முருகன் குமரன் குகன் என்று மொழிந்து,
உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்,
பொருபுங் கவரும் புவியும் பரவும்,
குருபுங்கவ எண்குண பஞ்சரனே
முருகன் குமரன் குகன் என்று மொழிந்து,
உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்,
பொருபுங் கவரும் புவியும் பரவும்,
குருபுங்கவ எண்குண பஞ்சரனே
1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
5. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
6. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
7. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
9. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
10. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
10-A. நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
11. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
12. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
13. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
14. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
15. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
16. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.
17. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
18. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
19. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
20. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
21. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
22. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.
23. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
24. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
25. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
26. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
27. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
28. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
29. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
30. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
31. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.
32. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
33. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
34. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
35. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்
36. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
37. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
38. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
39. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
40. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
42. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
43. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
44. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
45. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
46. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
47. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
48. சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
49.கறிவேப்பிலை,சுக்கு, சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும்.
50. தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
51. தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.
52. வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
53. சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.
54. ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
55. அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
1.காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.
3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.
4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.
5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியை பாதிக்கும்.
6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.எலும்புகள்
7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவி விடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.
9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.
பெண்களுக்காக…
10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.
11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.பெண்
12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.
13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.
கர்ப்பக் கால கவனிப்பு
14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே…!
15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.
16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.கர்ப்பம்
17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.
18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.
20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.
21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.
23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.
24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.
25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.
26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.
27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.
28. தாய்ப்பாலை சேமித்து கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.
29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.
30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.
31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.உணவே மருந்து….!
32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..!
33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
உணவே மருந்து
34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.
36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.
37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.
40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.
42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.
45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.
46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.
48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.மருந்தே வேண்டாம்….!
49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.
50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.
மருந்தே வேண்டாம்
51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.
52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும் தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனை தராது.
இதயம்
53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.
54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபட தேவையில்லை.
55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.
56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.இதயம்
57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
கிட்னியை கவனியுங்கள்
58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.
59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!
60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.
61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.
பல்லுக்கு உறுதி
62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.
63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.
65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.
கிட்னி
66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.
68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.
69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.
70. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.
71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள்,வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.
72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.
73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.
74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்
75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
ஜெனரல் வார்டு
76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.
78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.
79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.
80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.
81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா..? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.
82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.
83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.
84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.
85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.நில்… கவனி… செல்…
86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.
நோயாளிகள் தங்கும் இடம்
87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.
88. ‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.
89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.
90. ‘போரடிக்கிறது’ என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.
91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.
92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.
93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.
94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது. எச்சரிக்கை
95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.
97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.
98. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்
99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.
100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும், ஆகவே பச்சை குத்துவதை தவிர்ப்பது சிறந்தது...
நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ...!!
முடிந்தவரை இதை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்..
புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும், சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டு பிடித்து, குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.
எனக்கு தெரிந்து, மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.
அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. இந்த சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர்.
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.
இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .
சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky (or) brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை:
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கி விடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும்
அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும். இப்போது மருந்து தயாராகி விட்டது.
மருந்தை உட்கொள்ளும் விதம்:
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.
மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ண வேண்டும்.
பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும். சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும்.
மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது.
முடிந்தவரை இதை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்.
எமதர்மனின் நான்கு பற்கள் ஆபத்தானவை. அவை உக்ர ரதம், ருத்ர ரதம், பீம ரதம், விஜய ரதம். ரதம்’ என்பது பல்லைக் குறிக்கும். இவை ஒவ்வொன்றினாலும் குறிப்பிட்ட வயதில் கண்டம் ஏற்படுவதால் ஆயுள் செய்வது அவசியம். 59 வது வயதில் உக்ரரத சாந்தி, 69ல் ருத்ரரத சாந்தி, 70 ல் பீமரத சாந்தி, 75ல் விஜயரத சாந்தி ஹோமம் செய்வர்....
"1. பீம சாந்தி = 55ஆவது வயது ஆரம்பம்.
2. உக்ரரத சாந்தி = 60ஆவது வயது ஆரம்பம்,
3. ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி = 61ஆவது வயது ஆரம்பம்.
4. பீமரத சாந்தி = 70ஆவது வயது ஆரம்பம்.
5. ரத சாந்தி = 72ஆவது வயது ஆரம்பம்.
6. விஜய சாந்தி = 78ஆவது வயது ஆரம்பம்.
7. சதாபிஷேகம் = 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்லநாளில்.
8. ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) = பௌத்ரனுக்கு புத்ரன் பிறந்தால்.
9. ம்ருத்யுஞ்ஜய சாந்தி = 85ஆவது முதல் 90க்குள்.
10. பூர்ணாபிஷேகம் = 100ஆவது வயதில் சுபதினத்தில்"
ஒருவருக்கு அறுபத்து ஒன்பது ஆண்டுகள் முடிந்து எழுபதாவது ஆண்டு தொடங்கும் பொழுது ஒரு ஆபத்து ஏற்படலாம். அதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டு, பிள்ளையின் மகனான பேரனது பிள்ளையை (ப்ரபௌத்ரனை) காண்பதற்காகவும், ஆயிரம் பூர்ண சந்திரனைக் கண்டு முடிப்பதற்காகவும், நூற்றாண்டு காலம் வாழ வேண்டும் என்பதற்காகவும் செய்யப்படும் சாந்தி ஹோமம் பீமரத சாந்தியாகும். இதில் மாங்கல்யதாரணம் விதிக்கப்படவில்லை. உக்ரர், பீமர் இவர்கள் ருத்ரமூர்த்திகள் ஆவர்.
எழுபத்தி எட்டாவது வயது தொடங்கும் பொழுது செய்யப்படுவது விஜயரதசாந்தி எனப்படும். இதனை செய்து கொள்வதால், ஒரு தசாப்தம் எனப்படுகிற ஒன்பது கிரகங்களின் முழுமையான காலதசையாகிய நூற்றிருபது ஆண்டுகள் நன்கு வாழ்வர் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
எழுபத்து எட்டாவது வயதில் செய்யப் பட்ட விஜயரத சாந்திக்குப் பிறகு- அதாவது எண்பது ஆண்டுகளைக் கடந்து மேலும் எட்டு மாதங்கள் முடியும் காலகட்டத்தில் செய்யக்கூடியது ஸஹஸ்ர சந்திர தரிசன சாந்தியாகும். இங்கு சிலர் பிறைச் சந்திரனைக் காண்பதாகக் கூறுகின்றனர்.
முழுநிலவு தினமான மாதப் பௌர்ணமியே கண்டு தியானித்து வழிபடத்தக்கது. எனவே முழுநிலவைக் காண்பதாக கணக்கிடுவதே சிறந்ததாகும். சிலர் அன்றே சதாபிஷேகம் செய்துகொள்கின்றனர்.
80 வயதுமுதல் 100 வயது வரையுள்ள காலகட்டத்தில், அத்தம்பதியை சிவன்- பார்வதியாகவே கண்டு, அவர்கள் தீட்சை பெறாதிருந்தாலும் கூட அதனை செய்து முடித்து, சிவசக்தி ஸ்வரூபமாகக் கருதி கலசநீரால் முழுக் காட்டி ஆசி பெறுவதே சதாபிஷேகம் எனப்படும். இது மற்றதைப்போல் சாந்தி வகை ஆகாது. சதாபிஷேகம் என்பது தம்பதிக்கு சிவனாரின் தகுதியை அங்கீகரித்து, சிவத்துவ சம்பாதக பட்டாபிஷேகமாக செய்யப் படுவதாகும்.
இத்தகைய வழிமுறைகளெல்லாம், மனிதன் வாழ்வாங்கு வாழ்ந்து பிறவிப் பயனை அடைவதற்காகவே வகுக்கப்பட்டுள்ளன என்பதை நாம் அறிய வேண்டும்.
புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…!
உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்.
அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான்.
பெரிய திருவாச்சியை தனியே வார்த்தாகி விட்டது.
சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது.
சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும்.
மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமாக ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். மழு தயார் நிலையில் இருந்தது.
திரும்பி மனைவியைப் பார்த்து துவங்கி விடட்டுமா? என்று கேட்டான். மனைவி சரியென்று தலையசைத்தாள்.
படுக்க வைக்கப்பட்ட பெரிய களிமண் அச்சுக்கு முன் கைகூப்பி நின்றான்.
இது ஆறாவது முறை. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பின்னம் நடந்து கொண்டிருக்கிறது.
உன்னை நான் உருவமாகச் செய்கிறேன் என்ற கர்வம் எனக்கில்லை.
ஈசனே, நீயே வந்து குடி கொண்டாலொழிய உன் உருவத்தை ஒரு நாளும் செய்ய முடியாது.எங்கேனும் ஒரு கர்வத்தில் நான் இருப்பின் தயவுசெய்து என்னை தண்டித்துவிடு. இந்த உருவத்திற்குள் வராமல் போகாதே என்று வேண்டினார்.
அந்தப்பகுதி, அரசனுடைய குரல் அவன் காதில் விழுந்தது.
“வேண்டுமென்றே தவறு செய்கிறாய் சிற்பியே, என்னிடம் காசு வாங்குவதற்காகவே நீயாக ஏதேனும் தவறு செய்துவிட்டு, பின்னமாகிவிட்டது குறையாகிவிட்டது, என்று வருத்தப்படுகிறாய்.
கடந்த நான்கு வருடங்களாக நடராஜர் சிலையை செய்வதாக கூறி என்னுடைய சம்பளத்திலே தின்றுகொழுத்து செய்துவருகிறாய், இதுவே கடைசி முறை இன்னும் இரண்டு நாட்களில் நடராஜர் சிலையை செய்யவில்லையெனில் நீ இங்கிருந்து புண்ணியமில்லை!
உன்னை சிற்பி என்று நாங்கள் அழைத்து லாபமில்லை. எனவே உன் கதையை என் வாளால் முடிப்பேன் “என்று சீறினான் அரசன்.
அந்த அரசன் நான்கு வருடங்கள் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம். அவன் பொறுமை மீறும்படியாக என்ன ஏற்பட்டது தெரியவில்லை, அரசனிடம் இருந்து நடராஜர் சிலை செய்ய உத்தரவு சிற்பிக்கு வந்ததுமே அற்புதமான ஒரு நடராஜர் ஆயிரமாயிரம் காலத்திற்கு நிற்க வேண்டிய நடராஜர் செய்ய வேண்டும் என்ற வேகம் வந்தது. அந்த வேகத்தோடு கர்வம் வந்ததோ, என்னவோ தெரியவில்லை. ஐந்து சிலைகள் செய்தும் சரியாக வரவில்லை.
இது ஆறாவது சிலை.
ஒரு சிறு தவறும் நேராதவாறு எல்லா விஷயங்களையும் ஒரு முறைக்கு இரு முறை சோதித்து மெழுகால் சிலை செய்து பிறகு அதன் மீது களிமண் பூசி, சரியான இடத்தில் ஓட்டைகள் வைத்து காற்றுப் போக வழிகள் செய்து அவன் மழுவைக் காய்ச்சி இறைவனை வழிபடத் தொடங்கினான்.
மழு உச்ச நிலையில் கொதித்துக் கொண்டிருக்க, “என்னுடைய வாழ்க்கை உயர்வதும், தாழ்வதும் இப்பொழுது உன்கையில் இருக்கிறது. உனக்கு விருப்பம் இருப்பின் இதற்குள் வந்து உட்கார்ந்து கொள் இல்லையெனில் என்னை சாக விடு…! “என்று சொல்லிவிட்டு முழுமனதோடு மழுவை கிளரத் தொடங்கினான்.
