Pages

Monday, January 17, 2022

போகர் என்ற மாபெரும் சித்தர்

ஏசுகிருஸ்து பிறந்ததாக சொல்லப்பட்ட ஆண்டைவிட பல்லாயிரம் ஆண்டுகள் முன்னாடி பிறந்தவர் போகர் என்ற மாபெரும் சித்தர். 

இவரின் குறிப்புகளை திருடி வைத்துக்  கொண்டு தான், வெள்ளைக்காரன் அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்திருப்பான் என தோன்றுகிறது.

ஆதாரம் 

இவர் காளாங்கிநாதர் என்ற சித்தரின் சீடரும் 18 சித்தர்களில் ஒருவரும் ஆவார். இவர் பழனியில் இருக்கும் நவபாஷான சிலையை செய்தவரும் இவர்தான். இவரை பற்றிய தகவல் மிக ஆச்சரியத்தை கொடுக்கும். இவரை பற்றிய ஒரு தகவலை அவர் இயற்றிய சப்தகாண்டம் என்ற நுலில் அவர் கூறிப்பிட்ட தகவலைப் படித்து ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்று விட்டேன். இப்பேர்பட்ட தமிழனை உலகம் முழுவுதும் தெரியபடுத்த வேண்டும் என்பதே என் நோக்கம். அவர் இயற்றிய அந்த நூலில் 1799, 1800 ஆம் பாடலில் விமான தொழில்நுட்பத்தை பற்றிய குறிப்பையும் அதை எப்படி செய்யவேண்டும் என்றும் அதை வைத்து அவர் பறந்ததையும் தெள்ளதெளிவாக கூறிப்பிட்டிருக்கிறார்.

அது மட்டும் அல்ல 1926 ஆம் பாடலில் நீராவி இஞ்சின்(steam engine) வைத்து கப்பலை எப்படி இயக்குவது என்றும் கப்பலின் டிசைனிங்கையும் குறிப்பிட்டிருக்கிறா­ர். இதை 5000 ஆண்டுகள் முன்பே தமிழன் கண்டுபிடித்து விட்டான் என்பது நமக்கெல்லாம் பெருமை. ஆனால் அப்பேர்பட்ட தமிழனை நாம் மறந்து விட்டோம் என்பது வேதனையளிக்கிறது.

தமிழனின் புகழ் உலகம் முழுவதும் பரவவேண்டும் உலகத்தின் முதல் இனமும் முதல்மொழியும் முதல் அறிவியல் விஞ்சானியும் முதல் மருந்துவனும் முதல் ஆன்மீகவாதியும் தமிழனே. இப்படி தமிழனின்

புகழை மறந்து நாத்திகம் பேசியும் மதமாற்றம் செய்தும் தமிழனின் பெருமை மறைக்கபட்டுவிட்டது. 

https://www.facebook.com/groups/305917699863621/

போகர்! சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் இது. மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் _ என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான்.

அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார். சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து 'கடவுளைப் போல உதவினீர்கள் என் வரையில் நீங்களே கடவுள்' என்று சொல்வோம், அல்லவா.!

அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும். உண்மையில், முதல் சித்தன் அந்த ஆதிசிவன்தான். அவனே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றான். போகரைப்பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள், இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள். ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து, தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள். ஆனால் இதில், போகர் பெரிதும் வேறுபட்டே தெரிகிறார். பல சித்தர்கள் போல், இவரும் ஒரு சிவத் தொண்டரே. அதே சமயம், அன்னை உமையை தியானித்து அவளருளையும் பெற்றவர்.அவளது உபதேசம் கேட்டு பழனி மலைக்குச் சென்று தவம் செய்து முருகனை தண்டாயுத பாணியாகவே தரிசனம் செய்தவர். உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக, தான் தரிசித்த தண்டாயுபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர்.

பாஷாணங்களைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதம்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். அவைகளை உரிய முறையில் சேர்ந்துப் பிசைந்தால்தான் உறுதியான, ஒரு பொதுவான பாஷாணம் உருவாகும். இதை நயனங்களால் பார்த்தாலேகூட போதும். அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர்வீச்சு, கண்வழியாக உடம்பின் உள்ளும், உடம்பின் புறத்திலும் படிந்து, நலம் ஏற்படும். இதன்மேல் பட்டு வழியும் பொருள் எதுவாயினும் அதுவும் மருத்துவ குணம் கொண்டு தீராத வியாதியை எல்லாம் தீர்த்து வைக்கும்.

உயர்வான பாஷாணங்கள் ஒன்பதை தேர்வு செய்து அதைக் கொண்டு போகர் செய்ததுதான் பழனிமுருகனின் மூலத் திரு உருவம். அவ்வாறு செய்ததோடல்லாமல், அவ்வுருவத்திற்கு ஏற்ற வழிபாட்டு முறையை ஒரு புதிய சித்தாகமமாகவே உருவாக்கி அதையும் நடைமுறைப்படுத்தியவர் போகர்.

https://www.facebook.com/groups/305917699863621

மனிதப் பிறப்பானது கோள்களால் நிர்வகிக்கப்படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வுசெய்து அதிலிருந்து தண்டாயுத பாணியை செய்து, கோள்களை ஓர் உருவுக்குள் அடக்கிப் பூட்டியவர் போகர் என்றும் கூறுவர்.

தண்டாயுத பாணியை எவர் வந்து தரிசித்து வணங்கினாலும் நவ கோள்களையும் ஒருசேர வணங்கிய ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு உண்டாவது, இதனுள் அடங்கிக் கிடக்கும் இன்னொரு நுட்பம்.

இப்படி பழனியம்பதியில் முருக வழிபாட்டிற்கு களம் அமைத்த போகரின் வாழ்க்கையும் ஒரு வகையில் நவரசங்களால் ஆனதுதான். பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி வைகாசி மாதத்து பரணி நட்சத்திரத்தில் பிறந்த போகரின் பிறப்பு மூலம் பற்றி பெரிதாக செய்திகள் இல்லை. ஆனால்,நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதரின் மாணவர் இவர் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒரு செய்தி.அதை இவரது, அரிய நூல்களுள் ஒன்றான 'போகர் ஏழாயிரம்' எனும் நூலின் வழி அறியலாம்.

பதினெண் சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பு, நவசித்தர்களே பிரதானமாகக்கருதப்பட்டனர். மேருமலைதான் இவர்களின் யோகஸ்தலம். மேருவும் இமயமும் உலகப் பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு வெளியாகவே விளங்கியது. இங்கேதான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர், காலாங்கிநாதர். காலாங்கி நாதர், போகர் வந்த சமயம் மகாசமாதியில் இருந்தார்.

போகர், சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி, அவ்விரு மலைகளிலும் பல தாது வகைகளை தேடிக்கண்டு பிடித்தார். அதைக் கொண்டு பல காய கற்பங்களை செய்து, தானே உண்டு பார்த்து அதன் பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும், வானவெளியில் பறப்பது, நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிக மிகச் சாதாரணமாகியது. இதனால் போகருக்குள் கர்வம் துளிர்த்துவிட்டது.

துரோணருக்கு ஓர் ஏகலைவன் போல தானும் குருவை வணங்கி அந்த அருளாலேயே பல தாதுக்களை கண்டறிந்து விட்ட ஒருவன்; உண்மையில் காலாங்கி நாதருக்கு சீடர்கள் இருந்திருந்தால், அவர்கள் கூட இப்படி எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள்; என்றெல்லாம் நினைக்கத் தொடங்கிவிட்டார்.

இதனால், அந்த மலைத் தலத்தில் பணிவாக பார்த்துப் பார்த்து நடந்தவர், நிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தார்.

https://www.facebook.com/groups/305917699863621

மேருவிலும் இமயத்திலும் சூட்சம வடிவில் பலநூறு சித்த புருஷர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களில் பலரது தவம், போகரின் கர்வமான நடையால் கலைந்தது. அவர்கள் கண்விழித்ததோடு போகருக்கும் காட்சியளித்தனர். திடுக்கிட்ட போகரிடம் நாங்கள் காலாங்கி நாதரின் மாணவர்கள். பலப்பல யுகங்களாக எங்களை மறந்து தவம் செய்தபடி இருக்கிறோம் என்றார்கள். அத்தனை யுகங்களும் சில நாட்கள் கடந்தது போலத்தான் இருக்கிறது என்று அவர்கள் கூற, போகருக்கு அது ஆச்சரிய அதிர்ச்சியாகியது.அப்படியானால் அவர்கள் தவத்தை எவ்வளவு பெரிய விஷயமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அந்த நொடி, தான் கற்ற தாதுவித்தை எல்லாம் மிக அற்பமானது என்கிற எண்ணம் ஏற்பட்டு அவரது கர்வமும் அடங்கியது. அதை அறிந்த அந்த சித்தபுருஷர்கள், போகருக்கு பல சித்த ரகசியங்களை போதித்தார்கள்.

ஒரு சித்தர், போகர்மீது பெரும்கனிவு கொண்டு, 'அமிர்தமணிப்பழம்' என்னும் தேவக்கனி மரம் ஒன்றை அந்த வெளியில் காட்டி, அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள்முழுக்க பசிக்காது, நரைக்காது, முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை உண்டுவிட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறிட,போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய 'பசி, தாகம், மூப்பு' என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார்.

இப்படி படிப்படியாக முன்னேறிய போகருக்குள் சில விசித்திரமான எண்ணங்களும் ஏற்பட்டன. அவை முழுக்க முழுக்க மனித சமுதாயம் தொடர்பானவையே.. ஒரு உயிர் எதனால் மனிதப் பிறப்பெடுக்கிறது? அப்படிப் பிறக்கும்போது அது எதன் அடிப்படையில் ஏழையின் வயிற்றிலும், பணக்காரனின் வயிற்றிலும் பிறக்கிறது? இறப்புக்குப்பின் கொண்டு செல்வது எதுவும் இல்லை என்று தெரிந்தும் வாழும் நாளில் மனிதன் ஏன் ஆசையின் பிடியிலேயே சிக்கிக் கிடக்கிறான்? எவ்வளவு முயன்றும் அவனால் மரணத்தை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை?

இப்படிப் பலவித கேள்விகள் போகரை ஆட்டிப்படைத்தன. மொத்தத்தில் மனித சமூகமே வாழத் தெரியாமல் வாழ்ந்து விதியின் கைப்பாவையாக இழுத்துச் செல்லப்படுவது போல உணர்ந்தவர், மனித சமூகத்தை காப்பாற்றியே தீர வேண்டும் என்று எண்ணம் கொண்டார். இதனால், தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் 'போகர் ஏழாயிரம்', போகர் நிகண்டு, 17000 சூத்திரம், 700 யோகம் போன்றவை.

இவர் உள்ளத்தில் மனித சமூகத்தை நோயின்றி வாழவைக்கும், அரிய குறிப்புகள் தோன்றின. அதேசமயம், இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர். சித்த ரகசியங்களை எழுதிவைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை, ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர், அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றி காட்டினார்.

அந்த மந்திரம், தம்பணா மந்திரம் எனப்படுகிறது. இன்றும் காடுகளில் மூலிகை தேடிச்செல்வோர் தம்பணா மந்திரத்தை மானசீகமாக உச்சரித்து, காணப் பெறாத மூலிகைகளையும்கண்டு அதைக் கைப்பற்றுவர். அமிர்தத்துக்கு இணையான ஆதிரசத்தையே இவர் கண்டறிந்தார் என்பர். அதைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமோ, அமிர்தமோ தேவர்களுக்கே உரியது. அசுரர்களோ மானிடர்களோ அதை உண்டால் அதனால் உலகம் அழிந்து விடும் அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர்.

https://www.facebook.com/groups/305917699863621

தங்கள் அச்சத்தை தட்சிணா மூர்த்தியாகிய சிவபிரானிடம் கூறிட, சிவபிரானும் அவர்களது கவலையை நீக்குமூலமாக போகரை அடைந்து அவர் அறிந்து எழுதிய அவ்வளவு ரகசியங்களையும் கேட்டார். போகர் எழுதியதை, போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர்களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த அவர், போகரின் முயற்சியை ஆசிர்வதிக்கவேசெய்தார். அதன்பின் இவர் புகழ் பலமடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள், குளிகைகள் பெற்றுச் சென்றனர்.

மொத்தத்தில் மனித சமூகத்தை, இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே, தேவர்களுக்கும் கந்தவர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார்.

அண்டை நாடான சீன தேசமும், நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும், புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால், மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது. அங்கே, 'போ யாங்' என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள், கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து, சீனராகவே வாழ்ந்தார் என்றும் ஒரு கதை உண்டு.

சீனர்கள், இந்தியர்களில் இருந்து உணவுப் பழக்க வழக்கங்களில் பெரிதும் வேறுபட்டவர்கள். இந்திய உணவில் எண்ணெய், கொழுப்பு சத்து, காரம், புளிப்பு, உவர்ப்பு என்றெல்லாம் பல சுவைகள் உண்டு. சீனர்களிடம் அப்படி இல்லை. அவர்களது உணவுமுறை ரஜோ குணத்தை தூண்டுவதாகவும்; எலும்பு, நரம்பு இவைகளை வலுவாக வைத்துக்கொள்ளத் தக்கதாகவும் இருந்தமையால், அவர்களிடம் பல வித்யாசமான பயிற்சி முறைகள் இருந்தன.அதில் 'ரஜோலி' என்னும் யோக முறையும் ஒன்று. போகர் அதை ஆர்வத்துடன் பழகிடும்போது தலையில் அடிபட்டு அவருக்குள் அவர் பற்றிய அவ்வளவு எண்ணங்களும் மறைந்துபோன. பின்னர், அவரைத் தேடிக்கொண்டு வந்த போகரின் மாணாக்கர்களில் ஒருவரான புலிப்பாணி, போகரின் நிலை கண்டு கலங்கி, அவரைத் தன் முதுகில் சுமந்துகொண்டு இந்தியா திரும்பினார் என்றும் சொல்வர்.

அதன்பின் குருவுக்கே அவரிடம் கற்றதை உபதேசித்து, அவருக்குள் மீண்டும் பழைய எண்ணங்களை தோற்றுவித்தார். ஒரு சீடன், குருவுக்கு உபதேசிப்பது என்பது காரியப் பிழையில் முடிந்து, முடிவில் அவனையே சாபத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதால்,புலிப்பாணி, போகரின் தண்டத்திற்கு உபதேசிப்பது போல போகருக்கு உபதேசித்து போகரை மீண்டும் நிலை நிறுத்தினார். அதன்பின், போகர் ஒரு புத்துயிர்ப்போடு எழுந்தார்.பலவித அனுபவங்களால் பழுத்த ஞானியாகிவிட்ட அவர், இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் பழனி. அங்கேயே முக்தியும் அவருக்குக் கிட்டியது. மொத்தத்தில் போகர் என்றால் 'நவநாயகர்' என்றும் கூறலாம்.

அகஸ்திய முனிவர் போக சித்தரை சீன தேசத்தவர் என்று கூறுகிறார். புலிப்பாணியின் குரு என்றும் இவருடைய தாய் தந்தையர் சீனாவில் பெண்களுக்குத் துணிகள் வெளுத்துக் கொடுத்துப் பிழைத்து வந்தனர் என்றும் அகத்தியர் கூறுகிறார். போகர் திருமூலர் காலத்தினைச் சேர்ந்தவரென்றும் பழனி மலையில் வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷானக் கட்டில் தயாரித்தார் என்றும் அவருடைய வரலாறு பேசப்படுகிறது. போக முனிவர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார்.

அகத்தியர் தமது சௌமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத் தருகிறார்.

1. போகர் – 12,000

2. சப்த காண்டம் – 7000

3. போகர் நிகண்டு – 1700

4. போகர் வைத்தியம் – 1000

5. போகர் சரக்கு வைப்பு – 800

6. போகர் ஜெனன சாகரம் – 550

7. போகர் கற்பம் – 360

8. போகர் உபதேசம் – 150

9. போகர் இரண விகடம் – 100

10. போகர் ஞானசாராம்சம் – 100

11. போகர் கற்ப சூத்திரம் – 54

12. போகர் வைத்திய சூத்திரம் – 77

13. போகர் மூப்பு சூத்திரம் – 51

14. போகர் ஞான சூத்திரம் – 37

15. போகர் அட்டாங்க யோகம் – 24

16. போகர் பூஜாவிதி – 20

இவைகளில் போகர் 12000 மற்றும் இரண வாகடம் நூல்கள் கிடைக்கவில்லை. போகரின் நூல்கள் யாவுமே அமுதமாகும் என்று காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார். போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர்.

இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகிலிருக்கும் நவநாத சித்தர்கள் சமாதியை அடைந்தார். ஒன்பது சித்தர்களும் போகருக்கு தரிசனம் தந்தனர். போகரும் இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரவித்தையைக் கற்றுத் தருமாறு கேட்டார்.

“தகுதியுள்ளவர்களுக்கு காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு அவர்களை நீண்ட காலம் வாழவை. மரணமடைந்தவர்களுக்காக மனதைக் குழப்பிக் கொள்ளாதே” என்று அறிவுரை கூறினர். அதுவரையில் போகர் அறிந்திராத காய கல்ப முறைகளையும் கற்றுக் கொடுத்து மறைந்தனர்.

போகர் தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். கொஞ்ச தூரத்தில் ஒரு புற்றிலிருந்து ஒளிக் கற்றை ஒன்று புலப்பட்டது. அந்த ஒளியை தொடர்ந்து புற்றின் முன் போய் நின்றார். யாரோ ஒரு சித்தர் இந்தப் புற்றின் உள்ளே தம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த போகர், அந்தப் புற்றை வலம் வந்து அதன் அருகிலேயே ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் ஆனது, போகரின் தியானத்தால் புற்றில் இருந்த சித்தரின் தியானம் கலைந்தது. உடனே அவர் புற்றை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.

போகர், “தங்களை தரிசித்ததில் வாழ்வின் பெரும்பயனை அடைந்தேன்” என்று கூறினார். சித்தர் அங்கிருந்த மரங்களில் ஒன்றைக் காட்டி “போகா! அந்த மரத்தின் பழங்களில் ஒன்றைச் சாப்பிட்டால் போதும் ஆயுள் முழுவதும் பசிக்காது, முடி நரைக்காது, பார்வை மங்காது, இவ்வளவு ஏன்? எல்லோருக்கும் அச்சம் தரும் முதுமை என்பதும் வரவே வராது. தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும்” என்றார். போகர் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார்.

https://www.facebook.com/groups/305917699863621

சித்தர் புலித்தோல் ஆசனம் ஒன்றைக் கொடுத்து, “இது உனக்கு தவம் செய்ய உதவும்” என்றார். அந்த சமயத்தில் பதுமை ஒன்று அவர் எதிரில் தோன்றவே “போகா! இனி உனக்கு தேவையானவைகளை இந்த பதுமை சொல்லும்!” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தியானத்தில் மூழ்கி விட்டார். பதுமை மூலிகை ரகசியங்கள், போகருக்கு உயிரின் தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்த உடலில் அது படும் துன்பம் ஆகிய நிலைகளைத் தெளிவாக உணர்த்தியது. அதைக் கேட்டு ஆச்சரியத்தில் இருக்கும் போது பதுமை வந்தது போலவே மறைந்தும் விட்டது.

பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு உணவு சமைத்து உண்ட பின் நீர் வேட்கையால் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் கும்பலாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். போகர் அவர்களிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார்.

“யார் நீ! அப்பாலே போ! அருகில் வந்தாலே நாற்றமடிக்கிறது” என்று எரிந்து விழுந்தனர். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து அந்த வழியாக வந்த பூனை ஒன்றின் காதில் போகர் வேதத்தை ஓதிவிட்டார். பூனை நன்றாக உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொட்ங்கியது.

அந்தணர்கள் தாங்கள் அறியாமல் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர். “ஐயனே எங்கள் வறுமை அகல தாங்கள் வழி செய்ய வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டனர்.

போகர் அவர்களுடைய வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார்.

போகர் தவம் செய்து முடித்த இரச மணிக் குளிகைகளின் ஆற்றல் கண்டு மிகவும் வியப்படைந்தார். அதே போல குளிகைகளைச் செய்து மற்ற சித்தர்களுக்கும் அளிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார்.

அதற்காக ரோமாபுரி சென்று மிகத் தூய்மையான ஆதி ரசம் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தார். உடனே குளிகைகளில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு ரோமாபுரியில் தோன்றி அங்கு இருந்த இரசக் கிணற்றைத் தேடிப் பிடித்தார். இரசத்தை சுரைக் குடுவையில் நிரப்பிக் கொண்டு விண்ணில் தாவினார்.

அதன்பிறகு ஆதிரசத்துடன் விண்மார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.

தஞ்சையில் பிரகதீசுவரர் ஆலய லிங்கப் பிரதிஷ்டைக்காக காக்கையின் கழுத்தில் ஓலை ஒன்றை கருவூராருக்கு அனுப்பினார். கருவூரானும் அதன் படியே செய்து லிங்கப் பிரதிட்டை செய்து முடித்தார்.

போகர், தட்சிணா மூர்த்தி உமைக்கு அருளிச் செய்த ஞான விளக்கம் ஏழு சட்சத்தையும் ஏழு காண்டமாக்கி தமது மாணவர்களுக்கு உபதேசித்தார். மற்ற சித்தர்கள், “இறைவன் உபதேசித்ததை வெளியில் சொல்வது குற்றம்” என்று கூறி இத்தகைய செயலை அவர் உடனே நிறுத்தியாக வேண்டும்” என்று தட்சிணாமூர்த்தியிடம் முறையிட்டனர்.

தட்சிணாமூர்த்தி போகரை அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார். “போகரே! நீர் பூனைக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்து ஓதச் செய்தீர், சிங்கத்திற்கு ஞானம் கொடுது அரசனாக்கினீர், மேருமலைக்குச் சென்று தாதுக்களைக் கொண்டு வந்தீர், ரோமபுரி சென்று ஆதிரசம் கொண்டு வந்தீர், இதையெல்லாம் விட நாம் உமாதேவிக்கு கூறிய தீட்சை விதி, யோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு காண்டமாக உருவாக்கியுள்ளீராமே! நீர் செய்த நூலைச் சொல்வீராக” எனக் கேட்டு போகரின் நூலாழத்தினையும் பொருட்சிறப்பையும் உணர்ந்து மகிழ்ந்து வாழ்த்தினார்.

போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர்முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம், முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார்.

போகர் கனவில் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாஷாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். பழனிமலை இறைவன் திருமேனியைத் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார். ஒன்பது விதமான விஷங்களை (நவ பாஷாணங்கள்) முயன்று கூட்டி உருவாக்கிய திருமேனியில் ஊறிய விபூதியும், பஞ்சாமிர்தமும் போகருக்கு உள்ளொளியைப் பெருக்கியது.

இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரனை உருவாக்கியவரும் போகரே என்றும் கூறுவதுண்டு. பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.

போகர் பூசித்து வந்த புவனேச்வரி அம்மையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும் புவனேச்வரி அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்றிருப்பதாக கூறப்படுகிறது. 

இங்கு கூறப்பட்ட வரலாற்று செய்திகளனைத்தும் சதுரகிரி தலப்புராணத்தில் கூறப்பட்ட சித்தர் அறிவியல்🙏

Sunday, January 16, 2022

முனியாண்டி சித்தர்

மதுரையை அடுத்த கல்லுப்பட்டிக்கு அருகே உள்ள கே. ரெங்கபாளையம் எனும் கிராமத்தில் வாழ்ந்து பல சித்தாடல்களும் அற்புதங்களும் நிகழ்த்திய ஸ்ரீ முனியாண்டி சித்தரைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

சாதாரண மனிதரைப் போன்றே இயல்பான அமைதியான முகத்துடன் சாந்த சொரூபியாக எப்பொழுதும் காட்சியளித்த சித்தர் உடலில் காவி உடையைச் சுற்றியிருப்பார். 

அவருக்கு எதிரே என்ன பிரச்சனைகளோடு யார் சென்று நின்றாலும், அவர்களின் ஆன்மாவிடம் பேசி அந்த அன்பர்களுக்குத் தெரியாமலே அவர்களின் பிரச்னைகளிருந்து அவர்களுக்கு விடுதலை வாங்கித் தருவார்.

அரிஜன வகுப்பைச் சேர்ந்த தாய் தந்தையருக்கு பிறந்த சித்தர் தனது இளம் வயதில் மாடு மேய்க்கும் சிறுவனாக வாழ்க்கையைத் துவங்கினார்.

அப்பொழுது ஒருநாள் மாடுகளை மேயவிட்டுவிட்டு அரசமரத்து பிள்ளையார் குளக்கரையில் தூங்க ஆரம்பித்தார்.  அப்போது மனதை மயக்கும் ரம்மியமான மணமும் மெல்லிய மணியோசையும் கேட்க மெல்ல கண்திறந்தவர் சட்டென எழுந்து உட்கார்ந்தார். காரணம், அவருக்கு எதிரே ஜடை முடியும் தீட்சண்ய பார்வையுமாய் வாட்ட சாட்டமான ஒரு உருவம் நிர்வாண நிலையில் நின்று இருந்தது. அந்த உருவத்தைக் கண்டு திடுக்கிட்ட சித்தர் பயத்தில் ஓடிச்சென்று தனக்கு அருகே இருந்த அரசமர பிள்ளையாரைத் தழுவிக் கொண்டார். அடுத்த நொடி அவருக்குள் மின்சாரம் பாய்ந்த உணர்வாய் உடல் முழுதும் சிலிர்த்தது. சில நொடிகள் தன்னை மறந்த நிலையில் இருந்த சித்தர் கண்விழித்தபோது எதிரே இருந்த உருவம் மெல்ல சித்தரை நெருங்கி வந்து தலை உச்சியில் தன் கரம் பதித்து ஆசீர்வதித்து விட்டுச் சொன்னது: 

"ஐயா இனி நீர் சிறுவனல்ல, சித்த மஹா புருஷர்.  இதோ இப்பொழுது நீங்கள் தழுவியிருக்கிறீர்களே இந்த ஆனைமுகன் - இவரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்தது தாத்தா சித்தர் என்கிற புனித மஹான்.  அவர் வழிவந்தவன் நான்.  நீங்கள் எமது கையில் தீட்சை பெற்று வித்தகராக வேண்டும் என்பது இறை கட்டளை.  இனி நீங்கள் தவிர்த்தாலும் உங்களை தொடர்ந்து வருவேன்.  உங்களுக்கு உபதேசம் தருவேன்" என்று சொல்லிவிட்டு அந்த உருவம் மறைந்து விட்டது.

சிறுவனான முனியாண்டி சித்தர் இந்த நிகழ்ச்சியை தமது குடும்பத்தாரிடம் சொல்ல, அதை யாரும் நம்பவில்லை. ஆனால் தத்தா சித்தர் தினமும் சிறுவனான சித்தரின் முன்பு தோன்றி மாயமாய் மறைந்து போவார்.  மெல்ல மெல்ல முனியாண்டி எனும் சிறுவன் சித்தர் மகானுக்குரிய எல்லா யோகங்களும், தவங்களும் செய்து முடித்து சித்தரானார். 

அந்த சிறுவயதிலேயே அவர் பல அற்புதங்களை நிகழ்த்த ஆரம்பித்தார்.  சாதாரண மனிதராகவே தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட சித்தர் வயல் வேலைக்கும் செல்வாராம்.  அங்கே தன்னோடு பணிபுரிந்த நண்பர்களுக்கு மத்திய வேளையில் தனது அதிசய சக்தியால் உணவு வரவழைத்து நண்பர்களின் பசியைப் போக்குவாராம். 

அதேபோல் நின்ற இடத்திலிருந்து ஜிவ்வென்று மேலே கிளம்பி பறவையைப்போல் பறப்பாராம்.  இதை நேரில் கண்ட பாலசுப்ரமணியம் என்பவர் பிரமிப்பாய்ச் சொல்கிறார்:

அந்த இளம் வயதில் சித்தருக்கு பல தேவதைகள் தரிசனம் தருவார்களாம்.  சில சமயம் அவர் தவத்தில் உட்கார்ந்து இருக்கும்போது சில தேவதைகள் அதை தடுக்க முயலுமாம்.  ஆனால் எந்த தடங்கலுக்கு செவிசாய்க்காமல் சித்தர் தவத்தை மேற்கொள்வாராம்.  அதேபோல சித்தருக்கு பறக்கும் சக்தி இருந்ததால் வடநாட்டில் உள்ள மதுரா, பிருந்தாவனம் முதலிய இடங்களுக்கும், ஸ்ரீலங்காவில் உள்ள கதிர்காமம் கோவிலுக்கும் அடிக்கடி பறந்து சென்று இறைவனைத் தரிசித்துவிட்டுத் திரும்புவாராம். 

சித்தருக்கு பறக்கும் சக்தி போலவே காற்றாய் மறையும் சக்தியும் இருந்ததாம்.  ஒரு முறை சித்தர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் நின்று மீனாட்சி அம்மனைத் தொழுது கொண்டிருந்தாராம்.  ஒரு பித்தனைப்போன்ற நிலையிலிருந்த சித்தரைப் பார்த்த காவலர்கள் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்ய அவர் திமிறினாராம்.  உடனே காவலர்கள் அவர் கைகளில் விலங்கிட்டார்கள்.  சித்தர் அவர்களை பார்த்துச் சிரித்துக்கொண்டே "இந்த உலகத்தில் எனக்கு பூட்டா? இந்த உலகமில்லை, எல்லா உலகங்களுக்கும் சுதந்திரமாய்ச் சென்று வருபவன் நான், என்னை அடைக்க முடியுமா, முடியாது" என்று சொல்லிக் கொண்டே சட்டென்று மறைந்து போனாராம்.  அவரின் சக்தியை உணர்ந்து திடுக்கிட்ட காவலர்கள் தங்களை மன்னிக்கும்படியும் கைவிலங்குகளை திரும்பத் தரும்படியும் வேண்ட, அவர்கள் முன் கைவிலங்கு வந்து விழுந்துதாம். 

 அதேபோல் திண்டுக்கல்லில் ஒரு ஓட்டலின் முன்பு சித்தர் நிற்க, உள்ளே இருந்த சிப்பந்திகள் "அந்த பரதேசி கடைக்குள் வரக்கூடாது, அப்படியே விரட்ட வேண்டும்" என்று சொல்லிக்கொண்டே அவரை நெருங்கினார்களாம்.  ஆனால் என்ன அதிசயம்.  அவர்கள் சித்தரை நெருங்கிய நொடியில் அவர்களின் கண்களில் பளீர் என மின்னல் வெட்டியதுபோல் வெளிச்சம் தோன்றி மறைந்தது. அவர்கள் கண்களை திறந்தபோது அந்த சித்தர் இப்போது மிகப் பெரிய செல்வந்தர் போன்று கோட் சூட் சகிதமாக நின்று கொண்டிருக்கிறார். இதைக் கண்டு அதிர்ந்த சிப்பந்திகளும், சுற்றியிருந்தவர்களும் சித்தரை ஆச்சர்யமாகப் பார்க்க சித்தர் அவர்களிடம், "என்ன பண்றது, இப்படி மாறினால் தான் கடைகுள்ளே விடுவார்கள், அதான் இப்படி மாறிட்டேன், இனிமே உடையை மட்டும் பார்க்காதீங்க, மனிதனைப் பாருங்க, மனசைப் பாருங்க" என்று சொல்லி ஓட்டலுக்குள் வந்து சாப்பிடாமலே நகர்ந்துவிட்டாராம். 

சித்தர் தன்னை நாடி வரும் அன்பர்களின் வியாதிகளையும் தனது அற்புத சக்தியால் குணப்படுத்தி இருக்கிறார்.  அவரின் அற்புதங்களை பற்றி அவரது சீடர், ஓய்வுபெற்ற டெபுடி கலெக்டர் கொ.வே. விஸ்வநாதன் சொல்கிறார்:

முனியாண்டி சித்தர் ஒரு மஹான்.  அவரால் நல்ல வாழ்க்கையும் நோய்களில் இருந்து விடுதலை அடைந்தவர்களும் ஏராளமான பேர் இருக்கிறார்கள .  அதில் நானும் ஒருவன். 

ஒருமுறை நான் சேடப்பட்டி வட்டாரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.  அப்போது அது ஒரு பின் தங்கிய வட்டமாக இருந்தது.  அந்தச் சூழலில் ஐந்து மைல் நீளமுள்ள தும்மக்குண்டு - சின்னக்கட்டளை சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதாக மக்கள் மறியலில் ஈடுபட மாவட்ட ஆட்சியர் அந்தச் சாலையை ஸ்தல மான்ய திட்டத்தின் கீழ் எடுத்து உடனே சாலையை சீர் செய்யும்படி சொன்னார்.  உடனே நான் பதிவு செய்த ஒப்பந்தக்காரரிடம் அப்பணியை ஒப்படைத்தேன்.  வேலையும் ஆரம்பித்தது.  அந்த சூழலில் மாவட்ட ஆட்சியர் அங்கே வந்திருக்கிறார்.  நான் அங்கு இல்லை.  முனியாண்டி சித்தரை தரிசிக்கச் சென்று இருந்தேன்.  சாலையில் ஜல்லி மட்டுமே போடப்பட்டு அப்போதுதான் வேலை அரம்பித்து இருந்தது. 

அவசர கதியில் முடிக்கச் சொன்ன வேலையை மெத்தனமாகச் செய்கிறேன் என கலெக்டர் என் மீது நடவடிக்கை எடுப்பதாக சொல்லிவிட்டுச்சென்று இருக்கிறார்.  நான் அங்கு சென்றபோது ஒப்பந்தக்காரர் இந்த தகவலை சொல்லி, விடிவதற்குள் இதே வேலை முடித்திருக்க வேண்டும்.  அப்பொழுதுதான் மந்திரியை நான் இவ்வழியே அழைத்துச் செல்ல முடியும் என்று கலெக்டர் சொன்னதாகக் கூறினார்கள்.   

அது ஒரு பொட்டல்வெளி, கும்மிருட்டு நேரம். எப்படி ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய சாலையை அமைக்க முடியும்? அந்த நேரத்தில் அங்கே வேலை பார்த்த ஒரு இளைஞனுக்கு அடிபட்டுவிட அவனை மருத்துவமனைக்கு கொண்டுபோக வேண்டிய சூழல்.  அவ்வளவுதான்.  நாம் மெமோ வாங்கப்போகிறோம், மானம் போகப் போகிறது என்ற வேதனைப்பட்டபோது என் காதில் முனியாண்டி சித்தர், கவலைப்படாதே, நான் பார்த்துக்கறேன் என்று சொல்வதுபோல் கேட்க அப்படியே அயர்ந்து தூங்கிவிட்டேன்.  விடிந்தபோது என் முன்னே கார் வந்து நிற்கிறது.

அதிலிருந்து இறங்கிய கலெக்டரும் மந்திரியும் பிரமாதமாக சொன்ன நேரத்திற்கு வேலையை முடித்துவிடீர்கள்.  நன்றி எனப் பாராட்டினார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை இது எப்படி நிகழ்ந்தது என்றும் தெரியவில்லை.  ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு மிக நேர்த்தியாக தார்ச்சாலை அமைத்தது எப்படி என வியந்தேன்.  எல்லாம் அந்த சித்தரின் மகிமை என்று புரிய அவரிடம் ஓடிச்சென்று நன்றி செலுத்தினேன்.

அதேபோல்  ஒரு நாள் சித்தரை தரிசிக்கச் சென்று இருந்தபோது சதுரகிரிக்குப் போகலாமா என்று கேட்டார். அதற்கு நான் சாமி இப்பொழுதோ இருட்டிவிட்டது. இங்கிருந்து கிருஷ்ணன் கோவிலுக்கு பஸ்ஸில் செல்ல வேண்டும். பிறகு அங்கிருந்து மலையடிவாரம் சென்று மலைக்குச் செல்ல நேரமாய்விடும்.  எப்படியும் இங்கிருந்து எழுபது கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.  அங்கிருந்து நாலாயிரம் அடி  உயரத்திற்கு மேலே எறிச் செல்ல வேண்டும் என்று நான் சொல்லிக் கொண்டே இருக்க, சித்தர் என்னை பார்த்து அதற்கு நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள், நான் உங்களை உடனே அழைத்துச் செல்கிறேன், கண்களை ஒரு நொடி மூடி திறக்கவும் என்றார்.  நானும் கண்களை மூடித்திறந்தேன்.  அடுத்த நொடி என்ன ஆச்சர்யம், நாங்கள் இருவரும் சதுரகிரி மலை மீது இருக்கிறோம்.  ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் என் உடல் சிலிர்க்க நான் சித்ததரைப் பார்த்தேன்.  அவர் மெல்ல சிரித்துக்கொண்டே என்ன சதுரகிரியை பார்த்துவிடீர்களா என்று கேட்டார்.  நான் அவர் கரங்களை பற்றி என் கண்களில் ஒற்றிக்கொண்டேன்.  மறுநாள் நாங்கள் அங்கிருந்து மீண்டும் கே.ரெங்கபாளையத்திற்கு வந்தோம்.  இந்த அற்புதம் மட்டுமல்ல. இதுபோல் நிறைய அனுபவம்.

ஒருநாள் சித்தர் என்னை ஒரு மயானத்திற்கு அழைத்துச் சென்றார். அது இரவு வேளை .  சித்தர் என்ன பார்த்து உங்களுக்கு பயமாக இருக்கிறதா என்று கேட்டார். உடனே நான் நீங்கள் என்னுடன் இருக்கும்போது எனக்கென்ன பயம் என்றேன். 

