வேலைக்கு வைத்துக் கொள்ளும்படியாக டாக்டரின் மனைவி வித்யா தான் சிபாரிசு செய்திருந்தாள். வித்யாவிற்கு அவளை எப்படித் தெரியும் எனத் தெரியவில்லை. வாசல்கதவை ஒட்டி நின்றிருந்த அந்தப் பெண்ணிற்கு ஐம்பது வயதிருக்கக் கூடும். ஆனால் தோற்றம் நடுத்தர வயது பெண்ணைப் போலவே இருந்தது. மெலிந்திருந்த போதும் களையான முகம். நீண்ட கூந்தல். கவலை படிந்த கண்கள். அந்தப் பெண்ணின் கையில் துணிப்பை ஒன்றிருந்தது.

`உன் பேரு என்னம்மா` எனக்கேட்டேன்

`கோகிலம்` என்றாள்

`கோகிலாவா` என மறுபடியும் கேட்டேன்.

`இல்லை சார் கோகிலம்` என அழுத்தமாகச் சொன்னாள். இப்படி ஒரு பெயரை முதன்முறையாக இப்போது தான் கேட்கிறேன்.

`எந்த ஊர்` எனக்கேட்டேன்.

`தெக்கே சார். பிள்ளைகுட்டிகள் யாருமில்லை. புருஷன் செத்துப்போயிட்டார். இரண்டு வருசமா தாம்பரத்துல ஒரு வீட்ல வேலைக்கு இருந்தேன். அவங்க இப்போது துபாய்க்கு வேலை மாறிப்போயிட்டாங்க`. என்றாள்

`எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்குறே `

`நீங்க குடுக்குறதை குடுங்க. ஆனா தங்க இடமும் சாப்பாடும் தரணும்`

இதுவரை எந்த வேலைக்காரியையும் என் வீட்டோடு தங்கியதில்லை. அப்படித் தங்கிக் கொள்ளும்படியான தனியாக அறை எதுவும் எனது வீட்டில் இல்லை.

`வீடு சின்னது, இதுல நீ எங்கம்மா தங்குவே` எனக்கேட்டேன்

`கிச்சன்லயே படுத்துகிடுவேன். இந்தப் பையை வைக்க இடம் இருந்தா போதும்`. என்றாள்

அவள் குரலில் இருந்த துயரம் அவளது இயலாமையைத் துல்லியமாக வெளிப்படுத்தியது

என் மனைவியும் அவளிடம் ஏதேதோ கேள்விகள் கேட்டாள். முடிவில் அவளைச் சமையல்வேலைக்கு வைத்துக் கொள்வது என முடிவானது.

சாப்பாட்டின் ருசி என்பது வீட்டுக்கு ஒரு மாதிரியானது. அதுவும் பலஆண்டுகளாக ருசித்துப் பழகிவிட்டால் வேற்று ஆளின் சமையலை சாப்பிட முடியாது. என் மனைவி மிகவும் நன்றாகச் சமைப்பாள். ஆகவே புதிய சமையற்காரியின் சாப்பாட்டினை எப்படிச் சாப்பிடுவது என யோசனையாக இருந்தது. ஆனால் என் மனைவி கால்முறிவு ஏற்பட்டுப் படுக்கையில் கிடந்து இப்போது தான் தேறி வருகிறாள். ஆகவே புதிதாகச் சமையலுக்கு ஆள் வைத்துக் கொள்ள வேண்டிய தேவை உருவாகியது

கோகிலம் சமைக்கத் துவங்கிய முதல்நாள் அவள் போட்டுக் கொடுத்த காபி. செய்து வைத்த சட்னி, சாம்பார் எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. என் மனைவி அவளைக் கோபத்தில் திட்டவே செய்தாள்.

மறுநாள் கோகிலம் சமைத்த போது முட்டைக்கோஸ் வேகவைத்த சட்டி கருகிப்போய்விட்டது.

`அடுப்பை கவனிக்காமல் என்னடி யோசனை `என என் மனைவி அவளிடம் சண்டையிட்டாள்

`இல்லம்மா. என்னை அறியாமல் ஏதோ நினைப்பு வந்துருது. அந்த நினைப்பு வந்தவுடன் அழுகை அழுகையாக வருது `என்றாள் கோகிலம்

`நீ ஒப்பாரி வைக்கிறதுக்கு என் வீடு தானா கிடைச்சது. கவனமா வேலை பாக்குறதா இருந்த இரு. இல்லே. வேற வீடு பாத்துக்கோ` என என் மனைவி அவளை விரட்டினாள்

கோகிலம் சேலை முந்தானையால் அழுகையைத் துடைத்தபடியே சரிம்மா என்று கரிபிடித்த சட்டியை கிழே இறக்கிவைத்தாள்.

கோகிலம் எப்போது சாப்பிடுவாள். எப்போது குளிப்பாள் என யாருக்கும் தெரியாது. நாங்கள் எழுந்து கொள்வதற்கு முன்பாக அவள் குளித்துத் தயராகிக் காபி டிக்காஷனை போட்டு வைத்திருப்பாள். சமையற்கட்டின் ஒரத்தில் எதையும் விரித்துக் கொள்ளாமல் வெறும் தரையில் தான் படுத்துக் கொள்வாள். சமையல் வேலையில்லாத நேரங்களில் டிவி பார்ப்பதோ, அரட்டை அடிப்பதோ எதுவும் கிடையாது. அவளாகவே கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வருவாள். பைசா சுத்தமாகச் சில்லறை மீதம் தந்துவிடுவாள். சமையல் வேலைகள் தவிர்த்து வீட்டை சுத்தம் செய்வது. பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது. படுக்கை விரிப்புகளைச் சுத்தம் செய்வது. செருப்பைக் கழுவி துடைத்து வைப்பது எனச் சகல காரியங்களையும் கர்மசிரத்தையாகச் செய்து கொண்டிருந்தாள்.

பத்து நாளில் அவளது சாப்பாடு எங்களுக்குப் பிடித்துப் போகத் துவங்கியது. வீட்டில் நானும் என் மனைவியும் மட்டுமே இருந்தோம். மூத்தமகன் மும்பையில் தன் மனைவி பிள்ளைகளுடன் இருந்தான். இளைய மகள் டெல்லியில் வசித்து வந்தாள். அவர்கள் விடுமுறைக்கு வருவதோடு சரி.

நான் வங்கிப்பணியில் ஒய்வு பெற்றவன் என்பதால் அடிக்கடி நண்பர்கள் என்னைப் பார்க்க வீடு தேடி வருவதுண்டு. அப்படி ஒருமுறை நாலைந்து நண்பர்கள் வந்திருந்த போது கோகிலம் கேரட் அல்வா செய்திருந்தாள்.

அப்படி ஒரு சுவையான அல்வாயை சாப்பிட்டதேயில்லை என நண்பர்கள் புகழாரம் செய்தார்கள். அல்வா எடுத்த ஸ்பூனை வழித்துத் தின்றான் ஒரு நண்பன்.

