Thursday, February 10, 2022
நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது
மனதைத் தொட்ட வரிகள்
ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
Tuesday, February 01, 2022
பிணி நீங்க மகாபெரியவர் சொல்லித் தந்த மந்திரம்
காஞ்சி மகாபெரியவர் திவ்ய யாத்திரைகள் முடித்துவிட்டு மீண்டும் காஞ்சி மடத்திற்கு வந்து அங்கேயே முகாமிட்டிருந்த காலகட்டம் அது..
அந்த சமயத்தில் ஒருநாள் பரமாச்சார்யாளை தரிசிக்க வந்த கூட்டத்தில், நடுத்தர வயதுள்ள ஒரு தம்பதியரும் இருந்தார்கள். அந்த மனைவிக்கு ஏதோ உடல்நலக் குறைபாடு என்பது சாதாரணமாகப் பார்த்தவர்களுக்கே தெரிந்தது. தாங்க முடியாத வலியின் காரணமாக தவித்துக்கொண்டிருந்தார்.
இப்போது வெளியில் வரட்டுமா? அல்லது இன்னும் கொஞ்சம் கழித்து வழியட்டுமா? என்று கேட்பதுபோல் அவரது கண்களில் நீர் திரண்டு கொண்டிருந்தது. உடன் வந்திருந்த அவளது கணவர் மெதுவாகப் பேசி, அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். மனைவியின் தவிப்பில் அவரது மனம் எவ்வளவு சங்கடப்படுகிறது என்பதை அவரது முகத்தோற்றமே படம்பிடித்துக் காட்டியது.
மெதுவாக நகர்ந்த வரிசையில் தங்களுடைய முறை வரும்வரை பொறுமையாக நகர்ந்த அவர்கள், மகாபெரியவா முன் சென்று நின்றார்கள்.
இருவரும் ஒரு வார்த்தைகூட பேசுவதற்கு முன், "என்ன, ரொம்ப வலிக்கறதா? இதுக்கெல்லாம் மருந்து மாத்திரை மட்டும் போதாது. கொஞ்சம் மந்திரமும் வேணும்!" சொன்ன மகாபெரியவா, தன் பக்கத்தில் இருந்த அணுக்கத் தொண்டரைக் கூப்பிட்டு, ஏதோ சொன்னார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த சீடர் ஒரு பேப்பரில் எதையோ எழுதி எடுத்துக் கொண்டுவந்து மகாபெரியவா முன் நீட்டினார். அதை அப்படியே பார்த்த மகாபெரியவா, "சரியா எழுதி இருக்கியா? ஒரு தரம் படிச்சுக்காமி!" என்றார்.
காகிதத்தில் எழுதிக் கொண்டு வந்ததை அந்த சீடர், சத்தமாகப் படித்தார்.
"அஸ்மின் பிராத்மன் நநூ பாத்ம கல்பே தவம் இத்தம் உத்தாபித பத்மயோனி
அநந்தபூமா மம ரோகராசிம் நிருந்த்தி வாதாலய வாச விஷ்ணோ "
சீடர் படித்து முடித்ததும், "இது, ஸ்ரீமந் நாராயணீயத்துல இருக்கற ஸ்லோகம்!" சொன்ன மகாபெரியவா, "இதோட அர்த்தம் தெரியுமா உனக்கு? எங்கே சொல்லு பார்க்கலாம்!" என்று கேட்டார்.
"பெரியவா, உங்களுக்குத் தெரியாததில்லை. இது குருவாயூரப்பனைப்பத்தினை துதி. 'பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பனே, பத்ம கல்பத்தில் ப்ரம்மதேவனைத் தோற்றுவித்தவன் நீ. அளவற்ற மகிமையுடையவனாகிய நீயே எனது உடல் மனம் சார்ந்த எல்லா பிணிகளையும் நீக்கி ஆரோக்யம் அளிக்க வேண்டும்!' அப்படின்னு அர்த்தம்!"
பவ்யமாகச் சொன்னார், சீடர்.
"என்ன, ஸ்லோகத்தை நன்னா கேட்டுண்டேளா? இதை நூத்தியெட்டுத் தரம் நம்பிக்கையோட சொல்லு..நல்லதே நடக்கும்!" சொல்லி மாதுளம் பழம் ஒன்றைக் கொடுத்து அனுப்பினார், மகாபெரியவா.
அந்தத் தம்பதியும் ஆசார்யாளை நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதத்தை வாங்கிக் கொண்டு சென்றார்கள். ஆசார்யாளோ, அங்கே இருந்த வேற யாருமோ அந்தப் பெண்மணிக்கு என்ன உபாதைன்னு கேட்கவே இல்லை.
இந்த சம்பவம் நடந்து நாலஞ்சு மாசம் இருக்கும். அந்தத் தம்பதியர் மறுபடியும் மகாபெரியவாளை தரிசிக்க காஞ்சிபுரத்துக்கு வந்தார்கள். இந்த முறை அந்தப் பெண்மணியின் முகத்தில் வலியின் ரேகை கொஞ்சம்கூட இல்லை. அவள் கணவரது முகமும் தெளிவாகவே இருந்தது.
அமைதியாக வரிசையில் நடந்து, மகாபெரியவர் முன் சென்று நின்றார்கள். "என்ன நோய் போய்டுத்துன்னு டாக்டர்கள் சொல்லிட்டாளா? இனிமே ஒன்னும் பிரச்னை இல்லை. க்ஷேமமா இருங்கோ!" ஒன்றும் கேட்காமலே ஆசிர்வதித்தார் மகான்.
அவ்வளவுதான், கண்ணில் இருந்து நீர் பெருகி வழிய அப்படியே நெடுஞ்சாண் கிடையாக அவரது திருப்பாதத்தில் விழுந்தார் அந்தப் பெண்மணியின் கணவர்.
"தெய்வமே...என் மனைவிக்கு மார்புல புற்று நோய் இருக்கு. அதை குணப்படுத்துவது கஷ்டம். ஆபரேஷன் பண்ணினாலும் ரொம்ப முத்திட்டதால பலன் இருக்குமான்னு தெரியாது! னு டாக்டர்கள் எல்லோரும் கைவிட்டுட்டா. மன அமைதியாவது கிடைக்குமேன்னுதான் போனதடவை இங்கே வந்தோம். ஆனா, என்ன பிரச்னைன்னே கேட்காம, அது தீர்ந்து இவளோட உடல்நிலை சீராகறத்துக்கு ஒரு வழியையும் காட்டின உங்க கருணையை என்னன்னு சொல்றது!" என்று உரத்த குரலில் சொல்லிக் கதறி அழுதார் அவர்.
"இதெல்லாம் நான் ஒன்னும் பண்ணலை. அந்த நாராயண மந்திரத்தை நீங்க நம்பிக்கையோட சொன்னதுக்குக் கிடைச்சிருக்கிற பலன்..க்ஷேமமா இருங்கோ...ஒரு குறையும் வராது!" மென்னகையோடு சொல்லி ஆசிர்வதித்த ஆசார்யா, குங்கும பிரசாதத்தை அவர்களிடம் கொடுத்தபோது, கூடியிருந்த பக்தர்கூட்டம், மகாபெரியவாளின் மகிமையைப் புரிந்து கொண்டு, கோரஸாகக் குரல் எழுப்பியது.
Sunday, January 30, 2022
ஹிப்பி சகவாசம் சரிப்பட்டு வராது
‘நினைவு நாடாக்கள்’ என்ற பெயரில் ஆனந்த விகடனில் எழுதிய தொடர் கட்டுரையில் வாலி இந்த சம்பவத்தை சொல்லி இருக்கிறார். இந்தப் பதிவு https://periva.proboards.com/thread/15535/ என்ற இணையதளத்தில் இருந்து எடுத்து பதிவு செய்யப்பட்டது.
திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் மகன் திரும்பிவர அருளிய மகாபெரியவா.
வழி காட்டியவர் யார் என்று தெரிந்துகொள்ள கடைசிப் பாரா பாருங்கள்.
அந்தக் காலத்தில் மெல்லிசை மன்னர் என்றால் எம்.எஸ். விஸ்வநாதன், திரை இசைத் திலகம் என்றால் கே.வி.மகாதேவன். சினிமா உலகில் இசை அமைப்பாளர்களாக இருவரும் கொடிகட்டிப் பறந்தார்கள்.
(இருவர் பெயரிலும் என்ன ஒரு பொருத்தம் பாருங்கள்! இரண்டு பேருக்குமே சிவபெருமானுடைய பெயர்தான்!)
இவர்களுள் கே.வி.மகாதேவன் அவர்கள் வாழ்க்கையில் சாட்சாத் மகாதேவனின் அம்சமாகவே திகழ்ந்த மகாபெரியவர் நடத்திய மகத்தான அற்புதத்தைத்தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.
கே.வி.மகாதேவன் அவர்களின் மகன், அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஹிப்பி கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு, ஒரு கட்டத்தில் சொல்லாமல்,கொள்ளாமல் வீட்டைவிட்டே வெளியேறி எங்கோ சென்று விட்டான்.
துன்பத்தைத் துடைத்துக் கொள்ள கே.வி.எம்.. அவர்களுக்கு இசை கொஞ்சம் கை கொடுத்தது. ஆனால் அவரது மனைவியோ, என்ன செய்வதென்றே புரியாத நிலையில் இருந்தார்.(கையறு) அப்போது அவருக்கு ஆறுதலும்,தேறுதலுமா நல்லதொரு ஆலோசனை சொன்னார் ஒருவர்.
காஞ்சி மகா பெரியவாளை தரிசனம் செய்தால் நற்பலன் கிடைக்கும். உங்க பிள்ளை கண்டிப்பா மனம் மாறித் திரும்பி வருவான்!" எனச் சொன்னார். அதோடு அவரே,'காஞ்சிப் பெரியவரை தரிசிக்க உங்களுக்கு 'வாலி' உதவுவார்!" என்றும் சொன்னார்.
மறுநாளே வீட்டுக்கு வந்த கவிஞர் வாலியிடம்,திருமதி கே.வி.எம். அவர்கள் விஷயத்தைச் சொல்ல, "அடடே காஞ்சிப் பெரியவரைப் பார்க்கப் போவதென்பது கரும்பு தின்பது மாதிரி. எனக்கென்ன கசக்குமா? நாளைக்கே புறப்படுங்கள்.சென்று வருவோம்!" என்றார் கவிஞர்
மறுநாள், தேனம்பாக்கம் எனும் இடத்தில் மகா பெரியவா இருப்பதை அறிந்து அங்கே சென்றார்கள் எல்லோரும் மகாபெரியவாளை தரிசித்து அவரை நமஸ்காரம் செய்து எல்லாவற்றையும் சொன்னார்கள்.
அனைத்தையும் கேட்டுக் கொண்ட அந்த மகான், பதில் எதுவும் சொல்லாமல், திருமதி கே.வி.எம். அவர்களை மட்டும் அழுத்தமாக தீட்சண்யமாக ஒரு பார்வை பார்த்து விட்டு,கொஞ்சம் குங்குமத்தை வழங்கிவிட்டு, உள்ளே சென்றுவிட்டார்.
மகான் ஆறுதல் சொல்வார், அனுகிரஹம் செய்வார் என்று எதிர்பார்த்தால், அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லையே...ஒருவேளை நம் மகன் திரும்ப வரமாட்டானோ என்ற வருத்தத்தோடு திரும்பினார்கள் அவர்கள்.
வழியில் வாலி அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்." அந்த மகானின் பார்வை மட்டுமே போதும். அந்த தீட்சண்யமே உங்கள் மகனை திரும்ப வரவழைத்துவிடும், கவலைப்படாமல் வாருங்கள்!" என்றார்.
அவர்கள் வீட்டை நெருங்கியபோது கிட்டத்தட்ட நள்ளிரவை நெருங்கியிருந்தது. வீட்டின் வாசலில் இருட்டில் யாரோ நிற்பது தெரிந்தது. அழுக்கு உடை,பரதேசிக் கோலம் என்று நிழலாகத் தெரிந்தது.
ஹிப்பிகளோடு சேர்ந்துவிட்ட தங்கள் மகனும் இப்படித்தானே இருப்பான். ஒருவேளை அவன்தான் மனம் மாறி திரும்பி வந்திருப்பானோ....மனதுக்குள் பதைபதைப்போடு காரில் இருந்து இறங்கி அவனை நெருங்கிய திருமதி கே.வி.எம். அப்படியே சிலிர்த்துப் போனார். ஆமாம் அவர்கள் மகன்தான் திரும்ப வந்திருந்தான்.
கண்களில் நீர் தளும்ப மகனை அணைத்துக்கொண்டு தேம்பினார்,தாய்.
"இன்னிக்கு காலைல ஒரு பத்து பதினொரு மணி இருக்கும். அப்போதுல இருந்தே, 'இந்த ஹிப்பி சகவாசம் சரிப்பட்டு வராது. உடனே வீட்டுக்குத் திரும்பிடணும்'னு மனசுக்கு உள்ளே கட்டளை மாதிரி ஒரு குரல் கேட்டுண்டே இருந்தது. நானும் யோசிச்சேன். அது சொல்றதுதான் சரின்னு தோணித்து. அதனால திரும்பி வந்துட்டேன்!" என்று சொன்னான் அவர்களின் மகன்.
மகன் தனக்குள் கேட்டதாகச் சொல்லும் அந்தக் குரல், காஞ்சி மகானின் குரல்....இல்லை இல்லை அந்தக் கடவுளின் குரல் என்றே தோன்றியது, திருமதி கே.வி.எம். அவர்களுக்கு. அங்கேயே நின்று உரக்கச் சொல்லத் தொடங்கினார், 'ஜயஜய சங்கர..ஹரஹர சங்கர..'!
இன்னொரு முக்கியமான விஷயம். திருமதி கே.வி.எம். அவர்களிடம், 'காஞ்சி மகானை தரிசித்தால் பிரச்னை கண்டிப்பாகத் தீரும்' என்று ஆலோசனை சொன்னவர் யார் தெரியுமா?