சித்தர் மயானத்தில் அமர்ந்து தியானத்தில் மூழ்கினார்.  சிறிது நேரத்தில் அவரது உடலில் இருந்து கை , கால், தலை எல்லாம் தனித்தனியாக வெவவேறு இடங்களில் விழ, எனக்குள் ஆச்சர்யம் அதிகமானது.  இது எப்படி, உயிருள்ள ஒரு மனிதனின் உடல் பாகங்கள் தானே உதிர்வதுபோல் கீழே பிரிந்து விழுமா என்று யோசித்தேன்.  அதற்குள் மீண்டும் அவரது உடல்பாகங்கள் ஒவ்வொன்றாக ஒன்று சேர ஆரம்பித்தது.  சிறிது நேரத்தில் சித்தர் முழு உருவமாகி தியான நிலையில் இருந்து கண் திறந்தார்.  என்னைப் பார்த்து புன்னகைத்தவாறு என்ன வேடிக்கை பார்த்தீர்களா என்று கேட்டார்.  எவ்வளவு மனோதைரியம் உள்ளவரென்றாலும் மயானத்தில் அதுவும் இரவு நேரத்தில் இப்படி ஒரு காட்சியைப் பார்த்தால் ஆடிப் போவார்கள்.   ஆனால் எனக்குள் எந்த பயமோ, அச்சமோ இல்லாமல் சித்தரின் சித்து வேலையைப் பார்க்க முடிந்தது.

சித்தருக்கு எல்லா மூலிகைகளும் தெரிந்திருந்தது.  காசநோய், மேகநோய், கேன்சர், தீராத வயிற்றுவலி என பல நோயாளிகளுக்கு கண்ணில்பட்ட மூலிகை இலைகளை கொடுத்து குணமாக்கி இருக்கிறார்.  மஞ்சள் காமாலை முற்றி டாக்டர்களால் கைவிடப்பட்ட சிறுமியை ஒரு எலுமிச்சம் பழத்தால் குணப்படுத்தி இருக்கிறார்.   

எனது வாழ்க்கையில் சித்தர் பல அற்புதங்களை செய்து இருக்கிறார்.  ஒருமுறை நாங்கள் குடும்பத்தோடு சென்ற கார் இருபது அடி பள்ளத்தில் உருண்டு விழ எங்களுக்கு ஒரு சிறு அடிகூட இல்லாமல் காப்பாற்றியது சித்தர்தான் என்று பெருமிதமாய் கூறுகிறார் ஓய்வு பெற்ற டெப்டி கலெக்டர் கொ. வே. விஸ்வநாதன்.

Saturday, January 15, 2022

கடுவெளிச்சித்தர் - 100 ஆண்டுகள் முழுமையாக வாழலாம்.

மனதை ஆரோக்கியமாக வைத்திருந்தால் 100 ஆண்டுகள் முழுமையாக வாழலாம் என்கிறார்கள் சித்தர்கள்.  மனதின் கெட்ட எண்ணத்தினால் உயிர் அணுக்கள் பாதிக்கப்படுகிறது என்கிறார் கடுவெளிச்சித்தர்.

அந்த மனதை நல்ல சிந்தனையோடு வைத்திருந்து முழு ஆயுளோடு வாழ அவர் அஷ்டாங்க யோகம் என்கிற எட்டுவிதமான நெறிமுறைகளை சொல்கிறார். அவை:

இமயம்: அகிம்சையாய் நடத்தல், களவு செய்யாமை, சத்தியம், பிரம்மசரியத்தைக் கடைப்பிடித்தல், பிரதிபலன் பாராமல் உதவி செய்தல்.

நியமம்: தேக்க சுத்தியோடு இருத்தல், தேகாபிமானம் விடுத்தல், ஆத்மாநாத்மா தரிசனம், ஈஸ்வர பிராணிதானம், கெடுதி செய்தவர்களுக்கு கேடு நினையாமை.

ஆசனம்: சுவத்திகம், கோமுகம், வீரம், சிங்கம், புத்திரம், மயூரம், சித்து, பதமும், சுகம்.

பிராணாயாமம்: சுவாச பந்தனம், தேகத்தை அசைவற்று நிறுத்தல், எண்ணங்களை சுருக்குதல்.

பிரத்தியாகாரம்: ஐம்புலனும் அடக்கி மனோ சலனமற்று தனியே இருப்பது.

தாரணை: தேகம் மெலிந்து ஒடுங்கி, வியர்த்து தன்னிச்சையாய் நினைவற்று போதல்.

தியானம்: இந்திரிய சலனம் கெடுத்து, மனோலயப்படுத்தி, நிர்க்குணம் வகித்து, சுவாசத்தை கட்டுப்படுத்தி, நாடிகள் ஸ்தம்பிக்க நின்று அனந்த ஜோதி கலந்திருக்கக் காணுதல். இதுவே ஆத்ம சொரூபம்.

சமாதி: சரீர வாதனைகளின் உணர்வற்று, சுவாசம் கட்டி, பிரும்ம சொரூபத்தில் கலந்து நீடூழி நிற்பது. 

கடுவெளிசித்தர் சொல்லியிருக்கும் இந்த எட்டு நெறிகளில் சிலவற்றை கடைபிடித்தாலே உங்கள் வாழ்க்கை இன்பமயமானதாக மாறிவிடும்.


Wednesday, January 12, 2022

மாரடைப்பு (Heart Attack)

விழிபுணர்வு பதிவு

மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்

பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம்  அவர்கள் சொன்ன தகவல் இது.

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு

S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

S = SMILE

T = TALK

R = RAISE BOTH ARMS

ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.

ஆனால், அவர் நம்மிடம் தனக்கு ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை

S T R அதாவது,

SMILE (சிரிக்க சொல்வது),

TALK (பேச சொல்வது),

RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)

இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும் மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்! இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!

உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.

மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம் என்று உறுதியாக கூறுகிறார்கள்.

இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

அதாவது, அவருடைய நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,

அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்.

Tuesday, January 11, 2022

பாதுகாக்கப்பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்

பாதுகாக்கப்பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்.

நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி  எதற்கு பயன்படும்?

அருகம்புல் பொடி

அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

நெல்லிக்காய் பொடி

பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் சி உள்ளது.

கடுக்காய் பொடி

குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

வில்வம் பொடி

அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

அமுக்கரா பொடி

தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

சிறுகுறிஞான் பொடி 

சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

நாவல் பொடி

சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

வல்லாரை பொடி

நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

தூதுவளை பொடி 

நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

துளசி பொடி மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

ஆவரம்பூ பொடி

இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

கண்டங்கத்திரி பொடி

மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

ரோஜாபூ பொடி

இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

ஓரிதழ் தாமரை பொடி 

ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது ஒரு வயாகரா மூலிகை.

ஜாதிக்காய் பொடி

நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

திப்பிலி பொடி

உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

வெந்தய பொடி

வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

நிலவாகை பொடி

மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

நாயுருவி பொடி

உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

கறிவேப்பிலை பொடி

கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு.

வேப்பிலை பொடி

குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

திரிபலா பொடி

வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

அதிமதுரம் பொடி

தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

துத்தி இலை பொடி

உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

செம்பருத்திபூ பொடி 

அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

கரிசலாங்கண்ணி பொடி

காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

சிறியா நங்கை பொடி

அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

கீழாநெல்லி பொடி,

மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

முடக்கத்தான் பொடி 

மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

கோரைகிழங்கு பொடி 

தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

குப்பைமேனி பொடி 

சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

பொன்னாங்கண்ணி பொடி

உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

முருஙகைவிதை பொடி

ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

வாதநாராயணன் பொடி

பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

பாகற்காய் பவுட்ர் குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைத்தண்டு பொடி

சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

மணத்தக்காளி பொடி 

குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

சித்தரத்தை பொடி

 சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

பொடுதலை பொடி பேன் உதிரும், முடி உதிர்வதை தடுக்கும்.

சுக்கு பொடி

ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆடுதொடா பொடி 

சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

கருஞ்சீரகப்பொடி சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

வெட்டி வேர் பொடி

நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

வெள்ளருக்கு பொடி இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

நன்னாரி பொடி

உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

நெருஞ்சில் பொடி சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

பிரசவ சாமான் பொடி

பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

கஸ்தூரி மஞ்சள் பொடி

தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

பூலாங்கிழங்கு பொடி

குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

வசம்பு பொடி

பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

சோற்று கற்றாலை பொடி

உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

மருதாணி பொடி

கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

கருவேலம்பட்டை பொடி

பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை, இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும்.

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

உத்தராயண புண்ணிய காலம்

உத்தராயண புண்ணிய காலம் 

சூரியன் இல்லாவிடில் அப்படியென்ன நடந்துவிடும் ?

யாராவது இவ்விதம் கேட்பார்களா?  கேட்டால் ஊர் சிரிக்குமே, இப்படியும் ஒரு கேள்வியை என்று !

ஆனால் இந்தக் கேள்வியைக் கேட்டவர் சாதாரண மனிதரல்ல.  ஒரு மஹரிஷியின் தவவலிமை மிகுந்த ரிஷிகுமாரர், பெயர் உத்கலன். மாமுனிவர்களும், நவக்கிரஹ நாயகர்களும், தேவர்களும், ரிஷிகளும் நிறைந்திருந்த இந்திரனின் சபையில்தான் இக்கேள்வியைக் கேட்டார்.   

அங்கு கிரகங்களின் நடுவே சூரியனும் நின்றிருந்தார் நடுங்கியவாறு.  சூரியனே நடுங்கும்படியான தவவலிமை பெற்ற ரிஷிகுமாரர் உத்கலன். அக்கினியை வளர்த்து அதன் மத்தியில் அமர்ந்து பல வருடங்கள் தவம் செய்து பல விரதங்களினால் உடலை வருத்தி மகத்தான தவவலிமை பெற்றவர் உத்கலனின் தந்தை. அவரை ஒரு தருணத்தில் அவமதித்துவிட்டார் சூரியன்.   தர்மத்தின் சூஷ்மங்களை அறிந்த உத்கலனின் தந்தை சூரியனை மன்னித்து விட்டுவிட்டார்.  ஆனால் உதகலனுக்கு மூவுலகங்களும் போற்றி வணங்கும் தன்தந்தையை அவமதித்த சூரியனைத் தண்டிக்காமல் விடக்கூடாது என்ற கோபம்.

ஆதலால் வானவெளியில் தங்கமயமான தேரில் வலம் வந்து கொண்டிருந்த சூரியனைத் தன் தபோசக்தியினால் நிறுத்தினார் உத்கலன்.  தன்னை காப்பாற்றும்படி வேண்டி தேவேந்திரனைச் சரணமடைந்தார் சூரியன்.

சூரியனை மன்னிக்கும்படி தேவேந்திரன் சொல்ல, சூரியனே இல்லாமல் செய்துவிடுகிறேன் என்று கோபத்துடன் வந்த உத்கலனுக்கு தேவேந்திரனின் உபசரிப்பு கோபத்தை குறைத்தது. இருந்தாலும், முன்று நாட்கள் சூரியன் ஒளியிழந்து வானவெளியில் உலாவர இயலாமல் போகக்கடவது என்று சாபம் கொடுத்தார் உத்கலன். 

இந்த சாபத்தினால் எவ்வித சலனமுமின்றி மூன்று தினங்கள் சூரியனொளியிழந்தார்.  இதன்விளைவாக உலகங்கள் அனைத்தும் இருளில் மூழ்கின.  ஏராளமானவர்கள் உயிர் இழந்தனர். நதிகள் திசை மாறின.  தேவதா சக்திகள் தமது சக்திகளை இழந்து சோர்வுற்றன.  

சூரியனுக்கு சாபத்தைக் கொடுத்தபின்பு அமைதியானார் உத்கலன். தன சீற்றத்தினால் உலகம் அனைத்திற்கும் மிகப் பெரிய துன்பம் ஏற்பட்டதைக் கண்டு அளவற்ற வேதனை அடைந்தார் உத்கலன்.  இனி உலகில் எவருக்கும் அளவுக்கு மீறிய கோபம் ஏற்படாமல் இருக்கட்டும் என்று உலக மக்களை ஆசீர்வதித்து தன் ஆசிரமத்திற்குத் திரும்பி சென்றார் அந்த ரிஷிகுமாரர்.  உத்கலனின் சாபத்தினால் மூவுலகிற்கும் சூரியன் ஒளி கிடைக்காததால் ஏற்பட்ட விபரீத விளைவுகளை மிகப் புராதனமான நூல்கள் விளக்கியுள்ளன.

சமீபத்தில் தமிழகமே வெள்ளத்தில்  மூழ்கியபோது எப்போது மழை நிற்கும், எப்போது சூரியனின் கிரணங்கள் வெளிப்படும் என்று மக்கள் ஏங்கினர். நமது ஆரோக்கியத்திற்கும் சுற்றுப்புற சூழ்நிலை நல்லபடி இருப்பதற்கும் சூரியபகவானின் அருள் நமக்கு வேண்டும்.  ஆதலால் தான் வேதகாலத்தில் இருந்தே நாம் சூரிய பகவானைத் தினமும் பூஜித்து வருகிறோம். சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை ஆப்கானிஸ்தானத்தில் இருந்து மலேஷியா, சுமத்ரா, கம்போடியா, ஈரான் வரை சூரிய வழிபாடு பரவி இருந்தது.  

பாரத புண்ணிய பூமியின் மகரிஷிகள் சூரியனின் அளவற்ற சக்தியைப் பற்றி போற்றி அருளியுள்ளார்கள்.  இத்தகைய அளவற்ற சக்தியும், புனிதப் பெருமையும் பெற்றுள்ள சூரிய பகவான் வானமண்டலத்தில் குருபகவானின் ராசியான தனுர் ராசியில் இருந்து சனி பகவானின் ராசியான மகர ராசியில் பிரவேசிக்கும் மகத்தான புண்ணிய காலத்தை உத்தராயண புண்ணியகாலம் என பாரத மக்கள் சூரியனை வழிபடுகின்றனர்.   தேவர்களின் உலகில் இரவு நேரம் முடிந்து பகல் நேரம் ஆரம்பிக்கும் முகூர்த்த நேரமும் இந்த உத்தராயண தினத்தில் தான். 

இறைவன் எழுந்தருளியிருக்கும் பரமபதத்தின்  வாயில் திறக்கும் நன்னாளும் உத்தராயணம் பிறக்கும் தினத்தில்தான்.  பரமபவித்திரமான உத்தராயண புண்ணிய காலத்தின் பெருமையை இதிகாச ரத்தினமான ஸ்ரீமத் மஹாபாரதம் அற்புதமாக விவரித்துள்ளது.



Tuesday, January 04, 2022

நெகிழ வைத்த நிஜங்கள்

சௌதி அரேபியாவில் ஒரு அரபிக்கு திருமணம் முடிந்து 20 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பல கம்பனிகளுக்கு சொந்தக்காரர். அனைத்து சொத்துக்கும் வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருந்த அந்த குடும்பத்திற்கு பொக்கிசமாக வந்தது அந்த குழந்தை.

இந்த வீட்டில் ஒரு ஸ்ரீலங்கா வை சேர்ந்த ஒரு பெண்மணி வேலை செய்து வருகிறார். இந்த அம்மணிக்கு 3 குழந்தைகள். சிறு வியாபாரம் செய்து குழந்தைகளையும் கவனித்து வருகிறார் அவரின் கணவர்.

இந்த வீட்டுவேலை செய்யும் அம்மணி தான் இந்த குழந்தைக்கு எல்லாமே. தாய்பாலை தவிர அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது இவள் தான். தூங்கக் கூட இந்த குழந்தை பெற்றோரிடம் செல்லாது. தூங்கிய பின்பு, தூக்கிக்கொண்டு அவர்களின் ரூமுக்கு கொண்டு செல்லுவார்களாம் பெற்றோர்கள்.

குழந்தைக்கு 2 வருடம் ஆகி இருக்கும். வீட்டுவேலை செய்யும் இந்த பெண்மணி விடுமுறைக்கு ஊர் செல்ல பலமுறை அனுமதி கேட்டும், முடியாத சூழ்நிலையில் தள்ளிக்கொண்டே போனது. மிகுந்த போராட்டத்திற்குப் பின்பு 3 மாதம் விடுமுறையில் ஸ்ரீலங்கா சென்றார் அம்மணி.

தன்னை பிரிந்த அடுத்த நிமிடத்தில் அழ ஆரம்பித்து விட்டது அந்த குழந்தை. சரி, சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்று இருந்து விட்டார்கள்.

இரவு உணவு உண்ணவில்லை. ஒரே அழுகை. அழுது.. அழுது.. துவண்டு தூங்கி விட்டது. அப்படியே தூங்கட்டும். காலையில் விழித்ததும் பசிக்கும், சாப்பிடும். என்று விட்டு விட்டார்கள்.

காலையில் விழித்ததும் ஈனக்குரலில் அழ ஆரம்பித்து விட்டது. சாப்பாடு ஊஹூம். அருகில் இருக்கும் சாமான்களை பலம் இல்லாத கையால் தூக்கி எறிவதும், துவண்டு விழுவதுமாக இருந்தது. சில மணித்துளியில் மயங்கி விழுந்து விட்டது.

பயந்து போன பெற்றோர்கள் மருத்துவமனையில் அட்மிட் பண்ணி விட்டார்கள். அனைவர்களுக்கும் ஒரே கவலை. மூன்று நாட்களாக ட்ரிப் மூலம் தான் அனைத்தும் நடந்து வருகிறது.

டாக்டர்களுக்கு ஒன்றும் ஓடவில்லை. எந்த மருத்துவமும் கைகொடுக்க வில்லை. மூன்று நாட்களாக கண் திறந்து பார்க்கவில்லை. மருத்துவர்கள் கையை விரித்து விட்டார்கள்.

ஒரே மருந்து..!!!! அந்த வேலைக்கார பெண் இங்கு வந்தே ஆகனும். இல்லை என்றால் இப்படியே கோமாவில் தான் குழந்தை இருக்கும். அதன் பின்பு ஒன்றும் நல்லது சொல்ல இயலாது என்று கூறி விட்டார்.

அந்த அரபி அந்த அம்மணியை தொடர்பு கொள்ள எவ்வளவோ முயன்றும் முடியாமல் ஒட்டு மொத்த குடும்பமும் உருக்குலைந்து இருந்தது.

பல வருடங்களுக்கு முன்பு, இந்த ஸ்ரீலங்கா பெண்மணி, என் கம்பனிக்கு அடுத்து இருக்கும் ஒரு வேலைக்கு ஆட்கள் எடுக்கும் நிறுவனம் மூலம் வந்தவர். முதல் நாள் அவளை அழைத்து செல்ல வந்த சௌதி, அவள் பேசும் தமிழ் புரியாமல், என்னிடம் அனுப்பி வைக்கப்பட்டார்.

அதை நினைவில் வைத்துக்கொண்டு, என் ஊராக இருக்கும் என்று என்னிடம் வந்தார். விபரங்கள் கூறினார். குழந்தை போல அழுதார். ஒரு மல்டி மில்லினர், பல நிறுவனங்களுக்கு அதிபதி, குறைந்தது 15 ஆயிரம் நபர்களாவது இவரிடம் பணி புரிகிறார்கள். கூடவே மன்னர் குடும்பத்தில் பெண் எடுத்தவர்..!! விபரம் சொன்னார்.

நான் அவரிடம், தமிழ் மொழி பல நாடுகளில் பேசுகிறார்கள். நான் இந்தியா, அவள் ஸ்ரீலங்கா. என்று விவரித்துக்கொண்டு இருக்கும் போது, மூலையில் ஒரு மின்னல் வெட்டியது.

