Pages

Thursday, September 21, 2023

காலச் சக்கரம்

இருபது வயசுல இதுதான் வேணும்னு தோணும்....

முப்பது வயசுல இது வேணும்னு தோணும்....

நாற்பது வயசுல இதுவே போதும்னு தோணும்....

ஐம்பது வயசுல இது இல்லைன்னா கூட பரவாயில்லைனு தோணும்.....

அறுபது வயசுல எது இல்லைன்னாலும் பரவாயில்லைனு தோணும்....

எழுபது வயசுல எதுவும் வேணாம்னு தோணும்....!!!!!!!

காலமாற்றம்.... 

காலச்சுழற்சி... 

கால நேரம்....!!!!!

பிடிவாதம் எல்லாம் முடக்குவாதமா மாறும்....!!!!ஆணவம்  எல்லாம் பணிவா மாறும்....!!!!

அதிகாரம் எல்லாம் கூனிக் குறுகி மாறி இருக்கும்.....!!!!

மிரட்டல் எல்லாம் கப்சிப்னு ஆகியிருக்கும்......!!!!

எது வேணும்னு ஆளாய் பறந்தோமோ....அதையே தூரமாக வைத்து பார்க்கத் தோணும்....!!!!

எதற்காக ஓடினோம்.... எதற்காக ஆசைப்பட்டோம்.... 

எதற்காக எதைச் செய்தோம்..... என்ற காரணங்கள் எல்லாமே ..... காலப் போக்கில் மறந்து போகும்.... மரத்துப் போகும்....!!!

தீராப்பகையைத் தந்து வன்மத்தோடு வாழ்ந்து ஆட விடுவதும் காலம்தான்...

அதன் பின் ஆட்டத்தை அடக்கி.... மறதியைக் கொடுத்து ஓரமாய் உட்கார வைப்பதும் அதே காலம்தான்....!!!!

வெளியே மாளிகையாய் தோற்றமளிக்கும் எதுவும்.,...

உள்ளிருக்கும் விரிசல்களை எடுத்துரைக்காது....!!!!

வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல..... 

அதற்குப் பல அவமானங்களைக் கடந்திருக்க வேண்டும்....

Wednesday, August 30, 2023

Sabarimala Pilgrims

 I am krishnakumar Ananthasivan, Chartered Accountant in Coimbatore.  I am a member of Kerala brahmana saba.  I request you to please post this item in your web so that all the  devotees who intend to travel to sabarimala during this season can consider the option of a stay before or after the sabarimala dharsan.

Transit accomodation for sabarimala piligirms near Kottayam at Free of cost

Our family have an ancestoral house in a village called  Thiruvarppu, Near Kottayam, Kerala which can be given as transit accomodation for sabarimala piligrims coming from  long distance (Mumbai, Chennai, Bangalore and Hyderabad etc).  The house is situated 8 KMS away from kottayam railway station and very close to  famous Krishnaswamy temple which opens at 2 AM on all 365 days.  As per the history, this temple was initially built for Lord Ayyappa and later on Sree krishna Idol was installed. There is a river which flows  very close to our house where the piligrims can take bath and have dharsan in local temples before proceeding to sabarimala.   Sabarimala  is around 120 KMS from my place.

 The facilities available are:

1. 2500 square feet traditional Nalu kettu house ( courtyard in the middle) with 2 attached bathroom and toilet and hotwater facility

2. Gas stove with connection- if required the piligrims can cook food.

3. Fans fitted in all rooms

4. car parking facility

Near by attractions:

1. Vaikom Siva temple & Ettumanoor siva temple is in a radius of 30 kms

2. Chottanikara temple 45 kms 

3. Kumarakom the tourist destination  7 Kms

The intention is to provide service to Lord ayyappa by giving facility to his devotees. The devotees need not stay in a hotel or railway room duirng their piligrimage. Interested person can contact me at 094433 56193 or 0422 2310489. No charges are collected from ayyappa devotees.

Swamiye saranam Ayyappa

thanks

Krishnakumar Ananthasivan

CA, Coimbatore

Wednesday, July 05, 2023

முதியோர் இல்லத்தில் அன்னதானம்

முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய போறீங்களா, ஒரு நிமிடம் இதை படியுங்கள்.

ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ள நிர்வாகியிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். 

எனக்கு 10 ஆண்டுகளாக அவரோடு பழக்கம் உண்டு.

அந்த சமயத்தில் அங்கு வந்த ஒரு நன்கொடையாளர், தன் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வேளைக்கு மட்டும் அன்னதானம் அளிக்க விரும்புவதாகக் கூறினார். 

மேலும் "குறித்தநாளில் பகல் 12 மணிக்கு வாழைப்பழம், Sweet, பீடா, வடை, பாயாசத்தோடு சாப்பாடு முதியோர் இல்லத்துக்கு வந்துவிடும். 

உணப்பொருட்களை கொண்டு வந்த பாத்திரங்களை திரும்பவும் ஓட்டலுக்கு கொடுக்கும் போது மிகவும் சுத்தமாக துலக்கி கொடுக்கவேண்டும்." என்றார். 

அவர் குறிப்பிட்ட அந்த ஓட்டல் மிகவும் காஸ்ட்லி. 

ஒரு Special Meals க்கு ரூ. 150/- வாங்குகிறார்கள். 

அவர் போனதும் அந்த முதியோர் இல்ல நிர்வாகி சில விஷயங்களை சொன்னார்.

பெரும்பாலான முதியோர் இல்லங்களில் சொந்தமாக சமையல் கூடமும், சமைப்பதற்க்கு ஆட்களும் உண்டு. 

முதியோர்களின் உடலுக்கு ஏற்றவகையில் எளிதில் ஜீரணமாகும் மற்றும் எந்த அலர்ஜியும் ஏற்ப்படுத்தாத உணவைத் தான் இங்கு சமைக்கிறோம்.

நம் மக்களின் ஆர்வக்கோளாறு மிகுதியால், புண்ணியம் சம்பாரிக்கும் வெறியில் ஒரு நல்லநாள், விஷேசம் என்றால் அன்னதானம் செய்கிறேன் என்கின்ற பெயரில் புரோட்டா, சில்லி பரோட்டா, கொத்து புரோட்டா, தந்தூரி உணவுகள், Sweet, நூடுல்ஸ், Fried Rice என்று வாங்கி அன்னதான மளிக்க வந்து விடுகிறார்கள். (70 வயது பாட்டிக்கு இங்கு சாம்பாரில் போடும் பருப்பே ஜீரணம் ஆகாமல் Acidity பிரச்சனை ஆகிறது.)

குழைந்து போன சாதமும், இட்லியை சாம்பாரில் உறப்போட்டு கரைத்து குடிக்கும் பெரியவர்களுக்கு புரோட்டாவும், சிக்கன் குருமாவும் குடுத்தால் என்ன ஆகும்❓

குறிப்பாக நாம் வழக்கமாக ஓட்டலில் சாப்பிடும் சாம்பார், வத்தக்குழம்பே இவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது. 

ஓட்டல் சாப்பாடு எல்லாம் 40 வயசு வரை உள்ள ஆட்களுக்குத்தான். 

இவ்வளவு உப்பும், காரமும் தொடர்ந்து 2 நாள் சாப்பிட்டால் 4-5 நாட்களுக்கு இந்த முதியோர்கள் எதுவுமே சாப்பிடமுடியாமல் அவஸ்தைப்படுவார்கள்.

போன மாதமெல்லாம் ஒருத்தர் சாப்பாட்டுடன் ஐஸ்கிரீமை நல்ல குளிர்காலத்தில் வந்து முதியோர் இல்லத்தில் குடுத்துவிட்டு போகிறார். (இதற்க்கும் அவர் ஒரு Software கம்பெனியின் மேலாளர். 1 இலட்சத்துக்கும் மேல் மாத சம்பளம் வாங்குகிறார்.)

ஆரம்பகாலங்களில் இப்படி அன்னதானம் செய்ய வந்தவர்களிடம், எங்களிடம் பணமாக கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிப் பார்த்தோம்... 

சிலர் மளிகை பொருட்களாக வாங்கிக்கொடுத்தார்கள். 

ஆனால் பலரும் அவர்கள் கண்முன்னே எல்லாம் நடக்கவேண்டும், அவர்கள் கையால் 4 பேருக்கு உணவு பரிமாற வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். (பணமாக நேரடியாக கொடுக்கவோ, அல்லது மளிகை பொருட்களை நாங்கள் வெளியில் விற்று விடுவோம் என்று தவறாக எண்ணி பலரும் முன்வருவதில்லை.)

ஒரு முதியோர் இல்லத்தில் சாப்பாட்டு செலவுக்கு நிகராக மருத்துவ செலவு உண்டு... 

கட்டணமே இல்லாமல் ஒரு சேவை போல் இங்குள்ள முதியோர்களுக்கு அடிப்படை பரிசோதனைகள் செய்ய சில நல்ல மருத்துவர்கள் இருப்பதால்தான் கொஞ்சமாவது சமாளிக்கமுடிகிறது...

ஓட்டலில் ஒரு நபருக்கு ரூ. 100/- க்கு மேல் ஒரு சாப்பாட்டுக்கு செலவு ஆகிறது. 

ஆனால் நாங்களே இங்கு சமைக்கும் போது ஒரு நபருக்கு ஒருவேளை சாப்பாட்டுக்கு அதிகபட்சம் 45/- ரூபாய்க்குள் அடங்கிவிடுகிறது. 

அதுவும் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத முதியோர்களுக்கான சாப்பாடு.

ஒருவர் முதியோர் இல்லத்துக்கு கொடுக்கும் பணம் என்பது பல செலவுகளுக்கு உதவும் மருத்துவம், போர்வை, சோப்பு, எண்ணெய், பல்பொடி, கிருமிநாசினி, உடை, கட்டிடம் / தோட்ட பராமரிப்பு, ஊழியர்கள் சம்பளம், முடி திருத்துவோர் சம்பளம்... என்று.

ஒருவன் பசியில் இருப்பதை விட கொடுமையான விஷயம், நாம் குடுத்த உணவு செரிக்காமல் / சாப்பிட்ட உணவு வெளியெற முடியாமல் அவஸ்தை படுவதுதான்...

ஆர்வக் கோளாரில் புண்ணியம் சம்பாரிக்க ஆசைப்பட்டு, பெரும்பாவத்தை தேடாதீர்கள்.

*நம்பிக்கை தான் வாழ்க்கை.*

Wednesday, June 28, 2023

தினமும் 1000 தெய்வீக தரிசன டிக்கெட்டுகள்

திருமலை தரிசனம் குறித்த ஆர்டிசி அறிவிப்பு:

ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் திருமலைக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, ஏபிஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் தினமும் 1000 தெய்வீக தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏபிஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் திருமலைக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த பொன்னான வாய்ப்பை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

ஏபிஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் திருப்பதிக்கு செல்லும் பயணிகள், கட்டணத்துடன் கூடுதலாக 300 ரூபாய் செலுத்தி பேருந்திலேயே விரைவான தரிசன டிக்கெட்டைப் பெறலாம்.

இந்த விரைவு தரிசனம் தினமும் காலை 11.00 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருமலை பேருந்து நிலையத்தை அடைந்ததும் RTC மேற்பார்வையாளர்கள் பயணிகளுக்கு விரைவாக தரிசனம் செய்ய உதவுவார்கள்.

எனவே, திருப்பதி செல்லும் பயணிகள் முதலில் ஆர்டிசி பஸ்களில் விரைவு தரிசன டிக்கெட் பெறும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

திருப்பதிக்கு தினமும் 650 பேருந்துகளை APSRTC இயக்குகிறது.  திருப்பதிக்கு ஒவ்வொரு டெப்போவிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.  பெங்களூர், சென்னை, காஞ்சி, வேலூர், பாண்டிச்சேரி, ஹைதராபாத் போன்ற நகரங்களில் இருந்து தெய்வீக தரிசனத்திற்காக வரும் பயணிகளுக்கு இது மிகவும் நல்ல வசதி.

Saturday, June 10, 2023

மனைவி

மனைவி

பாத்ரூமில் நின்று ”என்னங்க” 

என்று அழைத்தால்

பல்லி அடிக்க என்று அர்த்தம்.

சாப்பிடும் ஹோட்டலில் ””என்னங்க”

என்று அழைத்தால்

பில்லை கட்டு 

என்று அர்த்தம்.

கல்யாண வீட்டில்

”என்னங்க” என்றால்

தெரிந்தவர் வந்திருக்கிறார்

வாஎன்று அர்த்தம்.