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.தான்
Monday, January 24, 2022
ஸ்ரீராம பரதேசி சித்தர்
சித்த மகா புருஷர்கள் நமது மனித உயிர்களின் நலனுக்காக கூறிய மூலிகைகளில் வேம்பு மிகவும் முக்கியமானது. இன்றும் பெண்களால் வணங்கப்படும் வேப்பமரத்தின் சக்தியையும் வேப்பிலையின் மருத்துவ குணத்தையும் கருவூரார் சித்தர் மிக ஆராய்ந்து தனது கருவாத காவித்தில் குறிப்பிட்டுள்ளார்.
தானவானாம் வேம்பினுடை கற்பந்தன்னை தாரணியில் சித்தர்களே சாற்றக்கேளும் ஆனதொரு கார்த்திகையாம் மாதந்தன்னில் வாழ்மிருக சீரசமும் பூசந்தன்னில் என முதற்ஜலமிக்க கொழுந்தைக் கிள்ளி இன்பமுடன் தின்றுவர இருபத்தேழு நாள் ஆனதொரு சர்ப்பங்கள் தீண்டினாலும் அதுபட்டுப் போகுமப்பா அறிந்து கொள்ளே
இப்பாடலில் கருவூரார் கூறியுப்பதுபோல் கார்த்திகைத் திங்கள் மிருகச்சிரீடம் அல்லது பூசநாளில் ஆரம்பித்து வேம்பின் கொழுந்தைக் கிள்ளி 27 நாட்கள் தின்றால் பாம்பு கடித்தாலும் உடலில் விஷம் ஏறாது. ஒருமாதம் தின்றால் குஷ்ட நோய் விலகும். வேப்பிலையின் கொழுந்தை நிழலில் உலர்த்திப் பொடி செய்து வெருகடி - 3 விரல்களால் எடுக்கும் அளவு வீதம் - தேனில் குழைத்துத் தின்று வந்தால் நரை திரைகள் மாறும், குன்றாத இளமையுடன் 100 வயது வாழலாம்.
அடுத்து வேப்பமரத்தின் ஒரு திருகு ஆணியை அடித்து அதில் இருந்து பால் வரும் விதமாக ஒரு சிலாகையை அடித்து அந்த பாலை ஒரு பழகிய மண்பாண்டத்தில் விழும்படியாக வைத்து மூடி விடவேண்டும். 48 நாட்கள் சென்றதும் அந்த மண்பாண்டத்தில் இருக்கும் தைலத்தை எடுத்து 3 கழஞ்சு தைலம், 3 கழஞ்சு தேன் சேர்த்து 48 நாட்கள் உட்கொண்டால் முதுமை வராது. அதையே 6 மாதங்கள் உட்கொண்டால் உடல் வச்சிர காயமாகிவிடும்.
உமிழ்நீர் வேதனை உடையதாகிவிடும். காயசித்தி ஏற்படும். விண்வெளி சஞ்சாரமும் சாத்தியமாகும் என்கிறார் கருவூரார்.
ஸ்ரீராம பரதேசி சித்தர், கலைந்த கேசமும் கூர்மையான விழிகளும் ஒல்லியான தேகமும் கொண்வர். 1791 - 1868 வரை நம் தமிழ் மண்ணில் வாழ்ந்தவர். இவரது சமாதி பாண்டிச்சேரியில் இருந்து வில்லியனூர் செல்லும் வழியில் சுல்தான்பேட்டையின் திருப்பத்தில் வலப்புறத்தில் சிறிய மண்டபம் போல் இருக்கிறது.
இவர் 20 வயது இளைஞனாக ஆந்திராவில் இருந்து புதுவைக்கு வந்தவராம். அப்பொழுது அங்கு நடந்து கொண்டிருந்த இராமாயண சொற்பொழிவைக் கேட்டுவிட்டு ராமநாமத்தை உச்சரித்தபடியே நடந்துவிட்டு வில்லியனுக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஒரு மரம் நிழலில் உட்கார்ந்து ராம் ராம் என்று உச்சரித்துக் கொண்டே இருக்க ஆரம்பித்தாராம். பல நாட்களாக உணவு உறக்கம் இன்றி ராம் என்ற மந்திரத்தை உச்சரித்தபடியே தியான நிலையில் இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்ட அப்பகுதி மக்கள் அவருக்கு உணவு வகைகளை கொண்டு வந்து அவர் முன் வைத்து சாப்பிடும்படி வற்புறுத்த அவர் சாப்பிட மறுத்துவிட்டு தியான நிலையிலே இருந்தாராம்.
அப்போது அந்த ஊரில் ஒரு சிறுவனின் தந்தை பாம்பு கடித்து இறந்துபோக தந்தையின் இறப்பில் அதிர்ந்து போன சிறுவன் அதைவிடவும் சித்தர் பசியோடு தியானத்தில் இருக்கிறாரே என சாப்பாடு கொண்டு வந்தான்.
தந்தை இறந்த சோகத்தை விடவும் தனது பசியை பெரிதாக நினைத்து அச்சிறுவன் உணவு கொண்டு வந்திருப்பதை தனது ஆன்ம சக்தியால் உணர்ந்த சித்தர் சட்டென்று கண் திறந்து புன்னகை முகமாய் அந்த சிறுவனைப் பார்த்தபடியே உணவை சாப்பியோட ஆரம்பித்தார். சுற்றிலும் இருந்தவர்கள் ஆச்சர்யமாக பார்க்க சாப்பிட்டு முடித்த சித்தர் உங்கப்பாவுக்கு என்னாச்சு என்று கேட்க அந்த சிறுவன் அழுதுகொண்டே அவன் தந்தை இறந்த விஷயத்தை சொன்னான். அவர் உடனே கைகளை பற்றியபடி அவனுடன் அவன் வீட்டுக்கு சென்று இறந்து கிடந்த அந்த சிறுவனின் அப்பாவின் உடலை பார்த்து ராம ராம என உச்சரிக்க ஆரம்பித்தார். அடுத்த சில நிமிடங்களில் அங்கே இந்த மனிதரை கடித்த நாகம் தவழ்ந்து வந்து இறந்து கிடந்தவரின் மீது படமெடுத்து ஆடியது. சுற்றிலும் இருந்தவர்கள் ஆச்சரியத்தின் உச்சிக்கு செல்ல அந்த நாகம் அவர் உடலை தீண்டிய இடத்தில கொத்தி விஷத்தை உறிஞ்சிவிட்டு மெல்ல நகர்ந்தது. அடுத்த சில நிமிடங்களில் இறந்து கிடந்த மனிதர் தூங்கி எழுபவர்போல் எழுந்திருக்க அச்சிறுவன் சித்தரை கண்ணீரோடு வணங்க ஆரம்பித்தான். அவன் மட்டுமல்ல, சுற்றிலும் இருந்தவர்கள் அவரின் மகிமை உணர்ந்து ஆச்சர்யமாய் வணங்க ஆரம்பித்தனர்.
இதேபோல் விபத்தில் கால் உடைந்து நடக்கமுடியாமல் போனவரையும், வாத நோயில் கைகால்கள் வீழ்ந்தவரையும், கண் பார்வையில் குறைபாடு உள்ளவர்களையும், அதிசயத்தக்க வகையில் தனது கரத்தை அவர்கள் உடலில் பதித்து ராம் என்கிற மந்திர சொல்லினால் குணப்படுத்தி இருக்கிறார் சித்தர்.
சித்தரின் மகிமையும் அற்புதங்களும் பல ஊர்களுக்கு தெரிய வந்ததில் அவரைத் தேடி தினமும் நூற்றுக்கணக்கானோர் வர ஆரம்பிக்க அவர் அவர்களிடம் இருந்து விலகிச் சென்று தனிமையில் தவநிலையை மேற்கொள்ள ஆரம்பித்தார். 1840ம் வருஷம் ஏப்ரல் மாதம் 10 தேதி விடியற்காலையில் சித்தர் ராம் என்கிற மந்திரத்தை மிகவும் உச்சமான குரலில் நடுக்கத்துடன் சொல்ல அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சித்தரை நெருங்கி அவரது அமானுஷ்ய சப்தத்திற்கு விளக்கம் கேட்டனர். கண்விழித்த சித்தர் அடுத்தமாதம் பெரும் சூறாவளியும் பேய் மழையும் பொழிந்து இங்கே பெரும் பிரளயம் ஏற்படப்போகிறது. அதனால் வேறு ஊருக்கு குடிமாற்றி செல்லுங்கள் என்று சொல்ல யாரும் நம்பவில்லை. காரணம் மே மாதத்தில் வெயில் காலம் என்பதால் சூறாவளியும் மழையும் வராது என்று நம்பினார்கள். ஆனால் சித்தர் சொன்னது போலவே மே மாதம் சூறாவளியும் பேய் மழையும் பெய்து அந்த ஊர் மக்களை ஆச்சர்யப்படுத்தியது. அதுமட்டுமல்லாது தொடர்ந்து 3 நாட்கள் கனமழை பொழிந்ததில் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓட கிராமத்தில் ஏராளமான உயிர் பலிகள், சித்தர் சொல் மீறியதால் பாதிப்புக்கு உள்ளான. ஆனாலும் சித்தர் இருந்த இடமும் மழை வெள்ளத்தில் மூழ்கி வெள்ளக்காடாகி இருந்தது.
நாம் எல்லோரும் சித்தரின் வார்த்தையை மீறியதால் ஊரில் பல உயிர்களை இழந்ததோடு, சித்தரையும் இழந்து விட்டோமே என மக்கள் மனா இருக்கத்தோடு திரும்பினார். அவரது உடல் எங்காவது கிடைக்குமா என தேடி அலைந்தன. ஆனால் மண்ணில் புதைந்துபோன சித்தரின் உடலை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. சுமார் 28 ஆண்டுகள் கழித்து 1968ஆம் ஆண்டு வில்லியனூரில் ரயில்வே ஸ்டேஷன் கட்டுவதற்காக அக்கால பிரெஞ்சு அரசு அடிக்கல் நாட்டுவதற்காக பூமியைத் தோண்ட அப்பொழுது கடப்பாரையை இரத்தம் படிந்து வருவதை பார்த்து சற்று அகலமாக மண்ணை கிளற உள்ளே இருந்து ரத்தம் பீறிட்டு அடித்தது. பயந்துபோன மண் வெட்டும் தொழிலாளிகள் மண்வெட்டி கடப்பாரையை தூரமாக எறிந்துவிட்டு கைகளால் மண்ணை அப்புறப்படுத்த உள்ளே தியான நிலையில் சித்தரின் உடல் இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். அங்கே இருந்த சில முதியவர்கள் இது 28 ஆண்டுகளுக்கு முன்பு பெரும் வெள்ளத்தில் மறைந்துபோன சித்தரின் உடலை வெளியே எடுத்தனர். அந்த உடல் சாதாரண உடலின் சீதோஷ்ண நிலையில் இருப்பதும் நாடி துடிப்பதும் லேசாக மூச்சு வந்து செல்வதையும் பார்த்து அத்தனை பெரும் ஆச்சரியத்தின் விளிம்பிற்கு சென்றனர்.
28 ஆண்டுகளாக மண்ணுக்குள் ஒரு மனித உடல் எப்படி இந்த உயிர் நிலையோடு இருக்கமுடியும் என்று வியப்பாக ஒருவரை ஒருவர் பார்த்தனர். உடனே பிரெஞ்சு அதிகாரிகளுக்கும் மருத்துவர்களுக்கும் தகவல் சொல்லப்பட்டு எல்லோரும் வந்து பார்த்தனர். சித்தர் மீண்டும் கண் திறப்பார் என காத்திருந்தனர். ஆனால் 3 நாட்கள் வளர சித்தர் கண் திறக்காததால் அவர் உடல் ஜீவா சமாதி அடைந்துவிட்டதை உணர்ந்து அவரின் உடலை திருமஞ்சனத்தில் மாட்டி பெரிய மண்சால் ஒன்றினுள் அமரச் செய்து இப்போது அவரது ஜீவசமாதி மண்டபம் உள்ள சுல்தான்பேட்டையில் சமாதி செய்தனர். இன்றைக்கும் அங்கே ஜீவசமாதியில் வாழ்ந்துகொண்டிருக்கும் சித்தரை அணுகி அவரது மண்டபத்தில் தங்களது குறைகளை சொன்னால் அத்தனை குறைகளையும் தீர்த்து நல்வாழ்வு அளிக்கிறார் அந்த மகாசித்தர்.
நீங்களும் உங்கள் மனக்குறைகளை அவரிடத்தில் சொல்லுங்கள், உங்களுக்கும் நலம் பல வழங்கி நல்வாழ்வு அளிப்பார் ஸ்ரீராம பரதேசி சித்தர்.
Thursday, January 20, 2022
காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே
காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த சிவநேசன், நானகலை தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் பட்டினத்தார். இளம் வயதில் மிகுந்த சிவ பக்தி கொண்டவராக வாழ்ந்த அவரிடம் ஒரு நாள் ஒரு யோகி ஒரு பேழையில் சிவலிங்கமும், பிள்ளையார் விக்கிரகமும் கொண்டு வந்து கொடுத்துவிட்டுச் செல்ல மேலும் அவருக்கு சிவபக்தி அதிகமாகியது. சர்வசதா காலமும் இறைவனின் நினைவாகவே வளர ஆரம்பித்தார். வாலிப வயதிலும் அவர் தினம் அவ்விரு விக்கிரகங்களையும் ஆகம விதிப்படி பூஜித்து வந்தார். அவருக்கு ஏற்ற குணநலன்களோடு சிவகலை என்கிற மனைவி அமைய, அவர் வாழ்க்கை ஆன்மீக மனத்தோடு நகர ஆரம்பித்தது. மருதவாணர் அவருக்கு மகனாக பிறந்ததும், மேலும் அவர் வாழ்வில் ஏற்றமாகியது. மகன் இனிதே வளர்ந்ததும் தனது வணிகத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்தார். ஆனால் மருதவாணர் சென்ற கப்பல் நடுக்கடலில் பயணிக்கும்போது சூறாவளி காற்றும் பேய் மழையும் தாக்க கடுங்குளிரில் எல்லோரும் வேதனை அடைந்தனர். அப்போது மருதவாணனுடன் பயணித்த சிலர் அவரிடம் இருந்த அவலையும், எருவிராட்டியையும் தரும்படி கேட்க அவர் இதை நான் உங்களுக்கு தருகிறேன். ஆனால் கரை சேர்ந்ததும் நீங்கள் இதே மாதிரி எருவிராட்டியை திரும்பத்தருகிறேன் என்று எழுதி கொடுங்கள் என்று கேட்க அவர்களும் எழுதிக் கொடுத்தார்கள்.
