Pages

Tuesday, November 24, 2020

ஸ்ரீதர ஐயாவாள்

ஆண்டுதோறும் திருவிசநல்லூர் ஐயாவாள் இல்லக் கேணியில், இன்றும் கங்கை பொங்கி வருவதைக் காணலாம்; நீராடலாம்.

கர்நாடக சமஸ்தானத்தில் திவானாகப் பணி புரிந்தவர் ஸ்ரீதர ஐயாவாள்.

இவர் தன் பதவி, சொத்துக்களைத் துறந்துவிட்டு தமிழக காவிரிக் கரையிலுள்ள திருவிசநல்லூரில் குடியமர்ந்துவிட்டார். தினமும் அருகேயுள்ள மத்யார்ஜூனமான திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை தரிசிப்பார்.

அர்த்தஜாம பூஜையும் காண்பார்.

சிவன்மேல் அபார பக்தி கொண்டவர்.

இவரது தந்தையார் மறைந்த திதி கார்த்திகை மாதத்தில் வரும்.

அத்தகைய ஒருநாளில் இவர் பிராமணர்களுக்கு சிரார்த்த சமையல் தயார்செய்ய ஏற்பாடு செய்துவிட்டு, காவிரியில் நீராடச்சென்றார்.

நீராடி இல்லம் திரும்பும்போது எதிரேவந்த வயதான ஏழை ஐயாவாளிடம், "சுவாமி, ரொம்ப பசிக்கிறது. ஏதாவது கொடுங்களேன் " என கேட்டார்.

அவர்மீது இரக்கம் கொண்ட ஐயா அவரை இல்லத்திற்கு அழைத்து வந்தபோது சிரார்த்த சமையல் மட்டுமே தயாராக இருந்தது.

பசி மயக்கத்தில் இருந்த ஏழைக்கு சிரார்த்த சமையல் உணவைக்கொடுத்து பசியாற்றினார். 

சிரார்த்த சமையலை திதி கொடுக்கும் அந்தணர்கள் மட்டுமே உண்ண வேண்டும்.

மீதம் உள்ளதை பசுவுக்குத்தான் தருவார்கள்.

அந்த நியதியை மீறினார் ஐயாவாள்.

அதனால் கோபமடைந்த அந்தணர்கள் வெளியேறி

"பரிகாரம் செய்தால் தான் நாங்கள் திதி கொடுப்போம்" என்றனர்

' ஒரேநாளில் காசியிலுள்ள கங்கையில் நீராடி விட்டு வா 'என்பதுதான் அவர்கள் சொன்ன பரிகாரம்.

ஒரேநாளில் எப்படி அவ்வளவு தூரத்திலுள்ள காசி சென்று கங்கையில் நீராடிவிட்டு அன்றே திரும்பமுடியும்?

இதை நினைத்து வருத்தத்துடன் படுத்தவர் அசதியில் உறங்க, கனவில் சிவன் காட்சி கொடுத்து, உன் இல்லக் கேணியில் நாளை கங்கையைப் பிரவேசிக்கச் செய்வேன் என உறுதியளித்து மறைந்தார். 

இக்கனவை ஐயா எல்லாரிடமும் சொன்னார்.

கார்த்திகை மாத அமாவாசை. 

ஊரே திரண்டு ஐயா வீட்டுமுன் கூடிவிட்டது. 

ஐயாவாள் கிணற்றடியில் நின்றபடி மனம் உருக கங்காஷ்டகம் பாடினார். 

ஐந்தாம் பாடல் பாடியவுடன் கேணியில் கங்கை பொங்கி வழிந்து,

திருவிச நல்லூர் சாலை முழுவதும் வெள்ளமாய்ப் பாய்ந்தோடினாள்!

அந்தணர்கள் ஐயாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கங்கை நீராடினார்கள். 

இன்றளவும் கார்த்திகை அமாவாசையன்று,

300 ஆண்டுகளுக்குமுன் கங்கை பொங்கி வந்தது போல, ஐயாவாள் இல்லக் கேணியில் நீர் பொங்கி வருவதைக் காணலாம். நீராடலாம்.

கார்த்திகை மாதம் பத்து நாள் விழா நடக்கும்.

பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசையன்று காலை கிணற்றுக்கு பூஜை செய்வார்கள்.

முதலில் வேத விற்பன்னர்கள் நீராடியபின் பக்தர்கள் நீராடுவார்கள்.

அன்று முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும், கிணற்று நீர் குறையாமலேயே இருப்பது அதிசயம்!

Thursday, November 19, 2020

அன்பு மகனுக்கு அப்பா

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது

வசதியாகத்தான்

இருக்கிறது மகனே…

நீ

கொண்டு வந்து சேர்த்த

முதியோர் இல்லம்.

பொறுப்பாய்

என்னை

ஒப்படைத்து விட்டு

வெளியேறிய

போது,

முன்பு நானும்

இது போல் உன்னை

வகுப்பறையில்

விட்டு விட்டு

என் முதுகுக்குப்

பின்னால்

நீ கதறக் கதறக்

கண்ணீரை மறைத்தபடி

புறப்பட்ட காட்சி

ஞாபகத்தில்

எழுகிறது!


முதல் தரமிக்க

இந்த இல்லத்தை

தேடித் திரிந்து

நீ தேர்ந்தெடுத்ததை

அறிகையில்,

அன்று உனக்காக

நானும்

பொருத்தமான பள்ளி

எதுவென்றே

ஓடி அலைந்ததை

ஒப்பீடு செய்கிறேன்!


