Pages

Tuesday, March 31, 2026

ராமரின் பரம்பரை ~ லாஹூர்

லவ மற்றும் குசா இறந்த பிறகு ராமரின் பரம்பரைக்கு என்ன நேர்ந்தது?

ஸ்ரீ ராமர் 11,000ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாக கீழ்க்கண்ட சுலோகம் கூறுகிறது.

"சததஸ து சஹஸ்த்ராணி ராமே ராஜ்யதி".

ஸ்ரீ ராமருக்கு பிறகு அவரது கோசல நாடு பல பாகங்களாக பிரிக்கப்பட்டு லவன் குசன் மற்றும் லட்சுமண பரத சத்ருகனர்களின் மகன்களுக்கும் தரப்பட்டது.

லவன் ஷ்ரவஸ்தி / தற்போது லாஹூர் என்று அழைக்கப்படும் லவ்புரி எனும் நகரை தலைநகராக கொண்டு அவனது பகுதியை அரசாண்டார்.

குசன் அயோத்தியை தலைநகராகக் கொண்டு அரசாண்டார். பின்னர் தற்போது குஷிநகர் என அழைக்கப்படும் குஷாவதியை புதிய தலைநகராகக் கொண்டு அரசாண்டார்.

இதன் காரணமாக ராமனுக்கு அடுத்து குசனது பெயர் தான் ராம பரம்பரையில் வருகிறது. அவருக்கு பின் அவரது மகன் அதிதி அவரது மகன் நிசாதன் என ராம பரம்பரை நீளுகிறது.

(குசன் மட்டுமே ராம சீதையின் மகன் என சில பேச்சுவழக்கு கற்பனைக் கதைகள் உண்டு. வனத்திற்கு சென்ற கர்ப்பிணியான சீதை வால்மீகி ஆசிரமத்தில் அடைக்கலம் புகுந்தார் அங்கே அவருக்கு குழந்தை பிறந்தது, பின்னர் வால்மீகி முனிவர் தவம் செய்யும் போது இடையூறாக இருக்கக்கூடாது என தண்ணீர் எடுப்பதற்காக குடத்துடன் குழந்தையையும் சீதை ஆற்றங்கரைக்கு எடுத்து செல்கிறாள். விழித்த முனிவரோ குழந்தையை காணாமல் சீதைக்கு என்ன பதில் சொல்வது என எண்ணி தர்ப்பை கொண்டு குழந்தையை உருவாக்குகிறார். திரும்பி வந்த சீதை அக்குழந்தையையும் தன்னுடையதாய் எண்ணி வளர்க்கிறாள். பின்னாளில் சீதை நிலத்தில் உறைந்த பிறகு லவனும் குசனும் புனித நெருப்பினை வலம் வருகின்றனர். லவன் நெருப்பில் மறைந்து விட நிலைத்து நின்ற குசனுக்கு ராஜ்ஜியம் வழங்கப்பட்டதாக கதை உண்டு. ஆனால் மூல ராமாயணத்தில் இவ்வாறு இல்லை.இது வெறும் செவிவழிக் கதையாகும்)

ரகு வம்சத்தில் மொத்தம் 146 அரசர்கள், அதில் முதல் அரசன் சூரியனின் மகனான மனு ஆவார் எனவேதான் அவ்வம்சம் சூரியவம்சம் அல்லது ரகுவம்சம் என்று அழைக்கப்பட்டது. ஸ்ரீ ராமர் அவ்வம்சத்தின் 81வது அரசர், குசன் 82வது அரசர்.

குசனுக்கு பிறகு 64 தலைமுறைகள் அரசாண்டனர். லங்குல் அல்லது சித்தார்த் என அறியப்படும் கௌதமபுத்தர் சூரியவம்சத்தின் 141வது அரசராவார் (BCE 563-483). அவரது மகன் ராகுல் / ப்ரசஞ்சித் அவருக்கு அடுத்த அரசன் ஆவார்.

லங்குல் மற்றும் அவரது மகன் ப்ரசஞ்சித் ஆகியவர்கள் புத்தர், ராகுல் இல்லை வேறு ஆட்கள் என்ற கருத்தும் உள்ளது. எனவே ராம வம்சத்தில் புத்தர், ராகுல் பெயர்களுக்கு பதிலாக லங்குல், ப்ரசஞ்சித் ஆகிய பெயர்களே பயன்படுத்தப்படுகிறது. (புத்தரை விஷ்ணுவின் ஒன்பதாம் அவதாரமாக வட நாட்டில் வணங்குவர் ஆனால் தென்னாட்டில் அது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை)

ராமனுடைய வம்சத்தின் கடைசி அரசர் சௌமித்ரன் / சுமித்ரன் ஆவார். கிமு 362ல் சுமித்ரனை மகாபத்மநந்தன் வென்ற பிறகு உலகின் மிகப்பெரிய அந்த அரச வம்சம் முடிவுற்றது.

No comments:

Post a Comment