உலையின் அனல் உடம்பு முழுவதும் அடித்தது.
இருட்டில் யாரோ தொலைவிலிருந்து வருவது தெரிந்தது. வந்தவர்கள் ஆணும், பெண்ணுமான வயதான அந்தணர்கள்.
“அப்பா திருநல்லம் என்கிற ஊர் எது, ஏனப்பா மிகப்பெரிய ஊர் என்று சொல்கிறார்கள், ஏன் இப்படி வயல்களுக்கு நடுவே இருக்கிறது. இதை தேடிக் கண்டுபிடித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
ஐயா, சிற்பியே, தயவுசெய்து குடிப்பதற்கு ஒரு குவளை நீர் கொடு” என்று கேட்டார் அந்தணர்.
சிற்பி திரும்பி ஆச்சரியத்தோடு அந்தணர்களைப் பார்த்தான், என்ன இந்த அந்தணர் தன்னிடம் போய் நீர் கேட்கிறாரே, என்று ஆச்சரியப்பட்டான்.
“அய்யா, நான் சிற்பி, கருமார் இனத்தை சேர்ந்தவன்.
அந்தணர்கள் வசிக்கும் பகுதி கோயிலுக்கு பின்புறம் இருக்கிறது. நீங்கள் பார்ப்பதற்கு அந்தணர்கள் போல் இருக்கிறீர்கள். எனவே, கோயிலுக்கு பின்புறம் போய் அந்தணர் வீட்டில் குடிக்க நீர் கேளுங்கள், தருவார்கள் “என்று சொன்னான்.
மறுபடியும் வேலையில் மூழ்கினான். வந்தவர் கைதட்டி அழைத்து “எனக்கு தாகமாக இருக்கிறது ஐயா, அக்ரஹாரம் போகிறவரையில் என்னால் தாங்க இயலாது சுருண்டு விடுவேன் என்று தோன்றுகிறது. எனவே உன் கையால் ஒரு குவளை நீர் கொடு “என்றான்.
“நான் இங்கு வேலை செய்து கொண்டிருப்பது உன் கண்ணில் படவில்லையா, ஒரு சிலை வடிப்பது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியாது…?
கவலையோடு நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். குடிக்க தண்ணீர் கொடு என்று என் உயிரை ஏன் வாங்குகிறீர்கள். என்னிடம் தண்ணீர் இல்லை, இந்த மழு தான் இருக்கிறது வேண்டுமானல் இதை குடியுங்கள்” என்று பதட்டத்தோடு சொல்ல.
“சரி அதையே குடித்துக் கொள்கிறேன்” என்று அருகே வந்த கிழவர், உஞ்சவர்த்தி பிராமணர் போல ஒரு சொம்பை இடுப்பில் கட்டி தொங்கவிட்டிருந்தார். அந்தச் சொம்பை விட்டு மழுவை மொண்டார், கொதிக்கின்ற நெருப்பு ஒளியோடு வீசுகின்ற மழுவை எடுத்து உயர்த்திக் குடித்தார். மழு வாய்க்குள் போயிற்று, மழுவை அவர் குடித்துக் கொண்டிருக்கும் போது சற்றுத் தொலைவில் நின்றிருந்த அவரது மனைவி வாய்விட்டுச் சிரித்தாள்..
சுற்றியுள்ள உதவியாட்களும், சிற்பியும் பயந்து போய் ஓவென்று கூவ, வந்தவரையும் காணோம், வந்தவர் மனைவியும் காணோம்.
ஐயா, கொதி நிலைக்கு வந்துவிட்டது என்று உதவியாளர் கூவ, எல்லாரும் கொதிக்கும் பாத்திரத்தின் அடிப்பக்க குழாயைத் திறந்து விட்டார்கள். மழு தரைவழிந்து பள்ளத்தின் வழியே சிற்பத்திற்குள் நதிபோல் ஓடி புகுந்து கொண்டது. சரியாய் எண்பது நொடிகளில் எல்லா உருக்கு உலோகமும் சிலைக்குள் போய் தங்கிவிட்டது.
அடுத்தது சிவகாமி சிலைக்கும் அவ்விதமே திறந்து ஊற்ற, அதுவும் சிலைக்குள் போய் அமர்ந்து மெழுகை வெளியே அனுப்பியது, மெழுகு உருகி வெளியேறும் புகையில் அடுத்தவர் முகம் தெரியவில்லை.
கிழவரையும், கிழவியையும் யாரும் தேடவில்லை.
உருக்கு மொத்தமும் வழிந்ததும் அவரவர் ஓரம் போய் திண்ணைகளில் சாய்ந்தார்கள். தலைக்கு துணிவைத்துக் கொண்டு மயக்கத்தில் ஆழ்ந்தவர்கள் போல் தூங்கினார்கள், விடிந்து என்ன நடந்தது என்று விவாதித்தார்கள்…! யோசித்தார்கள்…!
வந்தது சிவபெருமானே என்று முடிவு செய்தார்கள்.
ஓடிப்போய் களிமண்ணில் நீர் ஊற்றி மெல்ல மெல்ல பிரித்து சிலையைப் பார்த்தார்கள். சிலை ஆறடி உயரத்திற்கு மேலாய் அற்புதமாய் வந்திருந்தது.
குமிழ் சிரிப்பும், கோவைச் செவ்வாயும், அகலமான கண்களும், தீர்க்கமான நாசியும் அற்புதமான கோணத்தில் நடனமாடும் சிவனுருவம் மிகச் சிறப்பாக வந்திருந்தது.
நிமிர்த்தி பீடத்தில் நிற்க வைத்தார்கள், சடையையும், திருவாச்சியையும் மாட்டினார்கள். சிவகாமியையும் நிமிர்த்தி பீடத்தோடு பொருத்தினார்கள்.
ஊர்கூடிப் பார்த்து வியந்தது, கன்னத்தில் போட்டு கொண்டது. மன்னனுக்கு ஓடிப்போய் மந்திரிகள் செய்தி சொல்ல, மன்னனும் விரைந்து வந்து பார்த்தான்.
”உங்களுக்கெல்லாம் கத்தி எடுத்தால் தானடா காரியம் செய்ய முடிகிறது. தலையை கொய்து விடுவேன் என்று நான் ஆணையிட்டதனால் தானே இரண்டு நாளில் இத்தனை அற்புதமான ஒரு சிற்பத்தை செய்து முடித்தாய், இதுவரை நீ ஏமாற்றிக் கொண்டிருந்தது உண்மை என்று இப்போது தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது பார்” என்று சிரிப்போடும் கடுப்போடும் மன்னன் பேசினான்.
சிற்பி இல்லை என்று தலையாட்டினார், “என்ன சொல்ல வருகிறாய்?” மன்னன் மறுபடியும் சீறினான்.
”இது சிவனால் செய்யப்பட்ட சிலை, இப்படி அந்தணர் உருவத்தில் சிவன் வந்து நின்றார். மனைவியுடன் வந்து என்னிடம் பேசினார், தண்ணீர் கேட்டார் மறுத்தேன், இது தான் இருக்கிறது என்று மழுவை காண்பித்தேன், மழுவை ஏந்திக் குடித்தார் மறைந்தார்,” என்று சொல்ல….
“இந்த கதையெல்லாம் என்னிடம் விடாதே” என்று மறுபடியும் சீறினான்.
”இல்லை அரசே .இது சிவன் இருக்கிற சிலை, சிவன் மழுவுக்குள் கரைந்த சிலை. எனவே இதனுள் இறைவன் இருக்கிறான். இது என்னால் செய்யப்பட்ட சிலை அல்ல,” என்று பணிவாக சொல்ல, அரசன் கெக்கலித்து கிண்டலாகச் சிரித்தான்.
உளியை சிற்பியிடமிருந்து பிடுங்கி, இது சிவன் உருவம் சிவன் இருக்கிற உருவம் என்றால் இதை குத்தினால் ரத்தம் வருமோ என்று காலில் ஒரு காயத்தை ஏற்படுத்தினான்.
பளிச்சென்று குருதி கொப்பளித்து கொட்டியது! தரையை நனைத்தது.
மக்கள் பயந்தார்கள், அரசன் திகைத்துப் போனான். பயத்தில் சுருண்டு விழுந்தான்.
இறைவனை சோதித்த அரசனின் உடம்பு முழுவதும் தொழுநோய் பரவியது. அவன் சிற்பியிடமும், இறைவனிடமும் கைகூப்பி மன்றாடி மன்னிப்பு கேட்டான் என்பது கோனேரி ராஜபுரத்தின் கதை.
எங்கே இருக்கிறது இந்த கோனேரிராஜபுரம், கும்பகோணம் காரைக்கால் பேரூந்து பாதையில் புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கேயிருந்து வலதுபுறமாக போகும் சாலையில் விசாரித்துக் கொண்டு போக வேண்டும்.
வயல் வெளிகளுக்கு நடுவே ஒரு பெரிய கிராமம் அமைதியாக உட்கார்ந்திருக்கிறது.
கோனேரி ராஜபுரத்திற்கு முற்காலப் பெயர் திருநல்லம். இந்த கோனேரி ராஜபுரத்திற்கு சோழமன்னன் கண்டராதித்தனும் அவன் மனைவி செம்பியன் மாதேவியும் பல நிவந்தங்கள் விட்டிருக்கிறார்கள்.
ஊர் மிகச் செழிப்பான ஊர். நடராஜர் விக்ரகத்தை பார்க்க வேண்டுமானால் அதை கோனேரி ராஜபுரத்தில் தான் பார்க்க வேண்டும்.
உலகத்திலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை இந்த ஊரில் தான் இருக்கிறது. அழகு என்றால் அழகு அப்படியொரு கொள்ளையழகு. சிற்ப கலை தெரிந்தவர்கள் மட்டுமல்ல, சிற்பக் கலைப்பற்றி தெரியாதவர்கள் கூட அருகே போய் நின்றார்கள் என்றால் அப்படியே பரவசமாகிவிடுவார்கள்.
சிற்பக் கலை தெரிந்தவர்கள் மயக்கமாகி விடுவார்கள்!
கைரேகை, அக்குள் பக்க கருப்பு, அங்கு வழக்கமாய் எல்லா ஆண்களுக்கும் இருக்கின்ற கொழுப்புக் கட்டி, புறங்கை தேமல் என்று பல்வேறு விஷயங்கள் அற்புதமாக அந்த சிற்பி செய்திருக்கிறான்.
அரசன் உளியால் செதுக்கிய இடமும் பாதத்திற்கு மேல் அப்படியே இருக்கிறது. கோயில் ஆயிரம் வருடத்து கோயில். கோனேரி ராஜபுரம் சுவாமியின் பெயர் உமாமகேஸ்வரர் அல்லது பூமீஸ்வரர்!
தோட்டமும் துறவுமாய் பூமி பாக்கியம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இவரை வணங்கினால் நிச்சயம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நான் செழிப்பாக இருக்க நல்ல பூமியை கொடு என்று இந்த இறைவனிடம் வேண்டிக் கொண்டு உழைத்தால் நிச்சயம் அவன் கையகல பூமிக்காவது சொந்தக்காரனாவான் என்று நம்பப்படுகிறது.
