நமது வாழ்நாளில் வைதீகாளை எத்தனை முறை அழைத்து தக்ஷிணை கொடுப்போம்? புண்யாஜனம், ஆயுஷ்ய ஹோமம், உபநயனம், கிரஹப்ரவேசம், கல்யாணம், சில வீடுகளில் திவசம் , ஏதோ சில பேரு வேத பாராயணம் , சுப ஹோமங்கள் வச்சுப்பா , இது அத்தனையும் எத்தனை வருட இடைவெளியில் வருது பார்த்தேளா, இதுக்கு நடுவுல நாம உழைச்சு உத்யோகத்துல முன்னேறி ஆயிரத்துலேந்து பல ஆயிரங்கள், சில பேர் லக்ஷம் கூட எட்டிப் புடிச்சுடறா சம்பாத்தியத்துல, namaku ltc. Hra. Medical ன்னு ஏகப்பட்ட perks , வருஷத்துல போனஸ், performance போனஸ் ன்னு வேற தர்றா, நாமளும் என்ன படிச்சோமோ அதை வச்சுண்டு அனுபவத்தை உபயோகிச்சு தான் மேலே மேலே வளர்றோம், one bhk, அப்பறம் two bhk, three bhk, nnu வீட்டை பெரிசா வாங்கிண்டே போறோம் , வில்லா கூட புக் பண்ணிடறோம், மாருதி கார்ல ஆரம்புச்சு லேட்டஸ்ட் மாடல் வரைக்கும் வாங்கி அனுபவிக்கிறோம், பிள்ளைகளை பல லக்ஷங்கள் கொட்டி படிக்க வைக்கிறோம், பெண்ணுக்கு அதிவிமரிசையா கல்யாணம் பண்றோம், நாம நம்மளோட emplaayerai fulla நம்பி வாழ்கிறோம், தவறே இல்லை , யதார்த்தம் அல்லவா? இந்த வைதீகாளுக்கு நாம தானே employer? அவாளுக்கு என்ன சௌகரியம் செய்து கொடுக்கிறோம்? நம்மளை நம்பித் தானே வேதம் படிச்சுட்டு வர்றா? அவாளுக்கும் குடும்பம் உண்டு, கடமைகள் உண்டு, ஆசைகளும் உண்டு, நியாயம் தானே,? ஒரு பிராமணன் தனது பூரா வாழ் நாள்ல வெகு சில முறையே அவர்களுக்கு தக்ஷிணை, சம்பாவனை பண்றோம், ஆனா என்ன எதிர்பார்கிறோம்னா அவா இன்னிக்கும் 100, 200 ருபாய் தான் வாங்கிக்கணும் 500ரூ கேடடுவிட்டால் கொள்ளை போய்ட்டா மாதிரி அங்கலாய்க்கிறோம், இது சரியா? Job guarantee இல்லாத வேலை. தற்போது காதல் கல்யாணம் அதிகம் ஆனதால் ரோம்ப பாதிக்க பட்டவா, உபநயனத்தைக் கல்யாணத் தோடு வைத்துக் கொள்வதால் அந்த வரவும் போச்சு, என்ன தான் பண்ணுவா ? ஓரு reference book வச்சுக்காம மணிப்ரவாளமா மந்திரத்தை சொல்ற அந்த ரிதம் , முடியுமா நம்மளால, எதுக்கு எடுத்தாலும் கூகுளை நம்பி வாழறோம், அவாளுக்கு எத்தனை ஞாபக சக்தி? பாராட்டறோமா எப்பவாவது? எத்தனை பேரு சத்தமா பேசிண்டே இருந்தாலும் தனது மந்திரம் உச்சாடனம் பிரேக் ஆகாம சொல்ற நேர்த்தி திறமை , அதைப் பாராட்டியே ஆகணும் இல்லியா? நம்மாத்து நல்லதுக்காக அவா காயத்ரி ஜெபிச்சு, ஒருவேளை சாப்பிட்டு, விடியக்காலை எழுந்து குளிச்சுட்டு ஓடி வர்ற கடமையுணர்வு, பாராட்டணும் இல்லியா? ஆனா நாம அவாளை எத்தனை துச்சமா மதிக்கிறோம்? அவா பணத்துக்கு ஆலா பறக்கிறா , ஏன் நாம பறக்கலியா? நம்மாத்து பெரியவாளுக்கு மேல் உலகத்துல நல்ல பதவி கிடைக்க அவா தானே வழி வகுக்கரா? நம்ம வாழ்க்கைல வைதீகாள் இல்லாத நிலைமையை யோசிச்சா புரியும் அவா நமக்கு எத்தனை ஒத்தாசை பண்ரான்னு. நாம ப்ராமணாளா இருந்துண்டு அவாளை அவமதிக்கிறது சரியா? வைதீகாளை நன்றியோடும் மரியாதை யோடும் ஆதரிக்க வேண்டும் என்பது எனது எண்ணம்.
No comments:
Post a Comment