Pages

Thursday, September 30, 2021

Centralized Public Grievance Redress & Monitoring System

 Hello. I am Arvind Nayak (Mumbai).

We had booked Kuwait Airways flight Mumbai-Milan-Mumbai from *MakeMyTrip* site in December 2019 for a Pharma conference. Our visit dates were from 11th October 2020 to 18th October 2020. But due to COVID, we had to cancel the tickets from the MakeMyTrip app in August 2020.

Kuwait Airways deducted a nominal amount and returned a large amount of our refund to MakeMyTrip in September 2020 itself. But, since then, we had to run from pillar to post between MakeMyTrip and Citibank since our Refund amount never got credited to the credit card account as promised. There was no response to numerous phone calls and mails sent to MakeMyTrip.

Then, on 09th July 2021, I discovered the CPGRAMS site. *CPGRAMS* means *Centralized Public Grievance Redress & Monitoring System*. From that I got Direct *PMO* - Prime Minister's Office site - https: //www.pmindia.gov.in/en/main/

From the site given above, in a few words, I wrote my Grievance to the PMO office, attached the relevant documents (there is such a facility on the site) and a miracle happened.

1. I immediately received a registration no. in my email with all details of my complaint.

2. I got the name, email ID and direct phone number of the officer to whom my complaint has been forwarded. It all happened in 1-2 days.

3. On 13th July I received an email from MakeMyTrip (on instructions of the Ministry of Tourism) asking for a few details.

4. Everyday, I could track the progress of my complaint myself by entering the registration number-complete Transparency!!

And then, another MIRACLE happened on *19th July 2021*. The refund amount was CREDITED to the bank account by NEFT from MakeMyTrip!!

Really COMMENDABLE!! No words to praise this fantastic initiative by the government- and it REALLY WORKS!!

It just shows the efforts of the government towards bringing full transparency in their working and their genuine concern for the citizens and their grievances! 

KUDOS to all concerned!!

*Putting up this post so that it can help genuinely aggrieved citizens!!*

*CPGRAMS* stands for *Centralized Public Grievance Redress & Monitoring System*

PMO site- https: //www.pmindia.gov.in/en/main/

*A Centralized* 

*Public Grievance* *Redress* *And Monitoring System* *(CPGRAMS)* has been established by the Government of India at http://www.pgportal.gov.in 

Can you imagine this is happening in INDIA ? 

The govt. wants people to use this tool to highlight the problems they faced while dealing with Government officials or departments like

1) Railways

2) Posts

3) Telecom

4) Urban Development

5) Petroleum & Natural Gas

6) Civil Aviation

7) Shipping , Road Transport & Highways

8) Tourism

9) Public Sector Banks 

10) Public Sector Insurance Companies

11) National Saving Scheme of Ministry of Finance

12) Employees' Provident Fund Organization

13) Regional Passport Authorities

14) Central Government Health Scheme

15) Central Board of Secondary Education

16) Kendriya Vidyalaya Sangathan

17) National Institute of Open Schooling

18) Navodaya Vidyalaya Samiti

19) Central Universities

20) ESI Hospitals and Dispensaries directly controlled by ESI Corporation under Ministry of Labour.

Many of us say that these things don't work in India . 

A few months back, the Faridabad Municipal Corporation laid new roads in an area and the residents were very happy about it. But 2 weeks later, BSNL dug up the newly laid roads to install new cables which annoyed all the residents. A resident used the above listed grievance forum to highlight his concern. To his surprise, BSNL and Municipal Corporation of Faridabad were served a show cause notice and the guy received a copy of the notice in one week. Government has asked the MC and BSNL about the goof up as it's clear that both the government departments were not in sync at all. 

So use this grievance forum and let all the country men/women/youth who don't know about this facility. 

This way we can at least raise our concerns instead of just talking about the 'System' in India . 

Invite your friends to register their grievances at this portal and ensure that citizens are heard and get the responses that are their due.

PLEASE SPREAD THIS MESSAGE IF U WANT OUR INDIA TO HAVE A BETTER TOMORROW & FORWARD THIS MESSAGE TO AS MANY AS POSSIBLE.

Very Useful Site for Any Grievances.

Monday, September 27, 2021

போகர்

கிருஸ்து பிறந்ததாக சொல்லப்பட்ட ஆண்டை விட பல்லாயிரம் ஆண்டுகள் முன்னாடி பிறந்தவர் போகர் என்ற மாபெரும் சித்தர். 

