Pages

Wednesday, January 31, 2024

துவாரகா விஜயம் ~ Dwarka Visit

துவாரகா செல்ல வேண்டும், ஸ்ரீ கிருஷ்ணனை காண வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் சில வருடங்களாகவே மனதில் இருந்து கொண்டு தான் இருந்தது.    

ஜனவரி 2024ல் எப்படியும் போய்த்தான் தீர வேண்டும் என்ற முடிவிற்கு வந்து, மும்பை > துவாரகா ஆன்லைன் டிக்கெட் புக் செய்ய நினைத்தால், பிப்ரவரி கடைசி தேதி வரை எல்லா ரயிலிலும் முன்கூட்டியே பதிவாகி இருந்தது.  ஒரு வழியாக பாந்த்ரா டெர்மின்ஸ்சில் இருந்து Jamnagar வரை செல்லும் எக்ஸ்பிரஸ்ஸில் 22ம் தேதிக்கும்  அதே ரயிலில், திரும்பி வருவதற்கும் 26ம் தேதிக்கு பதிவு செய்தோம் 3AC கோச்சில்.  

22ம் தேதி இரவில் 8.15க்கு ரயில் Jamnagar நோக்கி புறப்பட்டது. மறு நாள் பகல் 2.40க்கு ரயில் Jamnagar வந்து சேர்ந்தது.  அங்கிருந்து, ஆட்டோவில் நகர பேருந்து நிலையம் வந்தோம்.  GSRTC பஸ் புறப்பட இன்னும் நேரம் ஆகும் என்றார்கள்.  அருகிலேயே தனியார் பஸ் (Shiv Shakti Travels @ Rs.150 per head) கிளம்ப தயாராக இருந்தது.  புக் செய்து டிக்கெட் வாங்கி ஏறி அமர்ந்தோம்.   மாலை 5.45க்கு Jamnagar வந்து அடைந்தது. ஆன்லைனில் 3 nights புக் செய்து இருந்த Vrundaavan ரூமில் வந்து சேர்ந்தோம். 

(Sri Vrundaavan Guest  House, Home Guard  Road, Dwarka. Guajarat. Mr. Pareshbhai Vayeda ~ Contact No. 6354111099 / 8160365440. Rent Rs 500/- per night.)  

குளித்து, உடனே அருகில் இருந்த Sri Dwarkadeesh Temple ~ Jagat Mandir கிருஷ்ணன் கோவிலுக்கு செல்ல தயாரானோம். மொபைல் போன் உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் வரிசை தனித்தனியே இருந்தது.  தரிசனம் முடிந்து குடும்பத்தாருடன் சேர்வது சிறிது சிரமமாக இருக்கிறது. காரணம், தரிசனம் முடிந்ததும் வெளியேறும் வழி இருபாலருக்கும் தனித்தனியாக இருக்கிறது. தொடர் விடுமுறையின்  காரணம், கோவிலில் நிறைய கூட்டம். பெண்களின் வரிசை படுவேகமாக நகர்ந்து சென்றது.  ஆண்கள் வரிசை அப்படியே நின்று கொண்டிருந்தது.  மனித ரூபத்தில் தெய்வம் போல யாரோ ஒருவர் வந்து "இதோ இந்த வழியாக செல்லுங்கள், சீக்கிரம் தரிசனம் கிடைக்கும்" என்று சொன்னார்.  கூட வந்தவர்களும் அவர் சொன்ன வழியே சென்று சுலபமாக தரிசனம் செய்தோம்.  நன்றி சொல்ல நினைத்து தேடினால் அந்த மனித ரூபர் சென்ற தடயம் தெரியவில்லை யாருக்கும். வரிசையில் 30 நிமிடத்திற்கு மேல் நின்று கொண்டிருந்தபோது, வழி  சொன்ன அவர் யார்  ஒரு மனமார்ந்த நன்றி கூட சொல்லாமல் ஸ்ரீ கிருஷ்ணனை காண ஓடிபோனோமே என்று நினைத்து, ஆரத்தி தரிசனம் கண்டோம், கண்களில் நீர் மல்க.  திரும்ப மனம் இல்லாமல் கோவிலில் இருந்து ரூமுக்கு வரும் வழியில் இரவு சாப்பாடு முடித்துக்கொண்டு, மறுநாள் Dwarka sight seeing செல்ல தனியார் டூரிஸ்ட் பஸ்ஸில் டிக்கெட் புக் செய்தோம். பஸ்சில் நபர் ஒருவருக்கு டிக்கெட் 260/- ஆகிறது. 8 பேர் கொண்ட Share Autoவில் 250/- வாங்குகிறார்கள்.   

பின்னர் எங்கள் ரூமில் வந்து உறங்கி காலைக்கடன்களை முடித்து விட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு பஸ்ஸில் அமர்ந்தோம் Dwarka sight seeing செல்ல. பேசிக்கொண்டிருக்கும்போது travels owner "நீங்கள் இவ்வளவு தூரத்தில் இருந்து வந்து இருக்கிறீர்கள், அதனால் கண்டிப்பாக சோம்நாத் சென்று வாருங்கள் சிவபெருமானை தரிசிக்க" என்று சொன்னார். உடனே முடிவெடுத்து மறுநாள் சோம்நாத் செல்ல டிக்கெட் புக் செய்தோம் அவர்களிடமே. ஒரு நபருக்கு 270/- வாங்குகிறர்கள். 

Dwarka  sight  seeing covers the  following places: 

1. நாகேஸ்வர் 2. கோபி தலாவ் 3. பேட்  துவாரகா 4.ஷிவ்ராபுர் பீச் 5. ருக்மிணி கோவில் போன்ற இடங்களுக்கு அழைத்து சென்றனர்.  

