Pages

Wednesday, September 28, 2022

விசித்திரமான விந்தை

ஒரு கணவனும்  மனைவியும் மாலைப்பொழுதில் நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பினர். சற்று நேரத்திலேயே இருட்டியதால் இருவரும் வேகமாக Kitchen தொடங்கினர். திடீரென சடசடவென மழையும் சாரலுமாகவீசத்தொடங்கியது. வேகமாக நடந்து கொண்டி ருந்தவர்கள் பிறகு ஓடத் தொடங்கினர். வழியில் பழுதடைந்த ஒரு கயிற்றுப் பாலம் மழைநீரில் அடித்துக் கொண்டு செல்லும் நிலையில் இருப்பதை கண்ட கணவன் முதல் ஆளாக வேகமாக ஓடி பாலத்தை கடந்துவிடுகிறான்...

கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும் போது தான் மனைவி பாலத்தின் நடுவே நின்று கொண்டு மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்துவிட்டதால் மனைவி மீதமிருக்கும் பாலத்தை கடக்க முடியாமல் பயந்து கொண்டாள், மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் மறுபக்கத்தில் இருக்கும் கணவனை துணைக்கு அழைத்தால், இருட்டில் எதுவும் தெரியவில்லை, மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் எதிர் முனையில் நிற்பதை அறிந்தாள், தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு கணவனை உதவிக்கு அழைத்தாள், கணவன் திரும்பிப் பார்க்கவுமில்லை, எந்த பதிலும் கொடுக்கவு மில்லை,"என்ன இந்த மனுசன் பொண்டாட்டி ஆபத்தில் இருக்கும்போது சுயநலத்துடன் கண்டு கொள்ளாமல்," என அவளுக்குள் ஆத்திரமும் அழுகையுமாய் வந்தது...

மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள், பாலத்தை கடக்கும்போது இப்படி ஒரு இக்கட்டான நிலமையில் கூட உதவி செய்யாத கணவனை நினைத்து வருந்தினாள். ஒரு வழியாக பாலத்தைகடந்து விடுகிறாள், கணவனை கோபத்தோடு பார்க்கிறாள், 

அங்கு கணவன் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப்பாலத்தை தனது வாயிலும், கையிலும் தாங்கிப்பிடித்துக்கொண்டி ருந்தான், மனைவி பத்திரமாக வந்து சேர்ந்ததும் கயிற்றை விட்டு விடட்டு சொல்கிறான் வாழ்க்கையின் எல்லா நேரங்களிலும் நான் உனக்கு பக்க துணையாக இருக்க இயலாது சில பிரச்சினை களை நீயேதான் சமாளித்து கடக்க வேண்டும் என்கிறான், நீங்கள் இருக்கும்போது எனக்கென்ன கவலை என்றவள் கட்டியணைத்து கண்ணீருடன் கணவனை முத்தமிடுகிறாள்.ஆம் நண்பர்களே சில சமயம் நிறைய பெண்கள் கண்ணிற்கு தன் கணவன் தங்கள் குடும்பத்தைக் கண்டு கொள்ளாத போலத்தான் தெரியும், இதனால் நிறைய குடும்பங்களில் பிரச்சினைகள் உருவாகிறது, அதற்கு காரணம் புரிதல் இல்லாதவையே...

உண்மையிலேயே தன் மனைவி மற்றும்  குடும்பத்தை நேசிக்கும் ஆண்மகன் தன் மகிழ்ச்சியை தொலைத்து பிறருக்காக வாழ ஆரம்பித்தவிடுகிறான் என்பதேதான் உண்மை... அவன் ஒவ்வொரு பொழுதி லும் தன் குடும்பத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறான்,

தூரத்தில் பார்ப்பவர்களுக்கு இவனென்ன பெரிதாக செய்துவிடப் போகிறான், சுயநலமுடையவன் என்று தான் தோன்றும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவன் நிலை என்ன என்பது தெரியவரும், வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை, நண்பர்களே, தூரத்தில் இருப்பதுதான் நமக்கு முதலில் தெளிவாகத் தெரிகிறது, இங்கே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் காத்துக் கொண்டுதான் இருக்கிறது, அந்த பிரச்சினை அவனவனுக்கு வரும்போது மட்டும்தான் அதன் பொருள் என்னவென்பது புரிகிறது!!! 

உண்மையான அன்போடும், நிலையான நம்பிக்கையோடும் கிடைத்த இந்த வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழலாமே.

No comments:

Post a Comment