Pages

Saturday, November 20, 2021

No more doctor Visit

குளிர் காலம் ஆரம்பமாகிவிட்டால்...

Cramp, Cramp, Cramp.

Middleage, senior citizens க்கு பொதுவாக ஒரு problem வரும்.

பெரும்பாலும் இரவு நேரத்தில் வரும். கெண்டைக்கால் சதை, கால் விரல்கள், பாதங்கள், etc ,etc severe தசை பிடிப்பு

சதையும் நரம்புகளும் சேர்ந்து கட்டி போல் ஆகிவிடும். வலி உயிர் போய் விடும். எழுந்திருக்கவும் முடியாது படுக்கவும் முடியாது. யாராவது உதவ வேண்டும்.

அந்த கடின தசை பகுதியை மெல்ல அழுத்தமாக தடவி, சமநிலைக்கு கொண்டு வர வேண்டும். பின் Volini gel ஏதாவது தடவ வேண்டும். இரண்டு நாட்களுக்காவது அந்த வலி லேசாக இருக்கும்

Cramp வரும் போது, தூக்கத்தில் இருந்தாலும், அலறி அடித்துக் கொண்டு எழுந்து  அழ ஆரம்பித்து விடுவார்கள்.Pain Uncontrollable

பொதுவாக Evion tablets 10 நாட்கள் சாப்பிட சொல்வார்கள். அப்போதைக்கு சரியாகிவிடும். பின் மீண்டும் வரும்

ஆயுர்வேதம், வர்மம்  பயின்ற என் நண்பர் ,எளிமையான ஒரு தீர்வு கூறினார்

வலது பக்கத்தில் Cramp வந்தால், இடது கையை காதோடு ஒட்டி மேலே தூக்குங்கள். இரண்டு அல்லது மூன்று நிமிடம் அந்த positionலேயே இருங்கள். Cramp சரியாகிவிடும். வந்த சுவடே தெரியாது

அதே போல இடது பக்கத்தில் Cramp வந்தால் வலது கையை காதோடு ஒட்டி மேலே தூக்குங்கள்

படுத்திருக்கும் போது வந்தாலும், காதை ஒட்டியவாறு கைகளை நீட்டுங்கள். சரியாகிவிடும்.

நண்பர்கள், உறவுகள் பலரும் பயனடைந்தார்கள். நீங்களும் முயற்சித்து பார்க்கலாம்

Eye Dryness

இதுவும் அப்படித்தான். வலியும் இருக்கும். காலையில் கண்ணை திறப்பதே சிரமமாக இருக்கும்.

இரவு தூங்கும் போது கண்டிப்பாக Eye drops போட வேண்டும். இல்லாவிடில் தூக்கம் கெடும். காலையில் சிரமம்

இதற்கும் ஒரு எளிய மருத்துவம்

இரவு தூங்கும் போது தொப்புளை சுற்றி அரை அங்குலம் வரை தேங்காய் எண்ணையை தடவி, லேசாக தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள்

ஒரு வாரத்திலேயே, Eye drynessல் இருந்து பெரும் விடுதலை கிடைக்கும். இன்னும் சில உடல் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்

எனக்கு தெரிந்தவர் பத்து வருடங்களாக, Eye drops உபயோகித்தவர். அடிக்கடி Eye Checkup

இப்போது பெரிய Relief. முதலில்  இந்த சிகிச்சையை  சொன்னபோது சிரித்தார். உபயோகப்படுத்தியவுடன், நல்ல முன்னேற்றம்.Eye drops மிகவும் குறைத்து விட்டார். 

No more doctor Visit

தூக்கமின்மை 

பலருக்கு இரவில் ஆழ்ந்த தூக்கம் வராது. Disturbed sleep due to worries,  etc etc

எளிய மருத்துவம் 

தூங்க போகுமுன்,  தேங்காய் எண்ணெய் மூன்று அல்லது நான்கு drops எடுத்து. வலது பாதத்திற்கு அடிபாகத்தில் (உள்ளங்காலில்) மென்மையாக தடவி மூன்று நிமிடம் லேசாக மஸாஜ் செய்யுங்கள். அதே போல இடது காலிலும் செய்யுங்கள். பின் படுத்து விடுங்கள். ஆழ்ந்த உறக்கம் கண்டிப்பாக வரும்.

நீங்களும் முயன்று பார்க்கலாம்.

Sleeping tablets கூட நாளடைவில் தவிர்த்து விடலாம்

ஒரு மருத்துவ நண்பர் சொன்னது

தொப்புள்  72000 நரம்புகள் குவியும் இடம்.

அங்கு தேங்காய் எண்ணயை தடவும் போது, நரம்புகளில் இருக்கும் குறைபாடுகளை சமன் செய்கிறது. அதே போலதான், உள்ளங்காலிலும்.

Acupressure பயிற்சிகளில் கூட உள்ளங்கால் முழுமையும் விரல்களால் அழுத்தி, உடலின் எல்லா உறுப்புகளிலும் உயிர் சக்தி தங்கு தடையில்லாம பயணிக்க செய்வார்கள்

உடல் நலத்தில் கவனம் தேவை.

ஆங்கில மருந்துகளை மெல்லகுறைத்து கொண்டு மாற்று மருத்துவத்தில் கவனம் செலுத்துதல் சிறப்பு.

Friday, October 15, 2021

இது கதை அல்ல நிஜம்

இந்த எழுபது வயதில் இதெல்லாம் தேவையா என்று உடல் கெஞ்சியது.  ஆனாலும் சிறு வயது தொட்ட நினைவுகள் பீறிட்டு எழ மனம் இருபது வயதாய் துள்ளியது.

அக்ரஹாரத்தில் ஒவ்வொரு வீடாக சென்று அழைத்து, பாட்டு பாடி, சுண்டல் வாங்கி சுவைத்த காலங்கள் மாறி, இல்லத்தரசியாக கொலு வைத்து மகிழ்ந்த நாட்கள் மனதில் மோத, ஆயிற்று இதோ எழுபது வருடங்கள்.

இரண்டு வருடம் வரை கணவரின் உதவியுடன் பொம்மைகளை இறக்கி படி அமைத்து வைத்தாகி விட்டது.  அவர் தவறியதால் போன வருடம் இல்லை.

இப்போது வைக்கலாமா? நான் அழைத்தால் வருவார்களா? என்கிற யோசனையும் வந்தது.  ஆனால் எதோ ஒரு சக்தி முடுக்கி விட ஆள் வைத்து பொம்மைகளை கீழ் இறக்கி, சுத்தம் செய்து படியும் அமைத்தாகி விட்டது. பொம்மைகளை வைக்கும் வேலை மட்டுமே பாக்கி.

வீட்டு வேலை செய்யும் அஞ்சலை "அம்மா என் பொண்ணை இட்டாரேன். உனக்கு ஒதவியா இருப்பா" என்று சொல்லி பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து விட்டாள்.

பெண் படு சுறுசுறுப்பு.  கிடு கிடுவென்று படிகளில் பொம்மைகளை அடுக்க நடுவில் அமர்ந்திருக்கும் அம்பாளின் சிலை பளபளப்பாக மின்ன கண்ணீருடன் அதன் நினைவுகளில் மூழ்கினார் காமாக்ஷி மாமி.

கல்யாணம் ஆன பின், முதல் வருட கொலுவுக்கு அவர் வாங்கி வந்தது. கொள்ளை அழகில் அம்பாள் ஜொலிக்க அதையே பார்த்துக் கொண்டு தன்னையே மெய்மறந்து நிற்பார் காமாக்ஷி மாமி.

மாமிக்கு நல்ல மனசு.  ஒவ்வொரு வருட கொலுவுக்கும் ஏழைகளுக்கு புடவையும் பணமும் கொடுத்து  அவர்கள் சந்தோஷப் படுவதைப் பார்த்து மனம் குளிர்வார்.

இந்த வருடமும் அஞ்சலைக்கும் அவள் பெண்ணிற்கும் வாங்கியாகி விட்டது.  புடவைகள் வாங்கும் போது அரக்கு கலரில் பச்சை நிற பார்டரில் இருந்த  பட்டுப் புடவையைக் கண்டதும் இதை வாங்கி யாருக்காவது வைத்துக் கொடுக்கலாமே என்ற எண்ணம் ஏற்பட அதையும் வாங்கிக் கொண்டு கிளம்பினார் காமாக்ஷி மாமி.

நான் கொலு வைக்கலாமா? நான் தாம்பூலம் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்களா? மனம் குழம்பி தவித்தது மாமிக்கு.

கொலுவுக்கு அஞ்சலையின் பெண் மூலம் தெரிந்தவர்கள் அனைவரையும் வரச் சொல்லி அழைத்தார்.  மேலும் போனிலும் பேசி அழைப்பு விடுத்தார்.

குளித்து மடியாக செய்து சுவாமிக்கு நிவேதனம் செய்த சுண்டலை அழகாக சிறு எவர்சில்வர் பாத்திரத்தில் போட்டு வைத்தாகி விட்டது.

வருபவர்களுக்கு கொடுக்க வெற்றிலை பாக்கு, குங்குமம், பூ, ரவிக்கைத் துணி, வளையல்கள் என்று தாம்பாளத்தில் அடுக்கி வைத்து காத்திருந்தார்.

முன் மாதிரி இல்லாமல் இரண்டு, மூன்று பேர் மட்டும் வந்தது சற்று வேதனையை கொடுத்தாலும் அதை புறம் தள்ளி மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றார்.

தாம்பூலத்தை அஞ்சலையின் பெண்ணையே கொடுக்கச் செய்தார்.

அமெரிக்காவில் இருக்கும் பையனுக்கு வீடியோ எடுத்து அனுப்பினார்.

"ஏம்மா இந்த வயசுல பாடுபடறே, பேசாம இங்கே வந்துடேன்" என்று ஆசையாக மகன் அழைக்க "எனக்கு அங்கே ரொம்ப நாள் இருக்க பிடிக்கல.   இங்கே தான் மனசுக்கு நிறைவாய் இருக்கு" என்று மறுத்தார்.

இன்று வெள்ளிக் கிழமை.   சுவாமிக்கு சுண்டலோடு வடையும், சர்க்கரைப் பொங்கல் செய்யணும் என்று நினைத்துக் கொண்டு தலைக்கு குளித்து வடைக்கு ஊறப் போட்டு, சுண்டலும் சர்க்கரைப் பொங்கலையும் செய்யத் தொடங்கினார்.  ஒரு வழியாக பொங்கலும் வடையும் செய்து முடிப்பதற்குள் மூச்சு வாங்கியது.  ஆனால், ஏனோ மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.

மதிய நேரத்தில் தூறலாக பெய்த மழை மாலையில் கன மழையாக மாறி சக்கை போடு போட்டது.

"இனி எப்படி வருவார்கள்? அம்மா இதென்ன சோதனை?  செய்து வைத்த பிரசாதங்கள் எல்லாம் வீண்தானோ?" காமாக்ஷி மாமி தனக்குள்ளே புலம்பினார். சாப்பிடவும் பிடிக்கவில்லை.

எல்லாவற்றையும் எடுத்து வைத்து அஞ்சலையின் பெண்ணுக்கு சாப்பாடு போட்டு படுக்கச் சொன்னபோது யாரோ "மாமி, மாமி" என்று  கூப்பிட்டு வாசல் கதவை தட்டும் ஒலி கேட்டது, கதவை திறந்தால், அங்கே வயதான மாமி நிற்பதைக் கண்டு "யாரு நீங்க!" என்றார்.

"கொலுவுக்கு வந்திருக்கேன்.   உள்ளே வாங்கோன்னு கூப்பிடாம, வெளியிலே நிறுத்தி யாருன்னா கேட்பா?"

"உள்ளே வாங்கோ.  உங்களை இது வரைக்கும் பார்த்தது இல்லை.   அதான் அப்படி கேட்டுட்டேன், தப்புதான்."

"நான் அடுத்த தெரு மாலினியின் அம்மா.  காஞ்சிபுரத்தில் இருந்து வந்திருக்கேன். மாலினிக்கு கொலுவுக்கு வர முடியாத சந்தர்ப்பம்.  மாமி ஆசையா கூப்பிட்டிருக்கா.   நீ போய்ட்டு வந்துடேன்னு என்னை அனுப்பினா. மழையும் இப்ப நின்னிருக்கா அதான் வந்தேன்" என்று வந்த மாமி புன்னகையுடன் கூறினார்.

பெரிய குங்கும பொட்டும், தலையில் பூவும் சூட, காதுகளில் வைரத் தோடும்,. காசு மாலையும், மந்தஹாச புன்னகையுமாக எதிரில் நிற்கும் மாமியை நமஸ்கரித்து எழுந்தார் காமாக்ஷி மாமி.

பாட்டு பாடி கிளம்பும் சமயம் " எனக்கு கொடுக்க என்ன வெச்சுருக்கே" என்று வந்த மாமி கேட்டதும் பீரோவில் இருந்த அரக்கு கலர் பட்டுப் புடவையையும், ரவிக்கை துணியையும் தாம்பூலத்தில் வைத்து அஞ்சலையின் பெண்ணைக் கொண்டு கொடுக்கச் சொன்னார் காமாக்ஷி மாமி.

"ஏன் நீ கொடுத்தா வாங்கிக் கொள்ள மாட்டேனா? நீயே கொடு' என்று கேட்டு வாங்கிக் கொண்டார்.  "சரி, சரி, இந்த புடவையை கட்டிக் கொண்டு வந்து காண்பிக்கிறேன்.உனக்கும் சந்தோஷமாக இருக்கும்" என்று சொல்லி பக்கத்து அறைக்கு சென்று புடவை மாற்றிக் கொண்டு வந்து நிற்கும் மாமியை "மடிஸாரில் மாமி எத்தனை தேஜஸ்" என்று வியந்து நோக்கினார் காமாக்ஷி மாமி.

"எனக்கு பசிக்குது, என்ன செஞ்சிருக்கே? கொண்டு வா சாப்பிடலாம்" என்று மாமி கேட்டவுடன் வடையையும், சர்க்கரைப் பொங்கலையும், சுண்டலையும் கொண்டு வந்து கொடுத்தார் காமாக்ஷி மாமி.

சாப்பிட்டு விட்டு முடிந்ததும் "சரி நான் கிளம்பறேன். பொண்ணு தேடுவா, உன் ஆத்துக்கு வந்தது ரொம்ப சந்தோஷம்" என்று சொல்லி கிளம்பி போன மாமியை நினைத்து மனதில் இனம் புரியாத சந்தோஷம் ஏற்பட்டது காமாக்ஷி மாமிக்கு.

நிம்மதியாக கண்ணயர்ந்து தூங்கினார்.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மாலினிக்கு போன் செய்து "நீ நல்லா இருப்பேடி குழந்தே. உன்னால வர முடியாவிட்டாலும் உன் அம்மாவை அனுப்பி எனக்கு சந்தோஷத்தை கொடுத்து விட்டாய். அம்மா கிட்டே போனை கொடு" என்று காமாக்ஷி மாமி கூற, "அம்மாவா? என்னோட அம்மா இறந்து பத்து வருஷமாறது. நீங்க யாரையோ நினைச்சு இங்கே போன் செய்யறேள்"  என்று சொல்லி மாலினி போனை வைக்கவும் குழம்பி தலையை சுற்றுவது போல் இருந்தது காமாக்ஷி மாமிக்கு.

"அப்ப இங்கே வந்தது யார்? கொட்டும் மழையிலும் வந்து என்னை பரவசப்படுத்தியது யார்?" விடை தெரியாமல் கொலுவை நோக்க அங்கே அம்பாள் சிலை மந்தகாஸப் புன்னகையுடன். குளித்து தெளித்து பூக்கூடையுடன் கோவிலுக்கு புறப்பட்டாள் காமாக்ஷி மாமி. அன்று கோவிலில் கூட்டம் லைனில் நின்று, கால்வலி வேறு. அம்மன் சன்னிதி வந்ததும் காமாட்சி மாமியின் முகத்தில் அதிர்ச்சி. அப்படியே சரிந்து விழுந்து விட்டாள் மயக்கமடைந்து. அருகிலுள்ளவர்கள் மாமியைத் தூக்கி வெளி மண்டபத் தூணில் சாய்த்து தண்ணீர் கொடுத்தனர். சிறிது நேரத்தில் எழுந்து மறுபடியும் அம்மன் சன்நிதியில், அதே புடவை, நேற்றிரவு யாரோ ஒரு மாமிக்கு தான் வைத்துக் கொடுத்த புடவையில் அம்மன் ஜொலித்துக் கொண்டிருந்தாள்.  தன் ஆத்துக்கு நேற்று இரவு வந்தது அம்பாள் தான் என்று புரிந்தது. இப்படித்தான் உண்மையான பக்தி கொண்டுள்ள பலருக்கு யாரோ போல் காட்சி கொடுப்பா காமாக்ஷி.

Thursday, October 14, 2021

தெரிந்து கொள்ளலாம் (Swachhta @PetroPump App)


இந்தியாவில் ஹோட்டல்கள் மட்டுமல்லாது ஓவ்வொரு பெட்ரோல் பங்க்களும் சரியான பராமரிப்புள்ள குடிநீர் மற்றும் கழிவறை வசதியை பொது மக்களின் உபயோகத் திற்காக கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது மத்திய அமைச்சகத்தின் விதியாகும். 

நாம், அந்த பங்கிலோ வேறு பங்கிலோ ஒவ்வொரு முறையும் பெட்ரோல் மற் றும் டீசல் வாங்கும்போது முறையே ஒவ்வொரு லிட்டருக்கு 6 பைசாவும் 4 பைசாவும் கழிவறை பராமரிப்பு செலவுக்காகக் நம் கையிலிருந்து கொடுக்கி றோம்.அதனால் அடுத்த முறை அவசரம் எனில், உங்கள் கூகிள் மேப்பில் பக்கத்தி லுள்ள பெட்ரோல் பங்ககளை கண்டுபிடியுங்கள்.இந்த இலவசமாக  கழிவறை உபயோகப்படுத்தும் வசதி அங்கு இல்லை என்றாலோ, இருந்தும் நம்மை உபயோகப் படுத்த தடுத்தாலோ, பூட்டி வைத்து சாவி ஓனரிடம் உள்ளது என்று சிப்பந்திகள் மறுத்தாலோ, கழிப்பறை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இல்லையென்றாலோ, உங்கள் மொபைல் போனில் அந்த  பங்க்  மற்றும் கழிப்பறையின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு, பங்கின் பெயர், முகவரியுடன் தேதி குறிப்பிட்டு கூகிள் பிளே ஸ்டோரில் (Google Play Store) - ல்  உள்ள ஸ்வஸ்தா மொபைல் ஆப் (Swachhta @PetroPump App) மூலம் புகார் பதிவு செய்யலாம்.

பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்திய அரசு (Ministry of Petroleum and Natural Gas, Government of India) மூலம் 3 நாள்களுக்குள் நேரடி நடவடிக் கை எடுக்கப்பட்டு உங்களுக்கு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்படும்.

பொதுமக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள் கின்றோம்..

Thursday, October 07, 2021

ஸ்ரீரங்கம் 7-இன் சிறப்பு

 ஸ்ரீரங்கம் 7-இன் சிறப்பு.

1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களைக் கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.

2. (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார் (4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.

3. ஸ்ரீரங்கம் ரெங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள் (1) ஸ்ரீதேவி (2) பூதேவி (3) துலுக்க நாச்சியார் (4) சேரகுலவல்லி நாச்சியார் (5) கமலவல்லி நாச்சியார் (6) கோதை நாச்சியார் (7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.

4. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். (1) விருப்பன் திருநாள் (2) வசந்த உத்சவம் (3) விஜயதசமி (4) வேடுபரி (5) பூபதி திருநாள் (6) பாரிவேட்டை (7) ஆதி பிரம்மோத்சவம்.

5. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார். (1) சித்திரை (2) வைகாசி (3) ஆடி (4) புரட்டாசி (5) தை (6) மாசி (7) பங்குனி.

6. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருலுவார். (1) சித்திரை(2) வைகாசி (3) ஆவணி (4) ஐப்பசி (5) தை (6) மாசி (7) பங்குனி.

7. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரெங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

8. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

9. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.

10. இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். (1) கோடை உத்சவம் (2) வசந்த உத்சவம் (3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை (4) நவராத்ரி (5) ஊஞ்சல் உத்சவம் (6) அத்யயநோத்சவம் (7) பங்குனி உத்திரம்.

12. பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள். (1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் (2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் (3) குலசேகர ஆழ்வார் (4) திருப்பாணாழ்வார் (5) தொண்டரடிபொடி ஆழ்வார் (6) திருமழிசை ஆழ்வார் (7) பெரியாழ்வார், ஆண்டாள்

13. இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.

14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. (1) நாழிகேட்டான் கோபுரம் (2) ஆர்யபடால் கோபுரம் (3) கார்த்திகை கோபுரம் (4) ரெங்கா ரெங்கா கோபுரம் (5) தெற்கு கட்டை கோபுரம்-I (6) தெற்கு கட்டை கோபுரம்-II (7) ராஜகோபுரம்.

15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார். (1) வசந்த உத்சவம் (2) சங்கராந்தி (3) பாரிவேட்டை (4) அத்யயநோத்சவம் (5) பவித்ரா உத்சவம் (6) உஞ்சல் உத்சவம் (7) கோடை உத்சவம்.

16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும். (1) பூச்சாண்டி சேவை (2) கற்பூர படியேற்ற சேவை (3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை (4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம் (5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை (6) தாயார் திருவடி சேவை (7) ஜாலி சாலி அலங்காரம்.

17. திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஏழு மண்டபங்களில் நம்பெருமாள் ஒரு நாள் மட்டுமே எழுந்தருள்வார். (1) நவராத்ரி மண்டபம் (2) கருத்துரை மண்டபம் (3) சங்கராந்தி மண்டபம் (4) பாரிவேட்டை மண்டபம் (5) சேஷராயர் மண்டபம் (6) சேர்த்தி மண்டபம் (7) பண்டாரம் ஆஸ்தான மண்டபம்

18. திருக்கோவிலில் உள்ள ஏழு பிரகாரங்களிலும் பெருமாளின் ஏழு திருவடிகள் உள்ளன.

19. ஏழு பிரகாரங்களிலும் ஏழு திருமதில்கள் அமையப்பெற்றுள்ளன.

20. திருக்கோயில் வளாகத்தில் ஏழு ஆச்சார்யர்களுக்கு தனி சன்னதி உள்ளது. (1) ராமானுஜர் (2) பிள்ளை லோகாச்சாரியார் (3) திருக்கச்சி நம்பி (4) கூரத்தாழ்வான் (5) வேதாந்த தேசிகர் (6) நாதமுனி (7) பெரியவாச்சான் பிள்ளை

21. சந்திர புஷ்கரிணியில் ஆறு முறையும், கொள்ளிடத்தில் ஒருமுறையும் இப்படியாக ஏழு முறை சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார். (1) விருப்பன் திருநாள், சித்திரை மாதம் (2) வசந்த உற்சவம் வைகாசி மாதம், (3) பவித்ரோத்சவம் ஆவணி மாதம், (4) ஊஞ்சல் உற்சவம் ஐப்பசி மாதம், (5) அத்யயன உற்சவம் மார்கழி மாதம், (6) பூபதி திருநாள் தை மாதம், (7) பிரம்மோத்சவம். பங்குனி மாதம்.

22. நம்பெருமாள் மூன்று முறை எழுந்தருளும் வாகனங்கள் (1) யானை வாஹனம் – தை, மாசி, சித்திரை (2) தங்க கருடன் வாஹனம் – தை, பங்குனி சித்திரை (3) ஆளும் பல்லக்கு – தை, பங்குனி சித்திரை (4) இரட்டை பிரபை – தை, மாசி, சித்திரை (5) சேஷ வாஹனம் – தை, பங்குனி, சித்திரை (6) ஹனுமந்த வாஹனம் – தை, மாசி, சித்திரை (7) ஹம்ச வாஹனம் – தை, மாசி, சித்திரை

23. மாசி மாதம் நடைபெறும் திருப்பள்ளியோடம் திருவிழாவில் நம்பெருமாள் ஏழு வாகனங்களில் மட்டும் உலா வருவார்.

24. கற்பக விருட்சம், ஹனுமந்த வாஹனம், சேஷ வாஹனம், சிம்ம வாஹனம், ஒற்றை பிரபை ஆகிய இந்த ஐந்து வாகனங்கள் தங்கத்திலும் யாளி வாஹனம், இரட்டை பிரபை ஆகிய இந்த இரண்டு வாகனங்கள் வெள்ளியிலும் – ஆகிய ஏழு வாகனங்களை தவிர மற்ற அனைத்து வாகனங்கள் வெள்ளி மற்றும் தங்கத்திலும் உள்ளன.

25. மற்ற கோவில்களில் காண முடியாதவை (1) தச மூர்த்தி (2) நெய் கிணறு (3) மூன்று தாயார்கள் ஒரே சன்னதியில் (4) 21 கோபுரங்கள் (5) நெற்களஞ்சியம் (6) தன்வந்தரி (7) நான்கு திசைகளிலும் ராமர் சன்னதி

கொடுக்கப்பட்டுள்ள 25ல் 2 மற்றும் 5 இரண்டையும் கூட்டினால் வருவது 7.

பொம்மைக்கார தெரு

இப்படி ஒரு இடம் காஞ்சிபுரத்தில் இருக்கிறது என்று இதுநாள் வரை தெரியாமல் போய்விட்டது.

ஒரு தெரு முழுதும் கொலு பொம்மை தயாரிக்கும் வீடுகள் இருக்கிறது.

புது இடம்,ஊரில் இருந்து கொலு பொம்மைகளை கொண்டு வரவில்லை அதனால் வேலூர் அல்லது வாலாஜாவில் சில பொம்மைகள் வாங்கிக் கொள்ளலாம் என எங்கு கிடைக்கும் என சக ஊழியரிடம் விசாரித்தேன்.

காஞ்சிபுரத்தில் இதற்கான தனி தெருவே இருக்கிறது.அங்கு கிடைக்காத பொம்மைகளே இல்லை சார் டிரை பண்ணி பாருங்களேன் என்றார்.

அஸ்தகிரி என்று அந்த வீதிக்கு பெயர். பொம்மை கார தெரு எனில் யாரும் சின்ன காஞ்சிபுரத்தில் வழி காட்டுவார்கள்.

குறுகலான வீதி.இரண்டு புறங்களிலும் வீதிகளில் வீட்டு வாசலில் எல்லா பொம்மைகளும் மாதிரி காட்சிக்கு அடுக்கப்பட்டு இருக்கிறது. விசாரித்தால் உள்ளே போங்கள் எல்லா பொம்மையும் இருக்கிறது என அனுப்பி வைக்கிறார்கள். சில இல்லங்களில் வீட்டின் உள்ளே, சில இல்லங்களில் வீட்டின் மாடி அறையில், என அடுக்கப் பட்டிருக்கும் அட்டை பெட்டிகள், கிடத்தப் பட்டிருக்கும் பொம்மைகளை சர்வ ஜாக்கிரதையாக தாண்டி போகிறோம்.

காணக்கிடைக்காத செட் பொம்மைகள் எல்லாம் அங்கு கொட்டிக் கிடக்கிறது. பேப்பர் மேஷ் பொம்மைகள் அளவில் பெரிதாகவும் நல்ல பினிஷிங் உடனும் இருந்தாலும் இவளுக்கு மண் பொம்மை மீது தான் அலாதி ஆர்வம்.

திருவிழாவுக்கு வந்த குழந்தைகள் போல எல்லா வீடுகளிலும் ஏறி இறங்கினோம்.

ரொம்ப நாளாக தேடிக்கொண்டிருந்த கைலாய செட் கிடைத்தது. 

விலை என்னுடைய அனுபவத்தில் மிக மிக சகாயம். மேலும் பேரம் பேசினால் நிறைய குறைக்கிறார்கள். நமக்குத்தான் பேச மனம் வரவில்லை. நீங்களே பார்த்து சொல்லுங்க என சொன்னால் சட்டென 200 , 300 குறைத்துக் கொள்கிறார்கள்.

தெருவெங்கும் திருவிழா போல இருக்கிறது  கார்களின் அணிவகுப்பால் மிளிர்கிறது. 

காவடி செட் இருக்கிறதா? பீமன் கர்வ பங்கம் செட் இருக்கா? ஶ்ரீரங்கம் விஸ்வரூப தரிசனம் செட் இருக்கிறதா? என நாங்கள் இருக்கும் போதே பலர் சொல்லித் தேடுகின்றனர். இருந்தால் எடுத்துக் கொடுக்கிறார்கள், இல்லையெனில் நாலாவது வீடு புளூ கலர் பெயிண்ட் அடிச்சிருக்கும் அங்கு கேளுங்க என வழி காட்டுகிறார்கள்.

இந்த தெரு நூறாண்டு களுக்கு மேலாக இந்த தொழிலை மேற்கொண்டு வருகிறது. குலாளர்கள் வம்சம் பெரும்பான்மை. இப்போது தொழில் கற்றுக்கொண்ட பலரும் இதை மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.

பொம்மைகளை மடியில் சாய்த்து நாகாஸ் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரை பார்த்தேன். ஒரு குழந்தையை போல அதனை கைகளில் பிடித்துள்ளார்.என்ன ஒரு அழகு.

வாய்ப்புள்ளவர்கள் , பொம்மை பிரியர்கள், அவசியம் தரிசிக்க வேண்டிய புனித பூமி சின்ன காஞ்சிபுரம் , பொம்மைகார தெரு.

இராமாயணம், மகாபாரதம், பாகவதம், போன்ற புராண செட் பொம்மைகள் கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.கிரிக்கெட், கல்யாணம், கடைவீதி, டான்ஸ் பொம்மைகள், தேசத் தலைவர்கள், போன்ற பொம்மைகளும் உள்ளன.

நான் பொம்மை வாங்கிய சில கடைகளின் உரிமையாளர்கள் கடந்த இரண்டு வருடமாக தொழில் முடங்கிப் போனது குறித்து மிகுந்த கவலை தெரிவித்தனர்.

ஒரு கடையில் பேசிக்கொண்டு இருந்த போது பிரபல ஓவியர் வேதா அவர்களின் மகளும் மருமகனும் தான் கடை உரிமையாளர்கள் என தெரிய வந்தது. கலைக்குடும்பம். கனடா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதாக கூறினார் திரு.பத்மநாபன்.

பயன்படுமே என்று நான் பொம்மை வாங்கிய கடையின் செல்போன் நம்பர்கள் கொடுக்கிறேன்.இது விளம்பரத்திற்கு அல்ல. நேரில் செல்ல முடியாதவர்கள் போனில் பேசி அனுப்ப முடியுமா என கேட்டுக் கொள்ளலாம். கனடாவுக்கு அனுப்புபவர்கள் இந்தியாவுக்குள் அனுப்ப மாட்டார்களா என்ன? 

srimathi art works 

(ஓவியர் வேதா அவர்களின் மருமகன் ) 9443690141

குருநாதன், 9994044065

ஜெயபால் 8870017300

Thursday, September 30, 2021

Centralized Public Grievance Redress & Monitoring System

 Hello. I am Arvind Nayak (Mumbai).

We had booked Kuwait Airways flight Mumbai-Milan-Mumbai from *MakeMyTrip* site in December 2019 for a Pharma conference. Our visit dates were from 11th October 2020 to 18th October 2020. But due to COVID, we had to cancel the tickets from the MakeMyTrip app in August 2020.

Kuwait Airways deducted a nominal amount and returned a large amount of our refund to MakeMyTrip in September 2020 itself. But, since then, we had to run from pillar to post between MakeMyTrip and Citibank since our Refund amount never got credited to the credit card account as promised. There was no response to numerous phone calls and mails sent to MakeMyTrip.

Then, on 09th July 2021, I discovered the CPGRAMS site. *CPGRAMS* means *Centralized Public Grievance Redress & Monitoring System*. From that I got Direct *PMO* - Prime Minister's Office site - https: //www.pmindia.gov.in/en/main/

From the site given above, in a few words, I wrote my Grievance to the PMO office, attached the relevant documents (there is such a facility on the site) and a miracle happened.

1. I immediately received a registration no. in my email with all details of my complaint.

2. I got the name, email ID and direct phone number of the officer to whom my complaint has been forwarded. It all happened in 1-2 days.

3. On 13th July I received an email from MakeMyTrip (on instructions of the Ministry of Tourism) asking for a few details.

4. Everyday, I could track the progress of my complaint myself by entering the registration number-complete Transparency!!

And then, another MIRACLE happened on *19th July 2021*. The refund amount was CREDITED to the bank account by NEFT from MakeMyTrip!!

Really COMMENDABLE!! No words to praise this fantastic initiative by the government- and it REALLY WORKS!!

It just shows the efforts of the government towards bringing full transparency in their working and their genuine concern for the citizens and their grievances! 

KUDOS to all concerned!!

*Putting up this post so that it can help genuinely aggrieved citizens!!*

*CPGRAMS* stands for *Centralized Public Grievance Redress & Monitoring System*

PMO site- https: //www.pmindia.gov.in/en/main/

*A Centralized* 

*Public Grievance* *Redress* *And Monitoring System* *(CPGRAMS)* has been established by the Government of India at http://www.pgportal.gov.in 

Can you imagine this is happening in INDIA ? 

The govt. wants people to use this tool to highlight the problems they faced while dealing with Government officials or departments like

1) Railways

2) Posts

3) Telecom

4) Urban Development

5) Petroleum & Natural Gas

6) Civil Aviation

7) Shipping , Road Transport & Highways

8) Tourism

9) Public Sector Banks 

10) Public Sector Insurance Companies

11) National Saving Scheme of Ministry of Finance

12) Employees' Provident Fund Organization

13) Regional Passport Authorities

14) Central Government Health Scheme

15) Central Board of Secondary Education

16) Kendriya Vidyalaya Sangathan

17) National Institute of Open Schooling

18) Navodaya Vidyalaya Samiti

19) Central Universities

20) ESI Hospitals and Dispensaries directly controlled by ESI Corporation under Ministry of Labour.

Many of us say that these things don't work in India . 

A few months back, the Faridabad Municipal Corporation laid new roads in an area and the residents were very happy about it. But 2 weeks later, BSNL dug up the newly laid roads to install new cables which annoyed all the residents. A resident used the above listed grievance forum to highlight his concern. To his surprise, BSNL and Municipal Corporation of Faridabad were served a show cause notice and the guy received a copy of the notice in one week. Government has asked the MC and BSNL about the goof up as it's clear that both the government departments were not in sync at all. 

So use this grievance forum and let all the country men/women/youth who don't know about this facility. 

This way we can at least raise our concerns instead of just talking about the 'System' in India . 

Invite your friends to register their grievances at this portal and ensure that citizens are heard and get the responses that are their due.

PLEASE SPREAD THIS MESSAGE IF U WANT OUR INDIA TO HAVE A BETTER TOMORROW & FORWARD THIS MESSAGE TO AS MANY AS POSSIBLE.

Very Useful Site for Any Grievances.

Monday, September 27, 2021

போகர்

கிருஸ்து பிறந்ததாக சொல்லப்பட்ட ஆண்டை விட பல்லாயிரம் ஆண்டுகள் முன்னாடி பிறந்தவர் போகர் என்ற மாபெரும் சித்தர். 

இவரின் குறிப்புகளை திருடி வைத்து தான்  வெள்ளைக்காரன் அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்திருப்பான் என தோன்றுகிறது.