கரைக்கு திரும்பிய மருதவாணர் பட்டினத்தாரிடம் நடந்ததைச் சொல்லி அவர்கள் எழுதிக்கொடுத்த சீட்டையும் மீதமிருந்த மூன்று எருவிராட்டிகளையும் தர கோபம் அடைந்த பட்டினத்தார் மருதவாணனிடம் இருந்து அந்த மூன்று எருவிராட்டிகளையும் பிடுங்கி ஆவேசமாய் தூக்கி எறிந்தார். அடுத்த நொடி அந்த எருவிராட்டிகள் கீழே உடைந்து சிதற அதற்குள் இருந்து விலை உயர்ந்த வைர, வைடூரியங்கள் கீழே சிதறி கண்ணை பறித்தன.
தன மகன் மருதவாணர் இவ்வளவு விலை உயர்ந்த பொருட்களை கொண்டு வந்ததை உணராமல் கோபத்தில் திட்டிவிட்டோமே என்று கலங்கிய பட்டினத்தார் தனது மனைவியிடம் நடந்ததை சொல்ல அந்த நொடி திக் பிரமை பிடித்தவர் போன்று சிவகலை நின்று கொண்டிருந்தாள், கையில் ஒரு பெட்டியுடன். அது தனது மகன் மருதவாணன் அப்பாவிடம் கொடுக்கச் சொன்னது என்று சிவகலை சொல்ல, திரும்பிய பட்டினத்தார் அதிர்ந்தார். அங்கேய் அவன் இல்லை, எப்போதோ காணாமல் போயிருந்தான் மருதவாணன். பெட்டியை திறந்தார் பட்டினத்தார் உள்ளே காதில்லா ஊசியும், ஒரு ஓலையும் இருந்தது. அதில் காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே என்று எழுதப்பட்டிருந்தது. நொடியில் பட்டினத்தாருக்குள் ஏதோ மாற்றம் நிகழ தன்னுடைய ஆடை அணிகலன்கள் எல்லாவற்றையும் களைந்து விட்டு இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டிக்கொண்டு துறவி ஆனார். இதைக்கண்டு அவர் மனைவியும், குடும்பத்தாரும் அதிர்ச்சி அடைய அவர் புன்னகை முகமாய் நகர்ந்து அவ்வூர் மண்டபத்தில் தங்க ஆரம்பித்தார். பெரும் செல்வந்தரான அவர் இப்படி துறவுக் கோலம் பூண்டு விட்டதில் அவரது உறவினர்களுக்கு அவர் மீது கோபத்தை உண்டு பண்ணியது. அதனால் அவரது சகோதரி பட்டினத்தாரை அழைத்து விஷம் தடவிய அப்பத்தை கொடுத்து சாப்பிடச் சொன்னாள். அதை தனது திருஷ்டியால் உணர்ந்த பட்டினத்தார் தன்வினை தன்னைச் சுடும், வீட்டப்பம் ஓட்டைச்ச்சுடும் என்று சொல்லி வீட்டுக் கூரையில் அதை சொருகி விட்டு போக அந்த வீடு குபீரென தீப்பற்றி எறிந்த சாம்பலானது. அதனால் திடுக்கிட்ட அவர் சகோதரி பட்டினத்தாரிடம் மன்னிப்பு கேட்க அவர் சிரித்தபடி மௌனமாக நகர்ந்தார். அதேபோல் ஒரு நாள் பட்டினத்தார் தாயார் இறந்துபோக, அவர் மீதுள்ள கோபத்தால் அதைக் கண்டு அஞ்சிடாத பட்டினத்தார் வாழை மட்டையில் கிடத்தி பாடல் ஒன்று பாட ஆரம்பிக்க அந்த பச்சை மட்டை குபீர் என தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தன் தாயாரின் ஈமக்கிரியையை முடித்துவிட்ட பட்டினத்தார் இனி இந்த ஊரில் இருப்பது நலமல்ல என்று திருவாரூர் சென்றார். அங்கே அவரது புகழ் தெரிய ஆரம்பிக்க தினமும் பல நூறு பக்தர்கள் அவரை நெருங்கி அவரிடம் அருளாசி பெற்று சென்றனர்.
ஒருநாள் அவரால் திருமணம் நடத்திவைக்கப்பட்ட ஒரு இளைஞன் திடீரென இரண்டு[போக அவனது மனைவியும் குடும்பத்தாரும் கண்ணீருடன் பட்டினத்தாரை அணுக, ஐயா நீங்கள் தான் இவனுக்கு கல்யாணம் செஞ்சுவச்சீங்க. இப்ப நீங்க தான் இவனை பிழைக்க வைக்கணும் என்று கதற, ஒரு நொடி அவர்களை அமைதி படுத்திவிட்டு தனது இறைவன் ஈசனிடம் வேண்டி பட்டினத்தார் மனமுருகி பாட ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம், அடுத்த சில நிமிடங்களில் இறந்து போன அவன் தூங்கி எழுவது போல கண் திறந்து எழுந்து உட்கார்ந்தான். அவன் குடும்பத்தார் பட்டினத்தாரை வணங்க அவர் லேசாக புன்னகைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து பேரையூர் என்ற இடத்திற்கு சென்றார். அங்கே மௌன விரதம் இருந்தவர் மீண்டும் நகர்ந்து உஜ்ஜயினி எனும் நகரத்திற்கு சென்று அங்குள்ள பிள்ளையார் கோவிவிலில் தியானத்தில் அமர்ந்தார். அப்போது அரண்மனையில் கொள்ளை அடித்த கொள்ளையர் அந்த கொள்ளையின் ஒரு பங்கை பிள்ளையார் கோயில் உண்டியலில் போடும் விதமாக தூக்கி எரிய அதில் இருந்த ஒரு தங்க பதக்கம் தியானத்தில் இருந்த பட்டினத்தாரின் கழுத்தில் விழுந்தது. இதை அறிந்த பட்டினத்தார் தவ நிலையிலேயே இருக்க அப்போது திருடர்களை தேடியபடி வந்த அரண்மனை காவலாளிகள் பட்டினத்தாரின் கழுத்தில் அரண்மனை பதக்கம் இருப்பதை பார்த்து அவர் தான் திருடன் என்று முடிவு செய்து அவரை அந்நாட்டு மன்னன் பத்திரகிரியிடம் அழைத்து சென்றனர்.
மன்னன் எதுவுமே விசாரிக்காமல் அவர் தான் அரண்மனையில் கொள்ளை அடித்தவர் என அவரை கழுவில் ஏற்ற உத்தரவிட்டான். பட்டினத்தாரை கழுவில் ஏற்றும் நேரத்தில் என் செயாலாவது ஒன்றுமில்லை என பாட ஆரம்பித்தார். உடனே அந்த கழுமரம் தானே தீப்பற்றி எரிந்து சாம்பலானது.
அதனைக் கண்ட மன்னன் பத்திரசிரியர் பட்டினத்தார் மகா சித்தர் என்று உணர்ந்து அவர் காலில் விழுந்து மன்னிக்கும்படி அழுதான். பட்டினத்தார் அவன் கரம் பற்றி தூக்க அவனது உடலில் மின்சாரம் பாய்ந்த உணர்வு ஏற்பட்டு உடல் சிலிர்த்தான். அடுத்த நொடி உலக மாயை வாழ்க்கையை உணர்ந்த பத்ரிசிரியர் தானும் துறவறம் பூண்டு உங்களுடன் வந்துவிடுகிறேன் என்று பட்டினத்தாரிடம் கேட்க அவர் நீர் முதலில் திருவிடை மருதூர் செல்லுங்கள் என்று சொல்ல்லிவிட்டு நகர ஆரமபித்தார். அதன் பிறகு பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று தரிசித்தட்டுவிட்டு திருவிடை மருதூருக்கு வந்த போது அங்கே மேற்கு கோபுர வாயிலில் கையில் திருவோட்டுடனும் ஒரு நாயுடனும் பத்திரிசிரியர் தங்கியிருப்பதை தனது திருஷ்டியால் உணர்ந்தார். அப்போது ஒரு முதியவர் பசி என்று பட்டினத்தாரிடம் கேட்க, நீ மேற்கு கோபுர வாசலுக்குப் போ அங்கே ஒரு குடும்பஸ்தன் இருக்கிறான், அவனிடம் கேள், சாப்பிட தருவான் என்று சொன்னார். அந்த முதியவர் அப்படியே சென்று கேட்க, பட்டினத்தார் வந்திருப்பதை உணர்ந்த பத்திரசிரியர் உடனே பட்டினத்தாரை நெருங்கி ஐயா நான் தான் துறவறம் பூண்டுவிட்டேனே என்னை ஏன் குடுபஸ்தான் என்று சொன்னீர்கள் என்று கேட்க நீ தான் திருவோடும் அதை காவல்காக்க ஒரு நாயும் சொந்தமாக வைத்திருக்கிறாய் நீ அப்பொழுது குடும்பஸ்தன் தானே என்று பட்டினத்தார் சொல்ல உடனே தன் தவறை உணர்ந்த பத்திரசிரியர் அந்த திருவோட்டை நாயின் தலையில் அடிக்க, ஓடு உடைந்தது, நாயின் மண்டை பிளந்து இறந்தது. அந்த நாய் மறுபிறப்பாக காசி மன்னனுக்கு புதல்வியாக ஜானவல்லியாக பிறந்தது. அவள் வளர்ந்து பருவம் அடைந்ததும் தனது முற்பிறவியின் நினைவு வர, தனது தந்தையுடன் திருவிடை மருதூருக்கு வந்தவுடன் அங்கே பத்திரசிரியை வணங்கி தனது முற்பிறவியின் நினைவுகளை சொல்ல, அவர் அதிர்வாய் அவளை பார்த்தார். உடனே அவள் தாங்கள் தான் எனக்கு முக்தி தர வேண்டும் என்று சொல்ல, அவர் பட்டினத்தாரை பார்க்க உடனே உள்ளே உள்ள கடவுளின் கருவறைக்குள் செல்லுங்கள் என்று பட்டினத்தார் சொல்ல அவர்கள் இருவரும் இறைவனின் சந்நிதிக்குள் சென்றனர். அப்பொழுது மிகப்பெரிய ஜோதி பிரகாசமாய் தோன்ற அதற்குள் இருவரும் ஐக்கியமாகி நொடியில் மறைந்து போனார்கள். பட்டினத்தார் அவர்களின் மாயையை உணர்ந்து புன்னகைத்தபடியே சென்னைக்கு வந்தார்.
திருவொற்றியூரில் சில காலம் தங்கி எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தினார். ஒரு நாள் கடற்கரை மணலில் சிறுவர்கள் சிலர் மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருக்க தாமும் அவர்களோடு சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பட்டினத்தார் ஓரிடத்தில் படுத்துக்கொள்ள, குழந்தைகள் விளையாட்டாக மணலில் அவரை மூட மற்றோரு இடத்திலிருந்து வெளியே வந்தார். இப்படியே பல இடங்களில் புதைந்து வேறொரு இடத்தில வெளிவந்துக் கொண்டிருந்தார். குழந்தைகள் ஆச்சர்யத்தோடும், திகைப்போடும் விளையாடிக் கொண்டிருக்க முடிவில் ஓரிடத்தில் தோன்றியவர் வேறெங்கும் வெளிவராமல் போக, சிறுவர்கள் தாங்கள் மணல் போட்டு மூடிய இடத்தை கிளறிப்பார்க்க அங்கே பட்டினத்தார் இல்லை, அங்கே மட்டுமில்லை அந்த மணல் பரப்பில் எங்குமே அவர் இல்லை. மாயமாய் மறைந்து விட்டார். முடிவாக அவர் மணலில் புதைந்த இடத்தில் கண்களை பளிச்சென்று கூசுமளவிற்கு ஒளிவெள்ளம் தோன்ற அங்கே ஒரு சிவலிங்க தெய்வீகமாக காட்சியளித்தார். ஒவ்வொரு நொடிப்பொழுதும் தன் வாழ்நாளில் ஈசனையே நினைத்து வாழ்ந்த பட்டினத்தார் அன்று சிவலிங்க ரூபமயமாகிவிட்டார்.
இன்றும் சென்னை திருவொற்றியூரில் சிவலிங்க வடிவமாய் தன்னை நாடி வருபவர்களின் துயர் தீர்த்து ஆனந்தமும் மனத்தெளிவும் செல்வமும் அருளி நல்லருள் புரிந்து கொண்டிருக்கிறார் அந்த மகா சித்தர் பட்டினத்தார்.
Monday, January 17, 2022
போகர் என்ற மாபெரும் சித்தர்
ஏசுகிருஸ்து பிறந்ததாக சொல்லப்பட்ட ஆண்டைவிட பல்லாயிரம் ஆண்டுகள் முன்னாடி பிறந்தவர் போகர் என்ற மாபெரும் சித்தர்.
இவரின் குறிப்புகளை திருடி வைத்துக் கொண்டு தான், வெள்ளைக்காரன் அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்திருப்பான் என தோன்றுகிறது.