இதுவரையில்

ஒருமுறையேனும்

என் முகம் பார்க்க

நீ வராமல்

போனாலும்,

என் பராமரிப்பிற்கான

மாதத் தொகையை

மறக்காமல்

அனுப்பி வைப்பதற்கு

மனம்

மகிழ்ச்சியடைகிறது.

நீ விடுதியில்

தங்கிப் படித்த

காலத்தில்

உன்னைப் பார்க்க

வேண்டும் என்ற

ஆவல் இருந்தாலும்,

படிப்பை நினைத்து

உன்னை சந்திக்க

மறுத்ததன்

எதிர்வினையே இது

இப்போது அறிகிறேன்.


இளம் வயதினில்

நீ சிறுகச் சிறுக

சேமித்த

அனுபவத்தை

என் முதுமைப்

பருவத்தில்

மொத்தமாக எனக்கே

செலவு செய்கிறாய்.

ஆயினும்

உனக்கும் எனக்கும்

ஒரு சிறு வேறுபாடு;


நான்

கற்றுக்கொடுத்தேன்

உனக்கு;

வாழ்க்கை இதுதான் என.

நீ கற்றுக்

கொடுக்கிறாய்

எனக்கு,

உறவுகள்

இதுதானென்று!


இந்தக் கவிதையைப்

படித்ததும் கண்கள்

குளமாகின்றது.

தாய் தந்தை மீது பாசம்

உள்ள ஒவ்வொருவரும்

பகிர வேண்டிய

பதிவு இது...

Thursday, November 12, 2020

வைதீகர்கள் மரியாதை

நமது வாழ்நாளில் வைதீகாளை எத்தனை முறை அழைத்து தக்ஷிணை கொடுப்போம்? புண்யாஜனம், ஆயுஷ்ய ஹோமம், உபநயனம், கிரஹப்ரவேசம், கல்யாணம், சில வீடுகளில் திவசம் , ஏதோ சில பேரு வேத பாராயணம் , சுப ஹோமங்கள் வச்சுப்பா , இது அத்தனையும் எத்தனை வருட இடைவெளியில் வருது பார்த்தேளா, இதுக்கு நடுவுல நாம உழைச்சு உத்யோகத்துல முன்னேறி ஆயிரத்துலேந்து பல ஆயிரங்கள், சில பேர் லக்ஷம் கூட எட்டிப் புடிச்சுடறா சம்பாத்தியத்துல, namaku ltc. Hra. Medical ன்னு ஏகப்பட்ட perks , வருஷத்துல போனஸ், performance போனஸ் ன்னு வேற தர்றா, நாமளும் என்ன படிச்சோமோ அதை வச்சுண்டு அனுபவத்தை உபயோகிச்சு தான் மேலே மேலே வளர்றோம், one bhk, அப்பறம் two bhk, three bhk, nnu வீட்டை பெரிசா வாங்கிண்டே போறோம் , வில்லா கூட புக் பண்ணிடறோம், மாருதி கார்ல ஆரம்புச்சு லேட்டஸ்ட் மாடல் வரைக்கும் வாங்கி அனுபவிக்கிறோம், பிள்ளைகளை பல லக்ஷங்கள் கொட்டி படிக்க வைக்கிறோம், பெண்ணுக்கு அதிவிமரிசையா கல்யாணம் பண்றோம், நாம நம்மளோட emplaayerai fulla நம்பி வாழ்கிறோம், தவறே இல்லை , யதார்த்தம் அல்லவா? இந்த வைதீகாளுக்கு நாம தானே employer? அவாளுக்கு என்ன சௌகரியம் செய்து கொடுக்கிறோம்? நம்மளை நம்பித் தானே வேதம் படிச்சுட்டு வர்றா? அவாளுக்கும் குடும்பம் உண்டு, கடமைகள் உண்டு, ஆசைகளும் உண்டு, நியாயம் தானே,? ஒரு பிராமணன் தனது பூரா வாழ் நாள்ல வெகு சில முறையே அவர்களுக்கு தக்ஷிணை, சம்பாவனை பண்றோம், ஆனா என்ன எதிர்பார்கிறோம்னா அவா இன்னிக்கும் 100, 200 ருபாய் தான் வாங்கிக்கணும் 500ரூ கேடடுவிட்டால் கொள்ளை போய்ட்டா மாதிரி அங்கலாய்க்கிறோம், இது சரியா? Job guarantee இல்லாத வேலை. தற்போது காதல் கல்யாணம் அதிகம் ஆனதால் ரோம்ப பாதிக்க பட்டவா, உபநயனத்தைக் கல்யாணத் தோடு வைத்துக் கொள்வதால் அந்த வரவும் போச்சு, என்ன தான் பண்ணுவா ? ஓரு reference book வச்சுக்காம மணிப்ரவாளமா மந்திரத்தை சொல்ற அந்த ரிதம் , முடியுமா நம்மளால, எதுக்கு எடுத்தாலும் கூகுளை நம்பி வாழறோம், அவாளுக்கு எத்தனை ஞாபக சக்தி? பாராட்டறோமா எப்பவாவது? எத்தனை பேரு சத்தமா பேசிண்டே இருந்தாலும் தனது மந்திரம் உச்சாடனம் பிரேக் ஆகாம சொல்ற நேர்த்தி திறமை ,  அதைப் பாராட்டியே ஆகணும் இல்லியா? நம்மாத்து நல்லதுக்காக அவா காயத்ரி ஜெபிச்சு, ஒருவேளை சாப்பிட்டு, விடியக்காலை எழுந்து குளிச்சுட்டு ஓடி வர்ற கடமையுணர்வு, பாராட்டணும் இல்லியா? ஆனா நாம அவாளை எத்தனை துச்சமா மதிக்கிறோம்? அவா பணத்துக்கு ஆலா பறக்கிறா , ஏன் நாம பறக்கலியா? நம்மாத்து பெரியவாளுக்கு மேல் உலகத்துல நல்ல பதவி கிடைக்க அவா தானே வழி வகுக்கரா? நம்ம வாழ்க்கைல வைதீகாள் இல்லாத நிலைமையை யோசிச்சா புரியும் அவா நமக்கு எத்தனை ஒத்தாசை பண்ரான்னு. நாம ப்ராமணாளா இருந்துண்டு அவாளை அவமதிக்கிறது சரியா? வைதீகாளை நன்றியோடும் மரியாதை யோடும் ஆதரிக்க வேண்டும் என்பது எனது எண்ணம்.