துணிக்கடையில் நின்று ”என்னங்க” என்றால் 

தேடிய புடவை கிடைத்து விட்டது 

என்று அர்த்தம்.

வண்டியில் செல்லும் போது ”என்னங்க” என்றால்

பூவாங்க வேண்டும்

என்று அர்த்தம்.

மருத்துவமனை சென்று ”என்னங்க” என்றால்

மருத்துவரிடம் என்ன பேசவேண்டும் என்று அர்த்தம்.

வெளியே பார்த்து ”என்னங்க” என்றால் அறியாத ஆள் வாசலில் என்று அர்த்தம்.

பீரோவின் முன் நின்று ””என்னங்க” என்று அழைத்தால் பணம் வேண்டும் என்று அர்த்தம்.

சாப்பாட்டை எடுத்து வைத்து ”என்னங்க” என்றால் சாப்பிட வாங்க என்று அர்த்தம்.

சாப்பிடும்போது

என்னங்க என்றால்

சாப்பாடு சுவைதானா

என்று அர்த்தம்.

கண்ணாடி 

முன் நின்று 

என்னங்க என்றால்

நகை அழகா

என்று அர்த்தம்.

நடக்கும்போது

என்னங்க என்றால்

விரலை பிடித்துகொள்ளுங்கள்

என்று அர்த்தம்.

காலமெல்லாம் சொன்னவள்

கடைசி மூச்சின்போது

என்னங்க என்றால்

என்னையும்

அழைத்து செல்லுங்கள்

என்று அர்த்தம்.

என்னங்க என்ற

வார்த்தை இல்லை

என்றால்

எல்லாம் முடிந்து போனது 

என்று தானே அர்த்தம்....?

அவன் இன்றி ஓர் அணுவும் 

அசையாது இவ்வுலகில்...

இவள் இன்றி கணவனுக்கு 

எதுவுமே இயங்காது வாழ்க்கையில்...

அவள் தான் மனைவி

பெரியவாளிடம் முழுவதுமாக அர்ப்பணி

ஒரு அனுஷத்துக்கு மறுநாள் நிறைய பக்தர்கள் தர்சனம் பண்ண வந்தார்கள். அதில் ஒரு வயசான பாட்டி. பெரியவாளை பார்த்து “சர்வேஸ்வரா………..மஹாப்ரபு….” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்.


“எப்டி இருக்கான் ஒன் ஸ்வீகாரம்?………”

“ஏதோ இருக்கான்………” விட்டேத்தியாக பதில் வந்தது பாட்டியிடமிருந்து.

“வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே?………அதான் ஒதவியா இருக்கட்டுமே…ன்னுதான் குடுத்தேன்” முகத்தில் சிரிப்பு!

பிடிப்பு இருக்கட்டும்…..ன்னு குடுத்தாராம்! 

சுற்றி இருந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு.

“சரி………ஒன் ஒடம்பு எப்டி இருக்கு?………”

“ஏதோ இருக்கேன்….பெரியவா அனுக்ரகம்…மழை பெஞ்சா, ஆத்துல முழுக்க ஒரேயடியா ஒழுகறது….அதை கொஞ்சம் சரி பண்ணிக் குடுத்தா, தேவலை பெரியவா”

என்னது? சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்தனர்! மோக்ஷத்தை தரவல்ல பராசக்தியிடம் எப்படிப் பட்ட விண்ணப்பம்!

“இந்த ஊர்ல மழையா ! காஞ்சிபுரந்தான் காஞ்சு போயிருக்கே!…….” மறுபடியும் கிண்டல் சிரிப்பு.

“இல்லையே….இப்போ ரெண்டு நாள் முன்னால பெஞ்ச மழைல கூட ஒழுகித்தே!…….”

“அப்டியா! சரி ஏற்பாடு பண்றேன்…..” பாட்டி நகர்ந்தாள். இத்தனை உரிமையோடு பெரியவாளிடம் பேசும் அந்த பாட்டி, எட்டு வயசில் திருமணமாகி விதவை ஆனவள். கணவர் வழியில் ஏராளமான சொத்து! ஒரு பெண்ணிடம் இத்தனை சொத்து இருக்க சொந்தக்காரர்கள் விடுவார்களா? அதே சமயம் தன்னிடம் வரவேண்டிய ஜீவன் ஒரு நாயாக இருந்தால் கூட பகவான் விட்டு வைப்பானா?

பெண்ணுக்கு விவரம் கொஞ்சம் நன்றாக தெரிந்திருந்ததால், சற்று சுதாரித்துக் கொண்டாள். காஞ்சிபுரத்துக்கு எதேச்சையாக வந்தவள், “தன் சொத்துக்கள் அத்தனையும் காமாக்ஷிக்கு!” என்று சொல்லிவிட்டாள். பெரியவா எவ்வளவோ மறுத்தும், கடைசியில் அந்த பெண்ணின் அன்பான பிடிவாதம் வென்றது. எனவே அவளுக்கு மடத்துக்கு சொந்தமான வீடு ஒன்றை தங்கிக்கொள்ள குடுத்துவிட்டார். அல்லும் பகலும் பெரியவாளை தர்சனம் பண்ணும் பாக்யம் ஒன்றே போதும் என்று பரம த்ருப்தியுடன், பணத்துக்கு துளியும் முக்யத்வம் குடுக்காத ஒரு ஆத்மாவை பெரியவா அல்லும் பகலும் ரக்ஷித்தார்.

பாட்டியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவரிடம் சில பிரமுகர்கள் வந்து ஒரு தட்டில் ஏதே பத்திரிகையை வைத்தார்கள். சிரித்துக் கொண்டிருந்த முகம் சட்டென்று மாறியது…….

“என்னது இது?”

“காமாக்ஷி அம்மன் ப்ரம்மோத்சவ பத்திரிகை……….”

“கலெக்டருக்கு குடுத்தாச்சா?”

“குடுத்துட்டோம். பெரியவா”

“இவாளுக்கு?” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த மற்ற ரெண்டு பெரியவாளையும் காட்டி கேட்டார்.

“குடுத்தாச்சு. பெரியவா……”

“ஓஹோ…சரி. எல்லார்க்கும் குடுத்துட்டு, இவன் மடத்த விட்டு எங்கேயும் போக மாட்டான்….ன்னுட்டு கடேசில போனாப் போறதுன்னு எனக்கும் ஒரு பத்திரிகை கொண்டு வந்தேளாக்கும்?”

ருத்ர முகம்!

“இல்லை…..அது வந்து……பெரியவா” நிர்வாகிகள் எச்சில் கூட முழுங்க முடியாமல், கால்கள் நடுங்க நின்றனர்.

“………கேட்டுக்கோங்கோ! மடத்து சம்ப்ரதாயம்..ன்னு ஒண்ணு இருக்குன்னாவது தெரியுமோ? பத்திரிகை மொதல்ல எங்க தரதுன்னு தெரியுமோல்லியோ? எல்லா சம்பிரதாயத்தையும் மீறி நடந்துண்டா எப்டி? நீ எத்தனை வர்ஷமா இங்க இருக்கே?” குண்டுகளாக துளைத்தன! பெரியவா பத்திரிகையை தொடவே இல்லை! மடத்து நிர்வாகிகள் நடுங்கிப் போய்விட்டனர்.

ஆம். தவறுதானே?

“எப்டி வரணுமோ அப்டி வாங்கோ” திரும்பி நடந்தவர்களை, “ஒரு நிமிஷம் ……..” நிறுத்தினார்.

“நீ எங்கே குடியிருக்கே?”

“வடக்கு சன்னதிப் பக்கம் ஒரு ஆத்துல…….”

“அங்க வேற ரெண்டு மூணு வீடு இருந்ததே…”

“அங்க சுப்புராமன் இருக்கார்……”

பெரியவாளுக்கோ எந்தெந்த வீடு, யார் யார் இருக்கிறார்கள் எல்லாம் அத்துப்படி!

“சுப்புராமன்தான் மேல போயிட்டாரே……அவரோட வாரிசுகள் மடத்ல வேலை செய்யறாளா என்ன?”

“இல்லை……….”

“மடத்ல வேலை செய்யறவாளுக்குத்தான் நாம வீட்டை குடுத்திருக்கோம். இங்க வேலை செய்யாதவாளுக்கு எதுக்கு வீடு? நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது! நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு குடி போகணும் !..டேய்! நாளன்னிக்கு நல்ல நாளா…ன்னு பாரு”

“ஆமா பெரியவா நல்ல நாள்தான்”

“அப்போ சரி. இந்த பாட்டி நாளன்னிக்கு அந்தாத்துக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ”

பெரியவா சங்கல்பம் நிறைவேறியது!

இதற்கப்புறம் மூன்று மாசம் கழித்து காமாக்ஷி கோவிலில் தர்சனம் பண்ணிவிட்டு சன்னதி தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பெரியவா, சட்டென்று ஒரு வீட்டின் முன் நிற்கிறார்.

பின்னால் வந்து கொண்டிருந்த பக்தர் குழாம் குழம்பியது. ஒரு பக்தரிடம், ”ரெண்டு மூணு நாளா பாட்டியை காணும்…..உள்ள போய் பாரு. ஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ…..”

உள்ளே….ஏழ்மையான எளிமையான வாஸம். ஒரே ஒரு குமுட்டி அடுப்பு. ரெண்டே ரெண்டு பாத்ரம். வேறு எதையுமே காணோம். பாட்டி ஒரு ஓரத்தில் முடங்கிக் கிடக்கிறாள். பக்தர் மெதுவாக பாட்டியிடம் பெரியவா வாசலில் நிற்கும் விஷயத்தை சொன்னதுதான் தாமதம்! தடாலென்று எழுந்து, தன் நார்மடியை சரி பண்ணிக் கொண்டு ஓடோடி வருகிறாள்.

இரைந்து…….”சர்வேஸ்வர……மஹாப்ரபு…….நீயே என்னைத் தேடிண்டு வந்துட்டியா?” என்று அலறிக் கொண்டு பெரியவா பாதத்தில் விழுந்தாள். மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தாள். இதை உண்மையான பக்தனும் பகவானும் மட்டுமே அனுபவிக்க முடியும்.

தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் வந்து தர்சனம் பண்ணுகிறார்கள். ஆனால், தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால், பகவானால் தாங்க முடியாமல், தானே அவர்களைப் பார்க்க வந்துவிடுவான். அந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம் எல்லோருக்கும் கிடைக்குமா? தன்னையே பெரியவாளிடம் முழுவதுமாக அர்ப்பணித்தவர்களுகு மட்டுமே நிச்சயம் கிடைக்கும்.

Saturday, May 27, 2023

ராமர் பாதம் பட்ட குடிசை

 படிக்கும் போதே புல்லரிக்கிறது. 

ராம் ராம் கலியுகத்திலும் கூட ஆத்மார்த்த பக்திக்குப் பரந்தாமன் இறங்கி/இரங்கி வருவான் என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்.

ராமர் பாதம் பட்ட குடிசை

அம்மா..... அம்மா....

குழந்தைகளின் அலரல் அந்த தெருவையே திரும்பிப் பார்க்க  வைத்தது.

ஏன் இப்படி உயிர் போற மாதிரி தெருவில் நின்று கத்துறீங்க... உள்ளே வாங்களேன்.

பாம்பு இருக்குமா... பெரிய பாம்பு பயத்தில் குழந்தைகளுக்கு வார்த்தைகள் கூட வரவில்லை.

பாம்பு ஏற்கனவே தவளையை முழுங்கி சாப்பிட்டாச்சு... உங்களை ஒன்றும் செய்யாது,, வீட்டிற்குள் வந்து கைகால்களை அலம்பிட்டு, துணியை மாற்றி  தோசை  சாப்பிடுங்க.. பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்த அம்மா கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளவில்லை.

வீடு என்றால் ஏதோ பெரிதாக கற்பனை செய்து விடாதீர்கள்...

அது ஒரு குடிசை வீடு. பல்லாவரத்தில் பல குடிசைகளுக்கு நடுவில் ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்களின் குடும்பம் வசிக்கும் இடம்.

நட்பு என்ற பெயரில் கூப்பிடாமல் பாம்பு,, பூரான், பல்லி, பெருச்சாளி, தேள், என்று பலதும் வீட்டிற்குள் அடிக்கடி எட்டிப்பார்க்கும்.

காலையில் கண் விழிக்கும் போது குடிசையில் மேலே இருக்கும் குறுக்கு கட்டையில் பாம்பு தொங்கிக் கொண்டு நிற்கும்.... பயத்தில் அழுவோம்... அம்மா அப்போதும் பாம்பு ஒன்றும் செய்யாது.. கத்தாதே .. ராமா ராமா என்று சொல்லு என்பாள்..

