Pages

Tuesday, September 29, 2020

ராணி பத்மினி

அலாவுதீன் கில்ஜி எனும் அயோக்கியனின் காமப்பசிக்கு இரையாவதைவிட, தீயில் குளிப்பது “மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே” என்று தீயில் குளித்தாள் பேரழகி பத்மினி; அவள் நூறு கிளியோபாட்ராவின் அழகுக்குச் சமமானவள்! இதோ அந்தக் கதை:–

ஏறத்தாழ 700 வருடங்களுக்கு முன், அலாவுதீன் கில்ஜி, டில்லியிலிருந்து அரசோச்சிய காலத்தில் ரஜபுதனத்திலுள்ள சித்தூரை பீமசிங்கன் என்பவன் ஆண்டு வந்தான். அவளுடைய மனைவியின் பெயர் பத்மினி. தாமரை போன்ற அழகிய முகம் வாய்ந்தவள். தைரியசாலி, நல்ல புத்தி சாதுர்யமிக்கவள். அவளுடைய அழகு பற்றிய செய்தி வட இந்தியா முழுதும் பரவியிருந்தது.

அலாவுதீன் கில்ஜிக்கு, எல்லா முஸ்லீம் மன்னர்களுக்கும் இருந்தது போல பல மனைவியர் இருந்தனர். அவன், சித்தூர் ராணி பத்மினியையும் அபகரிக்க விரும்பினான். ஆகவே பெரும்படையுடன் புறப்பட்டு ராஜஸ்தானுக்கு வந்து சித்தூரை முற்றுகையிட்டான். சித்தூரை வெல்ல முடியாதென்று தெரிந்தது. ‘கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற கதையாக, “நான் சித்தூரை வெல்ல வரவில்லை என்றும், பத்மினியின் அழகை ஒரே ஒரு முறை பார்த்துச் செல்லவே வந்ததாகவும்” பீம சிங்கனுக்குச் செய்தி அனுப்பினான்.

பீம்சிங்கன், அவன் வார்த்தையை நம்பி, ஓரிரு வீரர் துணையுடன் கோட்டைக்குள் வரலாமென்றும், ரஜபுத்ரப் பத்தினிப் பெண்கள் வேறு ஆடவரைப் பார்க்கக் கூடாதாகையால் நிலைக் கண்ணாடியில் மட்டும் அவள் உருவத்தைப் பார்க்கலாம் என்றும் நிபந்தனை போட்டான். உடனே அலாவுதீனும் இரண்டொரு வீரருடன் வந்து கண்ணாடியில், பேரழகி பத்மினியைப் பார்த்தான். ஏதேனும் சதி செய்து அவளைக் கவரவேண்டும் என்று எண்ணி, மனதில் சதித்திட்டம் தீட்டினான்.

 “நான் உன்னை நம்பி, உன் கோட்டைக்குள், தனியே வந்தேனே. நீயும் என்னை நம்பி என் கூட வந்து வழியனுப்பக்கூடாதா?” என்று பீம சிங்கனிடம் அலாவுதீன் சொன்னான். ரஜபுத்ர இந்துக்கள், சத்ய சந்தர்கள்; உண்மை விளம்பிகள்; டில்லித் துலுக்கர்கள் போல உடல் முழுதும் விஷ ரத்தம் ஓடுபவரல்ல. ஆகவே அலாவுதீனை நம்பி அவன் கூட குதிரையில் செல்லுகையில், அலாவுதீன் உத்தரவிட்டவுடன் ஆப்கானியப் படைகள், பீமசிங்கனைச் சூழ்ந்து கொண்டன. அவனைக் கைது செய்து டில்லிக்குக் கொண்டு சென்றான் அலாவுதீன்.

 “உன் மனைவியை என்னிடம் ஒப்புவித்தால் நான், உன்னை விடுவித்து, மீண்டும் சித்தூரின் மன்னனாக்குவேன்” என்று அலாவுதீன் சொன்னான். ஆனால் பீமசிங்கன் இணங்கவில்லை. இந்தச் செய்தி சித்தூர் வரை சென்றது.

பீமசிங்கனின் மனிவியான பத்மினி மஹா புத்திசாலி; வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும், முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்; வஞ்சனையை வஞ்சனையால்தான் வெல்ல வேண்டும் என்று கருதி, அலாவுதீன் கில்ஜிக்குச் செய்தி அனுப்பினாள். என் கணவனை நீ விடுவிப்பாயானால், நான் உன்னிடம் வரத்தயார். ஆயினும் ரஜபுதனப் பெண்கள், எல்லோரும் காணும்படி வெளியே உலவ மாட்டார்கள். ஆகவே என் பரிவாரம் புடை சூழ மூடிய பல்லக்குகளில் வருவோம்” என்றாள். அலாவுதீனும் ஆவலுடன் காத்திருந்தான்.