இவரின் குறிப்புகளை திருடி வைத்து தான்  வெள்ளைக்காரன் அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்திருப்பான் என தோன்றுகிறது.

ஆதாரம் 

இவர் காளாங்கிநாதர் என்ற சித்தரின் சீடரும் 18 சித்தர்களில் ஒருவரும் ஆவார். பழனியில் இருக்கும் நவபாஷான சிலையை செய்தவரும் இவர்தான். இவரை பற்றிய தகவல் மிக ஆச்சரியத்தை கொடுக்கும். அவர் இயற்றிய சப்தகாண்டம் என்ற நுலில் அவர் கூறிப்பிட்ட தகவலைப் படித்து ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்று விட்டேன். இப்பேர்பட்ட தமிழனை உலகம் முழுவுதும் தெரியப்பபடுத்த வேண்டும் என்பதே என் நோக்கம். அவர் இயற்றிய அந்த நூலில் 1799, 1800 ஆம் பாடலில் விமான தொழில்நுட்பத்தை பற்றிய குறிப்பையும் அதை எப்படி செய்யவேண்டும் என்றும் அதை வைத்து அவர் பறந்ததையும் தெள்ளதெளிவாக கூறிப்பிட்டிருக்கிறார்.

அது மட்டும் அல்ல 1926 ஆம் பாடலில் நீராவி இஞ்சின்(steam engine) வைத்து கப்பலை எப்படி இயக்குவது என்றும் கப்பலின் டிசைனிங்கையும் குறிப்பிட்டிருக்கிறா­ர். இதை 5000 ஆண்டுகள் முன்பே தமிழன் கண்டுபிடித்து விட்டான் என்பது நமக்கெல்லாம் பெருமை. ஆனால் அப்பேர்பட்ட தமிழனை நாம் மறந்து விட்டோம் என்பது வேதனையளிக்கிறது.

தமிழனின் புகழ் உலகம் முழுவதும் பரவவேண்டும் உலகத்தின் முதல் இனமும் முதல்மொழியும் முதல் அறிவியல் விஞ்சானியும் முதல் மருந்துவனும் முதல் ஆன்மீகவாதியும் தமிழனே. இப்படி தமிழனின் புகழை மறந்து நாத்திகம் பேசியும் மதமாற்றம் செய்தும் தமிழனின் பெருமை மறைக்கபட்டுவிட்டது.

https://www.facebook.com/groups/305917699863621/

சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் போகர். மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான்.

அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார். சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து 'கடவுளைப் போல உதவினீர்கள்... என் வரையில் நீங்களே கடவுள்' என்று சொல்வோம், அல்லவா.

அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும். உண்மையில், முதல் சித்தன் அந்த ஆதிசிவன்தான். அவனே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றான். போகரைப்பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள், இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள். ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து, தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள். ஆனால் இதில், போகர் பெரிதும் வேறுபட்டே தெரிகிறார். பல சித்தர்கள் போல், இவரும் ஒரு சிவத் தொண்டரே. அதே சமயம், அன்னை உமையை தியானித்து அவளருளையும் பெற்றவர்.அவளது உபதேசம் கேட்டு பழனி மலைக்குச் சென்று தவம் செய்து முருகனை தண்டாயுத பாணியாகவே தரிசனம் செய்தவர். உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக, தான் தரிசித்த தண்டாயுபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர்.

பாஷாணங்களைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதம்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். அவைகளை உரிய முறையில் சேர்ந்துப் பிசைந்தால்தான் உறுதியான, ஒரு பொதுவான பாஷாணம் உருவாகும். இதை நயனங்களால் பார்த்தாலேகூட போதும். அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர்வீச்சு, கண்வழியாக உடம்பின் உள்ளும், உடம்பின் புறத்திலும் படிந்து, நலம் ஏற்படும். இதன்மேல் பட்டு வழியும் பொருள் எதுவாயினும் அதுவும் மருத்துவ குணம் கொண்டு தீராத வியாதியை எல்லாம் தீர்த்து வைக்கும்.