தவிர அங்கு வைத்தியநாதன் சன்னதி இருக்கிறது, அந்த வைத்திய நாத சன்னதியில் ஜபம் செய்தால், வேறு யாருக்கேனும் உடம்பு சரியில்லை என்று நாம் இறைவன் பெயரை திரும்பத் திரும்பத் சொன்னால் சம்மந்தப்பட்டபவருக்கு நோய் குணமாவதாகவும் அன்பர்கள் சொல்கிறார்கள்.
இறைவி பெயர் தேகசௌந்தரி,
ஸ்தலமரம் அரசு,
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்.
கும்பகோணம் போகிறவர்கள் அரை நாள் கோனேரிராஜபுரத்திற்கு ஒதுக்கி வைத்துவிடவேண்டும். நிதானமாக பார்த்துவிட்டு வரவேண்டும்.
குறிப்பாக அந்த வைத்தியநாத சன்னதி மண்டபத்தில் உட்கார்ந்து ஜபம் செய்துவிட்டு அல்லது கண்மூடி இறைவன் பெயரைச் சொல்லிவிட்டு வருதல் மிக அவசியம்.
எல்லாவற்றையும் விட உங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த நடராஜனை பார்த்து கைகூப்பிவிட்டு வாருங்கள்!
கை நிறைய வில்வம் குடந்தையிலேயே வாங்கி கொண்டு போய் அவன் கால் அடியில் சொரிந்துவிட்டு வாருங்களேன்!
திருநல்லம் ஒரு முறையேனும் சென்று வாருங்கள்.சிவ அழகில் சொக்கிப் போய் வருவது கண்கூடான உண்மை.
திருச்சிற்றம்பலம்,
திருச்சிற்றம்பலம்,
திருச்சிற்றம்பலம்.
சகல சாப்பாட்டு பிரியர்களுக்கு சமர்ப்பணம்.
பல் முளைக்கா பிஞ்சுகளுக்கு பருப்பு சாதமே சொர்க்கம்.
மார்கழி மாத குளிரில் மணக்கும் வெண்பொங்கல் சொர்க்கம்
கார மிளகு தாளித்த பொங்கலுடன் கத்திரிக்காய் கொத்ஸ்சே சொர்க்கம்.
பூரிக்கு, உருளை கிழங்கு மசாலா, தோசைக்கு வெங்காய சட்னி, இட்லிக்கு மிளகாய் பொடி + நல்ல எண்ணெய், பிரியாணிக்கு தயிர் பச்சடி, வெண் பொங்கலுக்கு கத்தரிக்காய் கொத்சு, வாழைக்காய் பஜ்ஜிக்கு தேங்காய் சட்னி, சப்பாத்திக்கு குருமா சொர்க்கம்.
பரங்கிக்காய் சாம்பாருக்கு - பீன்ஸ் பருப்பு உசிலி சொர்க்கம்
கதம்ப சாம்பாருக்கு - பொடியிடிச்ச கத்திரிக்காய் கறி சொர்க்கம்
குடைமிளகாய் சாம்பாருக்கு கோஸ் பட்டாணி கறி சொர்க்கம்
உலகிலுள்ள அத்தனை சாம்பாருக்கும் உருளைக் காரகறியே சொர்க்கம்
வெந்தய குழம்பிற்கு வெண்டைக்காய் கறி சொர்க்கம்.
சுண்டைக்காய் வத்த குழம்பிற்கு சுட்ட அப்பளமே சொர்க்கம்
பத்திய மிளகு குழம்பிற்கு பருப்பு துவையலே சொர்க்கம்.
மத்தியான தயிர் சாதத்திற்கு மாவடு இருந்தால் சொர்க்கம்
அடைக்கு வெல்லத்தோடு அவியல் இருந்தா சொர்க்கம்.
மீந்து போன அடைமாவில் Brilliant குணுக்கு சொர்க்கம்.
ஒருவாரமான தோசைமாவில் ஊத்தப்பமே சொர்க்கம்
பசியில் துடிப்பவனுக்கு பழைய சோறே சொர்க்கம்.
கனரா வங்கி பெண்களுக்கென பிரத்யேகமாக புதிய சேமிப்புக் கணக்கை தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியோடும் பெருமையோடும் தெரிவித்துக் கொள்வதற்காகவே இந்த செய்தி. இந்தியாவிலேயே முதன்முறையாக இதுபோன்ற சிறப்பு சேமிப்புக் கணக்கு வங்கி தொடங்கப்படுவது தான் இதில் பெருமைக்குரிய விஷயம். கனரா ஏஞ்சல் எனப்படும் இந்தக் கணக்கு மூன்று வகைகளைக் கொண்டது என்னவென்றால், இந்த கணக்கை நீங்கள் திறக்கும் போது அதனுடன் இலவச புற்றுநோய் கவரேஜ் கிடைக்கும்.
3 லட்சம் முதல் 10 லட்சம் வரை உங்கள் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால் இந்தக் கணக்கு இருந்தால் சிகிச்சை கிடைக்கும்.
இந்தக் கணக்கைத் திறப்பதற்கான வயது வரம்பு 70 ஆண்டுகள் மற்றும் அந்த வயது வரை புற்றுநோய் காப்பீடு கிடைக்கும்).
கணக்கு வைத்திருப்பவருக்கு 8 முதல் 26 லட்சம் விபத்து இறப்பு காப்பீடு, கணவருக்கு 2 லட்சம் விபத்து இறப்பு காப்பீடு, கணவருக்கு 4 லட்சம் விமான விபத்து காப்பீடு, இலவச பிளாட்டினம் ஏடிஎம் கார்டு (ஆண்டு கட்டணம் இல்லாமல்), இலவச லாக்கர் செயல்பாடு (வரம்பற்றது).
இந்தக் கணக்கைத் திறக்கும் பெண்களுக்கு பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்தக் கணக்கின் பலன்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தற்போது வழக்கமான சேமிப்புக் கணக்குகளைப் பயன்படுத்தும் பெண்கள் கூடிய விரைவில் ஏஞ்சல் கணக்குகளுக்கு மாற வேண்டும்.
இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு நிறுவனம் 10 பைசா இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தாமல் புற்றுநோய் காப்பீட்டு பாலிசியை வழங்குவதாகவும், இந்த இலவச சலுகையை அனைத்து குடும்பங்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது.
கனரா ஏஞ்சல் கணக்கிற்கு மாறுவதற்கு இந்த நாட்களில் 2 புகைப்படங்கள், அசல் ஆதார், பான் (ஏதேனும் இருந்தால்) மற்றும் இவை ஒவ்வொன்றின் நகலுடனும் கனரா வங்கிக் கிளைக்குச் செல்லவும்.
உண்மையுள்ள,
மேலாளர் கனரா வங்கி
தாயுமானவர் சுவாமிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
திருச்சிராப்பள்ளியில் விஜயரகுநாத மன்னரிடம், "தலைமை கருவூல அதிகாரியாக" பணிபுரிந்தவர் அவர்.
ஆன்மீகவாதியான அவர், தத்துவ பாடல்கள் பல பாடி உள்ளார். "தாமரையிலை தண்ணீராக" வாழ்ந்த ஒரு மகான் அவர்.
ஒருநாள் மன்னரை காண, காஷ்மீரில் இருந்து ஒரு பண்டிதர் வந்தார். அவர் மன்னருக்கு ஒரு விலை உயர்ந்த, வேலைப்பாடு மிக்க, "சால்வை" ஒன்றை பரிசாக அளித்தார். மன்னரோ, தாயுமானவருக்கு அதை பரிசாக வழங்கினார்.
அரண்மனையில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில், "பனிக்காலம்" என்பதால், குளிர் காற்று வீசியது.
முதியவள் ஒருத்தி, குளிரில் நடுங்கியபடி, சாலையோரமாக அமர்ந்திருந்தாள். தனக்கு மன்னர் அளித்த சால்வையை, "அந்த முதியவளுக்கு" போர்த்திவிட்டு, வீட்டிற்கு சென்று விட்டார் தாயுமானவர்.
அதைக்கண்ட சிலர், மன்னரிடம் சென்று, "விலைமதிப்பற்ற சால்வையை, தெருவோரத்தில் இருந்த முதியவளுக்கு கொடுத்துவிட்டார். அதுவும் "நீங்கள், அவருக்கு, "அன்பளிப்பாக" கொடுத்ததை இப்படி கொடுக்கலாமா? என புகார் கூறினர்.
கோபம் கொண்ட மன்னர், உடனடியாக, தாயுமானவரை அழைத்து வர ஆள் அனுப்பினார்.
தாயுமானவர்தான் "ஞானி" ஆயிற்றே!
நேரம் தவறிய நேரத்தில் "மன்னர்" அழைக்கும் போதே காரணத்தை புரிந்து கொண்டார்.
அன்று இரவு மன்னரை சந்தித்தார். "சால்வை எங்கே?" என நேரடியாக கேட்க முடியாது அல்லவா?
ஆகவே, "சால்வையை குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் ரசித்தார்களா?" என மறைமுகமாகக் கேட்டார் மன்னர்.
அரண்மனையிலிருந்து வெளியே போனதும், அதை "திருவானைக்கா அகிலேண்டஸ்வரிக்கு அர்ப்பணித்து விட்டேன்" என்றார் தாயுமானவர்.
மன்னர் திகைத்தாலும், "சரி. தங்களுடன் அர்த்த ஜாம தரிசனம் செய்ய விரும்புகிறேன். கோவிலுக்கு செல்வோமா? என்றார்.
தாயுமானவரும், தயக்கம் இன்றி, சம்மதித்தார். தேர் புறப்பட்டது.
இருவரும் "திருவானைக்கா கோவிலுக்கு" சென்றனர். அம்மன் சன்னதி முன்னால் நின்றனர்.
தாயுமானவருக்கு அளித்த சால்வை, அம்மனின் திருமேனியை அலங்கரித்தது. சிலிர்த்து போய்த் தாயுமானவர் கால்களில் விழுந்தார் மன்னர்.
ஆம் ஏழைத்தாயின் மீது போர்த்திய சால்வை, இங்கே எப்படி வந்தது? எல்லோருக்குள்ளும் கடவுளை காண்பவர்களுக்கு, இது ஒரு அதிசயமா என்ன?
இல்லை அல்லவா!
அன்பு மாணவச் செல்வங்களே நீட் நீட் என்று அனைவரும் டாக்டராகி ஊசி போட வேண்டும் என்பது தான் உங்களது எதிர்கால திட்டமா புரியவில்லை...
சரி உங்களில் எத்தனை பேருக்கு திருவாரூர் CentralUniversity பற்றிய விவரம் தெரியும்...?
அப்படித் தெரியவில்லை என்றால் இதோ தெரிந்துகொள்ளுங்கள்...!
தற்போது 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு உபயோகப்படும்...
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக மத்திய அரசால் மாநிலத்துக்கு ஒன்றென "மத்திய பல்கலை கழகம்" என்ற பெயரிலேயே பதிமூன்று பல்கலை கழகங்கள் (சென்ட்ரல் யுனிவர்ஸிட்டிகள்) நடத்தப்பட்டு வருகின்றன.
இது போக,
அஸ்ஸாம் பல்கலைகழகம்,
சில்சார் அஸ்ஸாம் மாநிலம்,
பாபா குலாம் ஷா பாதுஷா பல்கலை கழகம் ராஜோரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம்,
பெங்களூரு டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிட்டி,
காலிக்கோட் பல்கலை கழகம் பேரம்பூர் ஒடிஸா மாநிலம்,
சர்தார் படேல் யூனிவர்ஸிட்டி ஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் ஜோத்பூர் என
பிற ஐந்து யூனிவர்ஸிட்டிகளும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படுகின்றன.