ஆதாரம் 

இவர் காளாங்கிநாதர் என்ற சித்தரின் சீடரும் 18 சித்தர்களில் ஒருவரும் ஆவார். பழனியில் இருக்கும் நவபாஷான சிலையை செய்தவரும் இவர்தான். இவரை பற்றிய தகவல் மிக ஆச்சரியத்தை கொடுக்கும். அவர் இயற்றிய சப்தகாண்டம் என்ற நுலில் அவர் கூறிப்பிட்ட தகவலைப் படித்து ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்று விட்டேன். இப்பேர்பட்ட தமிழனை உலகம் முழுவுதும் தெரியப்பபடுத்த வேண்டும் என்பதே என் நோக்கம். அவர் இயற்றிய அந்த நூலில் 1799, 1800 ஆம் பாடலில் விமான தொழில்நுட்பத்தை பற்றிய குறிப்பையும் அதை எப்படி செய்யவேண்டும் என்றும் அதை வைத்து அவர் பறந்ததையும் தெள்ளதெளிவாக கூறிப்பிட்டிருக்கிறார்.

அது மட்டும் அல்ல 1926 ஆம் பாடலில் நீராவி இஞ்சின்(steam engine) வைத்து கப்பலை எப்படி இயக்குவது என்றும் கப்பலின் டிசைனிங்கையும் குறிப்பிட்டிருக்கிறா­ர். இதை 5000 ஆண்டுகள் முன்பே தமிழன் கண்டுபிடித்து விட்டான் என்பது நமக்கெல்லாம் பெருமை. ஆனால் அப்பேர்பட்ட தமிழனை நாம் மறந்து விட்டோம் என்பது வேதனையளிக்கிறது.

தமிழனின் புகழ் உலகம் முழுவதும் பரவவேண்டும் உலகத்தின் முதல் இனமும் முதல்மொழியும் முதல் அறிவியல் விஞ்சானியும் முதல் மருந்துவனும் முதல் ஆன்மீகவாதியும் தமிழனே. இப்படி தமிழனின் புகழை மறந்து நாத்திகம் பேசியும் மதமாற்றம் செய்தும் தமிழனின் பெருமை மறைக்கபட்டுவிட்டது.

https://www.facebook.com/groups/305917699863621/

சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் போகர். மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான்.

அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார். சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து 'கடவுளைப் போல உதவினீர்கள்... என் வரையில் நீங்களே கடவுள்' என்று சொல்வோம், அல்லவா.

அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும். உண்மையில், முதல் சித்தன் அந்த ஆதிசிவன்தான். அவனே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றான். போகரைப்பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள், இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள். ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து, தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள். ஆனால் இதில், போகர் பெரிதும் வேறுபட்டே தெரிகிறார். பல சித்தர்கள் போல், இவரும் ஒரு சிவத் தொண்டரே. அதே சமயம், அன்னை உமையை தியானித்து அவளருளையும் பெற்றவர்.அவளது உபதேசம் கேட்டு பழனி மலைக்குச் சென்று தவம் செய்து முருகனை தண்டாயுத பாணியாகவே தரிசனம் செய்தவர். உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக, தான் தரிசித்த தண்டாயுபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர்.

பாஷாணங்களைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதம்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். அவைகளை உரிய முறையில் சேர்ந்துப் பிசைந்தால்தான் உறுதியான, ஒரு பொதுவான பாஷாணம் உருவாகும். இதை நயனங்களால் பார்த்தாலேகூட போதும். அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர்வீச்சு, கண்வழியாக உடம்பின் உள்ளும், உடம்பின் புறத்திலும் படிந்து, நலம் ஏற்படும். இதன்மேல் பட்டு வழியும் பொருள் எதுவாயினும் அதுவும் மருத்துவ குணம் கொண்டு தீராத வியாதியை எல்லாம் தீர்த்து வைக்கும்.

உயர்வான பாஷாணங்கள் ஒன்பதை தேர்வு செய்து அதைக் கொண்டு போகர் செய்ததுதான் பழனி முருகனின் மூலத் திரு உருவம். அவ்வாறு செய்ததோடல்லாமல், அவ்வுருவத்திற்கு ஏற்ற வழிபாட்டு முறையை ஒரு புதிய சித்தாகமமாகவே உருவாக்கி அதையும் நடைமுறைப்படுத்தியவர் போகர்.

https://www.facebook.com/groups/305917699863621

மனிதப் பிறப்பானது கோள்களால் நிர்வகிக்கப்படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வுசெய்து அதிலிருந்து தண்டாயுத பாணியை செய்து, கோள்களை ஓர் உருவுக்குள் அடக்கிப் பூட்டியவர் போகர் என்றும் கூறுவர்.

தண்டாயுத பாணியை எவர் வந்து தரிசித்து வணங்கினாலும் நவ கோள்களையும் ஒருசேர வணங்கிய ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு உண்டாவது, இதனுள் அடங்கிக் கிடக்கும் இன்னொரு நுட்பம்.

இப்படி பழனியம்பதியில் முருக வழிபாட்டிற்கு களம் அமைத்த போகரின் வாழ்க்கையும் ஒரு வகையில் நவரசங்களால் ஆனதுதான். பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி வைகாசி மாதத்து பரணி நட்சத்திரத்தில் பிறந்த போகரின் பிறப்பு மூலம் பற்றி பெரிதாக செய்திகள் இல்லை. ஆனால், நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதரின் மாணவர் இவர் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு செய்தி. அதை இவரது, அரிய நூல்களுள் ஒன்றான 'போகர் ஏழாயிரம்' எனும் நூலின் வழி அறியலாம்.

பதினெண் சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பு, நவசித்தர்களே பிரதானமாகக்கருதப்பட்டனர். மேருமலைதான் இவர்களின் யோகஸ்தலம். மேருவும் இமயமும் உலகப் பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு வெளியாகவே விளங்கியது. இங்கேதான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர், காலாங்கிநாதர். காலாங்கி நாதர், போகர் வந்த சமயம் மகாசமாதியில் இருந்தார்.

போகர், சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி, அவ்விரு மலைகளிலும் பல தாது வகைகளை தேடிக்கண்டு பிடித்தார். அதைக் கொண்டு பல காய கற்பங்களை செய்து, தானே உண்டு பார்த்து அதன் பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும், வானவெளியில் பறப்பது, நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிக மிகச் சாதாரணமாகியது. இதனால் போகருக்குள் கர்வம் துளிர்த்துவிட்டது.

துரோணருக்கு ஓர் ஏகலைவன் போல தானும் குருவை வணங்கி அந்த அருளாலேயே பல தாதுக்களை கண்டறிந்து விட்ட ஒருவன்; உண்மையில் காலாங்கி நாதருக்கு சீடர்கள் இருந்திருந்தால், அவர்கள் கூட இப்படி எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள்; என்றெல்லாம் நினைக்கத் தொடங்கிவிட்டார்.

இதனால், அந்த மலைத் தலத்தில் பணிவாக பார்த்துப் பார்த்து நடந்தவர், நிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தார்.

https://www.facebook.com/groups/305917699863621

மேருவிலும் இமயத்திலும் சூட்சம வடிவில் பலநூறு சித்த புருஷர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களில் பலரது தவம், போகரின் கர்வமான நடையால் கலைந்தது. அவர்கள் கண்விழித்ததோடு போகருக்கும் காட்சியளித்தனர். திடுக்கிட்ட போகரிடம் நாங்கள் காலாங்கி நாதரின் மாணவர்கள். பலப்பல யுகங்களாக எங்களை மறந்து தவம் செய்தபடி இருக்கிறோம் என்றார்கள். அத்தனை யுகங்களும் சில நாட்கள் கடந்தது போலத்தான் இருக்கிறது என்று அவர்கள் கூற, போகருக்கு அது ஆச்சரிய அதிர்ச்சியாகியது. அப்படியானால் அவர்கள் தவத்தை எவ்வளவு பெரிய விஷயமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அந்த நொடி, தான் கற்ற தாதுவித்தை எல்லாம் மிக அற்பமானது என்கிற எண்ணம் ஏற்பட்டு அவரது கர்வமும் அடங்கியது. அதை அறிந்த அந்த சித்தபுருஷர்கள், போகருக்கு பல சித்த ரகசியங்களை போதித்தார்கள்.

ஒரு சித்தர், போகர்மீது பெரும்கனிவு கொண்டு, 'அமிர்தமணிப்பழம்' என்னும் தேவக்கனி மரம் ஒன்றை அந்த வெளியில் காட்டி, அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள் முழுக்க பசிக்காது, நரைக்காது, முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை உண்டுவிட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறிட,போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய 'பசி, தாகம், மூப்பு' என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார்.

இப்படி படிப்படியாக முன்னேறிய போகருக்குள் சில விசித்திரமான எண்ணங்களும் ஏற்பட்டன. அவை முழுக்க முழுக்க மனித சமுதாயம் தொடர்பானவையே.. ஒரு உயிர் எதனால் மனிதப் பிறப்பெடுக்கிறது? அப்படிப் பிறக்கும்போது அது எதன் அடிப்படையில் ஏழையின் வயிற்றிலும், பணக்காரனின் வயிற்றிலும் பிறக்கிறது? இறப்புக்குப்பின் கொண்டு செல்வது எதுவும் இல்லை என்று தெரிந்தும் வாழும் நாளில் மனிதன் ஏன் ஆசையின் பிடியிலேயே சிக்கிக் கிடக்கிறான்? எவ்வளவு முயன்றும் அவனால் மரணத்தை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை?

இப்படிப் பலவித கேள்விகள் போகரை ஆட்டிப் படைத்தன. மொத்தத்தில் மனித சமூகமே வாழத் தெரியாமல் வாழ்ந்து விதியின் கைப்பாவையாக இழுத்துச் செல்லப்படுவது போல உணர்ந்தவர், மனித சமூகத்தை காப்பாற்றியே தீர வேண்டும் என்று எண்ணம் கொண்டார். இதனால், தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் 'போகர் ஏழாயிரம்', போகர் நிகண்டு, 17000 சூத்திரம், 700 யோகம் போன்றவை.

இவர் உள்ளத்தில் மனித சமூகத்தை நோயின்றி வாழவைக்கும், அரிய குறிப்புகள் தோன்றின. அதேசமயம், இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர். சித்த ரகசியங்களை எழுதிவைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை, ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர், அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றி காட்டினார்.

அந்த மந்திரம், தம்பணா மந்திரம் எனப்படுகிறது. இன்றும் காடுகளில் மூலிகை தேடிச்செல்வோர் தம்பணா மந்திரத்தை மானசீகமாக உச்சரித்து, காணப் பெறாத மூலிகைகளையும்கண்டு அதைக் கைப்பற்றுவர். அமிர்தத்துக்கு இணையான ஆதிரசத்தையே இவர் கண்டறிந்தார் என்பர். அதைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமோ, அமிர்தமோ தேவர்களுக்கே உரியது. அசுரர்களோ மானிடர்களோ அதை உண்டால் அதனால் உலகம் அழிந்து விடும் அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர்.

https://www.facebook.com/groups/305917699863621

தங்கள் அச்சத்தை தட்சிணா மூர்த்தியாகிய சிவபிரானிடம் கூறிட, சிவபிரானும் அவர்களது கவலையை நீக்குமூலமாக போகரை அடைந்து அவர் அறிந்து எழுதிய அவ்வளவு ரகசியங்களையும் கேட்டார். போகர் எழுதியதை, போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர்களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த அவர், போகரின் முயற்சியை ஆசிர்வதிக்கவே செய்தார். அதன்பின் இவர் புகழ் பலமடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள், குளிகைகள் பெற்றுச் சென்றனர்.

மொத்தத்தில் மனித சமூகத்தை, இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே, தேவர்களுக்கும் கந்தவர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார்.

அண்டை நாடான சீன தேசமும், நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும், புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால், மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது. அங்கே, 'போ யாங்' என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள், கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து, சீனராகவே வாழ்ந்தார் என்றும் ஒரு கதை உண்டு.

சீனர்கள், இந்தியர்களில் இருந்து உணவுப் பழக்க வழக்கங்களில் பெரிதும் வேறுபட்டவர்கள். இந்திய உணவில் எண்ணெய், கொழுப்பு சத்து, காரம், புளிப்பு, உவர்ப்பு என்றெல்லாம் பல சுவைகள் உண்டு. சீனர்களிடம் அப்படி இல்லை. அவர்களது உணவுமுறை ரஜோ குணத்தை தூண்டுவதாகவும்; எலும்பு, நரம்பு இவைகளை வலுவாக வைத்துக் கொள்ளத் தக்கதாகவும் இருந்தமையால், அவர்களிடம் பல வித்யாசமான பயிற்சி முறைகள் இருந்தன.அதில் 'ரஜோலி' என்னும் யோக முறையும் ஒன்று. போகர் அதை ஆர்வத்துடன் பழகிடும்போது தலையில் அடிபட்டு அவருக்குள் அவர் பற்றிய அவ்வளவு எண்ணங்களும் மறைந்துபோன. பின்னர், அவரைத் தேடிக்கொண்டு வந்த போகரின் மாணாக்கர்களில் ஒருவரான புலிப்பாணி, போகரின் நிலை கண்டு கலங்கி, அவரைத் தன் முதுகில் சுமந்துகொண்டு இந்தியா திரும்பினார் என்றும் சொல்வர்.

அதன்பின் குருவுக்கே அவரிடம் கற்றதை உபதேசித்து, அவருக்குள் மீண்டும் பழைய எண்ணங்களை தோற்றுவித்தார். ஒரு சீடன், குருவுக்கு உபதேசிப்பது என்பது காரியப் பிழையில் முடிந்து, முடிவில் அவனையே சாபத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதால்,புலிப்பாணி, போகரின் தண்டத்திற்கு உபதேசிப்பது போல போகருக்கு உபதேசித்து போகரை மீண்டும் நிலை நிறுத்தினார். அதன்பின், போகர் ஒரு புத்துயிர்ப்போடு எழுந்தார். பலவித அனுபவங்களால் பழுத்த ஞானியாகிவிட்ட அவர், இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் பழனி. அங்கேயே முக்தியும் அவருக்குக் கிட்டியது. மொத்தத்தில் போகர் என்றால் 'நவநாயகர்' என்றும் கூறலாம்.

அகஸ்திய முனிவர் போக சித்தரை சீன தேசத்தவர் என்று கூறுகிறார். புலிப்பாணியின் குரு என்றும் இவருடைய தாய் தந்தையர் சீனாவில் பெண்களுக்குத் துணிகள் வெளுத்துக் கொடுத்துப் பிழைத்து வந்தனர் என்றும் அகத்தியர் கூறுகிறார். போகர் திருமூலர் காலத்தினைச் சேர்ந்தவரென்றும் பழனி மலையில் வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷானக் கட்டில் தயாரித்தார் என்றும் அவருடைய வரலாறு பேசப்படுகிறது. போக முனிவர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார்.

அகத்தியர் தமது சௌமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத் தருகிறார்.

1. போகர் – 12,000

2. சப்த காண்டம் – 7000

3. போகர் நிகண்டு – 1700

4. போகர் வைத்தியம் – 1000

5. போகர் சரக்கு வைப்பு – 800

6. போகர் ஜெனன சாகரம் – 550

7. போகர் கற்பம் – 360

8. போகர் உபதேசம் – 150

9. போகர் இரண விகடம் – 100

10. போகர் ஞானசாராம்சம் – 100

11. போகர் கற்ப சூத்திரம் – 54

12. போகர் வைத்திய சூத்திரம் – 77

13. போகர் மூப்பு சூத்திரம் – 51

14. போகர் ஞான சூத்திரம் – 37

15. போகர் அட்டாங்க யோகம் – 24

16. போகர் பூஜாவிதி – 20

இவைகளில் போகர் 12000 மற்றும் இரண வாகடம் நூல்கள் கிடைக்கவில்லை. போகரின் நூல்கள் யாவுமே அமுதமாகும் என்று காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார். போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர்.

இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகிலிருக்கும் நவநாத சித்தர்கள் சமாதியை அடைந்தார். ஒன்பது சித்தர்களும் போகருக்கு தரிசனம் தந்தனர். போகரும் இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரவித்தையைக் கற்றுத் தருமாறு கேட்டார்.

“தகுதியுள்ளவர்களுக்கு காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு அவர்களை நீண்ட காலம் வாழவை. மரணமடைந்தவர்களுக்காக மனதைக் குழப்பிக் கொள்ளாதே” என்று அறிவுரை கூறினர். அதுவரையில் போகர் அறிந்திராத காய கல்ப முறைகளையும் கற்றுக் கொடுத்து மறைந்தனர்.

போகர் தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். கொஞ்ச தூரத்தில் ஒரு புற்றிலிருந்து ஒளிக் கற்றை ஒன்று புலப்பட்டது. அந்த ஒளியை தொடர்ந்து புற்றின் முன் போய் நின்றார். யாரோ ஒரு சித்தர் இந்தப் புற்றின் உள்ளே தம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த போகர், அந்தப் புற்றை வலம் வந்து அதன் அருகிலேயே ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் ஆனது, போகரின் தியானத்தால் புற்றில் இருந்த சித்தரின் தியானம் கலைந்தது. உடனே அவர் புற்றை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.

போகர், “தங்களை தரிசித்ததில் வாழ்வின் பெரும்பயனை அடைந்தேன்” என்று கூறினார். சித்தர் அங்கிருந்த மரங்களில் ஒன்றைக் காட்டி “போகா! அந்த மரத்தின் பழங்களில் ஒன்றைச் சாப்பிட்டால் போதும் ஆயுள் முழுவதும் பசிக்காது, முடி நரைக்காது, பார்வை மங்காது, இவ்வளவு ஏன்? எல்லோருக்கும் அச்சம் தரும் முதுமை என்பதும் வரவே வராது. தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும்” என்றார். போகர் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார்.

https://www.facebook.com/groups/305917699863621

சித்தர் புலித்தோல் ஆசனம் ஒன்றைக் கொடுத்து, “இது உனக்கு தவம் செய்ய உதவும்” என்றார். அந்த சமயத்தில் பதுமை ஒன்று அவர் எதிரில் தோன்றவே “போகா! இனி உனக்கு தேவையானவைகளை இந்த பதுமை சொல்லும்!” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தியானத்தில் மூழ்கி விட்டார். பதுமை மூலிகை ரகசியங்கள், போகருக்கு உயிரின் தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்த உடலில் அது படும் துன்பம் ஆகிய நிலைகளைத் தெளிவாக உணர்த்தியது. அதைக் கேட்டு ஆச்சரியத்தில் இருக்கும் போது பதுமை வந்தது போலவே மறைந்தும் விட்டது.

பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு உணவு சமைத்து உண்ட பின் நீர் வேட்கையால் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் கும்பலாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். போகர் அவர்களிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார்.

“யார் நீ! அப்பாலே போ! அருகில் வந்தாலே நாற்றமடிக்கிறது” என்று எரிந்து விழுந்தனர். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து அந்த வழியாக வந்த பூனை ஒன்றின் காதில் போகர் வேதத்தை ஓதிவிட்டார். பூனை நன்றாக உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொட்ங்கியது.

அந்தணர்கள் தாங்கள் அறியாமல் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர். “ஐயனே எங்கள் வறுமை அகல தாங்கள் வழி செய்ய வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டனர்.

போகர் அவர்களுடைய வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார்.

போகர் தவம் செய்து முடித்த இரச மணிக் குளிகைகளின் ஆற்றல் கண்டு மிகவும் வியப்படைந்தார். அதே போல குளிகைகளைச் செய்து மற்ற சித்தர்களுக்கும் அளிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார்.

அதற்காக ரோமாபுரி சென்று மிகத் தூய்மையான ஆதி ரசம் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தார். உடனே குளிகைகளில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு ரோமாபுரியில் தோண்றி அங்கு இருந்த இரசக் கிணற்றைத் தேடிப் பிடித்தார். இரசத்தை சுரைக் குடுவையில் நிரப்பிக் கொண்டு விண்ணில் தாவினார்.

அதன்பிறகு ஆதிரசத்துடன் விண்மார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.

தஞ்சையில் பிரகதீசுவரர் ஆலய லிங்கப் பிரதிஷ்டைக்காக காக்கையின் கழுத்தில் ஓலை ஒன்றை கருவூராருக்கு அனுப்பினார். கருவூரானும் அதன் படியே செய்து லிங்கப் பிரதிட்டை செய்து முடித்தார்.

போகர், தட்சிணா மூர்த்தி உமைக்கு அருளிச் செய்த ஞான விளக்கம் ஏழு சட்சத்தையும் ஏழு காண்டமாக்கி தமது மாணவர்களுக்கு உபதேசித்தார். மற்ற சித்தர்கள், “இறைவன் உபதேசித்ததை வெளியில் சொல்வது குற்றம்” என்று கூறி இத்தகைய செயலை அவர் உடனே நிறுத்தியாக வேண்டும்” என்று தட்சிணாமூர்த்தியிடம் முறையிட்டனர்.

தட்சிணாமூர்த்தி போகரை அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார். “போகரே! நீர் பூனைக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்து ஓதச் செய்தீர், சிங்கத்திற்கு ஞானம் கொடுது அரசனாக்கினீர், மேருமலைக்குச் சென்று தாதுக்களைக் கொண்டு வந்தீர், ரோமபுரி சென்று ஆதிரசம் கொண்டு வந்தீர், இதையெல்லாம் விட நாம் உமாதேவிக்கு கூறிய தீட்சை விதி, யோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு காண்டமாக உருவாக்கியுள்ளீராமே! நீர் செய்த நூலைச் சொல்வீராக” எனக் கேட்டு போகரின் நூலாழத்தினையும் பொருட்சிறப்பையும் உணர்ந்து மகிழ்ந்து வாழ்த்தினார்.

போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர்முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம், முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார்.

போகர் கனவில் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாஷாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். பழனிமலை இறைவன் திருமேனியைத் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார். ஒன்பது விதமான விஷங்களை (நவ பாஷாணங்கள்) முயன்று கூட்டி உருவாக்கிய திருமேனியில் ஊறிய விபூதியும், பஞ்சாமிர்தமும் போகருக்கு உள்ளொளியைப் பெருக்கியது.

இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரனை உருவாக்கியவரும் போகரே என்றும் கூறுவதுண்டு. பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.

போகர் பூசித்து வந்த புவனேச்வரி அம்மையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும் புவனேச்வரி அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்றிருப்பதாக கூறப்படுகிறது. இங்கு கூறப்பட்ட வரலாற்று செய்திகளனைத்தும் சதுரகிரி தலப்புராணத்தில் கூறப்பட்டவை.!

https://www.facebook.com/groups/305917699863621

**சித்தர் அறிவியல்**

நன்றி 

Ravi Lakshmanasami.

Saturday, September 25, 2021

திருப்பதி பெருமாளை தரிசிக்க முடியவில்லையே

இனிமேல் யாரும் திருப்பதி பெருமாளை 5 நிமிடம், 10 நிமிடம் என தரிசிக்க முடியவில்லையே என ஏமாற்றம் அடையாமல் இருங்கள்.

நேராக செங்கல்பட்டிற்கு செல்லுங்கள், 50ம் எண் கொண்ட திருப்போரூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறி திருவடிசூலம் என்னும் மிக அழகிய குக்கிராமத்தில் இறங்குங்கள்.  2 கிலோமீட்டர் நடக்க வேண்டும். வழியில் மிகப் பழமையான திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தொண்டை நாட்டு திருத்தலமான இடைச்சுரநாதர்(சிவன்) ஆலயம் வரும். இவரையும் அம்பாளையும் தரிசித்து விட்டு இடது புறமாக மறுபடியும் நடங்கள். மலை ஒன்று ஆரம்பமாகும். அப்படியே வலது புறம் திரும்பி நடங்கள். நீங்கள் 7 அழகிய மலைகளைக் காண்பீர்கள். உங்கள் கண்களுக்கு இரு சிறிய கோயில்கள் தென்படும். இடதுபுறமாக ஒரு சாலை பிரியும், அதைப் பின்பற்றி சென்றீர்கள் என்றால்...

உலகிலேயே மிக உயரமான 51 அடி அற்புதமான தரிசனம் தரும் கருமாரி அம்மனை சேவிக்கலாம். அப்படி ஒரு அழகு, தெய்வாம்சம், காண கண்கள் கோடி வேண்டும். மிகவும் விஸ்தாரமான இடத்தில், கோழியும், கெளதாரியும், வான்கோழியும் சுற்றி திரியும் இயற்கை எழில் கொஞ்சும் அழகுள்ள இடத்தில் இந்த கருமாரி வீற்றிருக்கிறாள். நீங்கள் உங்களையே மறந்துவிடுவீர்கள்.

கருமாரி அன்னையின் பின்புறமே அவர் அண்ணன் பெருமாள் ஸ்ரீநிவாசனாக மிகப் பெரிய அளவில் வீற்றிருக்கிறார். திருப்பதி சென்று சரியாக கடவுளை காண முடியாத ஏக்கத்தில் இருப்பவர்கள் இங்கே நம்மூரிலேயே, சென்னைக்கு அருகிலேயே, செங்கல்பட்டிலிருந்து ஒரு 10 கிலோமீட்டர் தொலைவிலேயே இந்த அதி அற்புத தரிசனம் செய்யலாம். அண்ணனையும், தங்கையையும் ஒரு சேர காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இவர்கள் இருவரையும் தரிசித்து விட்டு, இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் அஷ்டபைரவர் கோயிலைப் பார்க்காலாம். இங்கே உலகத்தில் வேறெங்கும் காணமுடியாத மிகப்பெரும் கோயிலினுள் அஷ்டபைரவர்களை தரிசிக்கலாம். கோயில் நுழைவு வாயிலில் பௌர்ணமி குகை கோயில் உள்ளது. ஆனால் இந்த குகை கோயிலில் இருக்கும் சிவனைக்காண நீங்கள் பௌர்ணமிக்கு 3 நாட்கள் அல்லது பூரட்டாதிக்கு 3 நாட்கள் முன்பே பதிவு செய்துவிட்டுத் தான் செல்ல முடியும். சிவனை இங்கு பாதாளத்தில் காணலாம். 

முக்கிய குறிப்பு - சிவனைப் பார்க்க வேண்டுமெனில் நீல நிற ஆடைஅணிந்து தான் செல்ல வேண்டும்.*

சிவனடியார்களே, சிவபக்தர்களே, தயவுசெய்து இந்தக் கோயிலைப் பற்றி உங்களுக்கு தெரிந்தவர்களிடத்தில் சொல்லவும். இந்தப் பதிவை அதிகம் பகிரவும்.

வசதியுள்ளவர்கள் கார், பைக், வேன் போன்ற வாகனங்களில் வருகிறார்கள்.

வசதியில்லாதவர்கள் நடந்துதான் வரவேண்டும். இது ஒரு குக்கிராமம் என்பதால் ஆட்டோவோ, ஷேர் ஆட்டோவோ இல்லை.

ஆள் அரவவமற்ற பகுதி என்பதால் காலையில் சென்று மதியமோ அல்லது மாலை இருட்டுவதற்குள் திரும்பி வந்து விடுவது போல் உங்கள் பிரயாணம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

சைவமும், வைணவமும் ஒன்றாக கலந்து ஒரு சுற்றுலா சென்ற மகிழ்ச்சியும் கிடைக்கும்.

Thursday, September 16, 2021

நட்பு உடைந்து

 நட்பு உடைந்து முகநூலானது ...

சுற்றம் உடைந்து வாட்சப் ஆனது ...

வாழ்த்துக்கள் உடைந்து ஸ்டேட்டஸ் ஆனது ...

உணர்வுகள் உடைந்து ஸ்மைலியாய் ஆனது ...

குளக்கரை உடைந்து குளியலறை ஆனது ...

நெற்களம் உடைந்து கட்டடமானது ...

காலநிலை உடைந்து வெப்ப மயமானது ...

வளநிலம் உடைந்து தரிசாய் ஆனது ...

துணிப்பை உடைந்து நெகிழியானது ...

அங்காடி உடைந்து அமேசான் ஆனது ...

விளைநிலம் உடைந்து மனைநிலம் ஆனது ...

ஒத்தையடி உடைந்து எட்டு வழியானது ...

கடிதம் உடைந்து இமெயிலானது ...

விளையாட்டு உடைந்து வீடியோகேம் ஆனது ...

புத்தகம் உடைந்து  இ-புக் ஆனது ...

சோறு உடைந்து 'ஓட்ஸ்'சாய்ப் போனது...

இட்லி உடைந்து பர்கர் ஆனது ...

தோசை உடைந்து பிட்சாவானது ...

குடிநீர் உடைந்து குப்பியில் ஆனது ...

பசும்பால் உடைந்து பாக்கெட் ஆனது ...

வெற்றிலை உடைந்து பீடாவானது ...

தொலைபேசி உடைந்து கைபேசியானது ...

வங்கி உடைந்து பே டி எம் ஆனது ...

நூலகம் உடைந்து கூகுளாய்ப் போனது ...

புகைப்படம் உடைந்து செல்ஃபியாய் ஆனது ...

மனிதம் உடைந்து மதவெறியானது ...

அரசியல் உடைந்து அருவெறுப்பானது ...

பொதுநலம் உடைந்து சுயநலமானது ...

பொறுமை உடைந்து அவசரமானது ...

ஊடல் உடைந்து விவாகரத்தானது ...

காதல் உடைந்து காமமாய்ப் போனது ...

நிரந்தரம் உடைவது நிதர்சனம் ஆகையால் உடைவது உலகினில் நிரந்தரமானது ..!

Thursday, August 19, 2021

அர்ச்சகர்கள் விஷயம்

அர்ச்சகர்கள் விஷயம்

இது பலருக்கு பிடிக்கமால் போகலாம். ஆனால் இது யதார்த்த நிலை.

எழுத்து பிடிக்காதவர்கள் என்னை மன்னிக்கவும்

நான் அந்த கோவிலுக்கு 25 வருடம் கழித்து போயிருந்தேன். 

பெரிய மாற்றம் அந்த கிராமத்தில் இல்லை. ஆனால் மண் சாலை இல்லாமல் தார் சாலை போடப்பட்டிருந்தது. 

நாகரீக வளர்ச்சியின் முழு அடையாளம் தெரியவில்லை என்றாலும் அலைபேசியை கையில் வைத்து பேசியபடி ஒரிருவர்  என்னை கடந்தனர்.

கோயிலுக்குள் நுழைந்தேன். கடைசியாக எப்பொழுது புதுப்பிக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை ஆனால் சுத்தமாக இருந்தது. பெருமாள் சன்னதியில் திரை போடப்பட்டிருக்க, பொறுமை இல்லாமல் மனம் தவித்தது. 

சிறிது நேரத்தில் உள்ளேயிருந்து பட்டாச்சாரியர் வெளியே வர, அவருக்கு வயது நிச்சயம் 70 ஆவது இருக்கும். கன்னத்தில் பழுதடைந்த தார் சாலைப் போல சிறு குழிகள், நெற்றியில் நீண்ட திருமண் சகிதம் வாங்கோ இதோ சித்த நேரம் முடிஞ்சுடும் அப்புறம் பெருமாளை சேவிக்கலாம்.

நடையில் தளர்வு இருந்தாலும் உறுதி இருந்தது. தனி ஒரு மனிதராக அந்த கோயில் நிர்வாகம் அவர் தானென்று புரிந்தது. 

மடப்பள்ளியில் இருந்து ப்ரசாதம் கொண்டு வந்து சாற்றுமறை முடித்து பெருமாள் சேவை முடிந்தது. 

தயிர்சாதம் ப்ரசாதமாக கொடுக்க, திவ்யமாக இருந்தது.

எங்கே இருந்து வரேள்? 

ஸ்வாமின் அடியேன் சென்னை, சொந்த ஊர் பக்கத்தில் இருக்கு, இந்த பெருமாளை சேவிக்கனுமென்று நீண்ட நாள் ஆசை, இன்னிக்குத்தான் நிறைவேறுச்சு.

ரொம்ப சந்தோஷம், ரொம்ப விஷேஷமான பெருமாள் இவர், இங்க வந்து போனாலே ஒரு பெரிய நிம்மதி கிடைக்கும் எல்லார்க்கும். ப்ரார்த்தனையே வேண்டாம். வரவா எல்லாருக்கும் நிம்மதியை கொடுக்கும் பெருமாள் இவர். 

அவரின் பேச்சில் ஒரு மகனை பாராட்டும் தந்தையின் நோக்கமும் பெருமையும் எனக்கு தெரிந்தது. 

நிச்சயம் பெருமாளை ஒரு குழந்தையை போல இவர் பார்த்துக்கிறவர் என்பது நன்றாக புரிந்தது. 

பெரிய கோயிலில் இருக்கும் பட்டாசாரியர் போல இவரிடம் பொருளாதார வளமை இருப்பதாக தெரியவில்லை.

நிறைய பேசினேன். நிறைய கேட்டேன், ஆழ்வார் அமுதம் கூடவே நிறைவான ப்ரசாதமாகவும் கிடைத்தது. 

எதாவது திருக்கோயிலுக்கு செய்யனும் என்று பிரியப்படறேன் என்று சொன்னேன். 

அவர் உடனே எதுவும் சொல்லவில்லை. சற்று கண்களை மூடிக் கொண்டார். பின் மெதுவாக சொன்னார்.

நேக்கு ஒரு ஒத்தாசை செய்யுங்கோ, தினம் பெருமாளுக்கு விளக்கு ஏற்ற எண்ணெய் வேண்டும். மளிகை கடைக்கு போய் வாங்கிண்டு வந்து கொடுக்கிறேளா?

எனக்கு பகீரென்று தூக்கி வாரி போட்டது. தினம் விளக்கேற்ற வேண்டும். அதற்கு எண்ணெய் வேண்டும். ஆனால் இது ஒரு கிராமக் கோயில், இவருக்கு பெரிய வருமானமும் கிடையாது. சம்பளம் என்ன வரும் இவருக்கு?

எனக்கு வர 3300 சம்பளத்தில் நான் தான் வாங்கிறேன் தினமும். ரொம்ப கஷ்டமா இருக்கு. நேக்கு வேறு சம்பாத்தியமும் இல்லை. பசங்க யாரும் நேக்கு கிடையாது. நேக்கும் என் ஆம்படையாளுக்கும் இந்த பெருமாள் தான் பிள்ளை. அவனுக்கு தினம் கொஞ்சம் ப்ரசாதம் , தினம் விளக்கேற்றனும். அதான் கேட்டுட்டேன் , தயவு செய்து தப்பா நினைக்காதீங்க.. அவர் குரல் கம்மிப் போய் என்னிடம் கேட்க என் கண்களில் நீர் முட்டி நின்றது. 

இதோ வரேன் ஸ்வாமி என்று சொல்லி வெளியே வந்தேன், அருகில் இருக்கும் மளிகை கடைக்கு போய்….

இந்தாங்கோ, இரண்டு லிட்டர் எண்ணெய், வாங்கிண்டு வந்திருக்கேன், 

அவர் முகத்தில் பெரிய திருப்தி. ரொம்ப சந்தோஷம் ,நீங்க நன்னா பேஷா இருப்பேள் என்று மனமார வாழ்த்தினார்.

நான் சொன்னேன் அவரிடம், அந்த மளிகை கடைக்காரிடம் சொல்லி இருக்கேன். மாதம் இரண்டு லிட்டர் அல்லது எத்தனை லிட்டர் எண்னெய் வேண்டுமென்று நீங்க கேட்டாலும் கொடுக்கச் சொல்லியிருக்கேன். பத்து கிலோ அரிசி மாதம் கொடுக்கச் சொல்லியிருக்கேன் மாதா மாதம் ப்ரசாத நேவித்யத்துக்கு. ஒரு வருடத்துக்கு தேவையான பணம் அவர்கிட்ட கொடுத்துட்டேன் ஸ்வாமின். என் போன் நம்பரையும் கொடுத்திருக்கேன், பணம் தேவையென்றால் என்னிடம் கேக்கச் சொல்லியிருக்கேன், நீங்க கோயில் கைங்கரியத்துக்கு தேவையான எதுவும் அவரிடம் வாங்கிக்கோங்க!!

மனிதர் எழுந்து நின்னுட்டார், அவருக்கு பேச்சே வரலை. பெருமாளே என்று அரற்றினார். 