உயர்வான பாஷாணங்கள் ஒன்பதை தேர்வு செய்து அதைக் கொண்டு போகர் செய்ததுதான் பழனி முருகனின் மூலத் திரு உருவம். அவ்வாறு செய்ததோடல்லாமல், அவ்வுருவத்திற்கு ஏற்ற வழிபாட்டு முறையை ஒரு புதிய சித்தாகமமாகவே உருவாக்கி அதையும் நடைமுறைப்படுத்தியவர் போகர்.

https://www.facebook.com/groups/305917699863621

மனிதப் பிறப்பானது கோள்களால் நிர்வகிக்கப்படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வுசெய்து அதிலிருந்து தண்டாயுத பாணியை செய்து, கோள்களை ஓர் உருவுக்குள் அடக்கிப் பூட்டியவர் போகர் என்றும் கூறுவர்.

தண்டாயுத பாணியை எவர் வந்து தரிசித்து வணங்கினாலும் நவ கோள்களையும் ஒருசேர வணங்கிய ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு உண்டாவது, இதனுள் அடங்கிக் கிடக்கும் இன்னொரு நுட்பம்.

இப்படி பழனியம்பதியில் முருக வழிபாட்டிற்கு களம் அமைத்த போகரின் வாழ்க்கையும் ஒரு வகையில் நவரசங்களால் ஆனதுதான். பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி வைகாசி மாதத்து பரணி நட்சத்திரத்தில் பிறந்த போகரின் பிறப்பு மூலம் பற்றி பெரிதாக செய்திகள் இல்லை. ஆனால், நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதரின் மாணவர் இவர் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு செய்தி. அதை இவரது, அரிய நூல்களுள் ஒன்றான 'போகர் ஏழாயிரம்' எனும் நூலின் வழி அறியலாம்.

பதினெண் சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பு, நவசித்தர்களே பிரதானமாகக்கருதப்பட்டனர். மேருமலைதான் இவர்களின் யோகஸ்தலம். மேருவும் இமயமும் உலகப் பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு வெளியாகவே விளங்கியது. இங்கேதான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர், காலாங்கிநாதர். காலாங்கி நாதர், போகர் வந்த சமயம் மகாசமாதியில் இருந்தார்.

போகர், சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி, அவ்விரு மலைகளிலும் பல தாது வகைகளை தேடிக்கண்டு பிடித்தார். அதைக் கொண்டு பல காய கற்பங்களை செய்து, தானே உண்டு பார்த்து அதன் பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும், வானவெளியில் பறப்பது, நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிக மிகச் சாதாரணமாகியது. இதனால் போகருக்குள் கர்வம் துளிர்த்துவிட்டது.

துரோணருக்கு ஓர் ஏகலைவன் போல தானும் குருவை வணங்கி அந்த அருளாலேயே பல தாதுக்களை கண்டறிந்து விட்ட ஒருவன்; உண்மையில் காலாங்கி நாதருக்கு சீடர்கள் இருந்திருந்தால், அவர்கள் கூட இப்படி எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள்; என்றெல்லாம் நினைக்கத் தொடங்கிவிட்டார்.

இதனால், அந்த மலைத் தலத்தில் பணிவாக பார்த்துப் பார்த்து நடந்தவர், நிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தார்.

https://www.facebook.com/groups/305917699863621

மேருவிலும் இமயத்திலும் சூட்சம வடிவில் பலநூறு சித்த புருஷர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களில் பலரது தவம், போகரின் கர்வமான நடையால் கலைந்தது. அவர்கள் கண்விழித்ததோடு போகருக்கும் காட்சியளித்தனர். திடுக்கிட்ட போகரிடம் நாங்கள் காலாங்கி நாதரின் மாணவர்கள். பலப்பல யுகங்களாக எங்களை மறந்து தவம் செய்தபடி இருக்கிறோம் என்றார்கள். அத்தனை யுகங்களும் சில நாட்கள் கடந்தது போலத்தான் இருக்கிறது என்று அவர்கள் கூற, போகருக்கு அது ஆச்சரிய அதிர்ச்சியாகியது. அப்படியானால் அவர்கள் தவத்தை எவ்வளவு பெரிய விஷயமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அந்த நொடி, தான் கற்ற தாதுவித்தை எல்லாம் மிக அற்பமானது என்கிற எண்ணம் ஏற்பட்டு அவரது கர்வமும் அடங்கியது. அதை அறிந்த அந்த சித்தபுருஷர்கள், போகருக்கு பல சித்த ரகசியங்களை போதித்தார்கள்.