அந்த அம்மணி கூறிய அவளுடைய ஊரும், எனக்கு பழக்கமான ஒரு ஸ்ரீலங்கா டிரைவரின் ஊரும் ஒன்று. அடுத்தடுத்த தெரு. அவரை பிடித்தேன், அவரின் மனைவிக்கு போன் போட்டு, அடுத்த தெருவில் இருந்த வேலைக்கார அம்மணியை தொடர்பு எல்லைக்குள் கொண்டு வந்து, சௌதியிடம் பேச வைத்து விட்டேன்.

ஒரு 40 நிமிடத்தில் அனைத்தும் முடிந்து விட்டது. ஆனால் அந்த வேலைக்கார அம்மணியோ, நான் வந்து 4 நாட்கள் தான் ஆகிறது, கணவனுக்கு இளைப்பு நோய் வந்து மருத்துவமனையில் அட்மிட் பண்ணி இருக்கின்றோம். நான் எப்படி வர இயலும் என்று தன்னுடைய இயலாமையை கூற, சௌதி என்னிடம் பேச சொல்ல, நான் இந்த குழந்தையின் நிலைமையை சொல்ல, அவள் அழுக, அவளின் சூழ்நிலையை சொல்ல. அனைத்தையும் சௌதியிடம் கூறினேன்.

அவரோ தேம்பி தேம்பி அழுது கொண்டு, என் சொத்து அனைத்தும் போனாலும் பரவாயில்லை. எனக்கு என் குழந்தை வேண்டும் என்று கூறினார்.

சரி, அவளுடைய குடும்பத்திற்கு விசா ஏற்பாடு பண்ணுங்க என்று கூறி, அவளிடம் அனுமதியும் வாங்கி விட்டேன். அடுத்து கூடுதல் பிரச்சனை.அவளுடைய கணவருக்கும் குழந்தைகளுக்கும் பாஸ்போர்ட் இல்லை. சிறிலங்காவிற்குவிசா கிடைப்பது அரிது. அதுவும் பாமிலி விசா-குதிரைக்கொம்பு. அப்படி விசா கிடைத்தாலும், ஸ்டாம்பிங் அடித்து வர குறைந்தது 4 வாரங்கள் ஆகும்.

அதுவரை குழந்தை தாங்குமா என்ற பல சங்கடங்களை அவரிடம் விவரித்தேன்.

அவரோ, நோ ப்ராப்ளம். என் மனைவி ஒரு அமீரா(இளவரசி) என்று கூறி, அதிசயத்திலும் அதிசயமாக 2 நாட்களில் அனைத்தும் முடிந்து, அவர்கள் அனைவர்களும் தம்மாம் ஏர்போர்ட் வந்து இறங்கி விட்டார்கள்.

குழந்தையின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. கசக்கி போட்ட சிறு துண்டு போல கிடந்தது. ஒரு சிறு அசைவு கூட இல்லை.

நேராக அவர்களை அழைத்துக் கொண்டு சாத் மருத்துவமனைக்கு சென்றோம்.

மருத்துவமனையே பரபரப்பாக ஆகிவிட்டது. குடும்பத்தார்கள் கூட்டம் ஒருபக்கம். நண்பர்கள், நிறுவனத்தில் முக்கிய ஆட்கள் என்று பெரும் கூட்டம்.

குழந்தை இருந்த அந்த சூட்-க்குள் சென்றோம். குழந்தை இருந்த நிலையை பார்த்ததும் அந்த வேலைக்கார அம்மணி கதறி விட்டார். அவளை தேற்றி ஆறுதல் படுத்தி, குழந்தைக்கு அருகில் அழைத்துச் சென்றோம்.

மெதுவாக அம்மணி, ஆதில், ஆதில், ராஜா (தமிழில் தான்) என்று கூற கூற காலின் பெருவிரல் அசைய ஆரம்பித்தது. இங்கிலாந்து மருத்துவர் சைகை காட்ட காட்ட அந்த அம்மணி ஆதில் ஆதில்.. ராஜா.. ராஜா.. என் ராஜா.. என்று கூறக் கூற , ஒரே நிசப்தம்.

எனக்கோ எதோ ஒரு தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டு இருப்பது போல ஒரு உணர்வு.

சிறிது சிறிதாக குழந்தையிடம் அசைவு தெரிய.. அனைவர்களின் முகத்திலும் பிரகாசம் தெரிய ஆரம்பித்தது.

ஒரு 20 நிமிடத்தில் கண்ணை திறந்தான், அருகில் இருக்கும் கத்தாமாவை பார்த்தான், எப்படிதான் அவன் உடலில் இவ்வளவு சக்தி இருந்ததோ தெரியவில்லை, சடார்….. என்று எந்திரிக்க, உடலில் இணைக்கப்பட்ட வயர்கள், டியூப்கள் எல்லாம் தெறிக்க, அவளை கட்டிப்பிடித்து, முதுகில் குத்து குத்து என்று குத்தி, கறுத்த அவளுடை முகத்திலும், கழுத்திலும், முத்தங்கள் பொழிய அனைவர்களுடைய கண்களிலும் கண்ணீர் உருண்டு ஓடியது.

எத்தனை பாசமலர் படம் பார்த்தாலும் இந்த காட்சி கிடைக்காது.

அங்கு வந்து இருந்த அனைத்து பெண்மணிகளும் அந்த வேலைக்காரியை முத்தத்தால் நனைத்தார்கள். சிறிது நேரத்தில் அந்த வளாகம் குதூகலமாகவும், சந்தோசமாகவும், ஒரு பார்ட்டி ஹால் மாதிரி உருமாறி விட்டது.

அந்த வேலைக்கார பெண்மணி சாப்பிட்டுக்கொண்டு இருந்த எச்சில் பட்ட கேக்கை, அந்த குழந்தை பிடுங்கி தின்ன, கூடி இருந்த அனைவர்களும் ரசித்து பார்க்க.. ஒரே பரவசம் தான்.

அப்புறம், அவருடைய கணவருக்கு அதே மருத்துவமனையில், அதே சூட்டில் மருத்துவம், அவர்களின் நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை, குழந்தைகளுக்கு நம்ப முடியாத பள்ளியில் உயர்ந்த கல்வி.

கொடுக்க நினைப்பவன் கொடுக்க நினைத்தால்…..!!!! வாழ்க்கை வசந்தமே.

Monday, January 03, 2022

காசிக்கு செல்லும் தமிழர்களா நீங்கள் ?

காசிக்கு செல்லும் தமிழர்களா நீங்கள் ?... இதோ உங்களுக்காக...

காசிக்குச் செல்பவர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. 

ஒன்று எங்கே தங்குவது? இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன செய்வது?

இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே பதில்:-

காசி நகரத்தார் விடுதிக்குச் செல்லுங்கள்!

அதன் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் என்ன?

கீழே கொடுத்துள்ளேன்.

அனைவரும் தங்கலாமா?

இனம், ஜாதி வித்தியாசம் இன்றி அனைவரும் தங்கலாம்.

சிபாரிசுக் கடிதம் வேண்டுமா?

அதெல்லாம் ஒன்றும் கிடையாது. தமிழில் பேசினாலே போதும். அனுமதித்துவிடுவார்கள். புறப்படும்போது தொலைபேசியில் தகவல் சொல்வது நல்லது.

முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்:-

Sri Kasi Nattukkottai Nagara Satram, Godowlia,

Varanasi - 221 001 (U.P) 

Telephone Nos: 0542 - 2451804,

Fax No: 0542 - 2452404

(ஆட்டோக்காரர்களுக்கு நாட்கோட் சத்திரம், கோடொவ்லியா, சுசீல் சினிமா தியேட்டருக்குப் பின்புறம் என்று சொல்ல வேண்டும்)

Naat Koat Satram

Location Godowlia, Tanga Stanad, Behind Sushil Cinema,Varanasi

கட்டணம் உண்டா?

உண்டு! தனி நபருக்கு நாளொன்றுக்கு இருபது ரூபாய். அதற்கு மகமை என்று பெயர். உள்ளே உள்ள அரங்கங்கள் மற்றும் மண்டபங்களில் தங்கினால், அதற்கு வாடகை கிடையாது. 

உங்கள் உடமைகளை வைத்துக்கொள்ள லாக்கர்களைத் தருவார்கள். ஒரு லாக்கருக்கு ஒரு நாள் வாடகை பத்து ரூபாய் மட்டுமே! குழுவாகச் சென்றால், மண்டபங்கள் அரங்குகள் உள்ளன. அதுதான் வசதி. 20 பேர்கள், 30 பேர்கள், 50 பேர்கள் என்று வருபவர்களுக்கு, அவர்களின் அளவிற்கு ஏற்றபடி தங்கும் அரங்குகள், மண்டபங்கள் உள்ளன. பாய்கள், ஜமுக்காளங்கள், தலையணைகள் எல்லாம் அங்கேயே கிடைக்கும். அதற்குச் செலவில்லை.

ப்ரைவேசி வேண்டும் என்றால் தனி அறைகள் நிறைய உள்ளன. மூன்று விதமான அறைகள் உள்ளன. முன் காலத்தில் கட்டப்பெற்ற அறைகள் அடுத்த காலகட்டத்தில் கட்டப்பெற்ற Attached Bath Room and Flush Outஉடன் கூடிய அறைகள். மற்றும் டீலக்ஸ் அறைகள். சுமார் 60 அறைகள் உள்ளன. சுமார் 500 பேர்கள் வரை தங்கும் வசதி உள்ளது.

மகா சிவராத்திரி, தீபாவளி, தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற விழாக்காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற சமயங்களில் இருக்காது. தற்போது சராசரியாக நாளொன்றுக்கு 150 பேர்கள்வரை வந்து செல்கிறார்கள். அவர்களில் நகரத்தார்களின் பங்களிப்பு 5 சதவிகிதத்திற்கும் குறைவானதே. விழாக்காலங்களில் நகரத்தார்கள் 200 பேர்களுக்கு மேல் வந்து செல்வார்கள்.

எத்தனை பேர்கள் வந்தாலும் தாங்கும். உள்ளே குளியலறை, மற்றும் கழிப்பறை வசதிகள் தங்கும் அனைவருக்கும் சிறப்பாக உண்டு. அவற்றைச் சுத்தம் செய்வதற்குத் தனியாகப் பணியாளர்கள் உள்ளார்கள். விடுதிக்கு 4 காவற்காரர்கள் உள்ளார்கள். 

இரண்டு படுக்கைகள் கொண்ட அறைக்கு நாளொன்றுக்கு நூறு ரூபாய் கட்டணம் கழிப்பறை குளியலறை இணைப்புடன் கூடிய அறைகளுக்கு (2/3 பேர்கள் தங்கலாம்) நாளொன்றுக்கு இருநூறு ரூபாய் கட்டணம்

டீலக்ஸ் அறைகளில் 4 பேர்கள் தங்கலாம். அதற்கு நாளொன்றுக்கு முந்நூறு ரூபாய் கட்டணம்.

குளியல் அறைகளில் Water Heater உண்டு 

குடிப்பதற்கு Purified Water உண்டு

மின்தடை இருக்காது Full Gen Set வசதி உண்டு

சரி உணவு?

விடுதியில் மிகப் பெரிய சமையல் அறையும், பரிமாறும் கூடங்களும் உள்ளன. 

இரண்டு செட்டி நாட்டு சமையல்காரர்களும், ஆறு பணியாளர்களும் உள்ளனர். சைவ உணவுகள் மட்டுமே. நம்பிச் சாப்பிடலாம். ருசியாக இருக்கும்.

1. காலைச் சிற்றுண்டி:- நேரம் 8 மணி முதல் 10 மணி வரை.

இட்லி, பொங்கல் சாம்பார், சட்னி - அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். டீ உண்டு.

கட்டணம் ரூ.35:00 மட்டுமே

2. மதிய உணவு: -  நேரம் 12:30 மணி 2:30 மணி வரை

சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், தயிர். அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். 90% கட்டணம் இருக்காது. அன்னதானக் கணக்கில் சாப்பாடு இலவசம். சில நாட்களில் கட்டளைதாரர்கள் இல்லை என்றால் அப்போது மட்டும் தலைக்கு ரூ.40.00 கட்டணம்.

ரூ.4,000.00 அன்னதானக் கணக்கில் செலுத்திய கட்டளைதாரர்கள் நிறைய உள்ளார்கள். அவர்கள் விரும்பிய தினத்தில் அவர்கள் பெயரில் அன்னதானம் நடைபெறும்.

3. மாலை 4 மணி டீ உண்டு

4. இரவு 7:30 முதல் 9 மணிவரை

இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, சாம்பார், சட்னி, குருமா என்று உள்ளன. அவற்றில் ஏதாவது இரண்டைச் செய்து பரிமாறுவார்கள்

கட்டணம் ரூ.35:00 மட்டுமே

உணவிற்குக் காலை 8 மணிக்கு கூப்பன்களை வாங்கிவிட வேண்டும். அவர்கள் ஆட்களை எண்ணி அதற்குத் தகுந்தாற்போல சமைப்பதற்காக அந்த ஏற்பாடு.

|~~~~~~|

Sunday, January 02, 2022

MGR ~~காஞ்சி மஹா பெரியவர்

MGR is really a blessed soul!!!

காஞ்சி சங்கரமடத்தின் முன் அந்தக் கார் வந்து நிற்கிறது.

காரிலிருந்து இறங்குபவர் அன்றைய முதல்வர் எம்,ஜி,ஆர்!

எந்தவித முன் அறிவிப்பும் இல்லை? அவர் வருகிறார் என்ற செய்தியும் இல்லை??
மடத்தைச் சேர்ந்தவர்கள் அங்கும் இங்குமாக அலை பாய்கிறார்கள். காரணம்? அன்றைய மடாதிபதியான மஹா பெரியவர் அந்த சமயம் மடத்தில் இல்லை! முதல்வர் என்றால் முறைப்படி பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவழைக்கவேண்டும்?
மடத்தில் உள்ளவர்களின் மருட்சியைப் பார்த்து பொன் மனம் கேட்கிறார்,
"ஏன் இந்தப் பரபரப்பு?"

அவரிடம் தயங்கிய படியே விபரம் சொல்லப்படுகிறது.

மகா பெரியவர் மூன்று கி மீ தூரத்தில் ஒரு குடிலில் தியானத்தில் இருக்கிறார்.
"இவ்வளவு தானே? அங்கே போய் அவரை தரிசித்துக் கொள்கிறேன்", பதட்டமில்லாத பண்பட்ட வார்த்தைகளை உதிர்த்து விட்டு மீண்டும் காரில் ஏறிக் கொள்கிறார் மக்கள் திலகம்.

மஹா பெரியவர் தங்கியிருந்த குடில் ஒரு குறுகிய சந்தில் இருந்ததால் காரிலிருந்து இறங்கியவர் எந்தவித பந்தாவும் இல்லாமல் செல்கிறார் குடிலை நோக்கி.

முதல்வரை வரவேற்ற அந்த முதிர்ந்த கனி,
"உன்னை உட்கார சொல்ல ஒரு இருக்கை கூட இங்கில்லை."

"அதனால் என்ன? இங்கே இந்த மடத்துக்கு நீங்கள் தானே முதல்வர்!"
என்றபடி அவர்க்கு எதிரே மண் தரையில் உட்காருகிறார் இதயக்கனி.

இங்கே ஒரு விஷயம் சிலர் அறிந்திருக்க நியாயம் இல்லை, தன் மனதுக்கு மிகவும் பிரியப்பட்ட ஒரு சிலரைத்தான் மஹா பெரியவர் ஒருமையில் அழைப்பார்கள்! அந்த ஒரு சிலரில் எம்.ஜிஆரும் ஒருவர்!

ஆசி வழங்கிய பின் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அந்த அருள் ஞானி!

"நம்ம மனுஷா முருகனோட அறுபடை வீடுகள்---பழனி-- திருச்செந்தூர் திருத்தணி என்று ஒவ்வொன்றுக்கும் தனித் தனியா போகவேண்டியிருக்கு! அதுக்கு தேக சிரமம்--கால விரயம், பணச் செலவுன்னு ஆகிறது.
ஆறுபடைகளையும் ஒரே இடத்துல பிரதிஷ்டை பண்ணும்படியா உன் ராஜ்யத்துல ஒரு இடம் கொடுத்தாய் என்றால் ரொம்ப நன்றாக இருக்கும்"

இவ்வளவு தானே,
இந்த விஷயத்துக்கா என்னைக் கூப்பிட்டிங்க?ஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருந்தா கூடப் போதுமே? நம் நெஞ்சமெனும் மடத்தில் இன்றும் தங்கற இந்த மடாதிபதி அந்த
சங்கர மடாதிபதியிடம் கனிவாகக் கேட்க,

"உன்னை நேரில் பார்க்கணும்ன்னு ஆசை" என்று பதில் தருகிறார் எதிலும் ஆசை வைக்காத அந்த முனிவர்.*

"நீ எங்கே எப்போ எத்தனை மணிக்குப் போனாலும் ஜனங்க உன்னைப் பார்க்க ஆசையோட சூழ்ந்துக்கறா.
அதனால தான் இந்த இடத்துக்கு உன்ன வரச் செஞ்சேன்! அங்கப் பாரு அதற்குள் உன்னைப் பார்க்க ஜனம் திரண்டுடுத்து. நீ கிளம்பு ", என்று அன்புடன் விடை தருகிறார் அந்த ஆன்மிக அருங்கனி.

இப்படியாக உருவானது தான் சென்னை பெஸன்ட் நகரில் உருவாகியுள்ள முருகன் அறுபடை வீடு கோயில்!

எம்,ஜி,ஆர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, யாராலும் விலைக்கு வாங்கப்பட முடியாத யாருக்கும் தனியாக பிரார்த்தனை செய்யும் பழக்கம் இல்லாத அந்தப் பெரியவர் எம்,ஜி,ஆர் ஒருவருக்காக மட்டுமே அவர் நலம் பெற வேண்டி பிரத்யேக பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

நன்றி:
ஆன்மீக களஞ்சியம்...

Wednesday, December 29, 2021

இதயத்தில் அடைப்பு உள்ளதா ?

இதயத்தில் அடைப்பு உள்ளதா ?

இதோ உடனே செல்லுங்கள் திருவனந்தபுரம் கட்டாக்கடா அருகில் உள்ள பன்னியோடு டாக்டர்.சுகுமாரன் வைத்தியர் அவர்கள் இலவசமாக வைத்தியம் செய்கிறார்.

நாடித் துடிப்பை பார்த்தே உங்கள் நோயை கண்டுபிடிக்கிறார்.

வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் வைத்தியம்.

இதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு மூன்று மாத மருந்துக்கு 2700 ரூபாய் ஆறு நாட்கள் மருந்து உட்கொண்டாலே ரத்த குழாய் அடைப்பு மாறுகிறது.

பணம் கொடுக்க வசதி இல்லாதவருக்கு இலவசம் 

தேவையுள்ளவர் இந்த வாய்ப்பை நழுவவிடாதீர் .

Sukumaran Vaidyans 

G A Pharmacy & Nursing Home. 

Neyyattinkara P.O.,

Thiruvananthapuram-695572, 

Kerala State.