கோகிலம் அந்தப் பாராட்டுகளைக் கேட்டுக் கொண்டதோடு சரி. அதை நினைத்து பெருமைப்பட்டதாகவோ, சந்தோஷம் கொண்டதாகவே தெரியவில்லை. விதவிதமான சிற்றுண்டிகள், காய்கறி வகைகள், துவையல்கள், இனிப்பு வகைகள் எனச் செய்து கொடுத்தபடியே இருந்தாள். மாத சம்பளத்தை அவளிடம் தந்த போது நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், தேவைப்படும்போது வாங்கிக் கொள்கிறேன் என்றாள்

உண்மையில் அவள் வந்த ஒரு மாத காலத்தில் நானும் என் மனைவியும் ஒரு கிலோ எடை அதிகமாகியிருந்தோம். கோகிலம் என் மனைவியின் தங்கையைப் போலவே ஆகியிருந்தாள். ஒரு நாளில் ஆயிரம் முறை கோகிலம், கோகிலம் என என் மனைவி அவளை அழைத்தபடியே இருந்தாள். அவளும் சுணக்கமின்றி ஒடியோடி வந்து உதவிகள் செய்தாள்.

சில நேரம் நாங்கள் சினிமாவிற்குப் போகும்போது அவள் வீட்டில் தனியாக இருப்பாள். ஒருமுறை நாங்கள் திருப்பதி போய்வந்த போது இரண்டு நாட்கள் அவள் மட்டுமே வீட்டிலிருந்தாள். வீடே காலியாக இருந்தாலும் அவள் சமையற்கட்டில் தான் உறங்கினாள். ஒரு பைசாவை எடுத்து செலவழிக்கவில்லை. சுவையான எந்த உணவையும் சாப்பிடுவதில்லை.

ஒருமுறை கோகிலம் சாப்பிடும் போது மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்

வெறும்சோறு. அதில் கொஞ்சம் தண்ணீர். தொட்டுக் கொள்ள ஊறுகாய்.

ஏன் இந்தப்பெண் இப்படிப் பிடிவாதமாகயிருக்கிறாள் என ஆத்திரமாக வந்தது. என் மனைவியிடம் சொல்லி அவள் விரும்பியதை சாப்பிடும்படியாகச் சொன்னேன்.

அதைக்கேட்டு என் மனைவி சொன்னாள்,

`நானும் சொல்லிப்பார்த்துட்டேன். அவ கேட்கமாட்டாள் `

மும்பையில் இருந்து என் மகனும் மருமகளும் பேரப்பிள்ளைகளும் வந்திருந்த போது கோகிலத்தின் விருந்தை சாப்பிட்டு மயங்கிப் போனார்கள். தன்னோடு அவளை மும்பைக்கு அழைத்துப் போய்விடுகிறேன் என மகன் சொல்லிக் கொண்டேயிருந்தான். மருமகளும் கூடக் கூப்பிட்டாள். ஆனால் கோகிலம் மறுத்துவிட்டாள். கோகிலம் எதற்கும் ஆசைப்படவில்லை. பூ வைத்துக் கொள்ளக் கூட அவள் விரும்பியதில்லை.

கோகிலத்திற்காக நாங்கள் வாங்கிக் கொடுத்த புடவைகள் எதையும் அவள் கட்டிக் கொள்ளவில்லை. அப்படியே ஒரு பையில் போட்டு வைத்திருந்தாள். ஒரு நாள் கூட உடல்நலமில்லாமல் ஒய்வெடுக்கவோ, சலித்துக் கொள்ளவோயில்லை.

கோகிலத்தின் வேலை பிடித்துப்போகவே அவளுக்கு மாத சம்பளம் ஆறாயிரத்திலிருந்து எட்டாயிரம் தரலாம் என்ற யோசனையை என் மனைவி தான் சொன்னாள். அதைப்பற்றி அவளிடம் சொன்ன போது உங்க இஷ்டம் என்று மட்டும் தான் சொன்னாள்

என்ன பெண்ணிவள். எதற்காக இப்படிப் பகலிரவாக வேலை செய்கிறாள். சம்பளத்தைப் பற்றிப் பெரிதாக நினைப்பதேயில்லை. யாரைப்பற்றியும் ஒரு வார்த்தை தவறாகப் பேசியதில்லை. தன் கஷ்டங்களைச் சொல்லி புலம்பியதில்லை. இவளைப் போல வேலையாள் கிடைப்பது கஷ்டம் என நினைத்துக் கொண்டேன்.

ஒரு நாள் கோகிலம் என்னிடம் தயக்கத்துடன் கேட்டாள்

`நாளைக்குக் காலையில பூந்தமல்லி வரைக்குப் போயிட்டு வரணும். அரை நாள் லீவு வேணும் சார் `

`என்ன வேலை` என்று கேட்டேன்

பதில் சொல்லவில்லை. பேசாமல் நின்று கொண்டிருந்தாள்

`சரி போயிட்டு வா `என்றேன்

`டிபன் செஞ்சிடும் போதே மதிய சமையலும் சேத்து வச்சிட்டு போயிடுறேன். வர்றதுக்கு மூணு மணி ஆகிடும்` என்றாள்

`அதையெல்லாம் நாங்க பாத்துகிடுறோம். நீ போயிட்டு வா`

`அம்மாவுக்குத் தைலம் தேய்ச்சி குளிக்க வைக்கணும். அதைச் சாயங்காலம் செய்துரலாம் `

`அதெல்லாம் பிரச்சனையே இல்லை கோகிலம்` என அனுப்பி வைத்தேன்

அவள் மறுநாள் காலை எட்டுமணிக்கு வெளியே கிளம்பி போனாள். என் வீட்டிற்கு வந்த ஆறுமாதங்களில் முதன்முறையாக அப்போது தான் வெளியே கிளம்பி போயிருக்கிறாள்

யாரைப்பார்க்க போகிறாள். என்ன வேலையாக இருக்கும். என யோசித்துக் கொண்டேயிருந்தேன்.

என் மனைவி கோகிலம் சில சமயம் காசை முடிந்து வைத்து சாமி கும்பிடுவதைக் கண்டிருப்பதையும். ஒருவேளை கோவிலுக்குப் போய்வரக்கூடும் என்றும் சொன்னாள்

`கோவிலுக்குப் போவதற்குச் சொல்லிக் கொண்டு போகலாம் தானே` என்று கேட்டேன்

`அது அவ சுபாவம். எதையும் யார்கிட்டயும் சொல்லமாட்டா` எனச் சிரித்தாள் மனைவி

அன்று மாலை கோகிலம் நாலு மணிக்கு திரும்பி வந்தாள். அவள் முகம் இறுகிப்போயிருந்தது. தன்னை நம்பியவர்களை அப்படியே போட்டுவிட்டு போய்விட்டோம் என்பது போல அவள் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். வந்த வேகத்தில் அடுப்பை பற்றவைத்து சுவையான உளுந்தவடையும் காபியும் கொடுத்தாள். எங்கே போனாள் யாரை பார்த்து வந்தாள் என எதையும் சொல்லிக் கொள்ளவில்லை

மறுநாள் என் மனைவி சொன்னாள் `கோகிலம் ராத்திரி பூரா அழுதுகிட்டே இருந்தா. கேட்டா அதெல்லாமில்லேங்கிறா`

`யாராவது செத்துப் போயிருப்பாங்களா` எனக்கேட்டேன்

`தெரியலை. ஆனா அவளைப் பாக்க பாவமா இருக்கு`.