கண்ணீர் மல்க, என் கையை பிடித்து என் கண்ணை வெகு அருகில் பார்த்து நல்லா இருப்பேள் என்று தன் கைகளால் என் தலை மீது வைத்து, 

“ நீங்காத செல்வம் நிறைந்தேளோர் எம்பாவாய்” என்றார்.

இது தான் யதார்த்தம், எத்தனை கோயில்கள் இப்படி பராமரிக்கப்படுகின்றன என்று அரசுக்கு தெரியுமா? 

இப்படி இருக்கும் கோயிலை தேர்ந்தெடுத்து, அங்கு புது அர்ச்சகர்களை அனுப்ப வேண்டும்.

 அவர்களுக்கும் அப்படி ஒரு பக்தி வர வேண்டும். நிச்சயம் வரும். அப்பொழுது தான் இறை நம்பிக்கை அதிகம் உணரப்பட, ஒரு பெரும் ஒற்றுமை இந்த சமுதாயத்தில் ஏற்படும். 

இப்படி 3300 ரூ சம்பளம் வாங்கி ப்ராமணர்கள் என்ன பெரிதாக சுகம் கண்டார்கள்? 

வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் என்றும் இறைப்பணியில் இருந்து குடும்பத்துக்கு பெரிதாக எதுவும் சம்பாதித்து வைக்க முடியாமல் கஷ்டப்பட வேண்டாமே?

எல்லா ஜாதியினரும் அர்ச்சகராக வருவது என்பதும் வரவேற்க வேண்டிய ஒன்று தான். 

ஆனால் இந்த தியாகம் பொறுமை பக்குவம் நேர்த்தி, ஆகம விதிகள் அனைத்தும் சரியாக அமைவர்களை தேர்ந்தெடுத்தால், ஆலயம் இருக்கும் இறைவன் ஜாதி பார்த்தா தன் பூஜையை நிறைவேற்றிக் கொள்ளப் போகிறான். 

சோ சாரின் "எங்கே ப்ராமணன்" கதை படித்தவர்களுக்கு நிச்சயம் வாழ்வியல் முறை தெரிந்திருக்கும். இதை ப்ராமணர்களுக்கு எதிராக நடத்தப்படும் விஷயம் என்பதைச் சொல்லுவதையே நான் எதிர்க்கிறேன், அப்படிச் சொல்லுவதால் இன்னமும் விரோதம் தான் வளரும். 

இந்து மதம் என்பது ப்ராமணர்கள் என்ற எண்ணம் தான் திராவிட சித்தாந்த அரசியல்வாதிகளுக்கு அடிப்படை.. அதை தகர்க்க இது வளர்க்கப்பட வேண்டும். 

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆக இறை பக்தி வளர, இந்து மத ஒற்றுமை ஒங்க, அதில் ப்ராமணர்களுக்கான அங்கம் இருக்கவே இருக்க, எதற்காக இதற்கு பெரும் கூச்சல் போட வேண்டும்?

விடுங்கள். இறைவன் அனைவருக்கும் பொதுவானவன் தான், வம்சாவழி தொழில் செய்ய எத்தனை குருக்கள் அல்லது பட்டாசாரியார் வாரிசுகள் தயாராக இருக்கிறார்கள்?

 இப்படி அரசு நேரிடையாக அர்ச்சகர் நியமிக்க, அப்படியாவது கோயில் விளக்குக்கு எண்ணெய் கிடைக்குதா என்று பார்க்கலாம்? 

வரக்கூடியவர் எந்த ஜாதியாக இருந்தாலும், மேலே சொன்ன கதையில் அமைந்த பெரியவர் போன்ற மன நிலை உடையவராக அமைந்தால், அது தான் இறை நம்பிக்கைக்கும் இந்த மத ஒற்றுமைக்கும் இந்த அரசு செய்திருக்கக் கூடிய ஒரு பெரிய உதவியாகும்.

Tuesday, June 22, 2021

நவ நரசிம்மர்கள்

 நவ நரசிம்மர்கள்...

1. அகோபில நரசிம்மர்: உக்ரமூர்த்தியான இவர் மலைமீது எழுந்தருளியுள்ளார். புராதனப் பெருமாள் இவரே.

2. பார்க்கவ நரசிம்மர்: மலையடிவாரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். ராமரால் வழிபடப்பட்டவர் இவர். (பார்க்கவன் என்பது ராமபிரானின் திருப் பெயர்களுள் ஒன்று.)

3. யோகானந்த நரசிம்மர்: மலைமீது, தென்கிழக்கு திசையில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளார். உக்கிரமாக அவதரித்த நரசிம்மர் இங்கே யோக நிலையில் அமர்ந்துள்ளார். பிரகலாதனுக்கு யோகம் கற்பித்த மூர்த்தி இவர்.

4. சத்ரவத நரசிம்மர்: 

கீழ் அகோபிலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். குடை வடிவில் அமைந்துள்ள கோவிலில் பத்மபீடத்தில் அமர்ந்த வண்ணம் காட்சி தருகிறார் நரசிம்மர். அரிய வகை கருங்கல்லாலான திருவடிவம்.

5. க்ரோத (வராக) நரசிம்மர்: பாபநாசினி நதிக்கரையின் கிழக்கில் லட்சுமி நரசிம்மரும் வராக நரசிம்மரும் கோவில் கொண்டுள்ளனர்.

இரட்டை நரசிம்மர் தலம் எனும் பெயருடைய இவ்விடத்திலிருந்து பார்த்தால் வேதகிரி, கருடாத்ரி மலைகளுக்கிடையேயான பள்ளத் தாக்கு தெரியும். வராக குண்டத்திலிருந்து பாபநாசினி நதி ஓடி வருவதையும் காணலாம்.

6. கராஞ்ச (சாரங்க)நரசிம்மர்: மேல் அகோபிலத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளார். கராஞ்ச மரத்தடியில் கோவில் கொண்டு, கையில் வில்லேந்தியுள்ளதால் இப்பெயர் பெற்றார்.

7. மாலோல நரசிம்மர்: "மா' என்றால் லட்சுமி."லோலன்” என்றால் பிரியமுடையவன். நரசிம்மரின் உக்கிரத்தை லட்சுமி தணித்த படியால், லட்சுமிப்பிரியனான பெருமாள் பிராட்டியை மடியில் அமர்த்தியபடி லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுக்கிறார்.

அகோபிலத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கோவில் கொண்டுள்ளார்.

8. பாவன நரசிம்மர்: 

பவனி நதிக்கரையில் கோவில் கொண்டதால் இப்பெயர் பெற்றார். அகோபிலத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தலத்தில் வருடாந்திர உற்சவம் மிகச் சிறப்பாக நடக்கும்.

9. ஜ்வாலா நரசிம்மர்: 

மேரு மலையில் வீற்றுள்ளார். இரண்யனை வதைத்தவர் இவரே. வதைத்த இடமும் இதுவென்கின்றனர். இந்த நரசிம்மரைத் தரிசிக்க மிகக் குறுகிய வழியில் செல்ல வேண்டும். எட்டு கைகளுடனும், நான்கு கைகளுடனும் இரண்டு நரசிம்மர் திருவடிவங்கள் உள்ளன.

சிங்க முகமும், மனித உடலுமுள்ள நரசிம்மருக்குப் பொதுவாக இருப்பது ஒரு தலை, நான்கு கைகளே.

இரண்யனுக்கு அஞ்சி வேறு பகுதிகளில் ஒளிந்து வாழ்ந்த முனிவர்கள், இரண்ய வதத்திற்குப்பின் பகவானிடம் நரசிம்மத் திருக்கோலத்தைத் தங்களுக்குக் காட்டியருள வேண்டும் என்று வேண்டினர்.

அதற்கிசைந்த பெருமாள் அவ்வண்ணமே முனிவர்களுக்குக் காட்சி தந்தார். அவ்வாறு காட்சி தந்த தலங்கள் தமிழகத்தில் எட்டு இடங்களில் உள்ளன.

இவற்றில் பூவரசன் குப்பம் நடுவில் இருக்க, இதைச் சுற்றி சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோவில் (தென் அகோபிலம்), பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் லட்சுமி நரசிம்மர், சித்தனைவாடி நரசிம்மர் ஆகிய தலங்கள் அமைந்துள்ளன !

Monday, June 07, 2021

பாண்டிச்சேரியில் மணக்குள விநாயகர்

பாண்டிச்சேரியில்  மணக்குள விநாயகர்,,,

1. இந்திய நாட்டிலேயே விநாயகருக்கு தங்கத்தால் ஆன மூலஸ்தான கோபுரம் இத்தலத்தில் மட்டும்தான்உள்ளது 

2. விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும் தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பெரும்பாலும் பிரம்மச்சாரியாக பாவிக்கப்படும் விநாயகர், இத்தலத்தில் சித்தி, புத்தி என்னும் மனைவிகளும் காட்சியளிக்கிறார்.

3. பாண்டிச்சேரி நகரின் பழமையான வரலாற்று சம்பவங்களோடு மணக்குள விநாயகர் பின்னி பிணைந்துள்ளார். எனவே புதுச்சேரி வரலாற்றோடு மணக்குள விநாயகருக்கு முக்கிய பங்கு உண்டு. பாண்டிச்சேரிநகரின் நம்பர்-ஒன் ஆன்மீகத் தலமாக மட்டுமின்றி நம்பர்-ஒன் சுற்றுலாத் தலமாகவும் மணக்குள விநாயகர் ஆலயம் திகழ்கிறது.

4.  இந்தக் கோயில்   8,000 சதுர அடி பரப்பில்  அமைந்துள்ளது.

5. மணக்குள விநாயகர் தலத்தின் மூலவர் இருக்கும் இடம் ஒரு கிணறு ஆகும். பீடத்தின் , இடப்பக்கம் மூலவருக்கு அருகிலேயே ஓர் சிறைய குழி ஒன்று உள்ளது. இது மிகவும் ஆழமான குழியாகும். இதன் ஆழத்தை தற்போது வரை யாராலும் கண்டறிய முடியவில்லை. மேலும், இதில் வற்றாத நீர் எப்போதுமே இருக்கும்.

6. 1923-ம் ஆண்டு வாக்கில் பாண்டிச்சேரியில் அச்சுகாபி விருத்தினிஎன்றபத்திரிகையைஒர்லையான்பேட்டையைச் சேர்ந்த வெங்கடாசல நாயக்கர் நடத்தி வந்தார். அந்த பத்திரிகையில் மணக்குள விநாயகர் பற்றி நிறைய தகவல்கள் வெளியிடப்பட்டன.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கந்தையாபிள்ளை 1936-ம் ஆண்டு பாண்டிச்சேரி வந்து மணக்குள விநாயகர் மீது பல பாடல்கள் பாடினார்.

பாண்டிச்சேரியைச் சேர்ந்தபெரியசாமி பிள்ளை, மாணிக்கப்பிள்ளை, ரத்தினப் பிள்ளை, ஸ்ரீலஸ்ரீ நாகலிங்க சுவாமிகள், சாமிபொன்னுப்பிள்ளை, பண்டிதர் சுப்புராய பக்தர், சோம சுந்தரம் பிள்ளை, கந்தசாமி உபாத்தியாயர், ராமானுஜ செட்டியார், பங்காரு பக்தர், நா.வேங்கடாசல நாயக்கர், வரதப்பிள்ளை உள்பட ஏராளமானவர்கள் மணக்குள விநாயகர் மீது பதிகங்களும், பாடல்களும் இயற்றியுள்ளனர்.

பாண்டிச்சேரியில் 1908 முதல் 1918 வரை பத்து ஆண்டுகள் தங்கி இருந்த முண்டாசுக் கவிஞர் பாரதி, இந்த விநாயகரை போற்றிநான்மணிமாலை என்ற தலைப்பில் 40 பாடல்கள் பாடியுள்ளார். மணக்குள விநாயகரை நெசவாளர்கள் எப்படி யெல்லாம் போற்றி பாதுகாத்தனர் என்பதை சிவமதி சேகர் தனது புதுவையும் மணக்குள விநாயகரும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

7. மணக்குள விநாயகரை பிரெஞ்சுகாரர்களும், ஆங்கிலே யர்களும் வழிபட்டதால் அந்த விநாயகருக்கு வெள்ளைக்கார பிள்ளையார் என்றபெயரும் ஏற்பட்டது.

8. மணக்குள விநாயகர், டச்சுக்காரர்கள், போர்ச்சுக் கீசியர்கள், டேனீஷ்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக் காரர்கள் என 5 வெளிநாட்ட வர்களின் ஆட்சி முறைகளை கண்டவர் ஆவார்.

9. பாண்டிச்சேரி நகரைகைப்பற்றவெளிநாட்டுக்காரர்கள் நான்கு தடவை படையெடுத்து வந்து போரிட்டனர். அந்த நான்கு முற்றுகையின் போதும் மணக்குள விநாயகர் ஆலயம் எந்த சேதமும் அடையாமல் தப்பியது.

10. கோவில் கொடி மரத்துக்கு 1957-ம் ஆண்டு வடநாட்டு தொழில் அதிபர் ஒருவர் தங்க முலாம் பூசிய தகடு போர்த்தினார்.

11. நடேச குப்புசாமிபிள்ளை என்பவர் 1909-ம் ஆண்டு சித்திரை மாதம் முதல் நாள் முதல் அபிஷேகம் செய்தார். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அவர் இந்த அபிஷேகத்தை தொடர்ந்து நடத்தினார். 100 ஆண்டுகள் கடந்தும் தற்போதும் அவர் மகன் நடேச.கு.அர்த்தநாதன் பிள்ளை இந்த அபிஷேக ஆராதனையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

12. மணக்குள விநாயகர் கோவிலில் ஆவணி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது செங்குந்த மரபினர், ஆரிய வைசிய மரபினர், வேளாளர்கள், பிராமணர்கள், வன்னியர்கள், கவரா நாயுடுகள், விஸ்வகர்மமரபினர்,யாதவர்கள்,சேனைத்தலைவர் மரபினர், சான்றோர் குல மரபினர், ரெட்டியார் மரபினர், நாட்டுக்கோட்டை நகரத்தார், வணிக வைசிய மரபினர் என அனைத்துஇனத்தவர்களும் சுவாமி வாகன ஏற்பாடுகளைசெய்கிறார்கள்.

13. மணக்குள விநாயகர் இடம்புரி விநாயகர்ஆவார். இவர்கிழக்குதிசைநோக்கிஅருள்பாலித்துவருகிறார்.

14. கருவறையில் தொள்ளைக்காது சித்தர் அரூப முறையில் பூஜைகள் செய்வதாகக்கூறப்படுகிறது.

15. விநாயகர் இந்து மதக் கடவுளாக இருந்தாலும், சுற்றுவட்டார, வெளிநாட்டு கிருத்துவ, முஸ்லிம் பயணிகள்கூடஅதிகளவில்இங்கேவருவதுவழக்கம். மணக்குள விநாயகரின் அருள்பெறுவதற்காக வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

16. இத்தலத்தில் மாதம் தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று 4 கால அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று பூஜையில் பங்கேற்றால் மிகுந்த பலன் கிடைக்கும்.

17. மணக்குள விநாயகர் ஆலயம் உலக அளவில் புகழ்பெற்றிருந்தாலும் அதன் ராஜகோபுரம் இன்னமும் இரு நிலைகளிலேயே உள்ளது.

18.மணக்குளவிநாயகர்மன்னர்கள்ஆட்சிக்காலத்திலேயே தோன்றி விட்ட போதும், எந்த மன்னரும்பெரிய அளவில் திருப்பணி செய்யவில்லை. மக்களால் மட்டுமே இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

19. ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி அன்று பிள்ளையாரை வேண்டி, அன்று முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் கொழுக்கட்டை படையலிட்டு விரதத்தை முடித்தால் எல்லாத் தடைகளும் நிவர்த்தியடைந்து திருமணம் நடைபெறும் என புதுச்சேரி மக்கள் நம்புகிறார்கள்.

20. மணக்குள விநாயகர் கோவிலுக்கு தனிகுளம் எதுவும் இல்லை. எனவே பிரம்மோற்சவ நாட்களில் அருகில் உள்ள வேதபுரீஸ்வரர் ஆலய குளத்தில் தெப்பல் உற்சவம் நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது.

21. மணக்குள விநாயகர் ஆலயத்தின் தங்கத்தகடு போர்த்தப்பட்ட கொடிக்கம்பத்தின் உயரம் 18 அடியாகும்.

22. கோவில் உள்ளே இருக்கும் சுதை சிற்பங்களில் ஒன்றில் மயிலில் பறக்கும் முருகருடன் விநாயகரும் இருக்கிறார். இது போன்ற சிற்பம் அருப்புக்கோட்டை தாதன்குளம் விநாயகர் ஆலயத்திலும் உள்ளது.

23. மணக்குள விநாயகர் ஆலயம் கானாபத்திய ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது.

24. மணக்குள விநாயகரின் உற்சவ மூர்த்திக்கு தயாரிக்கப்பட்டுள்ள தங்க கவசம் 5 கிலோ தங்கத்தில் 91.66 தரத்தில் ஹால்மார்க் சான்றிதழுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

25. இத்தலத்தில் பக்தர்களுக்கு தினமும் மூன்று நேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

26. பாண்டிச்சேரி கடற்கரையை ஒட்டிய பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் இக்கோவில் விநாயகரை புவனேச கணபதி என்றும் சொல்கிறார்கள்.

27. இத்தலத்து விநாயகர் கற்பக விருட்சம் போல கருதப்படுவதால், இங்கே நடத்தப்படும் எல்லாவித பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன.

28. விநாயகருக்கு இத்தலத்து பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக எண்ணெய், பஞ்சாமிர்தம், பழவகைகள், தேன், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்கிறார்கள். மேலும் சொர்ணா அபிசேகம், 108 கலசாபிசேகம், சங்காபிசேகம் ஆகியவற்றையும் செய்கிறார்கள். 29. உலகில் உள்ள எல்லா விதமான விநாயகர் ரூபங்களையும் சுதையாக இங்கு செய்து வைத்துள்ளனர் என்பது சிறப்பான அம்சம்.

