MUMBAI
பழைய மும்பையை பார்த்தவர்களே பாக்கியசாலிகள்.
காரணம்?
கங்கை வெள்ளம் போல படு வேகமாக தமது அன்றாட தொழிலுக்கு செல்லும் உழைப்பாளிகளையும், பெரிய - சிறிய நிறுவனங்களையும், வியாபாரிகளையும், நெரிசலான போக்குவரத்தையும் coronaவுக்கு முன் இருந்த மும்பை நகரை பார்த்தவர்கள், மனதினுள் பிரமித்து வியந்தவர்கள்.
25/09/2020 அன்று ஒரு பணி நிமித்தம் Ola வில் Dadar வரை சென்று திரும்பியபோது மனம் மிகவும் வேதனை அடைந்தது.
வழி நெடுக ரோட்டில் நிறுத்தி வைக்க பட்டிருந்த வாடகை கார், ஆட்டோ, கை வண்டிகள்.
ஓட்டுவதற்கு ஆளில்லை. பாதி கட்டின பில்டிங், மெட்ரோ project வேலைக்காக கட்டின உதிரி பாகங்கள் எடுக்க ஆளில்லை. அடைக்கப்பட்டிருந்த கடைகள், அலுவலகங்கள், காலியாக இருக்கும் வீடுகள். சொந்த ஊருக்கு சென்றவர்கள் அவர்கள் ஊரிலேயே பிழைக்க தொடங்கி விட்டார்கள், மும்பை திரும்ப கூடாது என்ற நோக்கத்துடன்.
போதை பொருள் விவகாரத்தால் சினிமா பிரபலங்கள் பிடிபடுவதால் எந்த வேலையும் இல்லாமல் அவதிப்படும் திரைப்பட தொழிலாளிகள் ஏராளம்.
எனக்கு தெரிந்து நிறைய தமிழர்கள் சொந்த ஊருக்கு மும்பையிலிருந்து நபர் ஒருவருக்கு 15000 ரூபாய் கொடுத்து டூரிஸ்ட் பஸ்ஸில் சென்றார்கள்.
முகத்தில் சந்தோஷம் இல்லாமல், வருமானம் தேடி கட்டாய வேலைக்கு தற்போது செல்லும் மும்பை வாசிகள்.
தனியார் கம்பெனிகள் மூடியதால் வருமானத்திற்காக காய்கறிகள் விற்பனை செய்யும் ஆட்கள்.
மூடியிருக்கும் பெரிய சிறிய கோவில்கள்.
இந்த அவலமான நேரத்தை பயன்படுத்தும் மருத்துவமனைகள். பணம் இருந்தால் 15 நாட்கள் சிகிச்சைக்கு பின் மரணம். பணம் இல்லையேல் உடல் உறுப்பை எடுத்துவிட்டு 2 நாளில் மரணம்.
எந்த ரூபத்தில், யார் மூலமாக வைரஸ் வருமோ என்று பயந்து அன்றாட தேவைக்காக முகத்தில் மாஸ்க் மாட்டிக்கொண்டு நிம்மதி இழந்து வெளியே போய் வரும் நபர்கள்.
நான் ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை.
என் கணிப்பு படி, இந்த மும்பை பழைய மாதிரி ஆவதற்கு குறைந்தது 2 வருடம் ஆகலாம்.
இறைவா மேற்கொண்டு வேறு எந்த அழிவையும் கொடுத்துவிடாதே என்று வேண்டுகிறேன்.
பழைய மும்பையை பார்த்தவர்களே பாக்கியசாலிகள்.
No comments:
Post a Comment