Monday, November 09, 2020

தெளிவு - IAS அதிகாரி

நாராயணமூர்த்தி ஓய்வு பெற்ற உயர்நிலை IAS அதிகாரி.

ஆரவாரம் மிக்க பணியில் இருந்து ஓய்வுபெற்றபின்

தனது மகன் பெங்களூரில் வாங்கியிருந்த டீலக்ஸ் பிளாட்டில் குடியேறினார்.

அது சுமார் 2000 குடியிருப்புக்கள் கொண்ட மிகப்பெரிய ரிசிடென்ஷியல் காம்பளக்ஸ்.

அதிகார தோரணையில் மிதந்து பழக்கப்பட்ட அவருக்கு இந்த ஓய்வான வாழ்க்கை நிறையவே சலிப்பையும் வெறுப்பையும் தந்தது.

செட்டிலாகி சில நாட்கள் ஆனபின் ஒருநாள் காலாற குடியிருப்பின் கீழ்தளத்தில் அமைந்துள்ள நீண்ட

நடைபாதையில் மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.

இவரை யாருக்கும் தெரியாததால் எவரும் கண்டுகொள்ளவில்லை.

யாரிடமும் பேசாது விரக்தியோடு சில நிமிடம் நடந்துவிட்டு அங்குள்ள பூங்காவில் உள்ள பெஞ்ச் ஒன்றில் அமர்ந்தார்.

பெஞ்சில் சுமார் 80 வயதுக்கு மேற்பட்ட ஒருமுதியவரும் அமர்ந்திருந்தார்.

அரைக்கை கதர்ச் சட்டை கதர் வேஷ்டியுடன் ஒரு காங்கிரஸ் தியாகி போல் இருந்தார்.

சிறிதுநேரம் சென்றது.

பெரியவர்

"நீங்கள் புதிசா குடி வந்திருக்கீங்களா" என வினவினார்.

அவ்வளவு தான்.

மடைதிறந்த வெள்ளம் போல நாராயணமூர்த்தி தனது சுயபுராணத்தைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்.

தான் தனது 25 ஆம் வயதில் IAS தேர்வில் சிறப்பாகத் தேறியது

35 ஆண்டு காலம் IAS அதிகாரியாக பல அரசுத் துறைகளில் பணியாற்றியது தான் பெற்ற விருதுகள் மற்றும் சாதனைகள சிறப்புச் செயலராக ஓய்வு பெற்றது

தனது மகன்,மகள் இருவரும்  ஐ ஐ டி யில் படித்து பின் அமெரிக்காவில் செட்டில் ஆனது அவரது நாலு பேரக்குழந்தைகள் என ஒன்று விடாமல் சுமார் 

அரை மணி நேரம் தனது பெருமைகளை சற்று கர்வத்தோடு விரிவாகக் கூறி போரடித்து விட்டார்.

பெரியவர் அமைதி காத்தார்.

வியந்து பாராட்டுவார் என எதிர்பார்த்த நாராயணமூர்த்தி ஏமாற்றமடைந்தார்.

பின்னர் "இங்கு யாரும் ஒருத்தர் கூடவும் சரியா பேசமாட்டேங்கறாளே " என வெகுவாக ஆதங்கப்பட்டார்.

"நீங்க பேசினா அவங்களும் பேசுவாங்க"  என பெரியவர் ஆரம்பித்தார்.

அங்கு சற்று தள்ளி மற்றொரு பெஞ்சில் உட்கார்ந்திருந்த தன்னைப்போன்ற ஒரு முதியவரைக்காட்டி அவன் பெயர் ஆறுமுகம் பிள்ளை. என் பால்ய நண்பன். கிளாஸ்மேட்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியராய் பணிபுரிந்து ஓய்வுபெற்றவன்.

இங்குள்ள தமிழ்க் குழந்தைகள் ஆங்கிலமும் இந்தியும் சரளமா எழுதும். பேசும். ஆனா தமிழ் பேசவரும். எழுத படிக்கத் தெரியாது. அந்தக் குழந்தைகளுக்குன்னு பிரத்யேகமாக ஒரு தமிழ் ஸ்கூல் நடத்தறான் அவன். இங்கு அவனை எல்லாருமே தமிழ்த் தாத்தான்னு தான் கூப்பிடுவாங்க. அவனை இங்கு தெரியாத ஆளே கிடையாது" ன்னு தூரத்தில் இருந்தபடியே அறிமுகம் செய்தார்.