கோகிலம் மறுநாள் முதல் இயல்பாகிப் போனாள். நாங்கள் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. பத்துநாட்களுக்குப் பிறகு ஒரு மதியம் காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டு நான் கதவை திறந்தேன். வாசலில் முப்பது வயதுள்ள ஒரு ஆள் நின்று கொண்டிருந்தான்

`என்ன வேணும்` எனக்கேட்டேன்

`எங்க அம்மாவை பாக்கணும்` என்றான்

`உங்க அம்மாவா. யாரு` எனக்கேட்டேன்

`கோகிலம்` என்றான்

கோகிலத்திற்கு யாருமில்லை என்றாளே என்ற குழப்பத்துடன் சமையலறைக்குப் போய் அவளை அழைத்தேன்

வெளியே வந்தவளின் முகம் அவனைப் பார்த்தவுடன் மாறியது

`இங்க எதுக்கு வந்தே` எனக்கேட்டாள்

`உன்னை யாரு இங்க வந்து வீட்டுவேலை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தினா. உன் தலைவிதியா` எனக்கேட்டான் அந்தப் பையன்

`நான் உழைச்சி சாப்பிடுறேன். உன்னை என்னடா பண்ணுது. அதான் எல்லாத்தையும் குடுத்துட்டேனே. இன்னும் என்ன வேணும்` என முறைத்தபடியே கேட்டாள்

`யம்மா. நான் செஞ்சது தப்பு தான். அதுக்காக நீ யாரோ வீட்ல வந்து எதுக்கு வேலை செய்ற. சும்மா உட்கார்ந்து சாப்பிட்டா கூட முப்பது வருஷம் சாப்பிடலாம். சொத்த வித்த பங்குல உனக்குச் சேர வேண்டியது இரண்டு கோடி வந்துருக்கு. அது உனக்குத் தான் `

`அது ஒண்ணும் என் பணமில்லை. காசு காசுனு நீ தானே அலையுறே. நீயே வச்சி அனுபவி` என்றாள் கோகிலம்

`உனக்கு வேணாம்னா போ. ஆனா நாளைக்கு உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா கொள்ளி போட நான் தான் வந்தாகணும். அதை மறந்துராத` என்றான் மகன்

`ஏன் நான் செத்தா இவங்க எடுத்து போட மாட்டாங்களா `எனக்கேட்டாள்

அதைக் கேட்டதும் எனக்குச் சிலீர் என்றது. அந்தப் பையன் சொன்னான்

`உனக்குக் காசோட அருமை தெரியலை. இரண்டு கோடியை வேணாம்னு சொல்லுறே, பெத்த தாயேனு தான் திரும்ப வந்து நீயே வச்சிக்கோனு குடுக்குறேன். வேற யாராவது இருந்தா முழுங்கி ஏப்பம் விட்ருப்பான்`

`நீயும் வேணாம். உன் கோடி ரூபாயும் வேணாம். கிளம்பு. இனிமே என்னைத் தேடிகிட்டு இங்க வந்தா செருப்பாலே அடிப்பேன். போடா `எனச் சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் போய்விட்டாள்

அந்தப் பையன் என்னை முறைத்தபடியே வெளியே போனான். கோகிலம் பேசியதை எல்லாம் கேட்டதும் எனக்குத் திகைப்பாக இருந்தது. கோகிலம் வெறும் வேலைக்காரியில்லை. இரண்டு கோடி பணமுள்ளவள். அதை விடவும் வசதியாக வாழ்ந்தவள். ஏதோ ஒரு பிடிவாதம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி வந்து வேலைக்காரியாக இருக்கிறாள்.

கோகிலத்திடம் நாங்கள் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் அன்றிரவு அவளாகவே வந்து சொன்னாள்

“எங்க வீட்டுக்காரு பெரிய டிராவல்ஸ் வச்சிருந்தாரு. பூந்தமல்லியில பெரிய வீடு. நாலு கார் இருந்துச்சி. நல்லா சம்பாதிச்சி மெயின்ரோட்ல ஒரு கல்யாண மண்டபம் கட்டி வாடகைக்கு விட்டிருந்தாரு. பம்மல்ல இரண்டு ஏக்கர் விவசாய நிலமும் இருந்துச்சி.எங்க வீட்லயும் ரெண்டு பேரு வேலைக்காரிகள் இருந்தாங்க. எங்க வீட்டுக்காரருக்கு தினமும் சாப்பாடு ருசியா இருக்கணும். விதவிதமா ஆக்கி போடுவேன்.

திடீர்னு ஒரு நாள் பெங்களுர் போயிட்டு வந்துகிட்டு இருந்த என் புருஷன் ரோடு ஆக்சிடெண்டில் செத்துப்போயிட்டாரு. கண்ணைக் கட்டி காட்டுல விட்டது மாதிரி ஆகிருச்சி. என் மகனே என்னை ஏமாத்த ஆரம்பிச்சிட்டான். அவனுக்குச் சேர்க்கை சரியில்லை. ஒரு வருசத்துக்குள்ளே ஊர்பட்ட கடன். அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சேன். வந்தவ இன்னும் மோசம். ரெண்டு பேரும் சேந்துகிட்டு என்னை வீட்டை விட்டு துரத்தி அடிச்சிட்டாங்க.

அப்புறம் வீட்டுவேலை செய்து பிழைச்சிகிட்டு இருக்கேன். எப்படி வாழ்ந்த நாம இப்படி ஆகிட்டோம்னு நினைச்சி தான் வெறும் சோத்தை சாப்பிடுறேன். அதுலயும் உப்புப் போடுறது கிடையாது.

பெத்து வளர்ந்த மகனை அடிச்சி விரட்டிட்டான். ஆனாலும் மனசு கேட்க மாட்டேங்குது. அவன் நல்லா இருக்கணும்னு காசு முடிச்சி போட்டு சாமி கும்பிட்டுகிடுவேன். எனக்குனு யாருமேயில்லை. அதான் இருக்கிற காலத்தை உங்கள மாதிரி யார் வீட்லயாவது ஒடிட்டு முடிச்சிரலாம்னு நினைச்சிட்டு இருந்தேன்.

முந்தநாள் பஜார்ல என் மகனை பார்த்தேன். கல்யாண மண்டபத்தை விக்கப் போறேன். உன் கையெழுத்து வேணும். பத்திர ஆபீஸ்க்கு வந்துருனு சொன்னான்

அதைப் போட தான் நேத்து போனேன். எட்டு கோடி ரூபாய் வந்துச்சி. அதுல என் பங்கு ரெண்டு கோடி வச்சிக்கோனு குடுத்தான். உன் பிச்ச காசு எனக்கு வேணாம் போனு உதறிட்டு வந்துட்டேன். நான் செஞ்சது சரி தானே சார் “

எனக்கு அவள் பேசியதை கேட்க கேட்க மனதில் பாரமேறியது. தொண்டை வலித்தது.

