ஈரோட்டின் அடையாளம் இந்த ராமானுஜன்
ஏ.டி.எம். இயந்திரம் நாம் கார்டை சொருகியவுடன் பணத்தை தருகிறதே… ராமானுஜம் கண்டுபிடித்த தேற்றத்தின் அடிப்படியில் தான் அது இயங்கு கிறது என்பது தெரியுமா?
உலகமே கொண்டாட வேண்டிய ஒரு மாபெரும் கணித மேதை எப்படி வாழ்ந்தார் என்பதை படியுங்கள். இன்றைக்கு அனைத்து சௌகரியங்களும் கிடைக்கப்பெற்றுள்ள நம் மாணவர்கள் நம் சகோதரர்கள் நம் பிள்ளைகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று சிந்தியுங்கள்.
இராமானுஜனின் தந்தை சீனிவாச அய்யங்கார், கும்பகோணத்தில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது மாத ஊதியம் ரு.20 ஆகும்.
இராமானுஜனின் தாயார் கோயில்களில் பஜனைப் பாடல்களைப் பாடுவதன் வாயிலாக மாதம் ருபாய் 10 சம்பாதித்து வந்தார்.குடும்பமே போதிய வருமானமின்றித் தவித்தது. பல நாட்கள் உண்ண உணவின்றித் தண்ணீரை மட்டுமே குடித்து வளர்ந்தவர் இராமானுஜன்.
ஒரு நாள் இராமானுஜன் பள்ளிக்குச் செல்வதற்கு முன் உணவுத் தட்டுடன் சாப்பிடத் தயாரானான். ஆனால் தாய் கோமளத்தம்மாளோ, அய்யா சின்னசாமி அம்மா எப்படியும் மாலைக்குள் அரிசி வாங்கி சமைத்து வைக்கிறேன் இரவு சாப்பிடலாம். அதுவரை பொறுத்துக் கொள் என வேண்டினாள். இராமானஜனோமறு வார்த்தை பேசாமல் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு. அம்மா நான் பள்ளிக்குச் சென்று வருகிறேன் என்று கூறி பள்ளிக்குச் சென்று விட்டான்,
ஆனால் அன்று மாலை பள்ளியில் இருந்து இராமானுஜன் வீடு திரும்ப வில்லை, கவலையில் கண்ணீர் விழிகளுடன் கோமளத்தம்மாள் இராமானுஜனைத் தேட ஆரம்பித்தாள், எங்கு தேடியும் காணவில்லை. அச்சமயம் இராமானுஜனின் நண்பன் அனந்தராமனின் தாயார் அங்கு வந்து விசாரிக்க, இராமானுஜனைக் காணவில்லை எனக் கூறி, தன் மகன் காலையும் சாப்பிடவில்லை, மதியமும் சாப்பிடவில்லை, மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை எனக் கூறி அழத் தொடங்கினாள், கோமளத்தம்மாளை சமாதானம் கூறி வீட்டில் அமரவைத்து விட்டுத் தானும்,அனந்தராமனும் ஆளுக்கொரு பக்கமாக இராமானஜனைத் தேடத் தொடங்கினர்.
அனந்தராமன் பல இடங்களில் தேடி அலைந்தான். எங்கும் இராமானுஜனைக் காணவில்லை, திடீரென்று அனந்தராமனுக்கு ஒரு சந்தேகம். ஒரு வேளை சாரங்கபாணிக் கோயிலுக்குச் சென்றிருப்பானோ? என்று. உடனடியாக கோயிலுக்குச் சென்று தேடினான், கோயிலின் ஒரு மண்டபத்தில் கணக்குப் புத்தகங்களைத் தலைக்கு வைத்துக் கொண்டு இராமானுஜன் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் படுத்திருந்த தரை முழுவதும் சாக்கட்டியால் கணக்குகள் போடப்பட்டிருந்தன, அனந்தராமன் அவனைத் தட்டி எழுப்பினான், திடுக்கிட்டு எழுந்த இராமானுஜன், என்ன அனந்தராமா அதற்குள் எழுப்பிவிட்டாயே, நேற்று நமது கணக்கு வாத்தியாருக்கே விடை கண்டுபிடிக்கத் தெரியாத. அந்தக் கணக்கை நான் மனதிலேயே போட்டுப் பார்த்தேன். போட்டு முடிப்பதற்குள் எழுப்பிவிட்டாயே, என்றவன், இரு கனவில் நான் போட்ட பாதிக் கணக்கையாவது இந்த நோட்டில் எழுதிவைத்துவிட்டு வருகின்றேன் என்று கூறி எழுதத் தொடங்கினான்,
எழுதி முடித்தவுடன் அனந்தராமன், இராமானுஜனைத் தன்வீட்டிற்கே அழைத்துச் சென்றான், இராமானுஜனைக் காணாமல் அனந்தராமனும் சாப்பிடாமல் இருக்கின்றான் என்ற செய்தியைக் கூறி, அனந்தராமனின் தாயார் தன் வீட்டிலேயே இராமானுஜனுக்கும் உணவிட்டாள்,
இராமானுஜன் கணிதத்தில் மட்டுமே கவனம் செலுத்தியதால் கும்பகோணம் அரசு கல்லூரியிலும், தொடர்ந்து சென்னை பச்சையப்பா கல்லூரியிலும் கணிதத்தைத் தவிர மற்ற பாடங்களில் தோல்வியையே சந்தித்தார்,
இராமானுஜனின் இல்லம்
1910 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியக் கணிதவியல் கழகத்தின் செயலாளர் இராமச்சந்திர ராவ் அவர்களை இராமானுஜன் சந்தித்தார். இராமானுஜனின் கணிதத் திறமையினைக் கண்டு வியந்த இராமச்சந்திரராவ் அவர்கள் இராமானுஜனைப் பார்த்து தற்சமயம் உமது தேவை என்ன? என்று கேட்க, இராமானுஜன் ஓய்வு தேவை என்று பதிலளித்தார், அதாவது உணவு பற்றிய கவலையின்றி கணிதம் பற்றிய கனவு கான ஓய்வு தேவை என்றார். யாருக்குமே விளங்காத கணக்குகள் எல்லாம் இராமானுஜனிடம் கைக்கட்டி சேவகம் செய்தாலும், உணவு மட்டுமே அவர் இருக்குமிடத்தை அனுகாதிருந்தது.
