Pages

Sunday, May 18, 2025

தாயுமானவர் சுவாமிகள்

தாயுமானவர் சுவாமிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

திருச்சிராப்பள்ளியில் விஜயரகுநாத மன்னரிடம், "தலைமை கருவூல அதிகாரியாக" பணிபுரிந்தவர் அவர். 

ஆன்மீகவாதியான அவர், தத்துவ பாடல்கள் பல பாடி உள்ளார். "தாமரையிலை தண்ணீராக" வாழ்ந்த ஒரு மகான் அவர்.    

ஒருநாள் மன்னரை காண, காஷ்மீரில் இருந்து ஒரு பண்டிதர் வந்தார். அவர் மன்னருக்கு ஒரு விலை உயர்ந்த, வேலைப்பாடு மிக்க, "சால்வை" ஒன்றை பரிசாக அளித்தார்.  மன்னரோ,  தாயுமானவருக்கு அதை பரிசாக வழங்கினார். 

அரண்மனையில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில், "பனிக்காலம்" என்பதால், குளிர் காற்று வீசியது. 

முதியவள் ஒருத்தி, குளிரில் நடுங்கியபடி, சாலையோரமாக அமர்ந்திருந்தாள். தனக்கு மன்னர் அளித்த சால்வையை, "அந்த முதியவளுக்கு" போர்த்திவிட்டு, வீட்டிற்கு சென்று விட்டார் தாயுமானவர்.  

அதைக்கண்ட சிலர், மன்னரிடம் சென்று, "விலைமதிப்பற்ற சால்வையை, தெருவோரத்தில் இருந்த முதியவளுக்கு கொடுத்துவிட்டார். அதுவும் "நீங்கள், அவருக்கு, "அன்பளிப்பாக" கொடுத்ததை இப்படி கொடுக்கலாமா? என புகார் கூறினர்.     

கோபம் கொண்ட மன்னர், உடனடியாக, தாயுமானவரை அழைத்து வர ஆள் அனுப்பினார். 

தாயுமானவர்தான் "ஞானி" ஆயிற்றே! 

நேரம் தவறிய நேரத்தில் "மன்னர்" அழைக்கும் போதே காரணத்தை புரிந்து கொண்டார். 

அன்று இரவு மன்னரை சந்தித்தார். "சால்வை எங்கே?" என நேரடியாக கேட்க முடியாது அல்லவா? 

ஆகவே, "சால்வையை குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் ரசித்தார்களா?" என மறைமுகமாகக் கேட்டார் மன்னர். 

அரண்மனையிலிருந்து வெளியே போனதும், அதை "திருவானைக்கா அகிலேண்டஸ்வரிக்கு  அர்ப்பணித்து விட்டேன்" என்றார் தாயுமானவர். 

மன்னர் திகைத்தாலும், "சரி. தங்களுடன் அர்த்த ஜாம தரிசனம் செய்ய விரும்புகிறேன். கோவிலுக்கு செல்வோமா? என்றார். 

தாயுமானவரும், தயக்கம் இன்றி, சம்மதித்தார். தேர் புறப்பட்டது. 

இருவரும் "திருவானைக்கா கோவிலுக்கு" சென்றனர். அம்மன் சன்னதி முன்னால் நின்றனர். 

தாயுமானவருக்கு அளித்த சால்வை, அம்மனின் திருமேனியை அலங்கரித்தது. சிலிர்த்து போய்த் தாயுமானவர் கால்களில் விழுந்தார் மன்னர்‌.            

ஆம் ஏழைத்தாயின் மீது போர்த்திய சால்வை, இங்கே எப்படி வந்தது? எல்லோருக்குள்ளும் கடவுளை காண்பவர்களுக்கு, இது ஒரு அதிசயமா என்ன?    

இல்லை அல்லவா!                 

No comments:

Post a Comment