"அதோ, சிவப்பா உயரமா இருக்கிறவர் தான் வாசுதேவன் நாயர் "என இன்னொருவரை அடையாளம் காட்டினார்.

அவர் ISRO விஞ்ஞானியாய் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றார்.

அடுத்து ஒருவரைக்காட்டி

"அவர் தான் ஸ்ரீதரமேனன். சவுத் சென்ட்ரல் ரெயில்வே ஜெனரல் மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்"என அறிமுகம் செய்தார்.

அடுத்து ஆஜானுபாவனாய் இருந்த சர்தார்ஜியைக் காட்டி

"அவர் தான் உத்தம் சிங். இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்

பரம் வீர் சக்ரா விருதுபெற்றவர்" என அறிமுகம் செய்தார்.

கடைசியாக காக்கிபேண்ட் நீல ஷர்ட் போட்டிருந்த ஒருவரைக்காட்டி அவர் தான் கலியமூர்த்தி.

BHEL ல் போர்மேனாய் இருந்து ஓய்வுபெற்றவர்.

இந்தக்குடியிருப்பின் முதுகெலும்பே அவர் தான்.

எங்களது கௌரவ Facility Manager.

எங்களது பிளம்பிங் எலக்டிரிக் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் மகான்." என 

அறிமுகம் செய்தார்.

மேலும் கூறினார்.

"இவர்கள் அனைவரும் நல்ல நண்பர்கள். பொதுவான விஷயங்களைப் பேசி மகிழ்வார்.

யாரும் தங்களது கடந்த கால பெருமைகளை அசை போடுவதில்லை"

மேலும் என்னையும் ஆறுமுகத்தையும் தந்தை போல் பாவித்து மரியாதை செலுத்துவர் என விரிவாக எடுத்துக்கூறினார்.

"தங்களைப் பற்றி ஏதும் சொல்லவில்லையே" என நாராயணமூர்த்தி வினவினார்.

பெரியவர் மெதுவாக

நான் இருமுறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன்.

திருமணம் ஏதும் செய்து கொள்ளவில்லை.

இங்குள்ள குடியிருப்போர் சங்கத்தின் கௌரவத் தலைவராகச் செயற்படுகிறேன்" என ஆர்ப்பாட்டமின்றி கூறினார்.

ஆடிப் போனார் நாராயணமூர்த்தி.

பெரியவர் மேலும் அறிவுரையாக சில விஷயங்களைக் கூறினார்.

ஓய்வு பெற்ற நிலையில் உள்ள நாம் அனைவரும் Fused Bulb மாதிரிதான்.

 பல்புகளில் பலவகை உண்டு.

0 வாட் பல்பு விடிவிளக்காய் பயன் தரும்.

40 வாட் பல்பு குறைவான வெளிச்சம் தேவைப்படும் பகுதிகளில் பயன்படுத்தப்படும்.

டியூப் லைட் பரவலான வெளிச்சத்தைத் தரும்

ஹெட்லாம்ப் காரில் பயன்படும்.

ஹாலஜன் லாம்ப் உயர்நிலைகளில் பயன்படும். ஆனால் எல்லாம் வெளிச்சம் தரும்.

பயன்பாடுகள் தான் வெவ்வேறு. ஆனால் பியூஸ் ஆன நிலையில் அவை மாற்றப்படும்.

அதுபோல நாம் ஒவ்வொருவரும் வாழ்நாளில் வெவ்வேறு பணிநிலைகளை மேற்கொண்டு அதற்குரிய பணிகளைச் செய்கிறோம்.ஓய்வு என்பது Fused Bulb நிலை. இதை உணர வேண்டும்.

நமக்கு மாற்றாக மற்றவர் தயாராக இருக்கையில் வழிவிட்டு ஒதுங்குகிறோம்.

ஆனால் உதிக்கும் சூரியனின் மதிப்பே தனி.

அதனை மகிழ்ச்சியோடு வரவேற்கும் நாம் மறையும் சூரியனை கண்டு கொள்வதே இல்லை.

ஆனால் இரண்டுமே சூரியன் தான்

ஔி தரும் காலைக் கதிரவன் நமது பணிக்காலம் போன்றது

சுறுசுறுப்பாய் இயங்குகிறோம்.

மாலை நேரத்தில் ஓய்வை நாடுகிறோம்.நமது பணிஓய்வும் மாலைக் கதிரவன் போன்றதே.

அமைதி நாடி ஓய்வுற்று இருக்கவேண்டிய மாலை வேளைகளில் காலை நேரக் கனவுகள் அர்த்தமற்றவை. அவற்றை அசைபோடுவது பேதமையே.

மாலை நேர நிஜங்களில்கா லை நேரக் கனவுகள் அர்த்தமற்றவை என போதனை செய்தார்.

மனத் தெளிவு பெற்றார் நாராயண மூர்த்தி.

பின்குறிப்பு:-

1) சுய புராணங்கள் அளவுக்கு அதிகமாகையில் தீரா சலிப்பைத் தரும். நமது அன்பான நண்பர்களைத் தூர விரட்டும்.

Wednesday, November 04, 2020

பணமதிப்பிழப்பு Demonetization

பணமதிப்பிழப்பு.இந்தியாவிற்கு வெற்றி..!

பாகிஸ்தானின் வீழ்ச்சி.!

