Pages

Friday, March 20, 2026

தஞ்சாவூர் சங்கரன்

கும்பகோணத்தில் வசித்து வந்த திரு சதாசிவம் ஒவ்வொருஅனுஷ தினத்தன்றும் காஞ்சியில் பெரியவாள் இருக்கிறாரா என்று உறுதி செய்து கொண்டு தன் பயணத்தை துவங்கி விடுவார்.வேறு எங்கேனும் வெளியூர்களில் முகாமிட்டிருந்தால் அப்போது பயணிக்கமாட்டார்.அப்படி ஒரு அனுஷதினத்துக்கு முதல் நாள் மாலை.....

பழங்கள்.கல்கண்டு வாங்கப் போனவருக்கு ஒரு சின்ன அதிர்ச்சி.ஒரு கடையும் காணவில்லை இவரின் முகத்தைப் பார்த்த கீரை வியாபாரி" என்ன சாமீ பையும் கையுமா கடைக்குப் பொறப்படறயா..மெட்ராஸ்ல ஏதோ அரசியல் பிரச்னையாம்.ஒரு கட்சிக்காரங்க கூட்டமாக திரண்டு வந்து எல்லாக் கடைகளையும் மூடச் சொல்லி உத்தரவு போட்டுட்டு போறாங்க. "அட ஈஸ்வரா வெளியூருக்கு பஸ்ஸெல்லாம் போறதோ!" என்று ஒரு கேள்வி போட்டார். கடைகளயே பூட்ட வெச்சவங்க பஸ்ஸுகளை போக விடுவாங்களா.. பிறகு மனைவியிடம் "என்ன ஜானகி இப்படி ஆயிடுத்து? நாளைய அனுஷத்திற்கு காஞ்சிபுரம் போக முடியமானு தெரியலயே..ஏன் இந்த சோதனை? என்று கலங்கியவர் மகா ஸ்வாமிகளை மனதுக்குள் நினைத்துப் பிரார்த்தித்துக் கொண்டார். ப்ராப்தம் இருந்தா அங்கே இருப்போம் என்று சொல்லிவிட்டு வாசலில் இரு பக்கத்தையும் பார்வையால் துழாவிக் கொண்டிருந்தார். வாசலில் நின்று கொண்டிருந்த சதாசிவத்தின் அருகே வெள்ளை நிற அம்பாஸடர் கார் ஒன்று வேகமாக வந்து நின்றது.. பஞ்சகச்சம் அணிந்து தும்பைப்பூ மாதிரியான வெள்ளை நிறத்தில் சட்டையுடன் விபூதி தரித்த ஒருவர்காரிலிருந்து கீழே இறங்கினார்.

இறங்கியதைப் பார்த்ததும் சதாசிவ தம்பதிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. "சார் நமஸ்காரம்...எம்பேரு சங்கரன். உள்ளே இருக்கிறது என் மனைவி. தஞ்சாவூர்லேருந்து வந்திண்டிருக்கோம். மனைவிக்கு திடீர்னு தலைவலி. அவளுக்கு நல்ல டிகிரி காபி சாப்பிட்டா சரியாயிடும். இன்னிக்குன்னு பார்த்தா ஓட்டல் எதுவும் இல்லை.உங்களுக்கு சிரமம் இல்லேன்னா இரண்டு பேருக்கும் ஸ்ட்ராங்கா காபி போட்டு கொடுக்க முடியுமா?