ஒரு சித்தர், போகர்மீது பெரும்கனிவு கொண்டு, 'அமிர்தமணிப்பழம்' என்னும் தேவக்கனி மரம் ஒன்றை அந்த வெளியில் காட்டி, அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள் முழுக்க பசிக்காது, நரைக்காது, முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை உண்டுவிட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறிட,போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய 'பசி, தாகம், மூப்பு' என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார்.

இப்படி படிப்படியாக முன்னேறிய போகருக்குள் சில விசித்திரமான எண்ணங்களும் ஏற்பட்டன. அவை முழுக்க முழுக்க மனித சமுதாயம் தொடர்பானவையே.. ஒரு உயிர் எதனால் மனிதப் பிறப்பெடுக்கிறது? அப்படிப் பிறக்கும்போது அது எதன் அடிப்படையில் ஏழையின் வயிற்றிலும், பணக்காரனின் வயிற்றிலும் பிறக்கிறது? இறப்புக்குப்பின் கொண்டு செல்வது எதுவும் இல்லை என்று தெரிந்தும் வாழும் நாளில் மனிதன் ஏன் ஆசையின் பிடியிலேயே சிக்கிக் கிடக்கிறான்? எவ்வளவு முயன்றும் அவனால் மரணத்தை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை?

இப்படிப் பலவித கேள்விகள் போகரை ஆட்டிப் படைத்தன. மொத்தத்தில் மனித சமூகமே வாழத் தெரியாமல் வாழ்ந்து விதியின் கைப்பாவையாக இழுத்துச் செல்லப்படுவது போல உணர்ந்தவர், மனித சமூகத்தை காப்பாற்றியே தீர வேண்டும் என்று எண்ணம் கொண்டார். இதனால், தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் 'போகர் ஏழாயிரம்', போகர் நிகண்டு, 17000 சூத்திரம், 700 யோகம் போன்றவை.

இவர் உள்ளத்தில் மனித சமூகத்தை நோயின்றி வாழவைக்கும், அரிய குறிப்புகள் தோன்றின. அதேசமயம், இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர். சித்த ரகசியங்களை எழுதிவைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை, ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர், அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றி காட்டினார்.

அந்த மந்திரம், தம்பணா மந்திரம் எனப்படுகிறது. இன்றும் காடுகளில் மூலிகை தேடிச்செல்வோர் தம்பணா மந்திரத்தை மானசீகமாக உச்சரித்து, காணப் பெறாத மூலிகைகளையும்கண்டு அதைக் கைப்பற்றுவர். அமிர்தத்துக்கு இணையான ஆதிரசத்தையே இவர் கண்டறிந்தார் என்பர். அதைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமோ, அமிர்தமோ தேவர்களுக்கே உரியது. அசுரர்களோ மானிடர்களோ அதை உண்டால் அதனால் உலகம் அழிந்து விடும் அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர்.

https://www.facebook.com/groups/305917699863621

தங்கள் அச்சத்தை தட்சிணா மூர்த்தியாகிய சிவபிரானிடம் கூறிட, சிவபிரானும் அவர்களது கவலையை நீக்குமூலமாக போகரை அடைந்து அவர் அறிந்து எழுதிய அவ்வளவு ரகசியங்களையும் கேட்டார். போகர் எழுதியதை, போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர்களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த அவர், போகரின் முயற்சியை ஆசிர்வதிக்கவே செய்தார். அதன்பின் இவர் புகழ் பலமடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள், குளிகைகள் பெற்றுச் சென்றனர்.

மொத்தத்தில் மனித சமூகத்தை, இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே, தேவர்களுக்கும் கந்தவர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார்.

அண்டை நாடான சீன தேசமும், நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும், புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால், மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது. அங்கே, 'போ யாங்' என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள், கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து, சீனராகவே வாழ்ந்தார் என்றும் ஒரு கதை உண்டு.