பொதுவாக இந்த பல்கலைகழகங்களைப் பற்றிய விவரங்கள் தமிழ்நாட்டில் நிறைய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியவே இல்லை.
தமிழ்நாட்டில் இந்த பல்கலைகழகம் திருவாரூர் அருகே இருக்கிறது.
இந்த பல்கலைகழகம் ஒவ்வொரு வருடமும் இருநூறு மாணவர்களுக்கு இண்டக்ரேட்டட் கோர்ஸூகளுக்கான அட்மிஷன் தருகிறது.
Integrated MSc (Chemistry, Physics, Maths , Life Sciences) , Integrated MA EXONOMICS.
இது போக மாஸ்டர்ஸ் டிகிரி கோர்ஸூகளும், எம்பிஏ கோர்ஸுகளும், பிஎச்டி கோர்ஸுகளும்* தனித்தனியே நடத்தப்படுகின்றன.
இங்கே படிக்கும் மாணவர்களில் பாதி பேர் கேரளாவைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். மீதிப்பேரில் மற்ற மாநிலத்தவர்கள் இருக்கிறார்கள் தமிழ்நாடு உட்பட.
ஒரு செமஸ்டருக்கு பீஸ் என்று பார்த்தால் முவாயிரத்திலிருந்து எட்டாயிரத்துக்குள் வருகிறது.
இது போக ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி ஹாஸ்டல் வசதியும் இருக்கிறது.
ஹாஸ்டல் கட்டணங்களும் மிக மிக குறைவே.
ஆனால் இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருப்பது தமிழ்நாட்டில் நிறைய பெற்றோர்களுக்கு, மாணாக்கர்களுக்கு தெரியவே இல்லை என்பது வருத்தத்துக்குரிய விசயம்.
எப்படி இந்த பல்கலை கழகங்களில் சேர்ந்து படிப்பது...
18 மத்திய பல்கலை கழகங்ளில் எந்த பல்கலைகழகத்திலும் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்க
ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு நுழைவுத் தேர்வு தான் நடத்தப்படுகின்றது.
(cucetexam) Central University common entrance exam.
+2 முடித்து 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலே போதுமானது.
நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு, கவுன்ஸிலிங் மூலம் மாணாக்கர்களின் விருப்பத் தேர்வுகளுக்கு தக்க அட்மிஷன் வழங்கபடுகின்றன.
நேற்று முதல் இந்த தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
www.cuet.samarth.ac.nic.in
மேலும் எல்லா விவரங்களும் இந்த தளத்தில் இருக்கின்றன.
எந்தெந்த பல்கலை கழகங்களில், என்னென்ன கோர்ஸூகள் நடத்துகிறார்கள் என்பதை அறிய அந்தந்த பல்கலை கழகத்தின் இணைய தளத்தில் சென்று பார்க்கலாம். பல்கலை கழகங்களின் பெயர்களும் இணைய தள முகவரியுடன் மேற் சொன்ன தளத்திலேயே விவரங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் குறித்த, கூடுதல் விவரங்களை அறிய விண்ணப்பிப்பது தொடர்பான தொழில்நுட்பப் பிரச்னைகளுக்கு
011- 40759000 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.
படிப்புகள், கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு
அசாம் - 9476897510, 9401847943
ஆந்திரப்பிரதேசம் - 9640884806, 7598413970,
குஜராத் – 079 - 23977446,
அரியானா – 9212884894,
ஜம்மு - 8082197957, 9796665505, 8178118948,
ஜார்கண்ட் – 7070630510,
கர்நாடகா – 9972191661, 9242355484,
கேரளா - 0467 - 2309467, 0467 – 2309460,
பஞ்சாப் - 9464269330,
இராஜஸ்தான் – 7014588311,
தெற்கு பீகார் - 0631-2229514, 2229518,
தமிழ்நாடு - 04366 - 277337 எனும் மத்திய பல்கலைக்கழகங்களின் அலைபேசி / தொலைபேசி எண்களில் அலுவலக நாள்களில் தொடர்பு கொண்டு பெறலாம்.
cucet@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டும் தகவல்களைப் பெறமுடியும்.
நிறைய பேருக்குத் தெரியப்படுத்துங்கள்.
தமிழ்நாட்டிலேயே வெறும் 05 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது.
இதைப் படித்தால் Group-1 examல் எளிதில் வெற்றியடைந்து Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்...
சென்னையிலுள்ள CMI ல் B.Sc. Maths or Physics பயின்றால் உங்களுக்கு மாதம் ரூ.5000/- உதவித் தொகையும், மேலும் கூடுதலாக வருடத்திற்கு ரூ.20,000/- உங்களுக்குத் தேவையான பாட சம்மந்தமான பொருட்கள் வாங்குவதற்கும்,
ஆகமொத்தம் ஒரு வருடத்திற்கு ரூ. 65,000/- உதவித் தொகை கிடைக்கும்.
அக்ரி(விவசாயம்) பாடம் பயில விரும்புபவர்கள் திருச்சி அருகிலுள்ள கல்லூரிகளில் சேர முயல்வது நன்மையளிக்கும்.
ஏனெனில், இக்கல்லூரிகளில் டொனேஷன் கிடையாது....
திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம் (Central University) உள்ளது. இதில் பயிற்சிக் கட்டணம் மிகவும் குறைவு.g
மேலும், இப் பல்கலையில் பயின்றால், மேற்படிப்பிற்காக நீங்கள் வெளிநாடுகளில் உள்ள யூனிவர்ஸிடி சென்றால் எவ்வித நுழைவுத் தேர்வும் எழுத வேண்டியதில்லை...
இந்த தகவலை படியுங்கள்....
Neet, JEE எழுதும் மாணவர்கள் மற்றும் commerce students இதை அனைவருக்கும் உங்கள் வலைதளத்தில் பகிருங்கள்.
இது ஒரு வரப்பிரசாதம் தயவுசெய்து இதை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேருங்கள்
கோடீஸ்வரர் ஆக இருந்தாலும் தர்ம தரிசனம்...
ஆசியாவின் மிகப்பெரிய அன்னதான மண்டபத்திற்கு வித்திட்ட பக்தர்.
திருமலையில் நித்ய அன்னதானம் மிகச்சிறப்பாக கோடானு கோடி பக்தர்களுக்கு வயிறார சாப்பாடு போடப்பட்டு வருகிறது.
ஆனால் ஒவ்வொரு முறையும் பக்தர்கள் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய நிலை ஏனெனில் முன் பந்தியில் குறைந்த அளவே மக்கள் அமர்ந்து சாப்பிடும் அளவில் மண்டபம் அமைந்து இருந்தது.
நம் கருணைக்கடல் திருவேங்கடவன் மெய் சிலிர்க்கும் ஓர் அற்புத நாடகத்தை நடத்தினார்.
ஒருநாள் மதியம் 2.00 மணி அளவில் திருமலை E.O அலுவலகத்திற்கு ஒருவர் வந்தார்.
அங்கிருந்த உதவி செயலாட்சி தலைவரிடம் அய்யா ஒரு வேண்டுகோள், இங்கு ஸ்ரீனிவாசனை தரிசனம் செய்த பக்தர்கள் அன்னதான கூடத்தில் நீண்ட நேரம் காத்து இருக்கிறார்களே கொஞ்சம் பெரிய மண்டபம் இருந்தால் இன்னும் நிறைய பேர் சாப்பிட முடியும் அல்லவா என்று கூறினார்.
அதற்கு அவர் நீங்கள் வரிசையில் நின்று சாப்பிட முடிந்தால் சாப்பிடலாம் இல்லை என்றால் செல்லுங்கள் என்று சற்று கோபத்துடன் கூறினார்.
ஐயையோ !
நான் எனக்காக சொல்லவில்லை ஸ்ரீனிவாசனின் பக்தர்களுக்காகத்தான் கூறினேன் என்றார்.
அப்படி என்றால் நீங்களே ஒரு மண்டபம் கட்டி கொடுங்கள் அதில் நீங்கள் சொன்னபடி சாப்பாடு போடலாம் என்றார்.
உடனே அந்த பக்தர் சரி புதிய அன்னதான கூடம் கட்டுவதற்கு என்ன செலவு ஆகும் என்றார்.
அந்த அதிகாரி மிகுந்த கோபத்துடன் ஓஹோ அப்படியா ஒரு 25 கோடி கொடுங்கள் பெருசா மண்டபம் கட்டி உங்கள் பெயரிலேயே சாப்பாடு போடலாம் போய் வேலைய பாருங்க சார் என்றார்.
உடனே அந்த பக்தர் தான் வைத்திருந்த கைப் பையில் இருந்த காசோலை புத்தகத்தை எடுத்து 25 கோடிக்கு ஒரே காசோலையாக திருமலை தேவஸ்தானத்தின் பெயரில் எழுதி அந்த அதிகாரியிடம் கொடுத்தார்.
ஆனால் அந்த உதவி செயலாட்சி தலைவர் வாயடைத்து போய் மிகுந்த அதிர்சியுடன் வேர்த்து விருவிருக்க விரைந்து சென்றுசெயலாட்சி தலைவரை அழைத்து வந்து நடந்தவற்றை கூறினார்.
அவரும் ஆடிப்போனார்.
பின்னர் தாங்கள் யார் என்று மிகுந்த மரியாதையுடன் அவரை அமர வைத்து கேட்டார்.
அவர் அய்யா நான் ஆரம்ப காலத்தில் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன் ஒரு வேலை சாப்பாட்டுக்கே கஷ்டபட்ட குடும்பம் .
அப்படி இருந்தும் எழுமலை ஆண்டவன் மீது மிகுந்த பாசத்துடன் பக்தியும் வைத்து இருந்தேன் .
திருமலைக்கு ஒவ்வொரு முறையும் நடந்தே வருவேன்.
தர்ம தரிசனத்தில்எவ்வளவு நேரம் ஆனாலும் என் அப்பன் ஏழுமலையானை பொறுமையுடன்தரிசனம் செய்து,
எனக்கு ஒருவழி காட்டி நேர்மையுடன் நான் வாழ ஒரு தொழில் வேண்டும் அதில் உனக்கு லாபத்தில் சரி பாதி உன்னிடம் சேர்க்கிறேன் தந்தையே என்று வேண்டி பின்னர் இலவச சாப்பாடு வரிசையில் நின்று என் வயிறார நான் சாப்பிட்டு செல்வேன்.
பின்னர் நடைபாதை வழியாக மலையிறங்கி வீட்டிற்கு செல்வேன்.
நாட்கள் செல்ல செல்ல பின்னர் என் தொழில் வளர்ச்சி அடைந்து இன்று மிகப்பெரிய செல்வந்தனாக இருந்தாலும் இது எல்லாம் என் அப்பன் எழுமலையான் சொத்து.
இன்று வரை நான் தனியாகவே ஒவ்வொரு முறையும் நடந்தே மலைக்கு வந்து தர்மதரிசனத்தில் நின்று தரிசனம் செய்து அவருக்கு சேர வேண்டிய பங்கை உண்டியில் போட்டு விட்டு அன்னதான கூடத்தில் வரிசையில் நின்று ஆனந்தமாய் சாப்பாடு சாப்பிட்டு விட்டு செல்வேன் .