சித்தூர் கோட்டையிலிருந்து 70 மூடு பல்லக்குகள் புறப்பட்டன. ஒன்றில் கூட பெண்கள் கிடையாது. அத்தனையிலும், தேர்ச்சிபெற்ற 70 வீரர்கள் மறைந்திருந்தனர். ஆறு பல்லக்குத் தூக்கிகள், ஒவ்வொரு பல்லக்கையும் சுமந்தனர். அவர்கள் அனைவரும் வீரர்கள். பல்லக்குகளில் ஆயுதங்களை மறைத்து வைத்தனர். பாந்தால் என்பவன் அவர்களை டில்லியை நோக்கி அழைத்துச் சென்றான். அவன், “பத்மினி, கடைசியாக ஒரு முறை கணவனைப் பார்த்துவிட்டு உன்னிடம் வருவாள்” என்று அலாவுதீனிடம் சொன்னவுடன் “பத்மினியின் பல்லக்கை” கூடாரத்துக்குள் அனுப்பினான். அதிலிருந்த வீரன் வெளியே குதித்து பீமசிங்கனை குதிரையின் மேல் வைத்து தப்பிக்கச் செய்தான். உடனே பெரும் சண்டை நிகழ்ந்தது. இரு தரப்பும் வீரர்களை இழந்தன.

ஓரிரு ஆண்டுகள் உருண்டோடின. அலாவுதீனின் வெறி அடங்கவில்லை. எப்படியும் பத்மினியை அடைந்தே தீருவதென்று முடிவு செய்து, மீண்டும் படையெடுத்து சித்தூரை முற்றுகையிட்டான். இப்பொழுது பீமசிங்கன் பலவீனமான நிலையில் இருந்தான்; ஏனெனில் முந்தைய போர்களில் முக்கியப் படைத் தலைவர்களை இழந்து விட்டான். ஒரு கட்டத்தில் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தது. தன் மகனை அருகாமையிலுள்ள ரஜபுதன ராஜ்யத்துக்கு அனுப்பி பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லிவிட்டு வீரதீரப் போரில் ஈடுபட்டு உயிர் துறந்தான் பீமசிங்கன்.

ரஜபுதனப் பெண்கள் வீராங்கனைகள்; அரண்மனையின் அந்தப் புரத்தில் மாபெரும் தீ வளர்த்தனர். அதில் நூற்றுக் கணக்கானோர், பேரழகி பத்மினியுடன் குதித்து சாம்பலாயினர். வெற்றிக் களிப்புடன் கோட்டைக்குள் நுழைந்த அலாவுதீனுக்கு, வீரர்களின் பிணங்களும், வீரத்தாய்மார்களின் சாம்பலுமே கிடைத்தது!

பாரத நாடு உள்ள வரை, பத்மினியின் புகழும் நீடிக்கும்! ராஜபுதனக் கோட்டை கொத்தளங்களும், பாலைவன மணல் துகள்களும் இன்றும் கூட பத்மினியின் புகழைப் பாடிக் கொண்டு இருக்கின்றன!!

படித்ததில் வலித்தது.

Sunday, September 27, 2020

பாக்கியசாலிகள்

 MUMBAI

பழைய மும்பையை பார்த்தவர்களே பாக்கியசாலிகள்.

 காரணம்? 

கங்கை வெள்ளம் போல படு வேகமாக தமது அன்றாட தொழிலுக்கு செல்லும் உழைப்பாளிகளையும், பெரிய - சிறிய நிறுவனங்களையும், வியாபாரிகளையும், நெரிசலான போக்குவரத்தையும் coronaவுக்கு முன் இருந்த மும்பை நகரை பார்த்தவர்கள், மனதினுள் பிரமித்து வியந்தவர்கள்.

25/09/2020 அன்று ஒரு பணி நிமித்தம் Ola வில் Dadar வரை சென்று திரும்பியபோது மனம் மிகவும் வேதனை அடைந்தது. 

வழி நெடுக ரோட்டில் நிறுத்தி வைக்க பட்டிருந்த வாடகை கார், ஆட்டோ, கை வண்டிகள்.

ஓட்டுவதற்கு ஆளில்லை. பாதி கட்டின  பில்டிங், மெட்ரோ project வேலைக்காக கட்டின உதிரி பாகங்கள் எடுக்க ஆளில்லை. அடைக்கப்பட்டிருந்த கடைகள், அலுவலகங்கள், காலியாக இருக்கும் வீடுகள்.  சொந்த ஊருக்கு சென்றவர்கள் அவர்கள் ஊரிலேயே பிழைக்க தொடங்கி விட்டார்கள், மும்பை திரும்ப கூடாது என்ற நோக்கத்துடன்.  

போதை பொருள் விவகாரத்தால் சினிமா பிரபலங்கள் பிடிபடுவதால் எந்த வேலையும் இல்லாமல் அவதிப்படும் திரைப்பட தொழிலாளிகள் ஏராளம்.