ஸ்ரீனிவாச ஐயங்கார் குழந்தைகளுக்கு ராமநாம பக்தியை நன்கு ஊட்டி வளர்த்தார்.

ஏகாதசி, சனிக்கிழமை விரதம் என்று அம்மா அப்பா பட்டினி கிடந்தது எங்களை மூன்று வேளை வயிறார சாப்பாடு கொடுக்கத்தான் என்று இப்போது புரிகிறது. மனதால் அழுகிறோம் என்று மூத்த பெண் விஜயலட்சுமி கண்ணீருடன் நினைவுகூர்கிறார்.

மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில் எங்களுடைய தெய்வம். வருடத்தில் ஒரு நாள் கோயில் உற்சவத்தை பார்த்துவிட்டு வருவோம். அதுதான் குழந்தைகளான எங்களுக்கு வருடத்தில் கிடைக்கும் ஒரே ஒரு சந்தோஷமான நாள். மறுபடியும் அடுத்த வருடம் அந்த ஒரு நாளுக்காக தவம் கிடப்போம்.

ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு 150 ரூபாய் சம்பளம். அரசாங்க உத்தியோகம். சுத்தமான கை, பக்தி நிறைந்த மனசு, வாங்குகிற சம்பளத்தைவிட மூன்று மடங்கு உழைத்துவிட்டு இரவு ஒன்பது மணிக்குத்தான் வீட்டிற்கு வருவார்.

ஒரு வருடம்  மதுராந்தகம் கோயில் உற்சவத்திற்கு ஒரு நாள் நிகழ்ச்சிக்கு கஷ்டப்பட்டு பணம் கட்டினார். கோயிலில் இவர்களை முன்னிறுத்தி ஒவ்வொரு பூஜையும் செய்து முதல் மரியாதை செய்து இவர்களுக்கு பிரசாதம் கொடுக்கப்பட்டது.  குழந்தைகளுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அதற்கு அடுத்த வருடம் சீனிவாச ஐயங்கார் தன்னால் முடியாது என்று சொல்லிவிட்டார். குழந்தைகளுக்கு ஏகமான வருத்தம்.. பெற்றவர்கள் மீதும் அதைவிட அந்த மதுராந்தகம் கோயில் ராமர் மீதும். 

வருடத்தில் ஒரே ஒரு நாள் தான் வெளியில் சென்று தங்கள் மானசீகமான ராமரை காண்பது... அதற்கும் இந்த வருடம் வழியில்லை. மனதிற்குள்ளேயே அழுதார்கள்.

ராமா நாங்கள் கேட்பது உன்னுடைய தரிசனம் தான்.. எந்த ஒரு பொருளையும் எங்களுக்காக கேட்கவில்லை. உன்னுடைய உற்சவத்தில் கலந்து கொள்ள அப்பாவிடம் இந்த வருடம் பணம் இல்லை... என்ன பாவம் செய்தோம் இந்த நிலைமைக்கு... 

பள்ளிக்கூடம் செல்லும் வழியெல்லாம் ராம நாமம் சொல்லிக்கொண்டே செல்வோம்.

அந்த குழந்தைகளுக்கு ராம நாமம் தவிர வேறு ஒன்றும் தெரியாது.. அன்று உற்சவத்திற்கு பணம் கட்ட கடைசி நாள்.. அப்பாவிடம் மன வருத்தம்.. காலையிலிருந்து இன்னும் பேசவில்லை. பள்ளிக்கூடத்திற்கு கிளம்பும் நேரம்..

வேகமாக ஒரு கார் வந்து இவர்கள் குடிசையின் முன் நின்றது. காரிலிருந்து இறங்கிய இரு வாலிபர்கள் இது சீனிவாச ஐயங்கார் வீடு தானே என்று பவ்யமாக கேட்டார்கள்

குடிசையின் அளவை நோட்டம் விட்ட அவர்கள் சுவாதீனமாக உள்ளே வந்து அந்த அழுக்கு தரையில் அமர்ந்து விட்டார்கள்.

இரு வாலிபர்களும் நல்ல உயரம், தலையை நன்றாக படிய வாரி விட்டிருந்தார்கள், பெரிய ஊடுருவும் கண்கள் சாந்தமான முகம், நெற்றியில் சந்தனத்தை அழகாக வைத்திருந்தார்கள்.

வந்தவர்களில் ஒருவர் பேசத் தொடங்கினார்..

இவர் என் அண்ணா ராமசாமி . நாங்கள் மதுராந்தகம் கோயில் உற்சவத்திற்கு பணம் கட்ட போயிருந்தோம்., அந்த குறிப்பிட்ட தேதியை உங்கள் குடும்பத்திற்கு ஒதுக்கி இருப்பதாகவும், உங்கள் வரவை அவர்கள் எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

என்னுடைய அண்ணி சீதா தான் கொண்டு வந்த பணத்தை அந்த உற்சவத்திற்கு கட்டிவிட்டு  அன்றைக்கு உங்கள் குடும்பத்தையே உற்சவத்தில் கலந்து கொள்ள சொல்லியிருக்கிறார்.

இதைச் சொல்லிவிட்டு போகத்தான் நாங்கள் வந்தோம், என்று கிளம்ப எழுந்து விட்டார்கள்.

பேச்சில் தெளிவு, புன்னகை மாறாமல் பேசியது, கைகூப்பி வேண்டிக்கொண்ட விநயம்,... ராமசாமி அண்ணா என்பவர் அழகான புன்னகையுடன் கை கூப்பிக் கொண்டு எழுந்து கொண்டார்.

அய்யங்கார் தம்பதிகளுக்கு கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது, பேச்சே வரவில்லை, மந்திரத்திற்கு கட்டுண்டவர்கள் போல் கைகூப்பி நின்றிருந்தார்கள் .

ராமசாமி அண்ணாவாக வந்தவர் குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும் நேரம் போலிருக்கிறது,, தாங்கள் அவர்களை எங்கள் வண்டியில்  இறக்கி விட்டுப் போகிறோம், என்று சொல்லிக்கொண்டே புத்தக பைகளை காரினுள் கொண்டுபோய் வைத்துவிட்டார். பல்லாவரத்தில் இருந்து தியாகராய நகரில் உள்ள சாரதா வித்யாலயா பள்ளிக்கூடம் வரை சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவுக்கு காரில் எதுவும் பேசாமல் அவ்வப்போது  திரும்பிப் பார்த்து குழந்தைகள் பக்கம் ஒரு தெய்வீகமான புன்னகையை காட்டுவார்.

பள்ளிக்கூட வாசலில் குழந்தைகளை இறக்கிவிட்டு நன்றாக படியுங்கள் என்று சொல்லி  மனதைக் கவரும் அழகான புன்னகையுடன் விடைபெற்றுக் கொண்டார்கள்.

மதுராந்தகம் ராமர் கோயில் உற்சவத்தில் தங்களுக்காக பணம் கட்டியவர்கள் பற்றிய விவரங்கள் அர்ச்சகர்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்து விவரங்கள் கேட்க அவர்கள் தங்களுக்கு எதுவுமே தெரியாதென்றும் பணம் மட்டும் ஸ்ரீனிவாச ஐயங்கார் பெயரில் கட்டியிருக்கிறார்கள் என்று சொன்னார்கள்..

மேலும் அர்ச்சகர்கள் நீங்கள் சொல்லும் ராமசாமி அண்ணாவும் அண்ணி சீதாவும் என்ற பெயர்களைப் பார்த்தால் வந்தவர்கள் சாட்சாத் ராம லட்சுமணன் தான் என்று அடித்துக் கூறி விட்டார்கள்.

அப்பொழுதுதான் சீனிவாச ஐயங்கார் குடும்பத்தாருக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது, கால்கள் தள்ளாடின, கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது. வந்தவர்கள் எல்லாம் இதை ஏகமனதாக ஆமோதித்தார்கள்.

வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர் ராமர் படத்தின் முன்பு விளக்கேற்றி ராமா ராமா என்று பக்தியில் உருகினார்கள்.

சீனிவாச ஐயங்காரின் குடிசை ராமர் பாதம்பட்ட இடமாயிற்று....

குழந்தைகளின் படிப்பு அமோகமாக வளர்ந்தது சீரும் சிறப்புமாக வாழ்க்கை துணைகள் அதே பகுதியில் சொந்த வீடுகள் கட்டிக்கொண்டு இன்றைக்கு பேரன் பேத்திகள் உடன் ராமநாமத்தை விடாமல் சொல்லிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

மகாலட்சுமி ஆக விளங்கும் அன்னை சீதா தேவி கொடுத்த பணம் அட்சயம் ஆக வளர்ந்து கொண்டிருக்கிறது.

வருடந்தோறும் இன்றும் குடும்பமாக மதுராந்தகம் ராமர் கோயில் உற்சவத்தில் கலந்து கொண்டு கைங்கரியம் செய்து கொண்டு வருகிறார்கள்.

ஐயங்காரின் புதல்வியான விஜயலட்சுமி அவர்கள் இதை நம்மிடம் விவரிக்கும்போது அவர்களின் பழைய வாழ்க்கையையும் மறக்கவில்லை அவர்களின் ராம பக்தியும் சிறிதளவும் குறையவில்லை.

இவரிடம் நாம் விடை பெறும்போது சீதா தேவி சமேத ராம லட்சுமணர்கள் உருவம் உயிரோட்டமாக நம் கண் முன்னே விரிகிறது.

சொன்னவர்.

சகுந்தலா தேவி

Friday, May 26, 2023

உள்ளம் உருகுதையா

திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிப் பிரபலமாகிய ‘உள்ளம் உருகுதையா, முருகா உன்னடி காண்கையிலே, அள்ளி அணைத்திடவே எனக்கோர் ஆசை பெருகுதப்பா’ போன்ற உள்ளத்தை உருக்கும் எண்ணற்ற பாடல்களைப் பாடிய ஆண்டவன்  பிச்சி அம்மா, முதுமையில் துறவறம் பூண்டு, பின் இறைவனடி சேர்ந்தார்.

ஆண்டவன் பிச்சி - இவ்விளம்பர யுகத்தில் தன்னை அதிகம் வெளிப்படுத்திக்கொள்ளாமல் குடத்திலிட்ட விளக்காக வாழ்ந்து மறைந்தவர். ‘ஆண்டவன் பிச்சி’ என்று மகா பெரியவாளால் பிரியமுடன் அழைக்கப்பட்ட மரகதவல்லி அம்மாள். 

(ஆண்டவன் பிச்சை என்றும் குறிப்பிடப்படுவதுண்டு) இரண்டு வயதிலேயே தாயை இழந்து, படிப்பு, பாட்டு ஏன் விளையாட்டிலும்கூட நாட்டமில்லாதிருந்த எட்டு வயது மரகதத்திற்குக் குடும்பத்தினர் திருமணம் செய்வித்துப் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அவரது தந்தைவழிப் பாட்டி சுந்தரி அம்மாள் மட்டும் “இப்பெண்ணிற்கு நல்ல அறிவைக் கொடுப்பாயாக’’ என்று இடைவிடாமல் முருகனை வேண்டிக் கொண்டிருந்தார்.

பத்து வயதிருக்கும்போது, பிறந்த வீட்டிற்கு வந்திருந்த மரகதத்தின் வாழ்க்கையைத் திசை மாற்றிய ஒரு சம்பவம் நிகழ்ந்தது. முருகப் பெருமான், குழந்தை மரகதத்தின் கனவில் தோன்றி, ஆடும் பரிவேல், அணி சேவலுடன் வந்து அவள் நாவில் பிரணவத்தைப் பொறித்தான். பள்ளிக்கே சென்றிராத, படிப்பறிவு சிறிதுமில்லாத மரகதத்தின் வாக்கில், மடை திறந்த வெள்ளம்போல் பக்திப் பாடல்கள் பெருக்கெடுத்தன. ஷடாக்ஷர மந்திரத்தை அவளுக்கு உபதேசித்து, எப்போதும் ஜபம் செய்யும் படிக் கூறி மறைந்தான் முருகன்.

காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றது. அடுத்தடுத்து ஒன்பது குழந்தைகளுக்குத் தாயானாள் மரகதம். ஐந்தாவது பிரசவம் மிகக் கடுமையாக இருந்தது. கந்த சஷ்டிக்கு இரண்டு நாட்கள் முன்பு ஆண் குழந்தை பிறந்தது. கந்த சஷ்டி நாளன்று மாலை, வீட்டிலிருந்த மற்றவர்கள் சூரசம்ஹார விழாவைக் காணச் சென்று விட்டனர். இரவு ஜுர வேகத்தில் அரற்றிக் கொண்டிருந்த மரகதத்திற்கு ஒரு கனா வந்தது. அதீத அழகுடன் தோன்றிய முருகன் ஒன்றரை வயதுக் குழந்தையாய் மரகதத்திடம் வந்து ‘என்னை எடுத்துக் கொள்’ என்று கெஞ்சினான். 