நீங்கள் பலமுறை தினசரி பத்திரிக்கையில் அடையாளம் தெரியாத பக்தர் ஒருவர் உண்டியலில் இரண்டு கோடி மூன்று கோடி ஒரே பண்டிலாக
போட்டுள்ளார் என்று செய்தி வெளியிட்டுள்ளீர்கள் .
அதை நான் தான் போட்டேன் .
ஏனென்றால் இதை தேவஸ்தான அதிகாரி வாயிலாக கொடுத்திருந்தால் என்னை மிகுந்த மரியாதை செய்து சிறப்பு தரிசனம் அளித்திருப்பார்கள் .
ஆனால் அதை நான் விரும்ப வில்லை.
எந்த சூழ் நிலையிலும் என்னுடைய தந்தைக்கும் எனக்கும் உள்ள அந்த ஆரம்ப கால நினைவுகள் மாறிவிடக்கூடாது .
இந்த பணம் என்னை என் பழைய வாழ்க்கையை மாற்றினாலும் நான் என்னுடைய நன்றியை மறக்காமல் இன்றும் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன் நான் எப்படி திருமலைக்கு வந்தேனோ அதை போலவே இன்றும் நடந்தே வந்து நடந்தே செல்கிறேன் .
என் நண்பர்களையோ என் உறவினர்களையோ நான் அழைத்து வந்தால்அவர்கள் எண்ணப்படி நான் மாற வேண்டும் .
இவ்வளவு வசதி இருந்தும் நடந்து செல்வதா ,
தர்ம தரிசனத்தில் காத்து இருப்பதா
இலவச சாப்பாட்டிற்காக வரிசையில் நிற்பதா என்று புலம்பி தள்ளுவார்கள்.
அதனால் தான் எப்பொழுதும் தனியாகவே வருவேன் .
இன்று தரிசனம் முடிந்து அன்னதான கூடத்தில் வரிசையில் நிற்கும் போது
நிறைய பேர் வரிசையில் காத்து நிற்பதை பார்த்து இன்று திடீரெனஎன் மனதில் இதை விட பெரிய மண்டபம் இருந்தால் ஒரே நேரத்தில் நிறைய பக்தர்கள் அமர்ந்து சாப்பிட முடியும் அல்லவா?
இந்த எண்ணத்தை என்னில் உருவாக்கியதும் என் தந்தை திருவேங்கடவன் தான் .
அவர் சொல்ல சொல்ல அவரை சுற்றி இருந்த அதிகாரிகளின் கண்களில்நீர் அருவியாய் பெருகி பெருமாளின் லீலைகளையும் ,அவர் பக்தரின் பக்தியையும் பார்த்து வாயடைத்து அமைதியாய் நின்றிருந்தனர்
அந்த அறையில் மின் விசிறியின் சப்தம் மட்டுமே இருந்தது.
பின்பு தான் அவர் ஆந்திரமாநிலத்தில் ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று அறிந்து ஆச்சர்யத்துடன் அவரிடம் உங்கள் விருப்ப படி புதிய அன்னதான கூடம் கட்டி உங்கள் பெயரையே அதற்கு வைத்து விடலாம் என்றனர்.
வேண்டாம்! வேண்டாம் ! சாதாரண ஏழை என்னை செல்வந்தனாக வாழவைத்தது இந்த திருமலை அப்பனே இந்த பணம் என்னுடையதல்ல எழுமலையானுக்கு சொந்தமானது.
தேவஸ்தானம் விரும்பும் பெயரில் நடக்கட்டும் என்றதும்,அதிகாரிகள் மெய்சிலிர்த்து போனார்கள்.
ஒரே வருடத்தில் கட்டப்பட்ட இந்த புதிய அன்னதான கூடம்ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு கட்டப்பட்டு அதற்கு "மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வேங்கமாம்பா" அன்னதான கூடம் என்று பெயரிடப்பட்டு உள்ளது .
இது ஆசியாவிலேயே பெரிய அன்னதான கூடமாகும்.
🙏🙏🙏
மூத்த குடிமக்களின் வசதிக்காகஇந்தியன் இரயில்வேஸ்_ மூலம் வெளியிடப்பட்ட மையப்படுத்தப்பட்ட mobile எண்கள்.
----------------------------
9760534983 : TTI,
முன்பதிவு & உணவு
----------------------------
9760500000 :
சுத்தம் செய்தல்
----------------------------
9760534057 : கோச்சில் சிக்கல், இடம் தர மறுத்தல் போன்ற பிரச்சினை
----------------------------
9760534060 : மின்சார பிரச்சனைகள்
----------------------------
9920142151 : விசாரணை சிக்கல்கள்
----------------------------
9760534063 :
RPF & பாதுகாப்பு
----------------------------
9760534069 : குடிநீர் ஏற்பாடுகள் பற்றி
----------------------------
9760534073 : மருத்துவ உதவிக்கு
-------------------------
ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேறத் தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் "மடை". மடைகளை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன.
வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லப்படும் மரங்களையே தேர்வுசெய்து அதன் உள்தண்டை நீக்கிவிட்டால் உறுதியான நீண்ட குழாய் தயாராகிவிடும். அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள். இதுதான் ஆரம்பகால மடை. பிற்காலங்களில் பாறைகள், மரச்சட்டங்களில் மடைகள் அமைக்கப்பட்டது.
வெள்ளக்காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள். மடையைத் திறப்பது சாதாரண விடயமில்லை. உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப்பணியாகும்.
மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச்சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார். மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்து விடுவார். மடை திறந்ததும் புயல் வேகத்தில் வெளியேறும் வெள்ளம் மடைத்திறந்த வரையும் இழுத்துச் செல்லும். அந்த வேகத்திலிருந்து தப்பி பிழைப்பது மிகவும் கடினம்.மடை திறக்க செல்பவர்கள் உயிர்பிழைப்பது அரிது. அவர்கள் தம் மனைவி, பிள்ளைகள் மற்றும் அனைவரிடம் பிரியா விடை பெற்றுச்செல்வார்கள். மடை திறக்கச்சென்று மாண்டவர்கள் அதிகம், மீண்டவர்கள் குறைவு. இவர்கள்தான் "மடையர்கள்" என அழைக்கப்பட்டார்கள். வரலாற்றின் பக்கங்களில் இந்த தியாகிகளைப் பற்றிய குறிப்புகள், கல்வெட்டுக்கள், பதிவுகள் எதுவும் இல்லை. வரலாறு எழுதுபவர்கள் இதைக் கருத்தில் கொள்ளலாம் அல்லவா? எம் குழந்தைகளுக்கு இவ்வீரத் தமிழ்த்தியாகிகளின் வாழ்வு ஒரு ஊக்கத்தையும் தியாகத்தையும் ஊட்டும் அல்லவா? இனி எந்த ஒரு மாணவனையாவது "மடையா" என்று அழைப்பது எனக்குச் சற்று மனநாணம் தான்.. உங்களுக்கு ?.
நான் புனித சங்கமத்தில் முழுகி, திரிவேணி நதியிடம் கேட்டேன், "என் பாபங்களைச் சேகரித்துவிட்டாயா?"
நதி பதிலளித்தது, "ஆமாம்."
நான் கேட்டேன், "அதை என்ன செய்வாய்?"
திரிவேணி நதி நகைத்தது, "நான் பைத்தியமா அதை வைத்துக்கொள்ள? கடலுக்கு சேர்த்துவிடுவேன்."
ஆர்வத்துடன் கடலைக் கண்டேன், "திரிவேணியில் இருந்து என் பாபங்களைப் பெற்றாயா?"
கடல் சொன்னது, "ஆமாம்."
நான் மீண்டும் கேட்டேன், "அதை என்ன செய்வாய்?"
கடல் சிரித்தது, "நான் பைத்தியமா அதை வைத்துக்கொள்ள? மேகத்துக்கு சேர்த்துவிடுவேன்."
நான் மேகங்களிடம் சென்றேன், "கடலில் இருந்து என் பாபங்களைப் பெற்றிருக்கிறீர்களா?"
மேகங்கள் சொன்னது, "ஆமாம்."
நான் கேட்டேன், "அதை என்ன செய்வீர்கள்?"
மேகங்கள் மெல்லப் பேசின, "நாங்களும் பைத்தியமா அதை வைத்துக்கொள்ள? மழையாகப் பொழிவோம்."
நான் ஆச்சரியத்துடன் கேட்டேன், "யார் மேல்?"
மேகங்கள் சிரித்துக்கொண்டு பதிலளித்தது, "உன் மேல் தான்!
அந்தக் கணத்தில் ஒரு ஆழ்ந்த உணர்வு தோன்றியது: எங்கே சென்றாலும் கர்மா நம்மை தொடரும்.
நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ, நாம் செய்ததை நாமே அனுபவிக்க நேரிடும்.
அதனால் நன்மை செய்யுங்கள், நல்லவர்களாக இருங்கள்.
இதுவே கர்மாவின் உண்மையான சாரம்!
The country's first Brahmin Bhavan to be inaugurated in Delhi on the auspicious occasion of Gudi Padwa and YouTube channel of Akhil Bharatiya Brahman Mahasangh (ABBM) being launched
ABBM has decided to set up Brahmin Bhavans in major cities of India. The first Brahmin Bhavan will be operational in the country's capital Delhi from Gudi Padwa.
There will be good accommodation facilities for the members of the Brahmin community coming to the capital of India from all over the country. This building will include,
• Career Guidance Center,
• Hostel for students,
• Meeting Hall
• ABBM's central office.
Pure Brahmin vegetarian food will be provided here. A banquet hall with a seating capacity of 300 people will be available for organizing conferences, meetings and get-togethers. The Brahmin community from all over the country will be able to hold their programs in Delhi.
ABBM has proposed to build such Brahmin Bhavans in Pune, Mumbai, Bengaluru, Varanasi and Ayodhya in the near future.
Founded by Dr. Govindji Kulkarni in 2007, ABBM is a national level organization working through its 32 different sections (cells) and is touching almost every aspect of the society.
With the aim of bringing all Brahmin industrialists and social leaders on one platform, ABBM has established a national platform called 'Brahmodyog Foundation'. It's a unique platform of visionary Brahmins who are committed to shaping the future of society. Brahmodyog National Conferences were successfully organized in Aurangabad, Pune and Delhi.
ABBM through Brahmodyog Foundation is working in six areas for the upliftment of the last segment of our society.
The future work of the organization is
1. Construction of Brahmin Bhavans and Hostels in selected metropolitan cities
2. Construction of Vocational Training Centers
3. Preparation Training for UPSC Examinations
4. Entrepreneurship Development:-Self-reliant Brahmin Project
5. Establishment of Veda Pathshalas and Gaushalas and providing assistance to them
6. Scholarships for Education to Brahmin Students
Affordable accommodation is a big problem for students from rural areas in big cities. This deprives deserving students of quality education. Therefore, it is planning to construct hostels for Brahmin students at very low fees. The buildings will be rented for this purpose. These hostels will accommodate about 500 students.
Along with this, now the Brahmin community's official YouTube channel will also be launched on the auspicious occasion of Gudi Padwa. Through this channel, the official response and opinion of ABBM will be conveyed. Along with this, interviews and guidance from dignitaries from various fields will be provided.
Congratulations to this first Brahmin Bhavan and the YouTube channel of ABBM.
contact no: 9840331427
பரீட்சை ஹாலில் மாணவன் ஒருவனது பேப்பர் மேல் தற்செயலாக ஆசிரியரின் பார்வை பட்டது.
டேய் எழுந்திருடா....
என்னடா இது?
