Pages

Thursday, December 19, 2024

அகங்காரம் ~ Ego

ஒரு நண்பர் சொன்னது:

உறவுக்காரர் ஒருவர் உடம்பு சரியில்லாமல் படுத்தப்படுக்கையில் இருப்பதாக கேள்விப்பட்டதும்,  போய் பார்க்க வேண்டும் என்று என் மனம் ஏங்கியது.  காரணம்,  பல வருடங்களாக எங்கள் இரு குடும்பத்தாருக்கும் நாங்கள் செய்யாத ஒரு குற்றத்தால் பழி வந்து, அதனால் பேச்சு வார்த்தை இல்லை. "போய் ஒரு தடவை பார்த்துட்டு வரலாங்க" என்றாள் என் மனைவி. 

"முகம் கொடுத்து பேசாதவங்க, இப்போ அவங்க  வீட்டுக்கு நாம் போனால் உள்ளே விடுவார்களோன்னு தெரியாது" என்றேன்.

"பரவாயில்லங்க போய் பார்க்க வேண்டியது நம் கடமை" என்றாள் மனைவி. "சரி வா கிளம்பு போகலாம்" என்று சொன்னதும் புறப்பட தயாரானாள். அங்கே  போனதும் நாங்கள் பயந்த மாதிரி ஒன்றும் நடக்கவில்லை. நிறைய உறவினர்கள் அங்கே படுக்கையை சுற்றி இருந்தார்கள். நாங்கள் அவரிடம் பேச முற்பட்டபோது அவரின் மகள், "அப்பாவுக்கு பேச முடியாது, யார் சொல்வதும் காதால் கேட்க முடியாது, கண் திறந்து பார்க்கவும் முடியாது" என்று அழுதுகொண்டே  சொன்னாள்.

இதை கேட்டதும் நாங்கள் மிகவும் வருந்தினோம். நல்ல நினைவுடன் இருந்தபோது, அகங்காரம் (Ego) ஒரு மனிதனை எப்படி பாடாய் படுத்தியது. 

இப்போ யார் வந்திருக்கிறார்கள், என்ன சொல்கிறார்கள், தான் நினைத்ததை சொல்லவும் முடியாமால், ஒன்றுமே தெரியாத உடல் நிலை.

மனதை தேற்றிக்கொண்டு எல்லோருக்கும் ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு நாங்கள் வீடு திரும்பினோம்.

மறுநாள் காலையில் அவரின் மகளிடம் இருந்து வந்த செய்தி "அப்பா நேற்று இரவு 11மணிக்கு  காலமாயிட்டார்."

இது தான் மனித வாழ்க்கை. உறவுகளிடையே விட்டு கொடுக்கும் மனப்பான்மையுடன் வாழ முயற்ச்சிப்போம் நண்பர்களே.

Wednesday, December 11, 2024

Enayum, Thunayum

The dwindling number of Iyers. with their family relations.

Earlier, there were joint families with grandparents and grandchildren.

There were siblings. 

Now, most have a single child without “enayum, thunayum".

The following terms, very soon will be of the bygone days:

Atthaan [son of father’s sister], atthanka [daughter of father’s sister], ammaanji [maternal uncle’s son], ammanka [maternal uncle’s daughter], Atthai [father’s sister], Chitthappa [father’s younger brother, husband of mother’s younger sister], periyappa [father’s elder brother, husband of mother’s elder sister], maama [mother’s brother], maami [wife of maama], Atthimber [elder sister’s husband, atthai’s husband], Orppadi [wife of husband’s brother], thankai [younger sister], akka [elder sister], manni [wife of elder brother]. Atthaamanni [wife of atthaan], ammaanji manni [wife of ammaanji], kollupaatti [great grandmother], kolluppaatta [great grandfather], shaddakan [husband of wife’s sister], Matchinnan [ brother of wife], matchinni [sister of wife].

Parents, as a concession, solemnize the Upanayanam [Poonal ] of their sons. 

Most boys  do not even know  what achamanam is, let alone know what is sandyavandanam.

The names of nakshtram, months, thithis, weekdays were taught in mother-tongue. 

