பொன்பரப்பியில் நாதமுனிகள்
UYYAKONDAR’S THANIAN:
நம: பங்கஜ நேத்ராய நாத: ஸ்ரீ பாத பங்கஜே
ந்யஸ்த ஸர்வ பராய அஸ்மத் குல நாதாய தீமதே
நாதமுனிகள் உய்யக் கொண்டாரைத் தம் வாரிசு
என நியமித்து அதனை அறிவித்த பின் தம் இல்லப் பணிகளில் மூழ்கினார்.
ஒருநாள் வேடன் ஒருவன் தன் மனைவியையும்
குரங்கு ஒன்றையும் கூட்டிக்கொண்டு நாதமுனிகளைத் தேடிக் கொண்டு
வந்தான். அவன் முனிவரை சேவித்துச் செல்ல விரும்பி அவருடைய
திருமாளிகை வந்தான். ஆனால், முனிகள் அப்போது ஊரில் இல்லை. வேடன்
அவரைக் காண முடியாமல் மேற்குப் பக்கம் திரும்பிச் சென்றான்.
அவர்கள் சென்ற சில நேரத்தில் முனிகள் வீடு திரும்பினார்.
அவர்கள் சென்ற சில நேரத்தில் முனிகள் வீடு திரும்பினார்.
அவருடைய மகள் வேடுவத் தம்பதிகள் வந்து
தேடிவிட்டு மேற்குத் திசை நோக்கிச் சென்றுவிட்டதைக் கூறினாள்.
வந்தவன் ராமபிரானே என்று முனிகள் உணர்ந்தார். துணுக்குற்று அந்த
வேடன் சென்ற திசை நோக்கித் தேடி பொன்பரப்பி எனும் ஊர் வரை போய்
விட்டார்.
வேடுவத்தம்பதிகளைக் காணவில்லை. யாரும்
கண்டதாகக் கூறவும் இல்லை. அலைந்த களைப்பும், காண முடியவில்லையே
என்ற சோர்வும் ஏற்பட்டு மண் மேல் தடாலென மயங்கி விழுந்தார்.
தலையில் பலமாக அடிபட்டது.
அவரைச் சீடர்கள் இல்லம் கொண்டு வந்தனர்.
இரெண்டொரு நாளாக மயக்கம் தெளியவே இல்லை. ஏகாதசி அன்று அவருடைய
உயிர் பிரிந்தது.
பொன்பரப்பியில் அவரை அடக்கம்
செய்வித்தனர்.
UYYAKONDAR’S THANIAN:
நம: பங்கஜ நேத்ராய நாத: ஸ்ரீ பாத பங்கஜே
ந்யஸ்த ஸர்வ பராய அஸ்மத் குல நாதாய தீமதே
No comments:
Post a Comment