Dwarka  sight  seeing முடித்துவிட்டு மாலை 6 மணிக்கு திரும்பி வந்தோம் எங்கள் இருப்பிடத்திற்கு. நேரம் இருந்ததால், மீண்டும் கிருஷ்ணன் கோவிலில் நடைபெற உள்ள 7.30 மணி ஆரத்தியை காண வேண்டி சென்றோம்.  அதே கூட்டம். கண்குளிர கண்டு கொண்டோம் ஸ்ரீ கிருஷ்ணனை திரும்பி வர மனமில்லாமல்.  அருகில் உள்ள வேறு சில கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்து விட்டு, இரவு எங்கள் ரூமிற்கு திரும்ப இரவு 9 மணி ஆகிவிட்டது.  மறுநாள் நாங்கள் சோம்நாத் செல்வதை  room ownerக்கு எடுத்து சொல்லி ஒருநாள் ரூம் புக்கிங் cancel செய்வதாக சொன்னோம். அட்வான்ஸ் திருப்பி தருவதற்கு ஒத்துக்கொண்டார்கள். 

காலைக்கடன்களை முடித்து 8 மணிக்கு travels  பஸ்ஸில் அமர்ந்தோம் சோம்நாத் செல்ல. 238 கிமீ தூரத்தை சென்று அடைய 4/5 மணி நேரமாகும். ஒவ்வொரு 2மணி நேரம் தொடர் பயணத்திற்கு பிறகு 15 / 20 நிமிடம் எங்காவது நிறுத்தி பிறகு பயணம் தொடர்கிறது.  மதியம் 1.30 மணிக்கு சோம்நாத் சென்று அடைந்தது எங்கள் பஸ்.

பஸ் நின்ற இடத்தின் அருகிலேயே SHREE SOMNATH TRUST - PRABHAS PATAN என்ற விளம்பர பலகையை கண்டு உள்ளே சென்று ரூம் புக் செய்தோம். Advance Rs .750/- கட்டினோம். 3 bed ஒரு ரூமில். 24மணி நேரமும் Hot water வசதி, கம்பளியுடன்.  உடன் தயாரானோம் சோம்நாத் கோவில் போக. அடுத்த 10வது நிமிடத்தில் கோவில் வளாகத்தில் இருந்தோம்.  மொபைல், கை பை எடுத்து செல்ல அனுமதி இல்லை கோவிலுக்குள். வெறும் கையுடன் தான் உள்ளே அனுமதிப்பார்கள். அதிக கூட்டம் இல்லாததால் நல்ல தரிசனம் கிடைத்தது. திங்கள்கிழமை சிவபெருமானை தரிசிக்க கூட்டம் அதிகமாகும் என்று சொல்கிறார்கள்.  கோவிலை சுற்றி கடற்கரை. பார்க்க ரம்மியமாக இருந்தது. இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை Light  & Music Program நடக்கிறது. ஒரு நபருக்கு Rs. 20 கட்டணம் உண்டு. அங்கிருந்து Triveni Sangam வந்து சேர்ந்தோம். Hiren, Kapila & Saraswati என்ற மூன்று நதிகள் சங்கமம் ஆகும் அருமையான இடம்.

அருகில் உள்ள கடைவீதி வழியே வேடிக்கை பார்த்து, தேவையானதை வாங்கிக்கொண்டு ரூமிற்கு 7 மணி அளவில் திரும்பி வந்தோம். வரும்போது Receptionist சொன்னார், "7.30 மணிக்கு Dinner ரெடி ஆகும்" என்று. விலை Rs. 70/- மட்டுமே.

பணத்தை செலுத்திவிட்டு டோக்கன் வாங்கினால், அங்கு உள்ள system  & cleanliness பார்த்ததும் நமது நினைவிற்கு வருவது Shirdi  & Thirupathi தான். 

டைனிங் ஹால் டைம்: 

Morning 6.30 ~ 10.00

Lunch  11.30 ~ 3.00

Dinner  7.30 ~ 11.00

The above menu is unlimited all time. We had dinner with  chapathi, rice, curry, poriyal kichadi & One  big  glass butter milk @ Rs.5/-extra.

நாங்கள் தங்கி இருந்த இடத்திற்கு பின்னால் தான் GSRTC பஸ் புறப்படும் இடம். மறுநாள் காலை 7 மணிக்கு Jamnagar செல்ல பஸ் டிக்கெட் புக் செய்தோம். ஒரு நபருக்கு 260/- வாங்குகிறார்கள்.  Room Reception counter is working 24 hours என்ற விவரத்தை தெளிவுப்படுத்திக் கொண்டு ரூமிற்கு சென்றோம்.  

மறுநாள் காலை 6 மணிக்கு checkout செய்தபோது advance பணத்தில் இருந்து 150/- திருப்பி கொடுத்தார்கள் எங்களுக்கு. அதாவது ஒரு நபருக்கு தங்குமிடத்திற்கு வெறும் 300/- தான் வாங்கினார்கள்.  பின் அங்கிருந்து GSRTC பஸ் ஸ்டாண்டு வந்து காத்திருந்தோம், எங்கள் பஸ் வருவதற்காக. சரியாக 7 மணிக்கு பஸ் வந்தது Jamnagar செல்ல. பல சிறிய கிராமங்களின் வழியாக பஸ் சென்று மதியம் 2மணி அளவில் Jamnagar City வந்து சேர்ந்தது. அங்கு மிகவும் பிரசித்தி பெற்ற CHETNA ஹோட்டலில் சுவையான உணவு அருந்தினோம்.  இரவு 8 மணிக்கு தான் புறப்படும் எங்கள் ரயில்.  இன்னும் நேரம் நிறைய இருந்ததால் 7 மணி வரை Jamnagar ஊர் சுற்றி பார்த்து, ஷாப்பிங் செய்து செய்தோம்.  7.30மணிக்கு எங்கள் கோச்சில் ஏறி அமர்ந்தோம். மறுநாள் 27ம் தேதி காலை 9.30 மணிக்கு பாந்த்ரா டெர்மின்ஸ் வந்து சேர்ந்தோம்.