It was recited at dusk on lighting the Nilavilakku by grandparents and elders at home.

We move out of our homes  for our daily bread as well as for  greener pastures. 

It causes erosion and corrosion in our culture. Self-preservation is the law of Nature.

Thursday, December 05, 2024

சகல நோய்களும் தீரும்

நோய் தீர்க்கும் திருப்புகழ் பாடல்

ஒரு டம்ளர் ஆறிய நீரில் சிட்டிகை விபூதியை இட்டு, வலது கையால் மூடிக் கொண்டு இந்தப் பாடலை ஆறு முறை ஓதி, அந்த நீரை அருந்தினால் சகல நோய்களும் தீரும். எந்த நோயும் நெருங்காது.

அருணகிரிநாதரின் திருப்புகழ், திருத்தணித் தலத்தில் பாடப்பட்ட சகல ரோக நிவாரணி

"இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி விடமேநீ 

ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை யிவையோடே 

பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு முளநோய்கள்

பிறவிகள் தோறு மெனைநலியாத படியுள தாள்கள் அருள்வாயே

வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக இசைபாடி

வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை விடுவோனே 

தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் மணவாளா 

சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு பெருமாளே!"

மேலேயுள்ள அனைத்து நோய்களும் நீங்கும்.

ஓம் சரவணபவ 

Tuesday, November 26, 2024

மீனாக்ஷி

"அம்மாடி!! மீனாக்ஷி!! ராஜ உத்தரவு!! மடப்பள்ளில நிறைய நைவேத்யம் பண்ணனும்!! முடியல்லே!! சித்த தூங்கிக்கறேன்!! மறக்காத நேரத்துக்கு எழுப்பிடுடீ!! மறந்துடாதே" மீனலோசனையின் மீதுள்ள அதீதமான உரிமையால் ஶ்ரீநிவாஸர் *தேவிக்கே உத்தரவிட்டு*, மடப்பள்ளியை உள்பக்கமாய் தாழ் போட்டுக்கொண்டு உறங்கிப்போனார்.

தடதடவென சத்தம்!! "யார் மடப்பள்ளி கதவை இப்படி உடைக்கறது!!" கோபத்துடன் எழுந்த ஶ்ரீநிவாஸர் கதவைத் திறந்து பார்த்தால் ராஜ ஸேவகர்கள்!!

"என்னங்கானும்!! நீர் கதவை அடைச்சுண்டு உள்ள என்ன பண்றீர்!! காலத்துக்கு அம்பாளுக்கு நைவேத்யம் ஆக வேண்டாமா!! குருக்கள் காத்துண்ட்ருக்கார்!! நைவேத்யம் எடுத்துண்டு வாங்கோ!!" ராஜ ஸேவகர்களோடு வந்த பட்டரின் குரல்.

"ஐயோ!! மீனாக்ஷி!! கைவிட்டுட்டியேடீ!! எழுப்பி விடுன்னு சொன்னேனே!! ஒரு நைவேத்யமும் தயாராகலையே!! நான் என்ன பண்ணுவேன்!! அம்மா!! ராஜ தண்டனை தான் எனக்கு இன்னிக்கு!!" பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தார் ஶ்ரீநிவாஸர்.

"நகருங்காணும்!!" பட்டரொடு நான்கைந்து பேர் நுழைந்தனர் உள்ளே!!

"ஆஹா!! சக்கரைப் பொங்கல்!! தேங்காய் சாதம்!! புளியஞ்சாதம்!! எலுமிச்சை சாதம்!! போளி!! வடை!! பால் பாயசம்!! ஒன்னு பாக்கியில்லையே ஓய்!! இத்தனையும் தனியாவா பண்ணேள்!! ஒன் சிஷ்யாள்ல்லாம் “அண்ணா கதவை சாத்திண்டார்!! எப்படி திறக்கறதுன்னு தெரியல்லேன்னு புலம்பிண்ட்ருந்தாளே!!" சொன்னவரின் கண்கள் சர்க்கரை பொங்கலிலும், போளியிலுமே இருந்தது.