சீனர்கள், இந்தியர்களில் இருந்து உணவுப் பழக்க வழக்கங்களில் பெரிதும் வேறுபட்டவர்கள். இந்திய உணவில் எண்ணெய், கொழுப்பு சத்து, காரம், புளிப்பு, உவர்ப்பு என்றெல்லாம் பல சுவைகள் உண்டு. சீனர்களிடம் அப்படி இல்லை. அவர்களது உணவுமுறை ரஜோ குணத்தை தூண்டுவதாகவும்; எலும்பு, நரம்பு இவைகளை வலுவாக வைத்துக் கொள்ளத் தக்கதாகவும் இருந்தமையால், அவர்களிடம் பல வித்யாசமான பயிற்சி முறைகள் இருந்தன.அதில் 'ரஜோலி' என்னும் யோக முறையும் ஒன்று. போகர் அதை ஆர்வத்துடன் பழகிடும்போது தலையில் அடிபட்டு அவருக்குள் அவர் பற்றிய அவ்வளவு எண்ணங்களும் மறைந்துபோன. பின்னர், அவரைத் தேடிக்கொண்டு வந்த போகரின் மாணாக்கர்களில் ஒருவரான புலிப்பாணி, போகரின் நிலை கண்டு கலங்கி, அவரைத் தன் முதுகில் சுமந்துகொண்டு இந்தியா திரும்பினார் என்றும் சொல்வர்.

அதன்பின் குருவுக்கே அவரிடம் கற்றதை உபதேசித்து, அவருக்குள் மீண்டும் பழைய எண்ணங்களை தோற்றுவித்தார். ஒரு சீடன், குருவுக்கு உபதேசிப்பது என்பது காரியப் பிழையில் முடிந்து, முடிவில் அவனையே சாபத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதால்,புலிப்பாணி, போகரின் தண்டத்திற்கு உபதேசிப்பது போல போகருக்கு உபதேசித்து போகரை மீண்டும் நிலை நிறுத்தினார். அதன்பின், போகர் ஒரு புத்துயிர்ப்போடு எழுந்தார். பலவித அனுபவங்களால் பழுத்த ஞானியாகிவிட்ட அவர், இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் பழனி. அங்கேயே முக்தியும் அவருக்குக் கிட்டியது. மொத்தத்தில் போகர் என்றால் 'நவநாயகர்' என்றும் கூறலாம்.

அகஸ்திய முனிவர் போக சித்தரை சீன தேசத்தவர் என்று கூறுகிறார். புலிப்பாணியின் குரு என்றும் இவருடைய தாய் தந்தையர் சீனாவில் பெண்களுக்குத் துணிகள் வெளுத்துக் கொடுத்துப் பிழைத்து வந்தனர் என்றும் அகத்தியர் கூறுகிறார். போகர் திருமூலர் காலத்தினைச் சேர்ந்தவரென்றும் பழனி மலையில் வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷானக் கட்டில் தயாரித்தார் என்றும் அவருடைய வரலாறு பேசப்படுகிறது. போக முனிவர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார்.

அகத்தியர் தமது சௌமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத் தருகிறார்.

1. போகர் – 12,000

2. சப்த காண்டம் – 7000

3. போகர் நிகண்டு – 1700

4. போகர் வைத்தியம் – 1000

5. போகர் சரக்கு வைப்பு – 800

6. போகர் ஜெனன சாகரம் – 550

7. போகர் கற்பம் – 360

8. போகர் உபதேசம் – 150

9. போகர் இரண விகடம் – 100

10. போகர் ஞானசாராம்சம் – 100

11. போகர் கற்ப சூத்திரம் – 54

12. போகர் வைத்திய சூத்திரம் – 77

13. போகர் மூப்பு சூத்திரம் – 51

14. போகர் ஞான சூத்திரம் – 37

15. போகர் அட்டாங்க யோகம் – 24

16. போகர் பூஜாவிதி – 20

இவைகளில் போகர் 12000 மற்றும் இரண வாகடம் நூல்கள் கிடைக்கவில்லை. போகரின் நூல்கள் யாவுமே அமுதமாகும் என்று காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார். போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர்.

இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகிலிருக்கும் நவநாத சித்தர்கள் சமாதியை அடைந்தார். ஒன்பது சித்தர்களும் போகருக்கு தரிசனம் தந்தனர். போகரும் இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரவித்தையைக் கற்றுத் தருமாறு கேட்டார்.

“தகுதியுள்ளவர்களுக்கு காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு அவர்களை நீண்ட காலம் வாழவை. மரணமடைந்தவர்களுக்காக மனதைக் குழப்பிக் கொள்ளாதே” என்று அறிவுரை கூறினர். அதுவரையில் போகர் அறிந்திராத காய கல்ப முறைகளையும் கற்றுக் கொடுத்து மறைந்தனர்.