30. விநாயகர் சதுர்த்தி இத்தலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.

31. ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி முதல் தேதி அன்றுதான் இத்தலத்தில் பிரம்மாண்டமான அளவில் பக்தர்கள் கூடுவார்கள். புதுவருடம் பிறக்கும் அந்த நாளில் மணக்குள விநாயகரின் திருமுகத்தை தரிசிக்க அவரின் ஆசியோடு அந்த புது வருடத்தை ஆரம்பிக்க வேண்டும் என்கிற ஆவலில் இத்திருத்தலத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவது வழக்கமாக இருக்கிறது.

32. பிரம்மோற்சவம் ஆவணி 25 நாட்கள் திருவிழாவாக நடக்கிறது.

33. பவித்திர உற்சவம் 10 நாட்கள் திருவிழா விழாவாக கொண்டாடப்படுகிறது.

34. மாதந்தோறும் சங்கடஹரசதுர்த்தி தினத்தின் போது மூலவருக்கு அபிசேக ஆராதனைகள் மிக விமரிசையாக நடக்கும். அப்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வர்.

35. வருடத்தின் மிக முக்கிய விசேச நாட்களான தமிழ் புத்தாண்டு தினம், தீபாவளி, பொங்கல் ஆகிய தினங்களிலும் கோயிலில் மூலவருக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அப்போது கோயிலில் பெருமளவில் பக்தர்கள் கூடுவார்கள்.

36. திருமணவரம்,குழந்தைவரம்உள்ளிட்டஅனைத்து   விதமான வழிபாடுகளும் இங்கே நடத்தப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்குவோர், வாகனவழிபாடு என இத்தலத்திற்கு பக்தர்கள் அதிகளவில் பயணிக்கின்றனர்.

37. குடும்பத்தோடு வரும் பக்தர்கள் பாண்டிச்சேரி நகரில் உள்ள தனியார் லாட்ஜ்களில்தங்கிகொண்டு கோயிலுக்கு சென்று வசதி உள்ளது.

38. பாண்டிச்சேரி நகரின் மத்தியில் கோயில் இருப்பதால் கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்று வர வசதி உள்ளது.

39. விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் வயிற்றில் காசு அல்லது நகை அணிவித்து பின்னர் உபயோகித்தால் நன்மை பிறக்கும்.

பாண்டிச்சேரியில் மிகவும் பிரபலமான கோயில்களில் மணக்குள விநாயகர் கோயிலும் ஒன்று. புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து 3கி.மீட்டர்தொலைவில் இந்தக் கோயில் உள்ளது. புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டினர் குடியேறுவதற்கு முன்பிருந்தே இந்தக் கோயில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையான கோயில். புதுச்சேரி மக்கள் இந்த விநாயகரை வெள்ளைக்காரன் விநாயகர் என்றுதான் அழைக்கின்றனர்.

இந்தக் கோயிலை இடிப்பதற்கு பல முறை பிரான்ஸ் தூதர்கள் முயன்றார்கள் என்று கூறப்படுவது உண்டு. ஒவ்வொரு முறையும் உள்ளூர் மக்கள் இந்தக் கோயிலை காப்பாற்றி வந்துள்ளனர்.

வங்கக் கடலை ஒட்டி கிழக்கு நோக்கி அமைந்து இருக்கும் இந்தக் கோயில் முன்பு பவனேஸ்வர் விநாயகர் என்று அழைக்கப்பட்டு தற்போது மணக்குள விநாயகர் என்று அழைக்கப்பட்டு வருகிறார். 8,000 சதுர அடி பரப்பில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் 18 அடி உயர தங்கத் தகடு வேயப்பட்ட கொடிக்கம்பம்நாட்டப்பட்டுள்ளது. இதுஇந்தக்கோயிலின்சிறப்புக்களில்ஒன்றுகோயிலின் வெளிப்புறச் சுவற்றில் பல்வேறு விதமான விநாயகர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. தங்க விமானம் இந்தக் கோயிலின் கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது!!!

Thursday, April 29, 2021

ருத்ரம் என்னும் துதி

ருத்ரம் என்னும் துதி யஜுர் வேதத்தில் உள்ளது. இது நமகம், சமகம் என இரண்டு பகுதிகளை உடையது. இறைவனிடம் என்ன வேண்டுவது என்று திணறுபவருக்கு இது ஒரு பெரிய பட்டியலைத் தருகிறது. இது பற்றிய மிகவும் அற்புதமான விஷயம் என்னவென்றால் நல்ல தூக்கத்தையும் தருக என்று இறைவனை வேண்டுவதாகும். மேலை நாடுகளிலும் இந்திய நகரங்களிலும் வாழ்பவருக்கு இன்று அரிதான பொருள் நல்ல நிம்மதியான உறக்கம் ஆகும். பலவித கவலைகளாலும் இயந்திரம் போன்ற வாழ்வாலும் மனிதர்கள் கஷ்டப் படுகிறார்கள். இதை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த நம் முன்னோர்கள் அழகாக வரிசையாக சமகம் என்னும் பகுதியில் பட்டியல் இட்டுவிட்டார்கள்.

நமகம் என்னும் பகுதியில் சிவ பெருமானை நூற்றுக் கணக்கான பெயர்களால் நமஸ்கரிக்கிறோம். இதனால் இதை சத ருத்ரீயம் என்று அழைப்பர். சமகம் என்னும் பகுதியில் நமக்கு வேண்டியவற்றை எல்லாம் கேட்கிறோம். இதைக் கேட்டாலேயே போதும். அத்தனையும் கிடைத்துவிடும். சிவன் கோவில்களில் அபிஷேக நேரத்தில் இதைப் பாராயணம் செய்வார்கள். இந்துக்களின் முக்கிய சடங்குகள் அனைத்திலும் ருத்ர பாராயணம் நடைபெறும்.

நமகம் என்னும் பகுதியில் 194 நம: வரும்

சமகம் என்னும் பகுதியில் 328 சமே வரும்.

நமகம் பகுதியில் சிவனை 300 பெயர்களால் வணங்குகிறோம்.

ருத்ரத்துக்கும் 11 என்ற எண்ணுக்கும் தொடர்பு மிக அதிகம்.ஏகாதச ருத்ரர்கள் என்று ருத்ரர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுவதால் குறைந்தது 11 தடவையும், அதிகமாக இதன் பல மடங்குகளிலும் பாராயணம் செய்வர்.

ஸ்ரீருத்ரம் 174 ரிக்குகளைக் கொண்டது. இதில் 32 மஹா மந்திரங்கள் இருக்கின்றன. ருத்ரத்தில் 11 பிரிவுகள் (அநுவாகங்கள்), சமகத்தில் 11 பிரிவுகள் இருக்கின்றன. ருத்ரத்தின் 11 அநுவாகங்களில் எட்டாவது அநுவாகத்தில் நமச்சிவாய என்ற மஹா மந்திரம் வருவதால் அந்த இடம் வரும் போது முழுக் கவனத்தையும் செலுத்தி உரத்த குரலில் கூறுவர். 11ஆவது அநுவாகத்தில் மரண பயத்தை நீக்கும் ம்ருயுஞ்ஜய மந்திரம் (ஓம் த்ரயம்பகம் யஜாமஹே——–) வருகிறது.

ஸ்ரீ ருத்ரத்திற்கு சாயணர், பட்ட பாஸ்கரர், அபிநவ சங்கரர் ஆகிய பெரியோர்கள் பாஷ்யம் (விளக்க உரை) எழுதியிருக்கிறார்கள்.

பெரிய புதிர்

உலகிலேயே பெரிய கணித வல்லுநர்கள் இந்துக்கள்தான். இது பற்றி நான் பல கட்டுரைகளில் தந்திருக்கிறேன் (மீண்டும் இந்தியா உலக செஸ் சாம்பியன் என்ற கட்டுரையைக் காண்க). சின்னக் குழந்தை முதல் பெரியோர் வரை தினசரி துதிகளில் கூட “டெசிமல்” முறையை (தசாம்ச) பயன்படுத்தி சூர்ய கோடி சமப் ப்ரபா என்றெல்லாம் வேண்டுவதைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

சமகத்தில் 11ஆவது அநுவாகத்தில் ஒற்றைபடை எண்களாக 33 வரையும் இரட்டைப் படை எண்களாக 44 வரையும் எண்கள் மட்டுமே மந்திரமாக உச்சரிக்கப்படுகின்றன. இது வரை இதற்கு எத்தனையோ தத்துவ விளக்கங்கள் கொடுக்கப்பட்டபோதிலும் ஒன்றுகூட எல்லா எண்களையும் விளக்குவதாக இல்லை.

ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் இப்படி வெறும் எண்களை மட்டுமே மந்திரமாக்கிய இந்தியர்களின் கணிதப் புலமையையும் ஆர்வத்தையும் என்னவென்று புகழ்வது. உலகில் வேறு எந்த கலாசரத்திலும் இறைவனைத் துதிபாடும் மந்திரங்களில் இப்படி எண்கள் வருவதில்லை. ஒரு இடம் அல்ல, இரண்டு இடம் அல்ல. உலகின் மிகப் பழமையான சமய நூலான ரிக்வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் பெரிய பெரிய எண்கள் வருகின்றன. வேதங்களின் முழு அர்த்தம் புரியாத வெளிநாட்டுக்காரர்கள் இதற்கு மனம் போன போக்கில் பொருள் செய்திருக்கிறார்கள்.

இத்தனை கோட்டைகளை ஆரியர்கள் அழித்தார்கள், இத்தனை திராவிடர்களை ஆரியர்கள் கொன்றார்கள் என்றெல்லாம் ஒரே கதைதான்! அந்த எண்கள் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் சிரிப்புதான் வரும். சுருக்கமாகச் சொல்லப் போனால் திராவிட என்ற ஒரு இனத்தைக் கற்பித்து அதற்கு கோழைப் பட்டத்தையும் சூட்டிவிட்டார்கள்! காட்டுமிராண்டி ஆரியர்களிடம் செமை அடிவாங்கி, கோழைகள் போல தெற்கே ஓடிவந்து காடுகளிலும் மலைகளிலும் ஒளிந்துகொண்டார்கள் திராவிடர்கள் என்று வெள்ளைக்கார அறிஞர்கள் எழுதிவைத்தனர். இது தவறு. ஆனால் சங்கத் தமிழ் இலக்கியமோ வேதங்களையும் வேள்விகளையும் புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுகிறது!)

வேதங்களைப் பாடிய ரிஷி முனிவர்கள் தாங்கள் ரகசிய மொழியில், சங்கேத மொழியில் பாடுவதை விரும்புகிறோம் என்று பாடுகிறார்கள். சங்கத் தமிழ் புலவர்களும் இதை அறிந்து வேதத்துக்கு மறை (ரகசியம்) என்ற அழகிய தமிழ் சொல்லைச் சூட்டியுள்ளனர்.

ஸ்ரீருத்ரத்தின் மகிமை சொல்லுக்கு அடங்காதது. வேத மாதாவினாலும் ஓரளவுக்குத்தான் ஸ்ரீ பரமேச்வரனை அடையாளம் காட்ட முடியும். வேதத்தால் துதிக்கும் போது அவன் எல்லாவற்றையும் வழங்குகிறான்.

அவன் எங்கெல்லாம் எந்தெந்த வடிவில் இருக்கிறான் என்ற பெரிய பட்டியலையே தந்து விடுகிறது தந்துவிடுகிறது ஸ்ரீ ருத்ரம்.

எல்லா உலகமும் ஆகி

("#ஜகதாம்_பதயே") இருப்பவன். எங்கு தான் இல்லை?

இருந்தாலும் ஒன்றொன்றாகச் சொல்லுகிறது வேதம்...

அந்த ஈச்வரன் தான் எல்லா தேவர்களின் இருத யங்களிலும் இருக்கிறான். ("#தேவானாம்_ஹ்ரிதயேப்ய")

அப்படி இருந்துகொண்டு வேண்டுவார் வேண்டுவது எல்லாம் தருபவனாக இருக்கிறான் ("#விசின்வத்கேப்யஹா")

மகான்கள் வடிவிலும் அற்ப சக்தி உள்ளவர்கள் வடிவிலும் விளங்குகிறான். சேனைத் தலைவர்களாகவும் சேனைகள் எனவும் இருப்பதை ("சேனாப்ய_சேனா_நிப்யச்ச:") என்கிறது ஸ்ரீ ருத்ரம்.

அதே சமயம் தேர் ஓட்டுபவர் வடிவிலும்

("#க்ஷத்ருப்ய:"), தச்சர் வடிவிலும் ("#தக்ஷப்ய:") குயவர் வடிவிலும் ("#குலாலேப்ய:"), கருமார் வேடத்திலும் ("#கர்மாறேப்ய:"), பறவைகளைப் பிடிக்கும் வேடர் வடிவத்திலும் ("#புஞ்சிஷ்டேப்ய:"), மீன் பிடிக்கும் செம்படவ வடிவிலும் ("#நிஷாதேப்ய:") இருக்கிறான்....

சிவ ச்வரூபமோ அலாதியானது. ஆலகால விஷத்தை உண்ட கண்டம் ("#நீலக்ரீவாய")

அதன் மேல் விபூதி பூசப்பட்டு இருக்கிறது ("சிதிகன்டாய") .

ஒரு சமயம் பார்த்தால் நீண்ட ஜடா முடி ("கபர்தினே") இருக்கிறது.

மறு கணம் பார்த்தால் கேசம் நீக்கப்பட்ட ("வ்யுப்தகேசாய") தலை.

ஆயிரக்கணக்கான கண்கள் ("#சகஸ்ராக்ஷாய"),

குறுகிய வாமன வடிவுடைய ("ஹ்ரச்வாய்ச_வாமனாய்ச")

அவனே, பெரிய வடிவத்துடனும் ("ப்ருஹதே") தோன்றுகிறான்.

பால விருத்த வடிவங்களிலும் காட்சி அளிக்கிறான்.

வேதங்களால் துதிக்கப்படுவனாகவும் ("ச்துத்யாய"), வேத முடிவில் வீற்றிருப்பவனாகவும் ("அவசான்யாய") விளங்குகிறான்.

ஆகவே தர்மத்தின் வடிவமான பரமேச்வரனைத் தர்ம தேவதையே வாகனமாகத் தங்குகிறது என்பதை, ("பப்லுசாய") என்ற சொல்லால் வேதம் வர்ணிக்கிறது.

சம்சாரமாகிய மரம் ஜனன மரணங்களுக்கு ஏதுவானது. அதை வேரோடு வெட்டி வீழ்த்தி முக்தியைத் தருபவன் ஆதலால ("பவச்ய_ஹேத்யை") எனப்படுகிறான்.

பக்தனைக் காப்பதற்காக அவன் கூடவே செல்லுபவன் என்று ("தாவதே") என்ற பதத்திற்கு அர்த்தம் சொல்லுவார்கள் பெரியவர்கள். எனவே, பக்தனுக்காகத் தூது செல்லவும் தயங்குவதில்லை பரமன் என்பதைத் திருவாரூரில் சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் தியாகராஜப் பெருமான் தூது சென்றதால் அறியலாம். அது மட்டுமா? இன்னும் உனக்காக வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா, அதனையும் செய்கிறேன் என்கிறானாம். இதைத்தான் ஸ்ரீ ருத்ரம்,

("தூதாய_ச_ப்ரஹி_தாய_ச")என்று காட்டுகிறது.

தவறு செய்யாதவர்கள் உலகத்தில் யாரும் இல்லை. அதிலும் தனது பக்தன் செய்யும் தவறுகளைப் பொறுத்துக்கொண்டு மன்னிக்கிறான் ஈச்வரன். இதைத் தான் வேத மாதா நமக்கு, ("ஸஹமானாய") என்ற பதத்தால் உணர்த்துகிறாள். திருக் கருப்பறியலூர் (தலை ஞாயிறு) என்ற ஸ்தலத்தில் ஸ்வாமிக்கு

'அபராதக்ஷமாபநேச்வரர்' (குற்றம் பொறுத்த நாதர்) என்று பெயர்.


("நமஸ்_ஸோமாய_ச") என்று தொடங்கும் எட்டாவது அனுவாகத்தில் ஸ்ரீ பஞ்சாக்ஷரம் வருவதால் பெரியவர்கள் இதை ஜபிப்பதை விசேஷமாகக் கருதுவார்கள். இதைத் தான் ஞான சம்பந்தரும்,

"வேதம் நான்கினும் மெய்ப் பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவாயவே "என்று பாடினார்.

இவ்வளவு மகிமை வாய்ந்த ஸ்ரீ ருத்ர பாராயணத்துடன் சிவ பூஜை செய்பவன் சிவனாகவே ஆகி சிவமே அடைகிறான் என்பதில் ஐயமில்லை. 

ஓம் நமசிவாய 

 திருச்சிற்றம்பலம்

Sunday, April 11, 2021

திருவனந்தபுரம் அரசு மருத்துவமனை (Thirvendram Medical college Hospital)

அன்பு நண்பர்களே...!!

நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்..

4-5 நாட்களுக்கு முன் நன்றாக இருந்த என் நண்பனின் அத்தை (வயது 51) திடீர் என்று மயக்கம் போட,  கோவையில் உள்ள பிரபலக்கல்லுரியின் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். 

மூளையில் ரத்தக்கசிவு,உடனே அறுவை சிகிச்சை,8ல் இருந்து 10 லட்சம் ஆகும் என அறிவித்தனர். 

மிரண்டுப் போன நண்பனின் மாமா செய்வதறியாமல் திகைத்த நிலையில்...

அங்கேயே இருந்த ஒரு நல்லிதயம் கொண்ட மருத்துவர் ஒரு நல்ல ஆலோசனை வழங்கினார்.

"மிகச்சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சை இங்கே மாதம் ஒன்றோ இரண்டோ நடக்கும் நிலையில், தினமும் ஐந்து -பத்து சாதாரணமாக நடக்கும் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு (Thirvendram Medical college Hospital) உடனே எடுத்துச்செல்லுங்கள்", எனக்கூறினார். 

