Pages

Tuesday, January 19, 2021

தேங்காய்

 கோவிலுக்கு செல்லும்போதோ அல்லது இல்லங்களில்   நாம் ஸ்வாமிக்கு நைவேத்ய சமயத்திலோ தேங்காய் உடைப்போம் அல்லவா, அது சில நேரங்களில் அழுகலாக இருந்துவிட்டால் அது அபசகுனமா? 

அபசகுனம் இல்லை. சில நேரங்களில் இம்மாதிரி நிகழ்வது இயற்கைதான். தோஷமே கிடையாது. வீணாக மனதை அலட்டிக்கொள்ள வேண்டாம். தெரியாமல் நடக்கும் இதற்காக பெரிதாக சங்கடப்படாமல் வேறு தேங்காய் கைவசம் இருப்பின் உடைத்து நைவேத்யம் செய்யலாம். 

தேங்காய் அழுகலாக இருப்பது என்பது பெரும்பாலும் நம் கையில் இல்லை. 

மேலும் ஒரு விஷயம். நைவேத்யத்திற்காக தேங்காய் உடைக்கும்போது சரி பாதியாக உடைக்க நினைத்தாலும் சில நேரங்களில் தாறுமாறாக உடைந்து விட்டாலும் பெரிய தோஷமில்லை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். அதற்காக, வேண்டும் என்றே நைவேத்யத்திற்கு சதுர்தேங்காயாக .உடைக்கக் கூடாது

இது விஷயத்தில் மற்றும் சில குறிப்புக்களை பார்ப்போமா.

நைவேத்யத்தின்போது தேங்காயுடன் இளநீர் நைவேத்யம் பொதுவாகச் சொல்லப்படவில்லை. வெறும் தேங்காயை மட்டும்தான் நைவேத்யம் செய்ய வேண்டும். இல்லத்திலும் ஆலயங்களிலும் இதுதான் சம்ப்ரதாயம்.

நமது தேசாச்சரத்தின்படி குடுமி இல்லாத தேங்காய் நைவேத்யத்திற்கு உகர்ந்தது இல்லை. குடுமியுடன் இருக்கும் தேங்காயைத்தான் உடைக்க வேண்டும். உடைத்த பிறகு, அதாவது நைவேத்யத்திற்கு முன்பு, அந்த குடுமியை எடுத்துவிட வேண்டும்.

சுப கார்யங்களில் சீர் வைக்கும்போதும், பிறருக்கு தாம்பூலம் தரும் சமயத்திலும் குடுமி உள்ள தேங்காய் தான் விசேஷம்.

- சர்மா சாஸ்திரிகள்

No comments:

Post a Comment