மீனாக்ஷிக்கு நைவேத்யம் ஆனதும் ஸோமசுந்தரன் இதை சாப்டறானோ இல்லையோ, நாம சாப்டுடனும். அவர் மனது துடித்துக் கொண்டிருந்தது.

ஶ்ரீநிவாஸருக்கு ஒரே குழப்பம்!! "என்னதிது!! நாம தான் எழுந்துக்கவே இல்லையே!! யார் இதெல்லாம் பண்ணிருப்பா!!" நிகழ்வின் ப்ரமிப்பில் ஶ்ரீநிவாஸர் விலகவில்லை.

"உம் கைக்கு தங்க மோதரம் போடணும் ஓய்!! வாரும்!! மீனாக்ஷிக்கு தீபாராதனை ஆகப்போறது!! பார்ப்போம்!!" எல்லோரும் சிவ ராஜமாதங்கியின் ஸந்நிதிக்கு விரைந்தனர்.

குருக்கள் அம்பாளுக்கு நைவேத்யம் செய்து பின் தீபாராதனைக்கு திரையை விலக்கினார்.

"ஐயோ!! மாணிக்க மூக்குத்தி காணுமே!! அம்மா!! மீனாக்ஷி!! என்னடி சோதனை இது!!" குருக்களின் கதறல் மீனாக்ஷி கோவிலுக்கு வெளி வரை எதிரொலித்தது.

மீனலோசனையின் அழகையே மெருகூட்டும் மூக்குத்தி தொலைந்த துக்கம் ராஜாவிற்கும், மற்ற அனைவருக்கும்!! ஶ்ரீநிவாஸருக்கோ நடப்பதைக் கண்டு பயம்!! அபசாரம் நிகழ்ந்ததோ என்று!!

அசரீரி கேட்டது...

"அஞ்சற்க!! என் பிள்ளை ஶ்ரீநிவாஸன் சரீர களைப்பால் என்னை எழுப்பிவிடச் சொல்லி உறங்கிப்போனான்!! காலத்தில் எழுப்பிடத் தான் நானே சென்றேன்!! அயர்ந்து அவன் உறங்குவதைக் கண்ட நான் அவனை எழுப்ப மனமில்லாது மடப்பள்ளிக்குள் சென்றேன். துளி வெளிச்சமும் இல்லாத இம்மடப்பள்ளியில் சமைப்பதற்கு வெளிச்சம் வேண்டுமே என்று எனது மூக்குத்தியை கழற்றி வைத்து, அதன் ஒளியில் நானே எனது நைவேத்யங்களை சமைத்தேன்!! குழந்தை உறங்குவதைக் கண்ட தாய் அதனை எழுப்புவாளோ!! அவனால் செய்ய வேண்டிய பணி என்னால் முடிக்கப்பட்டது!! மடப்பள்ளிக்கு சென்று பாருங்கள் !! மூக்குத்தி இருக்கும் !!" சட்டென நின்றது அசரீரீ.

நடப்பது கனவா நினைவா என யோசிப்பதற்க்குள் மீனாக்ஷி மூக்குத்தி மடப்பள்ளியிலிருந்து வந்தது.

"அம்மா!! மீனாக்ஷீ!!" ஶ்ரீநிவாஸர் கண்களில் ஜலம் பெருக கதறி மீனாம்பாளின் பாதத்தில் விழுந்தார். "அம்மா!! அம்மா!!ன்னு ஸதா கூப்பிட்டதற்கு நீயே எனக்காக நைவேத்யம் சமைச்சிருக்கியே!! தாயே!! நான் என்ன பாக்யம் பண்ணேன்!!" கண்ணீர் கண்களை மறைக்க கதறினார் ஶ்ரீநிவாஸர்.

"தாயே!! மீனாக்ஷீ!! தாயே!! மீனாக்ஷீ!!" லக்ஷக்கணக்கான ஜனங்கள் நடந்த அதிசயத்தைக் கண்டு திரண்டனர் கோவிலில்!!

