Pages

Thursday, December 19, 2024

அகங்காரம் ~ Ego

ஒரு நண்பர் சொன்னது:

உறவுக்காரர் ஒருவர் உடம்பு சரியில்லாமல் படுத்தப்படுக்கையில் இருப்பதாக கேள்விப்பட்டதும்,  போய் பார்க்க வேண்டும் என்று என் மனம் ஏங்கியது.  காரணம்,  பல வருடங்களாக எங்கள் இரு குடும்பத்தாருக்கும் நாங்கள் செய்யாத ஒரு குற்றத்தால் பழி வந்து, அதனால் பேச்சு வார்த்தை இல்லை. "போய் ஒரு தடவை பார்த்துட்டு வரலாங்க" என்றாள் என் மனைவி. 

"முகம் கொடுத்து பேசாதவங்க, இப்போ அவங்க  வீட்டுக்கு நாம் போனால் உள்ளே விடுவார்களோன்னு தெரியாது" என்றேன்.

"பரவாயில்லங்க போய் பார்க்க வேண்டியது நம் கடமை" என்றாள் மனைவி. "சரி வா கிளம்பு போகலாம்" என்று சொன்னதும் புறப்பட தயாரானாள். அங்கே  போனதும் நாங்கள் பயந்த மாதிரி ஒன்றும் நடக்கவில்லை. நிறைய உறவினர்கள் அங்கே படுக்கையை சுற்றி இருந்தார்கள். நாங்கள் அவரிடம் பேச முற்பட்டபோது அவரின் மகள், "அப்பாவுக்கு பேச முடியாது, யார் சொல்வதும் காதால் கேட்க முடியாது, கண் திறந்து பார்க்கவும் முடியாது" என்று அழுதுகொண்டே  சொன்னாள்.

இதை கேட்டதும் நாங்கள் மிகவும் வருந்தினோம். நல்ல நினைவுடன் இருந்தபோது, அகங்காரம் (Ego) ஒரு மனிதனை எப்படி பாடாய் படுத்தியது. 

இப்போ யார் வந்திருக்கிறார்கள், என்ன சொல்கிறார்கள், தான் நினைத்ததை சொல்லவும் முடியாமால், ஒன்றுமே தெரியாத உடல் நிலை.

மனதை தேற்றிக்கொண்டு எல்லோருக்கும் ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு நாங்கள் வீடு திரும்பினோம்.

மறுநாள் காலையில் அவரின் மகளிடம் இருந்து வந்த செய்தி "அப்பா நேற்று இரவு 11மணிக்கு  காலமாயிட்டார்."

இது தான் மனித வாழ்க்கை. உறவுகளிடையே விட்டு கொடுக்கும் மனப்பான்மையுடன் வாழ முயற்ச்சிப்போம் நண்பர்களே.

No comments:

Post a Comment