தாம்பரம் 卐 செங்கோட்டை புதிய ரெயில்

 *புதிய ரெயில் அறிமுகம்.*


 *பகல் நேரத்தில்...புதுக்கோட்டை வழியாக ... Chair Car வசதியுடன்... முழுவதும் முன்பதிவில்லா புதிய ரெயில்.* 


*தாம்பரம் 卐 செங்கோட்டை* 


 *ரெயில் எண் 16189* 


தாம்பரம் பு. நேரம்  …….….07:00

செங்கல்பட்டு....................07:30

விழுப்புரம்  ………………….…09:20

மயிலாடுதுறை ................11:35

கும்பகோணம் ..................12:10

தஞ்சாவூர்..........................12:45

திருச்சிராப்பள்ளி.............14:25

*புதுக்கோட்டை.................15:15* 

காரைக்குடி........................16:00

மானாமதுரை....................15:30

அருப்புக்கோட்டை............18:15

விருது நகர்........................18:45

சிவகாசி.............................19:05

ராஜபாளையம்.................19:40

சங்கரன்கோவில்.............19:55

தென்காசி..........................20:35

செங்கோட்டை...................22:30


*செங்கோட்டை 卐 தாம்பரம்* 


 *ரெயில் எண் 16190* 


செங்கோட்டை  பு. நேரம்   06:00

தென்காசி...........................06:12

சங்கரன்கோவில்...............06.56

ராஜபாளையம்...................07.22

சிவகாசி...............................07.52

விருதுநகர்...........................08:20

அருப்புக்கோட்டை..............08.45

மானாமதுரை......................09.20

காரைக்குடி..........................10:30

*புதுக்கோட்டை...................11.35* 

திருச்சிராப்பள்ளி...............13.00

தஞ்சாவூர்.............................13.45

கும்பகோணம்.....................14.22

மயிலாடுதுறை....................15.30

விழுப்புரம்............................19.40

செங்கல்பட்டு.......................21.20

தாம்பரம்...............................22:30

Tuesday, December 28, 2021

அப்பா அப்பாதான்

“அம்மா, ரொம்ப வெயிலா இருக்கு. இந்தப் பதை பதைக்கிற வெயில்ல உன்னால இப்ப பாங்க் வர முடியுமாம்மா?” எழுபது வயது அம்மாவை அக்கறையோடு கேட்டார் பரந்தாமன்.

“பரவாயில்லைடா… நான் வரேன். சீக்கிரமா பாங்க் வேலையை முடிச்சுட்டு ஆத்துக்கு திரும்பி வந்துடலாம்…”

“மறக்காம லாக்கர் கீயை எடுத்துக்கோ.. அப்பாக்கும் உனக்கும் பாங்க் லாக்கர் ஜாயின்ட் அக்கவுண்ட்ல இருக்கு….”

அம்மா எடுத்துக் கொண்டதும், ஒரு ஆட்டோ பிடித்து இருவரும் கிளம்பினர்.

பரந்தாமன் பேங்க் மானேஜரைப் பார்த்து அவரிடம், தன்னுடைய அப்பா இறந்து போனதைச் சொன்னார். ஒரு நல்ல கஸ்டமர் இறந்துபோனதை நினைத்து சற்றுநேரம் வருந்தினார் மனேஜர்.

டெத் சர்டிபிகேட்; வாரிசு சர்டிபிகேட்; பாஸ் புக்; மானேஜரிடம் கொடுத்தபின், ஒரு கவரிங் லெட்டர் அவரிடம் எழுதிக் கொடுத்துவிட்டு “என்னுடைய அம்மா வேதவல்லி பெயர்லயே எல்லாத்தையும் மாத்திடுங்க சார்…” என்றார் பரந்தாமன்.

அம்மா தலையைக் குனிந்தபடி சோகமாக அமர்ந்திருந்தாள். அப்பா இறந்துபோன இந்த இருபது நாட்களில் அம்மா ரொம்பவும்தான் ஆடிப்போய்விட்டாள். பரந்தாமனும் அவர மனைவியும், “இறப்பு என்பது எல்லோருக்குமே நிரந்தரமானது… அப்பா எழுபத்தியைந்து வயதுவரை நன்றாக வாழுந்துதானே இறந்தார்” என்று அம்மாவை சமாதானப் படுத்தினர்.

மானேஜர் அவர்களை சற்று நேரம் வெளியே அமரச் சொன்னார்.

செப்டம்பர் மாதக் கடைசியில் மகன் ரமணனுக்கு உபநயனம் செய்துடலாம்னு அப்பாவிடம் கடந்த ஜூன் மாதமே நாள் பார்க்கச் சொல்லியிருந்தார் பரந்தாமன்.

அப்பா உடனே பத்துப் பதினைந்து வயது குறைந்தவராக, ஆட்டோ பிடிச்சு நாலு இடம் போய் நல்ல நாள் பார்த்து குறித்துக்கொண்டு வந்தார். . அப்போது பரந்தாமனுக்குத் தெரியாது செப்டம்பர் முதல் வாரமே அப்பா போயிடுவார்ன்னு…

“பரந்து, நீ பணம் எதுவும் கொண்டு வரவேண்டாம், என் பேரன் ரமணனை மட்டும் இங்க கூட்டிண்டு வா, என் பேரனுக்கு எல்லாச் செலவையும் நான்தான் செய்வேன்” என்று சந்தோஷமாகச் சொன்ன அப்பா இப்போது இல்லை.

பென்ஷன் பணம்; நிலத்தில் கிடைக்கும் கொஞ்சம் மகசூல் பணம்; இதெல்லாம் சேர்த்து வைத்திருப்பாரோ… தவிர ஊர்ல ஒரு வீடு இருக்கு, அதையும் வாடகைக்கு விட்டிருந்தார். வாடகைப்பணத்தை நேராக பேங்குக்கு அந்த டெனன்ட் அனுப்பிவிடுவார்.

“லாக்கர்ல அதிகம் எதுவும் இல்லை… எதுக்கு அதுக்கு வேஸ்ட்டா வருஷத்துக்கு ஆயிரத்து ஐநூறு வாடகைவேற கொடுக்கணும்” என்று அம்மா ஒருமுறை சொன்னபோது, “நம்ம பையன் சீக்கிரமா நிறைய நகைகள் வாங்கி அதுல அடுக்குவான் பாரு” என்று அப்பா சிரித்துக்கொண்டே சொன்னார்…

பரந்தாமன் சம்பாதிக்க ஆரம்பித்து முதல் மாதச் சம்பளம் வாங்கியவுடன், அவர் பெயரிலேயே ஒரு பாங்க் அக்கவுண்ட் திறந்து அதில் மாதா மாதம் சம்பளப் பணத்தைப் போட்டு சேமிக்கக் கற்றுக் கொடுத்தவர் அப்பா…

தற்போது பரந்தாமனுக்கு கல்யாணமாகி பல வருடங்கள் முடிந்த நிலையில் – பிள்ளைகள் படிப்பு; நகர வாழ்க்கையில் வீட்டு வாடகை; இதர குடும்பச் செலவுகள் என்று எப்போதும் செலவுக்கு மேல் செலவுகள்தான்…

எந்த மாதமும் அப்பா பரந்தாமனிடம் பணம் அனுப்பச்சொல்லி கேட்டதேயில்லை. ஆனால் அதற்கு மாறாக அவர்தான் தீபாவளி, பொங்கல், கார்த்திகை தீபம், ஆடிப்பெருக்கு என்று எல்லோருக்கும் உடைகள் வாங்கி அனுப்புவதும்… அவர் மனைவியிடம் “டவுன்ல உனக்கு இதெல்லாம் செய்ய நேரமே இருக்காது” என்று சொல்லி, அம்மா வித விதமான பஷணங்கள் செய்து அனுப்புவதும் வருடா வருடம் நடந்த இன்பமான நிகழ்வுகள்…

அப்பாவும், அம்மாவும் தனியாக இருக்கிறார்கள் என்று லீவு விடும் போதெல்லாம் மகனை அவர்களிடம் அனுப்பி வைப்பார் பரந்தாமன். அப்பா அலுக்காது ஒவ்வொரு முறையும் பேரனுக்கு செயின்; மோதிரம்; ப்ரெஸ்லேட்; சைக்கிள் என்று விலை உயர்வான பொருட்களை வாங்கிக் கொடுப்பார். அவருக்கு செலவுக்கு பணம் இருக்கான்னு எப்போதாவது பரந்தாமன் கேட்டாலும், “நிறைய இருக்கு… கவலையே படாதே, சிக்கனம்தான் சேமிப்பு. பகவான் கொடுக்கிறதை பத்திரமா எண்ணி எண்ணி செலவு பண்ணினாலே நிறைய சேமிப்புதான்” என்பார்….

“சார்… மானேஜர் உங்களைக் கூப்பிடறார்…”

அப்பா பற்றிய நினைவுகள் கலைந்து உள்ளே சென்றார் பரந்தாமன்.

“உங்க அப்பாவோட அக்கவுண்ட்ல நான்கு லட்சத்து எண்பதாயிரம் இருக்கு…அதை அப்படியே உங்க அம்மா அக்கவுண்டுக்கு மாத்திடவா?”

“சரி சார்…”

வெளியே வந்து அம்மாவிடம் சொன்னார்.

அம்மா உடனே, “அது எல்லாத்தையும் ரமணனோட உபநயனத்துக்கு நீயே எடுத்துக்கொள்… அதுக்குத்தான் உன்னோட அப்பா சேர்த்து வைத்திருந்தார்…” என்றாள்.

“இந்த நிலையில் உபநயனம் எப்படிம்மா?”

“அதை நீ எப்போது செய்தாலும் இந்தப் பணத்தில்தான் செய்யணும்… அதுதான் அப்பாவோட ஆசை.”

“சரிம்மா..இப்ப மேனேஜரிடம் சொல்லிக்கொண்டு ஆத்துக்கு கிளம்பலாம்”

மானேஜர், “லாக்கர்ல எதுவும் பார்க்கலையா?” என்றார்.

“ஓ சாரி சார்… அதை மறந்தே போயிட்டோம்.”

அம்மாவும், பையனும் பேஸ்மென்ட் சென்று லாக்கரை சாவி போட்டுத் திறந்தார்கள்.

உள்ளே இரண்டு பெரிய பேப்பர் கட்டுகள். பிரித்துப் பார்த்தபோது அவைகள் அந்தப் பேங்கின் ஷேர் பத்திரங்கள். ஆயிரம் ஷேர்கள், ஒவ்வொன்றும் ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு. ஷேர்கள் எல்லாவற்றையும் அம்மாவின் பெயரில் வாங்கி வைத்திருந்தார் அப்பா.

பத்து லட்சம் ரூபாய்க்கான ஷேர்கள்….

அது தவிர, தனியாக ஒரு சுருக்குப் பை லாக்கரில் இருந்தது.

பரந்தாமன் அவசரமாக அதை எடுத்து பிரித்துப் பார்த்தார்.

உள்ளே ஒரு செட் வெள்ளிப் பூணல்! ஒரு செட் தங்கப் பூணல்!!

அதைப் பார்த்த பரந்தாமனுக்கு துக்கம் பீறிட்டது. குலுங்கிக் குலுங்கி அழத் தோடங்கினார்.

பேரனின் உபநயனத்துக்கு எவ்வளவு ப்ளான் செய்து வைத்திருக்கிறார் அப்பா? ஆனால் அதை சிறப்பாக நடத்தி வைக்க அவர் உயிருடன் இல்லையே… வேதனையில் உருகினார் பரந்தாமன்.

கண்கள் கலங்கிய அம்மா, மகனை கட்டியணைத்து ஆறுதல் சொன்னாள்.

எல்லாவற்றையும் பத்திரமாக எடுத்துக்கொண்டு இருவரும் வெளியேறினர்.

ஆட்டோவில் வீட்டுக்கு வரும்போது பரந்தாமன் “எனக்குன்னு ஒரு செலவுகூட வைக்கலையே அப்பா… உங்களுக்கும்கூட பேங்க் ஷேர் பத்து லட்சத்துக்கு வாங்கி வச்சிட்டுப் போயிட்டாரே… அவரோட காலத்துக்குப் பிறகும் அவர் காசு நமக்கு வந்து கொண்டிருக்கு…” அம்மாவின் கரத்தைப் பிடித்துக்கொண்டு சோகத்தில் மனம் கலங்கினார்.

“அதாண்டா அப்பா…”

“அப்பா… அப்பா… அப்பா” என்று பரந்தாமன் உள்ளம் நெகிழ்ந்தார்.

ஒரு அப்பா இறந்த பிறகே உலகம் அவரை முழுதாகப் புரிந்துகொள்கிறது.

தாய் பத்து மாதங்கள் தன் குழந்தையைச் சுமந்தாள் என்றால்; தகப்பனோ தன் வாழ்நாள் பூராவும் உழைப்பிலும், மனதிலும், தோளிலும் குழந்தையைச் சுமக்கிறான்.

அப்பா அப்பாதான்

வாழ்க வளர்க நலமுடன் வளமுடன். வாழ்க வாழ்கவே எந்நாளும் மகிழ்வுடன்.

Monday, December 27, 2021

274 சிவாலயங்கள்

274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். 

காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது.

எண் - கோயில் - இருப்பிடம் - போன் 

சென்னை மாவட்டம்

01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் - பாடி - 044 - 2654 0706.

02. மாசிலாமணீஸ்வரர் - வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ., - 044 - 2637 6151.

03. கபாலீஸ்வரர் - மயிலாப்பூர் - 044 - 2464 1670.

04. மருந்தீஸ்வரர் - திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை - 044 - 2441 0477.

காஞ்சிபுரம் மாவட்டம்

05. ஏகாம்பரநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 044 - 2722 2084.

06. திருமேற்றளீஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 98653 55572, 99945 85006. 

07. ஓணகாந்தேஸ்வரர் - ஓணகாந்தன்தளி. காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சுப்பேட்டை - 98944 43108.

08. கச்சி அனேகதங்காவதேஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2கி.மீ., - 044-2722 2084. 

09. சத்யநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., - 044 - 2723 2327, 2722 1664. 

10. திருமாகறலீஸ்வரர் - திருமாகறல், காஞ்சிபுரத்திலிருந்து கீழ்ரோடு வழியாக 16 கி.மீ. - 94435 96619.

11. தெய்வநாயகேஸ்வரர் - எலுமியன்கோட்டூர். காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ., - 044 - 2769 2412, 94448 65714.

12. வேதபுரீஸ்வரர் - திருவேற்காடு. சென்னை கோயம்பேட்டிலிருந்து பூந்தமல்லி வழியில் 10 கி.மீ - 044-2627 2430, 2627 2487.

13. கச்சபேஸ்வரர் - திருக்கச்சூர். செங்கல்பட்டில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் வழியாக 12 கி.மீ., - 044 - 2746 4325, 93811 86389.

14. ஞானபுரீஸ்வரர் - திருவடிசூலம். செங்கல்பட்டில் இருந்து 9 கி.மீ., - 044 - 2742 0485, 94445 23890.

15. வேதகிரீஸ்வரர் - திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டிலிருந்து 17 கி.மீ., - 044 - 2744 7139, 94428 11149.

16. ஆட்சிபுரீஸ்வரர் - அச்சிறுபாக்கம். செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. (மேல்மருவத்தூர் அருகில்) - 044 - 2752 3019, 98423 09534.

திருவள்ளூர் மாவட்டம்

17. திரிபுராந்தகர் - கூவம், திருவள்ளூரில் இருந்து 17 கி.மீ., - 94432 53325.

18. வடாரண்யேஸ்வரர் - திருவாலங்காடு. திருவள்ளூரிலிருந்து அரக்கோணம் வழியில் 16 கி.மீ.,.

19. வாசீஸ்வரர் - திருப்பாசூர். திருவள்ளூரில் இருந்து 5 கி.மீ., - 98944 86890.

20. ஊன்றீஸ்வரர் - பூண்டி. திருவள்ளூரில் இருந்து 12 கி.மீ., - 044 - 2763 9725, 

21. சிவாநந்தீஸ்வரர் - திருக்கண்டலம். சென்னை - பெரியபாளையம் சாலையில் 40 கி.மீ., - 044 - 2762 9144, 99412 22814.

22. ஆதிபுரீஸ்வரர் - திருவொற்றியூர். - 044 - 2573 3703.

வேலூர் மாவட்டம்

23. வில்வநாதேஸ்வரர் - திருவல்லம். வேலூர்- ராணிப்பேட்டை வழியில் 16 கி.மீ., - 0416-223 6088.

24. மணிகண்டீஸ்வரர் - திருமால்பூர். காஞ்சிபுரத்திலிருந்து 22 கி.மீ., - 04177 - 248 220, 93454 49339.

25. ஜலநாதீஸ்வரர் - தக்கோலம். வேலூரில் இருந்து 80 கி.மீ., - 04177 - 246 427.

திருவண்ணாமலை மாவட்டம்

26. அண்ணாமலையார் - திருவண்ணாமலை. - 04175 - 252 438.

27. வாலீஸ்வரர் - குரங்கணில்முட்டம். காஞ்சிபுரம்- வந்தவாசி ரோட்டில் உள்ள தூசி வழியாக 10 கி.மீ., - 99432 95467.

28. வேதபுரீஸ்வரர் - செய்யாறு. திருவண்ணாமலையிலிருந்து 105 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ., - 04182 - 224 387.

29. - தாளபுரீஸ்வரர் - திருப்பனங்காடு.காஞ்சிபுரத்தில் இருந்து 16 கி.மீ., - 044 - 2431 2807, 98435 68742.

கடலூர் மாவட்டம்

30. திருமூலநாதர் - சிதம்பரம். (நடராஜர் கோயில்) - 94439 86996.

31. பாசுபதேஸ்வரர் - திருவேட்களம். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம். - 98420 08291, 98433 88552.

32. உச்சிநாதர் - சிவபுரி.சிதம்பரம்- கவரப்பட்டு வழியில் 3 கி.மீ., - 98426 24580.

33. பால்வண்ணநாதர் - திருக்கழிப்பாலை, சிதம்பரம்- கவரப்பட்டு (பைரவர் கோயில்)வழியில் 3 கி.மீ., - 98426 24580. 

34. பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் - ஓமாம்புலியூர். சிதம்பரத்தில் இருந்து 3 கி.மீ. - 04144 - 264 845.

35. பதஞ்சலீஸ்வரர் - கானாட்டம்புலியூர், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., - 04144 - 208 508, 93457 78863.

36. சவுந்தர்யேஸ்வரர் - திருநாரையூர்.சிதம்பரம்- காட்டுமன்னார் கோயில் வழியில் 18 கி.மீ., - 94425 71039, 94439 06219.

37. அமிர்தகடேஸ்வரர் - மேலக்கடம்பூர். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., - 93456 56982.

38. தீர்த்தபுரீஸ்வரர் - திருவட்டத்துறை.விருத்தாசலத்தில் இருந்து 22கி.மீ., - 04143 - 246 467.

39. பிரளயகாலேஸ்வரர் - பெண்ணாடம். விருத்தாசலத்திலிருந்து 18 கி.மீ., திட்டக்குடியிலிருந்து 12 கி.மீ., - 04143 - 222 788, 98425 64768.

40. நர்த்தன வல்லபேஸ்வரர் - திருக்கூடலையாற்றூர்.சிதம்பரத்திலிருந்து சேத்தியாதோப்பு வழியாக 20 கி.மீ., - 04144 - 208 704.

41. திருக்குமாரசாமி - ராஜேந்திர பட்டினம். விருத்தாசலம் (சுவேதாரண்யேஸ்வரர்) - ஜெயங்கொண்டம் ரோட்டில் 12 கி.மீ., - 04143 - 243 533, 93606 37784.