எனக்கு தெரிந்து நிறைய தமிழர்கள் சொந்த ஊருக்கு மும்பையிலிருந்து நபர் ஒருவருக்கு 15000 ரூபாய் கொடுத்து டூரிஸ்ட் பஸ்ஸில் சென்றார்கள். 

முகத்தில் சந்தோஷம் இல்லாமல், வருமானம் தேடி கட்டாய வேலைக்கு தற்போது செல்லும் மும்பை வாசிகள். 

தனியார் கம்பெனிகள் மூடியதால் வருமானத்திற்காக  காய்கறிகள் விற்பனை செய்யும் ஆட்கள்.  

மூடியிருக்கும் பெரிய சிறிய கோவில்கள்.

இந்த அவலமான நேரத்தை பயன்படுத்தும் மருத்துவமனைகள். பணம் இருந்தால் 15 நாட்கள் சிகிச்சைக்கு பின் மரணம். பணம் இல்லையேல் உடல் உறுப்பை எடுத்துவிட்டு  2 நாளில் மரணம். 

எந்த ரூபத்தில், யார் மூலமாக வைரஸ் வருமோ என்று பயந்து  அன்றாட தேவைக்காக முகத்தில் மாஸ்க் மாட்டிக்கொண்டு நிம்மதி இழந்து வெளியே போய் வரும் நபர்கள்.

நான் ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை. 

என் கணிப்பு படி, இந்த மும்பை பழைய மாதிரி ஆவதற்கு குறைந்தது 2 வருடம் ஆகலாம். 

இறைவா மேற்கொண்டு வேறு எந்த அழிவையும் கொடுத்துவிடாதே என்று வேண்டுகிறேன்.

பழைய மும்பையை பார்த்தவர்களே பாக்கியசாலிகள்.

Friday, September 25, 2020

பாடும் நிலா பாடிய நிலாவானது (SPB)

பாடும் நிலா பாடிய நிலாவானது

அஞ்சலி அஞ்சலி...புஷ்பாஞ்சலி...

பாடும்நிலாவுக்கு இறுதி அஞ்சலி..!

நீ பாடியபாடல்களோ கீதாஞ்சலி...

கண்ணீரால்...

செலுத்துகிறோம் மௌன அஞ்சலி..!

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை...

நீ...காலமாகி விட்டாய் என்கிறார்கள்..!

இல்லை...இல்லவே இல்லை...

நீ...காலம் ஆகி விட்டாய்..!

எங்கேயும் எப்போதும் உன் குரல் ஒலிக்கிறதே...

எக்காலமும் உன் குரல் ஒலிக்குமே..!

அப்படியானால் காலம் கடந்தவன்தானே

ஆம்...நீ காலம் தான் ஆகிவிட்டாய்..!

பாட்டுத்தலைவன் மட்டுமல்ல நீ...

பண்புகளின் சிகரமல்லவா நீ...

திறமையால் 

எத்தனை சிகரத்தை தொட்டபோதும்

பண்புகளால்

அத்தனைக்கும் விஞ்சி நிற்கிறாயே..!

உன்னைப்பற்றி எழுதிக்கொண்டே போனால்...

அஞ்சலி...

காவியமாகிறது..!

துக்கம் தொண்டையை அடைக்கிறது 

எழுத வார்த்தைகள் எழவில்லை..!

உனது பரிமாணம் எட்டமுடியாதது...

உனதுமனிதாபிமானம் ஒப்பிடமுடியாதது

மீண்டுவந்துவிடுவாய்

என்று நம்பினோம்

இப்படி 

மீளாத் துயரில் ஆழ்த்திச் சென்று விட்டாயே..!

இனி இப்படி ஒரு கலைஞனைக் காணமுடியுமா 

எனத் தெரியாது...

இவர் பாடியபாடல்கள் காலத்தால் அழியாது..!

வணங்கி வாழ்த்தி விடை கொடுக்கிறோம்...

இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகின்றோம்..!

சிவாயநம 

திருச்சிற்றம்பலம் 

ஒரு இரசிகனாக...

ஒரு கலைஞனாக...

ஒரு அடியவனாக...

அருணை_முருகன்

Thursday, September 17, 2020

சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டிய திரு.வீரபாபு

கொரனோவால் எந்த உயிரிழப்பும் இல்லாமல் சிறப்பாக கட்டுப்படுத்தி, குணப்படுத்தியதாக  சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டிய சித்த மருத்துவர் திரு.வீரபாபு அவர்கள் கொரோனாவைக் குணப்படுத்த கபசுரக் குடிநீருக்கு துணை மருந்தாக அவர் கண்டுபிடித்த மூலிகை தேநீரையும் சேர்த்துக் கொடுத்து தமிழக அரசின் ஒத்துழைப்புடன் ஆங்கில மருந்து இல்லாமல், முழுவதும் சித்தா மருந்துகளைக் கொண்டே #கொரோனாவை ஒரே வாரத்தில் குணப்படுத்தி வருகிறார்

அவ்வாறு தாம் கொடுக்கும் மூலிகை தேநீரில் சேரும் பொருட்களை  மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து உள்ளார்.