வாரி அணைத்துக் கொண்ட மரகதம் ‘நீ யார்’ என்றதும் ‘மால் மருகன்’ என்றான் குழந்தை. ‘எனக்கு ஒரு தாலாட்டுப் பாடேன்’ என்று குழந்தை கூறியதுதான் தாமதம், ஆனந்த சாகரத்தில் மூழ்கிய மரகதம், இருநூறுக்கும் மேற்பட்ட பாடல்களை முருகன் மேல் பாடினாள். பிரசவ அறையில் உதவிக்கிருந்த பெண் ஓடிச்சென்று பென்சிலும் காகிதமும் கொண்டு வந்து அப்படியே அவற்றை எழுதி எடுத்துக் கொண்டாள்.

உணர்ச்சி வசப்பட்டு மரகதம் நடுநிசியில் உரக்கப் பாடியது மாமியார் செவிக்கு எட்டியது. கோபத்துடன் உள்ளே எட்டிப் பார்த்தவர், இரண்டுநாளே ஆன குழந்தை அழுது கொண்டிருந்த¬

தக்கூட கவனிக்காமல் பாடிக் கொண்டிருந்த மருமகளைக் கண்டு ‘குழந்தை அழுறதுகூடத் தெரியாமல் அப்படி என்ன பாட்டு, ஆண்டிமேல்! ஆண்டியைப் பாடும் உன்னால் இந்தக் குடும்பமே பிச்சை எடுக்கப் போகிறது. 

இனிமேல் முருகனைப் பற்றிப் பாடவோ எழுதவோ ஏன் பேசவோகூட மாட்டேன் என்று உன் கணவர், குழந்தைகள் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்’’ என்று கோபத்துடன் கூறியதும் பயந்துபோன மரகதம் அப்படியே செய்தாள். அதே வேகத்துடன் மாமியார், அப்பாடல்கள் அடங்கிய புத்தகத்தை ஒரு பெட்டியில் போட்டுப் பெரிய பூட்டையும் மாட்டி விட்டார்.

இந்நிகழ்ச்சிக்குப்பின் 24 வருடங்கள் ஓடிய பின்னரே மரகதத்தின் மாமியார் இறைவனடி சேர்ந்தார். இவ்வளவு காலமும், மனது துடித்த போதிலும் மரகதம் வாய் திறந்து முருகனைப் பற்றி பேசவோ, வாய் திறந்து பாடவோ செய்யவில்லை. ஆனால், இறைவன் சித்தம் வேறு விதமாக இருந்தது. உறவுப் பெண்மணி ஒருவர் வந்து தான் நடத்தும் பத்திரிகைக்கு ஒரு பாட்டு எழுதித் தருமாறு மரகதத்திடம் கேட்டார்.

“நான் பாடியே எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டனவே’’ என்று கூறிய மரகதம்மாள், மாமியார் பூட்டி வைத்த பெட்டியைத் திறந்து பார்த்தார். உள்ளே பெரும் அதிசயம் காத்திருந்தது. ஒரு அட்டைப் பெட்டிக்குள் மாமியார் வைத்திருந்த ரூபாய் நோட்டுகள் செல்லரித்துப்போயிருந்தன. ஆனால், ஆண்டியின் மேல் மரகதம்மாள் பாடிய பாடல்கள் அடங்கிய புத்தகம் மட்டும் அப்படியே இருந்தது! 


1949 ஜனவரி 21. விடியற்காலையில் அம்மா அருகில் குழந்தையாகத் தோன்றினான் முருகன். “எல்லாப் பாடல்களையும் எடுத்துக்கொடுத்துவிட்டாயே! மீண்டும் என்மேல் பாட ஆரம்பி.’’ என்றான். 

கணவர் மீதும் குழந்தைகள் மீதும் ஆணையிட்டிருந்தபடியால் அவர்களுக்கு ஏதும் பாதகம் ஏற்பட்டுவிடக் கூடாதே என்று பயந்தாள் மரகதம். “பேனாவைப் பிடித்திருப்பது உன் கை; எழுதுவது என் செயல்’’ என்று கூறி மறைந்தான் முருகன். அன்று அவன் எடுத்துக்கொடுத்த அடியை வைத்து “அருணோதய சூர்யபிம்பமதுபோல் முகமும்“ என்று துவங்கி 108 பாடல்களை எழுதினார் மரகதம்மாள். அதுவே ‘ஆத்ம போதம்’ என்ற பாடல் தொகுப்பாக வெளிவந்தது.

உள்ளம் உருகுதய்யா...

உள்ளம் உருகுதய்யா - முருகா 

உன்னடி காண்கையிலே 

அள்ளி அணைத்திடவே - எனக்குள் 

ஆசை பெருகுதப்பா 

பாடிப் பரவசமாய் - உன்னையே 

பார்த்திடத் தோணுதய்யா 

ஆடும் மயிலேறி - முருகா 

ஓடி வருவாயப்பா 

பாசம் அகன்றதய்யா - பந்த 

பாசம் அகன்றதய்யா - உந்தன்மேல் 

நேசம் வளர்ந்ததய்யா 

ஈசன் திருமகனே - எந்தன் 

ஈனம் மறைந்ததப்பா

ஆறுத் திருமுகமும் - உன் அருளை 

வாரி வழங்குதய்யா 

வீரமிகுந்தோளும் கடம்பும் 

வெற்றி முழக்குதப்பா 

கண்கண்ட தெய்வமய்யா - நீ இந்தக் 

கலியுக வரதனய்யா 

பாவி என்றிகழாமல் - எனக்குன் 

பதமலர் தருவாயப்பா 

உள்ளம் உருகுதய்யா - முருகா 

உன்னடி காண்கையிலே 

அள்ளி அணைத்திடவே - எனக்குள் 

ஆசை பெருகுதப்பா

“உள்ளம் உருகுதய்யா ..!”

டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடலைக் கேட்டு , 

உருகாத உள்ளங்களே இருக்க முடியாது.

ஆனால் , இசைத்தட்டுக்காக இந்தப் பாடலை பாடி ஒலிப்பதிவு செய்யும்போதும் , அதற்குப் பல காலத்திற்குப் பிறகும் கூட .... இதை எழுதியவர் யார் என்று டி.எம்.எஸ்.சுக்கே தெரியாது.

பலகாலம் முன் பழனிக்கு சென்று இருந்தார் டி.எம்..எஸ்.! வழக்கமாக தங்கும் லாட்ஜில் தங்கி இருந்தார். அங்கு வேலை செய்த பையன் ஒருவன் , அடிக்கடி ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருந்தான்.. அந்தப் பாடல்தான் “உள்ளம் உருகுதடா”

பாடலின் சொல்லிலும் பொருளிலும் சொக்கிப் போனார் டி.எம்.எஸ். ! அதை விட டி.எம்.எஸ். ஆச்சரியப்பட்டுப் போன இன்னொரு விஷயம்... முருகன் பாடலைப் பாடிய அந்தச் சிறுவன் - ஒரு முஸ்லிம் சிறுவன்.

டி.எம்.எஸ். அன்போடு அந்தச் சிறுவனை அருகே அழைத்தார். “தம்பி..இங்கே வாப்பா..”

வந்தான்.

பாடலை எழுதியது யார் என்று விசாரித்தார் டி.எம்.எஸ்.

 எதுவும் விவரம் சொல்லத் தெரியவில்லை அந்தப் பையனுக்கு.

“பரவாயில்லை.முழு பாடலையும் சொல்லு..” என்று ஒவ்வொரு வரியாக அந்தப் பையன் சொல்ல சொல்ல , அதை அப்படியே எழுதிக் கொண்டார் டி.எம்.எஸ்.

பழனியிலிருந்து சென்னை வந்ததும் , அந்த “உள்ளம் உருகுதடா” பாடலை “அடா” வரும் இடங்களை மட்டும் “அய்யா” என்று மாற்றி , பாடி பதிவு செய்து விட்டார் டி.எம்.எஸ்.

அதன் பின் , கச்சேரிக்குப் போகிற இடங்களில் எல்லாம் இந்தப் பாடலைப் பாடும்பொழுது , மேடையிலேயே இந்த விஷயத்தை சொல்லுவாராம் டி.எம்.எஸ்..!

எப்படியாவது இந்தப் பாடலை எழுதியவர் யார் என்ற உண்மை தெரிந்து விடாதா என்ற ஆசை டி.எம்.எஸ்சுக்கு..!

ஆனால் ... எந்த ஊரிலும் , யாரும் அந்தப் பாடலுக்கு உரிமை கொண்டாடவில்லை.

பல வருஷங்கள் கடந்த பின் .. தற்செயலாக சென்னை, தம்புச்செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் செல்கிறார் டி.எம்.எஸ்.

கும்பிட்டபடியே கோவிலைச் சுற்றி வந்தவர் , குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வந்ததும் ... அசையாமல் அப்படியே திகைத்து நிற்கிறார் .

காரணம் .. அங்கே இருந்த ஒரு கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பாடல்.

 “உள்ளம் உருகுதடா...”

உடலெல்லாம் பரவசத்தில் நடுங்க , எழுதியவர் யார் என்று பாடலின் அடியில் பார்க்கிறார் டி.எம்.எஸ்.

அந்தக் கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பெயர் ..'‘ஆண்டவன் பிச்சி’’ !

 யார் அந்த '‘ஆண்டவன் பிச்சி’’ ? 

டி.எம்.எஸ்.சின் தேடல் தொடங்கியது... நாளுக்கு நாள் அது தீவிரமானது. அதற்கு நல்லதொரு பதிலும் சீக்கிரத்திலேயே கிடைத்தது.

அந்த ‘ஆண்டவன் பிச்சி’ – ஒரு பெண். 

பெற்றோர் வைத்த பெயர் மரகதவல்லி .

பள்ளிக்கு செல்லாதவள். படிப்பறிவு இல்லாதவள். பத்து வயது முதல் முருகன் பாடல்களை பாடிக் கொண்டே இருப்பவள்.

ஒன்பது குழந்தைகளுக்குத் தாயான மரகதம் , வாழ்வில் எல்லா சோதனைகளையும் சந்தித்தவர்.. முதுமையில் துறவறம் பூண்டு, பின் இறைவனடி சேர்ந்தவர்.

இறப்பதற்கு முன் , கோயில் கோயிலாக போய் பாடி வந்து கொண்டிருந்தார்.

அப்படி காஞ்சி மடத்தில் அமர்ந்து ஒருமுறை பாடிக் கொண்டிருந்தபோது , அங்கே இருந்த சிலர் இவரது எளிய தோற்றத்தைக் கண்டு “பிச்சைக்காரி” என நினைத்து துரத்த ... காஞ்சி மஹா பெரியவர் இந்தப் பெண்ணை அருகே அழைத்து , பிரசாதமும் கொடுத்து .. “இன்று முதல் உன் பெயர் ‘ஆண்டவன் பிச்சி’ ” என்று ஆசீர்வதித்து அனுப்ப ...அன்று முதல் கோயில் கோயிலாகச் சென்று, தெய்விகப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார் மரகதவல்லி என்ற ‘ஆண்டவன் பிச்சி’.. 

சிலர் 'ஆண்டவன்பிச்சை’ என்றும் சொல்வதுண்டு. 

அப்படி அவர் காளிகாம்பாள் கோயிலுக்கு சென்றபோது பாடியதுதான், அந்த 'உள்ளம் உருகுதடா’ ..!

அது அங்கே கல்வெட்டிலும் பொறிக்கப்பட்டு விட்டது.

சரி ... இநதப் பாடல் பழனி ஹோட்டலில் வேலை செய்து வந்த இஸ்லாமிய சிறுவனுக்கு எப்படித் தெரிந்தது ?

டி.எம்.எஸ். காதுகளில் அது ஏன் விழுந்தது..?

இந்த மாதிரி சில கேள்விகளுக்குப் பதில்  எந்தக் கல்வெட்டிலும் கிடைக்கப் போவதில்லை. காகிதங்களிலும் இருக்கப் போவதில்லை. 

கம்பியூட்டரும் கூட பதில் தரப் போவதில்லை.

