Pages

Friday, June 20, 2025

சதாபிஷேகம்

எமதர்மனின் நான்கு பற்கள் ஆபத்தானவை. அவை உக்ர ரதம், ருத்ர ரதம், பீம ரதம், விஜய ரதம். ரதம்’ என்பது பல்லைக் குறிக்கும். இவை ஒவ்வொன்றினாலும் குறிப்பிட்ட வயதில் கண்டம் ஏற்படுவதால் ஆயுள் செய்வது அவசியம். 59 வது வயதில் உக்ரரத சாந்தி, 69ல் ருத்ரரத சாந்தி, 70 ல் பீமரத சாந்தி, 75ல் விஜயரத சாந்தி ஹோமம் செய்வர்....

"1. பீம சாந்தி = 55ஆவது வயது ஆரம்பம்.

2. உக்ரரத சாந்தி = 60ஆவது வயது ஆரம்பம்,

3. ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி = 61ஆவது வயது ஆரம்பம்.

4. பீமரத சாந்தி = 70ஆவது வயது ஆரம்பம்.

5. ரத சாந்தி = 72ஆவது வயது ஆரம்பம்.

6. விஜய சாந்தி = 78ஆவது வயது ஆரம்பம்.

7. சதாபிஷேகம் = 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்லநாளில்.

8. ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) = பௌத்ரனுக்கு புத்ரன் பிறந்தால்.

9. ம்ருத்யுஞ்ஜய சாந்தி = 85ஆவது முதல் 90க்குள்.

10. பூர்ணாபிஷேகம் = 100ஆவது வயதில் சுபதினத்தில்"

ஒருவருக்கு அறுபத்து ஒன்பது ஆண்டுகள் முடிந்து எழுபதாவது ஆண்டு தொடங்கும் பொழுது ஒரு ஆபத்து ஏற்படலாம். அதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டு, பிள்ளையின் மகனான பேரனது பிள்ளையை (ப்ரபௌத்ரனை) காண்பதற்காகவும், ஆயிரம் பூர்ண சந்திரனைக் கண்டு முடிப்பதற்காகவும், நூற்றாண்டு காலம் வாழ வேண்டும் என்பதற்காகவும் செய்யப்படும் சாந்தி ஹோமம் பீமரத சாந்தியாகும். இதில் மாங்கல்யதாரணம் விதிக்கப்படவில்லை. உக்ரர், பீமர் இவர்கள் ருத்ரமூர்த்திகள் ஆவர்.

எழுபத்தி எட்டாவது வயது தொடங்கும் பொழுது செய்யப்படுவது விஜயரதசாந்தி எனப்படும். இதனை செய்து கொள்வதால், ஒரு தசாப்தம் எனப்படுகிற ஒன்பது கிரகங்களின் முழுமையான காலதசையாகிய நூற்றிருபது ஆண்டுகள் நன்கு வாழ்வர் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

எழுபத்து எட்டாவது வயதில் செய்யப் பட்ட விஜயரத சாந்திக்குப் பிறகு- அதாவது எண்பது ஆண்டுகளைக் கடந்து மேலும் எட்டு மாதங்கள் முடியும் காலகட்டத்தில் செய்யக்கூடியது ஸஹஸ்ர சந்திர தரிசன சாந்தியாகும். இங்கு சிலர் பிறைச் சந்திரனைக் காண்பதாகக் கூறுகின்றனர். 

முழுநிலவு தினமான மாதப் பௌர்ணமியே கண்டு தியானித்து வழிபடத்தக்கது. எனவே முழுநிலவைக் காண்பதாக கணக்கிடுவதே சிறந்ததாகும். சிலர் அன்றே சதாபிஷேகம் செய்துகொள்கின்றனர்.

80 வயதுமுதல் 100 வயது வரையுள்ள காலகட்டத்தில், அத்தம்பதியை சிவன்- பார்வதியாகவே கண்டு, அவர்கள் தீட்சை பெறாதிருந்தாலும் கூட அதனை செய்து முடித்து, சிவசக்தி ஸ்வரூபமாகக் கருதி கலசநீரால் முழுக் காட்டி ஆசி பெறுவதே சதாபிஷேகம் எனப்படும். இது மற்றதைப்போல் சாந்தி வகை ஆகாது. சதாபிஷேகம் என்பது தம்பதிக்கு சிவனாரின் தகுதியை அங்கீகரித்து, சிவத்துவ சம்பாதக பட்டாபிஷேகமாக செய்யப் படுவதாகும்.

இத்தகைய வழிமுறைகளெல்லாம், மனிதன் வாழ்வாங்கு வாழ்ந்து பிறவிப் பயனை அடைவதற்காகவே வகுக்கப்பட்டுள்ளன என்பதை நாம் அறிய வேண்டும்.

No comments:

Post a Comment