தனது மாமியாரை பிடிக்காத ஒரு இளம் பெண் அழுது புரண்டு தன் கஷ்டம் எல்லாம் தீர்த்திட வேண்டி சிவனை நோக்கி விரதமிருந்தாள். தவமாய் தவம் கிடந்து மெய் வருத்தி நாள்தோறும் பூஜை செய்தாள்.
அவளது தவத்தால் மனம் இரங்கிய சிவபெருமான் ஒரு நாள் அவன் முன் தோன்றி மகளே உனது மனவலிமையை மெச்சி மகிழ்ந்தேன்! ஏதாவது ஒரு வரம் கேட்டு பெற்றுக்கொள் என்றார்.
அப்பனே...எனக்கு ஒரு வரம் போதாது மூன்று வரம் வேண்டும் என்று பெண் கெஞ்சினாள்.
பெண் புத்தி பின் புத்தி !
உள்ளுக்குள் நகைத்தார் சிவபெருமான்.
சரி குழந்தாய் !
ஒரு கண்டிஷனுடன் உனக்கு மூன்று வரங்கள் அளிக்கப்படும்.
கண்டிஷனை ஏற்றுக் கொள்கிறாயா என்று கேட்டார்.
அவளோ அழகாய் சம்மதித்தாள்.
பகவான் கண்டிஷனை கூறினார்.
இதோ பார் மகளே நீ எது கேட்டாலும் கிடைக்கும்! ஆனால் உனக்கு கிடைப்பதுபோல் உன் மாமியாருக்கு பத்து மடங்கு அதிகமாக கிடைத்துவிடும்! என்ன சொல்கிறாய்?
மிக்க மகிழ்ச்சியுடன் முகம்குளிர சம்மதித்தாள் மருமகள்.
விதி யாரை விட்டது என்று எண்ணியபடி அவள் கேட்கும் வரத்தை கொடுக்க தயாரானார் சிவபெருமான்.
முதல் வரம்
எனக்கு 100 கோடி ரூபாய் வேண்டும்.
மாமியாருக்கு ஆயிரம் கோடி கிடைத்தது!
இரண்டாவது வரம்
இந்திய கண்டத்திலேயே மிக அழகிய பெண்ணாக நான் மாறவேண்டும்.
உலகிலேயே அதீத அழகான பெண்ணாக மாமியார் மாறினார்!
மூன்றாவது
எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்.
மாமியார் இதயம் வெடித்து செத்தாள்.
சிவபெருமான் மூர்ச்சையானார்.
யாருகிட்ட..என்கிட்டயா..
No comments:
Post a Comment