பிப்ரவரி 27 இல் ஹார்டிக்கு இராமானுஜன் எழுதிய கடிதம், படிப்போரை நெகிழச் செய்வதாகும். நான் தற்சமயம் தங்களிடம் வேண்டுகோளாக வைப்பதெல்லாம் ஒன்றுதான், நான் உண்ண உணவின்றி அரைப் பட்டினியாக இருக்கும் ஒரு மனிதன். எனது மூளையைப் பாதுகாக்க . எனது வயிற்றிற்கு உணவு தேவையாக உள்ளது. இதுவே எனது முதல் தேவையாகும் என்று எழுதினார், இராமானுஜனின் உண்மை நிலையை, வறுமையில் உழன்ற அவல நிலையை விளக்க இக்கடிதம் ஒன்றே போதுமானதாகும்.
இராமானுஜன் இளமைக் காலம் முதல் தான் கண்டுபிடித்த கணக்குகளை நான்கு நோட்டுகளில் பதிவு செய்துள்ளார். ஊதா நிற மையினால் கணக்குகளை தாளில் எழுதிவரும் இராமானுஜன், ஒரு பக்கம் முடிந்ததும், அடுத்த பக்கத்தில் எழுதாமல், அதே பக்கத்திலேயே, மேலிருந்து கீழாக, ஊதா நிற வரிகளுக்கு இடையே சிகப்பு நிற மையினால் எழுதுவார். நோட்டு வாங்கக் கூட காசில்லாத நிலையில் இராமானுஜன் இருந்தமைக்கு இந்த நோட்டுகளே சாட்சிகளாய் இருக்கின்றன.
ஐந்து வருடம் இலண்டனில் தங்கி உலகையேத் தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தப் பெருமையுடன் தாயகம் திரும்பினார் இராமானுஜன். அவருடன் இரண்டறக் கலந்து காசநோயும் வந்தது. காச நோயால் பாதிக்கப் பட்டு எலும்பும் தோலுமே உள்ள உருவமாய் இளைத்த இராமானுஜன், அந்நிலையில் கூட தனது கணித ஆய்வை நிறுத்தவில்லை.
கணிதத்தையும் கணிதமேதையும் கொண்டாட ஒரு வாய்ப்பு. மிக எளிய குடும்பத்தில் பிறந்து “கொடிது கொடிது வறுமை கொடிது” என அவ்வை பாடிய இளமையில் வறுமையோடு வளர்ந்து கணித உலகின் சக்கரவர்த்தியாகப் பிரகாசித்த ராமானுஜம் ஒரு கணிதமேதை என்று மட்டும் தெரியும்.
ஆனால் கல்லுரி மாணவர்க்கு அவரது கணித பங்களிப்பு பற்றி எதுவும் தெரியாது. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததுபோல் ராமானுஜம், ராமானுஜம் நம்பர் என்கிற ஒன்றை கண்டுபிடித்தார் என்று சில பேராசிரியர்களே இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் அவலம் ஒரு புறம். அவர் பிறந்து வாழ்ந்த வீட்டை அவர் ஊர்க்காரர்களாலேயே அடையாளம் காட்ட முடியாமல்போன அவமானம் ஒரு புறம்.
பாரதி… ராமானுஜம்… இவர்களை போன்றவர்களை இறைவன் செல்வந்தர்களாக படைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை குறைந்த பட்சம் பசித்தால் சாப்பிட சோறு கிடைக்கும் நிலையிலாவது படைத்திருக்கக்கூடாதா?
ஒரு வாய் சோறு பாரதிக்கும் ராமானுஜத்துக்கும் கொஞ்சம் கூடுதலாக கிடைத்திருந்தால் இன்னும் எத்தனை எத்தனையோ பொக்கிஷங்களை அவர்கள் இந்த உலகிற்கு தந்திருப்பார்களே.
ஏன் கிடைக்கவில்லை? இவர்களுக்கு அப்படி செய்தததன் மூலம் நமக்கு ஏதாவது சொல்ல வருகிறானா இறைவன்? இங்கே தான் இறைவனை புரிந்துகொள்ளமுடியாது தவிக்கிறேன்...
உணவிற்கே வழியின்றி வாழ்வில் வறுமையை மட்டுமே சந்தித்த போதும், கணிதத்தையே சிந்தித்து, சுவாசித்து, சாதித்துக் காட்டிய கணித மேதை சீனிவாச இராமானுஜனின் நினைவினைப் போற்றுவோம்.
No comments:
Post a Comment