“இதை முன்னாடியே சொல்லியிருக்கலாம்லே“

“வசதியா இருந்த ஆளை யாரு வேலைக்கு வச்சிகிடுவா`

“அதுக்கா ஏன் வீட்டுவேலை செய்து கஷ்டப்படுறே. அந்தப் பணத்தை வாங்கிப் பேங்கிலப் போட்டுட்டு காலாட்டிகிட்டு வாழலாம்லே“ எனக்கேட்டாள் என் மனைவி

“நம்மாலே அப்படி வாழ முடியாதும்மா. நமக்கெல்லாம் உழைச்சி சாப்பிடணும். அது அநாமத்தா வந்த பணம். அதை வச்சிருந்தா ஆயிரம் பிரச்சனை கூட வரும். அந்தக் கருமம் எனக்கு வேணாம். சோறு போடுறதுக்கு நீங்க இருக்கீங்க. படுக்க இடம் இருக்கு இது போதும்மா“

அவள் சொல்வது உண்மை. ஆனால் இவளை போன்ற துணிவும் மனவுறுதியும் எங்களுக்கு இருக்குமா என யோசனையாக இருந்தது. என் மனைவி அவளிடம் திரும்பத் திரும்பப் பணம் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். கோகிலம் அது தன்னுடைய பணமில்லை. தன்னைப் பெற்ற மகனே ஏமாற்றியபிறகு யாரையும் நம்பத் தயராகயில்லை“ என உறுதியாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

சரி அவள் இஷ்டம். எப்போதும் போல அவள் இந்த வீட்ல் இருக்கலாம். இனி அவளுக்கு எந்த ஆலோசனையும் சொல்ல மாட்டோம் என நாங்கள் முடிவு செய்தோம்

மறுநாள் விடிகாலையில் நாங்கள் எழுந்து வந்த போது கோகிலம் சமையல் அறையில் இல்லை. சிறிய கடிதம் மட்டுமே இருந்தது

அன்பு மிக்க நடராஜன் அய்யா, அம்மாவிற்கு,

இத்தனை நாட்கள் எனக்குச் சாப்பாடு போட்டு தங்க இடம் கொடுத்ததிற்கு நன்றி. நான் யார் என்று தெரிந்தபிறகு முன்பு போல என்னை வேலை சொல்ல உங்களுக்கு மனம் வராது. ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கும் போதும் இரண்டு கோடி ரூபாய் உங்கள் நினைவில் வந்து போகும். அது எனக்கும் சிரமம். உங்களுக்கும் சிரமம். ஆகவே வேறு ஊருக்கு வேலைக்குப் போகிறேன். இதுவரை நீங்கள் சேர்த்து வைத்துள்ள என் சம்பள பணத்தை அம்பத்தூரில் உள்ள அநாதை காப்பகத்திற்குக் கொடுத்துவிடவும்.

அம்மாவிற்குத் தைலம் தேய்த்துவிட முடியாமல் போய்விடுகிறதே என்று மட்டும் தான் எனக்குக் கவலை

என் சாப்பாடு உங்கள் இருவருக்கும் பிடிந்திருந்தது என்பது மகிழ்ச்சி. பலசரக்கு கடைக்காரன் 26 ரூபாய் பாக்கி தர வேண்டும். பால் பாக்கெட் ஒன்று கூடுதலாகப் போட வேண்டும்.

உங்கள் இருவரின் நினைவாக ஒரேயொரு டம்ளரை எடுத்துப் போகிறேன். அதில் தண்ணீர் குடிக்கும் போதெல்லாம் உங்களை நினைத்துக் கொள்வேன்

உங்கள் வேலைக்காரி கோகிலம் என எழுதியிருந்தாள். அந்தக் கடிதத்தைப் படித்து முடிந்தவுடன் வேதனைபீறிட்டது

என் மனைவி படித்துவிட்டு வாய்விட்டு அரற்றினாள்

“நமக்கு தான் புத்தியில்லை. ஆள பாத்து தப்பா எடைபோட்டுட்டோம். விதவிதமா நமக்குச் சமைச்சி போட்டு கவனிச்சிட்டா. அவளுக்கு நாம ஒண்ணுமே பண்ணலே. இந்தப் பாவத்துக்கு என்ன பரிகாரம் பண்ணப்போறோம் சொல்லுங்க“

எனக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை

சமையல்கட்டின் ஒரம் நாங்கள் கொடுத்த புதுப்புடவைகள் அத்தனையும் ஒரு பையில் அப்படியே இருந்தன. அதைக் கையில் எடுத்துப் பார்த்தபோது என் மனைவி வெடித்து அழத்துவங்கியிருந்தாள்.


Thursday, November 16, 2023

அம்மாவின் வேதம்

மகன் கணேஷ் கூட்டிக் கொண்டு போன இடத்தைப் பார்த்ததும் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது அலமேலு மாமிக்கு.  மனம் இன்பத்தால் திளைத்து பழைய ஞாபகங்களை அசை போட்டது.

பிறந்த வீட்டிலும் வைதீகம்...புகுந்த வீட்டிலும் வைதீகம்..காதுகள் வேத கோஷங்களைக் கேட்டு கேட்டு இனம் புரியா இன்பத்தில் ஆழ்ந்த தருணங்கள் அல்லவா?

கஷ்ட ஜீவனம்தான்...ஆனால்

வத்தக் குழம்பும் குமுட்டியில் சுட்ட அப்பளமும், மிளகு சீரக ரசமும் வாய்க்கு தேவாமிருதமாக இருந்தது...போக வர மாட்டு வண்டி...அழகான அக்ரஹாரம்....இதற்கு மேல் செவிக்கு அமுதமாக வேத கோஷங்கள்...அந்த கிராம வாழ்க்கை போல் வருமா?  அந்த இனிமையான நினைவுகள் அடிக்கடி வந்து வந்து போனது அலமேலு மாமிக்கு.

கணவர் சுப்புண்ணி எனப்படும் சுப்ரமணியன் கனபாடிகள்.....உள்ளூரில் அத்தனை சம்பாத்தியம் இல்லை.  எதையும் கேட்டு பெற மாட்டார்..கொடுத்ததை வாங்கிக் கொள்வார்..

பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் வைதீக குடும்பமாக அமைந்ததால் தன்னுடைய ஒரே பையன் கணேஷை வேதம் படிக்க அனுப்ப ஆசைப்பட்டாள் அலமேலு.. அதுவும் குழந்தை ருத்திரமும், விஷ்ணு சகஸ்ரநாமமும் அழகாக கணீரென்ற குரலுடன் சொல்வதைக் கேட்க கேட்க அவனை வேதம் படிக்க அனுப்ப வேண்டும் என்ற வெறி அதிகமானது.

ஆனால் சுப்புண்ணி கனபாடிகளுக்கோ அதில் துளியும் இஷ்டம் இல்லை.  தான் கஷ்டப்படுவது போல் தன் குழந்தையும் கஷ்டப்படக் கூடாது என்று சொல்லி பள்ளியில் சேர்த்தார்.

"நாமளே இப்படி செய்தால் அப்புறம் வேதம் எப்படி வளரும்?" என்று மன்றாடிக் கேட்டும் பயனில்லை.  இதில் அவளுக்கு மிகுந்த வருத்தம்.

கணேஷும் மிக நன்றாக படித்து மிகப் பெரிய நிறுவனத்தில் அமெரிக்காவில் பணி புரிகிறான்.  கிராமத்தில் இருந்து காலி செய்து விட்டு சென்னைக்கு வந்தாகி விட்டது.  கணவரும் சில வருடங்களில் இறந்து போக தனிமையில் சென்னை வாசம்...கிராமத்து நினைவுகள் அடிக்கடி வந்து ஒரு வெறுமை சூழும் அலமேலு மாமிக்கு.