பிள்ளையார் சுழி போடற இடத்துல திமுக துணைன்னு
எழுதி வைச்சிருக்கே.?
ஆமா சார் திமுக துணைதான்....
திமுக துணையா?
அறிவு கெட்டவனே....
கட்சி பெயரை எல்லாம் பரிட்சையில் எழுதினால் நீ உருப்படுவியாடா...
எதுக்குடா எழுதினே....?
"சார் நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க....
திமுக துணைங்கிறது
பிள்ளையார் சுழிதான். வேணும்னா என் தம்பி பேப்பரை பாருங்க...
ஓஹோ... உன் தம்பி வேற எழுதியிருக்கானா...
யாருடா
இவன் தம்பி .....?
கொண்டாடா உன் பேப்பரை.....
அடேய் ...நீ என்னடா
அ தி மு க துணை🙏🏻 ன்னு எழுதி வெச்சிருக்கே?
இதுவும் பிள்ளையார்
சுழிதான் ஐயா..
ஐயா கொய்யான்னா
பல்லை உடைப்பேன்....
ஒழுங்கா கட்சி பெயரை அழிச்சிட்டு
எக்ஸாம் எழுத போறீங்களா .
இல்லை வெளியே
அனுப்பட்டுமா?
"சார் நீங்க ரொம்ப பதட்டப்படறீங்க...
முழுசா கேட்டீங்கன்னா
கையெடுத்து கும்பிடு வீங்க.."
யாரு..... நான் ...?.
முதல்ல முழுசா நீ சொல்லு அப்புறம் பார்க்கலாம் கையெடுக்கிறதையும் கழுத்தை பிடிச்சு தள்றதையும்.. .
சார்..
திமுக துணை என்றால்
திருச்செந்தூர்
முருக
கடவுள்
துணை.....
என்னடா சொல்ற....!
கும்பிடுகிற பேரா இருக்கே..
நாமதான் தப்புபண்ணிட்டோமோ
தெரியலையே....
ஐயா...அதிமுக...
நீ என்ன சொல்லப்போறேன்னு
தெரியலையே....ராசா.
"ஐயா அமைதி.
நாங்கள் இருவரும் சகோதர்கள்.
தவிர ஒரு வீட்டுக்குள்
இரண்டு கடவுளை துதிப்பது சரியாகாது
என்பதால் ஒருமுகமாகவே இருக்கிறோம்
"சஸ்பென்ஸ் வைக்காமல் தயவு செய்து அ தி மு க விற்கு விளக்கம் சொல்லுங்கள் ஐயா..."
"புரிய வில்லையா!
அருள்மிகு
தி ருச்செந்தூர்
முருக
கடவுள் துணை."
ஐயோ.... கைகள் என்னையறியாமல்
கும்பிடுகின்றனவே....
முருகா......என்னை இனி
ம தி மு க துணை
என்று சொல்ல வைத்துவிட்டாயே....
சார் ....என்ன சொல்றீங்க.?
ம தி மு க துணை யா?
ஆமாப்பா ஆமாம்!
ம தி மு க துணைதான்
முழுசா சொல்றேன் கேளுங்க மாணவ மணிகளே.....
ம னம் திருந்திய எனக்கு முருகனே கடைசிவரை துணைஎன்பதை சுருக்கி
ம தி மு க துணை என்று சொன்னேன் பாலகர்களே.....
சுமார் ஐந்து லட்சம் வசனங்களைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!
நீங்கள் பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி,
நீங்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி,
நீங்கள் உங்கள் நாட்டில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி,
சுருக்கமாக, ஆற்றியுள்ள மனிதராக நாம் இருப்பதால், கீழே உள்ள [மகாபாரதத்திலிருந்து எடுத்து தொகுத்த..., மதிப்பு மிக்க] "9 முத்தான கருத்துகளை" படித்து புரிந்து கொள்வோம்; முடிந்தவரை, நம் வாழ்வில், கடைபிடிப்போம்.!!!
1. உங்கள் குழந்தைகளின் நியாயமற்ற கோரிக்கைகள் மற்றும் ஆசைகளை நீங்கள் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், நீங்கள் வாழ்க்கையில் ஆதரவற்றவர்களாகிவிடுவீர்கள்... "கௌரவர்கள்"
2. நீங்கள் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், அநீதியை ஆதரித்தால், உங்கள் பலம், ஆயுதங்கள், திறமைகள், ஆசிகள் அனைத்தும் பயனற்றதாகிவிடும்... "கர்ணன்"
3. உங்கள் பிள்ளைகள் தங்கள் அறிவை தவறாகப் பயன்படுத்தி மொத்த அழிவை ஏற்படுத்தும் அளவுக்கு அலட்சியம் செய்யாதீர்கள்... "அஸ்வத்தாமா"
4. “அறமற்ற அநியாயக்காரர்களிடம் ... அதிகாரத்திற்கு பணிந்து ஏற்க வேண்டும்” என்பதற்க்காக, எது போன்ற வாக்குறுதிகளையும் ஒருபோதும் கொடுக்காதீர்கள்..
"பீஷ்ம பிதாமஹர்"
5. செல்வம், பதவி, அதிகாரம் மற்றும் தவறு செய்பவர்களின் ஆதரவு ஆகியவற்றின் துஷ்பிரயோகம் இறுதியில் மொத்த அழிவுக்கு வழிவகுக்கிறது... "துரியோதனன்"
6. ஒரு குருடனிடம் அதிகாரக் கடிவாளத்தை ஒருபோதும் ஒப்படைக்காதீர்கள் !! [அதாவது சுயநலம், செல்வம், பெருமை, அறிவு, பற்று அல்லது காமத்தால் குருடனாக இருப்பவர்], அது அழிவுக்கு வழி வகுக்கும்... "திரிதராஷ்டிரன்"
7. அறிவுடன் ஞானமும் இறைவன் துணையும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்."அர்ஜுனன்".
8. வஞ்சகமும் , சூதும் உங்களை எல்லா நேரங்களிலும் எல்லா விஷயங்களிலும் வெற்றிக்கு அழைத்துச் செல்லாது... "சகுனி"
9. நீங்கள் நெறிமுறைகள், நீதி மற்றும் கடமையை வெற்றிகரமாக நிலைநிறுத்தினால், உலகில் எந்த சக்தியும் உங்களைத் தீங்கு செய்யாது... "யுதிஷ்டிரர்"
இந்த கட்டுரை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
வெந்த சோத்த திங்கணும், விதி முடிஞ்சா சாகணும்.
ஒரு ப்ராம்ஹணரின் அங்கலாய்ப்பு..........Just a fun post !
எம்பாட்டுக்கு நன்னா சாப்ட்டு நன்னா தூங்கிண்டு ராமா க்ருஷ்ணான்னு நன்னா போய்ண்ட்ருந்த லைஃப்ல ஹெல்த்த பத்தி சொல்றேன்னு ஆளாளுக்கு கிளம்பி எல்லாரும் அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சா பாருங்கோ....அன்னிக்கு பிடிச்ச சனி..சனியன் தான்...
ஏழரை நாட்டு சனியாவது மனுஷாளுக்கு ஆயிஸ்ல 3 தரத்க்கு மேல வரவேமாட்டான், அப்படியே மூணு தரம் வந்தாலும் எழரை வருஷம் முடிஞ்சு போய்ட்டு முப்பது வருஷம் கழிச்சுதான் திரும்ப வருவன்.
ஜலதோஷமும் மூணே நாள் தான்.
ஆனா இந்த ஹெல்த் அட்வைஸ்ங்கிற பேர்ல ஆளாளுக்கு அடிக்கற கூத்து இருக்கே..... அப்பாப்பா அது ஆய்ஸ்ஸுக்கும் அக்கப்போர்தான் போங்கோ...
ஒரு நா, பொழுது விடிஞ்சா அடையற வரைக்கும் நான் படற கஷ்டம் நாய்கூடப் படாது, (இதுவும் ப்டாதுதான்)... போங்கோ... நன்னா தெரிஞ்சுக்கோங்கோ...
சரி..கொஞ்சம் கேக்கறேளா, ரொம்ப தேங்க்ஸ்.
சரி, சொல்றேன் *சிரிக்காம கேளுங்கோ*, சரியா.
விடிகார்த்தாலே எழுந்தோடனே வெறும் வயத்லே முதல்ல ஒரு டம்ளர் ஜலம் குடிக்கணும்னு சொன்னா... சரி..குடிச்சேன்...அப்றம், இல்லே ரெண்டு டம்ளர் வெந்நீர் தான் குடிக்கணும்னா...சரி..குடிச்சேன்...அப்றம், இல்லை வெறும் வெந்நீர் இல்லை.. அதிலே அரைமூடி எலுமிச்சம்பழத்தை பிழிஞ்சு, ரெண்டு சொட்டு தேன் விட்டு குடிக்கணும்னா...சரி..குடிச்சேன்...அப்றம், அதிலே ஒரு துண்டு இஞ்சிய கொஞ்சம் தட்டி போட்டு குடிச்சா ரொம்ப நல்லதுன்னா... சரி...குடிச்சேன்...ஆக இப்போ கார்த்தால நான் ஜலம் குடிக்கறதையே நிறுத்தியாச்சு ..போங்கோ.
இது ஆச்சா - அப்றம் வாக்கிங் போகலாம்னு பார்த்தா.... முதலேயே வேகமா நடக்கப்டாது... மெதுவா நடந்து.. அப்புறம் வேகத்தை கூட்டி 🤔 மறுபடியும் முடிக்கறச்சே மொள்ள மொள்ள மொள்ள (டவர்லேர்ந்து ஒரு மணிக்கு ஒரு தரம் ஊர் முழுக்க கேக்றமாதிரி சங்கு ஊதரமாதிரி ) நடக்கணும்னா... சரி நடந்தேன்....வெறும் வாக்கிங்பண்ணா போறாது... எட்டு போட்டு நடக்கச்சொன்னா..சரி.. நடந்தேன்...அதனாலே பலன் பல மடங்கு பெருகும்ன்னு சொல்லி ஒழுங்கா நேரா நடந்துண்டு இருந்தவனை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி எப்போதும் எட்டுப் போட்டு தலை சுத்த வெச்சு....இப்போ எப்போ எங்கே நடந்தாலும் எட்டுக் கால் பூச்சி மாதிரி வட்ட வட்டமா வளைஞ்சு நெளிஞ்சு நடக்கறதே வழக்கமாயி....அப்றம் எல்லாரும் கேலி பண்ணி... அதனால வாக்கிங்க்கும் ஒரு ஃபுல் ஸ்டாப் வச்சாச்சு...
இது ஆச்சா - காபி, டீ, தொடப்டாதாம்.. பால் நிறைய சேர்த்துக்கப்டா டாதாம்..நாம ஆரோக்யமா, ஆயுஸோட இருக்கணும்னா கண்ராவி கசப்பா கடுங்காஃபியோ, இல்ல க்ரீன் டீயோ, *சக்கரையே போடாம* குடிக்கலாமாம், அதுக்கு நான் வெறுமனே இருந்த்ருவேன்...
அப்புறம் ப்ரேக்பா ஃஸ்ட் இட்லி தோசை, ப்டாது. ப்ரவுன் பிரட், கார்ன் பிளாஃஸ் தான் பெஸ்ட்.. பொங்கல் மாதிரி ஹெவியா சாப்டப்டாது... பூரி படாது..