அதன் விபரங்கள்

மூலிகை #தேநீர்

சுக்கு - 100 கிராம்,

அதிமதுரம் - 100 கிராம்,

சித்தரத்தை - 30 கிராம்

கடுக்காய்த்தோல்- 30 கிராம்

மஞ்சள் - 10 கிராம்

திப்பிலி - 5 கிராம்

ஓமம் - 5 கிராம்

கிராம்பு- 5 கிராம்,

மிளகு - 5 கிராம்

மேற்கூறிய அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

இவற்றை இடித்துப் பொடிசெய்து ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தவும். 

ஒரு பாத்திரத்தில் 400 மி.லி நீர் விட்டு அதில் இந்த பொடியை 10 கிராம் அளவு போட்டு நன்கு கொதிக்க விடவும். இக்கசாய நீர் 100 மி.லி அளவாக வற்றியதும் ஒரு தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரை அல்லது 10 மி.லி அளவு தேன் சேர்த்து கிளறி, இறக்கி ஆற வைக்கவும்.

இளம் சூடாக ஆறிய பின்பு இதை வடிகட்டி காலையில் உணவிற்கு பின்பு குடிக்கவும். இரவிலும் இதே போல் செய்து உணவிற்குப் பின்பு குடிக்கவும்.

பொதுவாக கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களுக்கு கபசுரக் குடிநீரை உணவிற்கு முன்பும், இந்த மூலிகை தேநீரை உணவிற்குப் பின்பும் கொடுக்கப் படுகிறது.

இந்த மூலிகை தேநீர் அடுப்பில் கொதிக்கும் போது 5 கற்பூரவள்ளி இலைகள், 10 புதினா இலைகளும் சேர்க்கலாம்.


இந்த மூலிகைத் தேநீரை பெரியவருக்கு ஒருவேளைக்கு 100 மி.லி அளவு கொடுக்க வேண்டும். 

சிறுவர்களுக்கு இதில் பாதி அளவு 50 மி.லி போதும்.

இதை கொரோனா அறிகுறிகள் குணமாகும் வரை கொடுக்க வேண்டும்.

கொரோனா இல்லாதவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இதை தினமும் ஒருவேளை வீதம் காலையில் குடித்து வரலாம்.!

பத்தியமில்லை

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசை  தமிழரின் மூலிகை மருந்து ஓட ஓட விரட்டுகிறது  என்பது வியப்பான நற்செய்தி.

வாழ்க சித்த மருத்துவம்.

வளர்க தமிழரின் புகழ்

மருத்துவர் வீரபாபு, சென்னை

உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா?

 உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்

உடனே மனது ஏற்காது. ஆனால் உன்மை.

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.

போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை

ஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள். 

செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.

உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!

எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்! 

நாம் இறந்த பிறகு, நமது உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ

உங்களுக்குத் தெரியப் போவதில்லை.

நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும்.

உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.

உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும். 

அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை! 

சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள்.

பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம். 

பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது! 

ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது.

அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!

ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்?

ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.

பணம், புகழ், சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!

யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.

அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்.

நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். 

Wednesday, September 16, 2020

சில நேரங்களில் சில மனிதர்கள்

நியூயார்க் நகரத்தின் சுரங்கப்பாதை ஒன்றில் பிரபல எழுத்தாளர் ஒருவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் அமைதியாக அமர்ந்திருந்தார். ஆட்கள் அதிகமில்லாத அந்த இடத்தில் ஒரு அமைதியான சூழ்நிலை நிலவியது. சிலர் கண்களை மூடி அமர்ந்திருந்தார்கள். சிலர் பத்திரிகைகள் படித்தபடி அமர்ந்திருந்தார்கள். திடீரென்று அங்கு ஒருவர் தன் இரண்டு குழந்தைகளுடன் வந்தார். அவர் அந்த எழுத்தாளர் அருகே கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்தார். அந்த சிறுவர்கள் இருவரும் ஆறு வயதைத் தாண்டாதவர்கள். அவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் அங்கிருந்த அமைதி காணாமல் போயிற்று. குழந்தைகள் சத்தம் போட்டு விளையாட ஆரம்பித்து, பின்னர் சண்டையிட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் பொருட்களை எடுத்து வீசிக்கொள்ள ஆரம்பித்தனர். அந்த தந்தையோ அந்த சிறுவர்களைக் கண்டிப்பதாகத் தெரியவில்லை. கண்களைத் திறக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார்.