ஆறு மாதம் பையனுடன் அமெரிக்கா வாசம்..ஆறு மாதம் சென்னையில் தனிமை வாசம்.  அமெரிக்காவில் நல்ல வசதியுடன் பையனும் மாட்டுப் பெண்ணும் வேலை செய்கிறார்கள்.  இரண்டு குழந்தைகள்...அங்கு எங்கு சென்றாலும் கார் எடுத்துக் கொண்டு செல்வது வாடிக்கை..ஆனாலும் எங்கு நோக்கினும் வானுயர்ந்த கட்டிடங்கள்...கிராமத்தின் அழகிய சூழ்நிலையும், மாட்டு வண்டி பயணமும் அதிலும் குறிப்பாக காதுகளில் பாய்ந்த வேத கோஷங்களும் நினைவுக்கு வந்து மனதை வாட்டும்.

"ஏன் அம்மா ஏதோ பறிகொடுத்தது போல் இருக்கிறீர்கள்?  நான் சகல வசதிகளுடன் இருப்பது சந்தோஷம்தானே?" என்று மகன் கேட்கும் போது "குழந்தை நீ சந்தோஷமாக இருந்தால் எனக்கும் சந்தோஷம்தான்" என்று புன்னகை புரிவாள்.

கடந்த ஆறு மாதமாக அமெரிக்காவுக்கு பிள்ளை அழைக்கவில்லை.  ஆனால் பிள்ளை அடிக்கடி ஏதோ வேலை விஷயமாக வந்து போனான்..  

இதோ இப்போது பையனும் மாட்டுப்பெண்ணும் வந்து தன்னை அழைத்துக் கொண்டு காட்டிய இடத்தைக் கண்டதும் கண்களில் கண்ணீர்.  வேத கோஷங்கள் முழங்க சுற்றிலும் பசுமையாக மரம், செடி, கொடிகளுடன் தன்னை வரவேற்ற சுப்ரமணிய கனபாடிகள் வேத பாடசாலையைக் கண்டதும் மகிழ்ச்சி, வியப்பு, அழுகை கலந்த பாவத்துடன் தன் மகனை பெருமையுடன் ஏறிட்டாள் அலமேலு மாமி.

"அம்மா நானும் என் அமெரிக்க நண்பர்களும் சேர்ந்து கட்டிய பாடசாலை இது..வேதம் படிக்கும் குழந்தைகளின் உணவு, உடை,, தங்கும் இடம் மற்றும் வேதம் கற்பிக்கும் விற்பன்னர்களுக்கான சம்பளம் அனைத்தையும் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்...சமையலுக்கு இரண்டு மாமியும், சுத்து வேலைகளுக்கு ஆட்களும் போட்டிருக்கிறோம்... சுமார் ஐம்பது குழந்தைகள் தங்கி படிக்கும் வசதி உள்ளது..

உங்களுக்கு என்று தனி அறை...அதில் இருந்து கொண்டு நாள் பூராவும் நீங்கள் குழந்தைகள் வேதம் ஓதுவதை காது குளிர கேட்கலாம்.. இனி நீங்கள் தனிமையில் இருக்கப் போவது இல்லை..இங்கு படிக்கும் அத்தனை குழந்தைகளும் உன் குழந்தைகள்தான்...உங்களுக்கு இப்போது திருப்திதானே" என்று கேட்ட மகனை கண் குளிர பார்த்தாள் அலமேலு மாமி.

வேதம் படித்தால்தான் பெருமையா? அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வது உன்னத பணியன்றோ?  வேதங்கள் என்றும் அழியாது...இந்த பூமி இருக்கும் வரை உயிர்ப்புடன் இருக்கும் என்று எண்ணி தன் மனதை படித்து  அதை செயல்படுத்திய தன் மகனை பெற்றதற்கு உவகை கொண்டாள் அலமேலு மாமி.


Monday, November 13, 2023

டெல்லியிலிருந்து பஞ்சாப் அமிர்தசஸ்

நாங்கள் குடும்பத்தோட டெல்லியிலிருந்து பஞ்சாப் அமிர்தசஸ் ரயிலில் இரண்டாம் வகுப்பு ஸ்சிலீப்பர் கோச்சில் ஏறினோம்..(காரணம் ;- AC COACH FULL BOOKING ) அந்த ரயில் பல ஊர்களை கடந்து தான் டெல்லி வருகிறது.. வட மாநிலங்களில் புக் செய்திருந்தாலும் அவர்கள் படுத்து கொண்டு வரும் போது நம்மால் எழுப்பி நம் சீட் என கூறவே முடியாது.. நமக்கு மொழி பிரச்சனை வேற..ஹிந்தி எனக்கு சுத்தமா தெரியாது.. அவிய்ங்களுக்கு ஹிந்தி தவிர வேற எதுவும் தெரியாது.. இரவு 9 மணி குழந்தைகளோடு நானும் எவ்வளவோ போராடினேன்.. ஏற்கனவே மதுரையிலிருந்து 42 மணி நேரம் டிராவல் செய்து புதுடெல்லி வந்த அலுப்பு வேறு.. மதுரை டூ டெல்லி இரவு 7 மணிக்கு இறங்கி அடுத்து இந்த ரயிலில் ஏறி நிம்மதியாய் தூங்கலாம் என்றால் வடநாட்டுக்காரன் மனிதாபிமானமின்றி சிறிதும் இடம் தராமல் ஹிந்தியிலேயே எதேதோ பேசிட்டே இருக்கானுக.. .கொடுமை என்னன்னா டிடிஆர் அங்கே வரவே இல்லை... எனவே என்ன செய்வதென யோசித்த போது ரயில்வே புகார் வெப்சைட் ஞாபகத்திற்கு வர உடனே தாமதிக்காமல் நான் போனை எடுத்து வெப்சைட் உள்ளே போய் PNR நம்பரை பதிவிட்டு என்னோட இடத்தை தராமல் அராஜகம் செய்வதை பதிவிட்டேன்..அடுத்த மூன்று நிமிடத்தில் IRCTC யிலிருந்து போன் வந்தது. 

ஹிந்தி Or ஆங்கிலத்தில் பேசனும்..நாம் பேச நினைக்குற சொல்லும் விஷயத்தை உடனே பதிவிட்டு அடுத்த சில நிமிடத்தில் *RPF POLICE* உடனே நம் பெட்டியில் வந்து நம் குறையை கேட்டதுமே அவர்கள் உடனே செயலில் இறங்கியதும் அங்கே பெட்டியில் இருந்தவன் எல்லாம் எங்கிட்டு போறானே தெரியல.. Rpf police க்கு வட நாட்டான் செமையா பயப்படுறான். நமக்கு அடுத்து எந்த தொந்தரவு இல்லாம நம்ம பயணம் மிக சுமூகமாக அமையும்.

தொலை தூர பயணம் செய்வோர் நிச்சயமாக இதை தெரிந்து கொள்ளவே இப்பதிவு.

புகார் பதிவு மிக எளிது

குரோம்ல *RAILMADAD* என பதிவிட்டதும் உங்க மொபைல் நம்பரை என்டர் செய்யவும் மொபைல் நம்பருக்கு OTP வரும். அதை என்டர் செய்ததும் உங்க பயணம் செய்து கொண்டிருக்கும் TRAIN PNR NUMBER பதிவு செய்ததும் அதிலே உங்க ட்ரெயின் நம்பர் உங்க கோச் பெட்டி நம்பர் எத்தன பேர் நீங்க பயணிக்கிறீங்க என அனைத்து தகவலும் வரும்.. அதன் கீழே உங்க புகாரை பதிவிட COMMENT BOX இருக்கும்.. அதிலே ரத்ன சுருக்கமா நீங்க உங்க குறையை பதிவிட்டால் போதும்

உதாரணமாக *"MY SEATS OCCUPIED OTHERS* " என பதிவிட்டால் போதும்.