இன்னும் ஏதேதோ ப்டாது ப்டாதுன்னு சொல்லிச் சொல்லியே அந்த அல்ப ப்ரேக்பா ஃஸ்ட்க்கும் அல்பாயுஸுல சடன் ப்ரேக் போட்டு நிறுத்தியாச்சு ..
ஆச்சா...இப்போ மத்யான போஜனம். நிறைய சாதம் சாப்டாதைக்கு அரைகுறையா வேக வெச்ச கறிகாய், கீரை இல்லேன்னா மைல்டா பொரித்த கூட்டு, அதிகமா உப்பு, புளி, காரம், எண்ணெய் சேர்க்காம நிறைய சூப், "வெஜ்டபிள் ஸலாட்" சேர்த்துக்கலாம்னு சொன்னா சரி... அப்படியே செய்தேன்... உருளக்ழங்கு ,வாழக்கா, சேனை, சேம்பு, ன்னு பூமிக்கு அடியில விளையற எந்த வஸ்த்வுமே ப்டாதாம்... 🤔.. தயிர் அதுவும் கெட்டியா ப்டாதவே ப்டாதாம்... ஐஸ் வாட்டர் ப்டாதாம்...
ஆச்சா, சரி சாயங்காலம் ஏதாவது "ஸ்நாக்ஸ்" சாப்டலாம்னா எல்லாருக்கும் பிடிச்ச கேசரி, பஜ்ஜி, போண்டா, ஆம/உளுந்து வடை வகைறா, முறுக்கு, தட்டை, உப்பு சீடை, தேங்குழல், ரிப்பன் பகோடா, அதிரசம், திராட்டுப்பால், அல்வா, வெல்லச்சீடை, "திருநவேலி தென்னமரவேர் பெரிய" மனோகரம், "பழைய மொறு மொறு மைசூர்ப்பா" (கோயமுத்தூர் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ப்ராண்ட் காபிரைட் மொளகாப்டி எண்ணெய் கொழச்சா மாதிரி இருக்ற பல்லில்லாதவா சாப்டற மைசூர்ப்பா இல்ல ), திருநவேலி "கடலப்பருப்பு மாலாடு" (பொட்டு/பொரி கடலை மாவு இல்லை), பூந்தி லட்டு, குஞ்சாலாடு, குலாப் ஜாமூன், ஜாங்ரி, ரஸகுல்லா, எள்ளுருண்டை, மோதகம், உப்மா, உப்மா கொழக்கட்டை இத்யாதி, கடலைமாவு, எண்ணெய் பக்ஷண ஸமாசாரமெல்லாம் ப்டாதாம். கலர் கலரா வித விதமான பழங்களை அழகா நறுக்கி ஒரு பெரிய பௌல்ல வெச்சிண்டு, கொரங்கு, அணில், கிளி மாதிரி கொறிச்சு, ரசிச்சு ருசிச்சு, கொஞ்ச கொஞ்சமா கொஞ்சி கொஞ்சி சாப்பிடணுமாம்... எப்டியிருக்கு?... உப்பு போடாம அல்லது ரொம்ப கொஞ்சமா போட்டு சுண்டல் வேணா திங்கலாமாம்.
ஆகமொத்தம் ஸாயங்கால நொறுக்குத்தீனிக்கும் "கோவிந்தா கோவிந்தா" போட்டாச்சு.. திருப்தியாச்சா ...
அப்றம்,... ராத்ரி ரொம்ப பசிச்சா மட்டும் ஏதாவது லைட்டா சாப்டலாமாம்.. அதுவும் சாதம் ப்டாதவே ப்டாதாம்.. ஓய். (Not why ஓய்) சரியாப்போச்சுங்காணும்... போனாப்போறது வேணுமானா ரெண்டு சுக்கா ரொட்டி, "தால்ல" (பருப்பு) முக்கி முக்கி சாப்டலாமாம்... எப்படியிருக்கு?.
அப்றம்,....ராத்ரி பால் குடிக்கப்டாதாம்.. வேணும்னா ஒரு டம்ளர் வெந்நீர்/வெண்ணை எடுத்த மோர் குடிக்கலாமாம் எப்டியிருக்கு?
அதுக்கப்றம் தூங்றதுக்கும் தடா..
இடது பக்கம் தான் ஒருக்கிளுச்சு படுக்கணும்... அப்போதான் இதயம் இயல்பா இருக்கும்னு சொன்னா.. சரி.. படுத்தேன்...
அப்றம் வலது பக்கம் ஒருக்கிளுச்சு படுத்தாத்தான் கொழுப்பு ஜீரணமாகும்னு சொன்னா..சரி.. படுத்தேன்...
அப்றம்,... மல்லாக்கா படு அப்போதான் பார்கின்சன், அல்சைமர் எல்லாம் வராதுன்னா...சரி.. படுத்தேன்...
இல்லேயில்லே குப்ற படுத்தால்தான் நல்லது.. தொப்பை வராது.. ஒபிசிட்டி வராதுன்னு சொன்னா.. சரி.... படுத்தேன்.
ஆக மொத்தம் ஆறு மணிநேர அரகுற தூக்கமும் அப்படியே அம்போன்னு போயே போச்சு.
அடேய்ய்...! அடங்குங்கடா எல்லாரும்...
இப்படி எதுவுமே சாப்டாம ஆரோக்யமா ஆய்ஸோட இருந்து ஒண்ணும் கிழிக்க வேணாம்.
வெந்த சோத்த திங்கணும், விதி முடிஞ்சா சாகணும்ன்னு எனக்கு பிடிச்சதை எப்பவேணா, எவ்ளவு வேணா சாப்ட்டு.. சந்தோஷமா எப்போதும் போல 'ஜாலிலோ ஜிம்கானா' ன்னு ப்ரிய கானன சஞ்சரனா* தின்னு கெட்டானே திருநவேலிப்பாப் னேன்னு (எனக்குப் (பிடித்த பாட்டை பாடிக்கொண்டு திரிபவன் என்று ப்ரிய கானன சஞ்சரனுக்கு தமிழ்ல நேர் அர்த்தம்) பாடிண்டு போயிண்டே இருக்கேன்டாப்பா ..
போடா போ போக்கத்தவா...!
நீயும் உன்னோட உருப்படாத ஹெல்த் அட்வைஸும் யாருக்கு வேணும்?....
ராமராம🙏 ராமராம🙏 ராமராம 🙏
வெற்றி பெறச் சொல்ல வேண்டிய மூன்று ரதங்களின் பெயர்கள்
மூன்று ரதங்களின் பெயர்கள்
அம்பாளைப் பற்றிய சகல விவரங்களையும் லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் 1000 நாமங்கள் தருகின்றன.
அதில் மூன்று ரதங்களின் பெயரைச் சொன்னாலேயே நமக்கு வெற்றி கிடைக்கும் என்கின்ற ரகசிய செய்தி ஒன்றும் உண்டு.
யாருடைய ரதங்கள் அந்த மூன்று?
அம்பாள், மந்த்ரிணீ மற்றும் வாராஹீ.
அம்பாளுடைய ரதம்- சக்ரராஜ ரதம்.
மந்த்ரிணீயுடைய ரதம் - கேய சக்ர ரதம்
வாராஹியினுடைய ரதம் - கிரி சக்ர ரதம்.
இந்த மூன்று ரதங்களின் பெயரைச் சொன்னாலேயே சொன்னவருக்கு வெற்றி தான்! கேட்டாலும் கேட்டவருக்கு வெற்றியே!
சக்ரராஜ ரதோயத்ர தத்ர கேய ரதோத்தம: |
யத்ர கேய ரதஸ் தத்ர கிரி சக்ர ரதோத்தம: ||
ஏதத் ரத த்ரயம் தத்ர த்ரை லோக்யமிவ ஜங்கமம் |||
ஸம்பத்கரீ
66வது நாமமாக ஸஹஸ்ர நாமத்தில் வருவது இது:
ஸம்பத்கரீ சமாரூட சிந்துவ்ரஜ சேவிதா
இதன் பொருள்:
ஸம்பத்கரீ தேவியின் ஆக்ஞைக்கு உட்பட்ட யானைகளின் கூட்டத்தால் வணங்கப்படுபவள்.
ஸம்பத்கரீ தேவியானவள் அம்பாளின் சதுரங்க சேனை பலத்தில் யானை சைன்யத்திற்கு அதிகாரி.
அம்பாளின் ஆயுதங்களில் அங்குசத்திலிருந்து உருவானவள் இவ்ள்.
ஸம்பத்கரியின் வாகனமான யானைக்கு ரணகோலாஹலம் என்று பெயர்.
சுகசம்பத்யமான சித்த விருத்திக்கு ‘ஸம்பத்கரீ’ என்று பெயர்.
அதற்கு ஆதாரமான சப்தாதி விஷயங்களை யானைகளுக்கு சமமாக சொல்லப்பட்டிருக்கிறது. அவைகளால் வணங்கப்படுபவள் என்பது பொருள்.
சுக சம்பத்கரீ என்றால் என்ன?
ஞானம் (அறிவு) ஞாத்ரு (அறிகின்றவன்), ஞேயம் (அறியப்படும் பொருள்)
ஆகிய இந்த மூன்றுக்கும் த்ரிபுடீ என்று பெயர்.
இந்த மூன்றின் வித்தியாசங்களைத் தெரிந்து கொண்டு அவற்றை சம்பந்தப்படுத்தும் ஞான ரூபமான சித்தவிருத்திக்கு ‘‘சுக சம்பத்கரீ’ என்று பெயர்.
அஸ்வாரூடா
67வது நாமமாக வருவது இது:
அஸ்வாரூடாதிஷ்டிதாச்வ கோடி கோடிபிராவ்ருதா
அஸ்வாரூடா தேவியின் ஆக்ஞைக்கு உட்பட்ட கோடி கோடிக் கணக்கான குதிரைகளைக் கொண்டவள்.
அம்பாளுடைய சதுரங்க சேனா பலத்தில் அஸ்வாரூடா தேவி குதிரை சைனியங்களுக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டவள்.
அம்பாளுடைய ஆயுதங்களில் பாசத்திலிருந்து ஆவிர்பவித்ததால் அஸ்வாரூடா தேவியின் குதிரைக்கு அபராஜிதம் என்று பெயர்.
மந்த்ரிணீ, தண்டிணீ
அம்பாளுடைய சக்திகளில் மிக முக்கியமாக அருகிலேயே இருப்பவர்கள் இருவர்.
1) மந்த்ரிணீ
2) தண்டிணீ
மந்த்ரிணீ, தண்டிணீயைத் தாண்டி அவர்கள் உத்தரவு இல்லாமல் யாரும் அம்பாளை அணுக முடியாது.
இவர்களே மிக முக்கியமானவர்கள்.
ஸம்பத்கரீ, அஸ்வாரூடா போன்றவர்கள் இவர்களுக்கு உட்பட்டுத்தான் இருப்பர்.
இந்த இருவரும் எப்போதும் அம்பாளின் சந்நிதியில் இருப்பதாகவும் அம்பாளின் சேவையில் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மந்த்ரிணீ தேவதை அம்பாளுக்கு பிரதான மந்திரி ஸ்தானம் வகிப்பவர். சங்கீதத்திற்கு அதிஷ்டான தேவதை ராஜ ச்யாமலை மற்றும் ஸங்கீத ச்யாமலை என்று பெயர்.