இந்த இனிய பயணத்தில் எங்களை கவர்ந்தது:

நாகேஸ்வர் ~ மிகப் பெரிய சிவபெருமானின் சிலை.  நமது கழுத்து வலி எடுக்கும் அளவிற்கு உயரமானது, பிரம்மாண்டமானது.

Jagat Mandir கிருஷ்ணனின் ஆரத்தியின்போது மக்களின் பக்தி ஆரவாரம்.

* பிருந்தாவனத்தில் இருந்து கிருஷ்ணன் கோபியர்களை விட்டுவிட்டு துவாரகா வந்துவிட்டதால் கிருஷ்ணனை காண கோபியர்கள் துவாரகா வந்தார்கள். இதை அறிந்து கிருஷ்ணன் அவர்களை காண வந்த இடம் தான் கோபி தலாவ். அன்று கிருஷ்ணனும் கோபியர்களும் ஆனந்த நடனமாடிய இடமான GOPI TALAV என்ற நீரின் அடியில் உள்ள மண் சந்தனமாக இன்றும் கிடைக்கிறது. 

பேட்  துவாரகா ~ அமைதியான 20 நிமிட படகு பயணம்.  சத்ய பாமாவின் இடம் மட்டும் தான் அப்படியே இருக்கிறது. மற்றது எல்லாம் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. 

ஷிவ்ராபுர் பீச் ~ பளிங்கு கண்ணாடி போன்ற கடல் நீர் உள்ள அமைதியான இடம்.

ருக்மிணி கோவில் ~ துர்வாசரின் சாபத்தால் கிருஷ்ணன் கோவிலில் இருந்து 2 km தூரத்தில் சாந்த சொரூபிணியாக தனியே அமர்ந்து அருள் பாலிக்கும் ருக்மிணி தாயார்.

 * Somnath ~ மிக பெரிய அளவில் உள்ள சிவலிங்கம்.

* த்ரிவேணி சங்கம் ~ மூன்று நதிகள் கூடும் இடம். (Hiren, Kapila  & Saraswati நதிகளின் சங்கமம்)

இந்த ஆன்மிக பயணம் மனதுக்கு சாந்தியையும் அமைதியையும் கொடுத்தது எங்களுக்கு. 

ஒரு தடவை சென்று வாருங்கள் நீங்களும் ! ! !

Saturday, January 27, 2024

இஸ்லாமும் பசுவும்.

இஸ்லாமும் பசுவும்.

அசீஸ் கவுர் என்ற முஸ்லிம் பெண்மணி

மாதாமாதம் ஏதாவது ஒரு தலைப்பில் அறிவுப்பூர்வமாக ஏதாவது பேசுவார்கள் , அப்படி இந்த மாதம் பசு பாதுகாப்பு பற்றி கூட்டத்தில் வந்து பேசினார்.  பெரிய பேச்சாளர் இல்லை.  ஏகப்பட்ட தகவல்களை தரவில்லை, கணீரென்ற குரல் இல்லை.  ஆனால் அரை மணிநேரத்தில் அனைவருக்கும் தாயானார்.  பேசியது அத்தனையும் சத்தியம். 

குடும்பமே சைவம்.  யாரும் முட்டை கூட சாப்பிடுவதில்லை.  இவரை யாரும் எதிர்க்கவும் இல்லை.  சிறு வயது முதலே, வீட்டுக்கு சிறு மிருகங்களும் பசுக்களும் பறவைகளும் வந்து போகும்.  அன்பாக இருப்பது என்பது இயல்பாக வந்தது.  பசுக்கள் என்றால் தனி பிரியம்.  

இவரது தாய்க்கு முதல் குழந்தை 

ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கரிடம் சென்றபோது அங்குள்ள தொழுவத்தை பார்த்துவிட்டு  அற்புதமாக இருந்ததாம்,என்றும் சொல்லியுள்ளார்.

கிர் காளைகள் 8 அடி உயரமாம். இவர் அருகே சென்று தடவி பார்த்து டேய் எனக்கு ஒரு முத்தம் குடுடா என்று காளையை பார்த்து சொன்னாராம்.  ஈஷி, நக்கி தள்ளிவிட்டதாம்.  அசந்து விட்டார்களாம் அனைவரும்.  என்ன இப்படி பேசறீங்க.  அதுவும் புரிஞ்சுகிட்டு பதில் சொல்லுது..! என்று கேட்டார்களாம்.

கட்டாக் சென்றபோது அங்கு அறுப்புக்காக காத்திருந்த நிறைமாத கர்ப்பிணி பசு.  இவர் தடவி கொடுத்திருக்கிறார்.  பட்டென்று ஒரு தட்டு.  என்னை விட்டுவிட்டாயே என்பது போல ஒரு பார்வை.  கண்ணில் நீர் முட்ட, என்னைத்தான் விட்டுவிட்டாய், மீதி இருப்பவர்களையாவது காப்பாற்று என்று சொல்லாமல் சொல்லிவிட்டு அப்படியே பொத்தென்று விழுந்து இறந்துவிட்டதாம்.  மாரடைப்பு காரணமாக.  

அந்த பார்வையை என்னால் மறக்கவே முடியாது என்று சொல்லி நிறுத்தினார்.  நிசப்தம் அறை முழுவதும்.  கலங்கி விட்டோம் அனைவரும். 