உடன், ஒரு கடிதமும் வாங்கிக்கொண்டு ஆம்புலன்ஸில் விரைந்து காலையில் அட்மிட் செய்துள்ளனர். 

உடனே, அட்மிஷன் செய்து நோயாளியின் தன்மைக்கேற்ப பரிசோதனைகள் செய்து, 

அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மட்டும் வாங்கித் தரச்சொல்கின்றனர்.( ஒரு 40000 to 60000 ஆகலாம்). 

டாக்டர் ஃபீஸ் இல்லை. சரியாகி வீடு திரும்பும்வரை அட்மிஷன் தருகிறார்கள். 

உணவு,மருந்து மாத்திரைகள் நாமே வாங்கிக் கொள்ளவேண்டும்.

ஏதோ நம் ஊர் அரசு மருத்துவமனையை மனதில் நினைத்துக்கொண்டு அசிரத்தையாக இருக்காதீர்கள். 

உலகத்தரம் வாய்ந்த, இராணுவக் கட்டுப்பாடுடன் கூடிய மருத்துவமனை அது. 

இதயம்,நரம்பு, மூளை போன்ற மிகச்செலவுப் பிடிக்கும் வியாதிகளுக்கு மிகச் சிறப்பான , செலவு மிக மிகக் குறைவாக ஆகும் மருத்துவமனை. 

அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

ரேஷன் அட்டை, ஆதார் அட்டை கொண்டு செல்லுங்கள். 

நகை நட்டை விற்று, வீடு தோட்டம் விற்று, நீண்ட நாள் சேமிப்பை இழக்காமல் சிறந்தச் சிகிச்சையைப் பெறலாம். பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

Trivandrum Medical College Hospital

Casualty Enquiry Number

0471 - 2528300

Important Telephone Numbers...

Superintendent 2442234

RMO 2528246

Casualty 2528300

Blood Bank 2528230

Cath Lab (ICCU) 2528499

CT Scan 2528232

Nursing Superintendent 2528231

Mortuary 2528236

Security officer 2528398

Paying counter 2528461

Anasthaesiaology 2528233

Anatomy 2528371

Applied Nutririon 2528391

Biochemistry 2528399

Cardiology 2528267

Cardiothoracic surgery 2528293

Community Medicine 2528379

Dematology and Venerology 2528213

Forensic Medicine 2528373

Gasroentrology 2528241

Gastro Entrology Surgical 2528295

General Medicine 2528234

General Surgery 2528325

Infectious diseases 2528296

Micro Biology 2528372

Nephrology 2528268

Neurology 2528260

Neuro Surgery 2528224

Gynaecology 2528365

Orthopaedics 2528242

ENT 2528277

Paediatrics 2528331

Paediatric surgery 2528312

Pathology 2528376

Peed Cell 2528369

Pharmacology 2528379

Physical Medicine and Rehabilitation 2528237

Physiology 2528377

Plastic and Reconstructive surgery 2528299

Psychatry 2528222

Radio diagnosis 2528211

Radio therapy 2528232

Respiratory medicine 2448484

Urology 2528282

#Address:

Trivandrum Medical College, Medical College PO, Thiruvananthapuram,

Kerala State. India 

PIN - 695 011

Wednesday, March 17, 2021

விதவை கிருஷ்ணபக்தை

தாயே யசோதா….

இந்தப் பெண்மணி தனது இருபதாவது வயதில் விதவையானவர்.

மிகவும் ஆழ்ந்த கிருஷ்ண பக்தையான இவர் விருந்தாவனில் உள்ள பங்கே பிஹாரி கோவிலின் வாசலில் அமர்ந்து கொண்டு வரும்பக்தர்களின் செருப்புக்களை பாதுகாக்கும் வேலையை பார்த்துக் கொண்டிருப்பார்.

பக்தர்களாக விரும்பித் தரும் பணத்தை மட்டுமே அவர் பெற்றுக் கொள்ளுவார். தனக்கு என்று குடும்பம் என்று எதுவும் இல்லாததால் அவருக்கு பெரிய செலவுகள் ஏதும் கிடையாது என்பதால் கிடைத்த பணத்தை மட்டும் சேமித்து வைத்துள்ளார். கடந்த 40 வருடங்களாக அவரிடம் சேர்ந்த தொகை எவ்வளவு தெரியுமா? கேட்டால் மலைத்துப் போய்விடுவீர்கள். ரூ.51,02,050/- ஐம்பத்தொரு லட்சம் ரூபாய்கள்.

அவர் அந்த பணத்தை தனக்கென பயன்படுத்தாமல், அதில் இருந்து நாற்பது லட்சம் ரூபாய் செலவில் ஒரு கோசாலையையும், கோவிலுக்கு வரும் யாத்ரிகள் தங்குவதற்காக வேண்டி ஒரு தர்மசாலையையும் அமைத்துக் கொடுத்துள்ளார்.

இந்த அளவுக்கு ஒரு பெரிய வேலையை செய்துவிட்டு அதைப்பற்றி அவர் பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் பக்தர்களுக்கும், பசுக்களுக்கும் சேவையை தொடர்ந்து வருகிறார் இந்தப் பெண்மணி.

பணமே வாழ்க்கையில் எல்லாம் என்று இருப்பவர்களுக்கு இந்த பெண்மணி செய்திருக்கும் அருஞ்செயல் மிகப் பெரிய பாடமாக இருக்கும்.

ஸ்ரீமத் பாகவதத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் “அஹம் பக்தப் பராதீனஹ” என்று கூறுவதாக வருகிறது. என் பக்தர்கள்தான் எனக்கு எல்லாமே. நான் என் பக்தர்களை நம்பி இருக்கிறேன் என்பதாக அதற்கு பொருள் கொள்ளலாம்.

எனவே கிருஷணர் தன்மீது அளவற்ற சுயலமற்ற பக்தியை செலுத்துபவர்கள் மீது அளவற்ற அன்பையும், அருளையும் பொழிந்துதான் ஆகவேண்டும்.

கிருஷ்ண பக்தையாக விளங்கும் விருந்தாவனத்தை சேர்ந்த அந்த பெண்மணியின் பெயர் யசோதா. என்ன ஒரு பொருத்தம் பாருங்கள். பகவான் கிருஷ்ணரின் தாய் பெயரும் யசோதா தான். தனது மகனான கிருஷ்ணனை ஒரு குழந்தையாக மட்டுமே பார்த்து கண்ணும் கருத்துமாக அன்பு பாராட்டுவாளாம் அந்த தாய் யசோதா. அவள் கண்ணுக்கு தெரிந்தது பகவான் கிருஷ்ணர் அல்ல. குழந்தை கிருஷ்ணர் மட்டுமே.

மனிதர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால், காலம் தோறும் யசோதைகள் விருந்தாவனத்தில் உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள்.

Saturday, February 06, 2021

தொப்புள்கொடி தாயத்து

நம் தமிழ் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல…வெளியானது அதிர்ச்சி தகவல்கள்...!!!

இனியும் ஏமாறாதீர்கள்...

இரத்த புற்றுநோய் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட மனித நோய்களை குணப்படுத்த உதவ மற்றும் எதிர்த்து போராடும் சக்தி படைத்த தொப்புள்கொடி ஸ்டெம்செல்களை பணம் செலுத்தி ஹைடெக் முறையில் சேமித்து வைத்து பாதுகாத்திடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

தாயின் கர்ப்பத்திலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து மற்றும் பிராய வாயுவை எடுத்துச் செல்வது தொப்புள்கொடியாகும். குழந்தைக்கும் தாய்க்கும் உண்டான உன்னதமான உறவை உணர்த்தும் மகத்துவமானது தொப்புள் கொடியாகும்.

இருப்பினும் குழந்தை பிறந்த சில நிமிடங்களில் இந்த தொப்புள் கொடியின் கடமை முடிந்துவிட்டது என்று நினைத்து அதை அறுத்து அகற்றிவிடுகிறோம்.

ஆனால் தொப்புள்கொடியின் பயன்பாடுகள் ஆயுட்காலம் முழுவதும் உள்ளது என்பது ஆச்சரியமான ஒன்றாகும்.

இத்தகைய சிறப்புமிக்க தொப்புள் கொடியில் தான் நோய்களை எதிர்த்து போராடிடும் ஸ்டெம்செல்கள் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது.

அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. 

தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா?

அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன் அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள்.

அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள்.

பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் பறந்து போகும்.

இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கும் சில வீடுகளில் உண்டு. ஆனால் பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை என்பதுதான் வருத்தம்.

இவ்வளவு தெளிவான நம் முன்னோர்களின் அறிவியலை மூடநம்பிக்கை என்று நம் மனதில் பதியவைத்து தாயத்து எல்லாம் அசிங்கம் அதையெல்லாம் கட்டுவது வீண் என்று சொல்லி நம்மை முட்டாளாக்கி இன்று சில வெளிநாட்டு நிறுவனங்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி என்று அதற்கு பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர்.

உண்மையில் இன்று நாம் முட்டாளா இல்லை நம் முன்னோர்கள் முட்டாளா என்று சிந்தித்து பார் தமிழா… இனியாவது விழிப்போம். நமது முன்னோர்களின் அறிவியலை மீண்டும் தோண்டி எடுப்போம்...

Friday, January 29, 2021

விதுரருக்காக ஸ்ரீகிருஷ்ணர் தீட்டிய திட்டம்

இவர் மட்டும் களத்துக்கு வந்திருந்தால் மஹாபாரத போரின் முடிவே வேறு மாதிரி மாறியிருக்கும்

ஆனால் "வெல்லவே முடியாதது..."

தர்மம்

மஹாபாரதப்போர்...

18 நாள் யுத்தம்...

வெற்றி பாண்டவர்களுக்கு...

ஆனால், ஒரு விஷயம்...

கெளரவர்கள் பக்கத்தில் எப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள் — துரியோதனன், பீஷ்மர், துரோணர், கர்ணன், ஜயத்ரதன் என்று மிகப் பெரிய பட்டியல்...

இவர்களை எப்படிப் பாண்டவர்கள் வென்றார்கள்...?

ஸ்ரீ கிருஷ்ணர் இல்லாவிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.

1) ஜயத்ரதன்

2) பீஷ்மர்

3) துரோணர் 

4) கர்ணன்

5) துரியோதனன்

6) விதுரர்

இவர்களின் வீழ்ச்சிக்காகக் ஸ்ரீ கிருஷ்ணர் தீட்டிய திட்டம் தான் வெற்றியை தந்தது.

இதில் யாரை வீழ்த்த தீட்டிய திட்டம் சிறப்பு வாய்ந்தது தெரியுமா? 

அநேகப் பேர் கர்ணனின் வீழ்ச்சிக்குக் ஸ்ரீகிருஷ்ணர் தீட்டிய யுக்தி தான் சிறப்பு வாய்ந்தது என்று நினைப்பார்கள். 

இன்னும் சிலபேர் ஜயத்ரதனைக் கொல்ல சூரியனை மறைத்தது தான் உயர்ந்தது என்றும் நினைக்கலாம். 

இதே மாதிரிதான் பீஷ்மர், துரோணர் இவர்களுக்கு எதிராக எடுத்த முயற்சிகள்...

ஆனால் சரியான விடை...

விதுரருக்காக ஸ்ரீகிருஷ்ணர் தீட்டிய திட்டம் தான் சிறப்பு வாய்ந்தது.

'இது என்ன புது குழப்பம்?

விதுரர் எங்கே சண்டை போட்டார்? 

அவரை வீழ்த்தக் ஸ்ரீகிருஷ்ணன் ஏன் திட்டம் போட வேண்டும்?'

என்ற கேள்விக்கு விடை சொல்லும் முன்... 

யுத்தம் நடக்கும் முன்பு நடந்த சம்பவங்களை  பார்ப்போம்...

முதலில் விதுரரை பற்றி தெரிந்து கொள்வோம்...

யார் இந்த விதுரர்?

விதுரர்...

திருதராஷ்டிரருக்கும், பாண்டுவுக்கும் தம்பி...

அதாவது, 

பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் சித்தப்பா...

விதுரரின் தாயார் ஒரு பணிப்பெண்ணாக இருந்தவர்.

விதுரர் மகா நீதிமான்...

தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர்...

தர்மராஜர்... அப்பழுக்கில்லாதவர்...

'பெண்களை தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக என எந்த நிலையிலும் அவர்களை உயர்வாக வைத்து போற்ற வேண்டியவர்கள்' என தர்ம சாஸ்திரம் சொல்கிறது.

திரெளபதியை துச்சாதனன் துகில் உரியும்போது விதுரர் ஒருவரை தவிர மற்ற பெரிய வீரர்கள் அனைவரும் வாய்

திறக்காமல் மெளனமாகத்தானே இருந்தார்கள்...

அதற்கான தண்டனை தான்...

விதுரரை தவிர மற்ற பெரிய வீரர்கள் அனைவருக்கும் யுத்தத்தில் மரணம் அடைய வேண்டும் என்பது தர்மத்தின் நியதி.

கெளரவர் பக்கத்திலிருந்து போராடும் பெரிய பெரிய வீரர்களை வீழ்த்தக் ஸ்ரீகிருஷ்ணர் போட்ட திட்டங்கள் அவ்வளவு கடினமானது இல்லை.

ஏனெனில், 

ஒவ்வொருவருக்கும் ஒரு பலஹீனம் இருந்தது.

எனவே அவர்களை எளிதில் வீழ்த்த முடிந்தது.

ஆனால், மேற்கண்ட பண்புகளால் விதுரரை மட்டும்  வீழ்த்தவே முடியாது...

விதுரர் 'வில்' எடுத்தால் அவரை ஜெயிக்கவே முடியாது...

யுத்தம் என்று வந்தால்... 

மற்ற பெரியவர்கள் - பீஷ்மர், துரோணர் போல் விதுரரும் இதுநாள் வரை சார்ந்திருந்த கெளரவர்கள் பக்கம் நின்று போரிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற முடியாது. 

மஹாபாரதப் போரின் முடிவே வேறே மாதிரி ஆகி இருக்கும்.

அதனால்...

எல்லோரையும் விட மிக முக்கயமான நபர்...

*விதுரர்*தான். 

அவர் கெளரவர்களுக்காக நிச்சயம் போரிடக் கூடாது.

மேலும், தர்மநெறி படி விதுரர் போரில் மரணமடைய கூடிய நியதியும் கிடையாது. 

விதுரரை போரிடாமல் எப்படி தடுப்பது?

ஸ்ரீகிருஷ்ணர் தர்ம வியூகம் அமைக்கிறார். 

அதன்படி, 

பாரதப்போரைத் தடுக்க, ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்காகத் தூது செல்கிறார். 

'கிருஷ்ணர் வருகிறார்' என்று தெரிந்ததும்... திருதராஷ்டிர மகாராஜா தடபுடல் வரவேற்பு எற்பாடு செய்திருந்தார்.

துரியோதனன் சபைக்குச் செல்லும் நாளுக்கு முந்தின இரவு, 'ஸ்ரீகிருஷ்ணர் யார் வீட்டில் தங்குவார்?' என்ற கேள்வி பிறந்தது.

நான், நீ என்று எல்லோரும் அவரை அழைத்தார்கள். 

ஸ்ரீகிருஷ்ணரோ, “நான் தூதுவன்... என் வேலை வெற்றி பெற்றால்தான் உங்கள் உபசரணைகளை ஏற்றுக்கொள்வேன். 

இப்போது இந்த இரவில் நான் விதுரர் வீட்டுக்குச் சென்று என் பொழுதைக் கழிக்கிறேன்...” என்றார். 

விதுரருக்கு மகா சந்தோஷம்...

தனக்கு பிரியமான கிருஷ்ணர் தன் விருந்தினராக வருவதைப் பெரும் பாக்கியமாகக் கருதினார்.

விதுரர் வீட்டில் கிருஷ்ணர் இரவு பொழுதைக் கழித்தார்...

மறுநாள், அரச சபையில் ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்காக வாதாடினார்.

துரியோதனன், "ஒரு ஊசி முனை நிலத்தைக்கூடப்

பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது..." என்று சொல்லி

கிருஷ்ணரையும் அவமதித்துப் பேசினான்.

கிருஷ்ணரும், "யுத்தம் நிச்சயம்..." என்று சொல்லிவிட்டு பாண்டவர் முகாமுக்குத் திரும்பினார். 

வழியில்...

கிருஷ்ணருடைய சாரதி, "சுவாமி! எந்த நோக்கத்தில் நீங்கள் விதுரர் மாளிகையில் தங்க நிச்சயத்தீர்கள்?” என்றான்.

கிருஷ்ணா் சொன்னார், "அனைத்தும் நல்லதுக்கே... இதன் விளைவு இப்போது துரியோதனன் சபையில் நடந்து கொண்டிருக்கிறது...” என்று சொல்லி சிரித்தார்.

அதேபோன்று...

அப்போது துரியோதனன் சபையில் எல்லோரும் துரியோதனனிடம் கெஞ்சி, 'கிருஷ்ணா் பேச்சைக் கேட்டு யுத்தத்தை தவிர்க்க வேண்டும்...' என்று வாதாடினார்கள். 

அதில் விதுரர் குரல் தான் ஓங்கி ஒலித்தது.

ஏற்கனவே துச்சாதனன் துயில் உறியும் போது விதுரர் தட்டி கேட்டது... 

பாண்டவ தூதரான கிருஷ்ணரை விதுரர் தன் வீட்டில் முதல் நாள் இரவு தங்கவைத்து  உபசாரம் செய்தது...

என துரியோதனனுக்கு விதுரர் மேல் வெறுப்பு இருந்தது...

இதன்மூலம் அவர் பாண்டவர்கள் கட்சி என்றும் ஒரு நினைப்பு.

இப்போதும் விதுரர், கிருஷ்ணர் பேச்சைக் கேட்டு கொண்டு போரை நிறுத்த வாதாடியதும், துரியோதனனுக்குக் கோபம் பொத்துக் கொண்டுவந்தது...

என்ன பேசுகிறோம் என்ற நினைப்பில்லாமல் நாக்கில் நரம்பின்றி விதுரரை அவமானப்படுத்திப் பேசினான். 