பாசம் அகன்றதய்யா - பந்த 

பாசம் அகன்றதய்யா 

உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா 

ஈசன் திருமகனே 

எந்தன் ஈனம் மறைந்ததப்பா

உள்ளம் உருகுதய்யா.

Sunday, May 14, 2023

பவித்ரம்

தர்ப்பையினால்  செய்யப்படும் மோதிரம் போன்ற அமைப்பு பவித்ரம்  என்று அழைக்கிறோம்.

பவித்ரம் என்றால் பரம சுத்தமானது என்று அர்த்தம்.

இந்த பவித்ரம்  செய்யப்படும் கர்மாவுக்கு ஏற்ப தர்ப்பை புல்லின் எண்ணிக்கை மாறுபடுகிறது.

அவை :-

1) ப்ரேத கார்யங்களில் ஒரு தர்ப்பை

2) சுப கர்மாவில் 2 தர்ப்பை

3) பித்ரு கர்மாவில் 3 தர்ப்பை

4) தேவ கர்மாவில் 5 தர்ப்பை

5) சஷ்டியப்த பூர்த்தி போன்ற சாந்தி கர்மாவில் 6 தர்ப்பை

தேவ கார்யங்களுக்கு கிழக்கு நுனியாகவும் பித்ரு கார்யங்களில் தெற்கு நுனியாகவும் உபயோகப்படுகிறது.

ஹோமங்களில் பரிஸ்தரணம், ஆயாமிதம், ப்ரணீதா போன்றவைகளிலும் தர்ப்பங்கள் இடம் பெற்றுள்ளன. ச்ராத்த மற்றும் தர்ப்பண காலங்களில் ஸ்தல சுத்தி, ஆஸனம், கூர்ச்சம் போன்றவைகள் தர்ப்பங்களினால்தான் செய்யப்படுகின்றன.

குறிப்பாக தர்ப்பங்களில் தர்ப்ப கூர்ச்சத்தினால்தான் (அல்லது தர்ப்ப ஸ்தம்பம்) பித்ருக்களை ஆவாஹணம் செய்யச் சொல்லியுள்ளது.

கலச ஸ்தாபனம் போது மாவிலை கொத்து தேங்காயுடன் தர்ப்ப கூர்ச்சம் வைப்பது இன்றியமையாதது. ஏனென்றால் தர்ப்பை வழியாக ப்ராண சக்தி கும்பத்துக்குள் வருகிறது.

கல்யாணத்தில், கல்யாண பெண்ணிற்கும், சீமந்தத்திற்கும், அதே மாதிரி உபநயனத்தில் வடுவிற்கும் இடுப்பில் தர்ப்பங்களினாலான கயிற்றை மந்த்ர பூர்வமாக கட்டும் ப்ரயோகமும் இருந்து வருகின்றது.

உபயோகப்படுத்தும் தர்ப்பங்களின் நுனி உடையாமல் இருக்க வேண்டும். ப்ரயோகங்களில் நுனி இல்லாத தர்ப்பங்கள் ஆஸனத்தைத்  தவிர மற்றதுக்கு  உபயோகப் படுவதில்லை.

தர்ப்பத்தினாலான ஜப ஆஸனம் (பாய்) மிகவும் விசேஷம். தர்பாஸனத்தில் அமர்ந்து செய்யும் பூஜை மற்றும் ஜெபங்களுக்கு பலமடங்கு சக்தி உண்டு.

க்ரஹண காலங்களில் ( சூர்ய மற்றும் சந்திர ) இல்லத்தில் ஏற்கனவே பக்குவமாகி இருக்கும் பதார்த்தங்களிலும், குடிநீரிலும் தர்பங்களை போட்டுவைத்தால் எந்த வித தோஷமும் அவற்றுக்கு ஏற்படாது.

பிராமணனுக்கு தர்பை புல் ஓர் ஆயுதம். முனிவர்களும், ரிஷிகளும் தர்ப்பைப்புல், தண்ணீர், மந்திரசத்தி மூன்றையும் இணைத்து செயற்கரியா செயல்களை செய்தனர்.

வரம் கொடுத்தனர், சாபம் கொடுத்தனர், அஸ்திரங்களை பிரயோகிதனர்.

பிரபஞ்சத்தில் பிராணசக்தியை கடத்தும் சக்தி தர்ப்பைக்கு உண்டு. அதனாலேயே சங்கல்பத்தில் "தர்பான் தாரயமான:" என்று விரலில் இடுக்கிக் கொண்டு பிராணயாமம் செய்கிறார்கள்.

குசபாணி சதா திஷ்டேத் பிராம்மணோ டம்பவர்ஜித:

ச நித்யம் ஹிந்தி பாபானி தூல ராசிமிவாநல:

கையில் தர்ப்பைப் புல்லுடன் உள்ள பிராமணன் அகங்காரம் இல்லாமல் இருப்பானாகில், அக்னியைக் கண்ட பனி ஒழிவது போல அவன் பாவங்களை அழிக்கவல்லான்.

தர்பை ஒரு சிறந்த மின் கடத்தி.!

அது ஆற்றலையும் கடக்க வல்லது.!

தர்ப்பையை உபயோகப்படுத்திய பின், அதை நான்காக பிரித்து வடக்கு பக்கமாக போடவேண்டும். பின்பு கண்டிப்பாக ஆசமனம் செய்தால்தான், நாம் தர்பையை உபயோகித்து செய்த கர்ம பலன் அளிக்கும்.!

Thursday, May 04, 2023

யார் கடவுள்?

மணி இரவு 8.

பசி வயிற்றைக் கிள்ளியது.

இன்றைக்கு வேலைக்காரி வரவில்லை. சமையல்காரியும் வரவில்லை.

எனக்கு சமைக்க மூடும் இல்லை.

இது மாதிரி நேரங்களில்.

ஸ்விக்கி அல்லது ஜூமாட்டோவை துணைக்கு அழைப்பதுண்டு.

இன்று அதற்கும் மூடு இல்லை.

வெளியே வீசிய குளிர் காற்று, என்னோடு சற்று உறவாடு, என்று என்னை அழைக்க.... 

டூ வீலர் ஸ்டார்ட் செய்து பார்த்தேன்.

மூன்று நாட்கள் டூவீலரை எடுக்கவில்லை... 

என் மேல் அதற்கு கோபம் போல...

எனது உதை...

பயனற்று போனது.

ஒரு நல்ல டிபன் சாப்பிட வேண்டும் என்றால் சிறிது தூரம் நடக்க வேண்டும்... 

சின்னதாக ஒரு உரத்த சிந்தனை....

 பிறகு...

ஹோட்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

இன்று ஏன் எனக்கு  இப்படியெல்லாம்  நடக்க வேண்டும்?

வீட்டில குடை இருந்தும், இப்போது மழை வராது என்று நானே முடிவு செய்து ஹோட்டலுக்குப் போகலாம் என்று ஏன் தோன்றியது?

இரவு 8  மணிக்கு ஓட்டலுக்கு போனவன், அங்கேயே சாப்பிட்டுவிட்டு வந்திருக்கலாம்.

சாப்பிடும் நேரத்தில் மழை வந்திருந்தால், கொஞ்ச நேரம் அங்கேயே நின்று விட்டு வந்திருக்கலாம்.

அதையும் செய்யாமல் ஏன் பார்சல் கட்டிக்கொண்டு, தண்ணீர் பாட்டிலும் வாங்கிக்கொண்டு உடனே கிளம்ப வேண்டும்.

எல்லாம் ஏன் இன்று இப்படி ஏடா கூடாமாக நடக்கிறது.

இப்படி வரும் வழியில், கொட்டும் அடை மழையில், ஒதுங்க இடம் கிடைக்காமல் அலைவதற்கா?

கொஞ்ச நேரம் நடந்து, ஓடி தேடியதில் கடைசியாக சின்னதாக பிவிசி சீட் போட்ட பஸ் ஸ்டாப் போல் ஒரு இடம் தென்பட்டது. 

அருகில் சென்றதும் தான் தெரிந்தது.

அது அந்த வீட்டின் மதில் சுவர் அருகில் பதிக்கப் பட்ட கிருஷ்ணர் சிலைக்கு மேல் வைக்கப்பட்ட ஒரு சிறிய தடுப்பு என்று.

4x4 சதுர அடியில் ஒரு சிறு கிருஷ்ணர் சிலை. அதற்கு ஒரு கம்பிக் கதவு போட்டு பூட்டப்பட்டிருந்தது. 

கிருஷ்ணருக்கு துணையாக அந்த சிறிய தடுப்பில் இப்போது நானும்.

இங்கே மழைக்கு ஒதுங்கி நின்ற போது என் மனதில் தோன்றியவைகளைத் தான், நான் இப்போது உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 

உலகையெல்லாம் காக்கும் ரட்சகன் நீ உன் சிலையை காப்பாற்றிக் கொள்ள உன்னால் முடியாது என்று நினைத்து மனிதன் போட்டிருக்கும் இந்தக் கம்பிக் கதவை பார்க்கும்போது உனக்கு சிரிப்பு வரவில்லையா? என்று நினைத்துக் கொண்டு அங்கிருக்கும் கிருஷ்ணருடன் மனதில் பேச ஆரம்பித்தேன்.

உனக்குள்ளே இவ்வுலகம் ஆனால் நீயோ இந்த கம்பி கதவுக்கு உள்ளே.

எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கப்பா என்று என் குருஜி சொன்னது என் நினைவுக்கு வந்தாலும் , என் கேள்விகள் மட்டும் நிற்கவில்லை. 

கம்பிக்குள் சிறை  வைக்கப்பட்ட  நீ,யாருக்கு உதவப் போகிறாய்? 

நீயே சரணமென்று வேண்டுபவர்களுக்கு இந்த சிறையைத் தாண்டி எந்த ரூபத்தில் உதவ போகிறாய்? 

சரி...யாரைப் பற்றியோ நான் ஏன் பேச வேண்டும்.

என்னைப் பற்றி பேசுகிறேன்.

இப்படி வந்து சிக்கிக் கொண்டேனே எனக்கு எந்த ரூபத்தில் வந்து உதவப் போகிறாய்?

இந்தக்  கேள்விகள் எல்லாம் என்னுள் எழச் செய்து என்னை விரக்தி அடையச் செய்யும் உன் உள்நோக்கம் தான் என்ன?

என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த நான் ஒரு கணம் ஏதோ ஒரு குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.

அந்த மதில் சுவரின் மூலையில் பழைய துணி மூட்டை போல் ஏதோ கிடக்க அதைச் சற்று உற்றுப் பார்த்தேன். 

அது  துணி மூட்டை அல்ல ஒரு மூதாட்டி.

பூச்சி... புழு... (சில நேரங்களில் பாம்புகள் கூட) என்று வரையறையே இல்லாமல் எல்லா ஊர்வனமும்... சரமாரியாக  வந்து போகும் இடத்தில் ஒரு கிழிந்த அழுக்குத்துணியை மட்டும் சுற்றிக்கொண்டு இங்கு வந்து அடைக்கலம் புகுந்து இருக்கிறாள்.

யாரைப் பெற்ற தாயோ.

ஆதரிக்க ஆளில்லாமல் இங்கே  அடைக்கலம் வந்து இருக்கிறார்.

அவர் ஏதோ  முனகுவது  போல் இருந்தது.

உற்றுக் கேட்டதில் என்னிடம் தான் பேசிக்கொண்டு இருக்கிறார் என்று தெரிந்தது.

என்னமா வேணும்?

பணிவுடன் நான். 

ஐயா சாப்பிட ஏதாவது இருந்தால் கொடுங்கய்யா

அந்த மூதாட்டியின் முனகலின் அர்த்தம் எனக்கு புரிந்தது. 

அத்தனை கேள்விகள் பொங்கி எழுந்த என் மனதில் இப்பொழுது ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் மிஞ்சி நின்றது.

இந்த  மழையில்.

இந்த இரவில்.

ஒரு இளைஞன் (நான் என்னையே சொல்லிக்கிட்டேன்) நானே இவ்வளவு  தூரம் நடந்து வந்து சாப்பிட சலித்துக் கொள்ளும்போது.

இந்த மூதாட்டி என்ன செய்வார்? என்ற ஒரே ஒரு கேள்வி. 

இந்தாங்கம்மா.. தோசை இருக்கு சாப்பிடுங்க.... தண்ணி பாட்டில் கூட இருக்கு.

நடுங்கி ஒடுங்கின அந்த மூதாட்டியின் கையில் ஓட்டலில் வாங்கிய பார்சலை குனிந்து கொடுத்தேன். 

கிருஷ்ணா  நல்லாருப்பா

என்னை ஆசிர்வதிப்பது போல் கையை உயர்த்தி தலையில் கைவைத்து கூறினாள். 