"தாராளமா..உள்ளே வாங்கோ.காபி என்ன..டிபன் பண்ணணும்னா கூட பண்ணித் தர்றேன்" என்று கனிவாகச் சொன்னார். மணக்கும் காபியைக் குடித்து விட்டு வாயார வாழ்த்தினார்கள் அப்போது சதாசிவம்,"இப்போது எதுவரைக்கும் பயணப் பட்டுண்டுண்டிருக்கேள்?" ஒருவேளை சென்னை என்று சொன்னால் தொற்றிக்கொண்டு போகலாமே என்ற ஒரு நப்பாசை. "நான் காஞ்சிபுரத்துல பெரியவாளைத் தரிசிக்கப் போயிண்டிருக்கேன். ஆறு மாசம் ஆஸ்திரேலியாவில் இருந்துவிட்டு போனவாரம்தான் தஞ்சாவூர் வந்தேன். நாளைக்கு அனுஷமா இருக்கு.நீங்களும் வரேளா? என்று அழைப்பு விடுத்தபோது சதாசிவம் தம்பதிகளுக்குஅடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நள்ளிரவு வேளையில் கார் வந்து நிற்பதைப் பார்த்து ஓடோடி வந்தார் மடத்து வாட்ச்மேன். சங்கரன் உடனே அவர்களைப் பார்த்து "உங்களை மடத்து வாசலில் இறக்கி விடுவதற்காகத்தான் இங்கே வந்தேன். நண்பர் பக்கத்துல இருக்கார். அவா கிரஹத்துல தங்கிட்டு நாளைக்குக் காத்தால உங்களை வந்து பார்க்கிறேன். என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சங்கரன். காலை மடத்துக்கு அருகே உள்ள கடைகளில் வாங்கிய பழங்கள், கல்கண்டு, புஷ்பங்கள் போன்றவற்றை ஒரு மூங்கில் தட்டில் எடுத்துக்கொண்டு பஞ்சகச்சம் மற்றும் மடிசார் உடையுடன் பெரியவா தரிசனத்துக்காக காத்துக் கொண்டிருந்தனர் சதாசிவம் தம்பதிகள். சங்கரனை இடை இடையே தேடினார் நன்றி சொல்ல வேண்டும் என்ற அவாவில். ஸ்ரீமடத்தின் உதவியாளர் ஒருவர், சதாசிவத்தின் தோளைத் தொட்டு, 

"மாமா...கூப்பிட்டுண்டே இருக்கேன்..அப்படி யாரைத் தேடறேள்? பெரியவா உங்களைக் கூப்பிடறா....வாங்கோ,.எம்பின்னால்" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்தார். பின் தொடர்ந்தனர் தம்பதிகள் ."வாப்பா சதாசிவம்.. கும்பகோணத்துல உனக்கு பழம் ஏதும் கிடைக்கலையோ? அதான் மடத்து வாசல்லயே வாங்கிண்டு வந்திருக்கே போலிருக்கு" என்று கேட்டபோது ஆடித்தான் போனார் சதாசிவம்."ஆமாம் பெரியவா.. அங்கே ஏதோ பிரச்னை.கடைகளும் இல்லை..பஸ்ஸும் இல்லை..." "அதான் சொகுசா ஒரு கார்ல நன்னா தூங்கிண்டே மடத்துக்கு வந்து சேர்ந்துட்டியே...அப்புறம் என்ன...இந்தா" என்று பிரசாதத்தை நீட்டவும் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் பிரசாதத்தை வாங்கிக்கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டார்.பிறகு "சங்கரன்னு ஒருத்தர்..அவர்தான் தன்னோட கார்ல என்னைக் கூட்டிண்டு வந்து நேத்து ராத்திரி இறக்கி விட்டுட்டுப் போனார்.அவருக்குத்தான் நன்றி சொல்லணும்" என்றார் குழைவாக."மடத்துக்கு வரணும்னு நினைச்சே...வந்துட்டே......இனிமே சங்கரனாவது,கிங்கரனாவது"என்று பெரும்குரல் எடுத்து, சிரிக்க ஆரம்பித்தது அந்த பரப்பிரம்மம். சதாசிவத்துக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.ஆனால் புரியாதது மாதிரியும் இருந்தது. "பஸ் எல்லாம் ஓட ஆரம்பிச்சுடத்து...மடத்துல போஜனம் பண்ணிட்டு,ஜாக்கிரதையா ஊர் போயிட்டு வா"என்று ஆசிர்வதித்தார் பெரியவா.

நடந்து முடிந்த காட்சிகளின் பிரமிப்பில் இருந்து மீள முடியாமல் வெளியே வந்த சதாசிவம்,நேற்று நள்ளிரவு தான் மடத்து வாசலில் இறங்கியபோது பணியில் இருந்த வாட்ச்மேனைக் கண்டு அருகில் அழைத்து ""ஏம்ப்பா..நேத்து ராத்திரி பன்னிரண்டு மணிக்கு ஒரு வெள்ளை அம்பாஸடர் கார்ல நான் மடத்து வாசல்ல இறங்கினபோது ஒரு பெரியவர் வண்டி ஓட்டிண்டு வந்தாரே ...அவர் திரும்ப இன்னிக்கு வந்தாரா?" என்று கேட்டார்.