போகர் தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். கொஞ்ச தூரத்தில் ஒரு புற்றிலிருந்து ஒளிக் கற்றை ஒன்று புலப்பட்டது. அந்த ஒளியை தொடர்ந்து புற்றின் முன் போய் நின்றார். யாரோ ஒரு சித்தர் இந்தப் புற்றின் உள்ளே தம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த போகர், அந்தப் புற்றை வலம் வந்து அதன் அருகிலேயே ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் ஆனது, போகரின் தியானத்தால் புற்றில் இருந்த சித்தரின் தியானம் கலைந்தது. உடனே அவர் புற்றை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.

போகர், “தங்களை தரிசித்ததில் வாழ்வின் பெரும்பயனை அடைந்தேன்” என்று கூறினார். சித்தர் அங்கிருந்த மரங்களில் ஒன்றைக் காட்டி “போகா! அந்த மரத்தின் பழங்களில் ஒன்றைச் சாப்பிட்டால் போதும் ஆயுள் முழுவதும் பசிக்காது, முடி நரைக்காது, பார்வை மங்காது, இவ்வளவு ஏன்? எல்லோருக்கும் அச்சம் தரும் முதுமை என்பதும் வரவே வராது. தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும்” என்றார். போகர் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார்.

https://www.facebook.com/groups/305917699863621

சித்தர் புலித்தோல் ஆசனம் ஒன்றைக் கொடுத்து, “இது உனக்கு தவம் செய்ய உதவும்” என்றார். அந்த சமயத்தில் பதுமை ஒன்று அவர் எதிரில் தோன்றவே “போகா! இனி உனக்கு தேவையானவைகளை இந்த பதுமை சொல்லும்!” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தியானத்தில் மூழ்கி விட்டார். பதுமை மூலிகை ரகசியங்கள், போகருக்கு உயிரின் தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்த உடலில் அது படும் துன்பம் ஆகிய நிலைகளைத் தெளிவாக உணர்த்தியது. அதைக் கேட்டு ஆச்சரியத்தில் இருக்கும் போது பதுமை வந்தது போலவே மறைந்தும் விட்டது.

பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு உணவு சமைத்து உண்ட பின் நீர் வேட்கையால் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் கும்பலாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். போகர் அவர்களிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார்.

“யார் நீ! அப்பாலே போ! அருகில் வந்தாலே நாற்றமடிக்கிறது” என்று எரிந்து விழுந்தனர். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து அந்த வழியாக வந்த பூனை ஒன்றின் காதில் போகர் வேதத்தை ஓதிவிட்டார். பூனை நன்றாக உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொட்ங்கியது.

அந்தணர்கள் தாங்கள் அறியாமல் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர். “ஐயனே எங்கள் வறுமை அகல தாங்கள் வழி செய்ய வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டனர்.

போகர் அவர்களுடைய வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார்.

போகர் தவம் செய்து முடித்த இரச மணிக் குளிகைகளின் ஆற்றல் கண்டு மிகவும் வியப்படைந்தார். அதே போல குளிகைகளைச் செய்து மற்ற சித்தர்களுக்கும் அளிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார்.

அதற்காக ரோமாபுரி சென்று மிகத் தூய்மையான ஆதி ரசம் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தார். உடனே குளிகைகளில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு ரோமாபுரியில் தோண்றி அங்கு இருந்த இரசக் கிணற்றைத் தேடிப் பிடித்தார். இரசத்தை சுரைக் குடுவையில் நிரப்பிக் கொண்டு விண்ணில் தாவினார்.

அதன்பிறகு ஆதிரசத்துடன் விண்மார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.

தஞ்சையில் பிரகதீசுவரர் ஆலய லிங்கப் பிரதிஷ்டைக்காக காக்கையின் கழுத்தில் ஓலை ஒன்றை கருவூராருக்கு அனுப்பினார். கருவூரானும் அதன் படியே செய்து லிங்கப் பிரதிட்டை செய்து முடித்தார்.

போகர், தட்சிணா மூர்த்தி உமைக்கு அருளிச் செய்த ஞான விளக்கம் ஏழு சட்சத்தையும் ஏழு காண்டமாக்கி தமது மாணவர்களுக்கு உபதேசித்தார். மற்ற சித்தர்கள், “இறைவன் உபதேசித்ததை வெளியில் சொல்வது குற்றம்” என்று கூறி இத்தகைய செயலை அவர் உடனே நிறுத்தியாக வேண்டும்” என்று தட்சிணாமூர்த்தியிடம் முறையிட்டனர்.