இந்தியாவில் பணமதிப்பிழப்பு ( Demonetization ) நடவடிக்கை எடுத்து 4 வருடம் காலம் (8 நவம்பர் 2016) ஆகிறது..!

இன்றைய பாகிஸ்தானின் பொருளாதார வீழ்ச்சிக்கு, இது தான் காரணம் என்று பலரும் சொல்லுவதை, உலகமே வியந்து பார்க்கிறது. 

இது எப்படி சாத்தியமாயிற்று.?

ஒரு நாட்டின் பொருளாதார விருத்திக்கு முக்கிய காரணம் மக்களிடையே பணம் பரிமாற வேண்டும். அப்போது மக்களுக்கான வேலை வாய்ப்புகள் மட்டுமல்ல, அதன் மூலம் அரசுக்கு வரியாகவும் அதில் பணம் வரும்.

அதற்காக கள்ளச்சாராயம் காய்ச்சவும், கஞ்சா விக்கவும் ஒரு அரசு அனுமதிக்க முடியாதல்லவா..?  

ஏனெனில் அது மக்களின் நலத்தை கெடுத்து, நாட்டில் அமைதியின்மையை புகுத்திவிடும், சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் அல்லவா..?

சரி, விஷயத்திற்கு வருவோம்..

முதலாவது  பணப்புழக்கம் அதிகரிக்க தொழில்கள் பெருகி, ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்து பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.  

இரண்டாவ்து  அது இல்லாமல் வேறு வழி என்பது, அரசே ரூபாய் நோட்டுக்களை அதிகமாக அச்சடித்து புழக்கத்தில் விடவேண்டும். அப்போது பணப்புழக்கம் அதிகமாகும். ஆனால்  நாட்டின் பண மதிப்பு குறைந்து டாலர் மிக வேகமாக ஏறி விடும்,, இது கொஞ்ச காலம் சந்தோசமாக இருந்தாலும் வருங்காலம் மிக பெரிய சிக்கலை உண்டு பண்ணி விடும் 

அந்த இரண்டாவது விஷயம்தான் 2004 காங்கிரஸ் ஆட்சியின் போது இந்தியாவில் நடந்தது. 

முதலாவது கிழிந்த நோட்டுக்களை மீண்டும் அச்சடித்து கொள்ளலாம் என்ற அரசு முடிவை தவறாக பயன்படுத்தி புழக்கத்தில் இருக்கின்ற நோட்டுக்களையே UPA காங்கிரஸ் அரசு அச்சடித்தது, அது ஒரு பெரிய தவறு.

இரண்டாவது மிக பெரிய தவறாக, நாசிக்கில் இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இயந்திரங்கள் பழையது ஆகிவிட்டது என்று அதை பாதுகாப்பாக அழிக்காமல், அதை (₹1000, ₹500 நோட்டுக்களை அடிக்கும் இயந்திரம்) ஏலத்தில் விட்டது. அந்த ஏலத்தை பாகிஸ்தான் அரபு நாடுகள் மூலம் எடுத்து, இந்திய ரூபாய்களை இலவசமாக, அதன் இஷ்டத்திற்கு அச்சடித்தது. அதாவாது நமது எதிரிக்கு நம் பணம் அச்சடிக்கும் இயந்திரம் கிடைத்தால் என்னவாகும்?

என்ன ஆனது என்பதை பார்ப்போம்..!

பாகிஸ்தான் இயந்திரத்தை வைத்து மாதம் 1 லட்சம் கோடி அளவில் கள்ள நோட்டு அச்சடித்து இந்தியாவில் புழக்கத்தில் விட்டது.  பாகிஸ்தானுக்கு அதனால் கிடைக்கும் வருமானம் இந்திய மதிப்புக்கு 50 ஆயிரம் கோடி. பாகிஸ்தான் மதிப்புக்கு 1 லட்சம் கோடி..!

ஒரு நாடு உழைக்காமல் ஏற்றுமதி செய்யாமல் GST இல்லாமல்  1 லட்சம் கோடி கிடைக்கிறது என்றால் அது மிக பெரிய வருமானம் அல்லவா.. ?

மேலும்  அவர்கள்  ₹500, ₹1000 நோட்டுக்களை பிரிண்ட் செய்து தீவிரவாதிகளுக்கு நம் பணத்தையே கொடுத்து நம் நாட்டுக்கு எதிராக பயன்படுத்தியது..!

மேலும் நம்ம நாட்டுக்கு எதிராக உள்ளவர்களுக்கு பணத்தை  கொடுத்து புழக்கதில் விட்டது இன்னும் எவ்வளவோ சொல்லாம்..!

இதை செய்தவர் பொருளாதார மேதை சிதம்பரம் அவர்கள்,, இந்த காரியத்தை செய்யும் போது எந்த நோபல் பரிசு பெற்றவரும் அதை எதிர்க்க வில்லை 

“செட்டி ஆதாயம் இல்லாமல் ஆற்றோடு போவானா?” என்று ஒரு பழமொழி உண்டு. அதற்கு அர்த்தம் இப்போது பலருக்கும் புரிய ஆரம்பித்து இருக்கிறது.

அப்படி நடக்கும்போது எல்லோரிடம் ₹100 ஆக இருந்த பணம் ₹1000 ஆக பண புழக்கம் மூலம் தவறான வழியில் பெருகியது. அப்போது விலைவாசிகள் உயரும், பணவீக்கம் அதிகமாகும். அதிகமாகியது.