என்னை ஏன் பாட்டி கிருஷ்ணா என்று அழைத்தாள்.

அவள் கிருஷ்ணரிடத்தில் உணவை கேட்டிருப்பால் போலும். ஆதலால் யார் கொடுத்தாலும் கொடுப்பவன் கிருஷ்ணன் தான் என்ற நம்பிக்கை போலும் அவளுக்கு என்று என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டேன்.

இப்போது எனக்குள் திடீரென்று ஒரு பொறி தட்டியது.

எனக்கு எந்த ரூபத்தில் வந்து நீ உதவி செய்யப் போகிறாய் என்று  நான் உன்னை கேட்டேன். 

இப்பொழுது புரிகிறது.

உதவி தேவைப்பட்டது எனக்கல்ல.

அந்த மூதாட்டிக்கு என்று.

உதவியதும் நான் அல்ல.

 என் ரூபத்தில் நீ என்று. 

இப்போது கிருஷ்ணரை பார்க்கிறேன்.

இத் தருணத்தில் மூதாட்டிக்கு  நீ தான் நான்.

கம்பிக்குள் இருக்கிற நான்

கம்பிக்கு வெளிய இருக்கிற உன்னை வைத்து பாட்டிக்கு எப்படி உணவை வர வைத்தேன் பார்த்தாயா* என்று அவர் கேட்பது போல் இருந்தது..

யார் கடவுள் புரிகிறதா?

Thursday, April 13, 2023

காசியில் திதி கொடுப்பது எப்படி ?

காசியில் திதி கொடுப்பது எப்படி ?

முழுமையாக தந்திருகின்றேன் , பொறுமையாக படித்து பாருங்கள் .

அன்பின் உள்ளங்களே, உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வணக்கங்கள்.

நமது மூதாதையருக்கு தலைமுறை தாண்டி திதி கொடுக்காமல் அல்லது திதி கொடுக்க மறந்திருந்தால் வாழ்வில் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாமையான ஒரு சூழல் அதாவது காரணமின்றி தொடர் நஷ்டங்களும், கஷ்டங்களும் வந்து அதனை சரி செய்யமுடியாத நிலையும் ஏற்படும்.

இந்த நிலை அவரவர் வாழ்க்கைக்கு ஏற்றாற்போல் பல்வேறு, மாறுபட்ட, வெவ்வேறு விஷயங்களாக வெளிப்படும்.

இதனை பித்ரு தோஷம், பித்ரு சாந்தி என்று சொல்வார்கள்.

திதி என்பது மூதாதையரின் ஆன்மா சாந்தி அடைய  கொடுக்கபடுவது.

காசி யாத்திரை புறப்படும் நாளுக்கு பத்து நாட்கள் முன்னதாக ராமேஸ்வரம் செல்ல வேண்டும்.

அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் ஒரு ஐயரிடம் சென்று அவரிடம்,ஐயா, நான் காசிக்கு சென்று எனது மூதாதையருக்கு திதி கொடுக்கப் போகிறேன், எனக்கு மூதாதையரின் சாம்பல் வேண்டும் அதனால் இங்கு அவர்களுக்கு திதி கொடுத்து மண் வாங்க வந்துள்ளேன் என்று சொல்லி திதி தர வேண்டும்.

அவர்கள் சம்பிரதாயப்படி எல்லாம் செய்து அக்னி தீர்த்தக் கடலிலிருந்து மூன்று கை மண் எடுத்து அதனை ஒன்றாக்கி 

பிறகு அதனை மூன்று சம பாகமாக்கி ஒன்று மகாவிஷ்ணு, ஒன்று மகாசிவன், ஒன்று நமது மூதாதையர் என பிரித்து அதற்கு பூஜை செய்து

மகாவிஷ்ணு, சிவன் எனும் இரு பாகங்களை அங்கேயே அக்னி தீர்த்தத்திலேயே விட்டு விட்டு நமது மூதாதையர் பாகமான மணலை மட்டும் ஒரு துணியில் நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவேண்டும்.

இந்த மணலை வீட்டுக்கு கொண்டு சென்று காசிக்கு புறப்படும் நாள்வரை மலர் (பூ) வைத்து பூஜை செய்யவேண்டும்.

2. காசி யாத்திரை தொடங்கும் நாளில் நீங்கள் திதி கொடுக்க இருக்கும் நாளின் நட்சத்திரம், திதி, நாம் திதி கொடுக்க இருப்பவர் பெயர், அவருக்கு நாம் என்ன உறவு என்பது போன்ற விபரங்களுடன் இந்த மணல், தேன் 50Ml , பச்சரிசி மாவு 250g, எள் Rs.3.00 ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளவும்.

இப்போது நாம் திதி கொடுக்க தயார்.

முதலில் அலகாபாத் செல்ல வேண்டும் அங்குள்ள த்ரிவேணி சங்கமத்தில்தான் இந்த மணலை விடவேண்டும்.

திதி கொடுப்பவர் இங்கே முடியை எடுத்துக்கொள்ளவேண்டும்.

(மொட்டையடித்துக் கொள்ளவேண்டும்). 

பின்னர் குளித்து விபூதி சந்தனம் பூசிக்கொண்டு ஒரு படகில் ஏறி கங்கை,யமுனா,சரஸ்வதி சங்கம இடத்திற்கு சென்று அங்கு மிக ஆழமாக இருக்கும் அதனால் படகுகளை இணைத்துக்கட்டி ஒரு திறந்தவெளி பாத்ரூம் போல அமைத்திருப்பார்கள்.


Tuesday, April 11, 2023

இலவச வைத்தியம்

இதயத்தில் அடைப்பு உள்ளதா ?

இதோ உடனே செல்லுங்கள் திருவனந்தபுரம் கட்டாக்கடா அருகில் உள்ள பன்னியோடு டாக்டர். சுகுமாரன் வைத்தியர் அவர்கள் இலவசமாக வைத்தியம் செய்கிறார்.

நாடித் துடிப்பை பார்த்தே உங்கள் நோயை கண்டுபிடிக்கிறார்.

வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் வைத்தியம்.

இதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு மூன்று மாத மருந்துக்கு 2700 ரூபாய் ஆறு நாட்கள் மருந்து உட்கொண்டாலே ரத்த குழாய் அடைப்பு மாறுகிறது.

பணம் கொடுக்க வசதி இல்லாதவருக்கு இலவசம் 

தேவையுள்ளவர் இந்த வாய்ப்பை நழுவவிடாதீர் .

Sukumaran Vaidyans 

G A Pharmacy & Nursing Home. 

Neyyattinkara P.O.,

Thiruvananthapuram-695572, 

Kerala State.

Monday, April 10, 2023

சனி நினைச்சுட்டா

ஒருதடவை பார்வதி W/o சிவபெருமான்  அழகா  ஒரு மாளிகை  கட்டினாங்க.... அதோட கிரஹபிரவேசத்துக்கு ஒரு ஜோசியர்கிட்ட  நாள் குறிக்க சொன்னாங்க... அந்த மாளிகை கட்ட  கடக்கால் போட்ட நாளை  ஆராய்ஞ்ச அந்த ஜோசியர் சொன்னார்..." நீங்க  இந்த மாளிகைய கட்ட கடைக்கால் போட்ட  நேரம் சனி உச்சத்துல  இருந்த நேரம்.. அதனால  நீங்க என்னதான் அக்னி கம்பியும், அல்ட்ராடெக் சிமெண்டும் போட்டு கட்டி இருந்தாலும்  இந்த  மாளிகை நிலைக்காது... அதனால  நீங்களே  இடிச்சுடுங்க"

இத கேட்ட பார்வதி  செம்ம கடுப்ப்பாயிட்டாங்க.... லோகத்துக்கே பெரிய சாமியோட  பொண்டாட்டி நான்.... பிசாத்து சனி  என்னோட மாளிகைய  இடிக்கிறதா.... நெவெர்... அப்படின்னு  பொங்கல் வச்சாங்க....  

புருஷன  கூப்பிட்டு.... "யோவ்..... நீ  இப்போவே  அந்த சனிய பார்த்து..... இன்னமாதிரி  எம்பொண்டாட்டி  ஒரு  பங்களா  கட்டி இருக்கா.... அதுல  நீ என்னவோ வேலை காட்ட  போறியாம்... அதெல்லாம்  வேண்டாம்"ன்னு  சொல்லிட்டு  வா" ன்னாங்க..

உடனே  சிவன் சொன்னார்...  புரிஞ்சுக்கோ  பாரு..... நான் பெரிய சாமியா  இருந்தாலும்... மத்தவங்க வேலைல குறுக்கிட்றது இல்ல.... தவிர... சனி  எப்போவுமே  பெர்பெக்ட்....  நானே சொன்னா  கூட  அவன்  மாத்தமாட்டான் ன்னு  சொன்னார்...

புருஷன் சொன்னத   எந்த பொண்டாட்டிதான் கேட்டிருக்கா.... நம்ம சிவன் பொண்டாட்டி மட்டும் கேட்க??

ஆக.....  சிவன  பட்னி போட்டுட்டா.... வேற வழி இல்லாம  சனிய பார்க்கலாம்னு  கிளம்பிட்டார்... ஆனா, போறதுக்கு  முன்னாடி  பாருவ  கூப்பிட்டு..... "இதோ  பார்  பாரு....  உடனே  நீ ஒரு  பொக்லைன்  ரெடி பண்ணி  வை......நான் போய் சனிகிட்ட பேசி  பார்க்கிறேன்.... அவன் ஒத்துகிட்டா  ஒன்னும் பிரச்சினை  இல்ல... இன்கேஸ்  அவன் ஒத்துக்கலன்னா.... நான்  அங்க  இருந்து  என்னோட  உடுக்கைய  அடிக்கிறேன்.....   நீ உடனே  பொக்லைன்  வச்சு  மாளிகைய  இடிச்சுடு.... யாரும்  கேட்டா, எனக்கு டிசைன் புடிக்கல.... வேற  கட்ட போறேன்னு  கெத்தா  சொல்லிடு..."ன்னு சொன்னார்...

சரின்னு  பார்வதியும் ஒத்துகிட்டாங்க....

சிவன் சனிகிட்ட  போய் " உன்கிட்ட  கேக்க  ஒரு  மாதிரியாத்தான்  இருக்கு.... ஆனா  வேற  வழி  இல்ல....... இந்த பார்வதி  பெரிய  பிரச்சினை பண்றா... நாலுநாளா   உலை கூட  வைக்கல.....  உன்னால  அந்த  பில்டிங்க்கு  ஏதும் பிரச்சினை வராம  பார்த்துக்க...." என்றார்...

உடனே  சனி...."அய்யனே... இதுக்கு  நீங்க  நேர்ல  வரணுமா... ஒரு போன் பண்ணி  இருக்கலாமே..."ன்னு சொல்லிட்டு.....  "நீங்களே  சொன்னப்புறம்  நான் எப்படிய்யா  மறுக்க  முடியும்....  சரி.... நான் ஒன்னும்  பண்ணல.... ஆனா  எனக்கொரு  ஆசை.... அத  நீங்கதான்  நிறைவேத்தனும்.."ன்னு கேட்டார்...

சனி  ஒத்துகிட்ட  சந்தோஷத்துல  சிவனும்..."சொல்லு.. சொல்லு.... நம்ம  புள்ள  நீ.... உனக்கு  செய்யாம  வேற  யாருக்கு  செய்ய போறேன்" ன்னு வாக்கு கொடுத்துட்டார்...

"உங்க  உக்கிர தாண்டவத்த  பார்த்து  ரொம்ப  காலமாச்சு.... எனக்காக  ஒருதடவை  ஆடிக்காட்ட  முடியுமா "- சனி

"அதுக்கென்ன.... பேஷா  ஆடிடலாம்" ன்னு  சிவன்  ஆட  ஆரம்பிச்சார்.... சிவன்  ஆட  ஆட... உடுக்கை  தன்னால  குலுங்கியது.....  உடுக்கை சத்தம் கேட்டதும்... பார்வதி... "ஆஹா.... இந்த  சனிப்பய  ஒத்துக்கல  போல..... எங்கயாச்சும்  சிக்காமையா  போய்டுவான்....  அப்போ  இருக்கு  அவனுக்கு..." என்று  கருவிக்கொண்டே, பொக்லைன் டிரைவர  கூப்பிட்டு  நீ உடனே  அந்த  பில்டிங்க  உடைச்சுடு...ன்னு  ஆர்டர்  போட்டாங்க...