42. சிவக்கொழுந்தீஸ்வரர் - தீர்த்தனகிரி. கடலூரில் இருந்து 18 கி.மீ. - 94434 34024.

43. மங்களபுரீஸ்வரர் - திருச்சோபுரம். கடலூர்- சிதம்பரம் ரோட்டி<ல் 13 கி.மீ., ஆலப்பாக்கம், இங்கு பிரியும் ரோட்டில் 2கி.மீ., - 94425 85845.

44. வீரட்டானேஸ்வரர் - திருவதிகை. கடலூரில் இருந்து 24 கி.மீ., தூரத்திலுள்ள பண்ருட்டி நகர எல்லை - 98419 62089.

45. விருத்தகிரீஸ்வரர் - விருத்தாச்சலம். சென்னை - மதுரை ரோட்டில் உளுந்தூர் பேட்டையிலிருந்து தெற்கே 23 கி.மீ., - 04143 - 230 203.

46. சிஷ்டகுருநாதேஸ்வரர் - திருத்தளூர். கடலூரில் இருந்து பண்ருட்டி வழியாக 32 கி.மீ., - 04142 - 248 498, 94448 07393.

47. வாமனபுரீஸ்வரர் - திருமாணிக்குழி. கடலூரிலிருந்து பாலூர் வழியாக 15 கி.மீ., - 04142 - 224 328.

48. பாடலீஸ்வரர் - திருப்பாதிரிபுலியூர். கடலூர் நகருக்குள், - 04142 - 236 728.

விழுப்புரம் மாவட்டம்

49. பக்தஜனேஸ்வரர் - திருநாவலூர். பண்ருட்டி-உளுந்தூர் பேட்டை வழியில் 12 கி.மீ., - 94861 50804, 04149 - 224 391.

50. சொர்ணகடேஸ்வரர் - நெய்வணை. உளுந்தூர்பேட்டையில் இருந்து 15 கி.மீ., - 04149 - 291 786, 94862 82952.

51. வீரட்டேஸ்வரர் - கீழையூர். (திருக்கோவிலூர் அருகில்) விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., - 93456 60711.

52. அதுல்யநாதேஸ்வரர் - அறகண்டநல்லூர். விழுப்புரத்திலிருந்து 35 கி.மீ., - 99651 44849.

53. மருந்தீசர் - டி. இடையாறு. விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., - 04146 - 216 045, 94424 23919. 

54. கிருபாபுரீஸ்வரர் - திருவெண்ணெய்நல்லூர். விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ., - 93456 60711.

55. சிவலோகநாதர் - கிராமம். விழுப்புரத்திலிருந்து அரசூர் வழி 14 கி.மீ. - 04146 - 206 700.

56. பனங்காட்டீஸ்வரர் - பனையபுரம். விழுப்புரத்திலிருந்து 12 கி.மீ., - 99420 56781.

57. அபிராமேஸ்வரர் - திருவாமத்தூர். விழுப்புரம் -செஞ்சி ரோட்டில் 6 கி.மீ., - 04146 - 223 379, 98430 66252.

58. சந்திரமவுலீஸ்வரர் - திருவக்கரை. திண்டிவனத்திலிருந்து 22 கி.மீ., - 0413 - 268 8949.

59. அரசலீஸ்வரர் - ஒழிந்தியாம்பட்டு. புதுச்சேரி- திண்டிவனம்- வழியில் 13 கி.மீ., 04147 - 235 472.

60. மகாகாளேஸ்வரர் - இரும்பை. புதுச்சேரி - திண்டிவனம் வழியில் 12 கி.மீ., - 0413 - 268 8943, 98435 26601.

நாமக்கல் மாவட்டம்

61. அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு. நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ., - 04288 - 255 925, 93642 29181.

ஈரோடு மாவட்டம்

62. சங்கமேஸ்வரர் - பவானி. ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., - 04256 - 230 192, 98432 48588.

63. மகுடேஸ்வரர், - கொடுமுடி,ஈரோடு - கரூர் ரோட்டில் 47 கி.மீ., - 04204 - 222 375.

திருப்பூர் மாவட்டம்

64. அவிநாசி ஈஸ்வரர் - அவிநாசி. திருப்பூர்-கோவை ரோட்டில் 13 கி.மீ., - 04296 - 273 113, 94431 39503.

65. திருமுருகநாதர் - திருமுருகன்பூண்டி. திருப்பூர்- கோவை ரோட்டில் 8 கி.மீ., கோவையில் இருந்து 43 கி.மீ., - 04296 - 273 507.

திருச்சி மாவட்டம்

66. சத்தியவாகீஸ்வரர் - அன்பில். திருச்சியிலிருந்து 30 கி.மீ., - 0431 - 254 4927.

67. ஆம்ரவனேஸ்வரர் - மாந்துறை. திருச்சியிலிருந்து லால்குடி வழி 15 கி.மீ., - 99427 40062, 94866 40260. 

68. ஆதிமூலேஸ்வரர் - திருப்பாற்றுறை.திருச்சியில் இருந்து திருவானைக்காவல் வழி கல்லணைரோட்டில் 13 கி.மீ. - 0431 - 246 0455. 

69. ஜம்புகேஸ்வரர் - திருவானைக்காவல். திருச்சியில் இருந்து 8 கி.மீ., - 0431 - 223 0257.

70. ஞீலிவனேஸ்வரர் - திருப்பைஞ்ஞீலி. திருச்சியில் இருந்து 23 கி.மீ., - 0431 - 256 0813.

71. மாற்றுரைவரதர் - திருவாசி. திருச்சி- சேலம் ரோட்டில் 13 கி.மீ., - 94436 - 92138.

72. மரகதாசலேஸ்வரர் - ஈங்கோய்மலை.திருச்சியில் இருந்து முசிறி வழியாக 50 கி.மீ., - 04326 - 262 744, 94439 50031.

73. பராய்த்துறைநாதர் - திருப்பராய்த்துறை. திருச்சி- கரூர் ரோட்டில்15 கி.மீ. - 99408 43571.

74. உஜ்ஜீவநாதர் - உய்யக்கொண்டான் திருமலை. திருச்சி - வயலூர் வழியில் 7 கி.மீ., - 94431 50332, 94436 50493.

75. பஞ்சவர்ணேஸ்வரர் - உறையூர்.திருச்சி கடைவீதி பஸ் ஸ்டாப் அருகில் - 0431 - 276 8546, 94439 19091. 

76. தாயுமானவர் - திருச்சி. மலைக்கோட்டை - 0431 - 270 4621, 271 0484. 

77. எறும்பீஸ்வரர் - திருவெறும்பூர்.திருச்சி- தஞ்சாவூர் ரோட்டில் 10 கி.மீ. - 98429 57568.

78. திருநெடுங்களநாதர் - திருநெடுங்குளம். திருச்சி-துவாக்குடியிலிருந்து 3 கி.மீ. - 0431 - 252 0126.

அரியலூர் மாவட்டம்

79. வைத்தியநாதசுவாமி - திருமழபாடி. அரியலூரிலிருந்து 28 கி.மீ., - 04329 -292 890, 97862 05278.

80. ஆலந்துறையார் - கீழப்பழுவூர். அரியலூர்- தஞ்சாவூர் வழியில் 12 கி.மீ. - 99438 82368.

கரூர் மாவட்டம்

81. ரத்தினகிரீஸ்வரர் - அய்யர் மலை. கரூரில் இருந்து குளித்தலை வழியாக 40 கி.மீ., - 04323 - 245 522.

82. கடம்பவனேஸ்வரர் - குளித்தலை. கரூரில் இருந்து 35 கி.மீ., - 04323 - 225 228

83. கல்யாண விகிர்தீஸ்வரர் - வெஞ்சமாங்கூடலூர்.கரூரிலிருந்து ஆறுரோடு பிரிவு வழியாக 21 கி.மீ., - 04324 - 262 010, 99435 27792.

84. பசுபதீஸ்வரர் - கரூர் - 04324 - 262 010.

புதுக்கோட்டை மாவட்டம்

85. விருத்தபுரீஸ்வரர் - அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ., - 04371 - 239 212

தஞ்சாவூர் மாவட்டம்

86. பசுபதீஸ்வரர் - பந்தநல்லூர்.கும்பகோணம்- சென்னை ரோட்டில் 30 கி.மீ., - 98657 78045. 0435 - 2450 595.

87. அக்னீஸ்வரர் - கஞ்சனூர். கும்பகோணம்- மயிலாடுதுறை - 0435 - 247 3737.

88. கோடீஸ்வரர் - திருக்கோடிக்காவல்.கும்பகோணத்திலிருந்து 18 கி.மீ., - 94866 70043. 

89. பிராணநாதேஸ்வரர் - திருமங்கலக்குடி. கும்பகோணத்தில் இருந்து 17 கி.மீ., (சூரியனார்கோவில் அருகில்) - 0435 - 247 0480.

90. அருணஜடேஸ்வரர் - திருப்பனந்தாள். கும்பகோணம்- சென்னை ரோட்டில் 15 கி.மீ., - 94431 16322, 0435 - 245 6047. 

91. பாலுகந்தநாதர் - திருவாய்பாடி. கும்பகோணம்-சென்னை வழியில் 18 கி.மீ., - 94421 67104.

92. சத்தியகிரீஸ்வரர் - சேங்கனூர். கும்பகோணம்-சென்னை ரோட்டில் 16 கி.மீ., (திருப்பனந்தாள் அருகில்) - 93459 82373, 0435 - 2457 459.

93. யோகநந்தீஸ்வரர் - திருவிசநல்லூர். கும்பகோணம்- சூரியனார்கோவில் ரோடு (வேப்பத்தூர் வழி)8 கி.மீ.,. - 0435 - 200 0679, 94447 47142.

94. கற்கடேஸ்வரர் - திருந்துதேவன்குடி. கும்பகோணம் - சூரியனார்கோவில் வழியில் 11 கி.மீ., - 99940 15871, 0435 - 200 0240.

95. கோடீஸ்வரர் - கொட்டையூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 5 கி.மீ., - 0435 - 245 4421.

96. எழுத்தறிநாதர் - இன்னம்பூர்.கும்பகோணம்- சுவாமிமலை ரோட்டில் புளியஞ்சேரியிலிருந்து 2 கி.மீ., - 96558 64958, 0435 - 200 0157.

97. சாட்சி நாதேஸ்வரர் - திருப்புறம்பியம்.கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. (இன்னம்பூர் அருகில்) - 94446 26632, 0435 - 245 9519.

98. விஜயநாதேஸ்வரர் - திருவிஜயமங்கை. கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ., (திருவைகாவூர் அருகில்) - 0435 - 294 1912, 94435 86453.

99. வில்வ வனேஸ்வரர் - திருவைகாவூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 17 கி.மீ., - 94435 86453, 96552 61510.

100. தயாநிதீஸ்வரர் - வடகுரங்காடுதுறை. கும்பகோணம் - திருவையாறு ரோட்டில் 20 கி.மீ. - 04374 - 240 491, 244 191.

101. ஆபத்சகாயர் - திருப்பழனம். தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., தூரத்திலுள்ள திருவையாறு அருகில் - 04362 - 326 668.

102. ஐயாறப்பர் - திருவையாறு. தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., - 0436 - 2260 332. 

103. நெய்யாடியப்பர் - தில்லைஸ்தானம். திருவையாறிலிருந்து 2 கி.மீ., - 04362 - 260 553.

104. வியாக்ரபுரீஸ்வரர் - திருப்பெரும்புலியூர். திருவையாறிலிருந்து தில்லைஸ்தானம் வழியே 5 கி.மீ. - 94434 47826, 94427 29856.

105. செம்மேனிநாதர் - திருக்கானூர்(விஷ்ணம்பேட்டை). திருவையாறில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வழியே 30 கி.மீ., - 04362 - 320 067, 93450 09344.

106. அக்னீஸ்வரர் - திருக்காட்டுப்பள்ளி.திருவையாறிலிருந்து 25 கி.மீ., - 94423 47433.

107. ஆத்மநாதேஸ்வரர் - திருவாலம் பொழில். தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 17 கி.மீ., - 04365 - 284 573.

108. புஷ்பவனேஸ்வரர் - தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 20 கி.மீ., - 94865 76529.

109. பிரம்மசிரகண்டீசுவரர் - கண்டியூர். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு வழியாக 20 கி.மீ., - 04362 - 261 100, 262 222.

110. சோற்றுத்துறை நாதர் - தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 19 கி.மீ., - 99438 84377.

111. வேதபுரீஸ்வரர் - திருவேதிக்குடி. தஞ்சாவூரில் இருந்து கண்டியூர் வழியாக 14 கி.மீ., - 93451 04187, 04362 - 262 334. 

112. பசுபதீஸ்வரர் - பசுபதிகோயில். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., - 97914 82102.

113. வசிஷ்டேஸ்வரர் - தென்குடித்திட்டை. தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ., - 04362 - 252 858. 

114. கரவாகேஸ்வரர் - கரப்பள்ளி (அய்யம்பேட்டை). தஞ்சாவூர் - கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ.,

115. முல்லைவனநாதர் - திருக்கருகாவூர். தஞ்சாவூரில் இருந்து 22 கி.மீ., - 04374 - 273 502, 273 423.

116. பாலைவனேஸ்வரர் - பாபநாசம். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 12 கி.மீ., - 94435 24410.

117. கல்யாண சுந்தரேஸ்வரர் - நல்லூர் (வாழைப்பழக்கடை) தஞ்சாவூரில் (பஞ்சவர்ணேஸ்வரர்) இருந்து பாபநாசம் வழியாக 15 கி.மீ., - 93631 41676.

118. பசுபதீஸ்வரர் - ஆவூர் (கோவந்தகுடி).கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் வழியாக 15 கி.மீ., - 94863 03484.

119. சிவக்கொழுந்தீசர் - திருச்சத்திமுற்றம். பட்டீஸ்வரத்திலிருந்து 6 கி.மீ., - 94436 78575, 04374 - 267 237. 

120. பட்டீஸ்வரர் - பட்டீஸ்வரம், கும்பகோணத்தில் இருந்து 2 கி.மீ., - 0435 - 241 6976.

121. சோமநாதர் - கீழபழையாறை வடதளி.கும்பகோணம் - ஆவூர் ரோட்டிலுள்ள முழையூர் அருகில் - 98945 69543.

122. திருவலஞ்சுழிநாதர் - திருவலஞ்சுழி.சுவாமிமலையில் இருந்து 1கி.மீ., - 0435 - 245 4421, 245 4026.

123. கும்பேஸ்வரர் - கும்பகோணம். - 0435 - 242 0276.

124. நாகேஸ்வரர் - கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலுக்கு கிழக்கே - 0435 - 243 0386.

125. சோமேஸ்வரர் - கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலை அடுத்துள்ள பொற்றாமரைக்குளக் கரை - 0435 - 243 0349.

126. நாகநாதர் - திருநாகேஸ்வரம். கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ., - 94434 89839, 0435 - 246 3354, 

127. மகாலிங்க சுவாமி - திருவிடைமருதூர். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 9 கி.மீ., 0435 - 246 0660.

128. ஆபத்சகாயேஸ்வரர் - ஆடுதுறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 14 கி.மீ., - 94434 63119, 94424 25809.

129. நீலகண்டேஸ்வரர் - திருநீலக்குடி. கும்பகோணம் - காரைக்கால் ரோட்டில் 15 கி.மீ., - 94428 61634. 0435 - 246 0660. 

130. கோழம்பநாதர் - திருக்குளம்பியம். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் திருவாவடுதுறையிலிருந்து 5 கி.மீ., - 04364 - 232 055, 232 005.

131. சிவானந்தேஸ்வரர் - திருப்பந்துறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் (எரவாஞ்சேரி வழி) 12 கி.மீ., - 94436 50826, 0435 - 244 8138. 

132. சித்தநாதேஸ்வரர் - திருநறையூர் (நாச்சியார்கோவில்).கும்பகோணம்- திருவாரூர் ரோட்டில் 10 கி.மீ., - 0435 - 246 7343, 246 7219.

133. படிக்காசுநாதர் - அழகாபுத்தூர். கும்பகோணம்- திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ., - 99431 78294, 0435 - 246 6939.

134. அமிர்தகடேஸ்வரர் - சாக்கோட்டை. கும்பகோணம்-மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., - 98653 06840, 0435 - 241 4453. 

135. சிவகுருநாதசுவாமி - சிவபுரம். கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. சாக்கோட்டையில் இருந்து 2 கி.மீ., - 98653 06840.

136. சற்குணலிங்கேஸ்வரர் - கருக்குடி (மருதாநல்லூர்).கும்பகோணம் - மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., - 99435 23852

137. சாரபரமேஸ்வரர் - திருச்சேறை. கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ., 

138. ஞானபரமேஸ்வரர் - திருமெய்ஞானம் (நாலூர் திருமயானம்). கும்பகோணத்தில் இருந்து திருச்சேறை வழியாக 17 கி.மீ., - 94439 59839.

139. ஆபத்சகாயேஸ்வரர் - ஆலங்குடி. திருவாரூர்-(குரு ஸ்தலம்) மன்னார்குடி ரோட்டில் 30 கி.மீ., - 04374 - 269 407.

140. பாஸ்கரேஸ்வரர் - பரிதியப்பர்கோவில். தஞ்சாவூர் -பட்டுக்கோட்டை ரோட்டில் 17 கி.மீ. (உளூர் அருகில்) - 0437 - 256 910.

திருவாரூர் மாவட்டம்

141. தியாகராஜர் - திருவாரூர். - 04366 - 242 343. 

142. அசலேஸ்வரர் - திருவாரூர். தியாகராஜர் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் - 04366 - 242 343. 

143. தூவாய் நாதர் - திருவாரூர். தியாகராஜர் கோயில் கீழரத வீதி - 99425 40479, 04366 - 240 646. 

144. பதஞ்சலி மனோகரர் - விளமல். திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., - 98947 81778, 94894 79896.

145. கரவீரநாதர் - கரைவீரம். திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 8 கி.மீ. தூரத்திலுள்ள வடகண்டம் பஸ் ஸ்டாப் - 04366 - 241 978.

146. வீரட்டானேஸ்வரர் - திருவிற்குடி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் தங்கலாஞ்சேரி அருகில். - 94439 21146. 

147. வர்த்தமானீஸ்வரர் - திருப்புகலூர். திருவாரூரில் இருந்து சன்னாநல்லூர் வழியாக 24 கி.மீ., - 94431 13025, 04366 - 292 300.

148. ராமநாதசுவாமி - திருக்கண்ணபுரம். திருவாரூரில் இருந்து 26 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) - 94431 13025, 04366 - 292 300. 

149. கணபதீஸ்வரர் - திருச்செங்காட்டங்குடி. திருவாரூரில் இருந்து 29 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) - 94431 13025, 04366 - 270 278.

150. கேடிலியப்பர் - கீழ்வேளூர். திருவாரூர்- நாகப்பட்டினம் ரோட்டில் 35 கி.மீ. - 04366 - 276 733.

151. தேவபுரீஸ்வரர் - தேவூர். நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி வழியில் 18 கி.மீ., - 94862 78810, 04366 - 276 113.

152. திருநேத்திரநாதர் - திருப்பள்ளி முக்கூடல். திருவாரூரிலிருந்து பள்ளிவாரமங்கலம் வழியாக 6 கி.மீ., - 98658 44677, 04366 - 244 714.