ஆதாரம்
இவர் காளாங்கிநாதர் என்ற சித்தரின் சீடரும் 18 சித்தர்களில் ஒருவரும் ஆவார். இவர் பழனியில் இருக்கும் நவபாஷான சிலையை செய்தவரும் இவர்தான். இவரை பற்றிய தகவல் மிக ஆச்சரியத்தை கொடுக்கும். இவரை பற்றிய ஒரு தகவலை அவர் இயற்றிய சப்தகாண்டம் என்ற நுலில் அவர் கூறிப்பிட்ட தகவலைப் படித்து ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்று விட்டேன். இப்பேர்பட்ட தமிழனை உலகம் முழுவுதும் தெரியபடுத்த வேண்டும் என்பதே என் நோக்கம். அவர் இயற்றிய அந்த நூலில் 1799, 1800 ஆம் பாடலில் விமான தொழில்நுட்பத்தை பற்றிய குறிப்பையும் அதை எப்படி செய்யவேண்டும் என்றும் அதை வைத்து அவர் பறந்ததையும் தெள்ளதெளிவாக கூறிப்பிட்டிருக்கிறார்.
அது மட்டும் அல்ல 1926 ஆம் பாடலில் நீராவி இஞ்சின்(steam engine) வைத்து கப்பலை எப்படி இயக்குவது என்றும் கப்பலின் டிசைனிங்கையும் குறிப்பிட்டிருக்கிறார். இதை 5000 ஆண்டுகள் முன்பே தமிழன் கண்டுபிடித்து விட்டான் என்பது நமக்கெல்லாம் பெருமை. ஆனால் அப்பேர்பட்ட தமிழனை நாம் மறந்து விட்டோம் என்பது வேதனையளிக்கிறது.
தமிழனின் புகழ் உலகம் முழுவதும் பரவவேண்டும் உலகத்தின் முதல் இனமும் முதல்மொழியும் முதல் அறிவியல் விஞ்சானியும் முதல் மருந்துவனும் முதல் ஆன்மீகவாதியும் தமிழனே. இப்படி தமிழனின்
புகழை மறந்து நாத்திகம் பேசியும் மதமாற்றம் செய்தும் தமிழனின் பெருமை மறைக்கபட்டுவிட்டது.
https://www.facebook.com/groups/305917699863621/
போகர்! சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் இது. மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் _ என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான்.
அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார். சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து 'கடவுளைப் போல உதவினீர்கள் என் வரையில் நீங்களே கடவுள்' என்று சொல்வோம், அல்லவா.!
அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும். உண்மையில், முதல் சித்தன் அந்த ஆதிசிவன்தான். அவனே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றான். போகரைப்பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள், இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள். ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து, தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள். ஆனால் இதில், போகர் பெரிதும் வேறுபட்டே தெரிகிறார். பல சித்தர்கள் போல், இவரும் ஒரு சிவத் தொண்டரே. அதே சமயம், அன்னை உமையை தியானித்து அவளருளையும் பெற்றவர்.அவளது உபதேசம் கேட்டு பழனி மலைக்குச் சென்று தவம் செய்து முருகனை தண்டாயுத பாணியாகவே தரிசனம் செய்தவர். உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக, தான் தரிசித்த தண்டாயுபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர்.
பாஷாணங்களைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதம்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். அவைகளை உரிய முறையில் சேர்ந்துப் பிசைந்தால்தான் உறுதியான, ஒரு பொதுவான பாஷாணம் உருவாகும். இதை நயனங்களால் பார்த்தாலேகூட போதும். அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர்வீச்சு, கண்வழியாக உடம்பின் உள்ளும், உடம்பின் புறத்திலும் படிந்து, நலம் ஏற்படும். இதன்மேல் பட்டு வழியும் பொருள் எதுவாயினும் அதுவும் மருத்துவ குணம் கொண்டு தீராத வியாதியை எல்லாம் தீர்த்து வைக்கும்.
உயர்வான பாஷாணங்கள் ஒன்பதை தேர்வு செய்து அதைக் கொண்டு போகர் செய்ததுதான் பழனிமுருகனின் மூலத் திரு உருவம். அவ்வாறு செய்ததோடல்லாமல், அவ்வுருவத்திற்கு ஏற்ற வழிபாட்டு முறையை ஒரு புதிய சித்தாகமமாகவே உருவாக்கி அதையும் நடைமுறைப்படுத்தியவர் போகர்.
https://www.facebook.com/groups/305917699863621
மனிதப் பிறப்பானது கோள்களால் நிர்வகிக்கப்படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வுசெய்து அதிலிருந்து தண்டாயுத பாணியை செய்து, கோள்களை ஓர் உருவுக்குள் அடக்கிப் பூட்டியவர் போகர் என்றும் கூறுவர்.
தண்டாயுத பாணியை எவர் வந்து தரிசித்து வணங்கினாலும் நவ கோள்களையும் ஒருசேர வணங்கிய ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு உண்டாவது, இதனுள் அடங்கிக் கிடக்கும் இன்னொரு நுட்பம்.
இப்படி பழனியம்பதியில் முருக வழிபாட்டிற்கு களம் அமைத்த போகரின் வாழ்க்கையும் ஒரு வகையில் நவரசங்களால் ஆனதுதான். பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி வைகாசி மாதத்து பரணி நட்சத்திரத்தில் பிறந்த போகரின் பிறப்பு மூலம் பற்றி பெரிதாக செய்திகள் இல்லை. ஆனால்,நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதரின் மாணவர் இவர் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒரு செய்தி.அதை இவரது, அரிய நூல்களுள் ஒன்றான 'போகர் ஏழாயிரம்' எனும் நூலின் வழி அறியலாம்.
பதினெண் சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பு, நவசித்தர்களே பிரதானமாகக்கருதப்பட்டனர். மேருமலைதான் இவர்களின் யோகஸ்தலம். மேருவும் இமயமும் உலகப் பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு வெளியாகவே விளங்கியது. இங்கேதான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர், காலாங்கிநாதர். காலாங்கி நாதர், போகர் வந்த சமயம் மகாசமாதியில் இருந்தார்.
போகர், சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி, அவ்விரு மலைகளிலும் பல தாது வகைகளை தேடிக்கண்டு பிடித்தார். அதைக் கொண்டு பல காய கற்பங்களை செய்து, தானே உண்டு பார்த்து அதன் பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும், வானவெளியில் பறப்பது, நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிக மிகச் சாதாரணமாகியது. இதனால் போகருக்குள் கர்வம் துளிர்த்துவிட்டது.
துரோணருக்கு ஓர் ஏகலைவன் போல தானும் குருவை வணங்கி அந்த அருளாலேயே பல தாதுக்களை கண்டறிந்து விட்ட ஒருவன்; உண்மையில் காலாங்கி நாதருக்கு சீடர்கள் இருந்திருந்தால், அவர்கள் கூட இப்படி எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள்; என்றெல்லாம் நினைக்கத் தொடங்கிவிட்டார்.
இதனால், அந்த மலைத் தலத்தில் பணிவாக பார்த்துப் பார்த்து நடந்தவர், நிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தார்.
https://www.facebook.com/groups/305917699863621
மேருவிலும் இமயத்திலும் சூட்சம வடிவில் பலநூறு சித்த புருஷர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களில் பலரது தவம், போகரின் கர்வமான நடையால் கலைந்தது. அவர்கள் கண்விழித்ததோடு போகருக்கும் காட்சியளித்தனர். திடுக்கிட்ட போகரிடம் நாங்கள் காலாங்கி நாதரின் மாணவர்கள். பலப்பல யுகங்களாக எங்களை மறந்து தவம் செய்தபடி இருக்கிறோம் என்றார்கள். அத்தனை யுகங்களும் சில நாட்கள் கடந்தது போலத்தான் இருக்கிறது என்று அவர்கள் கூற, போகருக்கு அது ஆச்சரிய அதிர்ச்சியாகியது.அப்படியானால் அவர்கள் தவத்தை எவ்வளவு பெரிய விஷயமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அந்த நொடி, தான் கற்ற தாதுவித்தை எல்லாம் மிக அற்பமானது என்கிற எண்ணம் ஏற்பட்டு அவரது கர்வமும் அடங்கியது. அதை அறிந்த அந்த சித்தபுருஷர்கள், போகருக்கு பல சித்த ரகசியங்களை போதித்தார்கள்.
ஒரு சித்தர், போகர்மீது பெரும்கனிவு கொண்டு, 'அமிர்தமணிப்பழம்' என்னும் தேவக்கனி மரம் ஒன்றை அந்த வெளியில் காட்டி, அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள்முழுக்க பசிக்காது, நரைக்காது, முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை உண்டுவிட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறிட,போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய 'பசி, தாகம், மூப்பு' என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார்.
இப்படி படிப்படியாக முன்னேறிய போகருக்குள் சில விசித்திரமான எண்ணங்களும் ஏற்பட்டன. அவை முழுக்க முழுக்க மனித சமுதாயம் தொடர்பானவையே.. ஒரு உயிர் எதனால் மனிதப் பிறப்பெடுக்கிறது? அப்படிப் பிறக்கும்போது அது எதன் அடிப்படையில் ஏழையின் வயிற்றிலும், பணக்காரனின் வயிற்றிலும் பிறக்கிறது? இறப்புக்குப்பின் கொண்டு செல்வது எதுவும் இல்லை என்று தெரிந்தும் வாழும் நாளில் மனிதன் ஏன் ஆசையின் பிடியிலேயே சிக்கிக் கிடக்கிறான்? எவ்வளவு முயன்றும் அவனால் மரணத்தை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை?
இப்படிப் பலவித கேள்விகள் போகரை ஆட்டிப்படைத்தன. மொத்தத்தில் மனித சமூகமே வாழத் தெரியாமல் வாழ்ந்து விதியின் கைப்பாவையாக இழுத்துச் செல்லப்படுவது போல உணர்ந்தவர், மனித சமூகத்தை காப்பாற்றியே தீர வேண்டும் என்று எண்ணம் கொண்டார். இதனால், தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் 'போகர் ஏழாயிரம்', போகர் நிகண்டு, 17000 சூத்திரம், 700 யோகம் போன்றவை.
இவர் உள்ளத்தில் மனித சமூகத்தை நோயின்றி வாழவைக்கும், அரிய குறிப்புகள் தோன்றின. அதேசமயம், இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர். சித்த ரகசியங்களை எழுதிவைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை, ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர், அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றி காட்டினார்.
அந்த மந்திரம், தம்பணா மந்திரம் எனப்படுகிறது. இன்றும் காடுகளில் மூலிகை தேடிச்செல்வோர் தம்பணா மந்திரத்தை மானசீகமாக உச்சரித்து, காணப் பெறாத மூலிகைகளையும்கண்டு அதைக் கைப்பற்றுவர். அமிர்தத்துக்கு இணையான ஆதிரசத்தையே இவர் கண்டறிந்தார் என்பர். அதைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமோ, அமிர்தமோ தேவர்களுக்கே உரியது. அசுரர்களோ மானிடர்களோ அதை உண்டால் அதனால் உலகம் அழிந்து விடும் அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர்.
https://www.facebook.com/groups/305917699863621
தங்கள் அச்சத்தை தட்சிணா மூர்த்தியாகிய சிவபிரானிடம் கூறிட, சிவபிரானும் அவர்களது கவலையை நீக்குமூலமாக போகரை அடைந்து அவர் அறிந்து எழுதிய அவ்வளவு ரகசியங்களையும் கேட்டார். போகர் எழுதியதை, போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர்களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த அவர், போகரின் முயற்சியை ஆசிர்வதிக்கவேசெய்தார். அதன்பின் இவர் புகழ் பலமடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள், குளிகைகள் பெற்றுச் சென்றனர்.
மொத்தத்தில் மனித சமூகத்தை, இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே, தேவர்களுக்கும் கந்தவர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார்.
அண்டை நாடான சீன தேசமும், நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும், புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால், மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது. அங்கே, 'போ யாங்' என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள், கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து, சீனராகவே வாழ்ந்தார் என்றும் ஒரு கதை உண்டு.
சீனர்கள், இந்தியர்களில் இருந்து உணவுப் பழக்க வழக்கங்களில் பெரிதும் வேறுபட்டவர்கள். இந்திய உணவில் எண்ணெய், கொழுப்பு சத்து, காரம், புளிப்பு, உவர்ப்பு என்றெல்லாம் பல சுவைகள் உண்டு. சீனர்களிடம் அப்படி இல்லை. அவர்களது உணவுமுறை ரஜோ குணத்தை தூண்டுவதாகவும்; எலும்பு, நரம்பு இவைகளை வலுவாக வைத்துக்கொள்ளத் தக்கதாகவும் இருந்தமையால், அவர்களிடம் பல வித்யாசமான பயிற்சி முறைகள் இருந்தன.அதில் 'ரஜோலி' என்னும் யோக முறையும் ஒன்று. போகர் அதை ஆர்வத்துடன் பழகிடும்போது தலையில் அடிபட்டு அவருக்குள் அவர் பற்றிய அவ்வளவு எண்ணங்களும் மறைந்துபோன. பின்னர், அவரைத் தேடிக்கொண்டு வந்த போகரின் மாணாக்கர்களில் ஒருவரான புலிப்பாணி, போகரின் நிலை கண்டு கலங்கி, அவரைத் தன் முதுகில் சுமந்துகொண்டு இந்தியா திரும்பினார் என்றும் சொல்வர்.
அதன்பின் குருவுக்கே அவரிடம் கற்றதை உபதேசித்து, அவருக்குள் மீண்டும் பழைய எண்ணங்களை தோற்றுவித்தார். ஒரு சீடன், குருவுக்கு உபதேசிப்பது என்பது காரியப் பிழையில் முடிந்து, முடிவில் அவனையே சாபத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதால்,புலிப்பாணி, போகரின் தண்டத்திற்கு உபதேசிப்பது போல போகருக்கு உபதேசித்து போகரை மீண்டும் நிலை நிறுத்தினார். அதன்பின், போகர் ஒரு புத்துயிர்ப்போடு எழுந்தார்.பலவித அனுபவங்களால் பழுத்த ஞானியாகிவிட்ட அவர், இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் பழனி. அங்கேயே முக்தியும் அவருக்குக் கிட்டியது. மொத்தத்தில் போகர் என்றால் 'நவநாயகர்' என்றும் கூறலாம்.