தட்சிணாமூர்த்தி போகரை அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார். “போகரே! நீர் பூனைக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்து ஓதச் செய்தீர், சிங்கத்திற்கு ஞானம் கொடுது அரசனாக்கினீர், மேருமலைக்குச் சென்று தாதுக்களைக் கொண்டு வந்தீர், ரோமபுரி சென்று ஆதிரசம் கொண்டு வந்தீர், இதையெல்லாம் விட நாம் உமாதேவிக்கு கூறிய தீட்சை விதி, யோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு காண்டமாக உருவாக்கியுள்ளீராமே! நீர் செய்த நூலைச் சொல்வீராக” எனக் கேட்டு போகரின் நூலாழத்தினையும் பொருட்சிறப்பையும் உணர்ந்து மகிழ்ந்து வாழ்த்தினார்.

போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர்முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம், முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார்.

போகர் கனவில் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாஷாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். பழனிமலை இறைவன் திருமேனியைத் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார். ஒன்பது விதமான விஷங்களை (நவ பாஷாணங்கள்) முயன்று கூட்டி உருவாக்கிய திருமேனியில் ஊறிய விபூதியும், பஞ்சாமிர்தமும் போகருக்கு உள்ளொளியைப் பெருக்கியது.

இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரனை உருவாக்கியவரும் போகரே என்றும் கூறுவதுண்டு. பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.

போகர் பூசித்து வந்த புவனேச்வரி அம்மையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும் புவனேச்வரி அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்றிருப்பதாக கூறப்படுகிறது. இங்கு கூறப்பட்ட வரலாற்று செய்திகளனைத்தும் சதுரகிரி தலப்புராணத்தில் கூறப்பட்டவை.!

https://www.facebook.com/groups/305917699863621

**சித்தர் அறிவியல்**

நன்றி 

Ravi Lakshmanasami.

Saturday, September 25, 2021

திருப்பதி பெருமாளை தரிசிக்க முடியவில்லையே

இனிமேல் யாரும் திருப்பதி பெருமாளை 5 நிமிடம், 10 நிமிடம் என தரிசிக்க முடியவில்லையே என ஏமாற்றம் அடையாமல் இருங்கள்.

நேராக செங்கல்பட்டிற்கு செல்லுங்கள், 50ம் எண் கொண்ட திருப்போரூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறி திருவடிசூலம் என்னும் மிக அழகிய குக்கிராமத்தில் இறங்குங்கள்.  2 கிலோமீட்டர் நடக்க வேண்டும். வழியில் மிகப் பழமையான திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தொண்டை நாட்டு திருத்தலமான இடைச்சுரநாதர்(சிவன்) ஆலயம் வரும். இவரையும் அம்பாளையும் தரிசித்து விட்டு இடது புறமாக மறுபடியும் நடங்கள். மலை ஒன்று ஆரம்பமாகும். அப்படியே வலது புறம் திரும்பி நடங்கள். நீங்கள் 7 அழகிய மலைகளைக் காண்பீர்கள். உங்கள் கண்களுக்கு இரு சிறிய கோயில்கள் தென்படும். இடதுபுறமாக ஒரு சாலை பிரியும், அதைப் பின்பற்றி சென்றீர்கள் என்றால்...

உலகிலேயே மிக உயரமான 51 அடி அற்புதமான தரிசனம் தரும் கருமாரி அம்மனை சேவிக்கலாம். அப்படி ஒரு அழகு, தெய்வாம்சம், காண கண்கள் கோடி வேண்டும். மிகவும் விஸ்தாரமான இடத்தில், கோழியும், கெளதாரியும், வான்கோழியும் சுற்றி திரியும் இயற்கை எழில் கொஞ்சும் அழகுள்ள இடத்தில் இந்த கருமாரி வீற்றிருக்கிறாள். நீங்கள் உங்களையே மறந்துவிடுவீர்கள்.