உடனே அடுத்த ஐந்து நிமிடத்திற்குள்ளே உங்க பிரச்சனை தீரும்.

நிம்மதியாக குடும்பத்தோடு பயணம் செய்யலாம்.

என் அனுபவத்தை பகிர்ந்தேன்.. உங்களில் பலருக்கு எப்போதாவது இது தேவைப்படும் . பதிவு செய்து வைத்துக் கொள்ளவும். 


Wednesday, October 25, 2023

மூக்கிரட்டை கீரை

பெரும்பாலும் மக்கள் அறியாத கீரை... அவ்வளவாக பயன்படுத்தப்படாத கீரை.. அதுதான் மூக்கிரட்டை கீரை.. 


நம் கண் முன்பேயே, வீட்டை சுற்றியும், சாலையோரங்களிலும், வயல்வெளிகளிலும் தரையிலேயே இந்த கீரை படர்ந்திருக்கும்..

ஆனாலும், இந்த கீரைக்குள் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதை பலரும் அறிந்திருக்கவில்லை.. இதற்கு மூக்கரட்டை கீரை என்றும் சொல்வார்கள்.

சிறுநீரகம் + மூலம் இந்த 2 பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டுமானால், மூக்கிரட்டையை மட்டும் விடாமல் பயன்படுத்த வேண்டும்.

சிறுநீரக கோளாறு: மூக்கிரட்டை கீரையை சுத்தம் செய்து அம்மியில் மை போல அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து வாயில் போட்டு விழுங்கி வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். இப்படி தினமும் 2 வேளை காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். மூலக்கட்டி இருந்தாலும் அவை சுருங்கி பூரணமாக குணமாகும்.

இந்த கீரையுடன் சேர்த்து, அதன் தண்டுகளையும் நறுக்கி ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அது ஒரு டம்ளர் வரும்வரை காய்ச்சி குடித்தால், சிறுநீரகத்துக்கு அவ்வளவும் நல்லது..

கல்லீரல்: சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், அதை கரைத்துவிடும்.. அதேபோலசிறுநீரகத்தில் தொற்றுநோய்கள் இருந்தாலும், இந்த கீரை குணப்படுத்திவிடும். மஞ்சள் காமலை இருப்பவர்களுக்கு கீழாநெல்லியுடன் இந்த கீரையையும் சேர்த்து தருவார்கள்.

இந்த இலைகளை பேஸ்ட் ஆக்கி கண்களின் மேல் தடவி வந்தால் இமை வீக்கங்கள் குணமாகும்... இந்த செடியின் வேர்கூட மருத்துவ குணம் நிறைந்தது.. இந்த வேரினை காயவைத்து, அரைத்து பொடித்து வைத்து கொண்டு, சுடுநீரில் கலந்து குடித்தால், கண்கள் சம்பந்தமான நோய்கள் தீரும்.. கண்பார்வையும் கூர்மைப்படும்..

உடல் எடை குறைய: உடல்எடை குறைபவர்கள் இந்த மூக்கிரட்டை கீரையை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.. இந்த கீரையை தொடர்ந்து சாப்பிடும்போது, சில மாதங்களில் உடல் எடையில் மாற்றம் காணலாம்.. மூக்கிரட்டை பொடியானது, உடல் பருமனை எதிர்த்து போராடி இதய செயலிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது. சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.புற்றுநோய் மற்றும் புற்றுநோய்களை ஏற்படுத்தும் செல்களை அழிக்கக்கூடியது.

கல்லீரல்: சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், அதை கரைத்துவிடும்.. அதேபோலசிறுநீரகத்தில் தொற்றுநோய்கள் இருந்தாலும், இந்த கீரை குணப்படுத்திவிடும். மஞ்சள் காமலை இருப்பவர்களுக்கு கீழாநெல்லியுடன் இந்த கீரையையும் சேர்த்து தருவார்கள்.

இந்த இலைகளை பேஸ்ட் ஆக்கி கண்களின் மேல் தடவி வந்தால் இமை வீக்கங்கள் குணமாகும்... இந்த செடியின் வேர்கூட மருத்துவ குணம் நிறைந்தது.. இந்த வேரினை காயவைத்து, அரைத்து பொடித்து வைத்து கொண்டு, சுடுநீரில் கலந்து குடித்தால், கண்கள் சம்பந்தமான நோய்கள் தீரும்.. கண்பார்வையும் கூர்மைப்படும்..

உடல் எடை குறைய: உடல்எடை குறைபவர்கள் இந்த மூக்கிரட்டை கீரையை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.. இந்த கீரையை தொடர்ந்து சாப்பிடும்போது, சில மாதங்களில் உடல் எடையில் மாற்றம் காணலாம்.. மூக்கிரட்டை பொடியானது, உடல் பருமனை எதிர்த்து போராடி இதய செயலிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது. சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.புற்றுநோய் மற்றும் புற்றுநோய்களை ஏற்படுத்தும் செல்களை அழிக்கக்கூடியது இந்த மூக்கிரட்டை..

இளமையை தக்க வைக்கும்.. வயிறு செரிமானத்துக்கும், ஜீரணி சக்திக்கும் இந்த கீரை உதவுகிறது.. மலட்டுத்தன்மையை நீக்கும்.. இது ஆண்மைக்குறைவு மற்றும் விறைப்புத்தன்மை குணப்படுத்தும். மேலும் சில வகையான புற்றுநோய்கள் தீவிரமாவதையும் குறைக்க உதவும். ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் உணவுக்கு முன் இந்த இலை சாறு 10 மில்லி அளவு குடித்துவந்தால் நிவாரணம் கிடைக்கும்.

பொரியல்: இந்த கீரையை பெரும்பாலும் கூட்டு செய்வார்கள்.. எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், உ.பருப்பு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.. பிறகு, கீரை சேர்த்து தண்ணீர் தெளித்து நன்கு வேகவைத்தால் மூக்கிரட்டை பொரியல் ரெடி..

அல்லது மூக்கிரட்டை கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டாக செய்து சாப்பிடலாம். இதனால், ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்... உடலுக்கு பலம் கொடுக்கும். உடலில் வாத நோய்கள் இல்லாமல் செய்யும்.

மூக்கிரட்டை கீரை எடுத்துகொள்ளும் போது அதிக காரம் உணவில் சேரக்கூடாது. உடலுக்கு குளிர்ச்சித்தரும் உணவுகள் தான் எடுக்க வேண்டும் என்பார்கள்.. ஆனால், எவ்வளவுதான் மருத்துவ குணம் இருந்தாலும், டாக்டர்களின் அறிவுரையோடு இந்த கீரையை எடுப்பது கூடுதல் பாதுகாப்பானது.. அந்தவகையில், நடைமுறை வாழ்வில் தவிர்க்கவே முடியாத கீரைதான், மூக்கிரட்டை கீரை.

Sunday, October 15, 2023

தமிழன்

தானியங்கள் ஒன்பது என நிர்மானித்த தமிழன் திசைகளை எட்டாகப் பிரித்தான் 

கிழக்கு

மேற்கு

வடக்கு

தெற்கு

வட கிழக்கு

வட மேற்கு

தென் கிழக்கு

தென் மேற்கு

திசையை எட்டாகப் பிரித்த தமிழன் இசையை ஏழாகக் கொடுத்தான்... 