அங்கு அமர்ந்திருந்த மற்றவர்கள் எரிச்சலுடன் அவரைப் பார்த்ததை அவர் அறியவில்லை. அந்த எழுத்தாளரோ தன்னம்பிக்கை, பொறுமை பற்றியெல்லாம் நிறைய எழுதிக் குவித்த எழுத்தாளர். அவரே பொறுத்து பொறுத்துப் பார்த்து ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தன்னருகே கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்திருந்த அந்த நபரிடம் சொன்னார். "உங்கள் பிள்ளைகள் மற்றவர்களைத் தொந்திரவு செய்கிறார்கள். அவர்களைக் கொஞ்சம் கட்டுப்படுத்துங்களேன்."

அந்த நபர் கண்களை மெள்ளத் திறந்தார். "ஆமாம்....ஏதாவது செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவர்கள் தாய் இறந்து விட்டாள். அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அவள் உடலைத் தர சிறிது நேரம் ஆகும் என்றதால் அங்கிருக்க முடியாமல் இங்கு வந்தேன். இனி என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அவர்களுக்கும் இதை எப்படி எடுத்துக் கொள்வது, என்ன செய்வது என்று தெரியவில்லை என்று நினைக்கிறேன்.... மன்னிக்கவும்" அந்த எழுத்தாளர் அதுவரை அந்த நபர் மீதும், அந்தச் சிறுவர்கள் மீதும் கொண்டிருந்த கோபமெல்லாம் ஒரு கணத்தில் காற்றாய் பறந்து போயிற்று. அதற்குப் பதிலாக இரக்கமும் பச்சாதாபமும் மனதில் எழ அவர் மனைவி இறந்ததற்கு வருத்தம் தெரிவித்து விட்டு ஏதாவது உதவி தேவையா என்று மனதாரக் கேட்டார். அந்த எழுத்தாளர் 'செயல்திறன் மிக்க மனிதர்களின் ஏழு பழக்கங்கள்' என்ற புகழ் பெற்ற புத்தகத்தை எழுதிய ஸ்டீபன் ஆர். கோவே. இந்த நிகழ்ச்சியில் அந்த சிறுவர்களின் செயல்கள் மாறவில்லை. அந்த அமைதியான சூழ்நிலை மீண்டும் திரும்பவில்லை. ஆனால் அந்த குழந்தைகளும், அவர்கள் தகப்பனும் இருக்கும் சூழ்நிலை விளங்கியதும் அவர் மனநிலை முற்றிலுமாக மாறி விட்டது.

இன்னொரு நிகழ்ச்சி. கராத்தே, குங்·பூ கலைகளில் எல்லாம் மிகவும் தேர்ச்சி படைத்த ஒரு வீரர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் தியான வகுப்புகளுக்கும் தொடர்ந்து செல்பவர். ரயிலில் நன்றாகக் குடித்து விட்டு ஒருவன் ரயில் பயணிகள் ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு வம்பு செய்து சண்டையிட்டுக் கொண்டு இருந்தான். நேரமாக ஆக அவன் வார்த்தைப் பிரயோகங்கள் மிக மோசமாகப் போய்க் கொண்டு இருந்தன. ஒருசிலர் திரும்பப் பேசினர். ஒருசிலர் முகம் சுளித்துக் கொண்டு வேறிடத்திற்குப் போய் அமர்ந்து கொண்டார்கள். நீண்ட பயணமானதால் இதை நிறைய நேரம் பார்க்க நேர்ந்த கராத்தே வீரருக்கு கோபம் பொங்கி வந்தது. போய் இரண்டு தட்டு தட்ட வேண்டும் என்று நினைக்கையில் அத்தனை நேரம் அமைதி காத்த இன்னொரு பயணி அந்தக் குடிகாரனை நோக்கி சென்றதைக் கண்டு நிதானித்தார். அந்தப் பயணியும் தன்னைப் போலவே அடிக்கத் தான் செல்கிறார் என்று நினைத்த கராத்தே வீரருக்கு வியப்பு ஏற்படும் வண்ணம் அந்த நபர் குடிகாரன் அருகில் அமர்ந்தார். கனிவுடன் அவனிடம் கேட்டார். "உனக்கு என்ன பிரச்சனை?" அந்தக் குடிகாரன் அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை போலத் தெரிந்தது. திகைத்துப் போய் அவரை ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லாமல் பார்த்த அவன் கண்களில் நீர் திரண்டது. அவர் தோளில் சாய்ந்து கொண்டு விம்மி அழ ஆரம்பித்தான். அழுகையினூடே தனக்குத் திடீரென்று வேலை போன செய்தியைச் சொன்னான். தன் சம்பாத்தியத்தை நம்பி வீட்டில் மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருப்பதைச் சொன்னான். அந்த முதலாளியின் இரக்கமற்ற குணத்தைச் சொன்னான். சொல்லி அழுது முடித்த பின் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த நண்பர் குடிப்பது எந்தப் பிரச்சனையையும் வளர்த்துமேயொழிய குறைக்காது என்று சொன்னார். முதலாளி மேல் இருந்த கோபத்தை சக பயணிகளிடம் காட்டுவது சரியல்ல என்று சொன்னார். குடிப்பதற்கு பதிலாக அடுத்த வேலை எங்கு கிடைக்கும், அதற்காக யாரை அணுகலாம் என்று யோசித்திருந்தால் ஒரு வழி கிடைத்திருக்கலாம் என்று சொன்னார்.