சிவன்  திரும்பி வந்து  பார்த்தா... பில்டிங்  தரைமட்டமா  கெடக்கு..... "ஏன்  பாரு  ... நான் சொன்னதும் தான்  சனி  ஒத்துகிட்டானே.... பின்ன  ஏன்  இடிச்ச...."

"நீங்கதானே  சொன்னீங்க... உடுக்கை சத்தம் கேட்டா  இடிக்க சொல்லி.."ன்னா  பாரு...

ஆக... சனி  நினைச்சுட்டா  யார் தடுத்தாலும்  அவன் நினைச்சத  சாதிச்சுடுவான்...

நம்மள ரொம்ப சோதிக்காம எதார்த்த நடையில் எழுதி இருந்ததால் என்னை கவர்ந்த நட்பின் பதிவு.

Thursday, April 06, 2023

கடுக்காய்

கடுக்காய் தின்றால் மிடுக்காய் வாழலாம்!!!!

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! – தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க.. (நம்புங்க சார்)

சித்த‍ மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் பக்க‍ விளைவுகளோ அல்ல‍து பின் விளைவுகளோ கிடை யாது. அந்த வரிசையில் 26 (இருபத்தி ஆறு) விதமான நோய்களுக்கும் ஒரே மருந்தாக தீர்வளிக்கும் வல்ல‍மை கொண்ட ஓர் அதிசய மூலிகைத்தான் இங்கு நாம் பார்க்க‍ விருக்கிறோம்.

இம்மூலிகை காயால் குணமாகும் நோய்களை முதலில் பார்ப்போம்.

1. கண் பார்வைக் கோளாறுகள்

2. காது கேளாமை

3. சுவையின்மை

4. பித்த நோய்கள்

5. வாய்ப்புண்

6. நாக்குப்புண்

7. மூக்குப்புண்

8. தொண்டைப்புண்

9. இரைப்பைப்புண்

10. குடற்புண்

11. ஆசனப்புண்

12. அக்கி, தேமல், படை

13. பிற தோல் நோய்கள்

14. உடல் உஷ்ணம்

15. வெள்ளைப்படுதல்

16. மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்

17. மூத்திர எரிச்சல், கல்லடைப்பு

18. சதையடைப்பு, நீரடைப்பு

19. பாத எரிச்சல், மூல எரிச்சல்

20. உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், பௌத்திரக் கட்டி

21. ரத்தபேதி

22. சர்க்கரை நோய், இதய நோய்

23. மூட்டு வலி, உடல் பலவீனம்

24. உடல் பருமன்

25. ரத்தக் கோளாறுகள்

26. ஆண்களின் உயிரணுக்களின் குறைபாடுகள்

மேற்கண்ட 26 வகையான நோய்களுக்கும் ஒரே மருந்து சித்த‍ மருத்துவத்தில் மட்டுமே உண்டு. இது ரொம்ப எளிமைதானுங்க. 

நாட்டு மருந்து கடைகளில் கடுக்காயை வாங்கி அதனுள் இருக்கும் பருப்பை நீக்கிவிட்டு, அதன்பிறகு அதனை நன்றாக தூள் தூளாக அரைத்து வைத்துக் கொண்டு, தினமும் ஒரு ஸ்பூன் அளவு வீதம் இரவு உணவுக்குப் பின் தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வர, மேற்கண்ட 26நோய்களில் இருந்து முற்றிலும் விடுபட் டு, நோயில்லா பெரு வாழ்வுடன் இளமையாகவும் வாழ்ந்து வாழ்க்கையை சுகமாக அனுபவியுங்கள்.

ஆசை கடிதம்

ஒரு அன்பு கணவனின் ஆசை கடிதம்

28இல் நுழைந்தாய்..

68இல் பிரிந்தாய். 

40வருட தாம்பத்யம். அதிக கொஞ்சல்கள், கம்மி சண்டைகள்..

அணுசரித்துப் போவதில் மன்னி நீ.. என்னையும் தான் இருக்கச் சொன்னாய்..

நீ இருந்தவரையில் அப்படி நான் இல்லை.. பஞ்சாயத்து பண்ண நீ இருந்தாய். 

நீ இல்லாத இப்போது அனுசரித்து மட்டும் தான் போக வேண்டி இருக்கிறது. 

Kitchenஇல் நடக்கும் யுத்தம்..

பாத்திரம் தேய்க்க big boss போல shift..

காபி சூடாக இல்லை என்று எத்தனை தடவை கோபப்பட்டு இருப்பேன்

இப்போது பிரச்சினைகள் எப்போதும் சூடாக இருப்பதால் காணாமல் போய் விட்டது காஃபி

நம் ரூமில் நடுஇரவில்  A/c ஆஃப் ஆகிவிடுகிறது. 

Hallஇல் தூங்கினால் என்ன என்று ஜாடை மாடையாக உபதேசம்.  

அனாயாசமாக 25 பேருக்கு சமைப்பாயே. அதில் சுவையாய் மணமும் இருக்கும் உன் மனமும் இருக்கும்

இன்று எனக்கு google சமையல் பிடிக்கவே இல்லை. 

ஓய்வெடுக்க கூட விடாமல் தேவையே இல்லாமல் என்னை பேச சொல்லி தூண்டி நச்சரிப்பாய்..

இன்று தேவைக்காவது ஏதேனும் பேச நினைத்தாலும். கேட்பதற்கு எந்த காதுகளும் ஓய்வில் இல்லை.

ஒரே ஒரு நாள் எனக்காக இறங்கி வருவாயா நீ இதமாக உன் கை விரல்களை கோர்த்து கொண்டு காதலோடு சில மணி நேரம் காலாற நடக்க ஆசை

எனக்குப் பிடித்ததில் நீ செய்யாமல் போனது ஓன்று தான்.

கண்தானம். 

என்னையும் தடுத்தாய்..

நீ சொன்ன காரணம் மண்ணுலகில் கண்தானம் செய்துவிட்டால் விண்ணுலகிற்கு நீங்கள் வரும்போது எப்படி அடையாளம் கண்டுபிடிப்பேன் என்று கூறினாயே..

உண்மைதான்.

முன்போல் இல்லை உடல்நிலை. எனக்கொரு இடம் முன்பதிவு செய்.. சந்திப்போம் விரைவில்.....

மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம்

நமக்கே நமக்கான

வாழ்க்கையை 

நமக்காக நாம் வாழ

Wednesday, March 29, 2023

இந்து தர்ம சாஸ்திரம்

இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்!!!

தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.

ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.

சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.

அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.

பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.

குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது. துணியில்லாமல் குளிக்கக் கூடாது. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.

கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.

நெருப்பை வாயால் ஊதக் கூடாது.

கிழக்கு  முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.

எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.

திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.

சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.

சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.

கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.

இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.

சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.

சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

(அறிவுரை) மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.

குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.

தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.

இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு; இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்; இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்; இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.

வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.

மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.

வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.

ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.

(அறிவுரை) தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.

பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.

பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

(அறிவுரை) அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.

ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.

பிணப்பு கை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.

(அறிவுரை) பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.

பசு மாட்டை, "கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.

தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.

பகலில் உறங்குவது, தாம்பத்யம் கொள்வது கூடாது.

தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.

அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.

வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.

நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்

Friday, March 24, 2023

கோத்ரம்

நீங்கள் என்ன கோத்ரம்? ​

நாம்  அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வார்த்தையை சரியாக புரிந்து கொள்வதில்லை. 

சடங்குகளில், ஆலயங்களில் சங்கல்பம் செய்து கொள்ளும்போது  கோத்திரம் என்று  ஒரு ரிஷியின் பெயரை சொல்கிறோம்.   

கோத்ரம் என்னால் வழி வந்தவர்கள், வம்சாவழி என்று ஒரு அடையாளம்.  

முக்கியமாக  ஏழு ரிஷிகள் கூறப்பட்டுள்ளனர். 

இவர்களைக் கோத்திர பிரவர்த்தகர்கள்

​அபிவாதயே  என்று  பெரியோரிடம் நம்மை அறிமுகப்படுத்தி கொள்ளும் போது ப்ரவரம் என்று இதற்கு பெயர், எந்த ரிஷி வம்சாவழி, என்ன பெயர், எந்த ஆசார்யன், எந்த வேதத்தை பின்பற்றுகிறோம் என்றெல்லாம் சொல்லி நமஸ்கரிப்பது.

முக்கியமான அந்த 7 ரிஷிகள்  

1 . பிருகு 

2. அங்க்ரஸர் 

3. அத்ரி 

4. விச்வாமித்ரர் 

5. வஸிஷ்டர் 

6. கச்யபர் 

7. அகஸ்த்யர்

கோத்ரம் பிராமணர்களுக்கு மட்டும் அல்ல. எல்லோருக்குமே உண்டு.  

அதிகமாக பிராமணர்கள் உபயோகிப்பது அவ்வளவு தான். 

நாம் எந்த ரிஷி வம்சம் என அறியாதவர்கள் பொதுவாக சிவ ​  கோத்திரம், விஷ்ணு கோத்திரம் என்பார்கள். ​  தாங்கள் ​ ​ எந்த ​  கோத்திரத்தைச் சார்ந்தவர்கள் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆண்களுக்கு மட்டும்தான் கோத்திரம் என்பது இல்லை. பெண்களும் ​  தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் திருமணம் ​ ​ ஆனபின்  கணவன் கோத்ரத்தை சேர்ந்தவர்கள்.  

ஒரே கோத்ரம் கொண்டவர்கள் அனைவரும் ச-கோத்ரர்கள். சகோதரர்கள்.  

ஒரு ஆண் மற்றொரு குடும்பத்திற்குத் தத்து (ஸ்வீகாரம்) அளிக்கப்பட்டுவிட்டால் அந்த வம்சத்து வாரிசாக மாறிடுவதால் ​  பிறந்த கோத்திரம் மாறிவிடும்.

ஆண் பெண்களுக்குத் திருமணம் நிச்சயிக்கப்படும்போது முதலில் கோத்திரத்தின் அடிப்படையிலேயே தான் செய்யப்படுகிறது. 

ஒரே கோத்திரத்தைச் சார்ந்த ஆணும் பெண்ணும் உடன்பிறந்தவர்கள் என்று கருதப்படுவதால் இவர்களுக்குத் திருமணம் செய்யப்படுவதில்லை. ஆணின் கோத்திரத்திற்காக அல்லது பெண்ணின் கோத்திரத்திற்காக அன்னியமான கோத்திரத்தில்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

ஆண் தன்னுடைய கோத்திரத்தைத் தெரிந்துகொள்வதுடன் தன் மனைவியின் தந்தை கோத்திரத்தையும் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கோத்திரம் (Gotra) என்பது குடும்பப் பெயர் போன்றது. வேதகால ரிஷிகளின் வழிவந்தமையால், அவர்களின் பெயர்களைக் கொண்டே கோத்திரங்களின் பெயர்களும் அமைந்த்துள்ளது. ஜாபாலி கோத்திரம், சௌனக கோத்திரம், பாரத்துவாஜ கோத்திரம், மார்க்கண்டேய கோத்திரம் போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும் .

கோத்திரங்கள் பஞ்ச கம்ஸலர்கள் எனவும் கம்மாளர்கள் எனவும் விஸ்வகர்ம பெருமக்கள் எனவும் அழைக்கப்படுகின்ற குலத்தினருக்கு ஐந்துவித கோத்திரங்கள் (பூர்வீக ரிஷிகள்) உள்ளன.

தங்கள் செய்யும் தொழிலைப்பொருத்து தங்கள் கோத்திரத்தை அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

இரும்பு , மரம், கல், உலோகம், தங்கம் முதலிய பொருட்களைக் கொண்டு படைக்கும் தொழிலைச் செய்யும் கைவினைஞர்கள் “விஸ்வகர்மா” என பொதுப்பெயர் கொண்டுள்ளனர்.

1) இரும்பு தொடர்பான வேலையில் ஈடுபடும் கலைஞர்கள் – சானக ரிஷி கோத்திரம்

2) மர வேலைக் கலைஞர்கள் – ஸநாதன ரிஷி கோத்திரம்

3) உலோகத்தில் தேர்ந்த கலைஞர்களுக்கு – அபுவனஸ ரிஷி கோத்திரம்

4) கல்லில் கலைவண்ணம் காண்போருக்கு – ப்ரத்னஸ ரிஷி கோத்திரம்

5) பொன்னில் எண்ணத்தைப் பொறிப்போருக்கு – ஸூபர்ணஸ ரிஷி கோத்திரம்

1)தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் விஸ்வகர்மாக்கள் வாழ்கின்றார்கள், தச்சர், பொற்கொல்லர், ஆச்சாரி, விஸ்வபிராமணர், சில்பி, கன்னார், தட்டார், கம்மாளர் என பலவகையாக அழைக்கப்படுகின்றனர், பெரும்பான்மையோர் தமிழும், சிலர் தெலுங்கையும் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.