153. பசுபதீஸ்வரர் - திருக்கொண்டீஸ்வரம். திருவாரூரில் இருந்து நன்னிலம் வழியாக 18 கி.மீ., - 04366 - 228 033.

154. சவுந்தரேஸ்வரர் - திருப்பனையூர். திருவாரூரில் இருந்து ஆண்டிப்பந்தல் வழியாக 12 கி.மீ., - 04366 - 237 007.

155. ஐராவதீஸ்வரர் - திருக்கொட்டாரம். கும்பகோணம் (நெடுங்காடு வழி) - காரைக்கால் ரோட்டிலுள்ள வேளங்குடி. - 04368 - 261 447.

156. பிரம்மபுரீஸ்வரர் - அம்பர் (அம்பல்). மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 6 கி.மீ., - 04366 - 238 973.

157. மகாகாளநாதர் - திருமாகாளம். கும்பகோணம்-காரைக்கால் ரோடு. - 94427 66818, 04366 - 291 457. 

158. மேகநாதசுவாமி - திருமீயச்சூர். மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., - 94448 36526, 04366 - 239 170.

159. சகல புவனேஸ்வரர் - திருமீயச்சூர் இளங்கோயில், மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., - 94448 36526, 04366 - 239 170. 

160. முக்தீஸ்வரர் - செதலபதி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 5 கி.மீ., - 04366 - 238 818, 239 700, 94427 14055.

161. வெண்ணிகரும்பேஸ்வரர் - கோயில்வெண்ணி.திருவாரூரிலிருந்து 26 கி.மீ., - 98422 94416. 

162. சேஷபுரீஸ்வரர் - திருப்பாம்புரம்.கும்பகோணம்-காரைக்கால் வழியில் 20 கி.மீ. தூரத்திலுள்ள கற்கத்தியில் இருந்து 3 கி.மீ. - 94439 43665, 0435 - 246 9555. 

163. சூஷ்மபுரீஸ்வரர் - செருகுடி.கும்பகோணம்-காரைக்கால் இருந்து 3 கி.மீ. (பூந்தோட்டம் வழி) கடகம்பாடியில் இருந்து 3 கி. மீ. - 04366 - 291 646. 

164. அபிமுக்தீஸ்வரர் - மணக்கால் அய்யம்பேட்டை,திருவாரூர்- கும்பகோணம் ரோட்டில் 10 கி.மீ., 

165. நர்த்தனபுரீஸ்வரர் - திருத்தலையாலங்காடு. திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., - 94435 00235, 04366 - 269 235.

166. கோணேஸ்வரர் - குடவாசல்.திருவாரூரில் இருந்து 23 கி.மீ., கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ., - 94439 59839.

167. சொர்ணபுரீஸ்வரர் - ஆண்டான்கோவில்.கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழி 13 கி.மீ., - 04374 - 265 130.

168. பாதாளேஸ்வரர் - அரித்துவாரமங்கலம், கும்பகோணம் - அம்மாபேட்டை வழியில் 20 கி.மீ., - 94421 75441, 04374 - 264 586

169. சாட்சிநாதர் - அவளிவணல்லூர்.கும்பகோணத்தில் இருந்து அம்மாப்பேட்டை வழியாக 26 கி.மீ., - 04374 - 275 441.

170. வீழிநாதேஸ்வரர் - திருவீழிமிழலை. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 7 கி.மீ., - 04366 - 273 050, 94439 24825148.

171. சதுரங்க வல்லபநாதர் - பூவனூர்.திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி ரோட்டில். - 94423 99273. 

172. நாகநாதர் - பாமணி.மன்னார்குடியிலிருந்து 2 கி.மீ., - 93606 85073.

173. பாரிஜாதவனேஸ்வரர் - திருக்களர்.மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 21 கி.மீ., - 04367 - 279 374.

174. பொன்வைத்த நாதர் - சித்தாய்மூர். திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 20 கி.மீ. (ஆலத்தம்பாடி அருகில்) - 94427 67565.

175. மந்திரபுரீஸ்வரர் - கோவிலூர். மன்னார்குடி-முத்துப்பேட்டை ரோட்டில் 32 கி.மீ., - 99420 39494, 04369 - 262 014.

176. சற்குணநாதர் - இடும்பாவனம். திருத்துறைப்பூண்டி-புதுச்சேரி ரோட்டில் 10கி.மீ. (தொண்டியக்காடு வழி) - 04369 - 240 349.

177. கற்பக நாதர் - கற்பகநாதர்குளம். திருத்துறைப்பூண்டி -புதுச்சேரி ரோட்டில் 12 கி.மீ., (தொண்டியக்காடு வழி) - 04369 - 240 632.

178. நீள்நெறிநாதர் (ஸ்திரபுத்தீஸ்வரர்) - தண்டலச்சேரி. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியில் 23 கி.மீ., - 98658 44677.

179. கொழுந்தீஸ்வரர் - கோட்டூர்.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., - 97861 51763, 04367 - 279 781. 

180. வண்டுறைநாதர் - திருவண்டுதுறை.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 11 கி.மீ., சேரிவடிவாய்க்கால் அருகில் - 04367 - 294 640.

181. வில்வாரண்யேஸ்வரர் - திருக்கொள்ளம்புதூர் கும்பகோணம் -கொரடாச்சேரி வழியில் 25 கி.மீ., செல்லூர் அருகில் - 04366 - 262 239.

182. ஜகதீஸ்வரர் - ஓகைப்பேரையூர்.திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (லட்சுமாங்குடி வழி) - 04367 - 237 692.

183. அக்னீஸ்வரர் - திருக்கொள்ளிக்காடு. திருவாரூரிலிருந்து 28 கி.மீ. கச்சனத்திலிருந்து 8 கி.மீ., - 04369 - 237 454.

184. நெல்லிவனநாதர் - திருநெல்லிக்காவல்.திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் 18 கி.மீ., - 04369 - 237 507, 237 438.

185. வெள்ளிமலைநாதர் - திருத்தங்கூர்.திருவாரூர்- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 12 கி.மீ., - 94443 54461, 04369 - 237 454.

186. கண்ணாயிரநாதர் - திருக்காரவாசல்.திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் 14 கி.மீ., - 94424 03391, 04366 - 247 824.

187. நடுதறியப்பர் - கண்ணாப்பூர், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் மாவூரிலிருந்து 7 கி.மீ., - 94424 59978, 04365 - 204 144.

188. கைச்சினநாதர் - கச்சனம்.திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., - 94865 33293

189. ரத்தினபுரீஸ்வரர் - திருநாட்டியத்தான்குடி.திருவாரூர்- வடபாதிமங்கலம் ரோட்டில் 15 கி.மீ., (மாவூர் வழி) - 94438 06496, 04367 - 237 707. 

190. அக்னிபுரீஸ்வரர் - வன்னியூர்(அன்னூர்). கும்பகோணம்-காரைக்கால் ரோட்டில் 24 கி.மீ., - 0435 - 244 9578

191. சற்குணேஸ்வரர் - கருவேலி. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ., தூரத்திலுள்ள கூந்தலூர் - 94429 32942, 04366 - 273 900

192. மதுவனேஸ்வரர் - நன்னிலம்.திருவாரூர்-மயிலாடுதுறை ரோட்டில் 16 கி.மீ., - 94426 82346, 99432 09771

193. வாஞ்சிநாதேஸ்வரர் - ஸ்ரீவாஞ்சியம். கும்பகோணம்- நாகபட்டினம் வழியில் 27 கி.மீ. அச்சுதமங்கலம் ஸ்டாப் - 94424 03926, 04366 - 228 305

194. மனத்துணைநாதர் - திருவலிவலம். திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (வழி கச்சனம்) - 04366 - 205 636

195. கோளிலிநாதர் - திருக்குவளை. திருத்துறைபூண்டி - எட்டுக்குடி ரோட்டில் 13 கி.மீ.(வழி கச்சனம்) - 04366 - 245 412

196. வாய்மூர்நாதர் - திருவாய்மூர்.திருவாரூர்- வேதாரண்யம் ரோட்டில் 25 கி.மீ., - 97862 44876

நாகப்பட்டினம் மாவட்டம்

197. சிவலோகத்தியாகர் - ஆச்சாள்புரம். சிதம்பரத்தில் இருந்து 12 கி.மீ., - 04364 - 278 272.

198. திருமேனியழகர் - மகேந்திரப்பள்ளி. சீர்காழியில் இருந்து கொள்ளிடம் வழி 22 கி.மீ., - 04364 - 292 309.

199. முல்லைவனநாதர் - திருமுல்லைவாசல். சீர்காழியிலிருந்து 12 கி.மீ., - 94865 24626.

200. சுந்தரேஸ்வரர் - அன்னப்பன்பேட்டை. சீர்காழியில் இருந்து கீழமூவர்கரை ரோட்டில் 16 கி.மீ., - 93605 77673, 97879 29799.

201. சாயாவனேஸ்வரர் - சாயாவனம். சீர்காழி- பூம்புகார் வழியில் 20 கி.மீ., - 04364 - 260 151

202. பல்லவனேஸ்வரர் - பூம்புகார். சீர்காழியில் இருந்து 19 கி.மீ., - 94437 19193.

203. சுவேதாரண்யேஸ்வரர் - திருவெண்காடு.சீர்காழி-பூம்புகார் வழியில் (புதன் ஸ்தலம்) 15 கி.மீ., - 04364 - 256 424

204. ஆரண்யேஸ்வரர் - திருக்காட்டுப்பள்ளி. சீர்காழியில் இருந்து 15 கி.மீ., திருவெண்காட்டிலிருந்து 1 கி.மீ., - 94439 85770, 04364 - 256 273. 

205. வெள்ளடைநாதர் - திருக்குருகாவூர். சீர்காழியில் இருந்து 5 கி.மீ., - 92456 12705.

206. சட்டைநாதர் - சீர்காழி.சிதம்பரத்தில் இருந்து 19 கி.மீ., - 04364 - 270 235.

207. சப்தபுரீஸ்வரர் - திருக்கோலக்கா. சீர்காழியிலிருந்து 2 கி.மீ., - 04364 - 274 175.

208. வைத்தியநாதர் - வைத்தீஸ்வரன்கோவில்.மயிலாடுதுறை -சீர்காழி வழியில் 18கி.மீ., - 04364 - 279 423.

209. கண்ணாயிரமுடையார் - குறுமாணக்குடி. மயிலாடுதுறை- வைத்தீஸ்வரன் கோவில் வழியில் கதிராமங்கலத்தில் இருந்து 3 கி.மீ. - 94422 58085 

210. கடைமுடிநாதர் - கீழையூர். மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ., - 94427 79580, 04364 - 283 261, 

211. மகாலட்சுமிபுரீஸ்வரர் - திருநின்றியூர். மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ., - 94861 41430.

212. சிவலோகநாதர் - திருப்புன்கூர்.மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ., - 94867 17634. 

213. சோமநாதர் - நீடூர். மயிலாடுதுறையில் இருந்து 5 கி.மீ., - 99436 68084, 04364 - 250 424, 

214. ஆபத்சகாயேஸ்வரர் - பொன்னூர். மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ., - 04364 250 758.

215. கல்யாண சுந்தரேஸ்வரர் - திருவேள்விக்குடி. மயிலாடுதுறை அருகிலுள்ள குத்தாலத்திலிருந்து 2 கி.மீ., - 04364 - 235 462.

216. ஐராவதேஸ்வரர் - மேலத்திருமணஞ்சேரி.குத்தாலத்தில் இருந்து 6 கி.மீ., - 04364 - 235 487.

217. உத்வாகநாதர் - திருமணஞ்சேரி.கும்பகோணத்தில் இருந்து 27 கி.மீ., - 04364 - 235 002.

218. வீரட்டேஸ்வரர் - கொருக்கை.மயிலாடுதுறை- கொண்டல் ரோட்டில் 3 கி.மீ. 

219. குற்றம் பொறுத்தநாதர் - தலைஞாயிறு.வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து மணல் மேடு வழியில் 8 கி.மீ. - 04364 - 258 833.

220. குந்தளேஸ்வரர் - திருக்குரக்கா.மயிலாடுதுறையில்இருந்து 13 கி.மீ., - 04364 - 258 785. 

221. மாணிக்கவண்ணர் - திருவாளப்புத்தூர்.மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மீ.- 98425 38954, 04364 - 254 879.

222. திருநீலகண்டேஸ்வரர் - இலுப்பைபட்டு.மயிலாடுதுறையில் இருந்து 10 கி.மீ., (மணல்மேடு அருகில்) - 92456 19738.

223. வைகல்நாதர் - திருவைகல்.கும்பகோணம்-காரைக்கால்ரோட்டில் 18 கி.மீ. தூரத்திலுள்ள பழிஞ்சநல்லூர் அருகில் - 0435 - 246 5616.

224. உமாமகேஸ்வரர் - கோனேரிராஜபுரம்.கும்பகோணம்-காரைக்கால் ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள எஸ். புதூர் அருகில் - 0435 - 244 9830, 244 9800. 

225. கோமுக்தீஸ்வரர் - திருவாவடுதுறை.மயிலாடுதுறை - கும்பகோணம் வழியில் 16 கி.மீ., - 04364 - 232 055.

226. உத்தவேதீஸ்வரர் - குத்தாலம். மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ., - 04364 - 235 225

227. வேதபுரீஸ்வரர் - தேரழுந்தூர். மயிலாடுதுறை- கும்பகோணம் வழியில் 10 கி.மீ., - 04364 - 237 650.

228. மாயூரநாதர் - மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., - 04364 - 222 345

229. உச்சிரவனேஸ்வரர் - திருவிளநகர்.மயிலாடுதுறை-செம்பொனார்கோவில் வழியில் 7 கி.மீ., - 04364 - 282 129.

230. வீரட்டேஸ்வரர் - கீழப்பரசலூர்(திருப்பறியலூர்). மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ., - 04364- 205 555.

231. சுவர்ணபுரீஸ்வரர்- செம்பொனார்கோவில்.மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரோட்டில் 8 கி.மீ., - 99437 97974. 

232. நற்றுணையப்பர் - புஞ்சை.மயிலாடுதுறை-பூம்புகார் வழியில் 10 கி.மீ. - 04364 - 283 188

233. வலம்புர நாதர் - மேலப்பெரும்பள்ளம்.பூம்புகாரிலிருந்து 7 கி.மீ., - 04364 - 200 890, 200 685. 

234. சங்காரண்யேஸ்வரர் - தலைச்சங்காடு. மயிலாடுதுறையிலிருந்து 22 கி.மீ. - 04364 - 280 757.

235. தான்தோன்றியப்பர் - ஆக்கூர்.மயிலாடுதுறை- நாகப்பட்டினம் வழியில் 16 கி.மீ., - 98658 09768, 97877 09742.

236. அமிர்தகடேஸ்வரர் - (அபிராமியம்மன் கோயில்).திருக்கடையூர் மயிலாடுதுறை-நாகப்பட்டினம் ரோட்டில், 26 கி.மீ., - 04364 - 287 429.

237. பிரம்மபுரீஸ்வரர் - திருமயானம். திருக்கடையூர் அபிராமி கோயிலில் இருந்து 1 கி.மீ., - 94420 12133, 04364 - 287 429. 

238. சரண்யபுரீஸ்வரர் - திருப்புகலூர். நாகப்பட்டினம் - திருவாரூர் ரோட்டில் 22 கி.மீ., - 94431 13025, 04366-237 198. 

239. திருப்பயற்றுநாதர் - திருப்பயத்தங்குடி. திருவாரூர்- திருமருகல் வழியில் 10 கி.மீ., - 98658 44677, 04366- 272 423.

240. ரத்தினகிரீசுவரர் - திருமருகல். நாகப்பட்டினத்தில் இருந்து 20 கி.மீ., - 04366- 270 823.

241. அயவந்தீஸ்வரர் - சீயாத்தமங்கை. நாகப்பட்டினம்- திருமருகல் ரோடு(நாகூர் வழி) - 04366-270 073.

242. காயாரோகணேஸ்வரர் - நாகப்பட்டினம். பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., - 98945 01319, 04365- 242 844. 

243. நவநீதேஸ்வரர் - சிக்கல். நாகப்பட்டினத்திலிருந்து 4 கி.மீ., - 04365- 245 452, 245 350.

244. திருமறைக்காடர் - வேதாரண்யம். நாகபட்டினத்திலிருந்து 63 கி.மீ., - 04369- 250 238

245. அகஸ்தீஸ்வரர் - அகஸ்தியன்பள்ளி.வேதாரண்யம்- கோடியக்கரை வழியில் 2 கி.மீ., - 04369- 250 012

246. கோடிக்குழகர் - கோடியக்கரை.வேதாரண்யத்திலிருந்து 9 கி.மீ., - 04369- 272 470

மதுரை மாவட்டம் 

247. மீனாட்சி சுந்தரேஸ்வரர் - மதுரை - 0452-234 9868.

248. திருவாப்புடையார் - செல்லூர். மதுரை கோரிப்பாளையம் அருகில் - 0452- 234 9868.

249. சத்தியகிரீஸ்வரர் - திருப்பரங்குன்றம்(முருகன் கோயில்)மதுரையில் இருந்து 7 கி.மீ., - 0452- 248 2248.

250. ஏடகநாதேஸ்வரர் - திருவேடகம். மதுரை- சோழவந்தான் ரோட்டில் 17 கி.மீ. - 04543-259 311.

ராமநாதபுரம் மாவட்டம்

251. ராமநாதசுவாமி - ராமேஸ்வரம். மதுரையில் இருந்து 200 கி.மீ., - 04573 - 221 223.

252. ஆதிரத்தினேஸ்வரர் - திருவாடானை. மதுரை- தொண்டி வழியில் 100 கி.மீ., - 04561 - 254 533.

சிவகங்கை மாவட்டம்

253. கொடுங்குன்றநாதர் - பிரான்மலை.மதுரை- பொன்னமராவதி வழியில் 65 கி.மீ., - 94431 91300, 04577- 246 170. 

254. திருத்தளி நாதர் - திருப்புத்தூர். மதுரை-தஞ்சாவூர் வழியில் 70 கி.மீ. - 94420 47593.

255. சொர்ணகாளீஸ்வரர் - காளையார் கோவில்.மதுரை- தொண்டி வழியில் 70 கி.மீ., - 94862 12371, 04575- 232 516.

256. புஷ்பவனேஸ்வரர் - திருப்புவனம். மதுரை-ராமேஸ்வரம் ரோட்டில் 18 கி.மீ., - 04575- 265 082, 265 084.

விருதுநகர் மாவட்டம்

257. திருமேனிநாதர் - திருச்சுழி. மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழி 35 கி.மீ., - 04566 - 282 644.

திருநெல்வேலி மாவட்டம்

258. நெல்லையப்பர் - திருநெல்வேலி. மதுரையிலிருந்து 152 கி.மீ., - 0462 - 233 9910.

259. குற்றாலநாதர் - குற்றாலம். மதுரையிலிருந்து 155 கி.மீ., 04633 - 283 138, 210 138.

புதுச்சேரி 

260. தர்ப்பாரண்யேஸ்வரர் - திருநள்ளாறு. மயிலாடுதுறையிலிருந்து 33 கி.மீ., - 04368 - 236 530, 236 504.