அவர் பேசப் பேச அந்தக் குடிகாரன் அடைந்த மாற்றத்தைக் கண்ட கராத்தே வீரர் அது தனக்குப் பெரிய படிப்பினையாக அமைந்தது என்று ஒரு கட்டுரையில் எழுதியதை நான் படித்தேன். அவர் எழுதியிருந்தார். "அந்த நபர் ஒரு நிமிடம் என்னை முந்திக் கொண்டு அந்தக் குடிகாரனிடம் போயிருக்கா விட்டால் கண்டிப்பாக நன்றாக அவனை அடித்து காயப்படுத்தி இருப்பேன் என்பதில் சந்தேகமில்லை. முதலிலேயே வேலை போன அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் என்னாலேயே மேலும் துக்கம் விளைந்திருக்கும். அவனுடைய செய்கைகளுக்குப் பின் உள்ள துக்கத்தை அந்த நபர் உணர்ந்திருக்க வேண்டும். அவருடைய கனிவான செய்கை அவன் புண்ணுக்கு மருந்தாக அமைந்தது. அவன் அமைதியடைந்தான். அவன் இறங்க வேண்டிய இடம் வரை அவனிடமிருந்து அதற்குப் பிறகு ஒரு சத்தமோ, தொந்திரவோ இருக்கவில்லை. அதைப் பார்த்துக் கொண்டிருந்த எல்லோருக்கும் அவன் மீதிருந்த எரிச்சலும், கோபமும் விலகியது என்பதை சொல்லத் தேவையில்லை."

முதல் நிகழ்ச்சியில் இருக்கும் நியாயம் இரண்டாவது நிகழ்ச்சியில் இல்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அந்த இரண்டாவது நிகழ்ச்சியிலும் அந்த செயலுக்குப் பின்னால் ஒரு காரணம் இருப்பதாக உணர்ந்த ஒரு மனிதர் காட்டிய கனிவு எப்படி அந்த சூழ்நிலையை அடியோடு மாற்றியது என்பதைப் பாருங்கள். நமக்குத் தவறாகத் தோன்றும் பல செயல்களுக்குப் பின்னால் பல ஆழமான காரணங்கள் இருக்கின்றன. சில காரணங்கள் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிந்தவையாக இருக்கலாம். சில காரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால் அந்தக் காரணங்களை அறியும் போது புரிந்து கொள்ளல் சாத்தியமாகிறது. மன்னித்தல் சுலபமாகிறது. எப்போதும் ஒரே மாதிரி நடந்து கொள்ள மனிதன் எந்திரமல்ல. எந்திரங்கள் கூட பழுதாகும் போது சில நேரங்களில் சில மனிதர்கள் நம் எதிர்பார்ப்புக்கு எதிர்மாறாக நடந்து கொள்வது அதிசயமல்ல. அது போன்ற சமயங்களில் அவர்கள் மீது கோபம் கொள்வதற்குப் பதிலாக ஏதாவது காரணம் இருக்கலாம் என்ற சிந்தனை நமக்குள் எழுமானால் அதைப் பெரிதுபடுத்தாமல் நகர்கிற பக்குவம் நமக்கு வந்து விடும்.

Friday, September 11, 2020

சமஸ்கிருதம்

 சமஸ்கிருதம் பற்றிய இந்த 20 உண்மைகளை அறிந்த பிறகு நீங்கள் இந்தியன் என்பதில் பெருமை கொள்வீர்கள். 

எந்த இந்தியனையும் தலை நிமிர்த்தும்... சமஸ்கிருதம் பற்றி சில உண்மைகளை இன்று கூறுகிறோம்...

. 1. சமஸ்கிருதம் அனைத்து மொழிகளுக்கும் தாயாக கருதப்படுகிறது. 

2. சமஸ்கிருதம் ′′ உத்தர்காண்ட் ′′ இன் ஆட்சிமொழி

3.  இஸ்லாமிய படையெடுப்பு என்ற குறுக்கீடுக்கு முன் சமஸ்கிருதம் இந்தியாவின் தேசிய மொழியாக இருந்தது. 