ச ரி க ம ப த நி

இசையை ஏழாக கொடுத்த தமிழன் சுவையை ஆறாக பிரித்தான்... 

இனிப்பு

கசப்பு

கார்ப்பு

புளிப்பு 

உவர்ப்பு

துவர்ப்பு

சுவையை ஆறாக பிரித்த தமிழன் நிலத்தை ஐந்தாக பிரித்தான்... 

குறிஞ்சி  (மலைப்பகுதி) 

முல்லை   ( வனப்பகுதி) 

நெய்தல்  ( கடல் பகுதி) 

மருதம்      ( நீர் மற்றும் நிலம்) 

பாலை      ( வறண்ட பகுதி) 

நிலத்தை ஐந்தாக பிரித்த தமிழன் காற்றை நான்காக பிரித்தான்... 

தென்றல்

வாடை 

கோடை 

கொண்டல்

கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல் 

தெற்கிலிருந்து வீசும் காற்று தென்றல்

மேற்கிலிருந்து வீசும் காற்று கோடை 

வடக்கிலிருந்து வீசும் காற்று வாடை

காற்றை நான்காக பிரித்த தமிழன்

மொழியை மூன்றாக பிரித்தான்... 

இயல் ( இயற் தமிழ் ) 

இசை  ( இசைத்தமிழ்) 

நாடகம் ( நாடகத்தமிழ்) 

இம்மூன்றும் தமிழுக்கு இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்து கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது... 

இம்மூன்று மொழிகளுக்கும் தமிழர்கள் கொடுத்த முக்கியத்துவத்தையும் முத்தமிழ் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது... 

மொழியை மூன்றாக பிரித்த தமிழன்

வாழ்க்கையை இரண்டாக வகுத்தான்... 

அகம் 

புறம் 

கணவன் மனைவி வாழும் வாழ்க்கை அக வாழ்க்கை... 

வெளியில் இருக்கும் வியாபாரம் மற்றும் சுய ஒழுக்கம் எல்லாம் புற வாழ்க்கை... 

வாழ்க்கையை இரண்டாக வகுத்த தமிழன்... 

ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்தான்... 

ஒழுக்கத்தை ஒன்றாக வைத்தான் 

அதை... 

உயிரினும் மேலாக வைத்தான்... 

இதைத்தான் அய்யன் வள்ளுவர் இரண்டு அடியில் அழகாகச் சொன்னார்... 

ஒழுக்கம் விழுப்பந் தரலான் 

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்.

அம்மா சொன்ன அற்புதமான பொய்

அம்மா நீ அற்புதம்! 

அம்மா சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று :

கடைசி உருண்டையில்தான் எல்லா சத்தும் இருக்கும், இத மட்டும் வாங்கிக்கோடாகண்ணா!

நாம் பெற்ற முதல் இரத்த தானம் எது தெரியுமா? நம் அம்மா'வின் பால்தான்.

தன் 'அம்மா' தனக்கு என்னவெல்லாம் செய்தாள் என்பதை, மனிதன் கடைசி வரை உணர்வதில்லை.

அவன் அதை உணரும்போது அவள் உயிரோடு இருப்பதில்லை.

அம்மா' என் அருகில் இருந்தால், கல்பாறை கூட பஞ்சு மெத்தைதான்.

சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் தவித்து நின்று பார். தாய்மொழியின் அருமை புரியும். வெளிநாட்டில் இருந்து பார். தாய்நாட்டின் அருமை புரியும். இதேபோல, 'தாயை' விட்டு தள்ளி இருந்து பார். தாயின் அருமை புரியும்.

என் முகம் பார்க்கும் முன்பே, என் குரல் கேட்கும் முன்பே, என் குணம் அறியும் முன்பே என்னை நேசித்த ஒரே மனித இதயம், என் 'அம்மா' மட்டும்தான்.

ஓர் 'அம்மா'வின் இறுதி ஆசை. என் மண்ணறையின் மீது உன் பெயரை எழுதி வை. உன்னை நினைப்பதற்கு அல்ல, அங்கும் உன்னைச் சுமப்பதற்கு!

என்னை நடக்க வைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட, நான் விழுந்து விடக்கூடாது என்ற கவலையில்தான் இருந்தது என் 'அம்மா' வின் கவனம்.

நான் ஒருமுறை அம்மா என்று அழைப்பதற்காக, பிரசவ நேரத்தில் ஆயிரம் முறை அம்மா, அம்மா என்று கதறியவள்தான் என் 'அம்மா'

குழந்தைகளின் பல்வேறு அழுகைகளின் அர்த்தம் புரிந்த ஒரே டிக்ஸ்னரி புக், 'அம்மா' மட்டும்தான்.

தாய்மையின் வலி என்னவென்று எனக்கும் தெரியும். அதனால்தான் அன்று 'அம்மா' வுடன் சேர்ந்து நானும் அழுதேன் பிறக்கயில்

தேங்காய் திருகும்போது, 'அம்மா' விடம் திட்டு வாங்கிக் கொண்டே சாப்பிடும் சுகமே தனி!

அம்மா...! அப்பா, ஆடம்பரமாய் கட்டிக் கொடுத்த வீட்டை விட, உன் ஆடையில் கட்டித் தந்த அந்த (தொட்டில்) வீடுதான் பெரும் நிம்மதியைத் தந்தது.

 நோய் வரும்போது ஓய்வுக்கு பாயைத் தேடுவதை விட, என் 'தாயை'த் தேடுது மனசு

உலகில் மிகவும் அழகான வார்த்தை எது தெரியுமா? எனக்கு 'அம்மா'! உங்களுக்கு..?

அம்மா' என்பது வெறும் பெயரல்ல, மறப்பதற்கு! அது உயிரோடு கலந்த உதிரத்தின் உறவு.

ஆயிரம் கைகள் என்* கண்ணீரைத் துடைத்துப்

போனாலும், ஆறாத துன்பம் 'அம்மா' வின் சேலைத் தலைப்பில் துடைக்கும்போதுதான் நீங்கியது.

கடைசி தோசை சாப்பிடும் போது, சட்னியை வேண்டும் என்றே அதிகமாக வைத்து, சட்னியை காலி செய்வதற்காக, இன்னொரு தோசை வைக்கிறதுதான் 'அம்மா'வின் அன்பு.

நான் நேசித்த முதல் பெண்ணும், என்னை நேசித்த முதல் பெண்ணும் நீதானே 'அம்மா'!

மண்ணறையில் உறங்கச் சொன்னால் கூட, தயங்காமல் உறங்குவேன். 'அம்மா', நீ வந்து ஒரு தாலாட்டுப் பாடினால்...!

மூச்சடக்கி ஈன்றாய் என்னை என் மூச்சுள்ள வரை காப்பேன் 'அம்மா' உன்னை.

அன்பைப் பற்றி படிக்கும் போதெல்லாம் தவறாமல் வந்து போகிறது 'அம்மா' வின் முகம்.

உலகில் தேடித் தேடி அலைந்தாலும், மீண்டும் அமர முடியாத ஒரே சிம்மாசனம், 'அம்மா' வின் கருவறை.

வாழ்க்கையில் தியாகம் செய்பவர் அப்பா. வாழ்க்கையையே தியாகம் செய்பவர் 'அம்மா'!

அம்மா...!அன்று நம் தொப்புள் கொடியை அறுத்தது, நம் உறவைப் பிரிக்க அல்ல. 