*நீங்கள் குடிக்கும் பானங்கள் அனைத்திலும் எதிலெல்லாம் கேல்ஷியம் இருக்கிறது என்று சொல்லி விற்கிறானோ, அவை அனைத்திலும் மாட்டின் எலும்பு இருக்கிறது என்றார்.*

முஸ்லிம்கள் மட்டுமல்ல.  ஹிந்துக்கள் மாட்டை கொல்வதிலும், தொலை ஏற்றுமதி செய்வதிலும் போட்டி போடுகிறார்கள்.  முஸ்லிம்கள் அறுப்பது வீடியோவில் பதிவாவதால் வெளியாகிறது என்றார்.   முஸ்லிம்கள் உண்ணலாம்.  ஆனால் கொல்வதில் ஹிந்துக்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.

 *ஹைதராபாத்தில் உள்ள மாடு அறுப்பு தொழிற்சாலையான அல் கபீர் நடத்துவது ஒரு ஜெயின் என்றார்.*  

பசுவை லட்சுமி என்றால் சும்மா அது ஒன்றும் பணம் தராது. ஆனால் அது பால் தருவது நின்றால் கூட அதன் சாணத்தையும் மூத்திரத்தையும்  வைத்து அவ்வளவு மருந்து, உரம் தயாரிக்கலாம்.  அதை முறையாக பராமரித்தால் பணம் கொட்டும் என்றார்.  கொன்றால் ஒரு முறை பணம்.  சரியாக பராமரித்தால் அது சாகும்வரை பணம் தரும் என்று விளக்கினார்.

அதன் கொம்புகள் வான் நோக்கி இருப்பதால் விண்ணிலுள்ள சக்தியை அது உறிஞ்சுகிறது.  ஜெர்சி பசுவின் சாணமோ, மூத்திரமோ பயன் தராது.  உங்கள் வீட்டில் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றால் இதற்கு தெரிந்துவிடும்.  அது பாசத்தால் அழும் என்றார்.

ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்துக்கு எடுத்து செல்ல, பல மாடுகளின் கால்களை உடைத்து லாரியில் படுக்க போடுவார்களாம்.  அதில் இருக்கும் இடைவெளியில் மற்றமாடுகளை ஏற்றுவார்களாம்.  இதன் கொம்பு அதன் கண்ணில் குத்தி இரத்தம் வரும்.  பார்க்க கொடுமையாக இருக்கும்.

கபில் சிபல் ஆசியாவின் மிகப்பெரிய மாடு அறுப்பு கொலைக்களம் வைத்துள்ளார்.

திமுக மந்திரி ஐ.பெ.....சாமி இந்த வேலை பார்க்கிறார்.  ஒரு முறை அவரது லாரியை இந்தம்மாள் மடக்கி பிடித்துள்ளார். 17 லாரிகளில் 14 தப்பிவிட்டன. 3 மட்டும்தான் சிக்கியது.  அப்போது அவரது  PA காவல்துறை ஆய்வாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.  இங்கே வாருங்கள் உடனடியாக என்று சொல்லியுள்ளார்.  இவர் பதிலுக்கு நீ இங்கே வா.  நான் எங்கும் வரமாட்டேன்.  மாடுகளை துன்புறுத்தி விட்டு திமிராக பேசுகிறாயா என்று கேட்டுள்ளார்.  அரண்டுவிட்டார்களாம்.  அதன்பின் வரவே இல்லை என்றார்.

நீங்கள் எல்லோரும் பசுக்களுக்கு உணவளியுங்கள்.  விட்டுவிடாதீர்கள்.  இவை நமது சொத்து.  நான் குரான்படி வாழ்வதால் இவைகளை காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறேன்.  ஒரு முறை ஜவஹீருல்லாவோடு வாக்குவாதம் ஏற்பட்டது.  அவர் சொன்னார், எனக்கும் தெரியும் குரான்படி இதெல்லாம் கூடாது என்று.  ஆனால் விட்டுவிட்டால் ஹிந்துக்கள் தலைக்கு மேல் ஏறிவிடுவார்கள்.  அதனால் தொடர்கிறோம் என்றாராம்.  இவர் பதிலுக்கு, உனக்கு ஹிந்து எதிர்ப்பு முக்கியமா?, குரான் முக்கியமா? என்று கேட்டுள்ளார்.  

தயவு செய்து தோல் பொருட்களை உபயோகிக்காதீர்கள்.  பெல்ட், பர்ஸ், ஷூ, கையுறை, கார் சீட்டு வாங்காதீர்கள்.  உணவு பொருட்கள் வாங்கினாலும் பச்சை வட்டம் உள்ளதா என்று பாருங்கள்.  பசுவை பாது காக்க அதன் பஞ்சகவ்யம் மூலம் தயாரிக்கப்படும் சோப்பு, ஷாம்பூ, போன்றவற்றை வாங்குங்கள்.  இது போன்ற பொருட்களை அதிகம் வாங்கினால் இவைகளுக்கு மவுசு கூடினால் இதை கொன்று வரும் பணத்தை விட இவைகளை உயிரோடு வைத்திருந்தால் அதிகம் பணம் கிடைக்கும் என்று உணருவார்கள்.  பசு பிழைக்கும்.  

வெளி நாட்டுக்காரனுக்கு பணம் போகாது.  நம் நாட்டிலேயே சுற்றும்.  கல்யாண பரிசு பொருட்கள், நவராத்திரி பரிசு பொருட்கள், பிறந்த நாள் return gift, புத்தாண்டு பரிசு பொருட்கள் எல்லாம் இந்த கோமாதா பொருளாக இருந்தால் பயனும் ஆகும்.  ஒரு உயிரும் பிழைக்கும்.  கொஞ்சம் கை கொடுங்கள் நண்பர்களே.