குறிப்பாக, அவரை ‘தாசி புத்திரன்’ என்று திட்டித்தீர்த்தான்.

இதனால், விதுரர் மிகுந்த அவமானமடைந்தார்...

ஆவேசமடைந்த விதுரர், சபையோர்கள் நடுங்க சபதமிட்டார். 

"உனக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது துரியோதனா!... இனி உனக்காக நான், என் வில்லை எடுத்துப் போரிட மாட்டேன்... 

அதே சமயம் நான் பாண்டவர்கள் பக்கமும் செல்லமாட்டேன்... எனக்கு இங்கே இனிமேல் வேலையில்லை...” என்று சொல்லித் தன்னுடைய வில்லை இரண்டாக உடைத்துவிட்டுச் சபையிலிருந்து வெளியேறினார்.

யுத்தம் முடியும் வரை அவர் தீர்த்த யாத்திரையிலிருந்து திரும்பவில்லை...

இப்பொழுது புரிந்து இருக்கும் ஸ்ரீகிருஷ்ணர், விதுரர் வீட்டில் ஏன் தங்கினாரென்று... 

தங்காமல் இருந்தால்...

விதுரர் வில்லை உடைத்து வெளியேறியிருப்பாரா?

துரியோதனனுக்காகப் போராட வேண்டிய ஒரு கட்டாயம் விதுரருக்கு வந்திருக்கும் அல்லவா?

விதுரர் வைத்திருந்த 'வில்'தர்ம சக்கரம் கொண்ட மஹாவிஷ்ணுவின் வில்..

'கோதண்டம்' எனப்படும் அந்த வில்லை எவராலும் வெல்ல முடியாது.

அர்ஜுனன் கையில் உள்ள வில் பிரம்மாவுடையது. 

'காண்டீபம்' என்பது அதன் பெயர்.

போரில் விதுரர் கோதண்டத்துடன் வந்து நின்று விட்டால் ஆனானப்பட்ட அர்ஜுனனால் கூட தன் வில்லான காண்டீபம் கொண்டு அவரை வெல்ல முடியாது.

இதுவே பாண்டவர்களுடைய வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது...!

தர்மராஜனான விதுரரை ஜெயிக்கவே முடியாது என்ற *தர்மம்* உணர்ந்த ஸ்ரீகிருஷ்ணர் செய்த மஹா தர்ம யுக்தி தான் மஹாபாரத வெற்றி...

தர்மத்தை யாராலும் வெல்லவும் முடியாது...

தர்மத்தை போற்றுவோம்...

நம் தலைமுறைகளுக்கும் தர்மத்தை போதிப்போம்...

Tuesday, January 19, 2021

தேங்காய்

 கோவிலுக்கு செல்லும்போதோ அல்லது இல்லங்களில்   நாம் ஸ்வாமிக்கு நைவேத்ய சமயத்திலோ தேங்காய் உடைப்போம் அல்லவா, அது சில நேரங்களில் அழுகலாக இருந்துவிட்டால் அது அபசகுனமா? 

அபசகுனம் இல்லை. சில நேரங்களில் இம்மாதிரி நிகழ்வது இயற்கைதான். தோஷமே கிடையாது. வீணாக மனதை அலட்டிக்கொள்ள வேண்டாம். தெரியாமல் நடக்கும் இதற்காக பெரிதாக சங்கடப்படாமல் வேறு தேங்காய் கைவசம் இருப்பின் உடைத்து நைவேத்யம் செய்யலாம். 

தேங்காய் அழுகலாக இருப்பது என்பது பெரும்பாலும் நம் கையில் இல்லை. 

மேலும் ஒரு விஷயம். நைவேத்யத்திற்காக தேங்காய் உடைக்கும்போது சரி பாதியாக உடைக்க நினைத்தாலும் சில நேரங்களில் தாறுமாறாக உடைந்து விட்டாலும் பெரிய தோஷமில்லை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். அதற்காக, வேண்டும் என்றே நைவேத்யத்திற்கு சதுர்தேங்காயாக .உடைக்கக் கூடாது

இது விஷயத்தில் மற்றும் சில குறிப்புக்களை பார்ப்போமா.

நைவேத்யத்தின்போது தேங்காயுடன் இளநீர் நைவேத்யம் பொதுவாகச் சொல்லப்படவில்லை. வெறும் தேங்காயை மட்டும்தான் நைவேத்யம் செய்ய வேண்டும். இல்லத்திலும் ஆலயங்களிலும் இதுதான் சம்ப்ரதாயம்.

நமது தேசாச்சரத்தின்படி குடுமி இல்லாத தேங்காய் நைவேத்யத்திற்கு உகர்ந்தது இல்லை. குடுமியுடன் இருக்கும் தேங்காயைத்தான் உடைக்க வேண்டும். உடைத்த பிறகு, அதாவது நைவேத்யத்திற்கு முன்பு, அந்த குடுமியை எடுத்துவிட வேண்டும்.

சுப கார்யங்களில் சீர் வைக்கும்போதும், பிறருக்கு தாம்பூலம் தரும் சமயத்திலும் குடுமி உள்ள தேங்காய் தான் விசேஷம்.

- சர்மா சாஸ்திரிகள்

Wednesday, January 06, 2021

எதற்காகவும் தாயை இழக்கக்கூடாது.​

 ​விக்கல் எடுத்ததும் மகன்தான் நினைக்கிறான் என எண்ணி மகிழ்கிறாள் முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய்..​

​=​=_=_=_=_=_=_=_=_=_=

உலகில் உன் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படாத ஒரே ஜீவன்  amma

​=​=_=_=_=_=_=_=_=_=_=

​ஒரு தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால், எதற்காகவும் தாயை இழக்கக்கூடாது..​

​=​=_=_=_=_=_=_=_=_=_=

படிப்ப விட அப்பா அம்மா ஒசத்திதான். அதனாலதான் இன்சியல முதல்லயும், படிப்ப கடைசியிலும் எழுதுறோம்..!!

​=​=_=_=_=_=_=_=_=_=_=

 ​'ஹலோ' சொன்னதும் "என்னடா உடம்பு சரியில்லையா" என்று கேட்கும் அம்மாவிடம் தோற்றுப் போகின்றனர் உலகில் உள்ள அனைத்து மருத்துவர்களும்..!!​

​=​=_=_=_=_=_=_=_=_=_=

தாய் தந்தையாரின் அருமை நீ வளரும் போது தெரியாது.. உன் பிள்ளையை நீ வளர்க்கும் போது தான் தெரியும்...

​=​=_=_=_=_=_=_=_=_=_=

​புரண்டு படுத்தால் நாம் இறந்துவிடுவோமோ என்று கருவில் இருந்த நமக்காக தூக்கத்தை கூட துளைத்து விட்டு இரவில் விழித்திருந்த சூரியன்.. "அம்மா"​

​=​=_=_=_=_=_=_=_=_=_=

 வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்.. கண்கள் இல்லாமல் ரசித்தேன்.. காற்றே இல்லாமல் சுவாசித்தேன்.. கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்.. என் தாயின் கருவறையில் மட்டும்..!!

​=​=_=_=_=_=_=_=_=_=_=

​அம்மாவை சந்தோசப்படுத்த பணம், நகை வேணுமான்னு கேக்க தேவையில்லை.. சாப்பிடும் போது இன்னும் கொஞ்சம் சோறு போடும்மா என்று கேட்டாலே போதும்..​

​=​=_=_=_=_=_=_=_=_=_=

ஒரு தாய் தனக்கு என்னவெல்லாம் செய்தாள் என்பதை மனிதன் கடைசிவரை உணர்வதில்லை.. அவன் அதை உணரும் போது அவள் உயிரோடு இருப்பதில்லை...

​=​=_=_=_=_=_=_=_=_=_=

Friday, December 11, 2020

இறந்தவரின் ATM Card

இறந்தவர்களின்  ATM Card லிருந்து  குடும்பதினர் பணம் எடுப்பது சரியா?

முத்துக்குமார் என்பவர் பிரபல வங்கி ஒன்றின் கிளையில் கணக்கு வைத்திருந்தார். அதே வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட்டும் போட்டிருந்தார். இந்த நிலையில் முத்துக்குமார் எதிர்பாராதவிதமாக மரணமடைந்துவிடுகிறார். அவருடைய ஏ.டி.எம் கார்டு அவருடைய குடும்பத்தாரிடம் இருந்தது. அந்தக் கார்டின் (pin) பின் நம்பர் தெரிந்த காரணத்தால் அவருடைய மனைவி அவர் இறந்த பிறகு, அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த பணம் அனைத்தையும் எடுத்தார்.

ஆனால், ஃபிக்ஸட் டெபாசிட்டிலிருந்து அவரால் அவ்வாறு பணத்தை எடுக்க முடியவில்லை.

வங்கிக் கிளையை அணுகி தன் கணவரின் ஃபிக்ஸட் டெபாசிட் தொகையைத் தனக்குத் தருமாறு கடிதம் கொடுக்கிறார். இறந்தவரின் இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழை இணைத்து தன் கணவரின் சேமிப்பு பணத்தை தன் கணக்குக்கு மாற்றித் தருமாறு வேண்டுகோள் விடுத்தார். இறந்தவரின் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்த வங்கி அதிகாரிகள் இறப்புச் சான்றிதழில் உள்ள தேதிக்குப் பிறகு, இறந்தவரின் கணக்கிலிருந்து பணம் எடுத்ததை அறிகின்றனர்.

நம்மில் பலருக்கும் இது போன்ற நிலை ஏற்படக்கூடும். வங்கி விதிமுறைகளின்படி இறந்தவரின் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது தவறாகும். அவர்கள் இறந்தவரின் நேரடி வாரிசுதாரர் ஆக இருந்தாலும்கூட இதுபோன்று பணம் எடுப்பது தவறாகும்

ஒருவர் மரணம் அடைந்துவிட்டால் அந்தக் குடும்ப உறுப்பினர்கள் விரைவாக வங்கியை அணுகி வாடிக்கையாளர் இறந்த தகவலை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்தவுடன் வங்கி உடனடியாக இறந்தவரின் கணக்கை முடக்கி வைக்கும். அதன் பிறகு, அந்த வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து ஏ.டி.எம் வாயிலாகவோ, காசோலை அல்லது வங்கியின் வலைதளங்கள் வாயிலாகவும் பணத்தை யாராலும் எடுக்க முடியாது. இவ்வாறு செய்வது முறையற்ற பரிவர்த்தனைகள் நடைபெறுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்தும்.

இறந்தவரின் கணக்கிலிருந்து பணத்தைப் பெறுவதற்கு வங்கிகள் பல நடைமுறைகளைக் கொண்டிருக்கும். இந்த நடைமுறைகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் சரியான நபரிடம் இறந்தவரின் பணத்தைச் சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் குறுக்கு வழியில் பணத்தை எடுக்க முயல்வது ஒருவருக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

ஒருவர் சேமிப்பு கணக்கு அல்லது வேறு கணக்குகள் தொடங்கும்போது அந்த வாடிக்கையாளர் தமது கணக்குக்கு நாமினியை நியமிக்க வேண்டும். அவ்வாறு நாமினியை நியமித்து இருந்தால் இறந்தவரின் இறப்புச் சான்றிதழை வங்கி அதிகாரிகளிடம் அந்த நாமினி வழங்க வேண்டும். மேலும், நாமினியாக நியமிக்கப்பட்டவர் உரிய கே.ஒய்.சி அடையாள சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடைமுறையில் வங்கிகளுக்கு ஏற்ப சில மாற்றங்கள் இருக்கலாம்.

வங்கி அதிகாரிகள் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைச் சரிபார்த்து அதன் பிறகு, இறந்தவரின் கணக்குகளை முடித்து அந்தப் பணத்தை நாமினிக்கு மாற்றித் தருவர்.

வங்கியில் கணக்கு ஆரம்பிக்கும்போது நாமினியாக ஒருவரையும் குறிப்பிடவில்லை என்றால் இறப்புச் சான்றிதழ் உடன் இறந்தவர்களுடைய வாரிசுதாரர் சான்றிதழை (Legal Heir) இணைக்க வேண்டும். மேலும் ரிஜிஸ்டர் பத்திரத்தில், அனைத்து வாரிசுதாரர்களும், நாங்கள்தான் இறந்தவரின் வாரிசுகள் என்ற உறுதி மொழியை அளிக்க வேண்டும். இந்த உறுதிமொழியை நோட்டரி பப்ளிக் அல்லது அரசு அதிகாரிகளிடமிருந்து உறுதிப்படுத்தி கையொப்பம் பெற்று இருக்க வேண்டும். இந்த நடைமுறையும் வங்கிகளுக்கு இடையே சிறு மாற்றத்துடன் விளங்கலாம்.

இந்தச் சான்றுகளை வங்கி அதிகாரிகள் சரிபார்த்து சேமிப்புப் பணத்தை வாரிசுதாரர்களுக்கு வழங்குவார்கள். இறந்தவர்களுக்கு பல வாரிசுகள் இருந்து அவர்களில் ஒருவருக்கு இந்தப் பணத்தை வழங்க வேண்டும் என்றால் மற்ற வாரிசுதாரர்கள் இந்தப் பணம் தனக்கு வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்ட அந்த வாரிசுதாரருக்கு பணத்தை வழங்குவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும் கடிதம் கொடுக்க வேண்டும். அந்தக் கடிதத்துடன் மற்ற வாரிசுதாரர்கள் உடைய KYC சான்றுகளையும் வழங்க வேண்டும். இவற்றை வங்கி அதிகாரிகள் சரிபார்த்து குறிப்பிட்ட வாரிசுதாரருக்கு பணத்தை வழங்குவார்கள்.

இறந்தவர் வங்கியில் நகைக் கடன் அல்லது வீட்டுக் கடன் பெற்று இருந்தால் இதே நடைமுறையைத்தான் பின்பற்ற வேண்டும். அந்தக் கடன் தொகையை வாரிசுதாரர்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும். வாரிசுதாரர்கள் கடனை மீட்பதற்கு முன்வந்தால் கடன் நிலுவைத் தொகையை இறந்தவரின் கணக்கில் செலுத்தி பிற சான்றிதழை வழங்க வேண்டும். அவற்றை வங்கி அதிகாரிகள் சரிபார்த்து கடனை முடித்து வைத்து அடமானமாகப் பெற்ற நகைகளையோ, வீட்டுப் பத்திரத்தையோ வாரிசு உரிமையாளரிடம் வழங்குவார்கள்.

வங்கிக் கணக்கில் நாமினியாக நியமிக்கப்படும் நபர் அந்த பணத்தை நிர்வகிக்கும் நபராகத்தான் கருதப்படுவார். நாமினியின் கடமையானது பெறப்பட்ட பணத்தை வாரிசுதாரர்களுக்குப் பிரித்துத் தருவது ஆகும். அவ்வாறு இல்லாமல் நாமினியாக இருப்பவர் முழுவதுமாகப் பணத்துக்கு உரிமை கோர முடியாது.

வாரிசுகளுக்கு இடையே அல்லது நாமினியாக நியமிக்கப்பட்டவருக்குள்ளே பணத்தை பங்கிடுவதில் சிக்கல் ஏற்பட்டால் வழக்கு மூலமாகவே தீர்க்கப்பட வேண்டும். அந்த வழக்கு தீர்க்கப்படாத வரை வாரிசுதாரர்கள் யாரும் அந்தப் பணத்துக்கு உரிமை கோர முடியாது.a

நமது நாட்டில் உரிமை கோரப்படாத பல லட்சம் கோடி பணம் பல வங்கிகளிலும், தொழிலாளர் வைப்பு நிதியிலும் இருக்கின்றது. இவற்றுக்கு மூல காரணம் வாடிக்கையாளர்கள் முறையாக நாமினியை இந்தக் கணக்குகளில் தாக்கல் செய்யாதது ஆகும். சேமிக்கும் பணத்தைக் குடும்ப உறுப்பினர்களிடம் முறையாகத் தெரிவிக்காததும் இந்தப் பிரச்னைக்கு வழி வகுக்கும். மேலும், அந்தப் பணத்தைத் தெளிவாக உயில் போன்ற ஆவணங்களில் குறிப்பிட்டு தெரிவிக்காதது குடும்ப உறுப்பினர்களிடம் சட்ட சிக்கலை ஏற்படுத்தக் கூடும். அதனால், சேமிப்புக் கணக்குகளில் மட்டுமில்லாது கடன் கணக்குகளையும் குடும்ப உறுப்பினர்களிடம் முறையாகத் தெரியப்படுத்தி வங்கிக் கணக்கு புத்தகத்தில் நாமினியைத் தேர்வு செய்வது இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து குடும்ப உறுப்பினர்களைக் காப்பாற்றும்.

ஒருவரை தினமும் தொடர்வது மரணம் என்றால் அது மிகையல்ல. தனக்கு ஒன்றும் ஆகாது என்ற அதீத தைரியத்தில் பலர் வங்கிக் கணக்குகளில் முறையாக நாமினி விவரங்களைப் பதிவதில்லை. நம் பணம் நமக்குப் பிறகு முறையாக நமது குடும்ப உறுப்பினர்களுக்குச் செல்வதற்கு உறுதி செய்வது நமது கடமை. அதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படுவது மரணத்துக்குப் பிறகு, நமது குடும்ப உறுப்பினர்களைக் காப்பாற்றும்.

சரி முத்துக்குமார் விஷயத்துக்கு வருவோம்.

முத்துக்குமார் விஷயத்தில் வங்கி அதிகாரிகள் அவருடைய மனைவி செய்த தவற்றைச் சுட்டிக் காட்டினார்கள். அவருடைய வாரிசுதாரர்கள் முத்துக்குமாரின் மனைவி பணம் எடுத்ததை ஆட்சேபிக்கவில்லை. அதனால், வங்கி அதிகாரிகள் முத்துக்குமாரின் குடும்ப உறுப்பினர்களிடம் மன்னிப்புக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு ஆவணங்களை சரிபார்த்து முத்துக்குமாரின் பணத்தை அவரின் மனைவிக்கு மாற்றிக் கொடுத்து உதவினர்.