Pages

Friday, September 25, 2020

பாடும் நிலா பாடிய நிலாவானது (SPB)

பாடும் நிலா பாடிய நிலாவானது

அஞ்சலி அஞ்சலி...புஷ்பாஞ்சலி...

பாடும்நிலாவுக்கு இறுதி அஞ்சலி..!

நீ பாடியபாடல்களோ கீதாஞ்சலி...

கண்ணீரால்...

செலுத்துகிறோம் மௌன அஞ்சலி..!

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை...

நீ...காலமாகி விட்டாய் என்கிறார்கள்..!

இல்லை...இல்லவே இல்லை...

நீ...காலம் ஆகி விட்டாய்..!

எங்கேயும் எப்போதும் உன் குரல் ஒலிக்கிறதே...

எக்காலமும் உன் குரல் ஒலிக்குமே..!

அப்படியானால் காலம் கடந்தவன்தானே

ஆம்...நீ காலம் தான் ஆகிவிட்டாய்..!

பாட்டுத்தலைவன் மட்டுமல்ல நீ...

பண்புகளின் சிகரமல்லவா நீ...

திறமையால் 

எத்தனை சிகரத்தை தொட்டபோதும்

பண்புகளால்

அத்தனைக்கும் விஞ்சி நிற்கிறாயே..!

உன்னைப்பற்றி எழுதிக்கொண்டே போனால்...

அஞ்சலி...

காவியமாகிறது..!

துக்கம் தொண்டையை அடைக்கிறது 

எழுத வார்த்தைகள் எழவில்லை..!

உனது பரிமாணம் எட்டமுடியாதது...

உனதுமனிதாபிமானம் ஒப்பிடமுடியாதது

மீண்டுவந்துவிடுவாய்

என்று நம்பினோம்

இப்படி 

மீளாத் துயரில் ஆழ்த்திச் சென்று விட்டாயே..!

இனி இப்படி ஒரு கலைஞனைக் காணமுடியுமா 

எனத் தெரியாது...

இவர் பாடியபாடல்கள் காலத்தால் அழியாது..!

வணங்கி வாழ்த்தி விடை கொடுக்கிறோம்...

இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகின்றோம்..!

சிவாயநம 

திருச்சிற்றம்பலம் 

ஒரு இரசிகனாக...

ஒரு கலைஞனாக...

ஒரு அடியவனாக...

அருணை_முருகன்

No comments:

Post a Comment