அகஸ்திய முனிவர் போக சித்தரை சீன தேசத்தவர் என்று கூறுகிறார். புலிப்பாணியின் குரு என்றும் இவருடைய தாய் தந்தையர் சீனாவில் பெண்களுக்குத் துணிகள் வெளுத்துக் கொடுத்துப் பிழைத்து வந்தனர் என்றும் அகத்தியர் கூறுகிறார். போகர் திருமூலர் காலத்தினைச் சேர்ந்தவரென்றும் பழனி மலையில் வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷானக் கட்டில் தயாரித்தார் என்றும் அவருடைய வரலாறு பேசப்படுகிறது. போக முனிவர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார்.
அகத்தியர் தமது சௌமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத் தருகிறார்.
1. போகர் – 12,000
2. சப்த காண்டம் – 7000
3. போகர் நிகண்டு – 1700
4. போகர் வைத்தியம் – 1000
5. போகர் சரக்கு வைப்பு – 800
6. போகர் ஜெனன சாகரம் – 550
7. போகர் கற்பம் – 360
8. போகர் உபதேசம் – 150
9. போகர் இரண விகடம் – 100
10. போகர் ஞானசாராம்சம் – 100
11. போகர் கற்ப சூத்திரம் – 54
12. போகர் வைத்திய சூத்திரம் – 77
13. போகர் மூப்பு சூத்திரம் – 51
14. போகர் ஞான சூத்திரம் – 37
15. போகர் அட்டாங்க யோகம் – 24
16. போகர் பூஜாவிதி – 20
இவைகளில் போகர் 12000 மற்றும் இரண வாகடம் நூல்கள் கிடைக்கவில்லை. போகரின் நூல்கள் யாவுமே அமுதமாகும் என்று காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார். போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர்.
இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகிலிருக்கும் நவநாத சித்தர்கள் சமாதியை அடைந்தார். ஒன்பது சித்தர்களும் போகருக்கு தரிசனம் தந்தனர். போகரும் இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரவித்தையைக் கற்றுத் தருமாறு கேட்டார்.
“தகுதியுள்ளவர்களுக்கு காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு அவர்களை நீண்ட காலம் வாழவை. மரணமடைந்தவர்களுக்காக மனதைக் குழப்பிக் கொள்ளாதே” என்று அறிவுரை கூறினர். அதுவரையில் போகர் அறிந்திராத காய கல்ப முறைகளையும் கற்றுக் கொடுத்து மறைந்தனர்.
போகர் தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். கொஞ்ச தூரத்தில் ஒரு புற்றிலிருந்து ஒளிக் கற்றை ஒன்று புலப்பட்டது. அந்த ஒளியை தொடர்ந்து புற்றின் முன் போய் நின்றார். யாரோ ஒரு சித்தர் இந்தப் புற்றின் உள்ளே தம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த போகர், அந்தப் புற்றை வலம் வந்து அதன் அருகிலேயே ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் ஆனது, போகரின் தியானத்தால் புற்றில் இருந்த சித்தரின் தியானம் கலைந்தது. உடனே அவர் புற்றை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.
போகர், “தங்களை தரிசித்ததில் வாழ்வின் பெரும்பயனை அடைந்தேன்” என்று கூறினார். சித்தர் அங்கிருந்த மரங்களில் ஒன்றைக் காட்டி “போகா! அந்த மரத்தின் பழங்களில் ஒன்றைச் சாப்பிட்டால் போதும் ஆயுள் முழுவதும் பசிக்காது, முடி நரைக்காது, பார்வை மங்காது, இவ்வளவு ஏன்? எல்லோருக்கும் அச்சம் தரும் முதுமை என்பதும் வரவே வராது. தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும்” என்றார். போகர் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார்.
https://www.facebook.com/groups/305917699863621
சித்தர் புலித்தோல் ஆசனம் ஒன்றைக் கொடுத்து, “இது உனக்கு தவம் செய்ய உதவும்” என்றார். அந்த சமயத்தில் பதுமை ஒன்று அவர் எதிரில் தோன்றவே “போகா! இனி உனக்கு தேவையானவைகளை இந்த பதுமை சொல்லும்!” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தியானத்தில் மூழ்கி விட்டார். பதுமை மூலிகை ரகசியங்கள், போகருக்கு உயிரின் தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்த உடலில் அது படும் துன்பம் ஆகிய நிலைகளைத் தெளிவாக உணர்த்தியது. அதைக் கேட்டு ஆச்சரியத்தில் இருக்கும் போது பதுமை வந்தது போலவே மறைந்தும் விட்டது.
பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு உணவு சமைத்து உண்ட பின் நீர் வேட்கையால் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் கும்பலாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். போகர் அவர்களிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார்.
“யார் நீ! அப்பாலே போ! அருகில் வந்தாலே நாற்றமடிக்கிறது” என்று எரிந்து விழுந்தனர். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து அந்த வழியாக வந்த பூனை ஒன்றின் காதில் போகர் வேதத்தை ஓதிவிட்டார். பூனை நன்றாக உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொட்ங்கியது.
அந்தணர்கள் தாங்கள் அறியாமல் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர். “ஐயனே எங்கள் வறுமை அகல தாங்கள் வழி செய்ய வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டனர்.
போகர் அவர்களுடைய வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார்.
போகர் தவம் செய்து முடித்த இரச மணிக் குளிகைகளின் ஆற்றல் கண்டு மிகவும் வியப்படைந்தார். அதே போல குளிகைகளைச் செய்து மற்ற சித்தர்களுக்கும் அளிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார்.
அதற்காக ரோமாபுரி சென்று மிகத் தூய்மையான ஆதி ரசம் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தார். உடனே குளிகைகளில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு ரோமாபுரியில் தோன்றி அங்கு இருந்த இரசக் கிணற்றைத் தேடிப் பிடித்தார். இரசத்தை சுரைக் குடுவையில் நிரப்பிக் கொண்டு விண்ணில் தாவினார்.
அதன்பிறகு ஆதிரசத்துடன் விண்மார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.
தஞ்சையில் பிரகதீசுவரர் ஆலய லிங்கப் பிரதிஷ்டைக்காக காக்கையின் கழுத்தில் ஓலை ஒன்றை கருவூராருக்கு அனுப்பினார். கருவூரானும் அதன் படியே செய்து லிங்கப் பிரதிட்டை செய்து முடித்தார்.
போகர், தட்சிணா மூர்த்தி உமைக்கு அருளிச் செய்த ஞான விளக்கம் ஏழு சட்சத்தையும் ஏழு காண்டமாக்கி தமது மாணவர்களுக்கு உபதேசித்தார். மற்ற சித்தர்கள், “இறைவன் உபதேசித்ததை வெளியில் சொல்வது குற்றம்” என்று கூறி இத்தகைய செயலை அவர் உடனே நிறுத்தியாக வேண்டும்” என்று தட்சிணாமூர்த்தியிடம் முறையிட்டனர்.
தட்சிணாமூர்த்தி போகரை அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார். “போகரே! நீர் பூனைக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்து ஓதச் செய்தீர், சிங்கத்திற்கு ஞானம் கொடுது அரசனாக்கினீர், மேருமலைக்குச் சென்று தாதுக்களைக் கொண்டு வந்தீர், ரோமபுரி சென்று ஆதிரசம் கொண்டு வந்தீர், இதையெல்லாம் விட நாம் உமாதேவிக்கு கூறிய தீட்சை விதி, யோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு காண்டமாக உருவாக்கியுள்ளீராமே! நீர் செய்த நூலைச் சொல்வீராக” எனக் கேட்டு போகரின் நூலாழத்தினையும் பொருட்சிறப்பையும் உணர்ந்து மகிழ்ந்து வாழ்த்தினார்.
போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர்முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம், முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார்.
போகர் கனவில் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாஷாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். பழனிமலை இறைவன் திருமேனியைத் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார். ஒன்பது விதமான விஷங்களை (நவ பாஷாணங்கள்) முயன்று கூட்டி உருவாக்கிய திருமேனியில் ஊறிய விபூதியும், பஞ்சாமிர்தமும் போகருக்கு உள்ளொளியைப் பெருக்கியது.
இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரனை உருவாக்கியவரும் போகரே என்றும் கூறுவதுண்டு. பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.
போகர் பூசித்து வந்த புவனேச்வரி அம்மையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும் புவனேச்வரி அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்றிருப்பதாக கூறப்படுகிறது.
இங்கு கூறப்பட்ட வரலாற்று செய்திகளனைத்தும் சதுரகிரி தலப்புராணத்தில் கூறப்பட்ட சித்தர் அறிவியல்🙏
Sunday, January 16, 2022
முனியாண்டி சித்தர்
மதுரையை அடுத்த கல்லுப்பட்டிக்கு அருகே உள்ள கே. ரெங்கபாளையம் எனும் கிராமத்தில் வாழ்ந்து பல சித்தாடல்களும் அற்புதங்களும் நிகழ்த்திய ஸ்ரீ முனியாண்டி சித்தரைப் பற்றி தெரிந்து கொள்வோமா?
சாதாரண மனிதரைப் போன்றே இயல்பான அமைதியான முகத்துடன் சாந்த சொரூபியாக எப்பொழுதும் காட்சியளித்த சித்தர் உடலில் காவி உடையைச் சுற்றியிருப்பார்.
அவருக்கு எதிரே என்ன பிரச்சனைகளோடு யார் சென்று நின்றாலும், அவர்களின் ஆன்மாவிடம் பேசி அந்த அன்பர்களுக்குத் தெரியாமலே அவர்களின் பிரச்னைகளிருந்து அவர்களுக்கு விடுதலை வாங்கித் தருவார்.
அரிஜன வகுப்பைச் சேர்ந்த தாய் தந்தையருக்கு பிறந்த சித்தர் தனது இளம் வயதில் மாடு மேய்க்கும் சிறுவனாக வாழ்க்கையைத் துவங்கினார்.
அப்பொழுது ஒருநாள் மாடுகளை மேயவிட்டுவிட்டு அரசமரத்து பிள்ளையார் குளக்கரையில் தூங்க ஆரம்பித்தார். அப்போது மனதை மயக்கும் ரம்மியமான மணமும் மெல்லிய மணியோசையும் கேட்க மெல்ல கண்திறந்தவர் சட்டென எழுந்து உட்கார்ந்தார். காரணம், அவருக்கு எதிரே ஜடை முடியும் தீட்சண்ய பார்வையுமாய் வாட்ட சாட்டமான ஒரு உருவம் நிர்வாண நிலையில் நின்று இருந்தது. அந்த உருவத்தைக் கண்டு திடுக்கிட்ட சித்தர் பயத்தில் ஓடிச்சென்று தனக்கு அருகே இருந்த அரசமர பிள்ளையாரைத் தழுவிக் கொண்டார். அடுத்த நொடி அவருக்குள் மின்சாரம் பாய்ந்த உணர்வாய் உடல் முழுதும் சிலிர்த்தது. சில நொடிகள் தன்னை மறந்த நிலையில் இருந்த சித்தர் கண்விழித்தபோது எதிரே இருந்த உருவம் மெல்ல சித்தரை நெருங்கி வந்து தலை உச்சியில் தன் கரம் பதித்து ஆசீர்வதித்து விட்டுச் சொன்னது:
"ஐயா இனி நீர் சிறுவனல்ல, சித்த மஹா புருஷர். இதோ இப்பொழுது நீங்கள் தழுவியிருக்கிறீர்களே இந்த ஆனைமுகன் - இவரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்தது தாத்தா சித்தர் என்கிற புனித மஹான். அவர் வழிவந்தவன் நான். நீங்கள் எமது கையில் தீட்சை பெற்று வித்தகராக வேண்டும் என்பது இறை கட்டளை. இனி நீங்கள் தவிர்த்தாலும் உங்களை தொடர்ந்து வருவேன். உங்களுக்கு உபதேசம் தருவேன்" என்று சொல்லிவிட்டு அந்த உருவம் மறைந்து விட்டது.
சிறுவனான முனியாண்டி சித்தர் இந்த நிகழ்ச்சியை தமது குடும்பத்தாரிடம் சொல்ல, அதை யாரும் நம்பவில்லை. ஆனால் தத்தா சித்தர் தினமும் சிறுவனான சித்தரின் முன்பு தோன்றி மாயமாய் மறைந்து போவார். மெல்ல மெல்ல முனியாண்டி எனும் சிறுவன் சித்தர் மகானுக்குரிய எல்லா யோகங்களும், தவங்களும் செய்து முடித்து சித்தரானார்.
அந்த சிறுவயதிலேயே அவர் பல அற்புதங்களை நிகழ்த்த ஆரம்பித்தார். சாதாரண மனிதராகவே தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட சித்தர் வயல் வேலைக்கும் செல்வாராம். அங்கே தன்னோடு பணிபுரிந்த நண்பர்களுக்கு மத்திய வேளையில் தனது அதிசய சக்தியால் உணவு வரவழைத்து நண்பர்களின் பசியைப் போக்குவாராம்.
அதேபோல் நின்ற இடத்திலிருந்து ஜிவ்வென்று மேலே கிளம்பி பறவையைப்போல் பறப்பாராம். இதை நேரில் கண்ட பாலசுப்ரமணியம் என்பவர் பிரமிப்பாய்ச் சொல்கிறார்:
அந்த இளம் வயதில் சித்தருக்கு பல தேவதைகள் தரிசனம் தருவார்களாம். சில சமயம் அவர் தவத்தில் உட்கார்ந்து இருக்கும்போது சில தேவதைகள் அதை தடுக்க முயலுமாம். ஆனால் எந்த தடங்கலுக்கு செவிசாய்க்காமல் சித்தர் தவத்தை மேற்கொள்வாராம். அதேபோல சித்தருக்கு பறக்கும் சக்தி இருந்ததால் வடநாட்டில் உள்ள மதுரா, பிருந்தாவனம் முதலிய இடங்களுக்கும், ஸ்ரீலங்காவில் உள்ள கதிர்காமம் கோவிலுக்கும் அடிக்கடி பறந்து சென்று இறைவனைத் தரிசித்துவிட்டுத் திரும்புவாராம்.