Tuesday, January 23, 2024

அயோத்தியில் தமிழர்கள் குறைந்த செலவில் தங்க

அயோத்தியில் தமிழர்கள் குறைந்த செலவில் தங்க, சாப்பிட குறித்துக் கொள்ளவும்.

AYODHYA NATTUKOT NAGARA CHATRAM,

NATTUKOT SRI RAM MANDIR,

BABOO BAZAAR,

AYODHYA 224123

U.P.

7311166233

7373070733

இந்த நம்பரில் அழைத்து, முன்அறிவிப்பு செய்து விட்டு செல்லவும்.



Sunday, January 21, 2024

ஆதார்கார்டு நீங்களே திருத்தலாம்

இனி உங்கள் ஆதார்கார்டு விவரங்களை உங்கள் மொபைல் மூலம் நீங்களே திருத்தலாம்...

📌 ஆதார்கார்டு பெயர் மாற்ற/திருத்தம் செய்ய...

https://bit.ly/2T5iCRl

📌 ஆதார்கார்டு பிறந்த தேதி மாதம் வருடம் மாற்றம் செய்ய...

https://bit.ly/2T5iCRl

📌 ஆதார்காடு முகவரி மாற்றம் செய்ய/ திருத்தம் செய்ய...

https://bit.ly/2T5iCRl

📌 ஆதார் கார்டு தந்தை பெயர்  திருத்தம் செய்ய/ மாற்றம் செய்ய...

https://bit.ly/2T5iCRl

📌 ஆதார் கார்டு கணவர் பெயர்  திருத்தம் செய்ய/ மாற்றம் செய்ய...

https://bit.ly/2T5iCRl

📌 ஆதார்கார்டு டவுன்லோடு செய்ய...

https://bit.ly/2T5iCRl

📌 PV Cஆதார் கார்டு விண்ணப்பிக்க...👇

https://bit.ly/2T5iCRl


Tuesday, January 02, 2024

காணாமல் போன தனுஷ்கோடி

நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும்.. ?? புயலின் உக்கிர தாண்டவத்நில் ஒரு செழிப்புமிக்க நகரமே காணாமல் போன விஷயம்.. அதுவும் நம் தமிழ்நாட்டில்  !!

நிவர் புயலின் இயற்கைச் சீற்றத்திற்கு நடுவே,  நம்மிடம், மொபைல் போன் முதல், நமக்குச் சொந்தமானப் பல சாட்டிலைட்டுகள், வயர்லெஸ் கருவிகள், இலவச வாட்ஸ்அப் தொடர்பு, தமிழக மற்றும் மத்திய அரசசுளின்   அவசரக்கால உதவிகள்  வரையென நம்மை காப்பாற்ற, பாதுகாப்புடன் சந்தோஷமாக இருக்கிறோம். இன்றைய அசுர விஞ்ஞான வளர்ச்சி நம்மைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்கிறது. நாம், மிகவும் அதிர்ஷ்டசாலிகள். 

ஆம், பழைய நினைவொன்றை, இன்றையத் தலைமுறையினர் நினைத்துப் பார்க்க வேண்டிய நேரமிது. 

சுமார், 55 ஆண்டுகளுக்கு முன், தனுஷ்கோடி என்ற ஒரு வணிக நகரம் என்று ஒன்று இருந்ததும் அது மறைந்தது எப்படி என்றும் நெஞ்சைப் பிளக்கும் கதையை கேளுங்கள்.. !! 

இன்றைய தலைமுறையினர் சிலருக்கு மட்டுமே தனுஷ்கோடி என்ற ஊர் தமிழகத்தில் இருந்திருக்கிறது,  என்று தெரியும்.

தனுஷ்கோடி என்ற தொலைந்து போன ஊரின் பின்னே இருக்கும் அந்த கடுந் துயரத்தைப் பற்றி, இன்று யாருக்கும் தெரியாது.

ராமேசுவரத்தில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது தனுஷ்கோடி.

தனுஷ்கோடியில், அப்போது கோவில்கள்,  துறைமுகம், மருத்துவமனை, பள்ளிக்கூடம் தபால் நிலையம், ரெயில்வே குடியிருப்புகள், ரெயில் நிலையம், எனச் சகலமும்   இருந்தன. புராணம் காலந்தொட்டே, மிகவும் புகழ் பெற்ற வணிக  நகரம் அது. இராம, ஹனுமான் பாதங்கள் பட்டப் புண்ணியத்தலம், தனுஷ்கோடி. 

மதுரை, சென்னை உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் ரெயில்கள், ராமேசுவரம் வருவது கிடையாது. நேராக தனுஷ்கோடி சென்று விடும். 

ராமேசுவரத்திற்கு வர விரும்புபவர்கள் பாம்பனிலிருந்து ‘ஷன்டிங்க்’ என்று சொல்லக்கூடிய தனி ரெயிலில் ராமேசுவரம் வருவர்.

டிசம்பர் 22 1964... வரை கலகலப்பாக இருந்த ஊர் யாருமே எதிர்பார்க்காத தினமாக 23.12.1964-ந் தேதி அமைந்தது.

அன்று இரவில் சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசிய கடும் புயலாலும், பலத்த மழையாலும், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து சுமார் 20 அடி உயரத்திற்கு எழும்பிய ராட்சத அலைகள் தனுஷ்கோடியை மூழ்கடித்து சின்னாபின்னமாக்கியது.

தனுஷ்கோடியின் அன்றைய தினமானதுத்,  தொடக்கம் முதலே வழக்கத்தை விட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தது. 

கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை. 

வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு, எப்போது கரையைக் கடக்கப்போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. 

இன்று, நம்மிடமுள்ள மிக நவீன உபகரணங்கள் எதுவுமே, அன்று நம் மூத்தோரிடம் இல்லை.