மந்த்ரிணீயிடம் அம்பாள் தனது ராஜ்ய பொறுப்பு அனைத்தையும் தந்து விட்டதாக 786வது நாமத்தின் மூலமாக நாம் அறிய முடிகிறது. (மந்த்ர்ணீ ந்யஸ்த ராஜ்ய தூ:- 786)
சக்ரராஜ ரதம்
சக்ரராஜ ரதாரூட ஸ்ர்வாயுத பரிஷ்க்ருதா (68வது நாமம்)
இதன் பொருள்:
சக்ரராஜ ரதத்தில் ஆரூடமாயிருக்கும்படியான சம்ஸ்த ஆயுதங்களினால் அலங்கரிக்கப்பட்டவள்.
யுத்த காலத்தில் தேவிக்கு சமீபத்தில் சகல விதமான ஆயுதங்களும் சக்ர ராஜ ரதத்தில் தயாராக வைக்கப்பட்டிருக்கும்.
அம்பாளின் ரதத்தின் கொடிக்கு ‘ஆனந்த த்வஜம்’ என்று பெயர்.
இந்த ரதத்திற்கு 9 தட்டு உண்டு. 10 யோஜனை உயரம், 4 யோஜனை அகலம் கொண்ட ரதம் இது.
சக்ர ராஜ ரதம் என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு. அதாவது இதுவே ஶ்ரீ சக்கரம் ஆகும்.
ஶ்ரீ சக்கரத்திலும் 9 பீரிவுகள் உண்டு.
1) த்ரைலோக்ய மோஹனம்
2) சர்வாசா பரிபூரகம்
3) சர்வசம்சேக்ஷாபணம்
4) சர்வ சௌபாக்யதாயகம்
5) சர்வார்த்தசாதகம்
6) சர்வரக்ஷாகரம்
7) சர்வரோகஹரம்
8) சர்வஸித்திப்ரதம்
9) சர்வானந்தமயம்
ஶ்ரீ சக்கரத்தில் உள்ள பிந்துவே அம்பாளின் இருப்பிடம்.
இதில் இருக்கும் ஆயுதங்கள் ஆத்ம ஞானம் அடைவதற்கான சாதனங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.
ஆதமஞானம் அடைவது நிச்சயம். சக்தரஸித்தி ஏற்படுகிறது. அதுவே யோகம் என்று கூறப்படுகிறது.
சக்ர ராஜம் என்பது ஆறு அதாவது ஷட் சக்கரங்களை, ரத - ஆதாரமாகக் கொண்டது சக்ர ராஜ ரதம்.
இதை சக்ரேசத்வம் என்றும் கூறுவர்.
சகல ஆயுதங்களையும் கொண்டு அந்த ஷட் சக்கரங்களை அடக்க முடியும். இதை சுத்த வித்யா என்று கூறுவர்.
கேய சக்ர ரதம்
அடுத்து 69வது நாமம் இது:
கேய சக்ர ரதாரூட மந்த்ரிணீ பரிஸேவிதா
இதன் பொருள்:
கேய சக்ரம் என்ற ரதத்தில் ஆரோஹணம் செய்திருக்கும் மந்த்ரிணீ தேவியால் வலம் வந்து சேவிக்கப்பட்டவள்.
இந்த ரதத்திற்கு 7 தட்டுகள் உண்டு.
கேய - பிரசித்தமான
சக்ர - சக்கரத்தை உடைய
ரதம் - ரதமான சூர்ய மண்டலம்
இதில் ஆரூடர்களாக இருக்கும்படியான மந்த்ரிணீ ஶ்ரீ வித்யா உபாசகர்களால் வணங்கப்படுபவள்.
இன்னொரு பொருள்
கேய - முக்கியமான
சக்ர ரதா - சக்ராகாரமான ரதத்தில் வீற்றிருக்கும் அம்பாளை
ஆரூட - புத்தியில் அநுசந்தானம் செய்யும்
மந்த்ரிணீ - மந்திர சித்தி உடையவர்களால் வணங்கப்படுபவள்.
கிரி சக்ர ரதம்
அடுத்த 70வது நாமம் கிரி சக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா
இதன் பொருள்:
கிரி சக்ரம் என்கின்ற ரதத்தில் ஆரோஹணம் செய்திருக்கும் தண்டநாதையை முன்னிட்டிருப்பவள்.
கிரி என்றால் வராஹம் என்று பொருள். தண்டநாதையின் ரதம் வராஹ வடிவத்தில் இருப்பதால் அதற்கு கிரி சக்ர ரதம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.
வாராஹிக்கு தண்டநாதை என்று பெயர்.
கிரி - கிரணங்கள் அதாவது சிருஷ்டி, ஸ்திதி, லயம் ஆகியவற்றின்
சக்ரம் - சமூகமாகிய ரதத்தில்
ஆரூட - ஏறி இருந்தவளாக இருப்பினும்
தண்டநாத - யமனால்
அபரஸ்க்ருதா - ஸ்வாதீனம் செய்யப்படாதவள்.
அதாவது ஒரு யோகியானவன் சிருஷ்டி, ஸ்திதி, லயம் ஆகியவற்றில் அகப்பட்டிருந்தாலும் கூட அவன் யம வாதனைக்கு உட்பட்டவன் அல்ல என்பது பொருள்.
வெற்றிக்கு வழி ::
அம்பாளின் ரதம் மற்றும் முக்கிய இரு தேவதைகளின் ரதம் ஆகியவற்றின் பெயரை தினமும் கூறுவோம்; வெற்றியைப் பெறுவோம்.
மேற்கண்ட வியாக்யானங்கள் திரு ஜி.வி.கணேச ஐயர் அவர்களால் ஆர்யதர்மம் பத்திரிகையில் எழுதப்பட்டவை.
லலிதா சஹஸ்ரநாமத்தை பாஸ்கரராயரின் பாஷ்யத்திற்கு இணங்க அவர் அற்புதமாக விரிவுரை ஒன்றை ஆயிரம் நாமங்களுக்கும் எழுதினார்.
இது 1938ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி புத்தகமாக வெளி வந்தது.
அதில் தரப்பட்ட விளக்கத்தையே இந்தக் கட்டுரை மாறுதலின்றி தற்கால நடையில் தருகிறது. ஶ்ரீ ஜி.வி. கணேச ஐயருக்கு நமது அஞ்சலியும் நன்றியும் உரித்தாகுக!
வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் தகப்பனார் வேளுக்குடி வரதாச்சாரியரும் மிகச் சிறந்த வைஷ்ணவப் பேரறிஞர். இந்தியாவில் இவரது சொற்பொழிவு நடக்காத ஊரே இல்லை.
இவரிடம் ஒரு விசேஷம்... என்ன பேச வேண்டும் என்று முன்கூட்டியே தலைப்பு கொடுக்க வேண்டிய அவசியமில்லை இவருக்கு.
அந்தச் சமயத்தில் என்ன தலைப்பு கொடுக்கிறார்களோ, அதற்கேற்பச் சரளமாகவும், விஷய ஞானத்துடனும் சுவையாகப் பேசி அசத்துவதில் மன்னனாகத் திகழ்ந்தார் இவர். அத்தனைப் பாண்டித்யம்!
ஒரு முறை, "இப்போது வேளுக்குடி வரதாச்சாரியர் ஸ்வாமி அவர்கள், 'மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்' என்பது பற்றிப் பேசுவார்கள்" என்று ஒரு மேடையில் எகிடுதகிடாக அறிவித்துச் சிக்கலில் மாட்டிவிட்டார் நிகழ்ச்சி அறிவிப்பாளர்.
ஆனாலும், அசரவில்லை வரதாச்சாரியர். மடை திறந்தது போல், அதே தலைப்பிலேயே சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.
"தலையை மொட்டை அடித்துக் கொள்வது எதற்குத் தெரியுமா? நான் துளியும் அகங்காரம் இல்லாதவன் என்று காண்பிப்பதற்காகத்தான். ஒருவன் ஒரு பந்தயத்தில் தோற்று விட்டால் மொட்டையடித்துக் கொள்வான். இவன் அவனிடத்தில் தோற்று விட்டான் என்பதற்கான அடையாளம் அது.
திருப்பதிக்குச் சென்று மொட்டையடித்துக் கொள்கிறார்களே, எதற்கு? ‘என் அகங்காரம் அழிந்து விட்டது. நான் உனக்கு அடிமைப் பட்டவன்’ என்று பகவானிடம் தெரிவிப்பதற்கு.
அப்படிச் செய்து விட்டானானால், அவனுக்குப் பிறவிப் பெருங்கடல் முழங்கால் அளவுக்கு வற்றிவிடும். இதைத் தெரிவிக்கத்தான்,
திருப்பதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீனிவாசன், வலது திருக் கரத்தால் தனது வலது திருவடிகளைச் சுட்டிக் காட்டி, ‘அகங்காரம் அற்றவனாக எனது திருவடிகளில் விழு’ என்றும், இடது திருக் கரத்தால் தனது முழங்காலைத் தொட்டு, ‘நீ அப்படிச் செய்தால், உனது பிறவியாகிய கடல் முழங்கால் அளவுக்கு வற்றி விடும்’ என்றும் குறிப்பால் உணர்த்துகிறார்...’ என்கிற ரீதியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கி விட்டார்.
இப்படி ஓர் அசாத்தியத் திறமை இருந்ததால்தான், அவருக்கு ‘வாகம்ருத வர்ஷீ’ (சொல் அமுதக் கடல்) என்கிற பட்டம் கிடைத்தது.
நம்மாழ்வார் பிறந்த தலமான ஆழ்வார் திருநகரியில், அவர் அருளிச் செய்த திருவாய்மொழியின் 1000 பாடல்களைப் பற்றியும் தொடர்ந்து ஒரு வருட காலத்துக்கு உபன்யாசம் செய்துள்ளார் வரதாச்சாரியர்.
இது ஒரு சாதனை!
இதிலேயே இன்னொரு சாதனையையும் செய்தார் அவர். ஒரே நாளில் இடைவிடாமல் 24 மணி நேரத்துக்கு, திருவாய்மொழியின் பொருளை உபதேசித்தார். அப்போது அவருக்கு வயது 60.
சொற்பொழிவின் இடையே, விடியற்காலை 3 மணிக்கு, வயதின் காரணமாக அவருக்குச் சற்றே தளர்ச்சி ஏற்பட்டது. ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உபன்யாசம் செய்து கொண்டு இருந்தார். மேலே தொடர முடியாமல், தொண்டை கட்டிக் கொண்டது. உடனே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் வரதாச்சாரியரைப் பரிசோதித்து விட்டு, ‘உபன்யாசத்தை உடனே நிறுத்திvவிடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்’ என்று அறிவுறுத்தினார்கள்.
ஆனாலும், அவர் அதைப் பொருட்படுத்தாமல், உபன்யாசத்தைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி காலை 6 மணிக்குதான் நிறைவு செய்தார்.
1991-ஆம் ஆண்டு, சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில், மார்கழி 30 நாட்களும் திருப்பாவை உபன்யாசம் செய்தார் வரதாச்சாரியர். அதை முடித்து விட்டு நேரே ஸ்ரீரங்கம் போனார். அங்கே ஸ்ரீ ரங்கநாதனுக்குத் திருவாராதனம் நடந்து கொண்டு இருந்தது. அதை ஒரு மணி நேரம் போல் கண்டு களித்து விட்டு, பிரசாதங்கள் பெற்றுக் கொண்டு, கோயிலைப் பிரதட்சணம் வந்தார். ஸ்ரீரங்கம் பரமபத வாசலை அடைந்த போது, மயங்கி விழுந்தவர்தான்; அப்படியே ஸ்ரீரங்கனின் திருவடிகளை அடைந்து விட்டார்.