சித்தருக்கு பறக்கும் சக்தி போலவே காற்றாய் மறையும் சக்தியும் இருந்ததாம். ஒரு முறை சித்தர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் நின்று மீனாட்சி அம்மனைத் தொழுது கொண்டிருந்தாராம். ஒரு பித்தனைப்போன்ற நிலையிலிருந்த சித்தரைப் பார்த்த காவலர்கள் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்ய அவர் திமிறினாராம். உடனே காவலர்கள் அவர் கைகளில் விலங்கிட்டார்கள். சித்தர் அவர்களை பார்த்துச் சிரித்துக்கொண்டே "இந்த உலகத்தில் எனக்கு பூட்டா? இந்த உலகமில்லை, எல்லா உலகங்களுக்கும் சுதந்திரமாய்ச் சென்று வருபவன் நான், என்னை அடைக்க முடியுமா, முடியாது" என்று சொல்லிக் கொண்டே சட்டென்று மறைந்து போனாராம். அவரின் சக்தியை உணர்ந்து திடுக்கிட்ட காவலர்கள் தங்களை மன்னிக்கும்படியும் கைவிலங்குகளை திரும்பத் தரும்படியும் வேண்ட, அவர்கள் முன் கைவிலங்கு வந்து விழுந்துதாம்.
அதேபோல் திண்டுக்கல்லில் ஒரு ஓட்டலின் முன்பு சித்தர் நிற்க, உள்ளே இருந்த சிப்பந்திகள் "அந்த பரதேசி கடைக்குள் வரக்கூடாது, அப்படியே விரட்ட வேண்டும்" என்று சொல்லிக்கொண்டே அவரை நெருங்கினார்களாம். ஆனால் என்ன அதிசயம். அவர்கள் சித்தரை நெருங்கிய நொடியில் அவர்களின் கண்களில் பளீர் என மின்னல் வெட்டியதுபோல் வெளிச்சம் தோன்றி மறைந்தது. அவர்கள் கண்களை திறந்தபோது அந்த சித்தர் இப்போது மிகப் பெரிய செல்வந்தர் போன்று கோட் சூட் சகிதமாக நின்று கொண்டிருக்கிறார். இதைக் கண்டு அதிர்ந்த சிப்பந்திகளும், சுற்றியிருந்தவர்களும் சித்தரை ஆச்சர்யமாகப் பார்க்க சித்தர் அவர்களிடம், "என்ன பண்றது, இப்படி மாறினால் தான் கடைகுள்ளே விடுவார்கள், அதான் இப்படி மாறிட்டேன், இனிமே உடையை மட்டும் பார்க்காதீங்க, மனிதனைப் பாருங்க, மனசைப் பாருங்க" என்று சொல்லி ஓட்டலுக்குள் வந்து சாப்பிடாமலே நகர்ந்துவிட்டாராம்.
சித்தர் தன்னை நாடி வரும் அன்பர்களின் வியாதிகளையும் தனது அற்புத சக்தியால் குணப்படுத்தி இருக்கிறார். அவரின் அற்புதங்களை பற்றி அவரது சீடர், ஓய்வுபெற்ற டெபுடி கலெக்டர் கொ.வே. விஸ்வநாதன் சொல்கிறார்:
முனியாண்டி சித்தர் ஒரு மஹான். அவரால் நல்ல வாழ்க்கையும் நோய்களில் இருந்து விடுதலை அடைந்தவர்களும் ஏராளமான பேர் இருக்கிறார்கள . அதில் நானும் ஒருவன்.
ஒருமுறை நான் சேடப்பட்டி வட்டாரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது அது ஒரு பின் தங்கிய வட்டமாக இருந்தது. அந்தச் சூழலில் ஐந்து மைல் நீளமுள்ள தும்மக்குண்டு - சின்னக்கட்டளை சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதாக மக்கள் மறியலில் ஈடுபட மாவட்ட ஆட்சியர் அந்தச் சாலையை ஸ்தல மான்ய திட்டத்தின் கீழ் எடுத்து உடனே சாலையை சீர் செய்யும்படி சொன்னார். உடனே நான் பதிவு செய்த ஒப்பந்தக்காரரிடம் அப்பணியை ஒப்படைத்தேன். வேலையும் ஆரம்பித்தது. அந்த சூழலில் மாவட்ட ஆட்சியர் அங்கே வந்திருக்கிறார். நான் அங்கு இல்லை. முனியாண்டி சித்தரை தரிசிக்கச் சென்று இருந்தேன். சாலையில் ஜல்லி மட்டுமே போடப்பட்டு அப்போதுதான் வேலை அரம்பித்து இருந்தது.
அவசர கதியில் முடிக்கச் சொன்ன வேலையை மெத்தனமாகச் செய்கிறேன் என கலெக்டர் என் மீது நடவடிக்கை எடுப்பதாக சொல்லிவிட்டுச்சென்று இருக்கிறார். நான் அங்கு சென்றபோது ஒப்பந்தக்காரர் இந்த தகவலை சொல்லி, விடிவதற்குள் இதே வேலை முடித்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் மந்திரியை நான் இவ்வழியே அழைத்துச் செல்ல முடியும் என்று கலெக்டர் சொன்னதாகக் கூறினார்கள்.
அது ஒரு பொட்டல்வெளி, கும்மிருட்டு நேரம். எப்படி ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய சாலையை அமைக்க முடியும்? அந்த நேரத்தில் அங்கே வேலை பார்த்த ஒரு இளைஞனுக்கு அடிபட்டுவிட அவனை மருத்துவமனைக்கு கொண்டுபோக வேண்டிய சூழல். அவ்வளவுதான். நாம் மெமோ வாங்கப்போகிறோம், மானம் போகப் போகிறது என்ற வேதனைப்பட்டபோது என் காதில் முனியாண்டி சித்தர், கவலைப்படாதே, நான் பார்த்துக்கறேன் என்று சொல்வதுபோல் கேட்க அப்படியே அயர்ந்து தூங்கிவிட்டேன். விடிந்தபோது என் முன்னே கார் வந்து நிற்கிறது.
அதிலிருந்து இறங்கிய கலெக்டரும் மந்திரியும் பிரமாதமாக சொன்ன நேரத்திற்கு வேலையை முடித்துவிடீர்கள். நன்றி எனப் பாராட்டினார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை இது எப்படி நிகழ்ந்தது என்றும் தெரியவில்லை. ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு மிக நேர்த்தியாக தார்ச்சாலை அமைத்தது எப்படி என வியந்தேன். எல்லாம் அந்த சித்தரின் மகிமை என்று புரிய அவரிடம் ஓடிச்சென்று நன்றி செலுத்தினேன்.
அதேபோல் ஒரு நாள் சித்தரை தரிசிக்கச் சென்று இருந்தபோது சதுரகிரிக்குப் போகலாமா என்று கேட்டார். அதற்கு நான் சாமி இப்பொழுதோ இருட்டிவிட்டது. இங்கிருந்து கிருஷ்ணன் கோவிலுக்கு பஸ்ஸில் செல்ல வேண்டும். பிறகு அங்கிருந்து மலையடிவாரம் சென்று மலைக்குச் செல்ல நேரமாய்விடும். எப்படியும் இங்கிருந்து எழுபது கிலோ மீட்டர் தூரம் இருக்கும். அங்கிருந்து நாலாயிரம் அடி உயரத்திற்கு மேலே எறிச் செல்ல வேண்டும் என்று நான் சொல்லிக் கொண்டே இருக்க, சித்தர் என்னை பார்த்து அதற்கு நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள், நான் உங்களை உடனே அழைத்துச் செல்கிறேன், கண்களை ஒரு நொடி மூடி திறக்கவும் என்றார். நானும் கண்களை மூடித்திறந்தேன். அடுத்த நொடி என்ன ஆச்சர்யம், நாங்கள் இருவரும் சதுரகிரி மலை மீது இருக்கிறோம். ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் என் உடல் சிலிர்க்க நான் சித்ததரைப் பார்த்தேன். அவர் மெல்ல சிரித்துக்கொண்டே என்ன சதுரகிரியை பார்த்துவிடீர்களா என்று கேட்டார். நான் அவர் கரங்களை பற்றி என் கண்களில் ஒற்றிக்கொண்டேன். மறுநாள் நாங்கள் அங்கிருந்து மீண்டும் கே.ரெங்கபாளையத்திற்கு வந்தோம். இந்த அற்புதம் மட்டுமல்ல. இதுபோல் நிறைய அனுபவம்.
ஒருநாள் சித்தர் என்னை ஒரு மயானத்திற்கு அழைத்துச் சென்றார். அது இரவு வேளை . சித்தர் என்ன பார்த்து உங்களுக்கு பயமாக இருக்கிறதா என்று கேட்டார். உடனே நான் நீங்கள் என்னுடன் இருக்கும்போது எனக்கென்ன பயம் என்றேன்.
சித்தர் மயானத்தில் அமர்ந்து தியானத்தில் மூழ்கினார். சிறிது நேரத்தில் அவரது உடலில் இருந்து கை , கால், தலை எல்லாம் தனித்தனியாக வெவவேறு இடங்களில் விழ, எனக்குள் ஆச்சர்யம் அதிகமானது. இது எப்படி, உயிருள்ள ஒரு மனிதனின் உடல் பாகங்கள் தானே உதிர்வதுபோல் கீழே பிரிந்து விழுமா என்று யோசித்தேன். அதற்குள் மீண்டும் அவரது உடல்பாகங்கள் ஒவ்வொன்றாக ஒன்று சேர ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் சித்தர் முழு உருவமாகி தியான நிலையில் இருந்து கண் திறந்தார். என்னைப் பார்த்து புன்னகைத்தவாறு என்ன வேடிக்கை பார்த்தீர்களா என்று கேட்டார். எவ்வளவு மனோதைரியம் உள்ளவரென்றாலும் மயானத்தில் அதுவும் இரவு நேரத்தில் இப்படி ஒரு காட்சியைப் பார்த்தால் ஆடிப் போவார்கள். ஆனால் எனக்குள் எந்த பயமோ, அச்சமோ இல்லாமல் சித்தரின் சித்து வேலையைப் பார்க்க முடிந்தது.
சித்தருக்கு எல்லா மூலிகைகளும் தெரிந்திருந்தது. காசநோய், மேகநோய், கேன்சர், தீராத வயிற்றுவலி என பல நோயாளிகளுக்கு கண்ணில்பட்ட மூலிகை இலைகளை கொடுத்து குணமாக்கி இருக்கிறார். மஞ்சள் காமாலை முற்றி டாக்டர்களால் கைவிடப்பட்ட சிறுமியை ஒரு எலுமிச்சம் பழத்தால் குணப்படுத்தி இருக்கிறார்.
எனது வாழ்க்கையில் சித்தர் பல அற்புதங்களை செய்து இருக்கிறார். ஒருமுறை நாங்கள் குடும்பத்தோடு சென்ற கார் இருபது அடி பள்ளத்தில் உருண்டு விழ எங்களுக்கு ஒரு சிறு அடிகூட இல்லாமல் காப்பாற்றியது சித்தர்தான் என்று பெருமிதமாய் கூறுகிறார் ஓய்வு பெற்ற டெப்டி கலெக்டர் கொ. வே. விஸ்வநாதன்.
Saturday, January 15, 2022
கடுவெளிச்சித்தர் - 100 ஆண்டுகள் முழுமையாக வாழலாம்.
மனதை ஆரோக்கியமாக வைத்திருந்தால் 100 ஆண்டுகள் முழுமையாக வாழலாம் என்கிறார்கள் சித்தர்கள். மனதின் கெட்ட எண்ணத்தினால் உயிர் அணுக்கள் பாதிக்கப்படுகிறது என்கிறார் கடுவெளிச்சித்தர்.
அந்த மனதை நல்ல சிந்தனையோடு வைத்திருந்து முழு ஆயுளோடு வாழ அவர் அஷ்டாங்க யோகம் என்கிற எட்டுவிதமான நெறிமுறைகளை சொல்கிறார். அவை:
இமயம்: அகிம்சையாய் நடத்தல், களவு செய்யாமை, சத்தியம், பிரம்மசரியத்தைக் கடைப்பிடித்தல், பிரதிபலன் பாராமல் உதவி செய்தல்.
நியமம்: தேக்க சுத்தியோடு இருத்தல், தேகாபிமானம் விடுத்தல், ஆத்மாநாத்மா தரிசனம், ஈஸ்வர பிராணிதானம், கெடுதி செய்தவர்களுக்கு கேடு நினையாமை.
ஆசனம்: சுவத்திகம், கோமுகம், வீரம், சிங்கம், புத்திரம், மயூரம், சித்து, பதமும், சுகம்.
பிராணாயாமம்: சுவாச பந்தனம், தேகத்தை அசைவற்று நிறுத்தல், எண்ணங்களை சுருக்குதல்.
பிரத்தியாகாரம்: ஐம்புலனும் அடக்கி மனோ சலனமற்று தனியே இருப்பது.
தாரணை: தேகம் மெலிந்து ஒடுங்கி, வியர்த்து தன்னிச்சையாய் நினைவற்று போதல்.
தியானம்: இந்திரிய சலனம் கெடுத்து, மனோலயப்படுத்தி, நிர்க்குணம் வகித்து, சுவாசத்தை கட்டுப்படுத்தி, நாடிகள் ஸ்தம்பிக்க நின்று அனந்த ஜோதி கலந்திருக்கக் காணுதல். இதுவே ஆத்ம சொரூபம்.