அப்படி பண புழக்கம் அதிகரித்ததால் இந்தியாவின் பண வீக்கம் வரலாற்றில் முதன் முறையாக இரட்டை இலக்கத்தை தொட்டது காங்கிரஸ் ஆட்சியில்

என்ன தான் நாம் கள்ள நோட்டுக்கள் அச்சடிப்பதை கட்டுப்படுத்தினாலும் பாகிஸ்தான் அடிக்கும் கள்ள நோட்டு ஒரிஜினல் தரத்தில் இருந்ததால், அதை நம்மால் தடுக்க இயலவில்லை. அதனால் பாகிஸ்தான் பர்மா, பங்களாதேஷ் அகதிகளுக்கு இந்திய பணத்தை கொடுத்து இந்திய ராணுவம் மீது தினந்தோறும் காஷ்மீரில் கல்வீச வைத்தது. 

அது மட்டுமல்ல இந்திய அரசியல் ஆட்சியாளர்களோடு சேர்ந்து கொண்டு பணத்தை நேரடியாக புழக்கத்தில் விட்டு நாட்டின் பொருளாதரத்தின் ஆணியான ரிசர்வ் வங்கியையே ஆட்டம் காண செய்தது.

பாகிஸ்தான் அரசை நாம் நோட்டுக்களை அச்சடிக்க முடியாமல் தடுக்க வேண்டும். அதை செய்ய உலக அரங்கில் இந்த விஷயத்தை எடுத்துச்செல்ல வேண்டும், ஆனால் அதை செய்ய முடியாததிற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளது. 

முதலில் இந்தியா இந்த ரகசியத்தை வெளியில் சொன்னால் ரூபாயின் நம்பகத்தன்மையே கெட்டுவிடும். 

இரண்டாவது, இந்திய ரிசர்வ் வங்கியின் Integrity கேள்விக்குறியாகிவிடும். இவ்வாறு நடந்தால் நாடே திவலாகும் என்ற நிலை..

மேலும் நோட்டுக்களை அடிக்கும் இயந்திரத்தை ஏலம் விட்டது நீங்கள் தானே என்று உலக நாடுகள் கேக்கும்

இந்த நேரத்தில் தான் மோடி அவர்கள் பிரதமராக பதவி ஏற்றார்.. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தார்

அதை நிறுத்த வழி என்ன..? 

அதற்கு மாற்று வழி, பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது.. அது இரண்டு நாடுகளும் அணு ஆயுதம் வைத்திருந்ததால் முடியாது என்றானது. அதனால், நம் அரசுக்கு பணம் மதிப்பு இழப்பு என்ற ஒரு வழியை தவிர வேறு வழியே இல்லை. 

இருந்தும் அது போன்ற முயற்சிகள் உலகத்தில் முன்பு முயற்சிக்கப்பட்டு சில நாடுகளில் தோல்வி அடைந்தது. அதில் இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோது இந்தியாவிலும் ஒருமுறை முயற்சித்தும் தோல்வி கண்டது.

மிகப்பெரிய ஒரு ஆபரேஷன் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை. மோடி அரசு நாட்டின் நலன் கருதி, வெற்று அரசியலாக்காமல் துணிவாக எடுத்தது. இது வாஜ்பாயால் கூட முடியாது என்பது உண்மை..!

பணமதிப்பிழப்புக்கு பின்பு அரசு எதிர்பார்த்த பணத்தை விட அதிகமாக ரிசர்வ் வங்கிக்கு ₹1000, ₹500 நோட்டுக்கள் வந்தாலும், அதை மோடி அரசியலாக்க முடியாது.

ஏனென்றால் அது இந்திய RBI இன் integrity க்கும், இந்திய ரூபாயின் நம்பகத்தன்மைக்கும் கேடாக முடியும் என்பதால் மோடி அதை ஒரு போதும் செய்ய வில்லை! அதனால்தான் அவர் ஒரு சிறந்த தேசியவாதி என்று இந்த உலகம் அவரை இன்று மதிக்கிறது. 

இவ்வளவு பெரிய காரியத்தை செய்து சாதித்து விட்டார் என்பதை உலகம் அறிந்ததால் அவரை அமெரிக்கா, ரஷ்யா, ஃப்ரான்ஸ், ஜப்பான் போன்ற பல நாடுகள் அவரை மிகவும் மதிக்கிறார்கள்.

அது மட்டுமா, போர் செய்யாமல், உலக நாடுகளிடம் கெஞ்சாமல் பாகிஸ்தான் பொருளாதாரத்தை நீர்முலம் ஆக்கினார். மேலும் நம் பொருளாதாரத்தை உயர்த்தியும் விட்டார்..!

பணமதிப்பு இழப்பு நடந்த உடனே காஷ்மீரில் நடந்த கல்வீச்சு, பாகிஸ்தான் மூலம் பணம் மதிப்பு இழப்பால் அந்த நாடு அடிக்கும் ₹500, ₹1000 நோட்டுக்கள் செல்லாதாதாக போனதால் சப்ளை நின்றது, கல்வீச்சும் அப்படியே குறைந்து பின் நின்றது. அது மட்டுமல்ல பாகிஸ்தானின் பொருளாதாரமே வீழ்ந்தது. இன்று அந்நாட்டை உலக நாடுகள் கைவிட்டு விட்டன. இது தான் சாணக்யத்தனம்...!