"என்ன சாமீ.....நேத்து ராத்திரியா? எனக்கு டூட்டியே இல்லியே சாமீ...கலையில்தானே நான் வந்திருக்கேன்" சதாசிவம் மீண்டும் அதிர்ந்தார்,"இல்லேப்பா....நேத்து ராத்திரி உன்னைப் பார்த்தேனே....இதே இடத்து வாசல்ல..." என்றார்.புருவம் உயர்த்தி, "என்ன சாமீ நீங்க...சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்றீங்க.. நேத்திக்கு ராத்திரி செக்யூரிட்டி டூட்டிக்கு ஆளே இங்கு இல்ல சாமீ" என்று சொல்லிவிட்டுப் போனார். சதாசிவத்தின் கண்களில் ஜலம் தளும்பியது. "அப்படி என்றால் ...நேற்று இரவு என்னையும் என் மனைவியையும் கும்பகோணத்தில் இருந்து இங்கே கூட்டிக்கொண்டு வந்த சங்கரன் யார்?" என்று மனம் நெகிழ்ந்து அரற்றினார்.சர்வமும் உணர்ந்த சங்கரனாக அவருக்கு மகா பெரியவா ஒரு விநாடி காட்சி தந்து மறைந்தார், "பெரியவா,,," என்று பெரும் குரலெடுத்து அழைத்து அந்த மடத்தின் வாசலில் ....மண் தரையில்..... பெரியவா இருக்கும் திசையை நோக்கி சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார் சதாசிவம் கூடவே அவரது மனைவியும்..

Thursday, February 26, 2026

புற்றுநோய் தோற்கடிக்கப்பட்டது

புற்றுநோய் தோற்கடிக்கப்பட்டது

அன்னாசிப்பழம் கலந்த வெந்நீர்:-

ICBS பொது மருத்துவமனையின் பேராசிரியர் டாக்டர். கில்பர்ட் ஏ. க்வோக், இந்தச் செய்தியைப் பெறும் ஒவ்வொருவரும் பத்து பேருக்குப் பத்து பிரதிகளை அனுப்பினால், குறைந்தபட்சம் ஒரு உயிராவது காப்பாற்றப்படும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அன்னாசிப்பழம் கலந்த வெந்நீர் உங்களைப் புற்றுநோயிலிருந்து காப்பாற்றும்;

சூடான அன்னாசிப்பழம் புற்றுநோய் செல்களைக் கொல்கிறது.

2 முதல் 3 துண்டுகள் அன்னாசிப்பழத்தை மெல்லியதாக நறுக்கி ஒரு கோப்பையில் போட்டு, வெந்நீரைச் சேர்க்கவும், அது "காரத்தன்மை கொண்ட நீராக" மாறும்; இதை தினமும் குடித்தால், அது அனைவருக்கும் நல்லது.

சூடான அன்னாசிப்பழம் புற்றுநோயை எதிர்க்கும் பொருட்களை வெளியிடுகிறது; இது பயனுள்ள புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவத்தில் சமீபத்திய முன்னேற்றமாகும்.

அன்னாசிப்பழத்தின் சூடான பழம் நீர்க்கட்டிகள் மற்றும் கட்டிகளைக் கொல்லும் விளைவைக் கொண்டுள்ளது; இது அனைத்து வகையான புற்றுநோய்களையும் குணப்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அன்னாசிப்பழம் கலந்த வெந்நீர் ஒவ்வாமை காரணமாக உடலில் உள்ள அனைத்து கிருமிகளையும் நச்சுக்களையும் நீக்குகிறது.

அன்னாசிப்பழச் சாற்றிலிருந்து பெறப்பட்ட ஒரு மருந்து *தீய செல்களை* மட்டுமே அழிக்கிறது மற்றும் ஆரோக்கியமான செல்களைப் பாதிப்பதில்லை.

மேலும், அன்னாசிப்பழச் சாற்றில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் பாலிஃபீனால்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், உள் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் மற்றும் இரத்த உறைவைக் குறைக்கவும் உதவும்.

படித்த பிறகு, மற்றவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் சொல்லுங்கள், உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

Monday, January 19, 2026

Govinda Damodara Madhavedhi

ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய ஜய காமாக்ஷி. 