அவர்களைப் பொறுத்தவரை 'புயல் மையம் கொண்டுள்ளது, காற்றடிக்கும், மழை பெய்யும், கடலுக்குள் செல்லக் கூடாது....' என்றளவில் மட்டுமே விழிப்புணர்வு இருந்தது.

புயல் எச்சரிக்கை என்பது தெரியும், ஆனால் புயல் எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பதை எல்லாம் அறிந்து கொள்ளும் வசதி அந்நாளில் இல்லை. 

புயலின் தீவிரம் இந்த அளவிற்கு இருக்கும் என்பது புயல் கரையைக் கடந்த பின் மட்டுமே தெரிந்துக் கொண்டாக வேண்டிய காலக்கட்டம் அது. அது வரை, நடக்கவுள்ளக் கொடூரத்தை அறியாது வாழ்ந்தனர் நம் முன்னோர். 

ட்ரைன் நம்பர் 653, 

பாம்பனில் இருந்து தனுஷ்கோடி வரை செல்லும் தனுஷ்கோடி - பாம்பன் பாசன்ஜெர் சரியாக 11.55க்கு தனுஷ்கோடி நோக்கிய தனது (இறுதி) யாத்திரையைத் தொடங்கியது. 

ரயில் தனுஷ்கோடியை நெருங்கும் சில நூறு மீட்டர்களுக்கு முன், காற்றின் வேகம் தீவிரம் அடைந்து, கடல் கொந்தளிக்கத் தொடங்கி இருந்தது. 

இஞ்சின் டிரைவர் ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை என்பதை அப்போதுதான் கவனித்து இருந்தார்.

தனுஷ்கோடியை புயல் தாக்கத் தொடங்கி இருந்ததால் அணைத்து தொடர்பு சாதனங்களும் செயல் இழந்து இருந்தன. ரயில்வே சிக்னல், தந்தி கம்பங்கள் என எதுவும் வேலை செய்யவில்லை. 

டிரைவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 

'பலத்த மழையின் காரணமாக சிக்னல் செயல் இழந்து இருக்கும்' என்று கணிக்கத் தெரிந்தவருக்கு வரப்போகும் அபாயத்தைப் கணிக்கத் தெரியவில்லை. 

எங்கும் இருள் சூழ்ந்து இருக்கவே, ரயில் வருவதை தெரிவிக்க.... தன்னிடம் இருந்த விசிலை ஊதிக் கொண்டே வண்டியை நகற்ற ஆரம்பித்தார். 

அந்த நிமிடம், அந்த நொடி, அந்த 115 பேரும் என்ன மனநிலையில் இருந்திருப்பார்கள்..........

ஊழிக்காலமெனப் பாய்ந்த, ஆழிப் பெருங்காற்றும் அதைத் தொடர்ந்த ராட்சதப்  பேரலையும்,  இரயிலை வாரி அணைத்துக் கொண்டு, கடலுக்கடியில் மூழ்கடித்துக் கோரத்தாண்டவமாடியது.  

ரயிலில் பயணித்த அத்தனை பயணிகளும் ஜலசமாதி ஆயினர். 

ரயில் நிலையத்திற்கும் ரயிலுக்குமான சில நூறு மீட்டர் இடைவெளிகளில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து விட்டது. 

ஒரு சில நிமிடங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்குமானால் அந்த பாசன்ஜெர், ரயில் நிலையத்தை அடைந்திருக்கும். 

அத்தனை உயிர்களும் மிகப் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டிருக்கும். 

'விதி சற்றே வலியது'. அதனால் தானோ என்னவோ, அவர்கள் உயிர் பிழைக்க வழி கொடுக்காமல் தன்னுடன் அழைத்துக் கொண்டது. 

தனுஷ்கோடிக்கு முன்பே, புயல் தலைமன்னாரை நெருங்கி இருந்தது. தலைமன்னாரும் பல ஆயிரம் உயிர்களை புயலுக்கு காவு கொடுத்திருந்தது. 

தலைமன்னார் கடலில் கலந்த உயிர்கள், தனுஷ்கோடி கரையில் உடலாக ஒதுங்கத் தொடங்கியிருந்தது.

தனுஷ்கோடியிலோ நிலைமை இன்னும் பரிதாபம், மின்கம்பங்கள் அறுந்து ஊரே இருளில் மூழ்கியது. கட்டிடங்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு பறக்கத் தொடங்கின. 

அவசரகால தகவல் தொடர்புச் சாதனமான தந்திக் கம்பங்களும் அறுந்து தொங்கின, 

''இன்னது நடக்கிறது...'' என்று தகவல் சொல்லக் கூட அங்கிருந்தவர்களுக்கு வழி இல்லமால் போனது. 

கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பி ஒரு ஊரையே மிரட்டிக் கொண்டிருந்தன. 

நடுநிசியில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பலராலும்.... ஆழிக்காற்றின் வேகத்தை உணர முடியவில்லை. 

உறக்கத்தில் உயிரைத் தொலைத்தவர்கள் அநேகம் பேர். 

இருந்தும் அதிகரித்த காற்றின் வேகமும், அலைகள் மூலம் ஊருக்குள் புகுந்த தண்ணீரும் வரப் போகும் அசம்பாவிதத்தை எடுத்தியம்பத் தொடங்கின. 

இயற்கை கொடுத்த இந்த 'அபாய அறிவிப்பை' உணர்ந்து கொண்டவர்கள் வேகமாக செயல் படத்தொடங்கினார்கள். 

அங்கு குடியிருந்த மக்களில் பெரும்பாலனவர்கள் மீனவர்கள் என்பதால் குழந்தைகள் பெண்களை சுமந்து கொண்டு பாதுகாப்பான இடம் தேடி நகரத் தொடங்கினார்கள். 

இதில், 'நீச்சல் காளி' என்னும் மீனவர் மட்டும் தனியொரு ஆளாக பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார். 