261. சுந்தரேஸ்வரர் - திருவேட்டக்குடி.காரைக்கால் - பொறையார் வழியில் 6 கி.மீ. - 98940 51753, 04368 - 265 693.

262. பார்வதீஸ்வரர் - திருத்தெளிச்சேரி. காரைக்கால் பஸ்ஸ்டாண்ட் பின்புறம் - 04368 - 221 009. 

263. யாழ்மூரிநாதர் - தருமபுரம்.காரைக்காலில் இருந்து 4 கி.மீ. - 04368 - 226 616.

264. வடுகீஸ்வரர் - திருவண்டார்கோயில். புதுச்சேரியிலிருந்து 20 கி.மீ., - 99941 90417.

கேரளா

265. மகாதேவர் - திருவஞ்சிக்குளம்.திருச்சூரிலிருந்து 38 கி.மீ., - 0480 - 281 2061

கர்நாடகா

266. மல்லிகார்ஜுனர் - ஸ்ரீசைலம்.சென்னையில் இருந்து ஓங்கோல், ஓங்கோலில் இருந்து 80 கி.மீ., - 08524 - 288 881.

ஆந்திரா 

267. மகாபலேஸ்வரர் - திருக்கோகர்ணம்.மங்களூருவிலிருந்து உடுப்பி வழி 230 கி.மீ., - 08386 - 256 167, 257 167

268. காளத்தியப்பர் - காளஹஸ்தி, திருப்பதியில் இருந்து 30 கி.மீ., - 08578 - 222 240.

உத்தரகண்ட்

269. அருள்மன்ன நாயகர் - கவுரிகுண்ட் (அநேகதங்காவதம்) ரிஷிகேஷிலிருந்து 84 கி.மீ.,

270. கேதாரநாதர் - கேதர்நாத். ஹரித்துவாரிலிருந்து 253 கி.மீ., 

நேபாளம்

271. நீலாச்சல நாதர் - இந்திரநீல பருப்பதம். காட்மாண்டு

திபெத்

272. கைலாயநாதர் - கைலாஷ்(இமயமலை)

இலங்கை

273. திருக்கேதீச்வரர் - மாதோட்ட நகரம், தலைமன்னார்.

274. கோணேஸ்வரர் - திரிகோணமலை.

பிறசேர்க்கை கோயில்கள் தேவார பாடல் பெற்ற தலங்கள் 274 ஆக இருந்தது. 

சமீபத்திய ஆய்வின்படி, மேலும் இரண்டு கோயில்கள் பாடல் பெற்ற தலங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

275. அகஸ்தீஸ்வரர் - கிளியனூர். திண்டிவனம்- புதுச்சேரி வழியில் 18 கி.மீ., - 94427 86709. 

276. புண்ணியகோடியப்பர் - திருவிடைவாசல். தஞ்சாவூர்-திருவாரூர் ரோட்டில் (கொரடாச்சேரி வழி) நண்பர்களே ! 


276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகள் தந்துள்ளேன். 

காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் இது.

கோயில் - இருப்பிடம் - போன் நம்பர் அனைத்தும் உள்ளது.

Sunday, December 26, 2021

சமஸ்கிருத மந்திர கணக்கு


*தமிழில் "கணக்கதிகாரம்"*

நீங்கள் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்வதற்கு முன்பு உங்கள் கைகளில் 2 உத்தரணி நீர் விட்டு கை சுத்தம் செய்ய சொல்லி நீரை கீழே விட்டுவிட்டு சங்கல்ப மந்திரம் சொல்வதன் கணித அறிவை அதன் அருமையை புரிந்து கொள்வது என்பது,  இந்த மானிட ஜென்மத்தின் சிறப்பை தெரிந்துகொள்வதற்கு சமம்....

சங்கல்ப மந்திரத்தின் கணக்கு தெரியாமல் அந்த மந்திரத்தை சொல்லுவதால் எந்தப்பயனும் இல்லை! ஆகவே சங்கல்ப மந்திரத்தின் சாரஹம்சத்தை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்....

கோவிலில் அர்ச்சனை செய்யும்போதோ அல்லது ஒரு சாஸ்திர சம்பிரதாய நிகழ்ச்சிகளாக  திருமணம் மற்றும் பூஜை, திதி சிரார்த்தம், தர்ப்பணம் போன்றவைகளை செய்யும்போதோ, முதலில் "ஸங்கல்பம்" செய்கிறோம். அப்படி சங்கல்பம் செய்யும்போது கூறும் சம்ஸ்கிருத மந்திரங்களின் விவரங்களை நாம் ஓரளவாவது தெரிந்துவைத்திருக்கவேண்டும்.

சங்கல்பம்" :- "மமோ பாத்த: ஸமஸ்த: துரிதக்ஷய த்வார: ஸ்ரீபரமேஸ்வர: ப்ரீத்யர்த்தம்.. என்று ஆரம்பித்து ..." ஆத்யப்ரஹ்மண: த்விதிய ப்ரார்தே ஸ்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மந்தரே, அஷ்டாவிம்ஸதிதமே, கலியுகே, ப்ரதமே பாதே ஜம்பூத்வீதே பாரதவர்ஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே, சாலீவாஹண ஸகாப்தே அஸ்மிந்வர்த்தமானே வ்யவஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி: ஸம்வத்ஸராணாம் மத்யே.. அன்றைய தினத்திற்க்கு  உள்ள திதி, வார, நக்ஷத்திரத்தைப் உச்சரித்து ஸங்கல்பம் செய்கிறோம்"

அது என்ன சங்கல்ப மந்திர கணக்கு என்றால்? மிக எளிமையான உங்களுக்கு தெரிந்த கணக்குதான் அது!!!!

30 நாள் = 1 மாதம்

12 மாதங்கள் = 1வருடம்

60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை)

3000 சுழற்சிகள் = 1 யுகம் (அதாவது 3000' x 60 வருடங்கள்)

4 யுகங்கள் = 1 சதுர்யுகம்

71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்தரம்

14 மன்வந்த்ரங்கள் = 1 கல்பம்

ஒரு கல்பம் என்பது நானூற்று முப்பத்து இரண்டு கோடி மானுட வருடங்கள் (கணக்கதிகாரம்).தற்போது இதில் பாதி முடிந்து விட்டது. இப்பொழுது நடந்துகொண்டிருப்பது, த்விதீய பரார்த்தம் - இரண்டாவது பரார்த்தம்.

*ஸ்வேதவராஹ கல்பம்  என்றால் - இரண்டாவது பரார்த்தத்தின் பிரம்மாவின் முதல் நாள் ஸ்வேத வராஹ கல்பம் எனப்படும். வாயு புராணத்தின் கணக்குப்படி மொத்தம் 36 கல்பங்கள் உள்ளன. இந்த உலகத்தை விஷ்ணு வெள்ளைப் பன்றி உருவம் (ஸ்வேத வராஹம்) கொண்டு வெளிக்கொணர்ந்த காலவெள்ளத்தில் உட்பட்டது என்பதால் இது ஸ்வேத வராஹ கல்பம் எனப்பட்டது.*

*வைவஸ்வத மன்வந்தரம் என்றால்  - நடந்து கொண்டிருக்கும் ஸ்வேத வராஹ கல்பம் 14 மன்வந்திரங்களை உள்ளடக்கியது. ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர் யுகங்கள் கொண்டது*.

*14 மன்வந்திரங்களாவன  என்பவை:-*

: 1.ஸ்வாயம்புவ மன்வந்திரம், 2.ஸ்வரோசிஷ மன்வந்திரம், 3.உத்தம மன்வந்திரம், 4.தாமச மன்வந்திரம், 5.ரைவத மன்வந்திரம், 6.சாக்ஷ¤ஷ மன்வந்திரம், 7.வைவஸ்வத மன்வந்திரம், 8.சாவர்ணிக மன்வந்திரம், 9.தக்ஷ சாவர்ணிக மன்வந்திரம், 10.ப்ரமஹா சாவர்ணிக மன்வந்திரம், 11.தர்ம சாவர்ணிக மன்வந்திரம், 12.ருத்ர சாவர்ணிக மன்வந்திரம், 13.தேவ சாவர்ணிக மன்வந்திரம், 14.சந்திர சாவர்ணிக மன்வந்திரம்.

*அதாவது நாம் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கிற ஏழாவது மன்வந்திரமாகிய வைவஸ்வத மன்வந்திரத்தில் இருக்கின்றோம்.* அஷ்டாவிம்சதி (28) தமே கலியுகே - (71 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்திரம் என்று கண்டோம் அல்லவா, ஆகவே வைவஸ்வத மன்வந்திரத்தினுடைய 71 சதுர்யுகங்கள் கொண்ட பாதையில் 28வது சதுர்யுகத்திலிருக்கும் நான்கு யுகங்களான கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்பதில் வரும் கடைசி யுகமான கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது).

இந்த்ஸ் கலியுகம் முடிந்து அடுத்த சதுர்யுகம் தொடங்கும். அது 29 வது சதுர்யுகத்தின் கிருத யுகத்தில் தொடங்கும்.*

*இதுவரை வந்தது கால அளவைகள் அடுத்தது நாம் இருக்கும் இடத்தின் அளவைகள். இவற்றைச் சற்றே சுருக்கமாகக் காண்போம்.*

*ஜம்பூத்வீபே - பரந்த பால்வெளியின் பல அண்டங்களில் ஒரு அண்டத்தின் சின்னஞ்சிறு பாகத்தின் ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். த்வீபம் என்பது தீவு என்று அர்த்தம். பரந்த பால்வெளிக் கடலில் உள்ள ஒவ்வொரு அண்டமும் ஒரு தீவு போலத்தான். ஏழு தீவுகள் உள்ளன. (1. ஜம்பூ த்வீபம் (நாம் வசிப்பது - நீரால் சூழப்பட்டுள்ளது), 2. பிலக்ஷ த்வீபம், 3. சான்மலி த்வீபம், 4. குச த்வீபம், 5. க்ரௌஞ்ச த்வீபம், 6. சாக த்வீபம், 7. புஷ்கர த்வீபம்)*

*பாரத வர்ஷே - த்வீபங்கள் எனும் தீவுகளுள் ஒன்றான ஜம்புத்வீபம் ஒன்பது வர்ஷங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பாரத வர்ஷத்தில் தான் நாம் வசிக்கின்றோம். (1. பாரத வர்ஷம், 2.ஹேமகூட வர்ஷம், 3. நைஷத வர்ஷத்ம், 4.இளாவ்ருத வர்ஷம், 5. ரம்ய வர்ஷம், 6. ச்வேத வர்ஷம், 7. குரு வர்ஷம், 8. பத்ராச்வ வர்ஷம், 9.கந்தமாதன வர்ஷம்)*

*பரத கண்டே - பாரத வர்ஷம் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. (1.பரதகண்டம், 2. கிம்புருகண்டம், 3. அரிவருடகண்டம், 4. இளாவிரதகண்டம், 5. இரமியகண்டம், 6. இரணியகண்டம், 7. குருகண்டம், 8. கேதுமாலகண்டம், 9.பத்திராசுவகண்டம)*

*இதில் நாம் (பாரத தேசம்) பரத கண்டத்தில் வசிக்கின்றோம்.*

மேரோர் தக்ஷ¢ணே பார்ச்வே - பரத கண்டத்திலிருக்கும் மேரு எனும் மலையின் தெற்கு புறத்திலிருக்கின்றோம்.

எண்ணற்ற பிரம்மாக்களின் சிருஷ்டி வரிசைகளில், ஒரு பிரம்மாவின் படைப்பில், அவரின் இரண்டாவது காலத்தின், முதல் தினத்தில் (கோடிக்கணக்கான வருடங்களுக்கு இடையில்) வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

*மேலே சொல்லப்பட்டுள்ள கணித வகைகள் தமிழின் தொல்லிய நூலாகிய காரி என்பவர் எழுதிய கணக்கதிகாரத்தை மையமாகவும் கொண்டு சொல்லப்பட்டுள்ளது. கணக்கதிகாரம் மிக அற்புதமான நூல். கால கணிதம் மட்டுமன்றி, எடையறிதல், நீளமறிதல் போன்ற நுண்ணிய கணிதங்களைக் கொண்டது. அதில் கிடைக்கும் ஒரு செய்யுளில் ஒரு பலாப் பழத்தைப் பார்த்தே, அதைப் பிளக்காமலே அதில் உள்ள பலாச் சுளைகளை அறிய ஒரு கணித சமன்பாடு இருக்கின்றது. ஒரு பலாப்பழத்திலுள்ள காம்பைச் சுற்றிய முதல் வரிசையில் உள்ள முட்களை எண்ண வேண்டும். அந்த எண்ணிக்கையை ஆறால் பெருக்க வேண்டும். அதில் கிடைக்கும் தொகையை ஐந்தால் வகுத்தால் பலாப்பழத்தில் உள்ள பலாச் சுளைகளின் எண்ணிக்கை கிடைக்கும். என்னே ஒரு கணிதம்!*

*ஒரு மரத்தை வெட்டினால் வெட்டுப்பட்ட பாகத்தில் உள்ள கோடுகளைக் கொண்டு மரத்தின் ஆயுளைக் கூறிவிட முடியும்.*

*இவ்விதம் காலமானம் பேசப்படுகிறது இது தான் சனாதன சமய கால கணக்கீட்டில் மிகச்சிறிய பகுதி, மேலும் வானசாஸ்திரத்தை (Astronomy) அறிய அதன் பெருமையை பேச நமக்கு 2021 வருடங்கள் போதாது.*

*நேரம் கிடைக்கும்போது உங்களின் கைத்தொலைப்பேசியில் இணையத்தில் இணைந்து  "கூகிள்" கணினி சாமிகளிடம் தமிழில் "கணக்கதிகாரம்" என்று தேடினால் இந்தப் நூல்/ புத்தகத்தைப்பற்றி பல விவரங்களை படித்து தெரிந்துகொள்ளலாம்.*

*மேலும் விவரங்களுக்கு எங்களோடு "வைஷாலி வாசகர் வட்டம்" என்கிற முகநூல் பக்கத்தில் உங்களையும் இணைத்துக்கொண்டு பயனடையலாம்.*


நன்றிகளுடன் 

"கோகி" என்னும் கோபால கிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி. ப

Saturday, November 20, 2021

No more doctor Visit

குளிர் காலம் ஆரம்பமாகிவிட்டால்...

Cramp, Cramp, Cramp.

Middleage, senior citizens க்கு பொதுவாக ஒரு problem வரும்.

பெரும்பாலும் இரவு நேரத்தில் வரும். கெண்டைக்கால் சதை, கால் விரல்கள், பாதங்கள், etc ,etc severe தசை பிடிப்பு

சதையும் நரம்புகளும் சேர்ந்து கட்டி போல் ஆகிவிடும். வலி உயிர் போய் விடும். எழுந்திருக்கவும் முடியாது படுக்கவும் முடியாது. யாராவது உதவ வேண்டும்.

அந்த கடின தசை பகுதியை மெல்ல அழுத்தமாக தடவி, சமநிலைக்கு கொண்டு வர வேண்டும். பின் Volini gel ஏதாவது தடவ வேண்டும். இரண்டு நாட்களுக்காவது அந்த வலி லேசாக இருக்கும்

Cramp வரும் போது, தூக்கத்தில் இருந்தாலும், அலறி அடித்துக் கொண்டு எழுந்து  அழ ஆரம்பித்து விடுவார்கள்.Pain Uncontrollable

பொதுவாக Evion tablets 10 நாட்கள் சாப்பிட சொல்வார்கள். அப்போதைக்கு சரியாகிவிடும். பின் மீண்டும் வரும்

ஆயுர்வேதம், வர்மம்  பயின்ற என் நண்பர் ,எளிமையான ஒரு தீர்வு கூறினார்

வலது பக்கத்தில் Cramp வந்தால், இடது கையை காதோடு ஒட்டி மேலே தூக்குங்கள். இரண்டு அல்லது மூன்று நிமிடம் அந்த positionலேயே இருங்கள். Cramp சரியாகிவிடும். வந்த சுவடே தெரியாது

அதே போல இடது பக்கத்தில் Cramp வந்தால் வலது கையை காதோடு ஒட்டி மேலே தூக்குங்கள்

படுத்திருக்கும் போது வந்தாலும், காதை ஒட்டியவாறு கைகளை நீட்டுங்கள். சரியாகிவிடும்.

நண்பர்கள், உறவுகள் பலரும் பயனடைந்தார்கள். நீங்களும் முயற்சித்து பார்க்கலாம்

Eye Dryness

இதுவும் அப்படித்தான். வலியும் இருக்கும். காலையில் கண்ணை திறப்பதே சிரமமாக இருக்கும்.

இரவு தூங்கும் போது கண்டிப்பாக Eye drops போட வேண்டும். இல்லாவிடில் தூக்கம் கெடும். காலையில் சிரமம்

இதற்கும் ஒரு எளிய மருத்துவம்

இரவு தூங்கும் போது தொப்புளை சுற்றி அரை அங்குலம் வரை தேங்காய் எண்ணையை தடவி, லேசாக தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள்

ஒரு வாரத்திலேயே, Eye drynessல் இருந்து பெரும் விடுதலை கிடைக்கும். இன்னும் சில உடல் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்

எனக்கு தெரிந்தவர் பத்து வருடங்களாக, Eye drops உபயோகித்தவர். அடிக்கடி Eye Checkup

இப்போது பெரிய Relief. முதலில்  இந்த சிகிச்சையை  சொன்னபோது சிரித்தார். உபயோகப்படுத்தியவுடன், நல்ல முன்னேற்றம்.Eye drops மிகவும் குறைத்து விட்டார். 

No more doctor Visit

தூக்கமின்மை 

பலருக்கு இரவில் ஆழ்ந்த தூக்கம் வராது. Disturbed sleep due to worries,  etc etc

எளிய மருத்துவம் 

தூங்க போகுமுன்,  தேங்காய் எண்ணெய் மூன்று அல்லது நான்கு drops எடுத்து. வலது பாதத்திற்கு அடிபாகத்தில் (உள்ளங்காலில்) மென்மையாக தடவி மூன்று நிமிடம் லேசாக மஸாஜ் செய்யுங்கள். அதே போல இடது காலிலும் செய்யுங்கள். பின் படுத்து விடுங்கள். ஆழ்ந்த உறக்கம் கண்டிப்பாக வரும்.

நீங்களும் முயன்று பார்க்கலாம்.

Sleeping tablets கூட நாளடைவில் தவிர்த்து விடலாம்

ஒரு மருத்துவ நண்பர் சொன்னது

தொப்புள்  72000 நரம்புகள் குவியும் இடம்.

அங்கு தேங்காய் எண்ணயை தடவும் போது, நரம்புகளில் இருக்கும் குறைபாடுகளை சமன் செய்கிறது. அதே போலதான், உள்ளங்காலிலும்.

Acupressure பயிற்சிகளில் கூட உள்ளங்கால் முழுமையும் விரல்களால் அழுத்தி, உடலின் எல்லா உறுப்புகளிலும் உயிர் சக்தி தங்கு தடையில்லாம பயணிக்க செய்வார்கள்

உடல் நலத்தில் கவனம் தேவை.

ஆங்கில மருந்துகளை மெல்லகுறைத்து கொண்டு மாற்று மருத்துவத்தில் கவனம் செலுத்துதல் சிறப்பு.