ராஜனும் அமைச்சரும் ஶ்ரீநிவாஸரை ஸாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தனர் "ஸ்வாமீ!! நீரே மீனாக்ஷி!! மீனாக்ஷியே நீங்க!!" வேறொன்றும் சொல்லத் தோணவில்லை யார்க்கும்!!

"மீனாக்ஷி!! மீனாக்ஷி!!" திக்கெட்டும் அம்மையின் நாமம் ஒலித்தது.

ராஜராஜேச்வரியான மாதங்கிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

"பாகம் செய்து என் நாவை பாடவும் செய்தாய் தாயே

ஊகமிலார்க்கு இன்னும் உதவினாய் சோகந்தீர் நாதநலம் நாட்டுகின்ற நான்மறையாம் தண்டை சேர்பாதநிழல் யான் தங்கப்பண்"

ஶ்ரீநிவாஸரின் நா பாடத்தொடங்கியது!! ஆம் கல்வியறிவு இல்லாத ஶ்ரீநிவாஸர் கவிஶ்ரீநிவாஸர் ஆனார்.

காமாக்ஷி பட்டாரிகை மூககவிக்கருளியது போல், அகிலாண்டநாயகி காளமேகத்திற்கு அருளியது போல், மீனாக்ஷம்மை ஶ்ரீநிவாஸர்க்கு அருளி விட்டாள்.

படிப்பறிவில்லா ஶ்ரீநிவாஸர் பராசக்தி கடாக்ஷத்தால் கவிமாரி பொழிந்தார்.

"மீனாக்ஷி!! மீனாக்ஷி!!" நாமம் ஒன்று போதாதோ!! மோக்ஷமே கைமேல்!!

ஶ்ரீமாத்ரே நம:

வக்த்ரலக்ஷ்மீ பரிவாஹ சலன்மீனாப லோசனாயை நம:

காமாக்ஷ்யை நம:

லலிதாம்பிகாயை நம:

Monday, November 18, 2024

கிணறு

நம் முன்னோர்கள் எதை செய்தாலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமக்கு.

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு மிகவும் வியப்பாக இருக்கிறது.

அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க?

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும். அதே போல கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ:

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர்.

சரி நீரூற்று இருக்கும. ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை இறைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டு சென்று சேர்த்த அடையாளங்கள், அதாவது தடயங்கள் இருக்குமாம். அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி?

கிணறு வெட்ட இருக்கும் நிலப்பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம்.

அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு, ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.

முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைத்த நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.

Tuesday, November 12, 2024

Sunday Story

Sunday Story

Guests who never came

A few days after the father and mother died, the children opened all  the boxes and cupboards they had used. 

Expensive shirts, sarees given by children and grandchildren on special occasions, utensils brought from the Gulf, spoons, bedsheets, curios bought when they went on tour and perfumes all sat there without being opened or used.

The flawed utensils in the kitchen of the house, the crumpled aluminium utensils, the faded plates for eating, the grey bedsheets in the bedroom all came to mind.  

If she was told to take it and use it, she would say, "It is all about taking a drop of water when someone comes up."

Most homes have ceramic items that are stored in glass cupboards on the wall.  For whom is all this waiting for?

The tablecloth with small blue flowers is folded to be rolled out when someone comes? For whom are the shining utensils and glasses sitting motionless? Do you expect someone to call your name and come into the house?

The ins and outs will disappear one day. Thoughtful and unexpected guests will also come that day. Your immobile body may not be able to accommodate the crowds that come to see you in expensive vehicles. The cupboards and tablecloths that you have kept like gold for distinguished guests for ages will remain in that cupboard.

The edges of the ceramic cup are dusty and dull. Yellow stains are seen in the folds of the tablecloth.

We need to understand the truth that no bigger guests are coming than us and that there is no bigger celebration than our life.  All the endless waiting is in vain. What we lose is our precious life that God has given us.

Time does not wait for anyone. In an instant, you will all become pictures on the wall. Our deferred hopes will change. We always need to remember that we are the only ones who can laugh for ourselves. Like a child who goes to school without good clothes on the day when he is likely to get beaten up, we are afraid of something and put aside our happiness. We do not laugh today waiting for the good days to come.