அடைமழையில் அவர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு பாதுகாப்பான இடம் உயர்ந்த மணற்குன்றுகள் மட்டுமே. 

அதைத் தவிர அவர்களுக்கு வேறுவழி இல்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கு தான் நின்றாக வேண்டும். 

இதைத் தவிர இன்னுமொரு முக்கியமான இடமும் சில நூறு உயிர்களைக் காப்பாற்றியது.....

ஒரு ரயில் ஒருநூறு உயிர்களைக் காவு வாங்கியது, 

மறுபுறம் ஒரு ரயில் சில நூறு உயிர்களைக் காவல்காத்தது . 

ஆம். பெரும்பாலான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தேடி ஓடிய இடம் தனுஷ்கோடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலைத் தான். 

மொத்த மக்கள் கூட்டமும் ரயிலை நிரப்பி கதவு ஜன்னல்களை இருக மூடிக் கொண்டது. 

ஊர் முழுவதும் வெள்ளமும் சோகமும் ஒரு சேர பரவத் தொடங்கி இருந்தது. 

தங்கள் குழந்தையை, துணையை, உறவினரைத் தேடத் தொடங்கியது. 

தங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது என்ற மகிழ்ச்சியை விட தொலைந்து போன உயிர்கள் பற்றிய பயமும் சோகமும் அவர்களை வாட்டியது. 

எதிர்பாரா சம்பவங்கள் அவர்களை குழப்பத்தில் தள்ளியது. கூச்சலும் குழப்பமும் நிறைந்த தனுஷ்கோடி தன்னுடைய ஒட்டுமொத்த ஆர்ப்பரிப்பையும் அந்த ஒரு இரவில் வெளிப்படுத்தி அடங்கியது. 

இவை எதுபற்றியுமே அறியாமல் தமிழகம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. 

அடுத்த நாள் பொழுதுபுலர்ந்த பொழுது கூட தனுஷ்கோடியின் நிலைமை குறித்து ஒருவரும் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை. 

அந்த நாட்களில் ராமேஸ்வரம் செல்வதற்கு தரைப்பாலம் கிடையாது. படகுப் போக்குவரத்தும், ரயில் சேவையும் மட்டுமே.

மற்றுமொரு கொடுமையான விஷயம் குடிநீரும் உணவுப் பொருட்களும் தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் மூலமாக மட்டுமே கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். 

புயல் பாம்பன் பாலத்தையும் பதம் பார்த்திருந்தது, 

தண்டவாளங்கள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தன. ஒட்டு மொத்த தனுஷ்கோடியும் எவ்வித தொடர்பும் இன்றி தனித்து விடப்பட்டிருந்தது. 

குடிக்கும் நீருக்குக் கூட வழியில்லாத ஆழி சூழ் உலகாக மாறி இருந்தது தனுஷ்கோடி. 

விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பரவத் தொடங்கியது. தமிழக அரசாங்கம் விழித்துக் கொண்டது. 

அன்றைய முதல்வர் மாண்புமிகு.  அமரர். பக்தவத்சலம் உடனடியாக செயல்படத் தொடங்கினார். 

அன்றைய, அவர் சார்ந்தக் காங்கிரஸ்  அரசின் உதவியை நாடினார். 

நிலைமையைப் புரிந்து கொண்ட இந்திய அரசும் போர்கால அடிப்படையில் செயல்படத் தொடங்கியது. 

தனுஷ்கோடி துயரச் சம்பவத்தை ''தேசியப் பேரிழப்பு'' என்று அறிவித்தது. 

இராணுவம் தொடங்கி முப்படைகளும் தனுஷ்கோடி நோக்கி விரைந்தன. 

முதல் தேவை நீரும் உணவும். வான்படையின் ஹெலிகாப்டர்கள் மூலமாக உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. 

இந்தியக் கப்பல் படையின் மீட்புக் குழுவும் களத்தில் இறங்கியது. 

அடுத்த நாளும் மழை நின்றபாடில்லை. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. 

''காப்பாற்றப்பட்ட மக்களை விட கண்டெடுத்த சடலங்களே அதிகம்'' என்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். 

எஞ்சிய தனுஷ்கோடியை "சாரதா" என்னும் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல விரைந்தது. 

உயிர் பிழைத்த மக்கள் அனைவரையும் மதுரை அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதித்த பின்னும் கூட அரசாங்கத்தால் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

மூன்றாம் நாள் தான் அரசாங்கத்திற்கு நினைவு வந்தது, 'ஒரு பயணிகள் ரயிலைக் காணவில்லை' என்று. 

மீண்டும் தேடல் தொடங்கியது. 

இறுதியாக முடிவுக்கு வந்தனர். 

புயலில் இரயில் கடலோடு கடலாக கலந்திருக்க வேண்டுமென்று. கடலுக்குள் இறங்கித் தேடத் தொடங்கினர். 

இரயிலின் பெரும்பாலான பாகங்கள் அதாவது இரும்பு தவிர்த்து மற்றவை அனைத்தும் கடலோடு கடலாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. 

அதில் பயணித்த 115 பயணிகளும் மாண்டுவிட்டதாக அறிவித்தனர். 

பேரழிவைப் பார்வையிட வந்த முதல்வர் பக்தவத்சலம் தன்னால் 'ரயிலின் சில பாகங்களைக் காண முடிந்தது' என்று குறிப்பிடுகிறார். 

தனுஷ்கோடியில் வெள்ளம் வடிய நான்கு நாட்களுக்கு மேல் ஆகியது. 

இந்தியாவை நிலை குலைய வைத்த சம்பவம் பற்றி உலகமே பரபரப்பாகப் பேசத் தொடங்கியது. 