சமாதி: சரீர வாதனைகளின் உணர்வற்று, சுவாசம் கட்டி, பிரும்ம சொரூபத்தில் கலந்து நீடூழி நிற்பது.
கடுவெளிசித்தர் சொல்லியிருக்கும் இந்த எட்டு நெறிகளில் சிலவற்றை கடைபிடித்தாலே உங்கள் வாழ்க்கை இன்பமயமானதாக மாறிவிடும்.
Wednesday, January 12, 2022
மாரடைப்பு (Heart Attack)
விழிபுணர்வு பதிவு
மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்
பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது.
மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு
S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.
S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS
ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அவர் நம்மிடம் தனக்கு ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!
மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை
S T R அதாவது,
SMILE (சிரிக்க சொல்வது),
TALK (பேச சொல்வது),
RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)
இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும் மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்! இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!
உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம் என்று உறுதியாக கூறுகிறார்கள்.
இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.
அதாவது, அவருடைய நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,
அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.
இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.
மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்.
Tuesday, January 11, 2022
பாதுகாக்கப்பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்
பாதுகாக்கப்பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்.
நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்?
அருகம்புல் பொடி
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
நெல்லிக்காய் பொடி
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் சி உள்ளது.
கடுக்காய் பொடி
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
வில்வம் பொடி
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
அமுக்கரா பொடி
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
சிறுகுறிஞான் பொடி
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
நாவல் பொடி
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
வல்லாரை பொடி
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
தூதுவளை பொடி
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
துளசி பொடி மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
ஆவரம்பூ பொடி
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
கண்டங்கத்திரி பொடி
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
ரோஜாபூ பொடி
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
ஓரிதழ் தாமரை பொடி
ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது ஒரு வயாகரா மூலிகை.
ஜாதிக்காய் பொடி
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
திப்பிலி பொடி
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
வெந்தய பொடி
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
நிலவாகை பொடி
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
நாயுருவி பொடி
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
கறிவேப்பிலை பொடி
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு.
வேப்பிலை பொடி
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
திரிபலா பொடி
வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
அதிமதுரம் பொடி
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
துத்தி இலை பொடி
உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
செம்பருத்திபூ பொடி
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
கரிசலாங்கண்ணி பொடி
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
சிறியா நங்கை பொடி
அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
கீழாநெல்லி பொடி,
மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
முடக்கத்தான் பொடி
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது
கோரைகிழங்கு பொடி
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
குப்பைமேனி பொடி
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
பொன்னாங்கண்ணி பொடி
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
முருஙகைவிதை பொடி
ஆண்மை சக்தி கூடும்.
லவங்கபட்டை பொடி கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
வாதநாராயணன் பொடி
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
பாகற்காய் பவுட்ர் குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
வாழைத்தண்டு பொடி
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
மணத்தக்காளி பொடி
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
சித்தரத்தை பொடி
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
பொடுதலை பொடி பேன் உதிரும், முடி உதிர்வதை தடுக்கும்.
சுக்கு பொடி
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
ஆடுதொடா பொடி
சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
கருஞ்சீரகப்பொடி சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
வெட்டி வேர் பொடி
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
வெள்ளருக்கு பொடி இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
நன்னாரி பொடி
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
நெருஞ்சில் பொடி சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
பிரசவ சாமான் பொடி
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
கஸ்தூரி மஞ்சள் பொடி
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
பூலாங்கிழங்கு பொடி
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
வசம்பு பொடி
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
சோற்று கற்றாலை பொடி
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
மருதாணி பொடி
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
கருவேலம்பட்டை பொடி
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.
ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை, இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும்.
இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?
1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
உத்தராயண புண்ணிய காலம்
உத்தராயண புண்ணிய காலம்
சூரியன் இல்லாவிடில் அப்படியென்ன நடந்துவிடும் ?
யாராவது இவ்விதம் கேட்பார்களா? கேட்டால் ஊர் சிரிக்குமே, இப்படியும் ஒரு கேள்வியை என்று !
ஆனால் இந்தக் கேள்வியைக் கேட்டவர் சாதாரண மனிதரல்ல. ஒரு மஹரிஷியின் தவவலிமை மிகுந்த ரிஷிகுமாரர், பெயர் உத்கலன். மாமுனிவர்களும், நவக்கிரஹ நாயகர்களும், தேவர்களும், ரிஷிகளும் நிறைந்திருந்த இந்திரனின் சபையில்தான் இக்கேள்வியைக் கேட்டார்.
அங்கு கிரகங்களின் நடுவே சூரியனும் நின்றிருந்தார் நடுங்கியவாறு. சூரியனே நடுங்கும்படியான தவவலிமை பெற்ற ரிஷிகுமாரர் உத்கலன். அக்கினியை வளர்த்து அதன் மத்தியில் அமர்ந்து பல வருடங்கள் தவம் செய்து பல விரதங்களினால் உடலை வருத்தி மகத்தான தவவலிமை பெற்றவர் உத்கலனின் தந்தை. அவரை ஒரு தருணத்தில் அவமதித்துவிட்டார் சூரியன். தர்மத்தின் சூஷ்மங்களை அறிந்த உத்கலனின் தந்தை சூரியனை மன்னித்து விட்டுவிட்டார். ஆனால் உதகலனுக்கு மூவுலகங்களும் போற்றி வணங்கும் தன்தந்தையை அவமதித்த சூரியனைத் தண்டிக்காமல் விடக்கூடாது என்ற கோபம்.
ஆதலால் வானவெளியில் தங்கமயமான தேரில் வலம் வந்து கொண்டிருந்த சூரியனைத் தன் தபோசக்தியினால் நிறுத்தினார் உத்கலன். தன்னை காப்பாற்றும்படி வேண்டி தேவேந்திரனைச் சரணமடைந்தார் சூரியன்.
சூரியனை மன்னிக்கும்படி தேவேந்திரன் சொல்ல, சூரியனே இல்லாமல் செய்துவிடுகிறேன் என்று கோபத்துடன் வந்த உத்கலனுக்கு தேவேந்திரனின் உபசரிப்பு கோபத்தை குறைத்தது. இருந்தாலும், முன்று நாட்கள் சூரியன் ஒளியிழந்து வானவெளியில் உலாவர இயலாமல் போகக்கடவது என்று சாபம் கொடுத்தார் உத்கலன்.
இந்த சாபத்தினால் எவ்வித சலனமுமின்றி மூன்று தினங்கள் சூரியனொளியிழந்தார். இதன்விளைவாக உலகங்கள் அனைத்தும் இருளில் மூழ்கின. ஏராளமானவர்கள் உயிர் இழந்தனர். நதிகள் திசை மாறின. தேவதா சக்திகள் தமது சக்திகளை இழந்து சோர்வுற்றன.
சூரியனுக்கு சாபத்தைக் கொடுத்தபின்பு அமைதியானார் உத்கலன். தன சீற்றத்தினால் உலகம் அனைத்திற்கும் மிகப் பெரிய துன்பம் ஏற்பட்டதைக் கண்டு அளவற்ற வேதனை அடைந்தார் உத்கலன். இனி உலகில் எவருக்கும் அளவுக்கு மீறிய கோபம் ஏற்படாமல் இருக்கட்டும் என்று உலக மக்களை ஆசீர்வதித்து தன் ஆசிரமத்திற்குத் திரும்பி சென்றார் அந்த ரிஷிகுமாரர். உத்கலனின் சாபத்தினால் மூவுலகிற்கும் சூரியன் ஒளி கிடைக்காததால் ஏற்பட்ட விபரீத விளைவுகளை மிகப் புராதனமான நூல்கள் விளக்கியுள்ளன.
சமீபத்தில் தமிழகமே வெள்ளத்தில் மூழ்கியபோது எப்போது மழை நிற்கும், எப்போது சூரியனின் கிரணங்கள் வெளிப்படும் என்று மக்கள் ஏங்கினர். நமது ஆரோக்கியத்திற்கும் சுற்றுப்புற சூழ்நிலை நல்லபடி இருப்பதற்கும் சூரியபகவானின் அருள் நமக்கு வேண்டும். ஆதலால் தான் வேதகாலத்தில் இருந்தே நாம் சூரிய பகவானைத் தினமும் பூஜித்து வருகிறோம். சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை ஆப்கானிஸ்தானத்தில் இருந்து மலேஷியா, சுமத்ரா, கம்போடியா, ஈரான் வரை சூரிய வழிபாடு பரவி இருந்தது.
பாரத புண்ணிய பூமியின் மகரிஷிகள் சூரியனின் அளவற்ற சக்தியைப் பற்றி போற்றி அருளியுள்ளார்கள். இத்தகைய அளவற்ற சக்தியும், புனிதப் பெருமையும் பெற்றுள்ள சூரிய பகவான் வானமண்டலத்தில் குருபகவானின் ராசியான தனுர் ராசியில் இருந்து சனி பகவானின் ராசியான மகர ராசியில் பிரவேசிக்கும் மகத்தான புண்ணிய காலத்தை உத்தராயண புண்ணியகாலம் என பாரத மக்கள் சூரியனை வழிபடுகின்றனர். தேவர்களின் உலகில் இரவு நேரம் முடிந்து பகல் நேரம் ஆரம்பிக்கும் முகூர்த்த நேரமும் இந்த உத்தராயண தினத்தில் தான்.
இறைவன் எழுந்தருளியிருக்கும் பரமபதத்தின் வாயில் திறக்கும் நன்னாளும் உத்தராயணம் பிறக்கும் தினத்தில்தான். பரமபவித்திரமான உத்தராயண புண்ணிய காலத்தின் பெருமையை இதிகாச ரத்தினமான ஸ்ரீமத் மஹாபாரதம் அற்புதமாக விவரித்துள்ளது.
Tuesday, January 04, 2022
நெகிழ வைத்த நிஜங்கள்
சௌதி அரேபியாவில் ஒரு அரபிக்கு திருமணம் முடிந்து 20 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பல கம்பனிகளுக்கு சொந்தக்காரர். அனைத்து சொத்துக்கும் வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருந்த அந்த குடும்பத்திற்கு பொக்கிசமாக வந்தது அந்த குழந்தை.
இந்த வீட்டில் ஒரு ஸ்ரீலங்கா வை சேர்ந்த ஒரு பெண்மணி வேலை செய்து வருகிறார். இந்த அம்மணிக்கு 3 குழந்தைகள். சிறு வியாபாரம் செய்து குழந்தைகளையும் கவனித்து வருகிறார் அவரின் கணவர்.
இந்த வீட்டுவேலை செய்யும் அம்மணி தான் இந்த குழந்தைக்கு எல்லாமே. தாய்பாலை தவிர அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது இவள் தான். தூங்கக் கூட இந்த குழந்தை பெற்றோரிடம் செல்லாது. தூங்கிய பின்பு, தூக்கிக்கொண்டு அவர்களின் ரூமுக்கு கொண்டு செல்லுவார்களாம் பெற்றோர்கள்.
குழந்தைக்கு 2 வருடம் ஆகி இருக்கும். வீட்டுவேலை செய்யும் இந்த பெண்மணி விடுமுறைக்கு ஊர் செல்ல பலமுறை அனுமதி கேட்டும், முடியாத சூழ்நிலையில் தள்ளிக்கொண்டே போனது. மிகுந்த போராட்டத்திற்குப் பின்பு 3 மாதம் விடுமுறையில் ஸ்ரீலங்கா சென்றார் அம்மணி.
தன்னை பிரிந்த அடுத்த நிமிடத்தில் அழ ஆரம்பித்து விட்டது அந்த குழந்தை. சரி, சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்று இருந்து விட்டார்கள்.
இரவு உணவு உண்ணவில்லை. ஒரே அழுகை. அழுது.. அழுது.. துவண்டு தூங்கி விட்டது. அப்படியே தூங்கட்டும். காலையில் விழித்ததும் பசிக்கும், சாப்பிடும். என்று விட்டு விட்டார்கள்.
காலையில் விழித்ததும் ஈனக்குரலில் அழ ஆரம்பித்து விட்டது. சாப்பாடு ஊஹூம். அருகில் இருக்கும் சாமான்களை பலம் இல்லாத கையால் தூக்கி எறிவதும், துவண்டு விழுவதுமாக இருந்தது. சில மணித்துளியில் மயங்கி விழுந்து விட்டது.
பயந்து போன பெற்றோர்கள் மருத்துவமனையில் அட்மிட் பண்ணி விட்டார்கள். அனைவர்களுக்கும் ஒரே கவலை. மூன்று நாட்களாக ட்ரிப் மூலம் தான் அனைத்தும் நடந்து வருகிறது.
டாக்டர்களுக்கு ஒன்றும் ஓடவில்லை. எந்த மருத்துவமும் கைகொடுக்க வில்லை. மூன்று நாட்களாக கண் திறந்து பார்க்கவில்லை. மருத்துவர்கள் கையை விரித்து விட்டார்கள்.
ஒரே மருந்து..!!!! அந்த வேலைக்கார பெண் இங்கு வந்தே ஆகனும். இல்லை என்றால் இப்படியே கோமாவில் தான் குழந்தை இருக்கும். அதன் பின்பு ஒன்றும் நல்லது சொல்ல இயலாது என்று கூறி விட்டார்.
அந்த அரபி அந்த அம்மணியை தொடர்பு கொள்ள எவ்வளவோ முயன்றும் முடியாமல் ஒட்டு மொத்த குடும்பமும் உருக்குலைந்து இருந்தது.
பல வருடங்களுக்கு முன்பு, இந்த ஸ்ரீலங்கா பெண்மணி, என் கம்பனிக்கு அடுத்து இருக்கும் ஒரு வேலைக்கு ஆட்கள் எடுக்கும் நிறுவனம் மூலம் வந்தவர். முதல் நாள் அவளை அழைத்து செல்ல வந்த சௌதி, அவள் பேசும் தமிழ் புரியாமல், என்னிடம் அனுப்பி வைக்கப்பட்டார்.