அது நம் பாசத்தின் தொடக்கத்துக்கு வெட்டப்பட்ட திறப்பு விழா ரிப்பன்!     

Sunday, October 08, 2023

புத் என்கிற நரகம்

மஹாபெரியவா சத்யவாக்கு

இல்லற தர்மத்திலே ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஒரு புத்திரன் பிறந்தால் அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யும் கைங்கர்யங்களின் மூலம் தந்தைக்கு நல்ல கதியைத் தருகிறான்.

ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான். இது சாஸ்த்ரத்தில் உள்ளது.

அப்போ பொண்ணப் பெத்தவாக்கு?

"தசாநாம் பூர்வேஷாம் தசாநாம் பரேஷாம் ஆத்ம நச்ச லோத் தாரண த்வாரா நித்யநிரதிசய ஆனந்த ஸாஸ்வத விஷ்ணுலோக வாப்யர்தம் கன்னிகா தானாக்ய மஹாதானம் கர்த்தும் யோக்யதா ஸித்திம் அநுக்கிரஹாண"......

கன்னிகா தானத்தின் போது செய்கின்ற ஸங்கல்ப மந்திரம்.

தசாநாம் பூர்வேஷாம் என்றால் எனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள் . 

தசாநாம் பரேஷாம் என்றால் எனக்குப் பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள். 

ஆத்ம நச்ச என்றால் என்னுடன் சேர்த்து 21 தலைமுறைகளான என்னுடைய குலம் உத்தாரணம் பெறுவற்கும் நிலைத்த விஷ்ணு லோகத்தை நான் அடைவதற்கும் இந்த மாபெறும் தானமாகிய கன்னிகாதானம் உதவி செய்கிறது

ஒரு நல்ல பெண்ணைப் பெற்றெடுத்து அவளைத் தன் குலத்துக்கு இல்லாமல் வேறு குலத்துக்கு திருமணம் செய்வித்து அந்த குலத்தினுடைய சந்ததியை வ்ருத்தி செய்வதற்கு உதவுகின்றார் என்றால் இந்த தானம் எவ்வளவு பெரிய தானம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்..

ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்.

பெண்ணைப் பெற்ற தந்தைக்கு?

தனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள், பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள், தன்னுடன் சேர்த்து 21 தலைமுறைகள், நிலைத்த விஷ்ணு லோகத்தை அடைவதற்கு மாபெரும் தானமாகிய கன்னிகாதானம் உதவி செய்கிறது.

மஹாபெரியவா அருள்,

“தெய்வத்தின் அருள் இருந்தால் ஆண் குழந்தை. 

அந்த தெய்வமே நேரில் வந்தால் பெண் குழந்தை.”

ஹர ஹர சங்கர.. ஜெய ஜெய சங்கர.

Monday, October 02, 2023

அண்ட சராசரங்களின் கணக்கு

பிரமிக்க வைக்கும் அண்ட சராசரங்களின் கணக்கு. இத்தனையும் தாண்டி நம்பெருமாள் நம் ஒவ்வொருவர் மீதும் ப்ரத்யேகமாய் அனுக்கிரஹம் பண்ணுகிறார் என்றால்,அவருக்கு நம் மீது இருக்கும் கருணை வாத்ஸல்யத்தை என்னெவென்று சொல்வது? 

"ஸ்ரீமதே  நாராயணாய நமஹ" 




Thursday, September 21, 2023

காலச் சக்கரம்

இருபது வயசுல இதுதான் வேணும்னு தோணும்....

முப்பது வயசுல இது வேணும்னு தோணும்....

நாற்பது வயசுல இதுவே போதும்னு தோணும்....

ஐம்பது வயசுல இது இல்லைன்னா கூட பரவாயில்லைனு தோணும்.....

அறுபது வயசுல எது இல்லைன்னாலும் பரவாயில்லைனு தோணும்....

எழுபது வயசுல எதுவும் வேணாம்னு தோணும்....!!!!!!!

காலமாற்றம்.... 

காலச்சுழற்சி... 

கால நேரம்....!!!!!

பிடிவாதம் எல்லாம் முடக்குவாதமா மாறும்....!!!!ஆணவம்  எல்லாம் பணிவா மாறும்....!!!!

அதிகாரம் எல்லாம் கூனிக் குறுகி மாறி இருக்கும்.....!!!!

மிரட்டல் எல்லாம் கப்சிப்னு ஆகியிருக்கும்......!!!!

எது வேணும்னு ஆளாய் பறந்தோமோ....அதையே தூரமாக வைத்து பார்க்கத் தோணும்....!!!!

எதற்காக ஓடினோம்.... எதற்காக ஆசைப்பட்டோம்.... 

எதற்காக எதைச் செய்தோம்..... என்ற காரணங்கள் எல்லாமே ..... காலப் போக்கில் மறந்து போகும்.... மரத்துப் போகும்....!!!

தீராப்பகையைத் தந்து வன்மத்தோடு வாழ்ந்து ஆட விடுவதும் காலம்தான்...

அதன் பின் ஆட்டத்தை அடக்கி.... மறதியைக் கொடுத்து ஓரமாய் உட்கார வைப்பதும் அதே காலம்தான்....!!!!

வெளியே மாளிகையாய் தோற்றமளிக்கும் எதுவும்.,...

உள்ளிருக்கும் விரிசல்களை எடுத்துரைக்காது....!!!!

வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல..... 

அதற்குப் பல அவமானங்களைக் கடந்திருக்க வேண்டும்....

Wednesday, August 30, 2023

Sabarimala Pilgrims

 I am krishnakumar Ananthasivan, Chartered Accountant in Coimbatore.  I am a member of Kerala brahmana saba.  I request you to please post this item in your web so that all the  devotees who intend to travel to sabarimala during this season can consider the option of a stay before or after the sabarimala dharsan.

Transit accomodation for sabarimala piligirms near Kottayam at Free of cost

Our family have an ancestoral house in a village called  Thiruvarppu, Near Kottayam, Kerala which can be given as transit accomodation for sabarimala piligrims coming from  long distance (Mumbai, Chennai, Bangalore and Hyderabad etc).  The house is situated 8 KMS away from kottayam railway station and very close to  famous Krishnaswamy temple which opens at 2 AM on all 365 days.  As per the history, this temple was initially built for Lord Ayyappa and later on Sree krishna Idol was installed. There is a river which flows  very close to our house where the piligrims can take bath and have dharsan in local temples before proceeding to sabarimala.   Sabarimala  is around 120 KMS from my place.

 The facilities available are:

1. 2500 square feet traditional Nalu kettu house ( courtyard in the middle) with 2 attached bathroom and toilet and hotwater facility

2. Gas stove with connection- if required the piligrims can cook food.

3. Fans fitted in all rooms

4. car parking facility

Near by attractions:

1. Vaikom Siva temple & Ettumanoor siva temple is in a radius of 30 kms

2. Chottanikara temple 45 kms 

3. Kumarakom the tourist destination  7 Kms

The intention is to provide service to Lord ayyappa by giving facility to his devotees. The devotees need not stay in a hotel or railway room duirng their piligrimage. Interested person can contact me at 094433 56193 or 0422 2310489. No charges are collected from ayyappa devotees.

Swamiye saranam Ayyappa

thanks

Krishnakumar Ananthasivan

CA, Coimbatore