It is just that we do not realize that a bigger day than today is yet to come. The moments lost without living will fade away forever.

You do not have to wait for anything.

Take out the best tablecloth for yourself today and spread it. Put up your new curtains. Wipe with a damp cloth, the shiny spoons and the best utensils and arrange on the shelf.

Place scented candles on the table. You are the star! Today is your biggest day. Celebrate as much as you can.

This does not mean throwing away money or forgetting duties. Start living for yourself from this day. Make a world for yourself with short trips, music, movies and books.

Drink more tea. One more laugh. Let the nerves come. Let the knee hurt.

Let us go ahead and celebrate. Isn't it a life?

May the days to come be more beautiful. Realize that you are the biggest guest in your life and enjoy every day of your life and live till death.

Reflection

Time will never wait for anyone. Today, it is the only truth. The poet sang, who knows who and what tomorrow will be like.

Tuesday, October 15, 2024

மகாபாரதத்தில் கண்ணன் ஏன் அழுதான்

மகாபாரதத்தில் கண்ணன் அழுத இடம்..

உடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாது என்று அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த கண்ணன் அழுத இடம் ஒன்று உண்டு. 

அது எந்த இடம் தெரியுமா?

கர்ணன் அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். அவன் செய்த தர்மம் அவனைக் காத்து நின்றது.

அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான். 

கண்ணனுக்கே தாங்கவில்லை. உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள் என்றான். 

அப்போதும் கர்ணன் மறு பிறவி என்று ஒன்று வேண்டாம். அப்படி ஒரு வேளை பிறக்க நேர்ந்தால், யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் உள்ளத்தைத் தா என்று வேண்டினான். 

கண்ணன் அழுதே விட்டான். இப்படி ஒரு நல்லவனா என்று அவனால் தாங்க முடியவில்லை. 

கீழே விழுந்து கிடந்த கர்ணனை அப்படியே எடுத்து மார்போடு அனைத்துக் கொண்டான்.

கண்ணனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தக் கண்ணீரால் கர்ணனை நீராட்டினான்.

கர்ணன் கேட்டதோ இல்லை என்று சொல்லாத உள்ளம் மட்டும் தான். 

கண்ணன் மேலும் பலவற்றை சேர்த்துத் தருகிறான் 

நீ எத்தனை பிறவி எடுத்தாலும், தானம் செய்து, அதைச் செய்ய நிறைய செல்வமும் பெற்று, முடிவில் முக்தியும் அடைவாய் என்று வரம் தந்தான். 

இறைவனைக் காண வேண்டும், முக்தி அடைய வேண்டும் என்று எவ்வளவோ பேர் எவ்வளவோ தவம் செய்வார்கள். எவ்வளவோ படிப்பார்கள். 

கர்ணன் இறைவனைக் காண வேண்டும் என்று தவம் செய்யவில்லை. முக்தி வேண்டும் என்று  மெனக்கெட வில்லை. 

இறைவன் அவனைத் தேடி வந்தான். கேட்காதபோதே விஸ்வரூப தரிசனம் தந்தான்.  அவனைக் கட்டி அணைத்துக் கொண்டான்.  கண்ணீர் விட்டான். செல்வம், ஈகை, முக்தி என்று எல்லாம் கொடுத்தான். 

இறைவனைத் தேட வேண்டாம். அவன் நாம் இருக்கும் இடம் தேடி வருவான். கேட்காதது எல்லாம் தருவான். நம்மைக் கட்டி அணைத்துக் கொள்வான்.

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

கர்ணன் தானம் செய்தான், 

செய் நன்றி மறவாமல் இருந்தான். 

எளியவர்களுக்கு உதவி செய்தான், தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி மறக்காமல் இருந்தான். அவ்வளவுதான்.

உலகளந்த பெருமாள், அவனிடம் கை நீட்டி நின்றார்.

ஈகை எவ்வளவு பெரிய நற்செயல் !

இயன்றதைசெய்வோம் இல்லாதவர்க்கு.