அதை நினைவில் வைத்துக்கொண்டு, என் ஊராக இருக்கும் என்று என்னிடம் வந்தார். விபரங்கள் கூறினார். குழந்தை போல அழுதார். ஒரு மல்டி மில்லினர், பல நிறுவனங்களுக்கு அதிபதி, குறைந்தது 15 ஆயிரம் நபர்களாவது இவரிடம் பணி புரிகிறார்கள். கூடவே மன்னர் குடும்பத்தில் பெண் எடுத்தவர்..!! விபரம் சொன்னார்.
நான் அவரிடம், தமிழ் மொழி பல நாடுகளில் பேசுகிறார்கள். நான் இந்தியா, அவள் ஸ்ரீலங்கா. என்று விவரித்துக்கொண்டு இருக்கும் போது, மூலையில் ஒரு மின்னல் வெட்டியது.
அந்த அம்மணி கூறிய அவளுடைய ஊரும், எனக்கு பழக்கமான ஒரு ஸ்ரீலங்கா டிரைவரின் ஊரும் ஒன்று. அடுத்தடுத்த தெரு. அவரை பிடித்தேன், அவரின் மனைவிக்கு போன் போட்டு, அடுத்த தெருவில் இருந்த வேலைக்கார அம்மணியை தொடர்பு எல்லைக்குள் கொண்டு வந்து, சௌதியிடம் பேச வைத்து விட்டேன்.
ஒரு 40 நிமிடத்தில் அனைத்தும் முடிந்து விட்டது. ஆனால் அந்த வேலைக்கார அம்மணியோ, நான் வந்து 4 நாட்கள் தான் ஆகிறது, கணவனுக்கு இளைப்பு நோய் வந்து மருத்துவமனையில் அட்மிட் பண்ணி இருக்கின்றோம். நான் எப்படி வர இயலும் என்று தன்னுடைய இயலாமையை கூற, சௌதி என்னிடம் பேச சொல்ல, நான் இந்த குழந்தையின் நிலைமையை சொல்ல, அவள் அழுக, அவளின் சூழ்நிலையை சொல்ல. அனைத்தையும் சௌதியிடம் கூறினேன்.
அவரோ தேம்பி தேம்பி அழுது கொண்டு, என் சொத்து அனைத்தும் போனாலும் பரவாயில்லை. எனக்கு என் குழந்தை வேண்டும் என்று கூறினார்.
சரி, அவளுடைய குடும்பத்திற்கு விசா ஏற்பாடு பண்ணுங்க என்று கூறி, அவளிடம் அனுமதியும் வாங்கி விட்டேன். அடுத்து கூடுதல் பிரச்சனை.அவளுடைய கணவருக்கும் குழந்தைகளுக்கும் பாஸ்போர்ட் இல்லை. சிறிலங்காவிற்குவிசா கிடைப்பது அரிது. அதுவும் பாமிலி விசா-குதிரைக்கொம்பு. அப்படி விசா கிடைத்தாலும், ஸ்டாம்பிங் அடித்து வர குறைந்தது 4 வாரங்கள் ஆகும்.
அதுவரை குழந்தை தாங்குமா என்ற பல சங்கடங்களை அவரிடம் விவரித்தேன்.
அவரோ, நோ ப்ராப்ளம். என் மனைவி ஒரு அமீரா(இளவரசி) என்று கூறி, அதிசயத்திலும் அதிசயமாக 2 நாட்களில் அனைத்தும் முடிந்து, அவர்கள் அனைவர்களும் தம்மாம் ஏர்போர்ட் வந்து இறங்கி விட்டார்கள்.
குழந்தையின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. கசக்கி போட்ட சிறு துண்டு போல கிடந்தது. ஒரு சிறு அசைவு கூட இல்லை.
நேராக அவர்களை அழைத்துக் கொண்டு சாத் மருத்துவமனைக்கு சென்றோம்.
மருத்துவமனையே பரபரப்பாக ஆகிவிட்டது. குடும்பத்தார்கள் கூட்டம் ஒருபக்கம். நண்பர்கள், நிறுவனத்தில் முக்கிய ஆட்கள் என்று பெரும் கூட்டம்.
குழந்தை இருந்த அந்த சூட்-க்குள் சென்றோம். குழந்தை இருந்த நிலையை பார்த்ததும் அந்த வேலைக்கார அம்மணி கதறி விட்டார். அவளை தேற்றி ஆறுதல் படுத்தி, குழந்தைக்கு அருகில் அழைத்துச் சென்றோம்.
மெதுவாக அம்மணி, ஆதில், ஆதில், ராஜா (தமிழில் தான்) என்று கூற கூற காலின் பெருவிரல் அசைய ஆரம்பித்தது. இங்கிலாந்து மருத்துவர் சைகை காட்ட காட்ட அந்த அம்மணி ஆதில் ஆதில்.. ராஜா.. ராஜா.. என் ராஜா.. என்று கூறக் கூற , ஒரே நிசப்தம்.
எனக்கோ எதோ ஒரு தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டு இருப்பது போல ஒரு உணர்வு.
சிறிது சிறிதாக குழந்தையிடம் அசைவு தெரிய.. அனைவர்களின் முகத்திலும் பிரகாசம் தெரிய ஆரம்பித்தது.
ஒரு 20 நிமிடத்தில் கண்ணை திறந்தான், அருகில் இருக்கும் கத்தாமாவை பார்த்தான், எப்படிதான் அவன் உடலில் இவ்வளவு சக்தி இருந்ததோ தெரியவில்லை, சடார்….. என்று எந்திரிக்க, உடலில் இணைக்கப்பட்ட வயர்கள், டியூப்கள் எல்லாம் தெறிக்க, அவளை கட்டிப்பிடித்து, முதுகில் குத்து குத்து என்று குத்தி, கறுத்த அவளுடை முகத்திலும், கழுத்திலும், முத்தங்கள் பொழிய அனைவர்களுடைய கண்களிலும் கண்ணீர் உருண்டு ஓடியது.
எத்தனை பாசமலர் படம் பார்த்தாலும் இந்த காட்சி கிடைக்காது.
அங்கு வந்து இருந்த அனைத்து பெண்மணிகளும் அந்த வேலைக்காரியை முத்தத்தால் நனைத்தார்கள். சிறிது நேரத்தில் அந்த வளாகம் குதூகலமாகவும், சந்தோசமாகவும், ஒரு பார்ட்டி ஹால் மாதிரி உருமாறி விட்டது.
அந்த வேலைக்கார பெண்மணி சாப்பிட்டுக்கொண்டு இருந்த எச்சில் பட்ட கேக்கை, அந்த குழந்தை பிடுங்கி தின்ன, கூடி இருந்த அனைவர்களும் ரசித்து பார்க்க.. ஒரே பரவசம் தான்.
அப்புறம், அவருடைய கணவருக்கு அதே மருத்துவமனையில், அதே சூட்டில் மருத்துவம், அவர்களின் நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை, குழந்தைகளுக்கு நம்ப முடியாத பள்ளியில் உயர்ந்த கல்வி.
கொடுக்க நினைப்பவன் கொடுக்க நினைத்தால்…..!!!! வாழ்க்கை வசந்தமே.
Monday, January 03, 2022
காசிக்கு செல்லும் தமிழர்களா நீங்கள் ?
காசிக்கு செல்லும் தமிழர்களா நீங்கள் ?... இதோ உங்களுக்காக...
காசிக்குச் செல்பவர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகள் இரண்டு.
ஒன்று எங்கே தங்குவது? இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன செய்வது?
இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே பதில்:-
காசி நகரத்தார் விடுதிக்குச் செல்லுங்கள்!
அதன் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் என்ன?
கீழே கொடுத்துள்ளேன்.
அனைவரும் தங்கலாமா?
இனம், ஜாதி வித்தியாசம் இன்றி அனைவரும் தங்கலாம்.
சிபாரிசுக் கடிதம் வேண்டுமா?
அதெல்லாம் ஒன்றும் கிடையாது. தமிழில் பேசினாலே போதும். அனுமதித்துவிடுவார்கள். புறப்படும்போது தொலைபேசியில் தகவல் சொல்வது நல்லது.
முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்:-
Sri Kasi Nattukkottai Nagara Satram, Godowlia,
Varanasi - 221 001 (U.P)
Telephone Nos: 0542 - 2451804,
Fax No: 0542 - 2452404
(ஆட்டோக்காரர்களுக்கு நாட்கோட் சத்திரம், கோடொவ்லியா, சுசீல் சினிமா தியேட்டருக்குப் பின்புறம் என்று சொல்ல வேண்டும்)
Naat Koat Satram
Location Godowlia, Tanga Stanad, Behind Sushil Cinema,Varanasi
கட்டணம் உண்டா?
உண்டு! தனி நபருக்கு நாளொன்றுக்கு இருபது ரூபாய். அதற்கு மகமை என்று பெயர். உள்ளே உள்ள அரங்கங்கள் மற்றும் மண்டபங்களில் தங்கினால், அதற்கு வாடகை கிடையாது.
உங்கள் உடமைகளை வைத்துக்கொள்ள லாக்கர்களைத் தருவார்கள். ஒரு லாக்கருக்கு ஒரு நாள் வாடகை பத்து ரூபாய் மட்டுமே! குழுவாகச் சென்றால், மண்டபங்கள் அரங்குகள் உள்ளன. அதுதான் வசதி. 20 பேர்கள், 30 பேர்கள், 50 பேர்கள் என்று வருபவர்களுக்கு, அவர்களின் அளவிற்கு ஏற்றபடி தங்கும் அரங்குகள், மண்டபங்கள் உள்ளன. பாய்கள், ஜமுக்காளங்கள், தலையணைகள் எல்லாம் அங்கேயே கிடைக்கும். அதற்குச் செலவில்லை.
ப்ரைவேசி வேண்டும் என்றால் தனி அறைகள் நிறைய உள்ளன. மூன்று விதமான அறைகள் உள்ளன. முன் காலத்தில் கட்டப்பெற்ற அறைகள் அடுத்த காலகட்டத்தில் கட்டப்பெற்ற Attached Bath Room and Flush Outஉடன் கூடிய அறைகள். மற்றும் டீலக்ஸ் அறைகள். சுமார் 60 அறைகள் உள்ளன. சுமார் 500 பேர்கள் வரை தங்கும் வசதி உள்ளது.
மகா சிவராத்திரி, தீபாவளி, தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற விழாக்காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற சமயங்களில் இருக்காது. தற்போது சராசரியாக நாளொன்றுக்கு 150 பேர்கள்வரை வந்து செல்கிறார்கள். அவர்களில் நகரத்தார்களின் பங்களிப்பு 5 சதவிகிதத்திற்கும் குறைவானதே. விழாக்காலங்களில் நகரத்தார்கள் 200 பேர்களுக்கு மேல் வந்து செல்வார்கள்.
எத்தனை பேர்கள் வந்தாலும் தாங்கும். உள்ளே குளியலறை, மற்றும் கழிப்பறை வசதிகள் தங்கும் அனைவருக்கும் சிறப்பாக உண்டு. அவற்றைச் சுத்தம் செய்வதற்குத் தனியாகப் பணியாளர்கள் உள்ளார்கள். விடுதிக்கு 4 காவற்காரர்கள் உள்ளார்கள்.
இரண்டு படுக்கைகள் கொண்ட அறைக்கு நாளொன்றுக்கு நூறு ரூபாய் கட்டணம் கழிப்பறை குளியலறை இணைப்புடன் கூடிய அறைகளுக்கு (2/3 பேர்கள் தங்கலாம்) நாளொன்றுக்கு இருநூறு ரூபாய் கட்டணம்
டீலக்ஸ் அறைகளில் 4 பேர்கள் தங்கலாம். அதற்கு நாளொன்றுக்கு முந்நூறு ரூபாய் கட்டணம்.
குளியல் அறைகளில் Water Heater உண்டு
குடிப்பதற்கு Purified Water உண்டு
மின்தடை இருக்காது Full Gen Set வசதி உண்டு
சரி உணவு?
விடுதியில் மிகப் பெரிய சமையல் அறையும், பரிமாறும் கூடங்களும் உள்ளன.
இரண்டு செட்டி நாட்டு சமையல்காரர்களும், ஆறு பணியாளர்களும் உள்ளனர். சைவ உணவுகள் மட்டுமே. நம்பிச் சாப்பிடலாம். ருசியாக இருக்கும்.
1. காலைச் சிற்றுண்டி:- நேரம் 8 மணி முதல் 10 மணி வரை.
இட்லி, பொங்கல் சாம்பார், சட்னி - அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். டீ உண்டு.
கட்டணம் ரூ.35:00 மட்டுமே
2. மதிய உணவு: - நேரம் 12:30 மணி 2:30 மணி வரை
சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், தயிர். அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். 90% கட்டணம் இருக்காது. அன்னதானக் கணக்கில் சாப்பாடு இலவசம். சில நாட்களில் கட்டளைதாரர்கள் இல்லை என்றால் அப்போது மட்டும் தலைக்கு ரூ.40.00 கட்டணம்.
ரூ.4,000.00 அன்னதானக் கணக்கில் செலுத்திய கட்டளைதாரர்கள் நிறைய உள்ளார்கள். அவர்கள் விரும்பிய தினத்தில் அவர்கள் பெயரில் அன்னதானம் நடைபெறும்.
3. மாலை 4 மணி டீ உண்டு
4. இரவு 7:30 முதல் 9 மணிவரை
இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, சாம்பார், சட்னி, குருமா என்று உள்ளன. அவற்றில் ஏதாவது இரண்டைச் செய்து பரிமாறுவார்கள்
கட்டணம் ரூ.35:00 மட்டுமே
உணவிற்குக் காலை 8 மணிக்கு கூப்பன்களை வாங்கிவிட வேண்டும். அவர்கள் ஆட்களை எண்ணி அதற்குத் தகுந்தாற்போல சமைப்பதற்காக அந்த ஏற்பாடு.
|~~~~~~|