மனதை ஆரோக்கியமாக வைத்திருந்தால் 100 ஆண்டுகள் முழுமையாக வாழலாம் என்கிறார்கள் சித்தர்கள். மனதின் கெட்ட எண்ணத்தினால் உயிர் அணுக்கள் பாதிக்கப்படுகிறது என்கிறார் கடுவெளிச்சித்தர்.
அந்த மனதை நல்ல சிந்தனையோடு வைத்திருந்து முழு ஆயுளோடு வாழ அவர் அஷ்டாங்க யோகம் என்கிற எட்டுவிதமான நெறிமுறைகளை சொல்கிறார். அவை:
இமயம்: அகிம்சையாய் நடத்தல், களவு செய்யாமை, சத்தியம், பிரம்மசரியத்தைக் கடைப்பிடித்தல், பிரதிபலன் பாராமல் உதவி செய்தல்.
நியமம்: தேக்க சுத்தியோடு இருத்தல், தேகாபிமானம் விடுத்தல், ஆத்மாநாத்மா தரிசனம், ஈஸ்வர பிராணிதானம், கெடுதி செய்தவர்களுக்கு கேடு நினையாமை.
ஆசனம்: சுவத்திகம், கோமுகம், வீரம், சிங்கம், புத்திரம், மயூரம், சித்து, பதமும், சுகம்.
பிராணாயாமம்: சுவாச பந்தனம், தேகத்தை அசைவற்று நிறுத்தல், எண்ணங்களை சுருக்குதல்.
பிரத்தியாகாரம்: ஐம்புலனும் அடக்கி மனோ சலனமற்று தனியே இருப்பது.
தாரணை: தேகம் மெலிந்து ஒடுங்கி, வியர்த்து தன்னிச்சையாய் நினைவற்று போதல்.
தியானம்: இந்திரிய சலனம் கெடுத்து, மனோலயப்படுத்தி, நிர்க்குணம் வகித்து, சுவாசத்தை கட்டுப்படுத்தி, நாடிகள் ஸ்தம்பிக்க நின்று அனந்த ஜோதி கலந்திருக்கக் காணுதல். இதுவே ஆத்ம சொரூபம்.
சமாதி: சரீர வாதனைகளின் உணர்வற்று, சுவாசம் கட்டி, பிரும்ம சொரூபத்தில் கலந்து நீடூழி நிற்பது.
கடுவெளிசித்தர் சொல்லியிருக்கும் இந்த எட்டு நெறிகளில் சிலவற்றை கடைபிடித்தாலே உங்கள் வாழ்க்கை இன்பமயமானதாக மாறிவிடும்.
No comments:
Post a Comment