2)விஸ்வபிராமணர்கள் என்றும், கம்ஸலர்கள் என்றும் ஆந்திராவில் பொதுவாய் அழைக்கப்படும் இவர்கள் கம்சாலி, முசாரி, வத்ராங்கி, காசி, சில்பி என உட்பிரிவுகள் பலவற்றைக் கொண்டுள்ளனர்.

3)கேரள தேசத்தில் ஆச்சாரிகள், விஸ்வ பிராமணர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

4)கர்நாடக மாநிலத்தில் விஸ்வகர்மா என பொதுப் பெயரினையும், குசாலர், சிவாச்சார், சத்தராதி என உட்பிரிவுகளையும் கொண்ட இவர்களின் சிலர் அசைவ உணவு வகைகளை உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். வட கர்நாடகத்தில் உள்ளவர்கள் சிலர் ‘லிங்காயத்’ என்னும் வழிபாட்டு முறையைப் பின்பற்றி வருகிறார்கள்.

5)கோவாவில் விஸ்வகர்மாக்கள் ‘சாரி’கள் என அழைக்கப்படுகிறார்கள், மனு மய பிராமணர்கள் எனவும் இவர்கள் அறியப்படுகிறார்கள், போர்ச்சுகீசியர்களின் காலத்தில் இவ்வினத்தினர் சிலர் கிறிஸ்தவ மதத்தினைத் தழுவியுள்ளனர்.

6) ராஜஸ்தானத்தில் ஜங்கித் பிராமணர்கள் என அழைக்கப்படும் இவர்கள் இன்றளவும் இறைவனின் உருவங்களையும் ரதங்களையும் வடிவமைத்துப் புகழ் சேர்க்கிறார்கள். பெரும்பாலும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வாழும் இவர்கள் உயர் பொருளாதார நிலை முதல் மிகவும் ஏழ்மையான நிலைவரை தங்களது வாழ்க்கை நிலையைக் கொண்டுள்ளார்கள்..

தற்போது தொழிற்புரட்சி மற்றும் தானியங்கி இயந்திரப்புரட்சி ஆகியவற்றின் ஆதிக்கத்தினால் வேலைவாய்ப்பை இழக்கும் இவர்கள் தங்களது குலத்தொழில்களை விடுத்து மற்ற வேலைகளுக்கும் செல்கின்றனர்.

கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு ​   என்ற வாசகம் தெரியுமல்லவா. அதன் அர்த்தம் இதோ கீழே.

விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே. ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது.

ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே. ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள்.

பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y க்ரோமோசொம்கள் மட்டுமே.

இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது. ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை

ஏனெனில் அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக.முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது. .

இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை.

பெண் எப்போதும் பெண்; 100% பெண். ஆனால் ஆணோ 50% பெண் எனலாம்.

மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். ஆகவே தான் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடரக் கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப் படுகிறது.

பெண்கள் மட்டுமே பிறக்கும் குடும்பத்தில் அந்தத் தந்தையுடன் அவர் கோத்திரம் முடிவடையும். இதனால் தான் கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு என்று சொல்லி இருக்கிறார்கள்.

Saturday, March 11, 2023

Free treatment - Perambalur

ஸ்டார் ஹோட்டல் போல ஒரு மருத்துவமனை பெரம்பலூரில்( சிறுவாச்சூர் ) உள்ளது ! அது தனலட்சுமி சீனிவாசன்  Medical College மருத்துவமனை .

ஓர் உடல் பிரச்சனை காரணமாக, நண்பருடன்  ஒருவர் சென்று வந்தார்! உள்ளே நுழைந்த உடனே, அட்மிஷன் முதல் இதற்கான சிறப்பு டாக்டர் வரை அழைத்து செல்ல,இருவர் staff  இருக்கிறார்கள் .

ஒரு, ஒரு பிரிவுக்கும் குறைந்தது 4 டாக்டர்கள். முதல் தர treatment என்றால் என்ன என்று இங்கு தெரிந்து கொள்ளலாம் !

அவருக்கு  மிகவும் ஆச்சர்யம் என்னவென்றால்..

1. டாக்டர் பீஸ் கிடையாது.

2.அட்மிஷன் பணம் கிடையாது .

3.அட்மிஷன் செய்த பின்னர், வீடு செல்லும் வரை நோயாளிக்கு உணவு இலவசம். ஏனோ தானோ உணவு இல்லை ருசியான உணவு.

4.ஒரு x-ray 50 ரூபாய்,ஒரு Digital ECG  50 ரூபாய்,வீடியோ எண்டோஸ்கோப்பி 2000ரூபாய்.ஆஞ்சியோ கிராம் 3,500 மட்டுமே !

5.ஆபரேஷன் கட்டணம் கிடையாது. 

நமக்கான ஒரேயொரு செலவு, இதற்கான மருந்துகளை வாங்கி கொடுப்பது தான். அதிலும்  தள்ளுபடி உண்டு !

மிகவும் சுத்தமான மருத்துவமனை.  அருமையான கவனிப்பு. 

என் நண்பருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை தேவை என்று சொன்னார்கள். 4 நாட்கள் இருக்க வேண்டும். Appolloவில் ஒன்றரை லட்சம். போரூர் ராமச்சந்திராவில் 84,000  மற்றொரு சிறிய மருத்துவமனையில் 45,000. ஆனால் இங்கு ஆன செலவு 15000 மட்டுமே.அதுவும் Scan,ECG ,மருந்துகள் என சகலமும் சேர்த்து.

பலருக்கும் தெரியப்படுத்துங்கள். 

தனலட்சுமி சீனிவாசன்  மருத்துவமனை -பெரம்பலூர் அருகில் (திருச்சி to சென்னை நெடுஞ்சாலை NH45 யில் உள்ளது )      -பெரம்பலூரில் இருந்து hospital செல்ல, காலை முதல் இரவு வரை, இலவச பஸ் வசதி உண்டு !அரியலூரில் இருந்து, தினமும் காலை 9 மணிக்கு பஸ் புறப்படுகிறது !( அரியலூரில் இருந்து hospital 30 km- பல்வேறு திட்டங்களின் அடிப்படையில், மக்களுக்கு, முக்கிய ஆபரேஷன்கள், முற்றிலும் இலவசமாக செய்கிறார்கள்  

Ph: 7871807870                    

Tuesday, February 14, 2023

புதிய வழி கைலாஷ் மானசரோவர் யாத்திரை

 ஹிந்துக்களின் காதில் தேன் பாயும் செய்தி...

இந்நாள் வரை ஸ்ரீ கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பயணிகள்.. பட்ட கஷ்டங்கள் முடிவிற்கு வந்து விட்டது  ஸ்ரீ மோதிஜி ஆட்சியில்...

1. பயண பாதைகள்....

நேபாள் வழி.....

சிக்கிம் வழி......

உத்தரகண்ட்  வழி..... மிகவும் கடினமானது.

இந்த 3 பாதைகளும் முற்றுப்புள்ளி ஆக உள்ளது.

புதிய பாதை......

தில்லி முதல் லிபுலேக்.. சல்லுனு.. போய்விடலாம்... ஜஸ்ட் 750 கிலோமீட்டர் ஒன்லி... ரோடு சாதாரணமானது இல்லீங்கோவ்... உலகத்தரம் வாய்ந்த இரு வழிப்பாதை ஆகும்..

வழியெங்கும் இந்திய இராணுவத்தின் கழுகு பார்வை கண்காணிப்பு... அனைத்து வகை உணவு வகைகள் கிடைக்கும்  வசதி...

வெறும் ஒன்றை நாள் பயணம்.....

அதுவும் அலுங்கள் குலுங்கள் இல்லாமல்...

வாவ்......

15 நாட்கள்.......பயணம்  முடிவு

10 நாட்கள்.... பயணம் முடிவு....

5 நாட்கள்... பயணம்   முடிவு.......

இனி வெறும்  மூன்றே நாட்கள்...

இரண்டு......

தில்லி வெளியுறவு அமைச்சகம்  சென்று  சிறப்பு உத்திரவு பெற  வேண்டும்...இதற்கு ஒரு நாள் முழுவதும் செலவாகும்....

மூன்று.....

மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்பு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ பரிசோதனை..... இதற்கு 1 அல்லது 2 நாட்கள்  செலவு...

நான்கு.....

பின்னர் இந்தோ திபெத் எல்லை காவல் படை சிறப்பு மருத்துவர்  கடைசி மருத்துவ பரிசோதனை... (இதில் பலர் தோல்வி அடைவர் )...... இதற்கு  1 அல்லது 3 நாட்கள் செலவு....

தவிர யாத்திரை செல்லும் பயணிகள் பல இடங்களில் தங்குவர்....அதுவும் இடம் / மொழி  தெரியாமல்  படும் துயரங்கள்  பலப்பல....

மேலும் மேற் கூறிய சிறப்பு உத்திரவு பெற, மருத்துவ பரிசோதனை செய்ய போகும் இடம் அறியாமல் திண்டாடுவர் பலர்....

இது எல்லாவற்றிற்கும் இன்று முடிவு கட்டுகிறார் நமது பிரதமர் ஸ்ரீ  மோதிஜியும்.... வருங்கால பிரதமர்  ஸ்ரீ. யோகிஜியும்.....

ஆம் யாத்ரீகர்களே.....

இன்று மாலை  தில்லி எல்லையில் அமைந்துள்ள காஜியாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள #கைலாஷ் மானசரோவர் பவன்  இன்று மாலை 5 மணிக்கு நாட்டிற்கு அர்பணிக்கிறார்.

ஆம் நண்பர்களே.... இந்த பவனின் சிறப்பம்சங்கள்.....

14,860 சதுர அடியில்......

70 கோடி ரூபாய் செலவில் நிர்மாணம்...

நான்கு மாடி கட்டிடம்...

4 நபர்கள் தங்கும் வகையில்  46 அறைகள்...

2 நபர்கள் தங்கும் வகையில்  48 அறைகள்...

மொத்தம்  280 நபர்கள்  ஒரே சமயத்தில்  தங்கலாம்...

அறைகள் அனைத்தும் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது...

மேலும் தங்கும் நாட்கள் இலவச சிறப்பு உணவு  அல்லது மிகவும் மலிவு விலையில் சிறப்பு உணவு..

இது என்ன பிரமாதம் என்று  எண்ணலாம்.....

இங்கு தான் மோதி /யோகி நிற்கிறார்கள்...

1 வெளியுறவு துறை அமைச்சக சிறப்பு உத்தரவு....

2. மருத்துவ சிறப்பு பரிசோதனை...

3. கடைசி இராணுவ மருத்துவ பரிசோதனை...

அனைத்துமே இந்த பவனிலேயே பெறலாம்..

எதற்கும் வெளியே செல்ல வேண்டாம்..

செலவும்  50 சதவீதம்  குறைய வாய்ப்பு.

இன்னும் என்ன வேணும்...... ஹிந்துக்களே...

Monday, January 02, 2023

இலவச உணவு

பிராமணர்களுக்கு நற்செய்தி திருப்பதி மகா புண்யக்ஷேத்திரத்தில், திருப்பதி ஹோட்டல்களில் சாப்பிடாத பிராமணர்களுக்கு, பிராமணர்களுக்கென தனி இலவச உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கீழ்க்கண்ட எண்ணிற்கு அழைத்து, இரவு உணவிற்கு எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை காலை 9 மணிக்குள் தெரிவிக்க வேண்டும். தினமும் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அன்னதானம் நடைபெறும். ஸ்ரீ பத்மாவதி வெங்கடேஸ்வரஸ்வாமியின் பக்த பிராமண உறவினர் ஸ்ரீமதி ஷியாமளா சாயி நித்யா அன்னபிரசாத விநியோக நிலையம், திருச்சானூர் சாலையில் பத்மாவதி பூரணஅள்ளி பஞ்சாயத்து அலுவலகத்திலிருந்து முதல் வலதுபுறம் இடதுபுறம் திரும்பியதும் ஸ்ரீ ஷ்யாமளா சாய் நித்ய பிரசாத விநியோக மையம்மொபைல்:98480 43689 இந்த செய்தியை அனைவரும் பிராமின் குழுக்களுக்கு அனுப்ப வேண்டுகிறோம்.