அவ்வளவு பகைமை உணர்வுகளையும் உள்ளே அடக்கிக் கொண்டு, புத்திசாலித்தனமாக இந்தியா இதைச் செய்து முடித்தது. பல இன்னல்களை மக்கள் சந்தித்தாலும், மீண்டும் மோடிக்கே வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்தனர்.

பாரத் மாதா கி ஜெய்.

Sunday, November 01, 2020

வெள்ளியங்கிரி ஆண்டவன் போட்ட பிச்சை

 ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் அதிபர் சிவகணேஷ் அவர்களை சந்திக்க இரவு 10.30 மணிக்கு அவரின் ஜவுளி சாம்ராஜ்ஜியத்திற்கு சென்றிருந்தோம்.

தீபாவளி சமயம் என்பதால் மிக பிஸியாக காணப்பட்டார். ஒருவழியாய் பணிகளை முடித்து இரவு 11.30க்கு நம்மோடு பேசத் தொடங்கினார்.  கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசியிருப்போம்.

கோவை நகரில் இருந்து தொலைதூர புறநகர் பகுதியான நரசிபுரத்தில் இருக்கும் அவரின் கோசாலைக்கு செல்ல தற்போது தார்சாலை வசதி உள்ளது. ஆனால் ஐந்தாறு ஆண்டுகள் முன்பு வெறும் மண்சாலைதான். சிவகணேஷ் அவர்கள் நகரில் இருக்கும் தன் ஜவுளிக்கடை பணிகளை முடித்துவிட்டு இரவு 11 மணிக்கு 30 கிலோமீட்டர் பயனித்து நரசிபுரம் கோசாலை பணிகளை பார்வையிட புறப்படுவாராம். நள்ளிரவு வரை மாடுகளின் நலனை பார்வையிட்டு விட்டுதான் வீடு திரும்புவாராம். 

பசுக்களுக்காக உயிரையும் கொடுக்க தயங்காதவர். கொல்லப்பட இருந்த பசுக்களை மீட்பதற்கு இவர் சந்தித்த சவால்களையும், எதிர்கொண்ட வழக்குகளையும் விவரிக்க ஒரு திரைப்படமே எடுக்கலாம்.  இத்தனை அசாத்தியமான செயலை சாதித்துள்ள சிவகணேஷ் அவர்களை, இது குறித்து கேட்ட போது...."நான் என்ன செய்தேன் ? எல்லாம் அந்த வெள்ளியங்கிரி ஆண்டவன் போட்ட பிச்சை" என்கிறார். தன்னுடைய ஆசானாக சத்திரபதி சிவாஜி மகாராஜை கருதுகிறார் கர்மயோகி சிவகணேஷ்.  அடுத்த ஜென்மத்தில் கால பைரவராக பிறப்பெடுத்து அதர்மத்தை வேரறுக்க வேண்டும் என்கிறார்.  அவர் தனிப்பட்ட முறையில் பகிர்ந்த பலவற்றை பொதுவெளியில் பகிர்ந்திட இயலாது. 

வெள்ளியங்கரி ஆண்டவர் மீது அத்தனை பக்தி. அவர்தான் எனக்கு அம்மா, அப்பா, நண்பன் ஏன் மகன் கூட என்கிறார். காசிக்கு கிட்டத்தட்ட இருநூறு முறை சென்று வந்து விட்டாராம்.

கிட்டத்தட்ட மூவாயிரம் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கின்றார். 

இத்தனை அசாத்தியமான செயலை புரிந்து வரும் தனியொருவன் சிவகணேஷ் அவர்களை,  அவரின் மிகப்பெரும் ஜவுளிக்கடையில் மிக எளிமையான ஒரு கடைநிலை ஊழியராகதான் நாம் பார்க்க இயலும். அத்தனை எளிமை. அதுவும் செயற்கைதன்மை இல்லாத இயல்பான எளிமை. 

மிக ஏழ்மையான இளமைப் பருவத்தை கடந்து வந்தவர். சிறுவயதில் அவரின் வீடு மழை பெய்தால் ஒழுக வேக வேகமாய் சென்று பாத்திரம் எடுத்து வந்து வைப்பார்களாம். நேர்மையாலும், கடின உழைப்பாலும் மேலே வந்தவர். இன்றும் கூட தன் சட்டை அழுக்காகாமல் வீடு திரும்புவதில்லை அந்த கர்ம யோகி. 

இதில் ஹைலைட் என்னவென்றால், பளபளக்கும் அதிநவீன 75000 சதுர அடி பரப்பளவில் உள்ள ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் வளாகத்தின் உரிமையாளர் சிவகணேஷ் வசிப்பது பசுக்களோடு பசுக்களாக, ஷீட் போட்ட ஒரு கொட்டகையில் தான்.  பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு விதவிதமான புத்தாடைகளை விற்பனை செய்பவர்,  தன் அறையில் அணிவதற்கு பயன்படுத்துவது ஒரு சில காவி வேட்டிகளைதான். அவரின் சாதாரண இரும்பு கட்டிலை சுற்றியும் பசுக்கள்தான் அமர்ந்திருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் வாங்க என் பேலஸுக்கு என்று அவர் கூட்டிப் போனதுதான். 

துறவிகளும், மகான்களும், பற்றற்ற துறவு நிலையில் எங்கோ இமயமலையில் மட்டும் வசிப்பது இல்லை. நம்மோடு ஒருவராகவும் வாழ்கிறார்கள் என்பதற்கு கர்மயோகி சிவகணேஷ் அவர்கள் ஒரு சிறந்த உதாரணம்.