4. நாசாவின் கருத்துப்படி, சமஸ்கிருதம் பூமியில் பேசப்படும் மிக ′′ தெளிவான மொழி ′′ ஆகும். 

5. உலகில் எந்த மொழியையும் விட சமஸ்கிருதத்தில் அதிக வார்த்தைகள் உள்ளன. 

தற்போது சமஸ்கிருத அகராதியில் ' 102 பில்லியன் 78 கோடியே 50 லட்சம் வார்த்தைகள் 

6.  சமஸ்கிருதம் எந்த பாடத்திற்கும் ஒரு ′′ அற்புதமான புதையல் ′′ ஆகும். 

யானைக்கு சமஸ்கிருதத்தில் 100 க்கும் மேற்பட்ட சொற்கள் இருப்பது போல  

7. நாசாவில் சமஸ்கிருதத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட ′′ 60,000 கையேடுகளை நாசாவில் வைத்துள்ளது. இதில் நாசா ஆராய்ச்சி செய்கிறது. 

8.  ஜூலை, 1987 ல் கணினி மென்பொருட்கள் உருவாக்க சமஸ்கிருதம் ′′ சிறந்த மொழியாக ′′ கருதப்பட்டது - ஃபோர்பார்ஸ் இதழ்

9. சமஸ்கிருதத்தில் வேறு எந்த மொழியையும் ஒப்பிடும்போது, குறைந்த வார்த்தைகளில் வாக்கியம் நிறைவடைகிறது. 

10.  உலகின் ஒரே மொழி சமஸ்கிருதம் மட்டுமே, நாக்கின் எல்லா தசைகளை பேசுவதில் பயன்படுத்துகிறது. 

11. அமெரிக்க இந்து பல்கலைக்கழகத்தின் படி சமஸ்கிருதத்தில் பேசுபவர் BP, நீரிழிவு, கொலஸ்ட்ரால் முதலியவற்றிலிருந்து விடுவிக்கப்படுவார். 

 சமஸ்கிருதத்தில் பேசுவது, மனித உடலின் ′′ நரம்பியல் ′′ எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும், ஒரு நபரின் உடல் நேர்மறையான உணர்வுடன் சுறுசுறுப்பாக மாறுகிறது. 

12.  சமஸ்கிருதம் ′′ ஸ்பீச் தெரபி ′′ செறிவு மேம்படுத்துதலும் உதவியாக உள்ளது 

13.  கர்நாடக ′′ மூதூர் கிராம ′′ மக்கள் சமஸ்கிருதத்தில் மட்டுமே பேசுகிறார்கள். 

14. "சுதர்மா", சமஸ்கிருதத்தின் முதல் நாளிதழ்...

1970 ல் தொடங்கியது 

ஆன்லைன் பதிப்பு ′′ இன்றும் கிடைக்கிறது. 

15.  ஜெர்மனியில் அதிக அளவில் சமஸ்கிருத ஆசிரியர்கள் தேவை உள்ளது. 

Germany ஜெர்மனியின் 14 பல்கலைக்கழகங்களில் ′′ சமஸ்கிருதம் ′′ கற்பிக்கப்படுகிறது. 

16.  நாசா விஞ்ஞானிகளின் படி, விண்வெளி பயணிகளுக்கு ஆங்கிலத்தில் செய்தி அனுப்பிய போது... அந்த செய்தி வார்த்தைகள் இடம் மாறியதால் தலைகீழாக மாறியது. 

இதனால் அந்த செய்தியின் அர்த்தம் மாற்றப்பட்டது. 

அவர்கள் பல மொழிகளை பயன்படுத்தினார்கள், ஆனால் ஒவ்வொரு முறையும் இதே பிரச்சனைதான் வருகிறது. கடைசியில் சமஸ்கிருதத்தில் செய்தி அனுப்பினார் ஏனென்றால் சமஸ்கிருத வார்த்தைகள் திருப்பினாலும் பொருள் மாறுவதில்லை. 

அதாவது ...

👉🏽अहम् विद्यालयं गच्छामि।

👉🏽विद्यालयं  गच्छामि अहम्।

👉🏽गच्छामिअहम् विद्यालयं ।

மூன்று விதமாக எழுதப்பட்ட வாக்கியங்களின் அர்த்தத்திற்கும் வித்தியாசம் இல்லை. 

17. கணித வினாக்களை கணினியால் தீர்க்கும் முறை என்றால் அல்காரிதம், ′′ சமஸ்கிருதத்தில் ′′ ஆங்கிலத்தில் அல்ல என்பதை அறிந்து ஆச்சரியப்படுவீர்கள். 

18. நாசா விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட 6 வது மற்றும் 7 வது தலைமுறையின் சூப்பர் கம்ப்யூட்டர்கள், 2034 இல்  சமஸ்கிருத மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் 

19.  சமஸ்கிருதம் கற்பது மனதை கூர்மையாக்குகிறது மற்றும் நினைவுகளின் சக்தி அதிகரிக்கிறது. 