இது சுவாமிகள் எனக்கு 36 வருஷத்துக்கு முன்னாடி எழுதிக் கொடுத்த ஒரு நாம மந்திர உபதேசம். பில்வமங்களாச்சார்யார்னு ஒரு மகான் குருவாயூரப்பனுக்கு ரொம்ப நெருக்கமா இருந்தவர். அவர் கோவிந்த தாமோதர ஸ்தோத்திரம்னு ஒண்ணு பண்ணிருக்கார். அது சுவாமிகளுக்கு ரொம்ப இஷ்டமானது. அந்த ஸ்லோகத்தைப் பத்தி சுவாமிகள் பேசினதை நான் ஷேர் பண்றேன். அதுல இருந்து சிலது படிக்கிறேன்.

"சுகாவஸானே த்விதிதமேவ ஸாரம்" சுகத்தின் எல்லை நிலையில் நீ இருப்பாய், எதைச் சொன்னால்? "கோவிந்த தாமோதர மாதவேதி". கோவிந்தா, தாமோதரா, மாதவான்னு சொல்லிண்டு இருந்தா நீ அனுபவிக்கிற ஆனந்தம் பிரம்மாதி தேவதைகளுக்குக் கூட கிடையாது. அப்பேர்ப்பட்ட ஆனந்தம் நீ அனுபவிப்பாய்.

"துக்காவஸானே து இதமேவ கேயம்" கடுமையான துக்கம், அதை மறக்கவே முடியல. நினைக்க நினைக்கத் தேம்பித் தேம்பி அழணும்னு தோன்றுது, புலம்பணும்னு தோன்றுது. உடம்பும் வீணா போயிட்டு இருக்கு. யாராலயும் அதுக்கு மருந்து கொடுக்க முடியல. அப்பேர்ப்பட்ட துக்கம் ஒருத்தர் அனுபவிக்கிறார்னா, அவரைப் போய் நாடி, இப்படிப் புலம்புறதாலயும், அழுறதாலயும் இந்த துக்க நிவர்த்தி ஏற்படாதுப்பா. மகான் பில்வமங்களாச்சார்யார் சொல்லியிருக்கார் **"கோவிந்த தாமோதர மாதவேதி"**ன்னு விடாமத் தொடர்ந்து சொல்லிண்டு வா. இந்த துக்கம் பறந்து போயிடும். துக்கத்தினுடைய எல்லையிலிருந்துண்டு ஒருத்தர் கஷ்டப்படுறபோது அவாளுக்கு "கோவிந்த தாமோதர மாதவேதி"ன்னு அந்த திருநாமங்களைச் சொன்னால் பரம சாந்தி ஏற்படும்.

"தேஹாவஸானே து இதிதமேவ ஜாப்யம்" ஸ்ரீமத் பாகவதத்துலயும் ஸ்ரீமன் நாராயணீயத்துலயும் ‘மனஸைக் கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம். அதற்குச் சிறந்த உபாயம் என்ன? இந்த மனஸு அடங்க, மனஸு எங்க வேணாலும் போகட்டும், வாயில திருநாமத்தைப் பேத்தலாஜிக்கல் கண்டிஷன்ல (pathological condition) நம்மையறியாமல் வரக்கூடிய அளவுக்குப் பழகிக்கோ’ என்பதுதான் பாகவத உபதேசம், நாராயணீய உபதேசம். அப்படிச் சொல்லிட்டே இருந்தா, "தேஹாவஸானே த்விதிதமேவ ஜாப்யம்", சரீரம் கீழே விழும்போதும் நம்மையறியாமல் கோவிந்த தாமோதர மாதவேதி அப்படிங்கிற திருநாமம் வந்துடும். அந்த திருநாமம் வாக்குல வந்தவுடனே பகவான் கோலோகத்துக்கு அவனை அழைத்துக் கொண்டு போவார்.