கருமாரி அன்னையின் பின்புறமே அவர் அண்ணன் பெருமாள் ஸ்ரீநிவாசனாக மிகப் பெரிய அளவில் வீற்றிருக்கிறார். திருப்பதி சென்று சரியாக கடவுளை காண முடியாத ஏக்கத்தில் இருப்பவர்கள் இங்கே நம்மூரிலேயே, சென்னைக்கு அருகிலேயே, செங்கல்பட்டிலிருந்து ஒரு 10 கிலோமீட்டர் தொலைவிலேயே இந்த அதி அற்புத தரிசனம் செய்யலாம். அண்ணனையும், தங்கையையும் ஒரு சேர காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இவர்கள் இருவரையும் தரிசித்து விட்டு, இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் அஷ்டபைரவர் கோயிலைப் பார்க்காலாம். இங்கே உலகத்தில் வேறெங்கும் காணமுடியாத மிகப்பெரும் கோயிலினுள் அஷ்டபைரவர்களை தரிசிக்கலாம். கோயில் நுழைவு வாயிலில் பௌர்ணமி குகை கோயில் உள்ளது. ஆனால் இந்த குகை கோயிலில் இருக்கும் சிவனைக்காண நீங்கள் பௌர்ணமிக்கு 3 நாட்கள் அல்லது பூரட்டாதிக்கு 3 நாட்கள் முன்பே பதிவு செய்துவிட்டுத் தான் செல்ல முடியும். சிவனை இங்கு பாதாளத்தில் காணலாம். 

முக்கிய குறிப்பு - சிவனைப் பார்க்க வேண்டுமெனில் நீல நிற ஆடைஅணிந்து தான் செல்ல வேண்டும்.*

சிவனடியார்களே, சிவபக்தர்களே, தயவுசெய்து இந்தக் கோயிலைப் பற்றி உங்களுக்கு தெரிந்தவர்களிடத்தில் சொல்லவும். இந்தப் பதிவை அதிகம் பகிரவும்.

வசதியுள்ளவர்கள் கார், பைக், வேன் போன்ற வாகனங்களில் வருகிறார்கள்.

வசதியில்லாதவர்கள் நடந்துதான் வரவேண்டும். இது ஒரு குக்கிராமம் என்பதால் ஆட்டோவோ, ஷேர் ஆட்டோவோ இல்லை.

ஆள் அரவவமற்ற பகுதி என்பதால் காலையில் சென்று மதியமோ அல்லது மாலை இருட்டுவதற்குள் திரும்பி வந்து விடுவது போல் உங்கள் பிரயாணம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

சைவமும், வைணவமும் ஒன்றாக கலந்து ஒரு சுற்றுலா சென்ற மகிழ்ச்சியும் கிடைக்கும்.

Thursday, September 16, 2021

நட்பு உடைந்து

 நட்பு உடைந்து முகநூலானது ...

சுற்றம் உடைந்து வாட்சப் ஆனது ...

வாழ்த்துக்கள் உடைந்து ஸ்டேட்டஸ் ஆனது ...

உணர்வுகள் உடைந்து ஸ்மைலியாய் ஆனது ...

குளக்கரை உடைந்து குளியலறை ஆனது ...

நெற்களம் உடைந்து கட்டடமானது ...

காலநிலை உடைந்து வெப்ப மயமானது ...

வளநிலம் உடைந்து தரிசாய் ஆனது ...

துணிப்பை உடைந்து நெகிழியானது ...

அங்காடி உடைந்து அமேசான் ஆனது ...

விளைநிலம் உடைந்து மனைநிலம் ஆனது ...

ஒத்தையடி உடைந்து எட்டு வழியானது ...

கடிதம் உடைந்து இமெயிலானது ...

விளையாட்டு உடைந்து வீடியோகேம் ஆனது ...

புத்தகம் உடைந்து  இ-புக் ஆனது ...

சோறு உடைந்து 'ஓட்ஸ்'சாய்ப் போனது...

இட்லி உடைந்து பர்கர் ஆனது ...

தோசை உடைந்து பிட்சாவானது ...

குடிநீர் உடைந்து குப்பியில் ஆனது ...

பசும்பால் உடைந்து பாக்கெட் ஆனது ...

வெற்றிலை உடைந்து பீடாவானது ...

தொலைபேசி உடைந்து கைபேசியானது ...

வங்கி உடைந்து பே டி எம் ஆனது ...

நூலகம் உடைந்து கூகுளாய்ப் போனது ...

புகைப்படம் உடைந்து செல்ஃபியாய் ஆனது ...

மனிதம் உடைந்து மதவெறியானது ...

அரசியல் உடைந்து அருவெறுப்பானது ...

பொதுநலம் உடைந்து சுயநலமானது ...

பொறுமை உடைந்து அவசரமானது ...

ஊடல் உடைந்து விவாகரத்தானது ...

காதல் உடைந்து காமமாய்ப் போனது ...

நிரந்தரம் உடைவது நிதர்சனம் ஆகையால் உடைவது உலகினில் நிரந்தரமானது ..!