Pages

Monday, October 14, 2024

மூடநம்பிக்கை

ரெண்டு நாளா பொழுது போகலை. அதனால கடவுள் மறுப்பு இயக்கத்தில் தீவிரமாய் இருக்கிற என் நண்பர் ஒருத்தருக்கு போன் போட்டு பேசினேன்.

'டேய்...! சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயம்லாம் மூடநம்பிக்கைன்னு நிரூபிக்கிறதுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் வந்திருக்கு. பயன்படுத்திக்கிறியா..?'

நண்பர் ஆர்வமானார். 

'கண்டிப்பா பயன்படுத்திக்கிறேன்டா. அதுமட்டுமில்ல. அந்த சம்பவத்தை படம் பிடிச்சு youtube ல போட்டு உலகம் பூராவும் இந்து மதத்தையும் அதோட வழிமுறைகளையும் நாறடிச்சுடுறேன். நான் என்ன செய்யணும் சொல்லு'

நான் சொன்னேன்,

'இன்னைக்கு விஜயதசமி. வித்தியாரம்ப நாள். இந்த சங்கிப் பயலுக அவனுங்களோட பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் கோவிலுக்கு கூட்டிட்டு போய், அந்தக் கோவில்ல இருக்கிற கல்லு சிலைக்கு முன்னாடி உட்கார்ந்து, ஒரு தட்டில் நெல் மணியை பரப்பி குழந்தை கையை பிடிச்சு அதுல ஆனா ஆவன்னா எழுத்து எழுதி கல்வியை தொடங்கி வைப்பானுங்க.

இதுல குரு தட்சணைன்னு அங்க இருக்கிற பார்ப்பனருக்கு துண்டு வேஷ்டி துட்டுன்னு காணிக்கை வேற கொடுப்பானுங்க'

நான் பேசப்பேச நண்பருக்கு குஷி தாங்கலை. ஆச்சரியமாய் என்னிடம் கேட்டார்,

'நீயாடா இப்படி அறிவுப்பூர்வமா பேசுற? சங்கி பயல்களுக்கு கொடூரமா முட்டுக் கொடுப்பியேடா. இந்த விஷயத்துல நான் என்ன செய்யணும்னு சொல்லு. உடனே செய்யுறேன்'.

நான் அவனிடம் கேட்டேன்,

'உனக்கு ஸ்கூலுக்கு போற வயசுல பேரப்பிள்ளைகள் இருக்கா?'

சடாரென பதில் சொன்னான்,

'ஆமா..! என் மகள் வயித்து பேரன் இருக்கான்'

நான் தொடர்ந்தேன்,

'நீ என்ன பண்ற..! உன் பேரனை தூக்கிக்கிட்டு சுடுகாட்டுக்கு போயி, அங்க கிடக்கிற பிணம் எரிச்ச சாம்பலை ஒரு தட்டுல பரப்பி, அரைகுறையா வெந்து கிடக்கிற எலும்பு துண்டை அவன் கையில கொடுத்து,

அங்க வச்சு அந்த சாம்பல்ல அவனுக்கு ஆனா ஆவன்னா எழுத சொல்லி தர்ற. 

சொந்தக்காரங்க எல்லாத்தையும் மறக்காம கூட கூட்டிட்டு போயிரு. அந்தப் பையன் எழுத ஆரம்பிக்கும் போது சொந்தக்காரங்கள ஒப்பாரி வைக்கச் சொல்லு.

அத படம் புடிச்சு யூடியூப்ல போட்டு,

கலைவாணி முன்னால் தான் என்றல்ல... கல்லறையில் எழுதினாலும் கல்வி அறிவு வரும்; வளரும்னு ஒரு பஞ்ச் டயலாக் போடுற.

இதுக்கு ஏகப்பட்ட லைக்ஸ்சும் வியூசும் கிடைக்கும். 

அதோடு மக்களுக்கு கோவில்ல வச்சு தான் எழுத்தறிவை ஆரம்பிக்கணும்ன்ற மூட நம்பிக்கையும் ஒழியும். உன்னோட கொள்கையும் உலகம் பூராவும் பரவும். 

அங்க இருக்கிற வெட்டியானுக்கு தட்சணையா சீயக்காய், எண்ணை, ஊதுவத்தி வாங்கி கொடுத்துடுவோம்.

சொல்லு எப்போ நாம சுடுகாட்டுக்கு போவோம்..?'

திடீரென நண்பருக்கு ஆறறிவில் ஓரறிவு அவுட் ஆகி போனது. காட்டுக்கத்து கத்தினார்,

'ஏன்டா நாயே..! உன் வாரிசுகள் மட்டும் நல்லா இருக்கணும். என் வாரிசுகள்லாம் நாசமா போகணுமா? இப்படி ஒரு யோசனையை சொன்னேன்னா என் மருமகன் விளக்கமாறால என்னை அடிச்சு என் மண்டையை பிளந்துருவாரு.

என் மகளையும் வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டுருவாரு.

கடவுள் இல்லைன்னு நான் வீர வசனம் பேசுறதையெல்லாம் மேடையோடு நிறுத்திக்கலைன்னா எனக்கு வீட்டுக்குள்ள இடம் கிடையாது.

இந்த மாதிரி அபசகுனம் பிடிச்ச யோசனைய எவனுக்கும் சொல்லாத. இனி செத்தாலும் உன்னோடு பேசமாட்டேன்டா' னு சொல்லி போனை கட் பண்ணிட்டார்.

அப்போதான் புரிஞ்சது. மூடநம்பிக்கை ஒழிப்புன்றதே ஒரு மூடநம்பிக்கை தான்னு..!

பகுத்தறிவை பயன்படுத்தி கொஞ்சம் மாத்தி யோசிச்சா இந்த கதறு கதறுறானுங்களே!!

No comments:

Post a Comment