அவரின் கோசாலை குறித்து விரிவாக பார்க்க விரும்பினால்

கீழ்கண்ட வீடியோவை பார்க்கவும்.

https://youtu.be/X7Lw0Dha9b0

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

The Udyan Effect

In the year 2006, I had finished college and was striving hard to make a living in Dubai. I was going through the worst phase of my life when I met a man named Udayan through a friend. Udayan was working as a delivery boy in a flower shop in Dubai and was earning just 900 dhirams a month as salary. He was almost ten years older to me and used to refer to me as Aniya, which means younger brother in Malayalam. So I called him Ettan or elder brother.

My Dubai visa was going to expire in a few days. I had to stay for atleast 15 more days to get a small payment from a company that I worked for. 

Also, my financial situation was such that I couldn't afford to buy a ticket to fly back to India. To add to my woes, I was on the verge of getting kicked out of the place I was renting. I was desparate for 300 dirhams that amount would tide me over till I received my payment. But everyone I had asked had refused my request for a loan.

At last, I called Udayan Ettan for money, well aware of the fact that his salary was only 900 dirhams, most of which he had to send to his family back in India. As soon as I told him what the problem was, he asked me whether I had enough money to come to Mamzar, the area where he worked. When I kept quite, he realised that I didn't, so he asked me to take a cab from Sharjah and call him once I reached Mamzar.

As promised, he was waiting for me near the Al Mamzar Centre.

He paid for the cab, took me to a nearby cafeteria and after treating me to dinner, gave me the 300 dirhams that i had asked for.  He told  the owner of the dinner that i was his younger brother and that whenever I come there to eat , the owner should write it in his account book, which he would settle at the end if the month. He even offered me a bed in the room that he was staying in. But I told him goodbye and came back to Shajah.

15 days later, i got my pending payment and on the way to airport, i went to return the money i had borrowed from Udayan ettan. At first, he kept insisting that i should keep it but at last, he accepted 200 dirhams and told me to keep 100 dirhams if I really thought of him as my elder brother.

Years passed.  In 2011, i saw him again standing in front of my shop in Trivandrum. He was searching for me.  The old jovial Udayan ettana looked very different now. He had lost his job and was staying at his wife's parents house with his 2 kids. When he started speaking to me, I realised he was a little drunk.  He looked at my clothes, smiled and innocently teased me. You have made money aniya. You are rich now. 

I smiled back and a few minutes later we went to the tea shop nearby. As we sipped tea, he shared with me how difficult his life was with no job and an ongoing case at the court. I offered him Rs.1500, which was roughly equivalent to the 100 dirhams that he had given me then. He accepted the money without hesitation.

A few days later, he came again to the shop, called me outside and asked Rs 500 more. After some more time, he came again and asked for another Rs 1000. My cousin , friends and staff started noticing the frequent payoffs and told me that the man was exploiting me by calling me aniya.

I don't part with my money if  I don't feel like it and I can easily refuse to give money to even my best friend, but for some odd reason, i could never say no to Udayan ettan.  My brain telling me that he was exploiting me, but my heart said, "He gave you 300 dirhams when he earned only 900 himself.  He didn't even expect the money back. So even if you are giving him a little money now, it is far smaller gesture than what he did for you back then".

Inspite of all these justifications, I sometimes got pissed off at him for coming to me drunk and asking for money. He would listen to me like a child and come back few days later with a five rupee chocolate or Prasad from some temple. My cousin and staff would tease me and say, "Now here's a man who sells five rupee chocolates and free sindoor from the temple to you for a thousand rupees*.

Years passed. One day when I reached my shop in the morning, my employer told me that the man who regularly took money from me had come and gone just a few minutes ago.  I smiled thinking it was great that I had reached late, otherwise I would have lost some more money.

I sat at the counter and the employee brought me a packet that Udayan Eytan had left for me.  I saw the square package covered with newspapers and thought that it was probably a packet of biscuits. I wondered if that meant that he was going to ask me for a bigger sum of money. But I was amazed when I opened the packet and found two bunches of 500 rupee notes.  There was a total of 1 lakh rupees along with a grimy old piece of paper with writings on it in different colours in Malayalam where Udayan ettan had kept an account of the dates and the amounts he had taken from me. The loan came to a total of 77,350 rupees. 

Still reeling, I phoned him and he started giggling. He said, "I sold my ancestral property near Chempazanthy for 45 lakhs rupees. Today was the registration and I received the entire amount. That's why I came to thank you for helping me and being patient for the last two years".

But why did you pay me extra?

He laughed and told me  in his usual tone, I am the elder brother and you are my aniya. An aniya can always take money from his elder brother but not the other way around. I will come and see you in a day or two".

He ended the call.

I walked to the Bank to deposit the money and thought about how genuine Udayan ettan was. I had assumed that he addressed me as aniya just to be able to borrow money from me, if it were not for his helping me back in Dubai, U would never have helped the man.

He had  never told me even once that he was planning to return the money he was taking from me, simply because he didn't consider me any less than his sibling. I always feel proud about my achievements, but that day I felt happen than ever, not because I had got the money back but because a once perfect stranger considered me his own. I felt honoured to be his aniya.

Have you met your Udayan ettan yet?  Don't be  fooled, they may not be the best dressed or the most well behaved. You can't meet them by design, either.

In the most unexpected moment, one day, they will just happen to you.

####################

FROM

SUDHA MURTHY, AUTHOR

BOOK

SOMETHING HAPPENED ON THE WAY TO HEAVEN