தனுஷ்கோடியில் அடித்த புயலின் வேகம் மிக அதிகம். தலைமன்னரைக் கடக்கும் பொழுது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல், தனுஷ்கோடியை தாக்கும் பொழுது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் தாக்கியுள்ளது. 

விளைவு 1500 மக்களின் உயிரைக் குடித்தது.

1500 ஏக்கருக்கும் மேலான நிலப்பரப்பை நீருக்குள் இழுத்துக் கொண்டது.

சொல்லப் போனால் மூன்று முழு கிராமங்கள் இன்றும் கடலடியில் தான் இளைப்பாறிக் கொண்டுள்ளன, தனுஷ்கோடி துறைமுகத்தையும் சேர்த்து. 

''ஆசியாவின் இருபதாம் நூற்றாண்டுப் பேரிழப்பாக'' ஐ.நா சபை இந்த சம்பவத்தை அறிவித்தது. 

தமிழக மக்களின் மன நிலை, ஆழ்ந்தச் சோகத்தில் இருக்க,  அன்றையப் பத்திரிக்கைகள் பலவும்  மிகவும் கவலை கொள்ளத் தொடங்கி எழுதியது.  

அன்றைய தினம் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல் இன்றுவரை கிடைக்கவில்லை. 

மணலில் புதைந்த பிணங்களும், கடலில் மிதந்த பிணங்களும் ஏராளம். 

அவற்றைத் தேடி எடுக்க மீட்புப் பணியினரால் முடியவில்லை. 

மேலும் பல உடல்கள் கழுகுகளாலும் மிருகங்களாலும் வேட்டையாடப்பட்டதால் அவர்களை இனங்கான முடியாமல் போயிற்று.

மக்கள் வாழ்வாதரங்களை இழந்த நிலையில் அரசு தனுஷ்கோடியை ''மக்கள் வாழத் தகுதியற்ற நகரம்'' என்று அறிவித்தது. 

தன்னுடைய அத்தனை அடையாளங்களையும் அன்றைய ஒருநாள் புயலில் மொத்தமாக இழந்தது தனுஷ்கோடி.

ரயில்நிலையம், தபால்நிலையம், தந்தி ஆபீஸ், சுங்கச் சாவடி, மாநிலத்தின் முக்கியமான துறைமுகம் மற்றும் மீன்பிடி நிலையம் என்று தனது அன்றாட வாழ்கையை இழந்து, ''மக்கள் வாழத் தகுதியற்ற...'' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. 

தனுஷ்கோடி மக்களுடன் சேர்ந்து, அன்று தொலைந்த தனுஷ்கோடி... 

இன்று வரை அடையாளம் காணப்படாமல் அப்படியே நிற்கிறது, எஞ்சிய தனுஷ்கோடியின் மிச்சங்களையும் பூர்வகுடிகளையும் சுமந்துகொண்டு.

மக்கள் வாழத் தகுதியற்ற என்று முத்திரை குத்தப்பட்ட தனுஷ்கோடியில், பிடிவாதமாக,  இன்று இருநூறு குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு மின் இணைப்பு கிடையாது. 

இவர்களது இரவும் பகலும் மின்சாரம் இல்லாமல் தான் கழிகிறது, 

கருக்கல் நேரங்களில் சிமினி விளக்குகள் மட்டுமே தனுஷ்கோடிக்கு வெளிச்சம் தருகின்றன. 

"ராமேஸ்வரத்துக்கு போனா தான்  லைட்டைப்  பார்க்க முடியும்" 

அடிப்படை வசதி என்று எதுவும் கிடையாது, 

கடற்கரை மணலில் சில அடி ஆழத்தில் நன்னீர் ஊற்றுகள் இருக்கின்றன, 

இந்த நீரூற்றுக்கள் தான் இவர்களது நீர் ஆதாரம். 

சமையல் பொருட்கள் அனைத்தையும் ராமேஸ்வரத்தில் இருந்தே வாங்கி வருகிறார்கள். 

இங்கு இருப்பவர்கள் அனைவரும் காலங்காலமாக தனுஷ்கோடியில் வாழ்ந்து வரும் மீனவர்கள். 

மீன்பிடி தொழில் போக கடல் சிப்பிகளைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்தும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். 

தமது மூதாதையர் வாழ்ந்த இந்த இடத்தை விட்டுச் செல்ல இவர்களுக்கு மனம் இடங்கொடா காரணத்தால் இங்கேயே தங்கி விட்டனர். 

இன்றைய, நம் மத்திய அரசின் ஆணையின் பேரில், தமிழகத்தின்  முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி யுமான   பொன். ராதாகிருஷ்ணன் அவர்களதுத் துரிதக் கதியிலான அக்கறை மற்றும் செயற்பாட்டு மேற்பார்வையில், 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை வரை 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.50 கோடியில் புதிதாக சாலை அமைக்கும் பணி தொடங்கியது. 

கடலின் நடுவே நடைபெற்று வந்த இந்த சாலைப் பணி, வெறும்  ஒன்றரை ஆண்டுக்குள்,  முழுமையாக முடிந்தது. 

சாலையின் பாதுகாப்பு கருதி இருபுறமும் கற்களால் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டன. 

அரிச்சல்முனை வரை செல்லும் வாகனங்கள்,  திரும்பிச் செல்ல வசதியும் செய்யப்பட்டு, அதற்கான வளைவின் மைய பகுதியில் தூண் அமைக்கப்பட்டு, அதன் மேலே அசோக சின்னமும் நிறுவப்பட்டது.

தற்போது அங்கு மின்சார  இணைப்பு கொடுப்பதற்கும் புதிய குடியிருப்புகள்  ஏற்படுத்துவதுக் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. 

இந்த வரலாற்று சோகம் History of Dhanushkodi என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம்.