அதனால்தான் லண்டன் மற்றும் அயர்லாந்தின் பல பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது. 

20. இந்த நேரத்தில் உலகின் 17 க்கும் மேற்பட்ட நாடுகளின் பல்கலைக்கழகங்களில் இருந்து குறைந்தது ஒரு பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப கல்வி பாடங்களில் சமஸ்கிருதம் படிக்கப்படுகிறது.

Thursday, September 10, 2020

ஸ்ரார்த்த/திதி சாப்பாடு

 ஸ்ரார்த்த/திதி சாப்பாடு


ஒருமுறை தன் முன்னோர் ஸ்ரார்த்தத்துக்கு [திவஸம்/திதி] தன் குடிலுக்கு சாப்பிட வருமாறு விஸ்வாமித்ரரை வஸிஷ்டர் அழைத்தார்.


"அதற்கென்ன வந்தால் போச்சு.! ஆனால் 1008 வகை காய்கறி செய்து படைக்க வேண்டும்" என்றார்.


உலகில் 1008 வகையான காய்கறிகள் உண்டா.? அப்படியே இருந்தாலும் இத்தனை கறிகாய்களை சமைத்து யாராவது உணவு படைக்க முடியுமா.? அப்படியே சமைத்துப்போட்டாலும் அதைச்சாப்பிட யாரால் முடியும்.?


விஸ்வாமித்திரர் தன்னை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டி வைக்கவோ அல்லது அவமானப்படுத்தவோ இப்படிச்செய்கிறார் என்பது வஸிஷ்டருக்குத் தெரியாதா என்ன.?


இருந்தபோதிலும் விட்டுக்கொடுக்காமல், "ஆஹா.! 1008 வகை கறியமுது வேண்டுமா? அதற்கென்ன அருந்ததியிடம் சொல்லி விடுகிறேன்" என்றார்.


ஸ்ரார்த்தச்சாப்பாடு நாளும் வந்தது. விஸ்வாமித்திரர் இலையில் அமர்ந்தார்.


பாகற்காய்கறி., பலாப்பழம்., பிரண்டைத்துவையல் இவைகளோடு., ஒரு வாழை இலையில் எவ்வளவு காய்கறிகள் படைக்கமுடியுமோ அவ்வளவு மட்டுந்தான் இலையில் இருந்தன.


1008 காய்கறிகள் இல்லை.


விஸ்வாமித்திரர் கோபத்துடன் "என்ன இது.? 1008 வகை காய்கள் எங்கே.?" என்று வஸிஷ்டரை வினவினார்.


அவரோ "நான் அருந்ததியிடம் சொல்லிவிட்டேனே! அவளையே கேட்டுக்கொள்ளுங்கள்" என்றார்.


இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த உலகம் போற்றும் உத்தமி அருந்ததி., தானே முன்வந்து ஒரு ஸ்லோகத்தை கூறிவிட்டு., "இதுதானே ஸ்ராத்தகால விதி உங்களுக்கு தெரிந்திருக்குமே.!" என்றாள்.


விஸ்வாமித்திரர் வாயடைத்துப் போனார். பேசாமல் சாப்பிட்டுவிட்டு வாழ்த்தி விட்டுப்போனார். அருந்ததி கூறிய அந்த ஸ்லோகம் என்ன.?


காரவல்லி ஸதம் சைவ வஜ்ரவல்லி ஸதத்ரயம் பனஸம் ஷட் ஸதம்சைவ ஸ்ரார்த்தகாலே விதீயதே


कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं पनसं षट् शतंचैव श्रार्धकाले विधीयते


"ஒரு ஸ்ராத்தத்திதியன்று சமைக்கப்படும் சமையலில்., 

பாகற்காய்கறி 100 காய்களுக்குச்சமம்., 

பிரண்டைத்துவையல் 300 காய்களுக்குச்சமம், 

பலாப்பழம் 600 காய்களுக்குச்சமம் 

என்று பாடல் கூறுகிறது.


ஆயிரம் காய்கள் ஆயிற்றா.?


மீதி இலையில் எண்ணிப்பாருங்கள்., எட்டுகாய் கறிகள் வைத்திருக்கிறேன். 

ஆக மொத்தம் 1008.! " என்றாள்.


சாஸ்த்திரப்படி விளக்கம் சொன்ன அருந்ததியின் பதில் ஞாயம் தானே.?


ஸமயோசித புத்தியும்., இல்லற தர்மமும் அறிந்தவர்களாக., நம் பாரதத்தில் அன்றைய பெண்கள் இருந்திருக்கிறார்கள்.!


இதைப்போன்ற நாம் தெரிந்து கொள்ளவேண்டிய நல்ல விஷயங்கள் ஏராளமாக உள்ளது.