அந்த ஸ்தோத்திரத்திலிருந்து இன்னொரு ஸ்லோகம்: 

"த்வாமேவ யாசே மம தேஹி ஜிஹ்வே

ஸமாகதே தண்டதரே க்ருதாந்தே |

வக்தவ்யமேவம் மதுரம் ஸுபக்த்யா 

கோவிந்த தாமோதர மாதவேதி ||

ஹே நாவே! நீ கேட்டபோது எத்தனையோ கோதுமை அல்வா, திரட்டுப்பால், எத்தனையோ விஷயம், தயிர் வடை எல்லாம் உனக்குக் கொடுத்திருக்கேன். சில பேருக்குத் தித்திப்புப் பிடிக்காது, இந்த மாதிரி காரம் பிடிக்கும். அதனால நீ சொன்னபடி நடந்திருக்கேன் ஜென்ம ஜென்மமா. உன்கிட்ட ஒரு சின்ன ஒப்ளிகேஷன் (obligation). என்ன? எமன் கையில காலதண்டத்தோடு வரும்போது, அந்த சமயத்தில் பக்கத்தில் யாரும் இருக்க மாட்டா. நாக்குதானே பக்கத்துல இருக்கும்? நாக்கைப் பார்த்து, ஹே நாவே! இப்படியே மதுரமா "கோவிந்த தாமோதர மாதவேதி"ன்னு சொல்லணும்னு உன்கிட்ட கேட்டுக்குறேன், உன்னையே கேட்டுக்குறேன். நாக்கு எப்பவுமே நம்முடைய தொண்டையில்தான் இருந்துண்டு இருக்கு. அதனால நாக்கையே கேட்டுப்போம் அப்படின்னு இந்த ஸ்லோகம் சொல்லுது.

சுவாமிகளுக்கு இத்தனை பிரியம் இந்த கோவிந்த தாமோதர நாமத்துல. அதுல இருந்து எனக்கு ஒரு அருமையான உபதேசமா எழுதிக் கொடுத்திருக்கார்.

"குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி" அப்படின்னு மஹா பெரியவாளையும், சிவன் சாரையும், சுவாமிகளையும், காமாட்சியையும் தியானம் பண்ணி நாலு தடவை இந்த "குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி" அப்படின்னு சொல்லு.

அதுக்கப்புறம்: 

த்⁴யேய꞉ ஸதா³, யோகி³பி⁴ரப்ரமேய꞉, சிந்தாஹர:, சிந்திதபாரிஜாத꞉ .

கஸ்தூரிகாகல்பிதநீலவர்ணோ, கோ³விந்த³ தா³மோத³ர மாத⁴வேதி ..

இந்த ஸ்லோகத்துக்கு என்ன அர்த்தம்னா, யோகிகளால் எப்போதும் தியானம் பண்ணப்படுவதும், அப்ரமேய: - எல்லையற்றதும், சிந்தாஹர: - கவலைகளைப் போக்குவதும், சிந்தித பாரிஜாத: - தன்னை நினைப்பவர்களுக்குப் பாரிஜாதத்தைப் போல், கற்பக விருட்சத்தைப் போல் வேண்டுவதைக் கொடுப்பதும், கஸ்தூரிகா கல்பித நீலவர்ண: - கஸ்தூரியைப் போன்ற நீல வர்ணம் கொண்டதுமான அந்த கோவிந்தனுடைய நாமங்களை "கோவிந்த தாமோதர மாதவேதி" அப்படின்னு ஜபம் பண்ணு.

இதை ஒரு தடவை சொல்லிட்டு: 

"கோ³விந்த³ கோ³விந்த³ ஹரே முராரே, கோ³விந்த³ கோ³விந்த³ முகுந்த³ க்ருʼஷ்ண .

கோ³விந்த³ கோ³விந்த³ ரதா²ங்க³பாணே, கோ³விந்த³ தா³மோத³ர மாத⁴வேதி .. "

அப்படின்னு 72 தடவை சொல்லுங்கோ. 72 தடவை சொன்னா இந்த ஸ்லோகத்துல 14 பகவானுடைய நாமங்கள் இருக்கு. ஒரு சகஸ்ரநாமம் பண்ணிண மாதிரி ஆயிடும். விஷ்ணு சகஸ்ரநாமம் மாதிரி. எங்கேயும், யாரும், எப்போதும் சொல்லலாம். இந்த நல்ல நாள்ல உங்களுக்கும் இதைச் சொல்லணும்னு தோணித்து. 

ஜானகி ஜீவன ஸ்மரணம் 

ஜய ஜய ராம ராம!












Om.